Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்திக்கு யாழில் சீற்? சிவாஜிலிங்கத்திற்கு வழங்கக்கூடாது என உத்தரவு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சிதைக்கவும் முயற்சி!!

Featured Replies

நாடாளுமன்ற தேர்தல் கனவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரபலங்கள் அலையத்தொடங்கியுள்ள நிலையில் குழிபறிப்புக்களும் ஆரம்பமாகியுள்ளது. சம்பந்தன்-சுமந்திரன் தரப்பினது இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தையினை அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்து வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்க கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அவர் சார்ந்த கட்சி தலைமைக்கு சிவாஜிலிங்கத்திற்கு யாழ்.மாவட்டத்தில் போட்டியிட இடம் வழங்கப்படக்கூடாதென்ற அடிப்படையிலேயே ஒரு இடம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. அந்த இடத்தினில் சிறீகாந்தா தேர்தல் களம் குதிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே வடமாகாணசபையின் மற்றொரு உறுப்பினரான அனந்திக்கு இடம்கொடுக்க கட்சி தலைவர் சம்பந்தன் சம்மதித்திருப்பதாக தெரியவருகின்றது. அண்மையில் சம்பந்தனைச் சந்தித்த சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் எப்பிடியேனும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனந்தி விருப்பம் கொண்டுள்ளதாகவும் கூட்டமைப்பு இடம் வழங்க மறுத்தால் அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசம் செல்லலாமென எச்சரித்துள்ளனர்.

அத்துடன் தற்போதைய சூழலில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ளும் வகையினில்  மக்கள் ஆதரவை திரட்டி வைத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அனந்தியையும் இணைத்துக்கொண்டால் அது இரண்டாகிவிடுமென எச்சரித்துள்ளனர்.

எவ்வாறேனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஓரங்கட்ட முற்பட்டுள்ள சம்பந்தன் இதனை கருத்தில் கொண்டு அனந்திக்கு இடம் வழங்க சம்மதித்துள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வகையினில் யாழில் கூட்டமைப்பு சார்பில் அனந்தி, மாவை, சுரேஸ், சித்தார்த்தன், சரவணபவன், விநாயகமூர்த்தி, சிறீதரன், அருந்தவபாலன், சுமந்திரன் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

http://www.pathivu.com/news/40753/57//d,article_full.aspx

  • Replies 50
  • Views 2.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு, என்ன இழவுக்கு... இடம் ஒதுக்க வேண்டும்.
அதை... சிவாஜிலிங்கத்துக்கு கொடுக்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை... அனுராதபுரம், மதவாச்சி தொகுதிகளில்... போட்டியிட வைத்தால்,

சிங்களவர்களே.... அவரை பாராளுமன்றத்துக்கு, அனுப்பி... வைப்பார்கள்.
பின்வாசல் சுமந்திரன் என்ற அவப் பெயரும்.. அத்துடன் நீங்கும். :icon_idea:

Edited by தமிழ் சிறி

தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு ஆய்வு! - ஆசனப் பங்கீடு குறித்து முடிவு இல்லை 
 
நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு நேற்று கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்தல் மற்றும் கூட்டமைப்பின் நான்கு பங்காளிக் கட்சிகளுக்கான ஆசனப் பங்கீடு தொடர்பில் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது. எனினும், ஆசனப் பங்கீடு தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
 
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டிய தமது கருத்துக்களை ஒவ்வொரு பங்காளிக் கட்சித் தலைவர்களும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் முன்வைப்பது என்றும், அதனை அடிப்படையாக வைத்து இரா.சம்பந்தன் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பார் என்றும், தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை பங்காளிக் கட்சிகள் இணைந்து இறுதி செய்வது என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
மேற்படிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர்களான ஹென்றி மகேந்திரன், என்.சிறீகாந்தாஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 http://www.malarum.com/article/tam/2015/06/10/10478/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-.html#sthash.jHk8pUPG.dpuf
 
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் அனந்திக்கு அஸ்பெஸ்டஸ் சீட் ஒன்றை கொடுத்து- கஜன் கொம்பேனி பக்கம் விரட்டி விட வேணும்.

