Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னையர் இட்ட தீ…..

Featured Replies

Sinnadampan3

ஸ்பெஷல் ரிப்போர்ட்: கொழும்பு மிரருக்காக ஜெரா

கடந்த வாரத்தில் ஓரிடம் உலகமயப் பிரபலத்தைப் பெற்றது. வவுனியா வடக்கில் இருக்கின்ற சின்னடம்பன் அது. குடியிருப்புத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு தற்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் வந்திருந்தனர்.

 

இதனால் அந்த இடம் பிரபலமாகியது. அவ்விடம் பற்றியே இந்தக் கட்டுரை பேசப்போகிறது.

அவ்வாறு சம்பந்தர் ஐயா வந்திறங்கிய இடம் காடும் வீடும் சார்ந்த பகுதி. இடையிடையே காடுகளும், வீடுகளும், தோட்டங்களும் அந்த நிலப்பரப்பை நிரப்பியிருக்கின்றன.  உலங்குவானூர்தியில்  பறந்தபடி பார்த்தபோது இந்தப் புவியியல் அமைப்பை அழகாக அவர் பார்த்திருக்கக்கூடும். அயர்வில் சயனித்திருப்பின் அந்த வாய்ப்பும் கிட்டியிருக்காதுதான். ஆயினும் அவர் வானிலிருந்தாவது சின்னடம்பன் குடிகளைத் தரிசித்திருப்பார் என நம்புவோம்.

இப்படியாகவாவது தங்கள் கிராமத்துக்கு மிகப் பிந்திய மீட்பர் வருவதை பேரதிஸ்டமாகவே கிராமத்தவர்கள் கொண்டாடினார்கள். யாரின் குறையைக் கேட்காவிடினும், தங்கள் கதையைக் கேட்கவாவது பெருந்தலைவன் இறங்கி வருவார் எனப் பிள்ளைகளைத் தொலைத்த அன்னையர்கள் வரிசையில் காத்திருந்தார்கள்.

Sinnadampan1

அப்படியாகக் காத்திருந்தவர்களில் ஒருவர்தான் செல்வராசா கவிதா.

ஒருமுறை மட்டும் அவரின் வீட்டுக்கு சென்றால் சரியாக முகவரி நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத ஓரிடத்தில் – அந்தக் கிராமத்தில் அவர் வசிக்கிறார். இரண்டு ஏக்கர்களுக்கு மேற்பட்ட பறட்டை நிலத்தில், சில எலுமிச்சை மரங்களும், சோடையடித்த இரண்டு தென்னைகளும் நிற்கின்றன. மற்றைய இடம் முழுவதும் பற்றை தன்னியல்புக்கு செழித்தும், காய்ந்தும் நிற்கிறது. குச்சொழுங்கைக்கு மிகக் கிட்டிய தூரத்தில் – காணியின் முன்பக்கத்தில் அவரின் குடிசை அமைந்திருக்கிறது. சாதாரண உயரமுடைய ஒருவர் நிமிர்ந்து நிற்க முடியாதளவுக்கான குட்டிக் குடிசை அது. பனையோலையால் நேர்த்தியாக வேயப்பட்டு, மண்ணால் சுவர் அணையிடப்பட்டிருக்கிறது. தகரத்தினால் கதவு. அதற்குள்தான் கவிதா வசிக்கிறார்.

கவிதா, 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் 5 பெண் பிள்ளைகளின் தாய். கணவன் செல்வராசா ஒரு விவசாயி. ஐந்து பிள்ளைகளும் 17 வயதுக்குட்பட்டவர்கள். 2009 இன் மனிதப் பேரவலம் கவிதாவின் குடும்பத்தையும் இடம்விட்டு இடம்மாறச் செய்தது. ஒட்டுசுட்டான், உடையார்கட்டு, இரணைப்பாலை, பொக்கணை, கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் என மாறி மாறி மாறிக்கொண்டிருந்தனர்.

அப்போது வந்த நாளொன்றில்தான் கவிதாவின் மூத்த மகள் காணாமல்போனாள். அயல் பதுங்கு குழிக்குச் சென்ற மகள் சொந்த பகுங்கு குழிக்கு மீளத் திரும்பவேயில்லை. “மூண்டாம் மாசம், மூண்டாம் திகதி, 2009 ஆம் ஆண்டு தான் பிள்ளை காணாமல் போனவள்”. கவிதாவுக்கு ஆணி அறைந்த நினைவாயிருக்க வேண்டும். படார் என்று திகதியைச் சொல்கிறார்.

