Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் விவகாரம் ,வித்தியா விவகாரங்கள் தொடர்பாக இரா .சம்பந்தன் ஐயா சிறப்பு நேர்காணல்

Featured Replies

 

 

 

 

http://www.tamilwin.com/

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவினுடைய  பேச்சில் தெளிவில்லை

இதில் மக்களால் சந்தேகத்துடன் பார்க்கப்படுபவர்கள்

இடையே புகுந்து குழப்பங்களை ஏற்படுத்தியோர் அவருடைய கட்சியைச்சேர்ந்தவர்கள்

அவர்கள் பற்றியோ அவர்களது நடவடிக்கைகள் பற்றியோ ஐயா பேசத்தயங்குகின்றார்

அவ்வாறாயின் இவரும் இதற்கு துணைபோவதாகத்தான் முடியும்

உண்மை இவரது கட்சிக்காரர்களிடம் இருக்கிறது

மாவை அவர்கள் நேரடியாக சென்றிருந்தார்

அன்றிலிருந்து வாய்மூடியுள்ளார்

ஏன்...?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதிலும் வழமை போல சும்மா இருந்திருக்கலாம்.. உவர் சம்பந்தன். உவருக்கு ஊரில என்ன நடக்குதென்றாவது சரியா தெரிந்து கொள்ளும் தன்மை இருக்கா..?! :icon_idea::rolleyes:

 

சில பல உறுதிமொழிகள்.. உறுதிமொழிகள்.. இதைச் சொல்ல... ஒரு பேட்டி.

 

ஒரு விடயத்தை ஒத்துக்கொண்டார் சம்பூரில் மக்கள் விடாப்பிடியாக..போராடி அடைந்த பயனே நில விடுவிப்பு. (இதனை ஐயாவின்.. அடிபொடிகள் ஏற்க மறுத்திட்டினம்.. எனி ஏற்பினம் என்று நம்புவம். )

 

சுமந்திரனை.. புரமோட் பண்ணுறதை கைவிடல்ல. ஐயா அந்தக் காரியத்தில கண்ணா இருக்கிறார்.

 

மற்றும்படி..

 

தெளிவாக்க வேண்டிய விடயங்களில் தெளிவற்ற பதப்பிரயோகங்களுடன் கூடிய... வெளிப்படையாக மக்கள் அறிந்த விடயங்களை அதை மீளச் சொல்லிட்டு போயிருக்கார். இதிலும் சும்மா இருந்திருக்கலாம்.. பாவம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு  வேட்பாளாரக பேசப்பட்ட விரி தமிழ்மாறனிடம் மக்களால்  நம்பிக்கையோடு ஒப்படைக்கப்பட்ட

சுவிசைச்சேர்ந்த குற்றவாளியாக கருதப்பட்ட நபர்  எவ்வாறு அடுத்தநாள் காலையிலேயே கொழும்பை அடைந்தார்??

இதையாவது கேட்டுச்சொல்லுங்கள் ஐயா

கனக்க முடிச்சுக்கள் அவிழும்.......

 

அதைவிடுத்து

இது பாராதூரமான பிரச்சினை

அது இது என்றபடி.....

காலத்தை இழுக்கவேண்டாம்

உங்கள் செயல்களே இனி தீவகப்பகுதிகளில் நீங்கள் கால்வைக்க அனுமதியாது போகலாம்...

  • தொடங்கியவர்

இதிலும் வழமை போல சும்மா இருந்திருக்கலாம்.. உவர் சம்பந்தன். உவருக்கு ஊரில என்ன நடக்குதென்றாவது சரியா தெரிந்து கொள்ளும் தன்மை இருக்கா..?! :icon_idea::rolleyes:

 

சில பல உறுதிமொழிகள்.. உறுதிமொழிகள்.. இதைச் சொல்ல... ஒரு பேட்டி.

 

ஒரு விடயத்தை ஒத்துக்கொண்டார் சம்பூரில் மக்கள் விடாப்பிடியாக..போராடி அடைந்த பயனே நில விடுவிப்பு. (இதனை ஐயாவின்.. அடிபொடிகள் ஏற்க மறுத்திட்டினம்.. எனி ஏற்பினம் என்று நம்புவம். )

 

சுமந்திரனை.. புரமோட் பண்ணுறதை கைவிடல்ல. ஐயா அந்தக் காரியத்தில கண்ணா இருக்கிறார்.

 

மற்றும்படி..

 

தெளிவாக்க வேண்டிய விடயங்களில் தெளிவற்ற பதப்பிரயோகங்களுடன் கூடிய... வெளிப்படையாக மக்கள் அறிந்த விடயங்களை அதை மீளச் சொல்லிட்டு போயிருக்கார். இதிலும் சும்மா இருந்திருக்கலாம்.. பாவம். :icon_idea:

எங்களை விட அப்படி என்ன திருகோணமலை விடயங்கள் உங்களுக்கு பெரிதாக தெரியும் ,தற்போது இதை எழுதுகின்ற நேரம் சுமந்திரன் சம்பூரில் மக்களை சந்தித்து உரையாடிக்கொண்டிருக்கின்றார்.

