Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கிற்கு மீண்டும் ஓர் அழிவு காத்திருக்கிறது- களப்பலியாக போகும் ஏழைமக்கள்

Featured Replies

  •  
. Published on May 12, 2015-9:28 am   ·   No Comments

nor-150x150.jpgமேற்குலக நாடுகளில் உள்ள நீதிமன்றங்கள் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களை குற்றவாளியாக கண்டு தண்டனை வழங்கும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்து வந்தாலும் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பும், மீண்டும் ஒரு யுத்தம் என்ற போக்கும் தணிந்ததாக தெரியவில்லை.

2009ஆம் ஆண்டு மேமாதத்துடன் இலங்கையின் வடகிழக்கில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்ட போதிலும் சிறிது காலம் மௌனமாக இருந்த மேற்குலக நாடுகளில் உள்ள புலிகள் தற்போது யுத்தத்திற்கான முனைப்புகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இலங்கையில் சிங்கள தேசம், தமிழர் தேசம் என்ற இரு தேசங்கள் என்ற கோரிக்கையுடன் அரசியல் நடத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடாக தமது எண்ணத்தை அடைய மேற்குலக நாடுகளில் உள்ள புலிகள் அமைப்பினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இரு தேசம் என்பதோ அல்லது தமிழீழம் என்பதோ களயதார்த்தத்தில் எந்த வகையிலும் சாத்தியமாகாது என்ற போதிலும் மீண்டும் ஒரு யுத்தத்தை ஆரம்பித்து மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களை உசுப்பேத்தலாம் என மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் நம்புகின்றனர்.

மீண்டும் ஆயுதப்போராட்டத்தை விடுதலைப்புலிகள் ஆரம்பித்துள்ளனர் என காட்டி இராணுவ நெருக்குவாரங்களை வடகிழக்கில் அதிகரிப்பதற்கு இராணுவத்தினருக்கும் அரசாங்கத்திற்கும் இது வாய்ப்பாகவே அமைந்து விடும். இராணுவ நெருக்கடி வடகிழக்கில் தொடரவேண்டும் என்பதை மேற்குலக விடுதலைப்புலிகளும் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கான நகர்வுகள் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென நோர்வேயில் உள்ள நெடியவன் தலைமையிலான விடுதலைப்புலிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான நிதி நோர்வே உதவி திட்டம் என்ற பெயரில் விடுதலைப்புலிகளால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் விடுதலைப்புலிகளால் சேகரிக்கப்படும் நிதியும் ஏற்கனவே அவர்கள் வசம் இருக்கும் நிதியும் நோர்வேக்கு அனுப்பபட்டு நோர்வே ஊடாகவே இலங்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் கைகளுக்கு சென்றடைகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்ட நிதி எதுவுமே சட்டரீதியாக இலங்கைக்கு அனுப்பபடவில்லை. கவாலா என்று அழைக்கப்படும் உண்டியல் முறையிலான சட்டவிரோத பணமாற்று திட்டத்தின் கீழேயே இந்நிதி நோர்வே உதவி திட்டம் என்ற பெயரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரு நோக்கங்களை கொண்டு இந்நிதியின் ஒரு பகுதியை தற்போது வடக்கு கிழக்கில் செலவிட்டு வருகிறது.

ஓன்று எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமக்கான ஆதரவை பெறுவது.

இரண்டாவது மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் குறிக்கோளான ஆயுதப்போராட்டத்திற்கான ஆட்களை திரட்டுவது.

தேர்தலை நோக்கமாக கொண்டு யாழ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு கிராமங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில உதவிகளை வழங்கிவருகிறது. ஆடுகள் கோழிகளை மற்றும் மீன்பிடி வலைகளை வழங்கி தமக்கு வாக்களிக்குமாறு அவர்கள் கோரிவருகின்றனர். மீண்டும் ஒரு யுத்தம் என்ற மேற்குலக நாடுகளில் உள்ள புலிகளின் இலக்கிற்கு இக்கிராமங்களை மிக இலகுவாக பலியாக்கலாம் என்பதும் அவர்களுக்கு தெரியும். யுத்தகாலத்தில் அதிக போராளிகள் இக்கிராமங்களில் இருந்துதான் சேர்க்கப்பட்டார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்களிடம் வாக்கு கேட்பதற்கும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் சகல உரிமையும் உண்டு.

