Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த மக்கள் மீது போர் தொடுக்கும் கம்பவாரிதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலங்காவில்பிள்ளையார் கோவிலரால் 'கம்பவாரிதி' எனப்பட்டமளிக்கப்பட்ட ஜெயராஜ் பொங்கியிருக்கிறார். கம்பன்கழகத்தினால் சிறிலங்காவின் அரச அதிபர் கௌரவிக்கப்பட்டதை விமர்சனம் செய்ததற்கு வெஞ்சினம் கொண்டு வெகுண்டெழுந்திருக்கிறார். தாறுமாறாக வார்த்தைகளை போட்டுடைத்து ‘சந்திரமுகி’ ஜோதிகா போல் கலகமாடியிருக்கிறார்.

“எப்படியெல்லாம் இருந்த கழகமும் உங்கள் பணியும் இப்படியானதேனோ” என்று நண்பர் ஜே.கே. எழுதிய கடிதம் ஒன்றுக்கு தனது சுயரூபத்தைவெளிப்படுத்தியிருக்கிறார் வாரிதியார்.

அவர் குறித்த எனது நிலைப்பாட்டில் எள்ளளவும் மாற்றத்தை ஏற்படுத்தாத அவரது எக்காளத்தனத்தை பார்த்து எனக்கு கோபம் வரவில்லை. மாறாக மிகுந்த வருத்தம்தான் வருகிறது. அவரது சிறுபிள்ளைத்தனமான கடிதத்திற்கு பதிலளிக்கவேண்டிய எந்தக்கடப்பாடும் எனக்கு இல்லாதபோதும், ஜே.கே.யிற்கு எழுதிய கடிதத்தில், அவர் தொடர்பான விமர்சனங்களை முன்வைத்த எல்லோருக்குமென பொதுப்பட சாதுவாக சுரண்டிவிட்டிருக்கிறார். ஆகவே, அவர் பற்றியும் கம்பன் கழகம் பற்றியும் நான் ஏற்கனவே பதிவிட்டவன் என்ற வகையில், அவருக்கு பதிலளிக்கவேண்டிய கடப்பாட்டுடன் இந்த பதிவை எழுத விளைகிறேன்.

ஜே.கே.யிற்கு எழுதிய கடிதத்தில் அவர் முன்வைத்திருக்கும் கருத்துக்களும் தன்னிலைவிளக்கங்களும் வியாக்கியானங்களும் ஈழத்தமிழர்கள் இதுவரை கண்டிராத பல குரூர நெடி வீசுபவையாக கீழ்த்தரமான வசைபாடலாக தனது அசிங்கம் மிக்க அம்மணத்தை அவிழ்த்துநின்று ஆடும் அரியண்டங்களாக காணப்படுகின்றன. “இவரா ஜெயராஜ்” என்று பலர் கேட்பதற்கு வழிசமைத்திருக்கும் இந்தக்கடிதம் ஒருவகையில் பயனுள்ள பனுவல்தான்.

வாரிதியாரின் வசைபாடலுக்கு வருவோம் -

1) நாட்டைவிட்டு ஓடிய புலம்பெயர்ந்த எவரும் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கமுடியாது. மீறி, யாராவது எமக்கு ஆலோசனை தந்தாலும் நாம் அதை ஏற்கப்போவதில்லை.

2) இனிவரும் புலம்பெயர் தலைமுறையினர் ஈழத்தை பொறுத்தவரை பார்வையாளர்களாக இருந்துவிட்டுப்போகட்டும், பங்காளிகளாக முடியாது.


3) கம்பன் கழகம் ஒரு காலத்தில் அரசியலில் ஈடுபடாதது உண்மைதான். ஆனால், “ஜனநாயகம் தளிர்த்திருக்கும் புதிய இலங்கையில்” எமது கழகம் இனி அரசியலும் பேசும். 

4) கம்பன் கழகத்தை கொழுத்த கழகமாக வளர்;த்துவிட்டவர்களும் குறைந்த பட்சம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் என்ற தகுதியுடையவர்கள் மட்டுமே, கம்பன் கழகத்தை கேள்வி கேட்கமுடியும். 