சுமந்திரன் செய்ததை செய்ததென்றுதானே சொல்லவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் செயலாற்றல் உள்ள கல்வியறிவுள்ள நிதானமான தலைவர். எமது இனம் இருக்கும் இன்றைய நிலையில் அவரது பங்களிப்பு காத்திரமானதும் பாராட்டப்படத் தக்கதும் ஆகும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசியப் பட்டியல் எம்பியாக, தன் பூர்வீக மாவட்ட நலனில் மட்டும் கவனம் செலுத்தாமல் சகல மாவட்டப் பிரச்சினையிலும் பங்கெடுப்பதும் ஒரு நல்ல முன்மாதிரி.

என்னைக் கேட்டால், இந்த முறை சம்பந்தன் தேசிய பட்டியலில் நின்றபடி, சுமந்திரனை திருமலையில் தன் சார்பில் களம் இறக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் நில விடுவிப்பு.. சுமந்திரன் தேர்தல் அரசியலாக்கப்பட்டு வருகுது. சம்பந்தன் ஐயாவின் பேட்டியில் அதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம்.. அழுத்தம் திருத்தமாக.. 2007 இல் அதாவது புலிகள் இருக்கேக்கேயே சுமந்திரன் செயற்படத் தொடங்கிட்டார்.. இப்ப பா.உ ஆகியும் தொடர்ந்து செயற்படுகிறார்.. அடுத்த முறை நீங்கள் தான் மக்கள்.. அவரை தொடர்ந்து பா.உ ஆக்கனுன்னு கெஞ்சுவது போல உள்ளது. :lol:

 

இப்ப அவரின் கூட்டாளிகள்.. சம்பூரில்.. சுமந்திரன் என்று சொல்கிறார்கள். சம்பூரில் இன்னும் மீட்கப்படாத நிலம் பற்றி (around 5,000 acres of lands still remain under the SL military occupation in Champooor, கடற்படை முகாம் பகுதி தவிர) இன்னும் பல்லாயிரம் ஏக்கர்கள் பற்றி.. பேச்சில்லை. அதே போல் வடக்கில். கிழக்கில்..! எனியும் சம்பூர் தான் தொடர்ந்து பேசப்படும் போல. மிச்சம் மறக்கப்பட்டிரும். சம்பந்தன் மறைச்சிடுவார்.

 

மற்றும்படி இப்பேட்டியில் ஒரு தலைவர் சொல்லக் கூடிய காத்திரமான பதில்கள் எதிலும் இல்லை. :icon_idea:

 

யாழ்ப்பாணத்தில் பவளோடு நிற்பது அதிரடிப்படை என்று சொல்லுவாராக்கும். இராணுவத்திற்கு உடுப்பை மாத்தினா அதிரடிப்படை.. பொலிஸ். எல்லாரும் சிங்களம் தான். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"லங்கா சிறிக்கு" வேறை வேலை இல்லையா?
மினக்கெட்டு.... சம்பந்தனிடம், ஏன் மைக்கை நீட்டியவர்கள்.
வாற கொட்டாவியை, அடக்க அந்தாள்... எவ்வளவு கஸ்ரப் பட்டிருக்கும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத் தலையீட்டை தவிர்த்தாராம். ரணிலோட பேசி. அப்ப// யாழ்ப்பாணத்தில் பவளோடு நிற்பது அதிரடிப்படை என்று சொல்லுவாராக்கும். இராணுவத்திற்கு உடுப்பை மாத்தினா அதிரடிப்படை.. பொலிஸ். எல்லாரும் சிங்களம் தான். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசியப் பட்டியல் எம்பியாக, தன் பூர்வீக மாவட்ட நலனில் மட்டும் கவனம் செலுத்தாமல் சகல மாவட்டப் பிரச்சினையிலும் பங்கெடுப்பதும் ஒரு நல்ல முன்மாதிரி.

என்னைக் கேட்டால், இந்த முறை சம்பந்தன் தேசிய பட்டியலில் நின்றபடி, சுமந்திரனை திருமலையில் தன் சார்பில் களம் இறக்க வேண்டும்.

மிச்சமிருக்கும் 3 எம்பி பதவியையும் முஸ்லீமுக்கு தாரை வார்க்க சுப்பர் ஐடியா .........

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு திருமலையில் தேர்தலில் நிற்க இடம் கிடையாது. சம்பந்தனும் இந்த முறை தேர்தலில் நிக்கிற ஐடியாவோட இல்லை. எலிகளும் எலிவாலுகளும் சரியான போட்டியோட யாருக்கு சீற்று கொடுக்கிறதெண்டு நிக்கினம்.

