Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்.ரீ.ரீ.ஈ தலைவரை சரணடையும்படி கூறவில்லை: கனிமொழி

Featured Replies

அடிப்படையையே மறந்து எழுதுகின்றீர்கள் .ஆயுதம் தூக்கி போராட போனவர்கள் எல்லாம் சிங்கள அரசிற்கு எதிராகத்தான் ஆயுதம் தூக்கப்போனார்கள் .

இன்று வரை எமது எதிரி சிங்கள பேரினவாதமே. அதை வெல்ல என்ன செய்யலாம் என்றுதான் இன்று வரை அனைத்து தமிழர்களும் போராடுகின்றார்கள் .இதில் மிதவாதம் தீவிரவாதம் என்று அவரவர் சிந்தனைக்கு சரி என்று படுவதைத்தான் அவரவர் செய்கின்றார்கள் .எதிரிக்கான இந்த போரட்டத்தில் கருத்து வேறுபாடுகள்  இருக்கலாம் ஆனால் எதிரி சிங்கள அரசுதான் .

பல இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுத போராட்டம் புலிகளின் போராட்டமாக மட்டும் வியாப்பித்தது உண்மை அதானால் அவர்கள் அரசியல் ,ஆயுத செயற்பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல .புலிகள் போகும் பாதை பயகரவாதமாக மாறி முழு தமிழினத்தையும் படுகுழியில் தள்ளபோகின்றது என்று நினைத்து புலிகளை விமர்சித்தால் அதற்கு பெயர் அரச ஆதரவு என்று ஆகாது .

ஜோர்ஷ் புஷ் தொடக்கம் புலிகள் வரை தம்முடன் உடன்படாதவர்களை எதிரிகளாக பார்த்துதான் அவர்கள் அரசியல் .அந்த அரசியலை தான் சரி என்று நிறுவ எதிரியை விட தம்மை விமர்சித்தவர்களை அதி கூடிய எதிரியாக பார்த்தார்கள் .

முள்ளிவாய்கால் வரை மக்களை கூட்டிக்கொண்டு செல்ல பல ஆண்டுகள் முதலே புலிகளின் கொலை  அரசியல் எமது போராட்டத்தை இப்படிதான் கொண்டு போய் முடிக்கப்போகின்றது என்று பலர் பல தடவைகள் திருப்ப திருப்ப சொன்னார்கள் எழுதினார்கள் .

அவர்களை துரோகிகளாக்கி தமது பாதையிலேயே கொலை அரசியலை தொடர்ந்து துரோகியானவர்கள் சொன்ன பாதையிலேயே போராட்டம் முடிந்தது .

மக்களை கேடயம் ஆக்கி போராடியது புலிகள் மட்டுமல்ல பல போராட்டங்களில் இன்று வரை நடப்பதுதான் அதற்காக அது சரியென்று ஆகாது .

மகிந்த அரசு இவ்வளவு அப்பாவி தமிழர்களையும்பலியெடுக்க காரணாமாக அமைந்தது புலிகள் கடைசி நேரம் வரை செய்த அடாவடிகள் தான் .போரை முடிக்கக்கதான் சர்வதேசம் உதவியது ஆனால் இவ்வளவு அப்பாவிகளின் உயிரையும் பலியெடுக்க உதவியது புலிகள் தான் .

எதிரி சிங்களவன் தான் ஆனால் நாம் செய்யும் பிழையான அரசியல் அவனுக்கு சாதகமாக அமைந்தால் ஆக கூடிய பிழை அதை செய்தவர்கள் மீது தான் .இது இன்று கூட்டமிப்பிற்கும் பொருந்தும் .

அர்ஜுன் அவர்களே ... உங்களிடம் இருந்து விளக்கம் ...
 
இவ்வளவு மக்களையும் மகிந்த கொள்வதற்கு புலிகள் தான் வழி அமைத்து கொடுத்தார்கள ? அப்ப 1956 ஆம் ஆண்டு தனி சிங்கள சட்டம் , மற்றும் 83 ஆம் ஆண்டு இனப்படுகொலை இதற்கு என்ன காரணம் ? சொல்ல முடியுமா .... 
 
சிங்களத்தின் உள்நோக்கம் என்பது உங்களை தவிர அனனவருக்கும் தெரியும் ... அவர்களின் இனப்படுகொலை மற்றும் இட ஆக்கிரமிப்பு இவற்றை எல்லாம் தடுத்தவர்கள் அல்லது வெளிகொனர்த்தவ்ர்கள் புலிகள் தான் .
அவர்கள் இல்லாவிடில் இந்த உலகம் எமது நியாயங்களை கொஞ்சமாவது செவி மடுத்து இருக்காது.
 
