Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரிஷா கல்யாணம் நின்று போச்சு?: ரசிகர்கள் பகீர் மகிழ்ச்சி.. ச்சா.. அதிர்ச்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
trisha-varun.jpg
 
நடிகை திரிஷாவுக்கும், தொழிலதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தனி விமானத்தில் தாஜ்மகாலுக்கு போய்வந்தார்கள். இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். திரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் கடந்த ஜனவரி 23–ந்தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
 
வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ ஆகிய 2 படங்களை தயாரித்து இருக்கிறார். அடுத்து ஜெய் கதாநாயகனாக நடிக்க, திரு டைரக்ஷனில் ஒரு புதிய படம் தயாரிக்க திட்டமிட்டார்.
 
இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக திரிஷா நடிப்பதாக இருந்தார். திடீரென்று, அந்தப்படத்தில் இருந்து திரிஷா விலகிக்கொண்டார். அவருக்கு பதில் டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
 
இந்த பிரச்சினையில் தான் திரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
திருமணத்துக்கு பிறகும் திரிஷா தொடர்ந்து நடிக்க விரும்புகிறார். இப்போது அவர் ‘பூலோகம்’, ‘அப்பாடக்கர்’, ‘போகி’ ஆகிய தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் புதிய படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதை வருண்மணியன் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
 
திரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் அடுத்த வருடம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்தின் போது திரிஷா விரலில் வருண்மணியன் அணிவித்த மோதிரத்தை திரிஷா கழட்டி விட்டார் என்று தெரிகிறது. சமீபகாலமாக அவர் கைவிரலில் அந்த மோதிரம் இல்லை.
 
இருவருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தையும் இல்லை. சமீபத்தில் நடந்த வருண்மணியனின் தங்கை திருமணத்துக்கு திரிஷா போகவில்லை. இந்தநிலையில் தான் திரிஷா–வருண்மணியன் திருமணம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில், திரிஷாவுக்கும் வருண்மணியனுக்கும் இடையே சமரச முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 பேருக்கும் வேண்டிய நண்பர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.....

கா...

ஆகா.. திரும்பவும் பலரது கனவுக்கு திரும்பப் போறா. :o

பிரச்சனை என்னெண்டா, பாவம், புள்ளைய தனி பிளேனில அங்க இங்க எண்டு கொண்டு திரிஞ்சவர்.

ஏதும் இசகு பிசகா நடந்திருந்தாலும்... இனி தாரு நம்பிக் கட்டுவினம் எண்டுதான் யோசனை. :D

Edited by Nathamuni

எங்கடை கனவுக்கன்னி எப்பவும் மயிலு ஸ்ரீதேவி தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை கனவுக்கன்னி எப்பவும் மயிலு ஸ்ரீதேவி தான் :D

எங்கண்ட, மயிலோட, மோள்.. இந்திப்படங்களில நடிக்கிறா. :D

எங்கண்ட, மயிலோட, மோள்.. இந்திப்படங்களில நடிக்கிறா. :D

மயிலு அளவுக்கு வரமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

திரிஷா கல்யாணம் நின்று போச்சு?: ரசிகர்கள் பகீர் மகிழ்ச்சி.. ச்சா.. அதிர்ச்சி.

 

அடபாவிப்பயல்களா.... :lol:  :D

ஒரு குடும்பம் பிரிவதில்  மகிழ்ச்சியா?

அதிலும் பகீர் மகிழ்ச்சியா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திரிஷா கல்யாணம் நின்று போச்சு?: ரசிகர்கள் பகீர் மகிழ்ச்சி.. ச்சா.. அதிர்ச்சி.

 

அடபாவிப்பயல்களா.... :lol:  :D

ஒரு குடும்பம் பிரிவதில்  மகிழ்ச்சியா?

அதிலும் பகீர் மகிழ்ச்சியா?? :lol:

 

 

ரசிகர்கள், மகிழ்ச்சி அடையவில்லை......

நெடுக்கர் தான்..... நக்கீரனின் தலையங்கத்தில் தன் கைவண்ணத்தை காட்டி, மகிழ்ச்சி அடைந்துள்ளார். :D

  • கருத்துக்கள உறவுகள்

 

trisha-varun.jpg
 
நடிகை திரிஷாவுக்கும், தொழிலதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தனி விமானத்தில் தாஜ்மகாலுக்கு போய்வந்தார்கள். 
டெஸ்ட் டிரைவ் வே சரிவரவில்லை என்றால் 
வாகனத்தின் நிலையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
 

Trisha Krishnan born 4 May 1983,

 She was noticed after winning several beauty pageants like the Miss Madras contest 1999, 

After appearing in a supporting role in the 1999 Tamil film Jodi 

1999இல் இருந்து ஓடிகிட்டு இருக்குது (திரிசா நடிக்கும் படம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியே சாட்சி. திரிஷாவுக்கு மதிப்புப் குறைஞ்சு போச்சுது. பேசாம திரிஷா வருண் மணியன் காலில தொபக்கடீர் என்று விழுந்துக்கிறது தான் நல்லது. பரிசாக தந்த காராவது மிஞ்சும். :lol::D

பாவம்  அக்கா ............. :rolleyes:  :o  :)

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அக்கா ............. :rolleyes::o:)

தம்பி....ரி..

