Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைந்த வடகிழக்கில் அரசில் தீர்வு! ஜோன் கெரியுடனான சந்திப்பில் வலியுறுத்தல்: இரா.சம்பந்தன்

Featured Replies

 
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 11:28.23 AM GMT ]
tna_kerry_001.jpg
தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தங்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையில், அவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் வலியுறுத்தியதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.

இது குறித்து லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

http://www.tamilwin.com/

மே தினத்தில் வேட்டி உரிந்த காரணத்தினால் கோட்சூட் உடன் கிளம்பிவிட்டார்கள் போலும்

நித்திரை தூங்கிய சம்பந்தனை கெரி தட்டி எழுப்பியதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் :icon_idea:

விரைவில் அரசியல் மாற்றங்களையும் நன்மைகளையும் பெறுவீர்கள்: கூட்டமைப்பிடம் ஜோன் கெரி

 

F5d6f506d-TNA.jpg

 

விரைவில் பலவிதமான அரசியல் மாற்றங்களையும் அரசியல் நன்மைகளையும் நாங்கள் பெற்றுகொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தம்மிடம் தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
 
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரை இன்று கொழும்பில் சந்தித்தார்.
 இச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்,
 
அமெரிக்க இராஜங்க செயலாளரை சந்திக்க எமக்கு 25 நிடங்களே வழங்கப்பட்டிருந்தன. ஆனால் எமது பிரச்சினைகளை எடுத்துரைக்க குறித்த நேர காலம் போதுமானதாக அமையவில்லை. ஆனால் எமக்குள்ள பல பிரச்சினைகளை ஜோன் கெரி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார்.
 
மேலும் எமது பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் எடுத்துரைத்தார்.
 
இதற்கு பதிலளித்த ஜோன் கெரி, தற்போதைய சூல்நிலை நல்ல முறையில் மாறிகொண்டு வரும் போது அதனை நீங்கள் சாதகமாக பயன்படுத்திகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
 
நீங்கள் பல விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் சூல்நிலைகளுக்கு ஏற்ப தீர்த்துகொள்ள வேண்டும்.
 
மேலும் விரைவில் பலவிதமான அரசியல் ரீதியான மாற்றங்களையும் நன்மைகளையும் நாங்கள் பெற்ற கொள்வோம் எனவும் கூறினார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
ஆதிக்க சக்திகள்  
ஒரு பாதிக்கபட்ட இனத்தை எப்படி எல்லாம் ...
தமது சுரண்டலுக்கு வதைக்கும் என்பதை 
மேலே இருக்கும் படத்தில் காணலாம்.
 
ஆதிக்க போட்டியில் .....
எம்மை பகடை காய்களாக பாவிக்கிறார்கள் 
 
கொலை 
கொள்ளை 
எல்லாம் அரேங்கேற்றும் நாடககார்களின் 
இன்னொரு முகம் இது. 
 
நாம் இருக்கும் நிலையில் இதையும் நம்பித்தான் ஆகவேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஆட்சி மாற்றத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும்:-

இலங்கை ஆட்சி மாற்றத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும்:-

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயன்டுத்த வேண்டும் என்று இலங்கை வந்துள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன்ஹரி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன்ஹரிக்கும் இடையில் இன்று கொழும்பில் நடந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது சூழ்நிலை நல்ல முறையில் மாறிக் கொண்டு வரும்போது அதனை சாதகமாக பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகவும் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார்.

பல விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் அவற்றை தீர்க்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜோன்ஹரி தமிழர்களுடைய பிரச்சினைகளை தான் நன்றாக உணர்ந்து கொண்டிருப்பதாகவும், அந்த உணர்ச்சியுடனேயே தங்கள் செயற்படுவதாகவும் கூறினார்.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மனதில் நிறுத்த வேண்டும் எனக் கூறியதுடன் அதன் அடிப்படையில் விரைவில் பல அரசியல் ரீதியான மாற்றங்களையும் நன்மைகளையும் தமிழர்கள் பெறக்கூடும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

சம்பந்தன் தமிழ் மக்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறியபோது அதனை அவர் அவதானமாக செவிமடுத்தபோதிலும் 25 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க முடியந்ததால் நிறைய விடயங்களை பேச முடியாமல் போய்விட்டதாகவும் வடக்கு முதல்வர் கூறினார்.

