Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2015 பாராளுமன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈழத் தமிழர்களின் ஆணையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2015 பாராளுமன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்
ஈழத் தமிழர்களின் ஆணையும்

2009 க்குப் பின்னர் 2015 இலும் வட கிழக்குத் தமிழ் மக்கள் தங்கள் பெரும்பான்மையான வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அளித்துள்ளனர்.
பலராலும் அதிகமாக எதிர்பார்ப்புக்களுடன் இரண்டாவது முறையாகவும் கூட்டமைப்பினருக்கு எதிராகக் களத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
இந்த இரண்டு விடயங்களும் ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை
உலகத்திற்குச் சுட்டிக்காட்டி நிற்கின்றன.

 அதி தீவிர தேசியவாதம் பேசும் அல்லது பேசுவார்கள் என்ற ரீதியில் மக்கள் முன்னணியினரை நிராகரித்து தமிழ் மக்கள் தீவிர வாதத்தில் தங்களுக்கு நாட்டமில்லை என்பதை பறைசாற்றியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் தீவிர தேசிய வாதம் பேசியது கூட்டமைப்பினராக இருந்தும் மக்கள் அவர்களுடைய பேச்சை தேர்தல் காலக் கூச்சல்களாகவே பார்த்துள்ளனர். தனிப்பட்ட ரீதியில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் சிலர்  தங்களை விடுதலைப் புலிகளின் வாரிசுகளாகக் காட்ட முனைந்ததும் வேறு கதை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தங்களை முற்று முழுதாக  விடுதலைப் புலிகளின்
நேரடி வாரிகள் என அடையாளம் காட்டிய வண்ணமே கடந்த இரண்டு பாராளு மன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டனர்.ஆனாலும் எந்தத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களிலும் தங்களை விடுதலைப் புலிகளின் வாரிசுகளாகவோ அல்லது தனித் தமிழீழ வாதிகளாகவோ காட்டிக் கொள்ளவில்லை.

இந்த இரண்டு முரண்பாடான பரப்புரைகளினூடாக இரண்டு கட்சிகளும் மக்களை அணுகியிருந்த நிலையில் மக்கள் தங்கள் தெளிவான சிந்தனையிநூடாகத் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளனர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

அந்த வகையில் இன்று ஈழத் தமிழ் மக்கள்  அளித்துள்ள ஆணையின் படி

அவர்கள் இலங்கை என்ற நாட்டில் இரண்டு தேசங்களை விரும்பவில்லை.
வட கிழக்கு இணைந்த ஒரு மாகாண சுயாட்சியைக் கூட அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இஸ்லாமிய  மக்களும் இணைந்து தங்களுக்கான அதியுச்ச அதிகாரங்களைப் பகிர்ந்து வாழ விரும்புகின்றனர்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதி உச்ச அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும்போது மாகாண சபை யினூடாக தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.

இப்போது உரிமைகள் என்று வரும்போது

முதலாவது வட கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவமே மக்களுக்கு ஒரு இடைஞ்சலாக இருக்கின்றது.

இரண்டாவது காவற்துறை யின் அதிகாரங்கள் மாகாண சபையினரின் அதிகாரத்திற்குள் வரவேண்டும். தமிழ் மாகாணங்களில் அதிகளவிலான தமிழ் மக்களே பொலீஸ் படையில் இயங்கவேண்டும்.

மூன்றாவது காணியுரிமை.எங்கள் மண்ணின்  உரிமை எங்களிற்கு வேண்டும்
தமிழ் மக்கள் வாழ்ந்த நிலங்கள் அபகரிக்கப்படுவதை சிங்கள அரச இயந்திரங்கள்  நிறுத்த வேண்டும்.
தேவையற்ற வகையில் புத்த விகாரைகள் அமைக்கப்பட்டு அதன் சூழலில் சிங்களக் கிராமங்களை உருவாக்க நினைக்கும் சிங்கள பௌத்த வாதிகளுக்கு அனுமதி  அளிக்கக்கூடாது.

நான்காவது தமிழர்களின் தொன்றுதொட்டு வாழ்ந்த நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் முதலில் அவை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இவ்வகையான பிரச்சனைகளுக்கான தீர்வை இணக்க அரசியல் மூலம் பெற்றுக்கொள்ளலாமா என்பதுதான் எம்முள் எழும் அடுத்த கேள்வி.

இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதகை பெற்ற காலங்களிலிருந்தே தமிழர்கள் சிங்கள இனத்தவர்களுடன் இணக்க அரசியலே செய்து வந்தனர்.
காலப்போக்கில் தமிழர்கள்  சிங்கள இனத்தவர்களின் தமிழ் இனத்திற்கெதிரான
கொள்கையை உணர்ந்து அவர்களைச் சகல மார்க்கமாகவும் எதிர்த்துப் போராடி தந்தை செல்வா தனித்தமிழ் ஈழமே தீர்வு எனப் பறை சாற்ற பிரபாகரன் அதற்காகப் போராடிய வரலாறு சகலருக்கும் தெரியும்.

இப்போது மக்கள் மீண்டும் இணக்க அரசியல் தான் தங்கள் விருப்பு என வாக்களித்தமையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வாறு  தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு தேடப்போகின்றனர் என்பது அடுத்த கேள்வி.அதற்கான பதில் கூட்டமைப்பினரிடம் இருக்கும் என்பதும் கேள்விக்குறியே

அடுத்து தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு மக்கள் விரும்பும் அரசியலிற்கு வருவார்களா என்றொரு கேள்வியும் எழாமல் இல்லை.

2009 இல் த தே ம முன்னணி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அவர்களின் அரசியலை உற்று நோக்கிவருபவன் என்ற நிலையில் அவர்களுடைய ஆதரவாளனாக மக்களின் தீர்ப்பிற்குத் தலை வணங்கித் தங்கள் பாதையை அவர்களும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

விடுதலை அடையத் துடிக்கும் மக்களிற்காக அவர்களுக்குச் சரியான பாதை தெரியாத நிலையில் அவர்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்லும் நிலைக்கும்... விடுதலை வேட்கையே இல்லாத ஒரு மக்கள் கூட்டத்தை விடுதலையை நோக்கி இட்டுச் செல்ல விழையும் நிலைக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.

ஈழத்தில் இன்று வாழும் தமிழ் மக்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும் தகுதி மக்கள் முன்னணியினருக்கு இந்தத் தேர்தலுடன்  இல்லாமற் போய்விடுகின்றது.

அவர்கள் தங்களை மீழவும் ஒரு சுய ஆய்விற்குட்படுத்திக் கொள்ளல் அவசியமாகின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்கள் கட்டமைப்பை அல்லது தங்கள் கட்சியை தேசிய ரீதியில் மட்டும் வெளிக்கொண்டு வராமல் கிராமம் தோறும் உள்ள மக்களின் அரசியல்  உணர்வுகளைப் புரிந்து கொண்டு
அதற்கேற்றவாறு கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.

கட்சியில் இருக்கும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளை இனங்கண்டு
புதிய தலைமுறை அரசியல் வாதிகளின் சிந்தனைகளுக்கேற்றவாறு

ஈழத்தில் உள்ள மக்களின் அரசியற் தேவைகளுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் அவர்களிற்கான அரசியல் எதிர்காலம் சூன்யமாகவே இருக்கப்போகின்றது.

அது வரைக்கும் ஈழத் தமிழர்கள் இணக்க அரசியலினூடாக கிடைக்கவிருக்கும் அற்ப சலுகைகளுக்காவே தங்களின் வாக்குப்பலத்தை பிரயோகித்துக் கொண்டிருப்பார்கள்.
   
வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் வழங்கிய தேர்தல் செய்தி:

1. தமிழ் தேசிய அடையாளத்தில் வந்தால் எங்கள் வாக்கு உங்களுக்கு தான்.

2. தமிழ் தேசிய அடையாளத்தில் வந்தாலும் தேசிய தலைவரின் கொள்கையோடு வந்தால் அவைக்கு தான் எங்கள் இதயத்தில் இடம். விருப்பு வாக்கு உங்களுக்கே அதிகம்.

3. டக்கிளஸ்.. போன்ற ஜெமகாதகர்களுக்கு வாக்குப் போட உள்ள கூட்டத்தை இப்போதைக்கு கட்டுப்படுத்த ஏலாது. அச்சத்தில் உள்ள மக்களை அச்சுறுத்தி வாக்குப் பறிக்கும் தந்திரம் ஈபிடிபி ஆயுதக் கும்பலுக்கு இன்னும் சாத்தியமாக உள்ளது.

4. சைக்கிளில் வந்தாலும்.. உதய சூரியனில் வந்தாலும்.. தமிழ் தேசிய உணர்விருந்தா.. ஒற்றுமையா வாங்க. அப்ப தான் வாக்கு.