5) எனது வருகைக்காக புலம்பெயர்ந்த காதிதப்புலிகள் உட்பட அனைவரும் தவமிருக்கவேண்டும். நான் வருவது புலம்பெயர்ந்த மக்களுக்குத்தான் பெருமையே ஒழிய எனக்கல்ல. 

- இப்படி ஜே.கே.யிற்கு எழுதிய கடித்தில் தொடர்ந்து புலம்பித்தள்ளியிருக்கிறார் மனுசன். மொத்தத்தில், ஜே.கே.யிற்கான ஒற்றை பதில் கடிதத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழ் சுமூகத்திற்கும் செருப்பால் அடித்திருக்கிறார் வாரிதியார்.

சரி. இவரது இந்த சேறடிப்புக்களுக்கு பதில் கூறுவதன்மூலம்தான் போலிப்படைப்பாளி என்ற இவரது சுயரூபத்தை வெளிக்கொண்டுவரலாம்.

கபோதியாரின் அரசியல் காண்டம்

கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லைதம் சிந்தையின் செய்கையால்;
ஆற்றல் நல்லறம் அல்லது இல்லாமையால்
ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே

என்று கம்பன் கண்ட பெருமை மிக்க கோசலை நாடு போல சர்வதேசத்தால் போர்க்குற்ற நாடாக விழிக்கப்பட்டிருக்கின்ற தேசத்தையும் அதன் இரத்தக்கறைகொண்ட அரச அதிபரையும் வாரிதியார் போற்றிப்பாடியிருப்பது, அவர் இப்போதும் எப்போதும் எங்கே நிற்கிறார் என்பதையும், அவர் தலைமையிலான கழகம் இனி ஈடுபடப்போவதாக கூறியிருக்கும் தமிழர் அரசியலின் போக்கினையும் நன்றாகவே எடுத்துக்கூறிவிட்டது. இனி அதில், அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. அவர் களமாடப்போகும் - அவர்கூறும் - அரசியலை அங்குள்ள மக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

துப்பாக்கிகள் பேசிக்கொண்டிருந்த போர்க்காலத்தில், கம்பன் கழகம் அரசியல் பேசவில்லை என்று கூறும் வாரிதியார், தான் ஏதோ வேற்றுக்கிரகவாசி போல பேசுகிறாரே, இவர் அப்போது பேசத்தவறிய மக்களும் இப்போது பேசப்போவதாக இவர் கூறும் மக்களும் இவர் சார்ந்த இனத்தை சார்ந்தவர்கள்தானே? அவர்களுக்காக உண்மையில் அரசியல் பேசுபவராக இருந்தால் அதற்கு ஏன் இவர் காலம், கணிதம் எல்லாம் குறிக்கவேண்டும்? துப்பாக்கிகளுக்கு பயந்து பேசாமல் மௌனித்த இவருக்கு இனியும் என்ன அரசியல் வேண்டிக்கிடக்கிறது. அரசியல் என்றால் என்ன? மக்கள் பிரச்சினைகளுக்காக பொதுவெளியில் துணிச்சலுடன் பேசவல்ல கூட்டு பிரக்ஞை. இந்த துணிவான பயணத்தில் துப்பாக்கிக்கு பயப்படும் அப்பக்கோப்பைகளுக்கு ஏன் அரசியல்? தங்கள் உயிரை துச்சமென மதித்து தேசத்துக்காக தங்களை ஆகுதியாக்கிய பல லட்சம் மாவீரர்கள் பிறந்த மண்ணிலிருந்து வந்த ஒருத்தன் துப்பாக்கிக்கு பயந்து அரசியல் செய்யவில்லை என்றால், இவர்களுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை கொடுக்ககலாம் என்று தெரியவில்லை.