கோமாளி அரசியல்லுக்கு அதுதான் ஏற்ற இடம்.

சம்பந்தர் அனந்திக்கு அஸ்பெஸ்டஸ் சீட் ஒன்றை கொடுத்து- கஜன் கொம்பேனி பக்கம் விரட்டி விட வேணும்.

கோமாளி அரசியல்லுக்கு அதுதான் ஏற்ற இடம்.

அந்த இடத்தை மைத்திரியுடன் இணக்க அரசியல் செய்வதற்கு ஏற்ற வகையில் அங்கஜன் போன்ற படித்த ஒருவருக்கு வழங்கினால் அது சாணக்கிய அரசியலுக்கு முத்தாய்ப்பு வைத்ததாய் அமையும்.

பதிவு செய்திக்கும் மலரும் செய்திக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே.

இதில் எது சரியானது?

சுமந்திரனுக்கு, என்ன இழவுக்கு... இடம் ஒதுக்க வேண்டும்.

அதை... சிவாஜிலிங்கத்துக்கு கொடுக்கலாம்.

ஏன் பயமா இருக்கா
 
சுமந்திரன் யாழ் மாவட்டத்தில் போட்டியிடப்போவதும் உறுதி, பெரும்பாண்மை ஆதரவுடன் வெல்லப் போவதும் உறுதி. இது எனது கருத்து.
 
மக்கள் தமது கருத்தை தேர்தலில் அவர்கள் தெரிவிப்பார்கள். நிச்சயமாக அதை நான் ஏற்றுக்கொள்வேன். உங்களால் முடியுமா?

பயம் ஒண்டும் இல்லை....

தமிழர்கள்... அம்பாறை தொகுதியில், சிங்களவன் பியசேனாவை... வெல்ல வைத்தவர்கள்.

சுமந்திரனுக்கு... சிங்கள மக்கள் மத்தியில், நல்ல அபிப்பிராயம் உள்ளது.

சிங்கள தொகுதிகளில், சுமந்திரன் போட்டியிட்டால்....

ஸ்ரீலங்காவிலேயே அதிக வாக்குகளைப் பெற்று வெல்வது உறுதி.

சம்பந்தனும்... அவரின் தேர்தல் பிரச்சாரத்துக்கு சிங்கக் கொடியை ஆட்டிக் கொண்டு போனால்...

இன்னும்... அதிக வாக்குகள் விழும்.

  • கருத்துக்கள உறவுகள்

பயம் ஒண்டும் இல்லை....

சீற்றுக்கு ஆளையாள் அடிபடும் நிலையில்

அனந்திக்கு மட்டும் உறுதி என்பதன் பொருளைப்புரிந்து கொண்டால் நல்லது.... :icon_idea:

அவ்வளவு கெத்து ஆனந்திக்கு இருந்தால் கூட்டமைப்பை விட்டு விலகி தேர்தலில் நின்று பார்க்கட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு கெத்து ஆனந்திக்கு இருந்தால் கூட்டமைப்பை விட்டு விலகி தேர்தலில் நின்று பார்க்கட்டும் .

கூட்டமைப்பு தமிழரின் சொத்து

அதிலிருந்து விலகி நிற்பதென்றால் அதை சம்பந்தார் ஐயா முதலில் முயன்று காட்டலாமே.... :(

அதைதான் நானும் சொல்கின்றேன் .பிறகு நான் பெரிது நீ பெரிது என்று அடிபடுவதில் அர்த்தம் இல்லை .இதற்குள் சிலர் புலிகளால் உருவாக்கப்பட்டது என்று கதை வேறு .புலிகள் தோன்றமுதலே எம் பியாக இருந்தவர் சம்பந்தர் .

காங்கிரஸ் - தமிழரசு - கூட்டணி-கூட்டமைப்பு . 

இதுதான் தமிழ் மக்களின் அரசியல் பிரதிபலிப்பு .விட்டு பிரிந்தவர்கள் மண் கவ்வியதுதான் சரித்திரம் .

