Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளூர் தமிழர்களை விரட்டி விட்டு வெளிநாட்டு தமிழர்களுக்கு உல்லாசம் காட்டும் சிங்கள இராணுவம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிருபராகச் செல்ல முடியாத நிலையில் உல்லாசப் பயணியாக.. வெளிநாட்டு தமிழர்களோடு.. பிற பயணிகளோடு.. பயணம் செய்த பிபிசி செய்தியாளர்.. சிங்கள இராணுவம் உள்ளூர் தமிழர்களை விரட்டி அடித்துவிட்டு பிடித்த நிலங்களில் நடத்தும் உல்லாச கோட்டல்கள் மற்றும்...நில அபகரிப்பால் குடிசைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்ட தமிழர்களின் வேதனை கொண்டு வருகிறார் செய்தியாக.

அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று மீண்டும் முழங்குகிறார் மகிந்த. அது நாட்டைப் பிரிக்குமாம்.

பதிலடியாக.. இப்படியே நிலைமை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யாமல் தொடரின்.. மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டம் சாத்தியப்படலாம் என்கிறார்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இப்படி பல தகவல்களோடு.. இதே பிபிசி.. செய்தி..

The swimming pool at the Thalsevana resort in Sri Lanka

சிங்கள இராணுவ உல்லாச விடுதிகளில் குதூகலிக்கும் வெளிநாட்டு தமிழர்கள்.

A slum close to the Thalsevana resort

சிங்கள இராணுவம் விரட்டி விட்டு வதைபடும் உள்நாட்டு தமிழர்கள். 

Julius Selvamalar

சிங்கள இராணுவத்திடம் நிலத்தை பறிகொடுத்த ஓர் குடும்பப் பெண்ணின் குமுறல்.

Lagoon's Edge Hotel in Sri Lanka - taken from the resort's Facebook page - 29 November 2012

இராணுவத்தின் நலன்புரிக்காக நடத்தப்படுகிறதாம்.. உல்லாச விடுதிகள். அதில் போய் தங்கி இராணுவத்துக்கு வருவாய் ஊட்டுவோரில் வெளிநாட்டு தமிழர்களும் அடக்கம். 

மேலும் செய்திகள்.. காணொளிகள் இங்கு.. ஆங்கிலமொழி மூலம். 

http://www.bbc.co.uk/news/world-asia-33937051?SThisFB

If the Thalsevana doesn't appeal, Sri Lanka's military runs a number of other tourist businesses, including:

  • The exclusive Lagoon's Edge hotel, reserved for senior military personnel and their families. It offers guests the questionable pleasure of enjoying a cocktail as they look out over a stretch of water where thousands of Tamil civilians and soldiers died in the last days of Sri Lanka's bloody civil war
  • A number of roadside restaurants along the A9 highway that runs to the north of the island
  • A travel agency, Air Travel Services, which boasts on its website that it is "the latest sphere" of activity for the Sri Lanka army, "after the military victory over the terrorism in North and East"
  • A whale-watching venture run by the navy and offering tourists the opportunity of an encounter with "the largest living mammals and spinning dolphins in luxury and comfort". But you'll have to wait to get a booking - the service is suspended while the navy's passenger vessel is in dock for maintenance.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் போகும் வெளி நாட்டுத் தமிழர் காங்கேசன்துறையில் இருக்கும் உல்லாசக் கடற்கரைக்கும் காரை நகர் கடற்படை நடாத்தும் உல்லாசக் கொட்டலுக்கும் போகாமல் திரும்பி வருவதில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது சிட்னி நண்பர் சொன்னார் சிட்னியில் இருப்பதைவிட அங்கு இருப்பது திறமாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது சிட்னி நண்பர் சொன்னார் சிட்னியில் இருப்பதைவிட அங்கு இருப்பது திறமாம்.....

