Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)

Featured Replies

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)

sa231.jpg
ஐ.நா வில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட 
விசாரணை அறிக்கை இலங்கைக்கு எதிரானதாக இருக்க கூடாதென்பதில் மிகத்தீவிரமாக செயற்பட்ட சுமந்திரன் அதனை சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு ஒப்புக்கொண்ட விடயத்தை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

அதில் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது:
 
தமிழ்தேசிய கூட்டமைப்பானது ஜெனிவாவுக்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளது. நாங்கள் இந்நாட்டின் ஒரு பகுதி. நாங்கள் இந்நாட்டின் அரசியற்கட்சி. ஜெனிவாவில் என்ன நடக்கிறது என்றால் அது நாடுகளுக்கிடையிலான விடயம். அங்கு 47 நாடுகள் வாக்களிக்க கூடிய நிலையில் உள்ளன. அது அவர்களுடைய விடயம் (எப்படி வாக்களிப்பது என்பது). 
 
”நாங்கள் ஏனைய நாடுகளை ஆதரிக்குமாறு பரப்புரைகளை செய்யமுடியும். ஆனால் நாங்கள் அப்படி செய்வதை விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் இந்நாட்டின் ஒரு பகுதி. நாங்கள் இந்த நாட்டுக்கு எதிராக ஒரு விடயத்தைக்கூட கொண்டு வரப்படுவதை விரும்பவில்லை”. (We can canvas to certain positions but we don’t want anything against Sri Lanka)

 
25ஆவது நொடியிலிருந்து பாருங்கள்
 
 
http://youtu.be/7Eg6qWy75n4
நாங்கள் சிறிலங்கா என்ற எங்கள் நாட்டை முன்னோக்கி செல்லுமாறு கேட்டுக்கொள்ளவே விரும்புகின்றோம். அப்படி சென்று இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கொண்டுவரமுடியும். அமெரிக்காவால் கொண்டுவரப்படுகின்ற இத்தீர்மானமானது உள்ளக பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு சிறிலங்காவை ஊக்கப்படுத்துகின்றது. அத்தகைய உள்ளக விசாரணைப் பொறிமுறையை நாங்கள் ஆதரிக்கின்றோம்.

என தெரிவித்துள்ளார்.

இது 2012 ஆம் ஆண்டு இவர்கள் ஜெனீவாவிற்கு செல்லாதது ராஜதந்திரமென மக்களை ஏமாற்றிய சுமந்திரன் பின்னர் இரண்டாவது தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்போவது உறுதியானபோது அதனை வலுவிழக்க செய்வதற்கு நாடுகளிடம் ஓடிச்சென்று இலங்கைக்கு எதிரான சரத்துக்களை குறைக்குமாறும் கேட்டுக்கொண்டார் என்பதையும் நினைவூட்டுகின்றோம்.

சிங்கள மக்களிடம் நாம் சிறிலங்கன்கள் சிறிலங்காவுக்கு எதிராக எதனையும் செய்யமாட்டோம் எனக்கூறும் அதே சுமந்திரன் தமிழ் மக்கள் கேள்வி கேட்கும் போது வெளிநாடுகள் பல கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராஜதந்திர காரணத்திற்காக ஜெனீவாவிற்கு செல்லவில்லை எனக்கூறுவது மக்களை எப்படி ஏமாற்றுகின்றார் என்பதற்கு நல்ல சான்றாகும்.
 
இது தொடர்பில் அப்போது பி.பி.சி தமிழோசையிடம் அவர் கூறிய கருத்தும் வாசகர்களுக்கு உதவும் என்பதால் இதனையும் இணைக்கின்றோம்.
 
பின்னிணைப்பு-

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிறீதரனும் மார்ச் 2014இல் ஜெனீவாவில் சிறீலங்கன் தூதுவராலயத்திற்கு மரியாதை நிமித்தம் விஜயம் செய்தனர்

என்ன செய்தார்கள் அங்கே? "In an unexpected development, both Sumanthiran and Shritharan paid a ‘courtesy call’ on Sri Lanka’s Permanent Representative, Ravinatha Aryasinha. The meeting took place at the Sri Lanka mission in Geneva."
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் தெரியாட்டி இப்படித்தான்.

இலங்கைக்கு, நாட்டுக்கு,எதிராக நாம் எதையும் கோரவில்லை நீதியான பொறுப்புக் கூறலையே நாம் எதிர்பார்கிறோம்.

காலகாலமாக கூட்டமைப்பின் நிலைப் பாடு இதுதான்.