  • கருத்துக்கள உறவுகள்

சீற்றுக்கு ஆளையாள் அடிபடும் நிலையில்

அனந்திக்கு மட்டும் உறுதி என்பதன் பொருளைப்புரிந்து கொண்டால் நல்லது.... :icon_idea:

"நீ.... அரிசி கொண்டு வா. நான் உமி கொண்டு வாறன்.

இரண்டையும் கலந்து.... ஊதி, ஊதி தின்னுவம்"

என்ற கதை தான்... ஞாபகத்துக்கு வருது, விசுகு. :D  :D  

பயம் ஒண்டும் இல்லை....

தமிழர்கள்... அம்பாறை தொகுதியில், சிங்களவன் பியசேனாவை... வெல்ல வைத்தவர்கள்.

சுமந்திரனுக்கு... சிங்கள மக்கள் மத்தியில், நல்ல அபிப்பிராயம் உள்ளது.

சிங்கள தொகுதிகளில், சுமந்திரன் போட்டியிட்டால்....

ஸ்ரீலங்காவிலேயே அதிக வாக்குகளைப் பெற்று வெல்வது உறுதி.

சம்பந்தனும்... அவரின் தேர்தல் பிரச்சாரத்துக்கு சிங்கக் கொடியை ஆட்டிக் கொண்டு போனால்...

இன்னும்... அதிக வாக்குகள் விழும்.

உங்களுக்கு இன்னும் தாயகத்திலுள்ள மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவில்லை என்று நினைக்கின்றேன். சீக்கிரம் வரும், வந்தே ஆகணும்.
 
பியசேனாவை உதவிக்கு கூப்பிட்டதால் இவ்வரி - கருணாவையும்தான் தேதா மதித்தார், மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். அப்புறம் தேதாவிற்கே ஆப்படித்தார்.
 
இது தமிழரின் வரலாற்றில் புதியதில்லை. ஆனால் சுமந்திரன் வேறு என்பது எனது கருத்து.

"நீ.... அரிசி கொண்டு வா. நான் உமி கொண்டு வாறன்.

இரண்டையும் கலந்து.... ஊதி, ஊதி தின்னுவம்"

என்ற கதை தான்... ஞாபகத்துக்கு வருது, விசுகு. :D  :D  

அப்ப ஏன் அரிசி போய் உமிக்குள் ஒழிக்குது.

புலி தமிழ் ஈழம் பிடிக்கும் நம்பின மாதிரித்தான் இதுவும் .கற்பனை வேறு நிஜம் வேறு .

கூட்டமைப்பு தமிழரின் சொத்து

அதிலிருந்து விலகி நிற்பதென்றால் அதை சம்பந்தார் ஐயா முதலில் முயன்று காட்டலாமே.... :(

கூட்டமைப்பிலிருந்து ஏன் சம்பந்தன் விலக வேண்டும். அவர் எத்தனையோ இன்னல்கள், வெருட்டல்கள், உயிர் அச்சங்களிற்கு மத்தியில் பல சகாப்தங்களாக இருப்பவர். 
 
தேதாவிடமிருந்த ஆயுதபலம் கூட்டமைப்பை உருவாக்கியதென்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் தேதா கூட்டணி/தமிழரசுக்கட்சியின் பிரபல்யத்தை ஏற்றுத்தான் அவர்களை முதன்மைப்படுத்தினார்.
 
இப்போதுதான் உயிர்ப்பயம் இல்லை அவர்கள் தமிழீழம் வெறும் கனவு என்று துணிந்து சொல்கிறார்கள், சிங்கக் கொடியை ஆட்டுகிறார்கள், தேர்தலிலும் நிற்கிறார்கள் - வெல்கிறார்கள்.
 
கூட்டமைப்பிலுள்ள ஒட்டுண்ணிகள், ஒட்டுக்குழுக்கள், ஒட்டாத குழுக்கள், ஒட்டியும் ஒட்டாத குழுக்கள் வெளியேறி தம்மை நிரூபிக்கலாமே. 

