Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொள்கைப் பிடிப்புள்ள நேர்மையான அரசியலை விரும்புபவர்களுக்கு...

Featured Replies

மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை பார்க்கக் கிடைத்தது. இவர்களது அரசியலையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். 

பல்கலைக்கழக ஆசிரியர்களை பல்கலைக்கழக மாணவர்களை கல்வியாளர்களை  உள்ளடக்கிய வேட்புமனுவினைத் தாக்கல் செய்து அரசியலில் நுழைந்து தம்மையும் தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் வளர்த்துக் கொண்டு அரசாங்கத்திடமிருந்து சொகுசு வாகனங்களையும் இதர வசதிகளையுமம் பெற்றுக் கொண்டு இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அரசியல் செய்யும் மக்கள் விடுதலை முன்னணியை அரசாங்கத்தில் இருத்துவதற்கு சிங்கள மக்கள் இன்னமும் தயாராயில்லை.

ஆனாலும் மக்கள் விடுதலை முன்னணியின் புனிதமான அரசியலைக் கண்டு ஐக்கிய தேசியக் கட்சிக் காறனாக நான் வெட்கப்படுகிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ரஞசன் ராமநாயக்கா கூறுகிறார். அவர்களது பட்டியலில் மது போதைப் பொருட்களுடன் சம்பந்தப்பட்ட எவருமே இல்லை என அபாயகரமான மருந்துகள் நிறுவனத்தின் தலைவர் நற்சான்றிதழ் கொடுக்கிறார். தேசியப் பட்டியல் உருவாக்கப்பட்டதன் உண்மை நோக்கம் நிறைவேறும் வகையில் பட்டியலைத் தயாரித்திருப்பது மக்கள் விடுதலை முன்னணியினரே என  ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவிக்கிறார். இந்தக் கட்சி இம்முறை கடந்த தேர்தல்களை விட அதிக ஆசனங்களை )சுமார் 20 ஆசனங்கள் வரை ) இநதக் கட்சி  கைப்பற்றும் என எதிர்வு கூறப்படுகின்றது.

அது போலவே இன்னமும் திம்புக் கோட்பாட்டை உள்ளடக்கிய தமிழர் தேசியம் குறித்த உறுதியான கொள்கையைக் கொண்டுள்ள தமிழ் தேசிய  மக்கள் முன்னணியிலும் தமது கொள்கையில் உறுதியாக உள்ளது. வேட்பாளர் பட்டியலும் முதியோர் இல்ல அங்கத்தவப் பட்டியல் போலல்லாது மாணவர்கள் போராளிகள் கல்விமான்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அரசாங்கத்துடன் இரகசியக் காதலால் இணைந்திருந்து விட்டு தேர்தல் காலங்களில் இவர்களும்ஒன்றும் செய்யவில்லை இனிமேல் போய் பேரம் பேச வாக்களியுங்கள் என்று போலிக் கோசங்களைக் காணவில்லை. ஆனாலும் ஊடக பலம் அரசீயல் பலம் அற்ற நிலையில் இவர்களது கருத்துக்கள் மக்களிடம் சென்றடைவதில் தாமதம் இருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கொள்கைப் பிடிப்புடன் அரசியல் செய்யும் மக்கள் விடுதலை முன்னணியினது அரசியல் மெல்ல மெல்ல சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பாக இளைய சமூகத்தின் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதைப் போலவே தமிழர் பகுதிகளிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மண்ணில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கிறது.

இது ஒட்டுமொத்த இலங்கைக்கும் நல்ல அறிகுறியாகவே படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணி குறித்து ஆர்வமுடைய சிங்களப் புலமையுடையவர்களுக்காக மகரகமவில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பிலான காணொளியை இணைக்கீறேன்

http://www.lakway.org/view.php?id=1052496

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பதிவுக்கு மணிவாசகர்

 

நான் அடிக்கடி இங்கு எழுதியது தான்

தமிழ்த்தேசிய முன்னணியின் பிறப்புக்கு ஒரு வலுவான காரணமுண்டு

அதனை  தள்ளி முன்னுக்கு கொண்டு வரப்போவது வேறு யாருமல்லர்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே...........

  • தொடங்கியவர்

கருத்திற்கு நன்றி அண்ணா!

மக்கள் விடுதலை முன்னணிக்கும் இது பொருந்தும். அவர்கள் மீது மக்கள் மெல்ல மெல்ல நம்பிக்கை வைப்பதற்கு இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியனதும் கொள்கைப் பிடிப்பில்லாத சுயநல அரசியல் தான் காரணம்.

 

அரசியலின் அடிப்படையும்  அரசியல்வாதிகளின் குணமும் இன்னமும் பலருக்கு விளங்கவில்லை .

பேச்சுகள் எல்லாம் பதவி அதிகாரம் வரும்வரைதான் பதவி வந்த பின் எல்லாம் தலை கீழ் தான் .