உப்படி சொல்லுற ஆக்களின்ர பாஸ்போட்டை பறிச்சிட்டு.. அகதி அந்தஸ்தை கிழிச்சிட்டு.. ஊருக்கு அனுப்ப அவுஸி ஏன் இன்னும் முயற்சிக்கல்ல. எத்தனையோ உண்மையான அகதிங்களை கடலுக்க சாகடிக்கிறாங்கள். இப்படி திமிர் பிடிச்சு அலையுறதுகளுக்கு பாஸ்போட் கொடுத்து வைச்சிருக்கிறாங்கள். :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை ஒரு பிரச்சனையுமில்லை.....எயாப்போர்ட்டிலை இறங்கினால் எல்லாம் அந்தமாதிரி....வான் ஒண்டை புடிச்சுக்கொண்டு யாழ்ப்பாணம்வெளிக்கிட்டமெண்டால்....றோட்டு சொல்லி வேலையில்லை....சும்மா காபெட் போட்டமாதிரி இருக்கு.....5மணித்தியாத்திலை அந்தமாதிரி போய்ச்சேரலாம். ஆமியள் சேர் சேர் எண்டுதான் கதைப்பாங்கள்...நான் இரண்டு பைக்கற் சிக்ரட் குடுத்தன்...புளுகிப்புளுகி வாங்கி பத்தினாங்கள்......யாழ்ப்பாணத்திலை கடையள் இருக்கேல்லே ஐரோப்பா தோத்துப்போகும்...என்ன சாமான் இல்லை? ஃபா......எல்லாம்...எல்லாம் அங்கை இருக்கு....
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு முன்னாலை ஒரு தியேட்டர் ஒண்டு கட்டியிருக்கிறாங்கள்....நினைக்கேலாதமாதிரி என்ன......
கீழை கடை பம்பஸ் தொடக்கம் சகல சாமானும் அந்தமாதிரி இருக்கு.....அதுக்கு மேலை ரெஸ்ரோரன்ற் சாப்பாடு சொல்லி வேலையில்லை....ஒரு ஈ இலையானை காணமாட்டியள்......அதுக்கு மேலைதான் இரண்டு தியேட்டர்......சவுண்ட் சிஷ்டம் நான் ஒரு இடமும் காணேல்லை...அப்பிடியிருக்கு.....நான் கமலகாசன்ரை பாபநாசம் பாத்தன் மணிப்படம்.......சவுண்சிஷ்டத்துக்குத்தான் காசு....யாழ்ப்பாணம் ரவுணை இப்ப பாக்கேலாது....லிடோவுக்கு பக்கத்திலை இருக்கிற குளத்தை மண்நிரப்பி ஒரு கொட்டல் ஒண்டு அந்தமாதிரி கட்டியிருக்கிறாங்கள்....மற்றது ராஜாவிலை படம் ஓடுது.......வின்சர் இருந்தமாதிரியே இருக்கு...

மகிந்த கட்டின கொட்டலுக்கு பின்னாலை கடல் ஒண்டு இருக்கண்ணை சொல்லி வேலையில்லை....அந்தமாதிரி கிளீன்...ஆமியள் நிக்கிறாங்கள் தான் ஆனால் சோலி தரமாட்டாங்கள்....அந்தமாதிரி நீந்திப்போட்டு வரலாம்....வேணுமெண்டால் கொக்ரையில் தருவாங்கள்...மணியாயிருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3000 ரூபா இன்ரசிற்றி ரயிலில் போறதை விட்டுட்டீங்க. அதுவும் நாலு ஸ்ரேசனில தான் நிற்கும். போற வேகத்திற்கு இறங்கிற ஸ்ரேசனை தவறவிட்டால்.. பாதை வேற தெரியாதாமில்ல. 

சூடு.. வெக்கை.. 2 கிழமைக்கு மேல அங்க நிற்க ஏலாது. ஏசிக்க இருந்திட்டு வெளிய போக முடியல்ல.. வெளில இருந்திட்டு ஏசிக்க போக முடியல்ல...

இத்தனைக்கும்.. அசைலம் அடிக்க முதல்.. கொப்பரோட கத்தரித்தோட்டத்து வெருளி மாதிரி தோட்டத்தில வெயில் காய்ஞ்சது நினைவில்லையாம். :):grin:

ஆ இன்னொன்று.. இப்ப எல்லாம்.. பொலிஸும்.. கெல்த் இன்ஸ்பெக்டரும்.. வீடுவீடா வந்து செக் பண்ணினமாம். நாடு நல்ல சுத்தம் சுகாதாரமா இருக்குது. யு நோ எங்கட சனத்தை திருத்தேலாது. அதுதான் பைன் அடிக்கிறாங்கள். நல்லா... செய்யுறாங்கள். ஆனாலும் இரண்டு கிழமைக்கு மேல அங்க நிற்க ஏலாது. போர் அடிக்குது. :grin:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் போகும் வெளி நாட்டுத் தமிழர் காங்கேசன்துறையில் இருக்கும் உல்லாசக் கடற்கரைக்கும் காரை நகர் கடற்படை நடாத்தும் உல்லாசக் கொட்டலுக்கும் போகாமல் திரும்பி வருவதில்லையாம்.