இராமகாதையே ஒரு அரசியல் காப்பியம். அதை எழுதிய கம்பனே கதை முழுவதும் அரசியலை ஆங்காங்கே விதைத்துக்கொட்டியிருப்பான், இராமனது அரசியல் நன்நெறி, சுக்ரீவனுக்கு வழங்கிய செல்நெறி என்று எங்கு பார்த்தாலும் அரசியலால் சூழந்த காப்பியப்புலவனின் புகழ் பாடும் வாரிதியார், தான் சார்ந்த இனம் இரத்தத்தில் மிதந்தபோதுகூட தனது அமைப்பை ஒரு மக்கள் சார்ந்த அமைப்பாக – இங்கு கம்பன் கழகத்தை அரசியல் கட்சியாக்க சொல்லவில்லை – மாற்றாதவர், மாற்ற முற்படாதவர் இனி என்ன அரசியல் செய்யப்போகிறார்.
 

DSC_7705.jpg


வேறொன்றுமில்லை, அதுவும் தனது கழகத்தை வளர்த்துக்கொள்வதற்கான குறுக்குவழி மட்டுமன்றி வேறில்லை. ஏனெனில் தற்போது அவருக்கான நிர்ப்பந்தம் அது. இந்து சமய காலாச்சார அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவை கம்பனுக்கு அடுத்து மரியாதை செலுத்தி “வாங்கியவை” எல்லாம் இனி சாத்தியமாகாத வெற்றுக்களத்தில், இனி தானே அரசியலுக்குள் அடியெடுத்துவைத்தால்தான் உண்டு என்ற நிலைமை வந்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற வாரிதியார் போன்றோருக்குத்தான் இப்படியான “கம்பசூத்திரங்கள்” புரியும்.

கபோதியாரின் ஆணவ காண்டம்

எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை இடல் இலை இனிதும் நும் மனைவியும்
மதிதரு குமர்ரும் வலியர்கொல் எனவே

மக்களாட்சியில் திறன் மிக்க அரசனான இராமன் தேரில் அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தபோது, வீதியின் இருமருங்கிலும் நின்றுகொண்டிருந்த மக்களை பார்த்து தேரிலிருந்து இறங்கி அவர்களை குறை கேட்கும் பாங்கையும் இராமனது பணிவையும் கம்பன் அழகாக சொல்லி இராமனது நல்லாட்சி முறை குறித்தும் அவனது மக்கட் பண்பின் மேன்மையையும் புகழ்ந்திருக்கும் பாடல் இது.

இவ்வாறான இராமனையும் கம்பனையும் படித்த வாரிதியார், தனது கடித்தில் உமிழ்ந்திருக்கும் திமிர்பிடித்த வாக்கியங்கள், நான் பார்த்த தமிழினத்தின் பெருந்துரோகிகள்கூட பயன்படுத்தியதில்லை. “தான் புலம்பெயர்ந்த மண்ணுக்கு வருவது புலம்பெயர்ந்து தமிழர்வாழும் மண்ணுக்கு பெருமையே தவிர தனக்கல்ல” என்றும், “தனது வருகைக்காக நாங்கள் தவம் இருக்கவேண்டும்” என்று கூறுகிறார் இந்த பெருமகனார்.

இந்த திருக்கருத்துக்களை, வெளிநாடுகளில் வந்து மேடை போட்டு பேசியபோது ஒரு பிரசங்கத்திலாவது இவர் வெளிப்படையாக கூறியிருப்பாரா? தன்னிலை கடந்த தத்துவஞானியாகவும் தக்கனகூறும் தனிப்பெரும் கடவுளாகவும் தன்னைத்தானே உருவகித்துக்கொள்ளும் இவருக்கு இத்தனை திமிருடன் பேசும் பேச்சாளர் என்ற தகுதியை கொடுத்ததே அன்று தாயகத்திலும் இன்று புலத்திலும் இருக்கும் பெரு லட்சக்கணக்கானவர்கள் என்பதை இவர் மறந்திருப்பது பெருங்கேவலம்.

கபோதியாரின் யுத்த காண்டம்

ஈற்றில், வாரிதியார் புலம்பெயர்ந்த மக்களின் மீது தொடுத்திருக்கும் யுத்த காண்டத்தை பார்த்தால், அவர் ஒரு முடிவெடுத்துவிட்டார் போலத்தெரிகிறது. இந்த கடிதத்தை எழுதுவதற்கு முன்னர், அவர் மணிமகுடம் தரித்துவிட்ட மைத்திரி கொண்டுவந்த 19 ஆவது அரசமைப்பு சீர்திருத்தத்தின்கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள, வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் எவரும் இலங்கையில் வந்து அரசியல் மற்றும் அரசு பதவிகள் வகிக்கமுடியாத என்ற விடயத்தை வாசித்திருப்பார் போலிருக்கிறது.