ஒரு அமைப்பின் மீது கோபம் இருக்கலாம் ஆனால் பொதுவான உண்மைகள் யதார்த்தங்களை ஈனப்பிறவிகள் மாதிரி மறைத்து எழுதகூடாது ...போராட்டம் நசுக்கப்படது திட்டமிட்ட உலக அழிப்பு . சமாதானத்தை குழப்ப இந்திய மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் எவ்வளவு பாடுபட்டன ...இதனை எந்தவொரு சாதாரண ஆட்களாலும் உணரமுடியும் ...
 
புலிகளை அழிப்பது தான் எல்லாருடைய நோக்கமாக இருந்தது .. மற்றும்படி இது புலிகள் விட்ட தவறு இல்லை ...  புலிகள் என்ற இராணுவ பலம் இல்லாத தமிழர்களின் நிலை ....இதனை இனி எழுதி விளங்க வைக்க தேவையில்லை ....
 
உலக நாடுகளின் கூட்டு அழிப்பில் மாட்டிகொண்டது புலிகளும் மக்களும் தான் ... இங்கே மக்கள் அழிய புலிகள் காரணமில்லை ....புலி எதிர்ப்பு கொள்கையை விட்டுட்டு இனியாவது அறிவு பூர்வமாக கருத்து எழுதவும் ...
  • Replies 65
  • Views 5.7k
  • Created
  • Last Reply
ஆணையிறவு வரை வெற்றி அரியாலை கொழும்புத்துறை மற்றும் யாழ்ப்பாணம் வரையான புலிகளின் போராட்டம் வெற்றியாகும் போது எங்க இருந்தீர்கள் அப்ப போராட்டம் தோற்கும் என்று எவனும் சொலவில்லை எழுதவும் இல்லை ... இந்தியா புலிகளின் போரினை நிறுத்த சொன்னதெல்லாம் மறந்து போனீர்களா ? என்ன போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் தான் எல்லாரும் உங்கள் பாட்டுக்கு விமர்சிக்கின்றீர்கள் ....இது என்ன நியாயம் ....
 
புலிகளின் வெற்றி வரை யாரும் விமர்சனம் எழுதவில்லை .....புலிகளின் வீரம் இறுதி வரை இருந்தது ஆனால் காட்டிக்கொடுப்புகள் மற்றும் உலக நாடுகளின் உதவி இல்லை எனில் வெற்றி புலிகளுக்கு தான் ...
 
ஆனந்தபுர சமர் வெற்றி பெற்று இருந்திருந்தால் இன்று வேறு ஒரு நிலைமையை பார்த்திருக்க முடியும் ..கேவலம் எங்கள் தமிழனை நம்பி எப்படி அது சாத்தியமாகும் ....
 
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி ஆஸியில் இருக்கும் முன்னாள் தோழரை சந்தித்துவிட்டு  இப்போதான் வீடுவந்தேன் .எவ்வளவு தெளிவாக எமது அரசியல் கதைத்தார் .நன்றி T3S.  (TAMIL EELAM SCHOOL FOR SOCIAL SCIENCE) 

யாரப்பா அவர்? அறியதந்தால் நானும் அரசியல் படிக்க போவனல்ல.....

Edited by putthan

அப்படி என்ன தெளிவாக கதைத்திருப்பார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை ......

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்கரன் அல்லது சிறி என்கிற மாஸ்டராகத்தான் இருக்கும்.

பாஸ்கரன் அல்லது சிறி என்கிற மாஸ்டராகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

T3S பெயரில மட்டும் தமிழீழம்

  • கருத்துக்கள உறவுகள்

TS3 ,GUES. போன்ற பல்கலைகழகங்களில் இருந்து டாக்டர் பட்டம் பெற்ற இளைஞர்கள் தற்பொழுது கணனியில் அரசு நடத்துகிறார்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையையே மறந்து எழுதுகின்றீர்கள் .ஆயுதம் தூக்கி போராட போனவர்கள் எல்லாம் சிங்கள அரசிற்கு எதிராகத்தான் ஆயுதம் தூக்கப்போனார்கள் .