எவ்வாறெனினும் தமிழ் மக்களின் முக்கிய விடயங்கள் பற்றி அவருக்கு முன்னரே தெரிந்துள்ளது என்று குறிப்பிடும் சி.வி.விக்கினேஸ்வரன் அந்த அடிப்படையில் அவர் இது சம்பந்தமாக மனதில் இருத்தி எங்களுக்கு பல விதத்திலும் ஒத்தாசையாக இருப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையின் வட கிழக்கில் பொதுமக்களுடைய காணிகளில் நிலைகொண்டிருக்கின்ற இராணுவத்தினர் அகற்றப்பட்டு, முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்று இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பகிர்ந்தளிக்கப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வடுக்கள் மறைந்து, இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும் என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுச் செயலருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிறன்று கொழும்பு தாஜ் ஹோட்டலில் நடைபெற்றபோதே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவரும், கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்துடன் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றச் சூழ்நிலையை சரியான முறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள மனவடுக்களை மாற்றி, இனங்களுக்கிடையில் நல்லுறவும் இணக்கப்பாடும் ஏற்படுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் இந்தச் சந்திப்பின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பனரிடம் தெரிவித்துள்ளதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் வடமாகாண நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த விபரங்கள் அடங்கிய இரண்டு ஆவணங்களை வடமாகாண முதலமைச்சர் இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவுச் செயலரிடம் கையளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, இனப்பிரச்சினைக்கு உடனடியாக ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தாங்கள் எடுத்துக் கூறியதாகவும், பொதுமக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலப்பரப்பில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது இடம் பெயர்ந்துள்ள மக்களின் முழுமையான மீள்குடியேற்றத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் தாங்கள் அவருக்கு எடுத்துக் கூறியதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களும் இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119343/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் நடந்தவற்றை மறந்து சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்கச் சொல்லியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றுக் கையோடு அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளிடம் போய் கெஞ்சினால்.. போய் ஆளுறவன் காலில விழு என்று தான் எடுத்துரைக்கும்.

 

புலிகள் இறுதி வரை அமெரிக்காவை நம்பவில்லை. நோர்வேயை நம்பினார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 11:28.23 AM GMT ]

http://www.tamilwin.com/

 

 

இதைத்தான் மோடி வந்தமுட்டமும் முறைப்பாடாய் குடுத்தனியள்.....அவரும் ஓம் நான்  அங்கை சொல்லுறன் எண்டு வாக்குறுதி தந்தவர்.
இப்ப  ஜோன் ஹெரிக்கும்  கோட்டுசூட்டோடை போய் அதே முறைப்பாடு குடுத்தாச்சு...இனி
 
அதுசரி உந்த தக்காளிப்பழ  சோஸ்காரர் எங்கை போற வழியிலை சிலோனுக்கும் போனவர்???
 
heinz.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றுக் கையோடு அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளிடம் போய் கெஞ்சினால்.. போய் ஆளுறவன் காலில விழு என்று தான் எடுத்துரைக்கும்.

 

புலிகள் இறுதி வரை அமெரிக்காவை நம்பவில்லை. நோர்வேயை நம்பினார்கள். :icon_idea:

 
நோர்வேக்கு பின்னால யார் இருப்பார்கள் என்று கூட தெரியாமலா நோர்வேயை நம்பினார்கள்?
புலிகளை கேவலப்படுத்த வேறு யாரும் வேண்டாம். ***

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாங்கண்ணா.. நோர்வேயில் நம்பிக்கை வைக்காமல் தான்.. அதன் மைத்தியஸ்தத்தை புலிகள் ஏற்றுக் கொண்டார்கள். போங்கண்ணே.. போய் வரலாற்றை திருப்பிப் படியுங்க. அப்பவாவது ஏதாவது புரியுதா என்று பார்ப்பம்.

 

அமெரிக்காவை வெறுத்த பலஸ்த்தீனிரியர்களும்.. நோர்வேயை நம்பினார்கள்.. நோர்வே நேட்டோ அமைப்பு நாடாக இருந்த போதும். :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.