சர்வாதிகார போக்குடன் செயற்படும் சம்பந்தன் போன்றவர்களுக்கு மாற்றீடாக ஒரு தெரிவை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் முன் வைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சகல உரிமையும் உண்டு. ஆனால் அவர்களை இயக்கி கொண்டிருப்பவர்களின் நோக்கத்திற்கு அல்லது அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்பட்டால் அது வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு ஆபத்தாகவே முடியும்.

இரண்டாவது திட்டம் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் குறிக்கோளான ஆயுதப்போராட்டத்திற்கு ஆள்திரட்டுவது.

இதற்கு அவர்கள் கிழக்கு மாகாணத்தையே தெரிவு செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இந்த ஆட்சேர்ப்பிற்காகவும் தேர்தலில் தமக்கு வாக்களிப்பதற்காகவும் குடும்பம் ஒன்றிற்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.

அண்மையில் திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மாவீரர் குடும்பங்களையும் போராளிகள் குடும்பங்களையும் இத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். முக்கியமாக மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் தற்போது இந்த விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் இந்த விபரங்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கான நீதி வழங்கும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது. முழுமையாக தங்களின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பவர்களுக்கு முதற்கட்டமாக தலா ஒரு இலட்சம் ரூபாயும் மேலும் பல உதவிகளையும் தாம் வழங்குவோம் என உத்தரவாதம் அழிக்கப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குழு நோர்வே என்ற நிதி வழங்கும் அமைப்பு இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை, நோர்வேயிலும் பதிவு செய்யப்படவில்லை, அந்த அமைப்புக்கு நோர்வேயிலிருந்து இலங்கைக்கு எவ்வாறு பணம் அனுப்பபடுகிறது, இதுவரை அனுப்பபட்ட பணம் சட்டரீதியாக அனுப்பபட்டதா என்ற எந்த விபரமும் கிடையாது.

விடுதலைப்புலிகளின் போராட்டம் நடைபெற்ற காலத்தில் மேற்குலக நாடுகளில் இருந்து வன்னியில் இருந்த விடுதலைப்புலிகளுக்கு எவ்வாறு நிதி சென்றடைந்ததோ அது போன்றே தற்போது நோர்வே உதவி திட்டம் என்ற பெயரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு நிதி சென்றடைகிறது.

வடக்கில் சில உதவிகளை கிராமங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடாக நோர்வே உதவி திட்டம் என்ற பெயரில் விடுதலைப்புலிகள் வழங்கினாலும் வடக்கில் ஆயுதப்போராட்டத்திற்கான ஆள் திரட்டும் நடவடிக்கையில் கவனம் செலுத்தவில்லை,

கிழக்கிலேயே ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிப்பதற்கான முயற்சியாக மாவீரர் குடும்பங்களையும் போராளிகள் குடும்பங்களையும் மிக வறிய நிலையில் உள்ள குடும்பங்களையும் இவர்கள் நாடியுள்ளனர்.

வடக்கில் ஆயுதப்போராட்டம் என்ற பேச்சை எடுத்தாலே மக்கள் அதற்கு எதிர்ப்பு காட்டுவார்கள் என்பதும் எதிர்வரும் தேர்தலில் தமக்கான செல்வாக்கை திரட்ட முடியாது என்பதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு நன்கு தெரியும் என்பதால் கிழக்கிலேயே மேற்குலக விடுதலைப்புலிகளின் நோக்கத்தை செயற்படுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முற்பட்டுள்ளனர்.

மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய நோக்கங்களாக பின்வரும் விடயங்கள் காணப்படுகின்றன.

1. தமது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த கூடிய தரப்பாக இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

2. தமிழ் தேசிய கூட்டமைப்பை நிர்மூலமாக்க வேண்டும், குறிப்பாக தமிழரசுக்கட்சியை முற்றாக அழிக்க வேண்டும்.

3. தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது முக்கியத்துவம் பெற்றுவரும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ( தமிழரசுக்கட்சியுடன் ) மோதலை உருவாக்கும் வகையில் பொய் பிரசாரங்களை மேற்கொள்வது, இதற்கென விடுதலைப்புலிகளின் இணையத்தளம் ஒன்று தினசரி புனையப்பட்ட பொய்யான செய்;திகளை வெளியிட்டு வருகிறது. மாவை சேனாதிராசா, சம்பந்தன் ஆகியோருடன் விக்னேஸ்வரனை மோத வைக்கும் வகையில் செய்திகள் தினசரி வெளியிடப்பட்டு வருகிறது.

4. இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரனை பிரித்தெடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைத்தால் தமக்கான ஆதரவு பெருகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் மேற்குலக நாடுகளில் உள்ள புலிகளும் நம்புகின்றனர்.

5. கிழக்கில் ஆட்களை திரட்டி அங்கு சிறு சிறு தாக்குதல்களை தொடங்கினால் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை தாம் ஆரம்பித்து விட்டோம் என்றும் தலைவர் பிரபாகரனின் வழிநடத்தலில் போராட்டம் தொடங்கி விட்டதாகவும் காட்டினால் மீண்டும் மேற்குலக நாடுகளில் நிதி திரட்டலை அமோகமாக செயற்படுத்த முடியும் என்றும் விடுதலைப்புலிகள் நம்புகின்றனர்.

இலங்கையில் மீண்டும் ஆயுதப்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதன் மூலம் நிதி சேகரிப்பையும் மக்கள் மத்தியில் செல்வாக்கையும் அதிகரிக்க முடியும் என்றே விடுதலைப்புலிகள் நம்புகின்றனர்.

ஆனால் இவர்களின் எண்ணங்களுக்கு எதிர்மாறானவர்களாகவே இலங்கையில் தற்போது புனர்வாழ்வு பெற்று இயல்புவாழ்க்கைக்கு திரும்பி இருக்கும் முன்னாள் போராளிகள் காணப்படுகின்றனர். வடக்கில் உள்ள முன்னாள் போராளிகளிடம் இம்மனநிலை பெருமளவு காணப்படுகிறது. வடக்கை சேர்ந்த 50வீதமான முன்னாள் போராளிகள் வெளிநாடுகளுக்கும் வந்து விட்டனர்.

ஆனால் கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள் பலருக்கு மேற்குலக நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு வசதிகள் கிடைக்கவில்லை, சிலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமே அவர்களால் செல்ல முடிந்திருக்கிறது.

இதனை பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும் மாவீரர் குடும்பங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடியிருக்கிறது.

மிக வறுமையான நிலையில் இருக்கும் இக்குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் என்பது பெரிய தொகையாகவே தென்படும். இதனை மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் பயன்படுத்தி கொள்கின்றனர்.

மீண்டும் ஆயுதப்போராட்டம் என்ற முனைப்புடன் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் தரப்பினர் செயற்படும் அதேவேளை அவர்கள் மீது மேற்குலக அரசுகளும் நீதிமன்றங்களும் தண்டனை வழங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

கடந்த வருடம் ஜேர்மன் பேர்ளின் நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த 10பேரை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு 6 வருடம் முதல் 2வருடங்கள் வரை சிறைத்தண்டனையை வழங்கியிருந்தது. சட்டவிரோதமாக பயங்கரவாத இயக்கத்திற்கு நிதி சேகரித்தது, நிதி கொடுக்க மறுத்தவர்களை அச்சுறுத்தியது, உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.  இரு பெண்கள் உட்பட 10பேருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இதேபோன்று கனடா பிரான்ஸ் நீதிமன்றங்களும் பயங்கரவாத இயக்கத்திற்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் சில தமிழர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கியிருந்தது.

சுவிட்சர்லாந்து பொலிஸாரும் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த சுமார் 10பேரை கடந்த இரு வருடங்களுக்கு முதல் கைது செய்து தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் நெதர்லாந்தில் உள்ள ஹக் நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த ஐந்து பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு 19 மாதங்கள் தொடக்கம் 6 வருடம் மூன்று மாதங்கள் வரையான சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேன்முறையீட்டுக்கு ஹக் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஒரு தீவிரவாத மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒரு அமைப்பாக நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. வழக்கில் ஈடுபடும் இந்த ஐந்து பிரதிவாதிகளும் தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்டதுடன் நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணி பதவி நிலைகளிலும் இருந்து செயற்பட்டுள்ளார்கள் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது. அத்துடன் நெதர்லாந்து விடுதலைப்புலிகள் அமைப்பினர் விடுதலைப்புலிகளுக்கு நிதி வழக்குமாறு தமிழ் மக்களை கட்டாயப்படுத்தியதுடன் அவ்வாறு செய்வதன் மூலம் பெரும் அழுத்தத்தை அம்மக்கள் மீது பிரயோகித்ததாக நீதிமன்றம் அறிகின்றது.

