Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்

Featured Replies

  • தொடங்கியவர்

ஞான லிங்கேஸ்வரர் ஆலயம் - இணுவில் .....

IMG_0476.jpg

IMG_0477.jpg

IMG_0479.jpg

IMG_0481.jpg

IMG_0484.jpg

IMG_0486.jpg

IMG_0487.jpg

IMG_0488.jpg

IMG_0489.jpg


 

  • Replies 209
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இப்போதெல்லாம் யாழில் ஒரு நல்ல புதிய வகை ட்ரெண்ட் விளம்பரத்தில் புகுத்தப்படுகின்றது. பல விடயங்களையும் மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் விளம்பரங்கள் பல இருக்கின்றன. பல இடங்களில் மது, புகைத்தல், போதை பொருட்களுக்கு எதிரான வசனங்களும் இடம்பெறுகின்றன.
நல்ல விடயம்தான் என்று நினைத்ததோடு நின்றுவிட்டேன். படம் எடுக்கவுமில்லை, இங்கு பகிரவும் இல்லை. 

இங்கு யாழில் நவீனன் இணைத்த ஒரு செய்தியைப் பார்த்ததும்தான் இவற்றையும் இங்கு பதிய விரும்பினேன். இனிமேல் எனது கண்களில் படும் இவ்வாறான விளம்பரங்களையும் பதிவேன் - நன்றி நவீனன்.


நல்லவற்றை வரவேற்போம்.

 

IMG_0496.jpg

IMG_0497.jpg

IMG_0499.jpg

IMG_0507.jpg

IMG_0508.jpg


 

 

  • தொடங்கியவர்

சொக்கன் கடை.

கைலாச பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள சொக்கன் கடையை தெரியாதவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்க முடியாது. தலைமுறைகளாக தொடரும் இக்கடை இப்பவும் சொக்கனின் மகனால் நடத்தப்படுகின்றது என்று அறிந்தேன். உள்ளே போய் பாத்தபோது சொக்கன் படமாக சுவரில் தொங்கினார். வேட்டியும் + ஒரு மொத்த பெல்ட்டும் + வேர்வையுடன் ஒரு வெறும்மேலுடனும் அதே உருவத்தில் இன்னொருவர். உள்ளே எந்த வித்தியாசமுமில்லை.

தலைமுறைகள் வாழ்கின்றன (எமது நினைவுகளும்தான்) - வாழ்த்துக்கள்.

IMG_0502.jpg

IMG_0501.jpg

  • தொடங்கியவர்

சுகவீனமுற்ற நண்பன்

 

IMG_0459.jpg

 

இலங்கைக்கு வந்தநாள்முதல் யாழ்ப்பாணத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட லைசென்ஸுக்கு நேர்மையாக அலையாத இடமில்லை. என்னிடம் அடையாள அட்டை இல்லாதபடியால் அது சாத்தியமற்று போனது. களவாக எடுக்க முடியும் (அடையாள அட்டையும் லைசென்சும்) ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லாததால் முடியவில்லை. எனக்கு எதுக்கு மோட்டார் சைக்கிள் லைசென்ஸ் நோர்வேயில் என்றிருந்தது தப்பாகி விட்டது.

சைக்கிளில் எவ்வளவுதான் சுத்த முடியும். மோட்டார் சைக்கிள் கனவு கனவாகவே இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளிற்கு லைசென்ஸ் தேவை இல்லை, இன்சூரன்ஸ் தேவை இல்லை, வீதி வரி இல்லை, ஹெல்மட்டும் தேவை இல்லையாம் எண்டு.. 4.5 மணி நேரம் சார்ஜ் பண்ணினால் 50 - 55 கி.மீ ஓடுமாம், அதிக வேகம் 34 கி.மீ/மணி. ஆஹா என்று 82,800 ரூபாயை கொடுத்து சிங்கனை எனது அரண்மனைக்கு கொண்டு வந்தேன். 

சிங்கனும் ஜீவனும் சுத்தாத இடமே இல்லை. ஆனாலும் நண்பன் உடல் முடியாமல் போன ஞாயிறு (11/09/2016) படுத்துவிட்டான். நண்பனைக் காட்ட யாழ்ப்பாணத்தில் வைத்தியரும் இல்லையாம். ஒரு கிழமையா படுத்த படுக்கைதான்.