யாழ் இணையத்திலும் சிலருண்டு..

புலத்தில புரண்டுவிட்டு

அங்க போய் உதறுவது.....

அதில வேற 

திரும்பி வந்து அதுக்கு விளம்பரம் வேற செய்வது...

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை ஒரு பிரச்சனையுமில்லை.....எயாப்போர்ட்டிலை இறங்கினால் எல்லாம் அந்தமாதிரி....வான் ஒண்டை புடிச்சுக்கொண்டு யாழ்ப்பாணம்வெளிக்கிட்டமெண்டால்....றோட்டு சொல்லி வேலையில்லை....சும்மா காபெட் போட்டமாதிரி இருக்கு.....5மணித்தியாத்திலை அந்தமாதிரி போய்ச்சேரலாம். ஆமியள் சேர் சேர் எண்டுதான் கதைப்பாங்கள்...நான் இரண்டு பைக்கற் சிக்ரட் குடுத்தன்...புளுகிப்புளுகி வாங்கி பத்தினாங்கள்......யாழ்ப்பாணத்திலை கடையள் இருக்கேல்லே ஐரோப்பா தோத்துப்போகும்...என்ன சாமான் இல்லை? ஃபா......எல்லாம்...எல்லாம் அங்கை இருக்கு....
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு முன்னாலை ஒரு தியேட்டர் ஒண்டு கட்டியிருக்கிறாங்கள்....நினைக்கேலாதமாதிரி என்ன......
கீழை கடை பம்பஸ் தொடக்கம் சகல சாமானும் அந்தமாதிரி இருக்கு.....அதுக்கு மேலை ரெஸ்ரோரன்ற் சாப்பாடு சொல்லி வேலையில்லை....ஒரு ஈ இலையானை காணமாட்டியள்......அதுக்கு மேலைதான் இரண்டு தியேட்டர்......சவுண்ட் சிஷ்டம் நான் ஒரு இடமும் காணேல்லை...அப்பிடியிருக்கு.....நான் கமலகாசன்ரை பாபநாசம் பாத்தன் மணிப்படம்.......சவுண்சிஷ்டத்துக்குத்தான் காசு....யாழ்ப்பாணம் ரவுணை இப்ப பாக்கேலாது....லிடோவுக்கு பக்கத்திலை இருக்கிற குளத்தை மண்நிரப்பி ஒரு கொட்டல் ஒண்டு அந்தமாதிரி கட்டியிருக்கிறாங்கள்....மற்றது ராஜாவிலை படம் ஓடுது.......வின்சர் இருந்தமாதிரியே இருக்கு...

மகிந்த கட்டின கொட்டலுக்கு பின்னாலை கடல் ஒண்டு இருக்கண்ணை சொல்லி வேலையில்லை....அந்தமாதிரி கிளீன்...ஆமியள் நிக்கிறாங்கள் தான் ஆனால் சோலி தரமாட்டாங்கள்....அந்தமாதிரி நீந்திப்போட்டு வரலாம்....வேணுமெண்டால் கொக்ரையில் தருவாங்கள்...மணியாயிருக்கும்.

கருத்திற்கும், சரளமான உள்ளூர் தமிழ் நடைக்கும் சேர்த்து பச்சை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் போட்ட பிச்சையினாலேயே பலர் வெளிநாடு போனதுகள். ஆனால் பலர் இன்றும் அதனை மறக்காது தாயக மக்களுக்காக முடிந்ததை செய்கின்றார்கள். ஆனால் சிலரோ அந்த போராட்டம் போட்ட பிச்சையால் வெளிநாடு சென்றவர்கள், அவர்களுக்காக போராடியவர்கள் இன்று பிச்சை எடுப்பதையோ எமக்காக மாண்டவர்களின் துயிலும் இல்லங்களையோ போய்ப் பார்ப்பதே இல்லை. ஆமியின் உல்லாச இடங்களுக்கு சென்று கூத்துபோடுதுகள். இதுகளின் பிறப்பில் சந்தேகமே!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.