5. சைக்கிள் உங்க கொள்கை பிடிச்சிருக்குது.. ஆனால் தனிய வர விருப்பாதைங்க. கொள்கைக்காக வாக்கு வங்கி வளர்ச்சி.. தனிய..  தேசிய தலைமை காட்டிய வழியில் வராமல் வந்ததால்.. பெரிய அளவில் வாக்குப் போட்டு எங்களின் பலத்தை சிதைக்க முடியாது.

6. காட்பெட் ரோட்டு.. கரண்டு.. ரயிலு விட்டதுக்கு நன்றிக் கடனுக்கு.. வாக்குப் போட எங்களிலும் நாலு பேர் இருக்கினம். அவையைப் பற்றியும் கவலை கொளளனும். உரிமைக்கு முன் மக்களின் அடிப்படை வசதிகளைப் பெருக்கவும் அரசியல்வாதிங்க பழகிக் கொண்டால் அந்த வாக்கும் உங்களுக்கே..!

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை அடையத் துடிக்கும் மக்களிற்காக அவர்களுக்குச் சரியான பாதை தெரியாத நிலையில் அவர்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்லும் நிலைக்கும்... விடுதலை வேட்கையே இல்லாத ஒரு மக்கள் கூட்டத்தை விடுதலையை நோக்கி இட்டுச் செல்ல விழையும் நிலைக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.

வாத்தியார், இந்த வாக்கியத்தொடரின் அர்த்தம் என்ன? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், இந்த வாக்கியத்தொடரின் அர்த்தம் என்ன? :unsure:

மனக்குளப்பம்.....:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

மனக்குளப்பம்.....:(:(:(

மனக்குழப்பம் என்பதை விட, "தாயக மக்களுக்கு விடுதலை வேட்கை இல்லை, அதனால் வழி நடத்த இயலவில்லை" என்ற தொனியோ என்ற சந்தேகத்தில் கேட்டேன். இது மனக்குழப்பமாக, ஏமாற்றமாக இருந்தால் அதற்கு புலத்தில் இருந்து எந்த ஆதாரங்களும் இன்றி த.தே.மு பெருவெற்றி பெறும் என்று நம்பியவர்கள் தான் காரணம். குட்டிச் சுவரிலும் கோப்பிக் கடையிலும் இருந்து ஒருவர் இருவர் நடத்தும் புலம் பெயர் இணைய ஊடகங்களையும்  யாரும் வந்து எதையும் கொட்டி விட்டுப் போகக் கூடிய இடமான முகனூலையும் நம்பி  தேர்தல் முடிவுகளை அனுமானித்தவர்கள் ஏமாற்றப் பட்டவர்களாம்! வாக்களித்த மக்கள் புத்தியில்லாதவர்களாம்! இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது விசுகர்? 

என்னைப்பொறுத்தவரை

மக்கள் மிகத்தெளிவாக

மிகவும் அமைதியாக

அதேநேரம் மிகவும் ஆளமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்

நான் கதைத்த அளவில் அவர்களது ஆழ்மனதில் உள்ள தீ அப்படியே தான் உள்ளது

அதை அணைக்கமுடியாது

அணைவதை அவர்களும் விரும்பவில்லை

ஆனால் வாழ்க்கை வயிறு என்பது வேறு

அது ஒரு நாளைக்கு 3 தரம் அழக்கூடியது

இதை நாம் புரிந்து கொண்டு நகரணும்.

என்னைப்பொறுத்தவரை செய்திகளை பத்திரிகைகளில் தேடுவதில்லை

நேரடித்தொடர்பு தான்.

அவர்களது தேவைகள் என்ன என்று தான் நான் பார்ப்பேன். கேட்பேன். என்னால் முடிந்ததைச்செய்வேன்

அதைவிடுத்து வழியைக்காட்டுவதில்லை

அங்கு தான் முரண்பாடு வரலாம். வரும். 

இந்தத்தேர்தலில் எந்தக்கட்சிக்கும் வாக்குக்கேட்டதில்லை

ஆனால் ஒரு மாற்றத்தை விரும்பினேன். 

மக்கள் அதை விரும்பவில்லை என்று சொல்லமுடியாது.