எண்ட பழைய சைக்கிள் ஞாபகம் வர, போய்ப் பாத்தால்  - போடா பன்னி எண்டு சொல்வது மாதிரியே இரண்டு சில்லிலையும் காத்த வெளியே விட்டிட்டு  ரிம்மில இருந்து சிரிக்குது. என்ன இருந்தாலும் பழைய நண்பன்தானே எண்டுட்டு, கூட்டிக் கொண்டே 10 ரூபாவுக்கு காத்து அடிச்சிற்று சுத்தினான்.

இண்டைக்கு கொழும்பில் இருந்து புது நண்பனை காப்பாத்த வைத்தியர் வந்திட்டாராம். அழைத்துக் கொண்டே அனுமதித்து விட்டு வந்திருக்கின்றேன். இதுவரை என்ன வருத்தம் என்று தெரியாதாம். 

எப்ப வீட்டை திரும்பிவருவானோ என்று மனம் அல்லாடுது.

ஒரு சந்தேகம் - எனது பழைய நண்பனின் சாபமா இருக்குமோ? 

IMG_0523.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன், காண பதிவுகள் பார்க்கத் தவறி விட்டிட்டேன் ....! நல்லாயிருக்கு ...., உங்களின் கமெண்ட்ஸ்களும் சூப்பர் ...!!  tw_blush:

  • தொடங்கியவர்
2 hours ago, suvy said:

ஜீவன், காண பதிவுகள் பார்க்கத் தவறி விட்டிட்டேன் ....! நல்லாயிருக்கு ...., உங்களின் கமெண்ட்ஸ்களும் சூப்பர் ...!!  tw_blush:

ஆதரவுக்கு நன்றி சுவி

  • தொடங்கியவர்

மறுபடியும் பண்ணை.

 

IMG_0544.jpg

IMG_0545.jpg

IMG_0547.jpg

IMG_0551.jpg

 

IMG_0549.jpg

IMG_0557.jpg

IMG_0559.jpg

IMG_0570.jpg

IMG_0571.jpg

IMG_0605.jpg


 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

எப்ப வீட்டை திரும்பிவருவானோ என்று மனம் அல்லாடுது.

ஒரு சந்தேகம் - எனது பழைய நண்பனின் சாபமா இருக்குமோ? 

 

 

13912380_1626965920926928_6565628077059711225_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0459.jpg

இவரின்... பூர்வீகம் எது... ஜீவன் சிவா.
சீனா என்றால், அடிக்கடி சுகயீனம் வரப் பார்க்கும். இப்படியானவற்றுக்கு... இந்திய பொருட்கள் தாக்குப் பிடிக்கும் என்பது எனது அபிப்பிராயம். அத்துடன்.... பராமரிப்பு சேவை நிலையங்களும் அதிகம் காணப்படும் என எண்ணுகின்றேன்.
உங்கள் நண்பன், விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்.

  • தொடங்கியவர்
9 hours ago, தமிழ் சிறி said:

இவரின்... பூர்வீகம் எது... ஜீவன் சிவா.

சீனாவின் பக்கத்து வீடு + சொந்தக்காரன் . வட கொரியா 

ஆனாலும் சிங்கன் சுகமாய் வீடு வந்து சேர்ந்திட்டார்.

  • தொடங்கியவர்

பண்ணை .....

என்னடா இவன் பண்ணையை சுத்தி சுத்தி திரியிறானே என்று யோசிக்க வேண்டாம். யாழ்ப்பாணத்தில் எனக்கு பிடித்த இடம் பண்ணைப்பாலம்தான். பின்னேரங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு போவேன் கேமராவுடன் அல்லது மீன்பிடி உபகரணங்களுடன்.

 

இந்த தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து  பண்ணைப்பாலத்தில் பயணிக்கும்போது வலதுபுறம் உள்ளது. இதில் ஒரு தேவாலயம் மட்டுமே உள்ளது போல் தெரிகின்றது. இதற்கு படகு மூலம் மட்டும்தான் போகலாமா அல்லது பின் புறத்தில் வேறு பாதை உண்டா?

யாருக்காவது தெரியுமா இந்த தீவின் பெயர்?

IMG_0603.jpg

 

நேற்றைய சூரிய அஸ்த்தமனமும் இன்றைய சில க்ளிக்குகளும்.