சம்பூர் மக்கள் ஊர் திரும்பியதற்கு முக்கிய காரணம் அவர்களின் இடைவிடாத போராட்டமே. 2015 இல் தான் சுமந்திரனுக்கும் சம்பந்தனுக்கும் மூதூர் சம்பூர் மக்களை தெரிய வந்து அவர்களின் விஜயத்தை மேற்கொண்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

மேலே நீங்கள் சொல்வது நான் திருமலை போனபோது கேட்டது, தொடர்ந்தும் உறவுகள் நண்பரோடு பேசும் போது கேள்விப்படுவதற்கு 100% நேர்மாறாய் உள்ளது. சம்பந்தர் இல்லை அவர் ஆதரவில் அவர் வீடு நாயை நிப்பாட்டினாலும் வெற்றி உறுதி என்றே நான் கேள்விப்பட்டேன்.

திருமலையில் எல்லா தமிழ்வாக்கும் திரண்டால் 2 சீட்டை பெறலாம். த தே மு கேட்பதால் கிடைக்க கூடியது - இந்த ரெண்டில் ஒரு சீட்டை முஸ்லீம்களுக்கு தாரை வார்பதே.

  • தொடங்கியவர்

சுமந்திரனுக்கு திருமலையில் தேர்தலில் நிற்க இடம் கிடையாது. சம்பந்தனும் இந்த முறை தேர்தலில் நிக்கிற ஐடியாவோட இல்லை. எலிகளும் எலிவாலுகளும் சரியான போட்டியோட யாருக்கு சீற்று கொடுக்கிறதெண்டு நிக்கினம்.

சம்பூர் மக்கள் ஊர் திரும்பியதற்கு முக்கிய காரணம் அவர்களின் இடைவிடாத போராட்டமே. 2015 இல் தான் சுமந்திரனுக்கும் சம்பந்தனுக்கும் மூதூர் சம்பூர் மக்களை தெரிய வந்து அவர்களின் விஜயத்தை மேற்கொண்டார்கள் .

உங்களின் கருத்திலிருந்து என்ன தெரியுதென்றால் , எதோ எழுதவேண்டும் எழுதியாயிற்று .யார்யாருக்கு போட்டி என்றதை விவரமாக எழுதுங்கள் பார்ப்போம் .

இம்முறையும் சம்பந்தன் ஐயா தான் தேர்தலில் நிற்பார் .அப்படி அவர் நிற்காவிட்டால் ,யாரை நிற்பாட்டுவது என்று நாங்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டோம் .இன்றைக்கு தளத்திலும் புலத்திலும் ஒத்தகருத்தொடு செயற்பாடுகளோடு இயங்குகின்ற மாவட்டம் திருகோணமலை ஒன்றுதான் .தமிழரசுக் கட்சியை தவிர வேறு எவருக்கும் மக்கள் ஆதரவு கிடையாது .

 

மிச்சமிருக்கும் 3 எம்பி பதவியையும் முஸ்லீமுக்கு தாரை வார்க்க சுப்பர் ஐடியா .........

விசைப்பலகை போனதிசைக்கு கருத்தெழுதாமல் முதலில் தமிழர்கள் எவ்வளவு தொகை ,ஏன் திருகோணமலையை இழந்தம் என்ற யதார்த்தங்களை தெரிந்துகொள்ள முயற்சியுங்கள் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் நான் , நீங்கள் திருமலை போனபோது கேள்விப்பட்டதையே எழுதியதாக கூறுகிறீர்கள் அதை கரியும் லைக் செய்துள்ளார்.

ஆனால் கரி நான் எழுதியது பிழை என்டு எழுதுகிறார். ஏனப்பா இரட்டை வேடம் ?

தமிழ் வாக்கு திருமலையில் தமிழருக்கே ஏனெனில் தமது வாக்கால் சிங்களவரோ அல்லது முசுலிமோ வரக்கூடாது என்றதற்காக. இதை எலிகளும் எலிவாலுகளும் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

நான் எழுதியதை தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள்.

நீங்கள் சொல்வது, நான் கேள்விப்பட்டதுக்கு 100 வீதம் மாறாய் உள்ளது என்றே நான் எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் சம்பந்தனின் தேர்தல் அரசியல் விவகாரம் என்பதை நிரூபிக்கும் விதமாக கருத்துப் பகிர்வுகள் நடைபெறுவது சம்பந்தன் சம்பூர் மக்களின் துயரத்தின் மீது அரசியல் குதிரைச் சவாரி செய்வதையே இனங்காட்டி நிற்கிறது. அதனடிப்படையில் தான் சம்பூர் செய்திகளை இங்கு சிலர் பிரதானப்படுத்தி ஒட்டுகிறார்களே தவிர.. மக்களின் மீதான அக்கறையில் அல்ல... என்பது வெளிப்படையாகிறது.