போர் மழைக்குள்ளும், திக்குத்தெரியாத திசையெல்லாம் மகளைத் தேடிக் களைத்தது குடும்பம். “நான் ஆனந்தபுரத்தில நிக்கிறன். அம்மா அப்பாவ யோசிக்க வேண்டாமெண்டு சொல்லுங்கோ. நான் நல்லாயிருக்கிறன்” –  தேடிக் களைத்து பதுங்கு குழிக்குள் சுருண்ட நாளில் அறிந்தவர் ஒருவர் செய்தி சொன்னார். மகள் உயிரோட இருக்கிறாள் என்ற தெம்பில், மீதிக் காலத்தைக் கடக்கலாயினர்.

கவிதாவின் குடும்பத்துக்கு, இனி இடம்பெயர இடமில்லை என்றொரு நாள் வந்தது. வெள்ளாமுள்ளிவாய்க்காலில் பதுங்கு குழியொன்றில் தஞ்சமடைந்துகொண்டனர்.  13.05.2009 அன்று, காலை 10. 00 மணி. போர் அகோரத்தாண்டவமாடிக்கொண்டிருந்தது.

Sinnadampan2

‘பளிச்’

கவிதா, கணவன், மற்றும் மிரண்டழுத நான்கு பிள்ளைகளையும் அரண்செய்திருந்த பதுங்கு குழியின் தலையிலேயே எறிகணை விழுந்து வெடித்தது. கணவன் செல்வராசா அந்த இடத்திலேயே மரணித்ததை நினைவு கூர்கிறார் கவிதா.

“மிச்ச 2 பிள்ளையளுக்குக் காயம். கடைசி மகள் என்ர இடுப்பில இருந்ததால நானும், அவாவும், மற்ற ஒரு பிள்ளையுமாக 3 பேர் காயப்படாமல் தப்பினம்.

“அங்க ஆஸ்பத்திரியள், மருந்துகள் எதுவுமில்ல. எண்டாலும் ஆஸ்பத்திரி மாதிரி ஒண்டு இயங்கினது. அங்க கொண்டு போனால் துணியால காயத்த கட்டிவிடுவினம். ரத்தம் போறது குறையும். எங்களிட்ட துணியளும் இல்லத்தானே. இரண்டு பிள்ளையளயும் அங்க கொண்டு போனன். ஒரு பிள்ளைக்குத் தலையில பலத்த காயம். 13 ஆம் திகதி பின்னேரமே செத்திட்டா.

“காலையில மனுசன் செத்த, பின்னேரம் பிள்ளை செத்த..

“காயப்பட்டிருந்த மற்ற மகள் இரவிரவா அழுதுகொண்டிருந்தா. காலம அவாவும் செத்திட்டா. என்ர பிள்ளைய அடக்கம் செய்யக்கூட யாருமில்ல. சில பேரோட நானும் பிள்ளையத் தாக்கப் போனன். இடுப்பில கடைசி மகள் இருந்தா. அவாவுக்கு எதுவும் தெரியிற அளவுக்கு விவரம் இல்லை. 4 வயசு.

தாட்டிட்டு, மகள இடுப்பில வச்சிக்கொண்டு பங்கர் பக்கமா ஓடி வந்தன். எங்கேயோ இருந்து வந்த ரவுண்ட்ஸ் என்ர இடுப்பில இருந்த மகளின்ர தலையில பட்டிட்டு. என்ர பிள்ளை என்ரை இடுப்பிலயே செத்து விழுந்தது”.

கவிதாவின் கண்ணீர் அந்தக் கிராமத்தின் வெம்மையைத் தணித்திருக்க வேண்டும். சில மணிநேரங்கள் வரை அவரின் அழுகை நீடித்தது.