அதை அப்பிடியே வழிமொழிவதுபோல, இனிவரும் புலம்பெயர் தலைமுறையினர் இந்த மண்ணுக்கு பார்வையாளர்கள் மட்டுமே பங்காளர் அல்லர் என்று முழங்கியிருக்கிறார். இது அவர் இறங்கவுள்ள அரசியலின்பாலிருந்து வெளியிட்டுள்ள யுத்த பிரகடனமா அல்லது கம்பன் கழகத்தின் சார்பில் வெளியிட்ட சண்டை பத்திரமா என்று புரியவில்லை. மொத்தத்தில், அவர் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ்மக்களையும் அவர் சண்டைக்கு இழுக்கிறார் என்பது மட்டும் தெளிவு.

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ

இப்படியானவர்களுக்கென்ற கம்பன் அன்று எழுதிவைத்தானோ என்னவோ. யாரோடும் பகைகொள்ளாதே, அவர்களை அன்பாலே வெல்லப்பார் என்று போதனை செய்யும் கம்பனது வரிகள்தான் இவை.

ஒரு பொதுவெளியில் தன்னை போதனை பெருமகனாக மக்கள் மத்தியில் நிறுத்திக்கொண்ட வாரிதியாரின் போலி இலக்கிய சோடனைகளும் காவிக்குள் ஒளித்த காட்டுமிராண்டித்தனமும் இந்த கம்பன் விழாவுடன் நடைபெற்ற விவாதங்களில் வெளிச்சத்துக்கு வந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி. ஏனெனில் தாயகத்தையும் புலத்தையும் பொறுத்தவரை இன்று யார் யார் எங்கு நிற்கிறார்கள் என்பதை கோடு கிழித்து கண்டுகொள்வது மிக அத்தியாவசிய அரசியல் தேவையாகிறது.

அந்தவகையில், கம்பன் கழகம் என்ற அமைப்பில் மக்கள் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச விருப்பும் இருப்பும் ஜெயராஜ் என்ற தனிமகனின் கொடிய அரசியற் கரங்களால் பிய்த்தெறியப்பட்டுள்ளது. இனி இதை தாயகத்திலும் புலத்திலும் உள்ள மக்கள் தீர்மானிக்கட்டும்.

( 2011 இல் "உதயன்" பத்திரிகையில் கொட்டை எழுத்தில் வந்த செய்தி :- "எமது இனம் குறித்து உண்மையான அக்கறை கொண்ட ஒரே ஒரு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! – கம்பவாரிதி இ.ஜெயராஜ்

 

http://malaimaram.blogspot.com.au/2015/05/blog-post_6.html

  • கருத்துக்கள உறவுகள்

வாரிதியாரின் வசைபாடலுக்கு வருவோம் -

1) நாட்டைவிட்டு ஓடிய புலம்பெயர்ந்த எவரும் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கமுடியாது. மீறி, யாராவது எமக்கு ஆலோசனை தந்தாலும் நாம் அதை ஏற்கப்போவதில்லை.

2) இனிவரும் புலம்பெயர் தலைமுறையினர் ஈழத்தை பொறுத்தவரை பார்வையாளர்களாக இருந்துவிட்டுப்போகட்டும், பங்காளிகளாக முடியாது.

3) கம்பன் கழகம் ஒரு காலத்தில் அரசியலில் ஈடுபடாதது உண்மைதான். ஆனால், “ஜனநாயகம் தளிர்த்திருக்கும் புதிய இலங்கையில்” எமது கழகம் இனி அரசியலும் பேசும். 

4) கம்பன் கழகத்தை கொழுத்த கழகமாக வளர்;த்துவிட்டவர்களும் குறைந்த பட்சம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் என்ற தகுதியுடையவர்கள் மட்டுமே, கம்பன் கழகத்தை கேள்வி கேட்கமுடியும். 