இன்று வரை எமது எதிரி சிங்கள பேரினவாதமே. அதை வெல்ல என்ன செய்யலாம் என்றுதான் இன்று வரை அனைத்து தமிழர்களும் போராடுகின்றார்கள் .இதில் மிதவாதம் தீவிரவாதம் என்று அவரவர் சிந்தனைக்கு சரி என்று படுவதைத்தான் அவரவர் செய்கின்றார்கள் .எதிரிக்கான இந்த போரட்டத்தில் கருத்து வேறுபாடுகள்  இருக்கலாம் ஆனால் எதிரி சிங்கள அரசுதான் .

பல இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுத போராட்டம் புலிகளின் போராட்டமாக மட்டும் வியாப்பித்தது உண்மை அதானால் அவர்கள் அரசியல் ,ஆயுத செயற்பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல .புலிகள் போகும் பாதை பயகரவாதமாக மாறி முழு தமிழினத்தையும் படுகுழியில் தள்ளபோகின்றது என்று நினைத்து புலிகளை விமர்சித்தால் அதற்கு பெயர் அரச ஆதரவு என்று ஆகாது .

ஜோர்ஷ் புஷ் தொடக்கம் புலிகள் வரை தம்முடன் உடன்படாதவர்களை எதிரிகளாக பார்த்துதான் அவர்கள் அரசியல் .அந்த அரசியலை தான் சரி என்று நிறுவ எதிரியை விட தம்மை விமர்சித்தவர்களை அதி கூடிய எதிரியாக பார்த்தார்கள் .

முள்ளிவாய்கால் வரை மக்களை கூட்டிக்கொண்டு செல்ல பல ஆண்டுகள் முதலே புலிகளின் கொலை  அரசியல் எமது போராட்டத்தை இப்படிதான் கொண்டு போய் முடிக்கப்போகின்றது என்று பலர் பல தடவைகள் திருப்ப திருப்ப சொன்னார்கள் எழுதினார்கள் .

அவர்களை துரோகிகளாக்கி தமது பாதையிலேயே கொலை அரசியலை தொடர்ந்து துரோகியானவர்கள் சொன்ன பாதையிலேயே போராட்டம் முடிந்தது .

மக்களை கேடயம் ஆக்கி போராடியது புலிகள் மட்டுமல்ல பல போராட்டங்களில் இன்று வரை நடப்பதுதான் அதற்காக அது சரியென்று ஆகாது .

மகிந்த அரசு இவ்வளவு அப்பாவி தமிழர்களையும்பலியெடுக்க காரணாமாக அமைந்தது புலிகள் கடைசி நேரம் வரை செய்த அடாவடிகள் தான் .போரை முடிக்கக்கதான் சர்வதேசம் உதவியது ஆனால் இவ்வளவு அப்பாவிகளின் உயிரையும் பலியெடுக்க உதவியது புலிகள் தான் .

எதிரி சிங்களவன் தான் ஆனால் நாம் செய்யும் பிழையான அரசியல் அவனுக்கு சாதகமாக அமைந்தால் ஆக கூடிய பிழை அதை செய்தவர்கள் மீது தான் .இது இன்று கூட்டமிப்பிற்கும் பொருந்தும் .

முதன்முறையாக வசைகள் இல்லாமல் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். அதற்கு முதலில் நன்றிகள்.

புலிகளைக் காரணம் காட்டி சிங்களம் தன்னால் முடிந்தளவிற்கு தமிழர்களைக் கொன்றதென்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

நான் மக்களைப் பகடைகளாக பாவித்துப் போரிட்டதைச் சரியென்று நிறுவ வரவில்லை. ஆனால் அவர்களுக்கு அதைவிட வேறு எந்தத் தெரிவாவது இருந்திருக்கும் என்றும் நான் நினைக்கவில்லை. 

மக்கள் உள்ளே அகப்பட்டிருப்பதால் முற்றுமுழுதான ஒரு இறுதி ராணுவ தக்குதலை உலகநாடுகள் நடக்க விடமாட்டா என்று புலிகள் நினைத்திருக்கலாம். அதனாலேயே புலிகள் மக்கள் தம்முடன் வருவதை எதிர்பார்த்திருக்கலாம்.

ஆனால் நடக்கப்போகும் தாக்குதலென்பது எந்த வித மனித நேயத்துக்கும் உற்படாத, மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு மிருகத்தனமான இனவழிப்பென்பதையும் அதை  சர்வதேச ஆசீர்வாதத்துடன் சிங்களம் நடத்தி முடிக்குமென்பதையும் கணிக்கத் தவறியதுதான் அவர்கள் செய்த தவறு. 

இதை விடவும் வேறு எதுவும் இதுபற்றி எழுதத் தெரியவில்லை.