இதை திரித்து, ஆங்கிலம் தெரியாத மக்களை மடையர் ஆக்க முயற்சிக்கிறனர் சில புலம் பெயர் அரகுறயள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான்....இதுக்குத்தான் இங்கிலிஸ் தெரியாமல் ஒருத்தரும் ஒண்டும் கதைக்கக்கூடாது எண்டுறது....எழுதினதை பார்த்து வாசிக்கிறது......டொல்மேச்சர் வைச்சு அரசியல் செய்யுறது இதெல்லாம் சரிவராது....சரிப்பட்டும் வராது......
கோட்டு சூட்டு போட்டு இங்கிலிசிலை கதைச்சால்த்தான் எங்கடை பிரச்சனையளை வெட்டியாடலாம்.....உதெல்லாம் உந்த விசிலடிச்சான் கோஷ்டியளுக்கு எங்கை தெரியப்போகுது...பள்ளிக்கூடமே போயிருக்காதுகள்..:grin:

கோட்டுசூட்டு போட்ட சேர் பொன் இராமநாதன் தொடக்கம் அப்புக்காத்து சுமந்திரன் வரைக்கும் சிங்களவனுக்கு பின்பக்கம் கழுவுறதிலை பின்னிக்கிறேல்லையெண்டது வேறை விசயம்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்தி..... மகிந்தவுக்கு கொடுத்த, "கிஸ்"  தமிழ் கலாச்சாரத்தில் இல்லாதது.
நாதாரி.... கூட்டம்,  போராடிய...... போராட்டத்தை  எல்லாம், நாசமறுக்குது.
ப்ளீஸ்.... சுமந்து,  அரசியலில் இருந்து, விலகி விடு.  
உன்னால்...... என், இனத்துக்கே.... அவமானம். :cool:

நாங்கள் இலங்கைக் கெதிராக அங்கத்துவ நாடுகளிடத்தில் பிரச்சாரம் செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அதனைச் செய்யவில்லை. ஏனென்றால் நாங்கள் இந்த நாட்டின் ஒரு பகுதியினர் என்று சொல்கிறார். சரி இது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை என்று விட்டு விடுவோம்.

ஆனால் மட்டக்களப்பு மாவட்ட முக்கிய உறுப்பினர் அரியநேத்திரன் நாங்கள் ஐநா வாசலில் நின்று கொண்டிருக்கிறோம். உள்ளே செல்வதற்கு இம்முறை வாக்களியுங்கள் என்று கேட்கிறார். அப்படியானால் உள்ளே போய் என்ன செய்யப் போகிறார்கள்.

சுயாட்சி சுயநிர்ணய உரிமை என்று திரும்பப் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஒற்றையாட்சி என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என சிங்கள அமைச்சர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். இந்த லட்சணத்தில் 2016இல் கட்டாயம் தீர்வு காண்பேன் என சம்பந்தன் அடித்துச் சொல்கிறார்.

ஆங்கிலம் தெரியாட்டி இப்படித்தான்.

இலங்கைக்கு, நாட்டுக்கு,எதிராக நாம் எதையும் கோரவில்லை நீதியான பொறுப்புக் கூறலையே நாம் எதிர்பார்கிறோம்.

காலகாலமாக கூட்டமைப்பின் நிலைப் பாடு இதுதான்.

இதை திரித்து, ஆங்கிலம் தெரியாத மக்களை மடையர் ஆக்க முயற்சிக்கிறனர் சில புலம் பெயர் அரகுறயள்.

இந்த சுமந்திரனை எவனாவது கண்டால் மண்டையை பிளவுங்கள் ....சொறியன் ..
இலங்கைக்கு எதிராக ஒன்றும் கோரவில்லை என்பதுக்கும் ..நீதியான பொறுப்பு கோரலும் ...

இது இரண்டுக்கும் உள்ள தொடர்பு விளங்கதவர் தான் எங்கட கோசன் ....வளரட்டும் உங்கள் அரசியல் தெளிவு 

ஆங்கிலம் தெரியாட்டி இப்படித்தான்.

இலங்கைக்கு, நாட்டுக்கு,எதிராக நாம் எதையும் கோரவில்லை நீதியான பொறுப்புக் கூறலையே நாம் எதிர்பார்கிறோம்.

காலகாலமாக கூட்டமைப்பின் நிலைப் பாடு இதுதான்.

இதை திரித்து, ஆங்கிலம் தெரியாத மக்களை மடையர் ஆக்க முயற்சிக்கிறனர் சில புலம் பெயர் அரகுறயள்.

ஐநாவின் தீர்மானம் இலங்கைக்கு எதிரானதல்ல அது இலங்கைத்தீவின் பொறுப்பு கூறுதலையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதே. இது  அமெரிக்காவால் பலமுறை தெளிவாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க அந்த தீர்மானத்தை ஆதரிக்குமாறு பிரச்சார்ம் செய்வது இலங்கைக்கு எதிராக அமையும்  என்பதால் நாம் பிரச்சாரம் செய்யவில்லை என்று சுமந்திரன் கூறுகிறார். அப்படியானால் தீர்மானம் இலங்கைக்கு எதிரானதல்ல என்று அமெரிக்கா கூறிய ஆங்கிலம் சுமந்திரனுக்கு புரியவில்லையா? அல்லது தீர்மானத்தின் வாசகங்கள் எந்த இடத்திலும் இலங்கைக்கு எதிராக அமையவில்லை என்பதை புரிந்து கொள்ளும் சட்ட அறிவு சுமந்திரனுக்கு இல்லையா? 