IMG_0588.jpg

IMG_0596.jpg

IMG_0600.jpg

IMG_0608.jpg

IMG_0612.jpg

IMG_0626.jpg

IMG_0630.jpg

IMG_0628.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மண்டைதீவைச் சொல்லுகின்றீர்களா....., அங்கு ஒரு வானொலி கூட்டுத்தாபனமும் இருந்தது ....! tw_blush:

கீழே அலையாத்திக் காடுகள் . இதுபோன்ற காடு சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் விஜய் தொலைக்காட்ச்சியில் போனது ....!

  • தொடங்கியவர்
47 minutes ago, suvy said:

நீங்கள் மண்டைதீவைச் சொல்லுகின்றீர்களா....., அங்கு ஒரு வானொலி கூட்டுத்தாபனமும் இருந்தது ....! tw_blush:

கீழே அலையாத்திக் காடுகள் . இதுபோன்ற காடு சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் விஜய் தொலைக்காட்ச்சியில் போனது ....!

இல்லை மண்டைதீவு யாழ்ப்பாணத்திலிருந்து பண்ணைப்பாலத்தில் பயணிக்கும்போது இடது பக்கம் வரும். இது வலது பக்கம் உள்ள ஒரு சிறுதீவு. முதலாவது படம் + கீழேயும் உள்ளது.

IMG_0637.jpg

58 minutes ago, suvy said:

கீழே அலையாத்திக் காடுகள் .

IMG_0628.jpg

mangrove இனத்தை சேர்ந்த தாவரத்திற்கு தமிழில் என்ன பெயர் என்று தெரியாமல் மண்டையைப் போட்டு உடைத்தேன். யாரிடமாவது கேட்கணும் என்றும் யோசித்தேன்.

நன்றி சுவி

  • தொடங்கியவர்

இந்தத் தீவு கிட்டத்தட்ட இந்த இடத்தில்தான் உள்ளது.

Untitled.gif

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

பண்ணை .....

என்னடா இவன் பண்ணையை சுத்தி சுத்தி திரியிறானே என்று யோசிக்க வேண்டாம். யாழ்ப்பாணத்தில் எனக்கு பிடித்த இடம் பண்ணைப்பாலம்தான். பின்னேரங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு போவேன் கேமராவுடன் அல்லது மீன்பிடி உபகரணங்களுடன்.

இந்த தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து  பண்ணைப்பாலத்தில் பயணிக்கும்போது வலதுபுறம் உள்ளது. இதில் ஒரு தேவாலயம் மட்டுமே உள்ளது போல் தெரிகின்றது. இதற்கு படகு மூலம் மட்டும்தான் போகலாமா அல்லது பின் புறத்தில் வேறு பாதை உண்டா?

யாருக்காவது தெரியுமா இந்த தீவின் பெயர்?

நேற்றைய சூரிய அஸ்த்தமனமும் இன்றைய சில க்ளிக்குகளும்.

IMG_0628.jpg

பண்ணைப்பக்கம்

அராலிக்கும் ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இருக்கும் தீவு என நினைக்கின்றேன்..

இங்கு போகமுடியும்....

இங்கு யாரோ போய் வந்து எழுதியதாக ஞாபகம்..

  • தொடங்கியவர்
10 minutes ago, விசுகு said:

அராலிக்கும் ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இருக்கும் தீவு என நினைக்கின்றேன்..

இங்கு போகமுடியும்....

 

இதுதான் அந்த தீவு.

2531.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG_0628.jpg

புராதன காலங்களில் இப்படியான கண்டல்,அலையாத்தி காடுகள் தான் மக்களை சுனாமி எனும் பேரழிவு அலைகளிடமிருந்து காப்பாற்றியதாக எங்கேயோ வாசித்த ஞாபகம்..:rolleyes:

படங்களுக்கும் விபரங்களுக்கும் நன்றி ஜீவன்.:)

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

பண்ணை .....

இந்த தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து  பண்ணைப்பாலத்தில் பயணிக்கும்போது வலதுபுறம் உள்ளது. இதில் ஒரு தேவாலயம் மட்டுமே உள்ளது போல் தெரிகின்றது. இதற்கு படகு மூலம் மட்டும்தான் போகலாமா அல்லது பின் புறத்தில் வேறு பாதை உண்டா?