5) எனது வருகைக்காக புலம்பெயர்ந்த காதிதப்புலிகள் உட்பட அனைவரும் தவமிருக்கவேண்டும். நான் வருவது புலம்பெயர்ந்த மக்களுக்குத்தான் பெருமையே ஒழிய எனக்கல்ல. 

- இப்படி ஜே.கே.யிற்கு எழுதிய கடித்தில் தொடர்ந்து புலம்பித்தள்ளியிருக்கிறார் மனுசன். மொத்தத்தில், ஜே.கே.யிற்கான ஒற்றை பதில் கடிதத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழ் சுமூகத்திற்கும் செருப்பால் அடித்திருக்கிறார் வாரிதியார்.

-----

 

கம்ப வாரிதி ஜெயராஜ், சரியான பொறுக்கித்தின்னி போல் உள்ளது.

சாமியார் வேஷம் போட்டால்... கோயில், குளத்திலை போய் இருக்க வேண்டியது தானே.....

இந்தியாவிலுள்ள கள்ளச் சாமியார்கள் மாதிரி, அரசியலில் நுழையப் பாக்கிறார்.

 

######

 

இந்த ஆளின்..... சுயரூபம் தெரியாமல், நெருங்கிய உறவினர் ஒருவரின் மரண அஞ்சலி மலரில்..

இவரின் கவிதை ஒன்றை வாங்கி பிரசுரித்தமைக்காக... இப்போ மனம் வருந்துகின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குடுமிக்கும் அதன் பரிவாரங்களுக்கும்.. கூடிய முக்கியத்துவம் கொடுத்து அதுங்களுக்கு தலைக்கணத்தைக் கூட்டுறோமோன்னு நினைக்கத் தோணுது. இதுங்க திருந்தாதுங்க. அதுங்க..சிங்கள பெளத்த தேசத்தில்.. நல்லா கால் பரப்பிட்டுதுங்க. பிச்சைப் பாத்திரம் நல்லா நிரம்புது. அது நிரம்பும் வரை.. அதுங்க இப்படி தினாவெட்டா பேசத்தான் செய்யுங்க.

 

கம்பனின் வாரிசு.. ஒரு காலத்தில்.. புலம்பெயர் தமிழ் சிறுமிகளின் அபார உடல் வளர்ச்சி குறித்தும்.. பொங்கி எழுந்திருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவனுங்களுக்கு காவி கம்பன் ஒரு கேடு. அவருக்கு ஒரு சில வர்த்தக முதலைகள் எடுபிடி. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சரி எல்லாம் இருக்கட்டும்.. கம்பவாருதி குடுமி ஜெயராஜ்.. என்ன கொழும்பிலேயே பிறந்து.. கொழும்பிலேயே வளர்ந்து.. கொழும்பிலேயே படித்து.. கொழும்பிலேயே கம்பன் கழகம் ஆரம்பிச்ச  இலச்சணத்திலா.. புலம்பெயர் தமிழர்களை நோக்கி திட்டுறார். 

இவர் 1995 ரிவிரெச  சிங்கள  ஆக்கிரமிப்பு.. இராணுவ நடவடிக்கையோடு சொந்த ஊரை விட்டு ஓடியந்து கொழும்பில் பதுங்கின போது.. யார் இவர்களுக்கு உதவி நின்றார்கள்.. சிங்களவர்களா..?! அதைப்பற்றி ஏன் மூச்சும் விடல்ல..??! சொந்த மண்ணை விட்டு கொழும்புக்கு.. ஓடியாந்த.. இந்த அகதியே  புலம்பெயர் தமிழர்களைப் பற்றி  அகதின்னும் பார்வையாளரா இருன்னும் கூவ என்ன தகுதி வைச்சிருக்குது..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் எமாந்தான் ...........அட புலம்பெயர் டமிழ்ஸ்ம் எமாந்தனர்maithiripala_kampan_001.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தீந்தக் கம்பன் கழகத்தின் சிட்னி அமைப்பினரில் உள்ளவர்களை எனக்குத் தெரியும். உண்மையான தமிழ் விரும்பிகள், தாயகத்தின்மேலும், தேசியத்தின்மேலும் அக்கறை கொணடவர்கள்.