Edited by ஜீவன் சிவா

கூட்டமைப்பிலிருந்து எவரையும் வெளியேறு என்று சொல்லும் உரிமை

எவருக்கும் இல்லை

அதைத்தான்  நான் குறிப்பிட்டேன்

அப்படி  வெளியேறுவது பற்றி பேசுவதென்றால் அதை தலைவர் ஆரம்பிக்கட்டும் என்பதே எனது வாதம்

மற்றம்படி எவரையும் ஒட்டும் ஒட்டாத குழுக்கள் என்பதற்கும் 

கூட்டமைப்புக்குள் எவருக்கும் அதிகாரமில்லை

அதன் பெயரே கூட்டமைப்பு

அப்ப ஏன் அரிசி போய் உமிக்குள் ஒழிக்குது.

புலி தமிழ் ஈழம் பிடிக்கும் நம்பின மாதிரித்தான் இதுவும் .கற்பனை வேறு நிஜம் வேறு .

அண்ணை

இனி அரசியல் பேசமாட்டேன் என்பதை நாங்கள் நம்பியது தான் கடைசி நம்பிக்கை

அதுவும் போச்சு...

மற்றம்படி எவரையும் ஒட்டும் ஒட்டாத குழுக்கள் என்பதற்கும் 

கூட்டமைப்புக்குள் எவருக்கும் அதிகாரமில்லை

அதன் பெயரே கூட்டமைப்பு

நன்றி
 
இதைத்தான் நானும் சொல்கின்றேன். கூட்டமைப்பு என்பது பல கட்சிகளால் சேர்ந்து அமைக்கப்பட்ட, எமது அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி செயற்பட வேண்டிய ஒரு அரசியல் அமைப்பு. அதில் புலியும்இருக்கலாம் புளொட்டும் இருக்கலாம். இது தாயக மக்களின் தெரிவு, அவர்களது விருப்பம். இங்கு யாரும் (நானும்தான்) யாருக்கும் வக்காளத்து வாங்கத் தேவையில்லை.
 
மக்கள் முடிவெடுக்கட்டும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத்தான் சக களஉறுப்பினரிடம் எதிர்பார்க்கின்றேன்.
 
இன்னொரு முக்கியமான விடயம் :
இனி அரசியல் பேசமாட்டேன் என்பதை நாங்கள் நம்பியது தான் கடைசி நம்பிக்கை
அதுவும் போச்சு...
 
இங்கு சக கள உறுப்பினர் அரசியல் பேசுவது தப்பா? ஏதோ கோபத்தில் அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் என்ன பேசுவதென்பது அவர் உரிமை. அதை மறுத்தால் அல்லது அதை இகழ்ந்தால் நாம் கடந்த 30 வருடங்களில் எதையுமே புரிந்திருக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

Edited by ஜீவன் சிவா

எழுத மறந்த விடயம்.
 
"மற்றம்படி எவரையும் ஒட்டும் ஒட்டாத குழுக்கள் என்பதற்கும் 
கூட்டமைப்புக்குள் எவருக்கும் அதிகாரமில்லை."  -  விசுகு
 
புலிகளுடன் உடன்பாடில்லாதவர்களை ஒட்டுண்ணி, ஒட்டுக்குழு, ஒட்டாதகுழு, துரோகிகள், அடிவருடிகள்... இப்படி எத்தனையோ வார்த்தைகளால் வர்ணிக்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது.
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சக கள உறுப்பினர் அரசியல் பேசுவது தப்பா? ஏதோ கோபத்தில் அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் என்ன பேசுவதென்பது அவர் உரிமை. அதை மறுத்தால் அல்லது அதை இகழ்ந்தால் நாம் கடந்த 30 வருடங்களில் எதையுமே புரிந்திருக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

எட்டு வருடங்களுக்கு முன்னர் பண்டிதர் என்பவர் நாங்கள் யாரென்று கேட்டு ஒரு தலைப்பில் கேட்டிருந்தார். அதற்குக் கொடுத்த பதிலை மீண்டும் வாசித்தேன். நாங்கள் இன்னமும் மாறவில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

நேரம் கிடைத்தால் கீழே உள்ள திரியில் பாருங்கள் :)

http://www.yarl.com/forum3/index.php?/topic/20494-நாங்கள்-யார்/

  • கருத்துக்கள உறவுகள்

அதைதான் நானும் சொல்கின்றேன் .