43 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும், ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றம் நேற்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 43 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும், ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் விடுதலைப்புலிகளின் சர்வதேச இணைப்பாளர் இராமச்சந்திரன் செல்லையா, ( இவரே ஐரோப்பிய நாடுகளின் நிதி சேகரிப்புக்கு பொறுப்பாக இருந்தார்) வன்னியிலிருந்து கஸ்ரோவால் அனுப்பட்ட ரங்கன் ராமலிங்கம், இளவரசன் திருநாவுக்கரசு, லங்கரத்தினம் தம்பையா ஆகியோருக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் கஸ்ரோவால் அனுப்பட்ட ரங்கன் இராமலிங்கம் என்பவர் நீதிமன்றில் அரச தரப்பு சாட்சியாக மாறி நீதிசேரிப்பில் யார் யார் ஈடுபட்டார்கள் என்ற முழு விபரங்களையும் தெரிவித்திருந்தார்.

ஐரோப்பிய நாடுகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி சேகரிப்பவர்களுக்கும் தண்டனை வழங்கி வருகின்ற போதிலும் விடுதலைப்புலிகள் அமைப்பு நீதி சேகரிப்பையோ அல்லது மீண்டும் ஆயுதப்போராட்டம் என்ற இலக்கையோ கைவிடவில்லை.

http://www.thinakkathir.com/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கேவலமான கருத்து. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் சகல செயற்பாடுகளையும் ஆயுத போராட்டத்துடன் தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ளது.

வடமாகாண சபை தகவல்களை திரட்டினால் உதவி மற்றவை திரட்டினால் உபத்திரம்.

தமிழீழப் போராட்டத்தில் வடமாகாண மக்களே அதிகளவு உயிர்களையும் பொருளாதாரத்தையும் இழந்தவர்கள்.

கிழக்குமாகாண ------- மீண்டும் பிரதேசவாத்த்தை தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றனர்.

Edited by நிழலி
தவிர்க்க வேண்டிய சொல்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் புலம்பெயர்ந்த பிரதேசத்திலதான் இருக்கிறேன் இதுவரை என்னிடம் வந்து புலிகளுக்கு பணம் தரும்படி ஒருத்தரும் கேட்கவில்லை.....சும்மா கற்பனையில் கட்டுரை எழுதுவதை நம்மவர்கள் குறைத்தால் நல்லம் ......

இதை தூக்கித் திரிபவர் எவர் என நோக்கினாலே இதன் உண்மைத்தன்மையும், இதற்கான காரணமும் புரியும். இப்படியான 'ஜீன்'களிடம் மக்கள் எச்சரிக்கையாகவே இருப்பார்கள்!

ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறாதென்று சும்மாவா சொன்னார்கள்?!

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி இந்த கிழக்குமாகாண ------- சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தப்பட்ட காணாமல் போனோருக்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்தவர்களிடம் வடக்கு கட்சியையும் ஆட்களையும் நம்பாதீர்கள் என கூறியிருந்தார்கள்.

மிகவும் கீழ்தரமான அரசியலில் எலிகளும் எலி வாலுகளும் ஈடுபட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேசவாதத்தை தூண்டும் கட்டுரை. நாங்களும் புலம் பெயர்ந்து தான் வாழ்கிறோம்.யாரும் பணம் சேர்க்க என்னிடமோ நண்பர்களிடமோ அல்லது நண்பர்களின் நண்பர்களிடமோ சேர்த்ததாக அறியவில்லை. எந்த அடிப்படையில் தினக்குரல் இப்படி கட்டுரையை எழுதியது??


இதற்கு அவர்கள் கிழக்கு மாகாணத்தையே தெரிவு செய்துள்ளனர்.

 

 

இதென்ன இவர் சிவப்பு இட்டுள்ளார். இவருக்கு ஏதாவது தகவலை நக்கீரன் எடுத்து கொடுத்தாரோ??

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேசவாதத்தை தூண்டும் கட்டுரை. நாங்களும் புலம் பெயர்ந்து தான் வாழ்கிறோம்.யாரும் பணம் சேர்க்க என்னிடமோ நண்பர்களிடமோ அல்லது நண்பர்களின் நண்பர்களிடமோ சேர்த்ததாக அறியவில்லை. எந்த அடிப்படையில் தினக்குரல் இப்படி கட்டுரையை எழுதியது??