முள்ளிவாய்கால் முடிவின் பின் ஒரு குரலில் ஒலிக்க வேண்டிய தமிழனின் குரலை உடைக்கும்  புண்ணியவான் இவர்தான்.(குமார் ) .இந்த  துரோகம்   வரலாற்றில் பதிவு ஆகும் .

இது ஒரு தனிநபர் கட்சி .குமாரும் அவர் பணமும் இல்லாவிட்டால் கட்சி அம்பேல் .

புலிவால்கள் கூட்டமைப்பு தமது தாளத்திற்கு ஆடாததால் குமாரைத்தான் ஆதரிப்பார்கள் .தமிழர்களை உடைக்கும் சக்தி என்றும் அவர்கள் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இன்னொரு முள்ளிவாய்க்காலுக்குப் புலிவால்களின் அனுசரணையுடன் அடுக்குப்பண்ணுகிறார்கள். ஆனால் மக்கள் இன்னொரு முள்ளிவாய்க்கால் வரை செல்ல ரெடியாக இல்லை! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சச் சனத்துக்கு நடந்த இனக்கலவரங்களெல்லாம் மறந்து சுத்த சூனியங்களாயிட்டினம்.   இப்ப தமிழர்ரை இடங்களிலை நடக்கிற சிங்கள குடியேற்றங்களும் கண்ணுக்கு தெரியேல்லை போலை ... ...... சும்மா  எடுத்ததுக்கேல்லாம் புலிவால் பூனைவால் எண்டு காலத்தை போக்காட்டீனம்... 

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு எதிரானவர்கள் தான் கூட்டமைப்பை ஆதரிக்கிறார்களோ என ஒரு சந்தேகம் உண்டு. ஜனநாயகம் என்கிறீர்கள். பிறகேன் மற்ற கட்சி வரக்கூடாது என்கிறீர்கள்?

நேற்று சுரேஸ் சொல்கிறார் கூட்டமைப்பு தோற்றால் புலிகளின் கொள்கை தோற்றதாகுமாம். இதெப்படி என விளக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சச் சனத்துக்கு நடந்த இனக்கலவரங்களெல்லாம் மறந்து சுத்த சூனியங்களாயிட்டினம்.   இப்ப தமிழர்ரை இடங்களிலை நடக்கிற சிங்கள குடியேற்றங்களும் கண்ணுக்கு தெரியேல்லை போலை ... ...... சும்மா  எடுத்ததுக்கேல்லாம் புலிவால் பூனைவால் எண்டு காலத்தை போக்காட்டீனம்... 

 

அவர்கள் தங்களை இழந்துவிட்டார்கள்

புலி

புலம் பெயர் மக்கள்

இவை தமிழரின் பலம்

இவற்றைக்கண்டால் பயம் வரத்தான் செய்யும்

அது தான் இரண்டையும் கோர்த்து புலிவால்கள் என காய்கிறார்கள்

புலியின் வாலுக்கே இந்தப்பயம் என்றால்.......??

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் தங்களை இழந்துவிட்டார்கள்

புலி

புலம் பெயர் மக்கள்

இவை தமிழரின் பலம்

இவற்றைக்கண்டால் பயம் வரத்தான் செய்யும்

அது தான் இரண்டையும் கோர்த்து புலிவால்கள் என காய்கிறார்கள்

புலியின் வாலுக்கே இந்தப்பயம் என்றால்.......??

 

அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்திதான் என்பது அவர்கள் கொள்கைக்கு நன்றாகவே பொருந்துகின்றது.

காலம் மாறியதை அவர்கள் உணரவில்லை.

கால மாற்ற அரசியலை / போராட்டங்களை ஒரு மாவீரர் உரையில் தலைவர் அழகாக அமைதியாக சொல்லியுள்ளார்.:innocent: :innocent: :innocent:

 

  • கருத்துக்கள உறவுகள்

த தே ம முன்னணி கூட்டமைப்பிற்கு வலுவான எதிர்க்கட்சியாக வளர்வதற்கு இன்னும் நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.
அவர்களது கட்சி மக்களை இன்னும் நெருங்கி வேலை செய்ய வேண்டும்.
சென்ற தேர்தலில் ராணுவப் பிரசன்னத்திலும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அச்சமான சூழ் நிலையாலும் இவர்களால் மக்களை நெருங்க முடியவில்லை. மக்களும் அச்சத்தின் மத்தியில் வாக்களிக்கவில்லை.

இந்த முறை அப்படியான நெருக்கடிகள் ?? குறைந்திருந்தால் த தே ம முன்னணியினர் முழு வீச்சாகத் தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள் யாழில் கிடைத்தாலே அது கூட்டமைப்பின் வங்குரோத்து அரசியலுக்கு அடித்த முதல் மணியாக ஒலிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.