யாருக்காவது தெரியுமா இந்த தீவின் பெயர்?

IMG_0603.jpg

சிறிய வயதில்.... பண்ணைப் பாலத்திலிருந்து, இந்தத் தீவை தூர நின்று அவதானித்துள்ளேன். ஒரு நாளும் கிட்டப் போய் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை.  இதனை "காக்கை தீவு" என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன். 

எதற்கும்... ஜீவன் பண்ணைப் பாலத்தில் மின் பிடித்துக் கொண்டிருக்கும்... மீனவர்களிடம் கேட்டு, அதன் வரலாற்றறை எமக்கும் கூறினால் உதவியாக இருக்கும். அத்துடன் அங்கு தெரியும்... தேவாலயம் எத்தனையாம் ஆண்டு கட்டப்  பட்டது என்றும் கேளுங்கள். கிட்டப் போய் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்து.... உங்கள் கமெராவில் அங்குள்ள சூழ் நிலையை படம் பிடித்தால்... இன்னும் மகிழ்ச்சி.

இப்போதும்... பண்ணைப் பால முகப்பில், மீன் சந்தை உள்ளதா?
படங்கள் எல்லாம்... மிகவும் அழகு. எம்மை பழைய நினைவுகளை,  மீட்க வைத்தது. 

  • தொடங்கியவர்
15 hours ago, suvy said:

கீழே அலையாத்திக் காடுகள்

 

9 hours ago, குமாரசாமி said:

புராதன காலங்களில் இப்படியான கண்டல்,அலையாத்தி காடுகள்

எவ்வளவு அழகான பெயர் - அலையாத்தி 
எவ்வளவு அர்த்தம் - அலைகளை, அதன் வீரியத்தை குறைக்கும் மரம்.

இதுக்கு பிறகும் எவனாவது  நான் தமிழன் என்று தலைநிமிர்ந்து சொல்ல வெட்கப்படுவான் என்றால் அவன் குரங்காகவே இன்னும் இருக்கின்றான் என்றுதான் அர்த்தம்.

3 hours ago, தமிழ் சிறி said:

இதனை "காக்கை தீவு" என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன். 

காக்கைதீவு சரியென்றே நினைக்கின்றேன்.இனி சனிக்கிழமைதான் அந்த பக்கம் போக முடியும் என்று நினைக்கின்றேன். முடிந்தால் யாராவது வள்ளக்காரரை காக்கா பிடித்து காக்கைதீவுக்கு போகத்தான் இருக்கு.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ...இல்லை ...இல்லை  தமிழ்சிறி , காக்கைதீவாகப்பட்டது ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை போகும் வழியில் கல்லுண்டாய்க்கு முன்  உள்ளது . அங்கு கடல் அட்டைகள் எடுத்துக் காய போட்டு வைத்திருப்பார்கள் ....!

ஜீவன் , காக்கைதீவில் காக்கா இல்லை நாவாந்துறை கடிநாய்கள் , பொம்மைவெளி விசர்நாய்கள்தான் திரியும் ...! உங்கட சிங்கனும் ரொம்ப சிறியது கவனமப்பு....! tw_blush:

  • தொடங்கியவர்
1 hour ago, suvy said:

இல்லை ...இல்லை ...இல்லை  தமிழ்சிறி , காக்கைதீவாகப்பட்டது ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை போகும் வழியில் கல்லுண்டாய்க்கு முன்  உள்ளது . அங்கு கடல் அட்டைகள் எடுத்துக் காய போட்டு வைத்திருப்பார்கள் ....!

சுவி அப்ப இந்த காக்கைதீவு என்பது ஒரு தீவே இல்லையா.  குடாநாட்டின் ஒரு கரையோரமா?

Untitled.png

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஜீவன் சிவா said:

சுவி அப்ப இந்த காக்கைதீவு என்பது ஒரு தீவே இல்லையா.  குடாநாட்டின் ஒரு கரையோரமா?

Untitled.png

அது இப்ப குப்பைகளின் தீவு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

சுவி அப்ப இந்த காக்கைதீவு என்பது ஒரு தீவே இல்லையா.  குடாநாட்டின் ஒரு கரையோரமா?