நன்றி

இதைத்தான் நானும் சொல்கின்றேன்.

அட இதைத்தானா சொல்றீங்க. அவரும் அதைத்தானே சொல்லுறார்.

:)

Edited by goshan_che

எட்டு வருடங்களுக்கு முன்னர் பண்டிதர் என்பவர் நாங்கள் யாரென்று கேட்டு ஒரு தலைப்பில் கேட்டிருந்தார். அதற்குக் கொடுத்த பதிலை மீண்டும் வாசித்தேன். நாங்கள் இன்னமும் மாறவில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

நேரம் கிடைத்தால் கீழே உள்ள திரியில் பாருங்கள் :)

http://www.yarl.com/forum3/index.php?/topic/20494-நாங்கள்-யார்/

உங்களைக் கேட்காமலே உங்கள் பதிவை மறுபதிவு செய்வதற்கு மன்னிக்கவும் - இக்காலகட்டத்திற்குத் தேவையானது.

பண்டிதர், on Mar 12 2007, 04:11 PM, said:snapback.png

  • யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள்.

    இப்படி வெளிப்படையாகக் கேட்டால் எப்படி? உருப்படியாக அலசி முடிவுகள் எடுத்து செயற்படுத்த கூட்டங்களா யாழ் களத்தில் நடக்கின்றது? பல்வேறு அவதாரங்களிற்குள் பற்பலர் இருப்பார்கள்.. ஒவ்வொருவரின் உள்நோக்கம் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.. நம்பிக்கையை கட்டியெழுப்பி ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஒருங்கிணைப்பது என்பது நேரடிச் சந்திப்புக்கள் இன்றி, ஒத்துழைப்புக்கள் இன்றி நடக்கமாட்டா. எனவே இங்கு கருத்தாடுபவர்கள் உருப்படியாகக் கருத்தாடுகின்றார்களா இல்லையா என்பதை ஆராயாமல், எல்லோருக்கும் தமிழீழம் என்ற இலக்கின் தேவையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதற் காரியமாக இருக்கவேண்டும்..

    அறிபூர்வமாக மட்டும் கருத்தாடினால், பலருக்கு அது சலிப்பை உருவாக்கும்.. பெரும் கட்டுரைகளை எழுதினால் ஒன்றிரண்டு பேருக்கு மேல் படிக்கமாட்டார்கள். சிறு சிறு பந்தியாக எழுதினால்தான் வாசிக்க இலகுவாக இருக்கும் என்று சொல்வார்கள்.. எனவே மாற்றங்களை சடுதியாக கொண்டுவரலாம் என்ற நினைப்பைவிட்டு எப்படியும் சரியான திசையில் பயணித்தால் போதும் என்றிருப்பது நல்லது.

  • உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்?

    கூடிக் கதைக்கின்றோம். ஊரில் சந்திகளிலும், தெருமுனைகளிலும் நின்று கதைப்பதில்லையா? அது போலத்தான் இதுவும்.. எல்லோரும் வெட்டிப் பேச்சில் நேரத்தை விரயமாக்குவதில்லை. எனவே யாழ் களமூடாக 5% சதவீதம் தேசியத்தைப் பற்றி ஒருவர் ஒவ்வொரு நாளும் அறிந்தாலே போதுமானது!

  • மற்ற ஊடகங்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறோமே நாங்கள் எப்படி (நாங்கள் யாரும் முழுநேர ஊடகவியலாளர் இல்லை என்றபோதும்)? 