இதை பாலா அன்னையும் சில வெளிநாட்டு ராஜ தந்திரிகளும் சொல்லி இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை பாலா அன்னையும் சில வெளிநாட்டு ராஜ தந்திரிகளும் சொல்லி இருந்தார்கள்.

சும்மா எழுதலாம் என்பதற்காக எதையும் எழுதலாம்

அப்படிச்சொன்னவர்களிடம் புலிகள் கேட்டது 

தமிழருக்கு என்ன தீர்வு

எதையாவது வையுங்கள்

அல்லது உறுதியளியுங்கள் என்பது தான்...

ஆனால் பதில்

சரணடையுங்கள்

தலைவரைத்தாருங்கள்

தளபதிகளைத்தாருங்கள்

ஆயுதங்களைத்தாருங்கள்.... என  இருந்ததே தவிர............. :(

இத்தனை தியாகங்களும்

இழப்புக்களுக்கும் ஏதாவது பெற்றாகணும் என்பதால் தான் சர்வதேச மனச்சாட்சியைத்தட்ட சில முடிவுகள் எடுக்கப்பட்டன

தோற்றது

விழ்ந்தது

அழிக்கப்பட்டது  புலிகள் அல்ல

சர்வதேச மாயைகளும் திருகுதாள வேசங்களும் தான்.. :(  :(  :(

அன்று எல்லாவற்றையும் ஒப்படைத்து சரணடைந்திருந்தால்

இன்று புலிகள் இவ்வளவு தியாகங்களையும் அசிங்கப்படுத்திவிட்டார்கள் என எழுதிக்கொண்டிருப்பீர்கள்.. :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது எனக்கு முள்ளிவாய்க்கால் நினைவுதான் வந்ததுhttps://www.youtube.com/watch?t=2136&v=0J_wyXGa9dc

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது எனக்கு முள்ளிவாய்க்கால் நினைவுதான் வந்ததுhttps://www.youtube.com/watch?t=2136&v=0J_wyXGa9dc

பார்த்தேன் அண்ணா. நெஞ்சை மிகவும் வருத்தும் ஒரு படம். ஆனாலும் இறுதியில் வென்றார்கள் ரஷ்ஷியர்கள். எமக்கு அந்தக் கொடுப்பினை இல்லையே 

சும்மா எழுதலாம் என்பதற்காக எதையும் எழுதலாம்

அப்படிச்சொன்னவர்களிடம் புலிகள் கேட்டது 

தமிழருக்கு என்ன தீர்வு

எதையாவது வையுங்கள்

அல்லது உறுதியளியுங்கள் என்பது தான்...

ஆனால் பதில்

சரணடையுங்கள்

தலைவரைத்தாருங்கள்

தளபதிகளைத்தாருங்கள்

ஆயுதங்களைத்தாருங்கள்.... என  இருந்ததே தவிர............. :(

இத்தனை தியாகங்களும்

இழப்புக்களுக்கும் ஏதாவது பெற்றாகணும் என்பதால் தான் சர்வதேச மனச்சாட்சியைத்தட்ட சில முடிவுகள் எடுக்கப்பட்டன

தோற்றது

விழ்ந்தது

அழிக்கப்பட்டது  புலிகள் அல்ல

சர்வதேச மாயைகளும் திருகுதாள வேசங்களும் தான்.. :(  :(  :(

அன்று எல்லாவற்றையும் ஒப்படைத்து சரணடைந்திருந்தால்

இன்று புலிகள் இவ்வளவு தியாகங்களையும் அசிங்கப்படுத்திவிட்டார்கள் என எழுதிக்கொண்டிருப்பீர்கள்.. :(

சும்மா நீங்களும் நினைச்சமாதிரி கேட்கலாம் அனாலும் எங்கே யாரிடம் எப்பொழுது கேட்கிறிங்க என்பதை பொறுத்துதான் பதில்வரும்.

பாலா அண்ணை இதை எதிர்வு கூறியிருந்தார், நோர்வேயில் நடந்த சமாதான பேச்சின்போது பெடரல் தீவுக்கு சரிஎண்டும் சொன்னார். இமயத்தின் உச்சத்தில் இருக்கும் எங்களை மிக மோசமான அழிவுக்கு உட்படுத்தாமல் பாதுகாக்கவேண்டும் என்று சொல்லி இருந்தார்.

எவ்வளவுதூரம் நிலைமையை புரிந்து சொல்லி இருந்தார். 

அனாலும் அதை பின்னர் கிளிநொச்சியில் வைத்து மறுதளிச்சாச்சு. விளைவு முள்ளிவாய்க்கால்.