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

Move forward and find reconciliation  என்றால் நீதியான பொறுப்புக்கூறல் என்று அர்த்தமா .....?
ஐ தின்க் ஹி இஸ் ஸ்பீகிங் பிரிட்டிஷ் இங்கிலீஷ் .....

https://www.youtube.com/watch?v=jZu0D6WH6s4

இதுக்குத்தான்பா ஆங்கிலத்தை படி படி எண்டு கத்திறம் யாரும் கேட்டாத்தானே 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான்பா ஆங்கிலத்தை படி படி எண்டு கத்திறம் யாரும் கேட்டாத்தானே 

என்னையா செய்வது

அழுது புரண்டாலும் நாம தான் பிள்ளையைப்பெறணும் என்றல்லோ படிப்பித்துவிட்டார்கள்

வெள்ளைக்காறருக்கு கழுவினால் தருவான் என்றால் .....

தமிழில் அப்படியொரு பழமொழியே இல்லையே....

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கும்பல்... சிங்களத் தேசியக் கொடியை தூக்கிப் பிடித்ததில் இருந்து சிங்கள சுதந்திர தினத்தைக் கொண்டாடியதில்.. இருந்து... (ஒரு பெளத்த பிக்குவே சொல்கிறார் அந்தத் தேசியக் கொடி தீயிட்டு எரிக்கப்படனும் அது சிங்களப் பேரினாவதத்தை அடையாளப்படுத்தும் கொடின்னு).. தெரியனும்.. தமிழ் மக்களுக்காக இவர்கள் எவ்வளவு "கடினமா" உழைக்கினம் என்று. முட்டாள் பசங்க இன்னும் மக்களை ஏமாளிகளுன்னு  நினைச்சிட்டாங்க. :grin:

Edited by nedukkalapoovan
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

அக்னி,

தயவு செய்து என்னை நக்கலடிக்கும் முன் உங்கள் தரவுகளை சரி பாருங்கள்.

ரிகொன்சிலியேசன் என்பதுக்கு பல அர்தங்கள் உண்டு. http://dictionary.reference.com/browse/reconciliation

தென்னாபிரிக்காவில் நடந்த கொடுமைகளை இருசாராரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளும் truth and reconciliation committee ஒன்று அமைக்கப் பட்டு, இரு எதிரிதரப்புகள், நடந்த கசப்புகளுக்கு பொறுப்புக் கூறி, நிகழ் யதார்த்ததை ஏற்று, எதிர்காலத்திலும் நாம் ஒரு நாட்டில்தான் வாழ வேண்டும் என்ற ரீதியில் முன்னேற முயன்றார்கள்.

இதைத்தான் மூவிங் பொர்வார்ட் வித் ரிகொன்சிலியேசன் என்பார்கள்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி அண்ணை ....? உங்களுக்கு விரும்பியது போல் மாத்துறிகள் 
நீங்கள் தந்த இணைப்பிலும் எல்லாம் நல்லிணக்கம் ,சமாதானம் ,மற்றும் கீழே குறிப்பிட்டது  போல தான் வருகிறது (a suspension of hostilities for a specified period of time by mutualagreement of the warring parties; cease-fire; armistice.)
ஆனாலும் ஒன்று சுமந்திரன் தென்னாபிரிக்க முறையிலான பொறுப்புகூறலை தான் மேலே உரையில் குறிப்பிட்டார் என்று நீங்கள் நம்பியவாறு நானும் நம்பிவிட்டேன்  

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நம்புறாங்கப்பு. அது போதும் நீங்க நம்பினா நம்புங்க அல்லது முள்ளிவாய்காலுக்கு உடஞ்ச சைக்கிள்ள போங்க, யாருக்கும் உங்களைப் போன்ற நேற்றய மனிதர்களை பற்றி கவலை இல்லை.

மக்கள் நம்புறாங்கப்பு. அது போதும் நீங்க நம்பினா நம்புங்க அல்லது முள்ளிவாய்காலுக்கு உடஞ்ச சைக்கிள்ள போங்க, யாருக்கும் உங்களைப் போன்ற நேற்றய மனிதர்களை பற்றி கவலை இல்லை.

மக்கம் நம்பி உங்க கட்சித் தலைவருக்கு பதவி தந்திட்டாங்க. இனி எக்கேடுகட்டாலும் பறவாயில்லை. உங்க தலைவர் பதவியை அனுபவிச்சா போதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் நம்புறாங்கப்பு. அது போதும் நீங்க நம்பினா நம்புங்க அல்லது முள்ளிவாய்காலுக்கு உடஞ்ச சைக்கிள்ள போங்க, யாருக்கும் உங்களைப் போன்ற நேற்றய மனிதர்களை பற்றி கவலை இல்லை.

மற்றவர்களை பார்த்து விசிலடிச்சான் குஞ்சுகள்....உங்கள் கருத்துக்களோ அதை விட மோசம்.

உண்மையான கூட்டமைப்பு ஆதரவாளர்கள் அமைதியானவர்கள்.:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.