காணாமல் போன மகளை விட்டு, கவிதாவும் இன்னொரு மகளும் மட்டுமே வவுனியா நலன்புரி நிலையத்துக்கு வந்தார்கள். காணாமல் போன மகளை வவுனியா தொடக்கம் வெலிக்கடை வரைக்கும் தேடினார் கவிதா. எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போதுதான் பத்திரிகை செய்தியொன்றில், புனர்வாழ்வு பெறும் முன்னாள் பெண் போராளிகள் பற்றிய புகைப்படம் ஒன்று வெளியானது. அந்தப் படத்தில் கவிதாவின் மூத்த மகள் நின்றிருந்தாள். அவசரமாக எடுத்துச் சென்று, ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்தைக் காவல்செய்த பொலிஸாரிடமும், இராணுவத்தினரிடமும் தன் மகளை அடையாளப்படுத்தினார் கவிதா. பொலிஸார் தாம் அந்தப் புனர்வாழ்வு முகாமில் விசாரித்து சொல்வதாகச் சொல்லித் தறப்பாள் குடிலுக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், சீஐடி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, ஐ.சி.ஆர்.சி என அலைந்தார் கவிதா. சில கால இழுத்தடிப்பின் பின்னர் அனைவரும் கைவிரித்தனர்.

அந்தக் கைவிரிப்போடு கவிதாவும், மகளும் சின்னடம்பன் திரும்பினர்.

“யோசிச்சி யோச்சு, அவாவுக்கு மெண்டல் ஆக்கிப்போட்டுது எண்டு ஊர்ச்சனங்கள் கதைக்கத் தொடங்கீற்று. அதால பிள்ளைய அவரின்ர ஆக்கள் கூட்டிக்கொண்டு போயிற்றினம். என்னோட அண்ட விடுறதில்ல. இப்ப தனியத்தான் இருக்கிறன்,” என்றுகொழும்பு மிரரிடம் சொல்லி முடித்துக் கூரை, வானம் அதற்கும் மேல் என்னென்னவெல்லாம் இருக்கிறதோ, அதையெல்லாம் பார்க்கிறார் கவிதா. அந்தவெளியில் அவருக்குப் பிடிமானமாக எதுவுமில்லை. துயரக்காலங்களின் வடு அவரின் முழு உடலையும் வியாபித்திருக்கிறது.

“கிட்டடியில பெரிய சண்ட. அவரின்ர சொந்தக் காரர் வந்து என்னைய றோட்டில போட்டு அடிச்சிப் போட்டின. பாலத்துக்க தள்ளவிழுத்தி அடிச்சிற்றினம். வீட்டையும் எரிச்சிப் போட்டினம். பாருங்கோ, என்ர பழைய வீட்ட”.

ஒரு மரத்தின் கீழ் சாம்பல் மேடாய் மிஞ்சிக்கிடக்கிறது கவிதாவின் வீடு.

Sinnadampan4

“வீட்டுத்திட்டம், அரச உதவிகள் எதுவும் கிடைக்கேல்ல. போய் கதைச்சா இப்பா வா அப்ப வா எண்டுவினம். நான் தனியாள் எண்டு வீட்டுத்திட்டம் இல்லையெண்டுட்டினம். இந்த ஒரு லட்ச ரூபா வீடு தந்திருக்கினம். இந்த வெயிலுக்கு அதுக்குள்ள இரவிலயும் இருக்கேலாது, பகலிலயும் இருக்கேலாது. அனல் கொதிக்கும்”.

இதுதான் சின்னடம்பன் வருகை தந்திருந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தனை சந்தித்துப் பேச காத்திருந்த கவிதாவின் வாழ்க்கை.

இதில் ஒரு துண்டுக் கதையான தன் மகள் காணாமல் போனமை பற்றியே சம்பந்தனுக்கு முறையிட அந்தக் கூட்டத்துக்குள் கவிதா காத்து நின்றார்.

கூட்டம் முடிந்தது. இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்களும் மேடையைவிட்டு இறங்கி வந்தார். எல்லோரும் அவரின் நடையை அழகு பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

பிள்ளைகளைத் தொலைத்த தாய்மார் சிலர் சம்பந்தன் ஐயாவை நோக்கி ஓடினர். அவரின் கையைப் பிடிக்க முயற்சித்தபடி, ‘ஐயா..ஐயா..எங்கட பிள்ளையள்…’, ‘ஒரு முடிவு’

“இப்ப ஏன் இஞ்ச வந்தனீங்கள். இப்ப யாரும் இது பற்றிக் கதைக்க வேணாம். ஏன்னை விடுங்கோ, என்னை விடுங்கோ” எனச் சொல்லிக்கொண்டே திடீர் வேகமெடுத்த சம்பந்தன் ஐயா அந்த இடத்தை விட்டே ஓடிப் பறந்தே விட்டார்.

ஏமாற்றம், கவலை, விரக்தி – பேரவமானம் – பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்களுக்கு வரிசையாக மிஞ்சியது.