 

இவர்களையும் கூட வைத்துக்கொண்டேதான் கழுதைவாரிதி புலம்பெயர் தமிழர்பற்றிக் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். 

 

அவர்களுக்கோ இரண்டும் கெட்டான் நிலை. கழுதைவாதிரியை தலைவராக ஏற்று அவர் கரிவாய் பொழிந்தருளியதை வழிமொழிவதா அல்லது அவரை உதைந்து தள்ளிவிட்டு உனது அடிமை இணக்க அரசியலும் வேண்டாம், தமிழ்த்தாயை உனது அரசியலுக்காக விற்கும் பிழைப்பும் வேண்டாம் என்று வருவதா என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாரிதியாரின் வசைபாடலுக்கு வருவோம் -

1) நாட்டைவிட்டு ஓடிய புலம்பெயர்ந்த எவரும் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கமுடியாது. மீறி, யாராவது எமக்கு ஆலோசனை தந்தாலும் நாம் அதை ஏற்கப்போவதில்லை.

2) இனிவரும் புலம்பெயர் தலைமுறையினர் ஈழத்தை பொறுத்தவரை பார்வையாளர்களாக இருந்துவிட்டுப்போகட்டும், பங்காளிகளாக முடியாது.

3) கம்பன் கழகம் ஒரு காலத்தில் அரசியலில் ஈடுபடாதது உண்மைதான். ஆனால், “ஜனநாயகம் தளிர்த்திருக்கும் புதிய இலங்கையில்” எமது கழகம் இனி அரசியலும் பேசும். 

4) கம்பன் கழகத்தை கொழுத்த கழகமாக வளர்;த்துவிட்டவர்களும் குறைந்த பட்சம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் என்ற தகுதியுடையவர்கள் மட்டுமே, கம்பன் கழகத்தை கேள்வி கேட்கமுடியும். 

5) எனது வருகைக்காக புலம்பெயர்ந்த காதிதப்புலிகள் உட்பட அனைவரும் தவமிருக்கவேண்டும். நான் வருவது புலம்பெயர்ந்த மக்களுக்குத்தான் பெருமையே ஒழிய எனக்கல்ல

 

 

http://malaimaram.blogspot.com.au/2015/05/blog-post_6.html

 

இவர் உலகத் தமிழர்களுக்காகக் கம்பன் கழகம் நடத்தவில்லை.

 

கொழும்பு அரசியல் தலைவர்களுக்காகவே நடத்துகின்றார்.

 

இவருடைய கருத்துக்களைப் பெரிதாக்கி இவருக்கே விளம்பரம் செய்ய  விரும்பவில்லை.

 

1981 ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலக தமிழாராட்சி மகாநாட்டில் கம்பன் கழகம் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்த கம்பவாரதி மகாநாட்டு மண்டபத்தில் அரசியல் பேசி சர்ச்சையை உண்டாக்கி மேடையில் இருந்த அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜீ. ஆரின் கோபத்திற்கு உள்ளானார்.

 

2002 ல் புலம்பெயர் பெண் பிள்ளைகளை பற்றியும் அவர்கள் அணியும் உடைகள் தொடர்பாகவும் தனது  வக்கிர கருத்துக்களை வீரகேசரி வார மலரில் கட்டுரையாக எழுதி புலம்பெயர் மக்களின் இளம் தலைமுறையை அவமானபடுத்தினார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கோ இரண்டும் கெட்டான் நிலை. கழுதைவாதிரியை தலைவராக ஏற்று அவர் கரிவாய் பொழிந்தருளியதை வழிமொழிவதா அல்லது அவரை உதைந்து தள்ளிவிட்டு உனது அடிமை இணக்க அரசியலும் வேண்டாம், தமிழ்த்தாயை உனது அரசியலுக்காக விற்கும் பிழைப்பும் வேண்டாம் என்று வருவதா என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும்.

 

தமிழ்தாயை தனது அரசியல் பிழைப்புக்காக விற்கும் தளபதி வேண்டுமா,தமிழ்தாய்காக தமது இன் உயிர்களை இழந்த தளபதிகள் வேண்டுமா என்று அவர்களே தீர்மாணிக்கட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.