கல்யாணம் கட்டியாச்சோ? இல்லையெண்டால்...

நல்ல பொம்பிள.... காசும் இருக்கு.. வாழ்வும் கொடுத்த மாதிரி இருக்கும். யோசியுங்கோவன்.

நெடுக்கரும், மசிண்டிக் கொண்டு திரியிறார்...

கெதியா... :icon_mrgreen:

நல்ல வரனோட பார்த்துப்பேசுங்க அண்ணே .....................இன்னொரு கல்யாணம் கட்டினா போச்சு  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வரனோட பார்த்துப்பேசுங்க அண்ணே .....................இன்னொரு கல்யாணம் கட்டினா போச்சு  :D  :D

 

நெடுக்கண்ணை  இனி  கலியாணம் கட்ட முடியாது.

அதை .. நெத்துக்கு, விட்டு, விவசாயம் பண்ண வேண்டியது தான்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணை  இனி  கலியாணம் கட்ட முடியாது.

அதை .. நெத்துக்கு, விட்டு, விவசாயம் பண்ண வேண்டியது தான்.

 

 

நெத்துக்கு விடுறது எல்லாம் அந்தக்காலம். இப்ப வங்கிகள் இருக்கு சேமிச்சு வைச்சு விரும்பின நேரம் விரும்பின விசயங்கள் செய்யலாம்.

 

சுதந்திரமாக வாழ விரும்பிறவன்.. கல்யாணச் சிறை இருக்கமாட்டான். :lol::D  சிறைக்குள்ள உள்ளவை பொறாமையில பிசத்திறதை எல்லாம்.. கவனத்தில் எடுக்கத் தேவையில்லை. பாவம் அவர்களின் விடுதலைக்காக பரிதாபப்படுகிறோம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெத்துக்கு விடுறது எல்லாம் அந்தக்காலம். இப்ப வங்கிகள் இருக்கு சேமிச்சு வைச்சு விரும்பின நேரம் விரும்பின விசயங்கள் செய்யலாம்.

சுதந்திரமாக வாழ விரும்பிறவன்.. கல்யாணச் சிறை இருக்கமாட்டான். :lol::D சிறைக்குள்ள உள்ளவை பொறாமையில பிசத்திறதை எல்லாம்.. கவனத்தில் எடுக்கத் தேவையில்லை. பாவம் அவர்களின் விடுதலைக்காக பரிதாபப்படுகிறோம். :lol:

இப்படி சொல்லி, சொல்லியே, ஒருத்தர், கடசீல, பசுவும் கன்றுமா பார்த்து கட்டிக் கொண்டு ஒதுங்கினார்.

என்னப்பா நடந்தது என்று நண்பர்கள் விசாரிக்க, கன்று, நம்மட தான், விசயம் பிழையாப் போட்டுது. இனி கட்டித்தானே பிழையை சரியாக்க வேண்டுமே எண்டாராம். :o

உண்மைக் கதை, ஒரு பகிடிக்கு பகிர்ந்தேன், நெடுக்கர், தனிப்பட்ட ரீதில எடாதீங்கோ. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சொல்லி, சொல்லியே, ஒருத்தர், கடசீல, பசுவும் கன்றுமா பார்த்து கட்டிக் கொண்டு ஒதுங்கினார்.

என்னப்பா நடந்தது என்று நண்பர்கள் விசாரிக்க, கன்று, நம்மட தான், விசயம் பிழையாப் போட்டுது. இனி கட்டித்தானே பிழையை சரியாக்க வேண்டுமே எண்டாராம். :o

உண்மைக் கதை, ஒரு பகிடிக்கு பகிர்ந்தேன், நெடுக்கர், தனிப்பட்ட ரீதில எடாதீங்கோ. :D

 

நாங்க அப்படியான கொள்கைகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. இருக்கப் போவதும் இல்லை. பசுக்களை எட்ட இருந்து ரசிப்பது மட்டும் தான் காளைகளுக்கு இந்தக் காலத்தில் பாதுகாப்பும் சுதந்திரமும். தெரியாமல் அதுகளை தொடப் போய் கன்றுக்குட்டிகளோடு அலைய லூசா..! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.