 

கொடுத்திருந்தால் தெரியும்

எப்பொழுது நடந்தது

இப்பொழுது நடக்குதா என்பது....

 

ஒரு பொழுதும் கொடுக்காதவனுக்கு இதே வேலைதான்....

பழைய தட்டை மாற்றிப்போடக்கூட பஞ்சி.... :(

  • கருத்துக்கள உறவுகள்
காவித்திரிகைகளின் .......
புலிக்காய்ச்சல் எங்கிருந்து தொற்றுகிறது என்பதை 
இந்த களத்தில் எழுதுபவர்கள் புரிந்து கொள்ளுங்கள். 
 
தமது அற்ப பதவிகள் சலுகைகளுக்காக 
மக்களை அடிமாடுகள் ஆக்கும் ஒரு ..... பேதாங்கி கூட்டம் இது. 
 
சிங்களவனால் தமிழனுக்கு வரும் அழிவு கணிப்பிட கூடியது
இந்த நாசகாரிகளால் தமிழன் பொருள் உடமை உயிர் மட்டுமல்ல 
எப்போதும் மீட்க முடியாத காலத்தையும் 
இழக்கிறார்கள் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் புலம்பெயர்ந்த பிரதேசத்திலதான் இருக்கிறேன் இதுவரை என்னிடம் வந்து புலிகளுக்கு பணம் தரும்படி ஒருத்தரும் கேட்கவில்லை.....சும்மா கற்பனையில் கட்டுரை எழுதுவதை நம்மவர்கள் குறைத்தால் நல்லம் ......

 

நானும் உள்ளேன் ஐயா..... :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்தவரையில் இங்கு சிட்னியில் எவருமே யுத்தம் முடிந்தபின்னர் பணம் கேட்டு வந்ததாக நினைக்கவில்லை, அப்படி யாரும் சொல்லவுமில்லை.

 

நடப்பதெல்லாம் உள்ளூர் அமைக்களினூடாக, விதவைகள், சிறுவர் சிறுமியர், அநாதைகள், ஊனமுற்றோருக்கான உதவிகள் மட்டுமே. அதுகூட பணம் என்று இல்லாமல், கலை நிகழ்வுகள், மற்றும் பொது நிகழ்வுகளினூடே திரட்டப்பட்டு அனுப்பப்படுகின்றன.

 

அப்படியிருக்க புலிகள் பணம் சேர்க்கிறார்கள் என்று கூறுவது, இந்தக் கட்டுரையினதும், இதை எழுதத் தூண்டியவர்களினதும் உண்மையான நோக்கம் என்னவென்பதை தெளிவாகக் காட்டுகிறது. 

 

இந்தப் பத்திரிக்கைக்கும், சிங்கள பேரினவாதப் பத்திரிக்கையான திவயின போன்றவற்றிற்குமிடையிலான வேறுபாடு என்ன ? அவர்களும் புலிகள் மீள் இணைகிறார்கள், பணம் சேர்க்கிறார்கள் என்று சிங்களத்தில் ஒப்பாரி வைக்க, இவர்கள் தமிழில் ஒப்பாரி வைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், திவயினவிற்கும் ஒரு அடி மேலே போய், கிழக்கு மாகாண மக்களைப் பலிக்கடாவாக்கப் பார்க்கிறார்கள் என்றும் கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

ஒரே கல்லில் இரண்டு மாங்காய், ஒன்று புலிப் புரளி கிளப்பி ராணுவப் பிரசன்னத்தைத் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் வைத்திருப்பது. இரண்டாவது எப்படியாவது பிரதேசவாதம் பேசி தமிழர்களை கூறு கூறுகளாகப் பிரிப்பது. 

 

தமிழர் இதுபற்றிக் கவலைப்படாமல் தங்களது வேலையைப் பார்ப்பதே நல்லது !


ஓ...இணைத்தது யாரென்பதை இப்போதுதான் கவனித்தேன். இதைவிட வேறு என்னத்தை இவர்களிடமிருந்து எதிர்பார்க்கமுடியும் ?? இதுவரை சிங்களவன் செய்ததை இப்போது நம்மவர்களே செய்கிறார்கள் !!பலே...பலே !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.