 

சம்பந்தனாவது மக்கள் போராடிப் பெற்றதை ஒப்புக் கொள்கிறார்.. அவருக்கு வால் பிடிப்பவர்களோ.. எல்லாம் சம்பந்தன் மயம் என்று அவரின் அரசியலுக்கு முதலீடுகளை தேடுகிறார்கள்.. இங்கு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல்வாதி எப்போதும் தன் சகல வெற்றிகளையும் மக்களுக்குத்தான் சமர்பிப்பார். இது அரசியலில் பால பாடம்.

ஆனால் ஒன்று, ஒரு அரசியல்வாதி தன் சிஷ்யனே ஆனாலும் இன்னொரு அரசியல்வாதியை கைகாட்டி இந்த நற்செயலில் இன்னாரின் பங்கு இவ்வளவு எனச்சொல்லுவது அபூர்வம். ஆனால் சம்பூர் மீட்பில் சுமந்திரனிம் பங்கை தெளிவாக எடுத்துச் சொல்லும் சம்பந்தரின் நல்ல இயல்பு பாராட்டுக்குரியது.

அடுத்தது ஜனாதிபதி சிறிசேன. எப்படி மகிந்தவும் பசிலும் கூட்டமைப்பை டீலில் விட்டபடியே சம்பூரை தனியார்க்கு வித்தார்கள் என்று தெளிவாக சொல்கிறார் சம்பந்தன்.

அந்த வகையில் இதுவரை கண்ட சிங்கள ஆட்சியாளருக்கு மாற்றாக, தமிழருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் சிறிசேனா நிச்சயம் பாரட்டுக்குரியவரே.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் திருமலையில் மண்கவ்வியதை மறந்துவிட்டீர்கள். திருமலையில் எலிகளுக்கும் எலிவாலுகளுக்கும் மட்டும் தான் ஆதரவு என்றால் ஏன் மற்ற கட்சிகள் போட்டியிட கூடாது என ஒற்றைக்காலில் நிக்கிறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை பபா-குதிரை-பிபி கூட்டணி திருமலையின் 3 ஆசனங்களையும் வெல்லுதாம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில் எத்தனை ஆசனம் என்றுகூட தெரியாத விரல் சூப்பிகள்

  • தொடங்கியவர்

http://sumanthiran%20%20sampur_zpsj7pfksay.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sumanthiran%20%20sampur_zpsj7pfksay.jpg

 

சுமந்திரனின், வலது கை.... அவரை அருகில் வர விடாமல் தடுக்கின்றது.
மற்றக் கை அணைக்கின்றது... ஏன், இந்த இரட்டை வேட நடிப்பு. :rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி அரசால் இரத்துச் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு அரச வர்ததமானி அறிவித்தலுக்கு எதிராக  முதலீட்டு வர்த்தக ஊக்குவிப்பினர் வழக்குதாக்கல் செய்ய முடியும் என்றால், காலம் காலமாக சம்பூரை வாழ்விடமாக கொண்ட மக்களை பலவந்த வல்வளைப்பினால் வெளியேற்றி அவ்விடத்தினை  மகிந்த அரசால் ஒரு அரச வர்ததமானி அறிவித்தல் மூலம் பல் முதலீட்டு வர்த்தக ஊக்குவிப்பினர்களுக்கு வழங்கும் போது தற்போது மக்களின் பிரநிதிகள் எனப்படுவோரால் ஏன் எவ்வித வழக்குதாக்கல்களையும் செய்ய முடியவில்லை????????????????

 

 

உங்கள் அனைவரினதும்  அரசியல் சித்துவேலைகள்  சம்பூர், கடற்கரைசேனை, கட்டப்பறிச்சான் வாழ் மக்களிடம் எடுபடாது நான் அந்த மக்களுடன் சுமார் ஜந்து வருடங்களுக்கு மேலாக மனிதாபிமான பணிகள் ஒன்றாக ஈடுபட்டவன். அது விடுதலைப்புலிகளின் காலத்திலும்! ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டால் நல்லது சம்பந்தன் ஜயாவை பிரதிநிதுத்தவப்படுத்தும் அனைவரும் நீங்கள் செய்யும் அரசியல் குப்பைகளையும் மக்கள் பொறுத்து உங்களையும் அனுமதிக்கின்றார்கள் என்றால் தேசிய தலைவர் அவர்களால் துார நோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்ட ஒரு மக்கள் சார்ந்த அரசியல் கூட்டடைப்பு என்பதால்தான் மக்கள் பொறுத்துள்ளனர். இது பழுத்த அரசியல்வாதியான சம்பந்தன் ஜயாவுக்கும் நன்றாக தெரியும்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.