Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்க முடியாது! - 55 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

இந்தக் கடிதத்தின் பிரதியொன்றை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். எதிர் கட்சியில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே இருப்பதால், தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வேல்கமவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாக உதய கம்மன்பில கூறினார்.

தற்போது, நாடாளுமன்ற சபாநாயகர் பதவி, பிரதமர் பதவி, ஆளும் கட்சியின் அமைப்பாளர் பதவி, எதிர் கட்சியின் அமைப்பாளர் பதவி ஆகிய சகல பதவிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உதவிய நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளதாக உதய கம்மன்பில குற்றம்சாட்டினார்.

எதிர் கட்சித் தலைவர் பதவிக்கு குமார வெல்கம நியமிக்கப் படவேண்டுமென்று தாங்கள் ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை அளித்ததாகவும் இருந்தபோதும், எதிர் கட்சித் தலைவர் பதவிக்கு தாங்கள் யார் பெயரையும் தெரிவிக்கப்போவதில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் விஷ்வா வர்ணபால நாடாளுமன்றத்திற்கு தெரிவித்ததாகவும் கம்மன்பில கூறினார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனதான் இந்த தவறைச் செய்ததாக உதய கம்மன்பில குற்றம் சாட்டினார்.

தங்களுடைய கோரிக்கை, தமிழர் ஒருவர் எதிர் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிரானதல்ல என்று கூறிய உதய கம்மன்பில அரசியல்யாப்பின் விதிமுறைகளை அமல்படுத்துமாறு கோரியே தாங்கள் இந்த வேண்டுகோளை வைப்பதாகக் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=140249&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் யார் ஏற்றுகொள்கிறான் .......?

ஜெனிவா கூட்ட தொடர் முடிய 
எல்லாம் முடிந்துவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

தங்களுடைய கோரிக்கை, தமிழர் ஒருவர் எதிர் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிரானதல்ல என்று கூறிய உதய கம்மன்பில அரசியல்யாப்பின் விதிமுறைகளை அமல்படுத்துமாறு கோரியே தாங்கள் இந்த வேண்டுகோளை வைப்பதாகக் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=140249&category=TamilNews&language=tamil

அப்ப அதுதான் சரியான காரணமே ....

  • கருத்துக்கள உறவுகள்

 சோழியன் குடுமி சும்மா ஆடாது. சர்வதேசத்துக்கு படம் காட்டி, காரியம்  முடிய பதவி  நாடகம் தானாகவே கலையும். இருந்தாலும் பதவியில் இருக்கு மட்டும்,  சிங்கள மக்களுடைய விருப்புகளுக்கு எதிராக எங்கட மாத்தையா எந்த முடிவும் எடுக்க மாட்டார் என்பது மட்டும் தெளிவு.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், எதிர்க் கட்சித் தலைவராக மட்டுமல்ல, 
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும்..... விரைவில், 
"குப்பை" வாளிக்குள் எறியப் பட வேண்டிய ஆள். sSad_100-124

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் யார் ஏற்றுகொள்கிறான் .......?

ஜெனிவா கூட்ட தொடர் முடிய 
எல்லாம் முடிந்துவிடும். 

yes

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியம் பேசிய ,  கஜே குழுவினர், புலி  வால்கள் என்று நக்கல் அடித்தவர்களும். ஒதுங்கி விட்டார்கள்.
நாசமறுந்த தமிழ் இனத்துக்கு மட்டும், பல ***************... கழுத்தறுக்க  வருகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

12002195_1129691393726159_29540471012306

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.