இப்பவந்து தீர்வு என்னவென்று கேட்டம் யாரும் பதில் தரவில்லை என்று எங்களிடம் கேட்டால் என்ன பதில் தரமுடியும்? 

அத்தனை சுற்று பேச்சுவார்த்தைகளும் நரியோடும் பேயோடுமா நடந்தது? 

சர்வதேசம் ஈழத்துக்கு ஒன்றும் கடமை பட்டது இல்லை, அவர்களின் நலனுக்கு ஏற்ற ஒரு சூழலை எதிர்பார்த்தார்கள் அதை புலிகளின் அனுசரணையுடன் முயற்சித்து பார்த்தார்கள் அனால் சரிவரவில்லை. அப்பொழுது சிங்களத்தின் நலனும் சர்வதேசத்தின் நலனும் ஒருங்கே இருந்த காரணத்தால் எந்த விலையும் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.

தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற ஒரு நிலைக்கு புலிகள் வந்தபின்னர், புலிகளுக்கு அடுத்த நிலையில் தமிழருக்கு தலைமை யாரும் இல்லை என்று வந்த பின்னர் புலிகளுக்கும் தமிழர்களின் நலனை இராணுவ வெற்றிக்கு அப்பால் பார்த்திருக்க வேண்டாமா? 

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்க சூறா,

ரகு, விசுகு எல்லோருக்கும் தெரியும் எம் மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் கொடுமையில்80 வீதம் ஆமியும் 20 வீதம் புலியும் செய்தது என்பது.

நான் புலி வலுகட்டாயமாய் பிடித்து போனோருடன் பேசியுள்ளேன். சரணடைய முயற்சித்த போது சுட்டு தப்பியவரை கண்டு பேசியுள்ளேன். அந்த கொலைக்களத்திலும் காசு வாங்கி பால்மா வித்த புலிகளிடம் பால்மா வாங்கியவரையும் கண்டு பேசியுள்ளேன்.

இவர்கள் சொல்லும் கோடன் வைஸ், ஹரிசன் எல்லோரும் புலி இதை செய்ததை ஒப்புக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு அது எதுவும் தெரியாது. செலக்டிவ் அம்னீசியா.

காலம் பூராவும் தம்மை தாமே ஏய்தபடி இருக்க வேண்டியதுதான்.

மக்களை பிடித்து வைத்திருந்து தீர்வு கேட்டார்களாம் . எங்கு போய் முட்டுவது .

ரகு  வேறு எதுவும் தெரிவு இருந்ததாகவும் தெரியவில்லையாம் .முள்ளிவாய்கால் முடிவிற்கு முதல் மாதமும் குஞ்சு குருமன்களை பிடித்துக்கொண்டு வந்து அரை குறை பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டார்கள் .அதுவும் தாங்கள் தப்ப -இதைவிடவும் வேறு தெரிவு இல்லைதான் .

விடுங்க சூறா,

ரகு, விசுகு எல்லோருக்கும் தெரியும் எம் மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் கொடுமையில்80 வீதம் ஆமியும் 20 வீதம் புலியும் செய்தது என்பது.

நான் புலி வலுகட்டாயமாய் பிடித்து போனோருடன் பேசியுள்ளேன். சரணடைய முயற்சித்த போது சுட்டு தப்பியவரை கண்டு பேசியுள்ளேன். அந்த கொலைக்களத்திலும் காசு வாங்கி பால்மா வித்த புலிகளிடம் பால்மா வாங்கியவரையும் கண்டு பேசியுள்ளேன்.

இவர்கள் சொல்லும் கோடன் வைஸ், ஹரிசன் எல்லோரும் புலி இதை செய்ததை ஒப்புக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு அது எதுவும் தெரியாது. செலக்டிவ் அம்னீசியா.

காலம் பூராவும் தம்மை தாமே ஏய்தபடி இருக்க வேண்டியதுதான்.

புலிகளை அளிக்க உதவியதில் பாதிபங்கு புலிகளுக்கு ஐடியா குடுத்தவர்களும் தான்.

எல்லா பிழையையும் ஒருவர் மீது போட்டுவிட்டு குற்றவாளிகளை தப்ப வைப்பது விபரீதம்.

அமேரிக்கா சொன்ன அந்த நீதியான பக்க சார்பற்ற விசாரணை மற்றும் பொறுப்பு கூறல் தனிய சிங்களத்தை மாத்திரம் பாதிக்காது. அதுபோக இப்ப உள்நாடு விசாரணையாம் அது எங்கே போய் முடியுமோ? 

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.