    நீங்கள் கூறியபடி எல்லோரும் ஊடகவியலாளராக இருக்க முடியாது. அபிப்பிராயங்களை பகிர்வதற்கு ஒவ்வொருவருக்கும் வேறுவேறான தெரிவுகள்/முறைகள் உண்டு. ஒரு ஒழுங்கு முறையைக் கொண்டுவந்து இப்படித்தான் அபிப்பிராயம் சொல்லவேண்டும், இந்த இந்த விதிகளைக் கடைப் பிடிக்கவேண்டும் என்று அறிவுரைகள் சொல்லுவது கருத்துக்கள் பதிவதைத்தான் குறைக்கும்.

  • தாயகத்தில் கொலைக்களத்தில் காத்திருக்கும் மக்களைப்பற்றி நாங்கள் உண்மையில் வருந்துகிறோமா? 

    புலம்பெயர் மக்கள் எல்லோரும் மனம் வருந்தி கொலைகளைத் தடுப்பதற்கு முயற்சிகள் செய்ய ஆரம்பித்தால், பல விடயங்கள் எங்களுக்கு சாதகமாக எப்போதோ நடந்து முடிந்திருக்கும். எனவே இங்கு வருபவர்கள் எல்லோரும் ஒத்த கருத்தினர், ஒரே நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள் என்று நினைக்காமல், நாம் எல்லோரும் புலம் பெயர் மக்களின் உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்தும் மாதிரிகள் என்று கொள்ளவேண்டும்.. எனவே சிலர் கொலைகளையும் அவலங்களையும் பற்றி வருத்தப்படுவார்கள், சிலர் செய்தி என்ன என்று அறிய வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள், சிலர் தங்கள் கணிப்பீடுகள் சரியாக நடக்கின்றன என்பதையிட்டுப் பெருமிதம் கொள்வார்கள். இப்படி பலவற்றைக் கூறலாம்..

  • அதைப்பற்றி இங்கு என்ன செய்தோம், செய்கிறோம்?

    செய்பவர்கள் சிறு பகுதியினர். பலரைப் பங்களிக்கச் செய்ய நீண்ட காலம் எடுக்கும்.. அரசியல் தெளிவற்றும், அரசியல் அறிவற்றும், அல்லது அதைப் பற்றி அக்கறையற்றும் இருக்கும் பலரை மாற்றத் தனிநபர்களின் முயற்சிகள் போதாது. பல்ரின் கூட்டு முயற்சி தேவை. ஒரே குடையின் கீழ் ஒவ்வொரு நாடுகளிலும் ஒன்றிணைந்து செயற்படக் கூடியவர்கள் தேவை. சுயநல/குறுகிய நல நோக்கோடு செயற்படமால், பொது நோக்கத்தோடு செயற்பட எல்லோரும் முன்வந்தால் பலவிடயங்களைச் சாதிக்கலாம்.

  • நாங்கள் இதுவரை செய்த செயற்பாடுகளின் பலன் என்ன (அப்படி உண்டானால்)?

    ஒரு பலனுமில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தமிழர்களின் பலம் இல்லை. ஒற்றுமையாகச் செயற்படாமல் சிதறி இருக்குமட்டும் பெரிய மாற்றங்களைப் புலம்பெயர் தமிழரால் கொண்டுவரமுடியாது.

  • எமது எதிர்கால இலக்கு என்ன (உதாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்னத்தை செய்து முடிக்க விரும்புகிறோம்)?

    எதிர்கால இலக்கு: யாழ் களம் என்றால் தொடர்ந்து கருத்தாடுவது (அதாவது ஒன்றும் செய்யாமல் இருப்பது).. புலம் பெயர் தமிழர்கள் என்றால் வெற்றிச் செய்திகள் வரும் என்று காத்திருப்பது. தாயகத் தமிழர் என்றால் எப்போது அவலங்கள் நீங்கி விடிவு கிட்டும் என்று காத்திருப்பது.. ஆக மொத்தத்தில் "காத்திருப்பு" ஒன்று மட்டும்தான் எமது இலக்காக இருக்கும்.

    மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்றால் தெருவில் இறங்க வேண்டும், விசைப்பலகையைத் தட்டி ஒன்றையும் கிழிக்க முடியாது..

மீண்டும் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் வரிகள்

புலம்பெயர் மக்கள் எல்லோரும் மனம் வருந்தி கொலைகளைத் தடுப்பதற்கு முயற்சிகள் செய்ய ஆரம்பித்தால், பல விடயங்கள் எங்களுக்கு சாதகமாக எப்போதோ நடந்து முடிந்திருக்கும். எனவே இங்கு வருபவர்கள் எல்லோரும் ஒத்த கருத்தினர், ஒரே நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள் என்று நினைக்காமல், நாம் எல்லோரும் புலம் பெயர் மக்களின் உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்தும் மாதிரிகள் என்று கொள்ளவேண்டும்.. எனவே சிலர் கொலைகளையும் அவலங்களையும் பற்றி வருத்தப்படுவார்கள், சிலர் செய்தி என்ன என்று அறிய வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள், சிலர் தங்கள் கணிப்பீடுகள் சரியாக நடக்கின்றன என்பதையிட்டுப் பெருமிதம் கொள்வார்கள். இப்படி பலவற்றைக் கூறலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

சரி. தலைப்புக்கு மீளவும் வருவோம்.

பதிவு இணையத்தளமும் அதன் பின்புலத்தில் உள்ளவர்களும் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்தையும் அவர்களின் ஆலோசகரான இருக்கும் சுமந்திரனையும் விரும்பவில்லை. அதனால்தான் தங்களின் தாளத்திற்கு நாட்டியம் ஆடக் கூடியவர்களை முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என்று செயற்படுகின்றது. அது மாதிரி மறுவளத்தில் தினக்கதிர் சம்பந்தர், சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கி கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சியைச் சேராதவர்களையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும், குறிப்பாக கஜேந்திரகுமாரை, அவதூறு செய்கின்றது. இது எல்லாம் வெறும் வாக்குப் பொறுக்கும் இழிநிலைக்கு தமிழரின் விடுதலைப் போராட்டம் வந்து சேர்ந்ததைத்தான் காட்டுகின்றது.

முன்னர் 11 எம்பிமாரைத் தெரிவு செய்யக்கூடியதாக இருந்த யாழ்தேர்தல் மாவட்டத்தில் (கிளிநொச்சித் தொகுதி அடங்கலாக) இப்போது 7 பேர்தான் தெரிவுசெய்யக்கூடிய நிலை. இதில் ஒன்று டக்ளஸுக்கு கட்டாயம் போகும். ஒன்று விஜயகலாவுக்குப் போகலாம்.

எனவே ஐந்து எம்பிமார்தான் கூட்டமைப்பில் இருந்து தெரிவு செய்யக்கூடிய நிலை. அதிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணியினருக்கு கணிசமான வாக்குகள் விழுந்தால் நாலாகக் குறைந்துவிடும் என்பதால் அனந்தியை வைத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்குகளைச் சிதைக்கும் முயற்சியாகத்தான் பார்க்கமுடிகின்றது. அனந்தி எம்பியாக வந்தாலும் சம்பந்தர், சுமந்திரன் சொற்படிதான் நடக்கவேண்டிவரும்.

ஆறு பேர் தெரிவு செய்யப்படக் கூடிய நிலை வந்தால் மாவை, சுரேஸ், சரணவபவான், சிறிதரன் (கிளிநொச்சி), அனந்தி, சுமந்திரன் ஆகியோர் யாழ் தேர்தல் தொகுதியில் வெல்லலாம். சித்தார்த்தன், செல்வம் போன்றோர் வன்னியில் வெல்லகூடும்.

இப்படியான அரசியல் கூட்டல், கழித்தல் கணக்குத்தான் இப்போது நடக்கின்றது.

தமிழ் மக்கள் தங்களது உரிமைகளைப் பற்றி அக்கறையுள்ள தலைவர்களைப் பெற்றுக்கொள்ள காத்திருக்கவேண்டியதுதான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.