Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றமட்டோம்!-நாடாளுமன்றத்தில் ரணில் உறுதி

Featured Replies

வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றமட்டோம்!-நாடாளுமன்றத்தில் ரணில் உறுதி

தற்போதைய அரசாங்கத்தினால் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை என்றும், முன்னைய அரசாங்கத்தினாலேயே 59 இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில்  நேற்று, வலிகாமம் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய அவர்,

“ வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுகின்ற முடிவையும் தற்போதைய அரசாங்கம் எடுக்கவில்லை.

எங்கெங்கு இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும், எங்குள்ள முகாம்களை அகற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை சிறிலங்கா படையினருக்கே தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்த விடயங்களில் அரசாங்கம் தலையிடாத கொள்கையை கடைப்பிடிக்கிறது.

சம்பூரில் உள்ள கடற்படைத் தளத்தை அகற்றும் முடிவை முன்னைய அரசாங்கமே எடுத்தது. தற்போதைய அரசாங்கம் அந்த கடற்படைத் தளத்தை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளது.

அதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/41072/57//d,article_full.aspx

ஆஹா அருமை ... எங்க போட்டார்சிங்கக்கொடி சம்பந்தன் ... பின்வாசல் சுமந்திரன் ... நல்லாட்சி அரசாங்கத்துடன் இதயத்தால் இணைந்து உள்ளார்களாம் .... பச்சோந்திகள் ... எப்படியும் இந்தமுறை தேர்தலில் செருப்படி விழத்தான் போகுது .... ரணிலுடன் சேர்ந்து கள்ள அரசியல் செய்ய இதுவா நேரம் .... 

எத்தனை ஆயிரம் போராளிகளின் மக்களின் உயிர்கள் உங்களுக்கு என்ன விளையாட்டா ? .. இதுதான் ராஜதந்திரமாம் ? மாணிக்கங்கள் வாங்கோ ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் இருந்து, இந்த மாற்றங்கள் பற்றி எழுதும் ஒரு அன்பர் எழுதுவார்: இந்த மாற்றங்கள் எல்லாம் இரா.சம்பந்தர்-இரணில் ( கவனிக்க இரணில்) ஆகிய இரு பெரும் யுக-புருசர்களின் அரசியல் சாணக்கியம் என்பார். இதை கேள்விப்பட்டால் மனிதனுக்கு என்ன நடக்குமா தெரியாது.

 
  • கருத்துக்கள உறவுகள்

இதில மட்டும் சம் சும் சாணக்கியர்கள் மக்களை ஏமாற்றவில்லை. சர்வதேச பொறிமுறை வேண்டாம்.. உள்நாடு போதும் என்றார்கள். இந்தா உள்நாட்டுப் பொறிமுறை யூனில் ஆரம்பம் என்று சிங்களவனும் அவைக்கு வசதியா ஆமாப் போட்டான். இப்ப ஜூன் முடிஞ்சு.. ஜூலை ஆகப் போகுது.

மார்ச் ஐநா கூட்டத்தொடரை ஒட்டி ஏப்ரலில் தேர்தல் சாட்டு. இப்ப.. இந்த தேர்தலைச் சாட்டி.. இப்படியே சாட்டி சாட்டி.. சிங்களவனைக் கொண்டு.. ஒட்டுமொத்த தமிழர்களின் நலனையும் நீதியையும் குழியில் புதைக்கிறதுதான் எங்கட ராசதந்திரம். இதெல்லாம் உங்களுக்கு விளங்காது. :lol::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றமட்டோம்!-நாடாளுமன்றத்தில் ரணில் உறுதி.....

கலோ அணில் இதை நீங்கள் சொல்லி நாங்கள் தெரிஞ்சு கொள்ளவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை கண்டியளோ....

இராணுவம் வெளியேறாது எண்டு எங்களுக்கு எப்பவோ தெரியும்.....தெரியாத மாதிரி நடிக்கிற சுமந்தி சமந்திக்கு போய் படம் காட்டுங்கோ...:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றமட்டோம்!-நாடாளுமன்றத்தில் ரணில் உறுதி.....

 

 

நான் சிங்களத்தின் தலைவன்

அதில் எந்த மாற்றமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் சிங்களவன் பேயன் எண்டு இன்னும் நினைச்சுக்கொண்டிருக்கிறது பெரிய கொடுமையிலும் கொடுமை! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஷயம் கூட்டமைப்புக்குத் தெரியாமல் இருக்கும்.
 தெரிந்தால்  இதோடை ரணில்- கூட்டமைப்புக்  கூட்டணி உடைந்துவிடும்:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனபேர் சிங்களவன் பேயன் எண்டு இன்னும் நினைச்சுக்கொண்டிருக்கிறது பெரிய கொடுமையிலும் கொடுமை! 

தன் இன அழிவிலும் தங்களை மட்டும் புத்திசாலிகளாக காட்டிக்கொண்டு சந்தோசப்படும் மனிதர்கள்....speechless-smiley-004_zps4465a3fb.gif

  • கருத்துக்கள உறவுகள்

சம் & சும் க்கு இது தெரியுமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.