ஆனாலும் அந்தப் பொழுதில் அன்னையர் இட்ட தீ எந்தப் புரத்தையும் இன்னும் எரிக்கவில்லை.

http://www.colombomirror.com/tamil/?p=5702

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைச் சொல்ல , எதுவுமே சொல்லேலமல் கிடக்கு...!

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இப்ப ஏன் இஞ்ச வந்தனீங்கள். இப்ப யாரும் இது பற்றிக் கதைக்க வேணாம். ஏன்னை விடுங்கோ, என்னை விடுங்கோ” எனச் சொல்லிக்கொண்டே திடீர் வேகமெடுத்த சம்பந்தன் ஐயா அந்த இடத்தை விட்டே ஓடிப் பறந்தே விட்டார்.

இப்ப இது தான் வெல்லும் அரசியல்...

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய்.......tw_anguished:

முதல் பிள்ளையை புலிகள் பறித்தெடுத்தனர்
 அடுத்த மூன்று பிள்ளைகளையும் சிங்களம் பறித்தெடுத்தது
ஐந்தாவதை உறவினர் பறித்துக் கொண்டனர்
 மிஞ்சி இருக்கும் துளி நம்பிக்கையை
 பிந்திய நாட்களில் உதித்த மீட்பர் சம்பந்தர் உதறித்தள்ளுகின்றார்

எதிரியும் எதிரிக்கு எதிராக போராடியவர்களும் போராடி தோற்றபின் வந்த மீட்பர்களும் என்று அனைவருமே ஏறிச் சவாரி செய்யும் வரம் பெற்ற இனம் நாம்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா சம்பந்தர் ஐயாவுக்கு கரைச்சல் கொடுக்கிறது??

  • கருத்துக்கள உறவுகள்

எனது இன்றைய பொழுது...இந்தப் பதிவை மனதில் காவிய படியே அலைந்து கொண்டிருக்கும்!:rolleyes:

சிரியாவின் அகதிகளுக்காக 'உலகமே' கண்ணீர் சிந்துகின்றது!

ஏறத்தாழ இதே மாதிரியான நிலையிலேயே...எம்மினமும் இருந்தது...!

உலகத்து அல்சேசன் நாயிலிருந்து......பொமரேனியன் நாய் வரை... ஒருவருமே எம்மைத் திரும்பிப் பார்க்கவில்லை!

விடிஞ்சால்.. பொழுது பட்டால்... 'ஸ்ரொப் த போர்ட்' (Stop the Boat)  கோசத்துடன் பல்லுத் துலக்கும் எமது பிரதம மந்திரி கூடப்.. பன்னிரண்டாயிரம் பேரை எடுக்கப் போகின்றாராம்!

என்ன காரணம்... எமது நிறமா? அல்லது எமது அருகிலிருக்கும் தேசத்தின் தலையீடா? என்று ஒன்றுமே புரியவில்லை!

இருபத்தியோராவது நூற்றாண்டில் கூடத் தமிழன் சூத்திரன் தானா?

வேறு என்ன காரணம் இருக்க முடியும்? யாராவது உண்மையான காரணம் தெரிந்தால்.. இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!

எங்களுக்குக் கூறப்பட்டது போலச் சிரியாவின் பிரச்சனை 'அதன் உள்நாட்டுப் பிரச்சனை' இல்லையா?:unsure:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

எனது இன்றைய பொழுது...இந்தப் பதிவை மனதில் காவிய படியே அலைந்து கொண்டிருக்கும்!:rolleyes:

சிரியாவின் அகதிகளுக்காக 'உலகமே' கண்ணீர் சிந்துகின்றது!

ஏறத்தாழ இதே மாதிரியான நிலையிலேயே...எம்மினமும் இருந்தது...!

உலகத்து அல்சேசன் நாயிலிருந்து......பொமரேனியன் நாய் வரை... ஒருவருமே எம்மைத் திரும்பிப் பார்க்கவில்லை!

விடிஞ்சால்.. பொழுது பட்டால்... 'ஸ்ரொப் த போர்ட்' (Stop the Boat)  கோசத்துடன் பல்லுத் துலக்கும் எமது பிரதம மந்திரி கூடப்.. பன்னிரண்டாயிரம் பேரை எடுக்கப் போகின்றாராம்!

என்ன காரணம்... எமது நிறமா? அல்லது எமது அருகிலிருக்கும் தேசத்தின் தலையீடா? என்று ஒன்றுமே புரியவில்லை!