1 - இன்றையநிலையில் துயரங்கள் தொடர்வதை விரும்பவில்லை

2 - மாற்று எவரும் கிடைக்கவில்லை (கயேந்திரன் சார்ந்து என்னிடம் எவரும் நல்ல அபிப்பிராயம் தெரிவிக்கவில்லை)

எனவே மாற்றுவழி பற்றி சிந்திப்பவர்கள் காட்டும் பேர்வழிகள் சார்ந்தும் சிந்திக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்பது தெரிகிறது.2010 இற்கும் 2015 இற்கும் பெரிய வித்தியாசத்தைக் காட்ட வில்லை.தேசியக் கட்சிகள் மிகத் துணிவாக தமிழர் பகுதிகளில் தேர்தலில் நின்று வெற்றியீட்டலாம். அவர்கள் தமிழர் வாக்குகளைப் பிரிக்கலாம். ஆனால்தமிழ்க் கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கக் கூடாது தேர்தலில் நிற்கக் கூடாது என்ற மனோ நிலை மாறவேண்டும் . அன்றேல் எதிர்வரும் காலங்களில் தேசியக் கட்சிகள் தமிழர் பிரததேசங்களில் ஆட்சி செலுத்துவதை நோக்கி முன்னேறுவதை தடுக்க முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் வழங்கிய தேர்தல் செய்தி:

1. தமிழ் தேசிய அடையாளத்தில் வந்தால் எங்கள் வாக்கு உங்களுக்கு தான்.

2. தமிழ் தேசிய அடையாளத்தில் வந்தாலும் தேசிய தலைவரின் கொள்கையோடு வந்தால் அவைக்கு தான் எங்கள் இதயத்தில் இடம். விருப்பு வாக்கு உங்களுக்கே அதிகம்.

3. டக்கிளஸ்.. போன்ற ஜெமகாதகர்களுக்கு வாக்குப் போட உள்ள கூட்டத்தை இப்போதைக்கு கட்டுப்படுத்த ஏலாது. அச்சத்தில் உள்ள மக்களை அச்சுறுத்தி வாக்குப் பறிக்கும் தந்திரம் ஈபிடிபி ஆயுதக் கும்பலுக்கு இன்னும் சாத்தியமாக உள்ளது.

4. சைக்கிளில் வந்தாலும்.. உதய சூரியனில் வந்தாலும்.. தமிழ் தேசிய உணர்விருந்தா.. ஒற்றுமையா வாங்க. அப்ப தான் வாக்கு.

5. சைக்கிள் உங்க கொள்கை பிடிச்சிருக்குது.. ஆனால் தனிய வர விருப்பாதைங்க. கொள்கைக்காக வாக்கு வங்கி வளர்ச்சி.. தனிய..  தேசிய தலைமை காட்டிய வழியில் வராமல் வந்ததால்.. பெரிய அளவில் வாக்குப் போட்டு எங்களின் பலத்தை சிதைக்க முடியாது.

6. காட்பெட் ரோட்டு.. கரண்டு.. ரயிலு விட்டதுக்கு நன்றிக் கடனுக்கு.. வாக்குப் போட எங்களிலும் நாலு பேர் இருக்கினம். அவையைப் பற்றியும் கவலை கொளளனும். உரிமைக்கு முன் மக்களின் அடிப்படை வசதிகளைப் பெருக்கவும் அரசியல்வாதிங்க பழகிக் கொண்டால் அந்த வாக்கும் உங்களுக்கே..!

முன்னணியின் தோல்விக்கு இதை விட முக்கியமான காரணங்கள் பல உள்ளன..நெடுக்ஸ்

வாத்தியார், இந்த வாக்கியத்தொடரின் அர்த்தம் என்ன? :unsure:

தாயகத்தில் வாழும் மக்களிடம் இன்றைய நிலையில் விடுதலை வேட்கை இல்லை.

இதை நான் மிகவும் தெளிவான நிலையில் இருந்து தான் எழுதுகின்றேன்.
உண்மையிலே அவர்களும் கூட்டமைப்பில் இருக்கும் பல அங்கத்தவர்கள் கொள்கையாகக்  கொண்ட இணக்க அரசியலிலேயே ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

சுகபோகமான வாழ்க்கையிலேயே நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
மகிந்த தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை மறந்து
அவரின் வடக்கின் வசந்தத்தையே வாயாரப் புகழ்கின்றனர்.

மைத்திரியின் வருகையுடன் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.
சிங்கப்பூரில் பல இனங்கள் சேர்ந்து வாழ்ந்து அந்த நாட்டையே சொர்க்கமாக வைத்திருக்கும்போது ஏன் இலங்கையை அப்படி மாற்ற முடியாது என்ற மன நிலையில் இருக்கின்றார்கள்

அவர்கள் அப்படியான நிலையில் இருப்பதைத் தப்பென்று என்னால் சொல் முடியவில்லை. அதற்கு எனக்கு உரிமையும் இல்லை.அவர்களுடைய  வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்கின்றனர்.

தலைப்பை ஆரம்பித்த வாத்தியார் மன்னிக்க.

கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட செய்தியை நீக்கியபோது தவறுதலாக முழுத்திரியும் நீக்கப்பட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

2010 இல் நான் வந்த முடிவுக்கு நீங்கள் 2015 இல் வந்துள்ளீர்கள்.

போர் முடிந்ததும் ஊரில் கனகாலம் நிண்டதால் இந்த புரிதல் எனக்கு விரைவாய் கைகூடியது.

காலம் தாழ்தியேணும் சரியான இடத்துக்கு வந்துள்ளீர்கள்.

சந்தோசம்.

நான் முன்னரே இங்கு கூறியதைப் போல 1950 களில்  தொடக்கம் 1980 வரை   இரத்த பொட்டிட்டு மக்களின் உணர்ச்சிகளை தமது ஆவேச மேடை பேச்சுகளின்  தூண்டி தமது பதவிகளை பெற்று சுகமாக வாழ்வை அனுபவித்த தமிழரசு கட்சியினர் தற்போதய  போரின் பின்னரான மக்களின் மனவோட்டத்தினை சரியாக கணிப்பிட்டு  சந்தனப்  பொட்டிட்டு வந்து  மீண்டும். வேறு பாணியில் அதே மக்களை ஏமாற்றி தமது பதவிகளை பெற்றுள்ளனர். இருப்பினும் காலங்காலமாக ஒரு இனத்தை ஏய்த்து பதவிகளை பெறும் அவர்களின் கெட்டித்ததனம் பாராட்டப்பட வேண்டியதே. மனம். திறந்து பாராட்டுகிறேன் அவர்களின் திறமையை. 

தமிழ் மக்கள் வழங்கிய தேர்தல் செய்தி:

1. தமிழ் தேசிய அடையாளத்தில் வந்தால் எங்கள் வாக்கு உங்களுக்கு தான்.

2. தமிழ் தேசிய அடையாளத்தில் வந்தாலும் தேசிய தலைவரின் கொள்கையோடு வந்தால் அவைக்கு தான் எங்கள் இதயத்தில் இடம். விருப்பு வாக்கு உங்களுக்கே அதிகம்.

3. டக்கிளஸ்.. போன்ற ஜெமகாதகர்களுக்கு வாக்குப் போட உள்ள கூட்டத்தை இப்போதைக்கு கட்டுப்படுத்த ஏலாது. அச்சத்தில் உள்ள மக்களை அச்சுறுத்தி வாக்குப் பறிக்கும் தந்திரம் ஈபிடிபி ஆயுதக் கும்பலுக்கு இன்னும் சாத்தியமாக உள்ளது.

4. சைக்கிளில் வந்தாலும்.. உதய சூரியனில் வந்தாலும்.. தமிழ் தேசிய உணர்விருந்தா.. ஒற்றுமையா வாங்க. அப்ப தான் வாக்கு.

5. சைக்கிள் உங்க கொள்கை பிடிச்சிருக்குது.. ஆனால் தனிய வர விருப்பாதைங்க. கொள்கைக்காக வாக்கு வங்கி வளர்ச்சி.. தனிய..  தேசிய தலைமை காட்டிய வழியில் வராமல் வந்ததால்.. பெரிய அளவில் வாக்குப் போட்டு எங்களின் பலத்தை சிதைக்க முடியாது.

6. காட்பெட் ரோட்டு.. கரண்டு.. ரயிலு விட்டதுக்கு நன்றிக் கடனுக்கு.. வாக்குப் போட எங்களிலும் நாலு பேர் இருக்கினம். அவையைப் பற்றியும் கவலை கொளளனும். உரிமைக்கு முன் மக்களின் அடிப்படை வசதிகளைப் பெருக்கவும் அரசியல்வாதிங்க பழகிக் கொண்டால் அந்த வாக்கும் உங்களுக்கே..!

இனி கொஞ்ச காலம் இப்படி சப்பை கட்டு காரணங்களோட புலம்பெயர் விண்ணர்களின்ட அறுவை ஆய்வுகள் வரும். தாயக மக்கள் முகத்தில் அறைந்தால் போல் புலம் பெயர் புலிவால்களின் தாளத்திற்கு தங்களால் ஆட முடியாது என்று தெரிவித்த பின்னரும் இந்த கூட்டம் திருந்திற மாதிரி தெரியவில்லை. இந்த கூட்டத்தை தங்களில் கனவுலகத்தில விட்டிட்டு நாங்க எங்கட வேலைய பார்க்க வேண்டியது தான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009 திலையிருந்தே உங்கடை வேலையளை செய்திருக்கலாமே :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.