Untitled.png

ஆமாம் ... மைசூர்பருப்பு போலத்தான் இதுவும் ....! tw_blush:

முன்பு 1960 க்கு முதல் என நினைக்கின்றேன் , வேலணை, புங்குடுதீவு எல்லாம் கடலால் ஊடறுத்த சிறு தீவுகள்தான் . நயினாதீவுக்கு போவதென்றால்  மூன்று தரம் சிறிய படகில்  போய்த்தான் போகவேண்டும் . பிறகு அவையெல்லாம் வீதிகளால் இணைத்தாயிற்று ....!  இன்னும் ஒரு பாலம் கழுதை பிட்டியில் இருந்தோ அல்லது குறிகாட்டுவானில் இருந்தோ நயினைக்குப் போட்டால் நீங்கள் சிங்கனில் சிங் எண்டு போய் சங் எண்டு வரலாம் ....!tw_blush:

Edited by suvy
சிறு திருத்தம்

  • தொடங்கியவர்
22 hours ago, விசுகு said:

பண்ணைப்பக்கம்

அராலிக்கும் ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இருக்கும் தீவு என நினைக்கின்றேன்..

இங்கு போகமுடியும்....

 

11 hours ago, தமிழ் சிறி said:

இதனை "காக்கை தீவு" என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன். 

 

7 hours ago, suvy said:

இல்லை ...இல்லை ...இல்லை  தமிழ்சிறி , காக்கைதீவாகப்பட்டது

புச்சையடி தீவு

இந்த தீவின் பெயர் புச்சையடி தீவு. ஆனாலும் மக்கள் இதனை புச்சைதீவு என்றே அழைக்கிறார்கள். இந்த தீவிற்கு மீனவர்கள் நடந்தே போகிறார்கள். அதற்கு அவர்களிற்கு ஆழம் குறைந்த பகுதியின் அமைப்பு தெரிந்திருக்கின்றது. ஒவ்வொரு ஞாயிறிலும் தேவாலயத்தில் பூசை நடைபெறும். அதற்காக நாவாந்துறை சந்தையடியில் இருந்து வள்ளங்கள் போகுமாம். பங்குனி மாதத்தில் திருவிழா விமர்சையாக நடைபெறுமாம். என்னையும் இந்த ஞாயிறு கூட்டிப் போவதற்கு வாக்களித்திருந்தார் ஒரு 65 வயது மதிக்கத்தக்க நண்பர். நானும் சரி வருகின்றேன் என்றுவிட்டு வந்து விட்டேன். இப்போதுதான் சிலர் வந்து ஒரு முக்கியமானவரின் அந்தியேட்டிக்கு அழைப்பு கொடுத்து விட்டு போகிறார்கள்.

இன்னொரு ஞாயிறு வராமலா போகும்?

IMG_0649.jpg

பண்ணைப்பாலத்தின் மண்டைதீவு சந்தியில் இருந்து இன்று பகல் எடுக்கப்பட்ட படம்தான் மேலே உள்ளது.

3 hours ago, suvy said:

கழுதை பிட்டியில் இருந்தோ அல்லது குறிகாட்டுவானில் இருந்தோ நயினைக்குப் போட்டால் நீங்கள் சிங்கனில் சிங் எண்டு போய் சங் எண்டு வரலாம் ....!tw_blush:

போகலாம் திரும்பி வரமுடியாது. சிங்கனின் ரேஞ்சு 50 - 55 கி மி தான்.

11 hours ago, தமிழ் சிறி said:

இப்போதும்... பண்ணைப் பால முகப்பில், மீன் சந்தை உள்ளதா?

இல்லை அதனை எப்பவோ முத்தவெளி பஸ் நிலையத்துக்கு முன்னால் மாற்றிவிட்டார்கள்.

  • தொடங்கியவர்

மாதகல் : சில சந்தோசங்கள் பல கடுப்புகள்.
(இப்படங்கள் ஆகஸ்ட் முதற் கிழமை எடுத்தவை)

IMG_0104.jpg

IMG_0117.jpg

IMG_0118.jpg

IMG_0120.jpg

IMG_0121.jpg

IMG_0124.jpg

IMG_0128.jpg

IMG_0134.jpg

IMG_0141.jpg

IMG_0144.jpg

IMG_0145.jpg

IMG_0146.jpg

IMG_0148.jpg

IMG_0163.jpg

IMG_0166.jpg

 

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.