இருபத்தியோராவது நூற்றாண்டில் கூடத் தமிழன் சூத்திரன் தானா?

வேறு என்ன காரணம் இருக்க முடியும்? யாராவது உண்மையான காரணம் தெரிந்தால்.. இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!

எங்களுக்குக் கூறப்பட்டது போலச் சிரியாவின் பிரச்சனை 'அதன் உள்நாட்டுப் பிரச்சனை' இல்லையா?:unsure:

உலக ஓட்டம் தமிழனுக்கு புரியவில்லை 
தம்பட்டம் அடிப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியாது ........

நான் முட்டாள் என்ற எண்ணம் வந்தால்தான் 
அறிவை தேடும் எண்ணம் வரும் 

இன்று சிரியா நிலைமையையும் மெயின் மீடியா ஸ்ட்ரீம் 
பூசணிக்காய் மாதிரி புதைத்து கொண்டுதான் இருந்தது 
சோசல் மீடியா தலைவிரித்து ஆட தொடங்கிய பின்தான் 
இப்போ பின்னால் இழுபடுகிறது.

தமிழர்கள் தமிழில் எழுதி 
தமிழுக்குள் பகிர்ந்து கொள்கிறோம் 
அவர்களுக்கு புதைப்பது இலகுவாகிறது.

நான்தான் அறிவாளி 
நான்தான் உயர்சாதி 
நான்தான் காசு காரன் 
என்று படம் காட்டுவதிலேயே தமிழன் 
தீவிரம் காட்டுகிறான் 

யாரவாது இனத்திற்கு என்று வெளிக்கிட்டால் ...
எல்லா பழியையும் அவனில் சுமத்திவிட்டு 
சும்மா இருக்க வசதி ஆகவும் இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

எனது இன்றைய பொழுது...இந்தப் பதிவை மனதில் காவிய படியே அலைந்து கொண்டிருக்கும்!:rolleyes:

சிரியாவின் அகதிகளுக்காக 'உலகமே' கண்ணீர் சிந்துகின்றது!

ஏறத்தாழ இதே மாதிரியான நிலையிலேயே...எம்மினமும் இருந்தது...!

உலகத்து அல்சேசன் நாயிலிருந்து......பொமரேனியன் நாய் வரை... ஒருவருமே எம்மைத் திரும்பிப் பார்க்கவில்லை!

விடிஞ்சால்.. பொழுது பட்டால்... 'ஸ்ரொப் த போர்ட்' (Stop the Boat)  கோசத்துடன் பல்லுத் துலக்கும் எமது பிரதம மந்திரி கூடப்.. பன்னிரண்டாயிரம் பேரை எடுக்கப் போகின்றாராம்!

என்ன காரணம்... எமது நிறமா? அல்லது எமது அருகிலிருக்கும் தேசத்தின் தலையீடா? என்று ஒன்றுமே புரியவில்லை!

இருபத்தியோராவது நூற்றாண்டில் கூடத் தமிழன் சூத்திரன் தானா?

வேறு என்ன காரணம் இருக்க முடியும்? யாராவது உண்மையான காரணம் தெரிந்தால்.. இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!

எங்களுக்குக் கூறப்பட்டது போலச் சிரியாவின் பிரச்சனை 'அதன் உள்நாட்டுப் பிரச்சனை' இல்லையா?:unsure:

நீங்கள் வெள்ளிக்கிழமை எங்கன்ட பிரதமர் என்று எழுதியிருக்கிறீயள் திங்கள் கிழமை அவர் முன்னாள் பிரதமர் என்ற தகுதிக்கு போய்விட்டார்,கட்சி ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் மற்றவர் பிரதமராகிவிட்டார்.......நாங்கள் கட்சியில் தலிவரை செய்தால் அவர் தான் ஆயுள்கால தலிவர்.....சமஸ்டி என்பார்,ஈழம் என்பார்,ஒன்றுபட்ட இலங்கை என்பார்,சிங்ககொடி எனபார்.......ஆனால் மீண்டும் மீண்டும் அவர்தான் கட்சிதலைவர்.......

உலகத்து அல்சேசன் நாயிலிருந்து......பொமரேனியன் நாய் வரை... ஒருவருமே எம்மைத் திரும்பிப் பார்க்கவில்லை!


நீங்கள் வேற, ஊர் நாய் ,தெருநாய், பார்க்கவில்லை   அட்லீஸ் பக்கத்து வீட்டு நாய் கூட பார்க்கவில்லை

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.