Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் சம்பந்தனின் கடிதத்துடன் சுமந்திரன்! - ஜெனிவாவில் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் முக்கிய கடிதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட வல்லுநர் குழுவொன்று ஜெனிவா சென்றுள்ளது. ஐ.நா  மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே  கூட்டமைப்பின் சட்ட வல்லுனர்கள் குழு நேற்று முன்தினம் ஜெனிவா விரைந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் முக்கிய கடிதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட வல்லுநர் குழுவொன்று ஜெனிவா சென்றுள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே கூட்டமைப்பின் சட்ட வல்லுனர்கள் குழு நேற்று முன்தினம் ஜெனிவா விரைந்துள்ளது.

   

இக்குழுவினர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் உயர் மட்ட இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவுள்ளனர்.

இது தொடர்பில் ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், தமிழர் நீதிக்கான கூட்டமைப்பின் குரல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமைந்துள்ள ஜெனிவாவில் மட்டுமல்ல உலக நாடுகள் எங்கும் ஓங்கி ஒலிக்கவுள்ளது. ஜெனிவா அமர்வில் வெளியிடப்படவுள்ள ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்படவுள்ளது.

ஐ.நா. விசாரணை அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்திடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை எதிர்வரும் 16ம் திகதி ஜெனிவாக் கூட்டத் தொடரில் உத்தியோகபுர்வமாக வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், ஐ.நா. விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தவேண்டும். அவ்வாறு அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டினை கைவிடப்போவதில்லை என்றார்.

தேவேளை ஜெனீவா விரைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கடிதமொன்றையும் பெற்றுக்கொண்டு சென்றதாக தெரிய வருகின்றது. இக்கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர் எனபதை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=140479&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இது.... என்ன, "உடையார்... பொல்லை" அனுப்பிய மாதிரி,
ஜெனிவாவுக்கு... சம்பந்தனின் கடிதத்தை, அவரின் செம்பு தூக்குபவர்.... காவிக் கொண்டு வந்துள்ளார்.
நேரில் போகும் இந்த விடயத்தை விட, சம்பந்தனுக்கு... ஊரில் அப்படி என்ன, முக்கியமான வேலை இருக்கு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது.... என்ன, "உடையார்... பொல்லை" அனுப்பிய மாதிரி,
ஜெனிவாவுக்கு... சம்பந்தனின் கடிதத்தை, அவரின் செம்பு தூக்குபவர்.... காவிக் கொண்டு வந்துள்ளார்.
நேரில் போகும் இந்த விடயத்தை விட, சம்பந்தனுக்கு... ஊரில் அப்படி என்ன, முக்கியமான வேலை இருக்கு.

என்ன இப்படி கேட்டுபோட்டியல் ஜனநாயக சோசலிச குடியரசின் எதிர்கட்சி தலைவர் ஐயா தானே எவ்வளவு வேலை இருக்கும்:rolleyes:

இரண்டுபேரும் ஜெனிவா சென்றுவிட இங்கை வேற கதையளை கட்டிவிடுறாங்களாம். அதால ஐயா இந்தமுறை சும்மை அனுப்பிவிட்டிருக்குறார். தான் இங்கை சமாளிக்குறேன் நீ போய் அங்கை சமாளி என்று சொல்லியிருக்குறார். 

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா இது??சர்வதேச விசாரணை நடந்து முடிந்துவிட்டது.அறிக்கை செப்ரம்பரில் வரும் என்று சுமத்திரன் சொன்னார்.சம்பந்தனும் இதையே சொன்னார்.இப்ப சர்வதேச விசாரணை வேண்டும் என்று சம்பந்தர் கடிதம் எழுதி அதை சுமத்திரன் கொண்டு போகிறாராம்.லோயர்மாரே முரண்பாடாக கதைத்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்?இதுக்குள்ள மாவை சர்வதேச விசாரணை தேவையில்லை சர்வதேச நீதிமன்றம் தேவை என்று தமிழ்மக்களைக் குழப்பினார். முதலில் ஜெனிவா போகமாட்டோம் என்று சொன்னார்கள் இப்ப திடீரென்று போவதன்காரணம் என்ன?இந்தியா இருக்கிறதையும் இல்லாமல் ஆக்குவதற்கு அனுப்பியிருக்கா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது.... என்ன, "உடையார்... பொல்லை" அனுப்பிய மாதிரி,
ஜெனிவாவுக்கு... சம்பந்தனின் கடிதத்தை, அவரின் செம்பு தூக்குபவர்.... காவிக் கொண்டு வந்துள்ளார்.
நேரில் போகும் இந்த விடயத்தை விட, சம்பந்தனுக்கு... ஊரில் அப்படி என்ன, முக்கியமான வேலை இருக்கு.

 

 தமிழ்ச்சனம் மயங்கிவிழுற அளவுக்கு வெற்றியோடதான் சுமந்திரம் திரும்புவார் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இது ராசதந்திரம் ....
நமக்கெல்லாம் புரியாது .....புரிஞ்சவங்க கொள்ளளவு கூடினவங்க வந்து விளக்குவாங்க
அப்புறம் தெளிவா விளங்கிடும் 

Edited by அக்னியஷ்த்ரா

யாராவது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சும்மின் பேட்டியை தமிழாக்கம் செய்வீர்களா?

மும்முனையாக ... சிங்களலங்கா, அமெரிக்கா, ஹிந்தியா ... என தொடுத்திருக்கிறாராம்! அத்தோடு எதிர்கட்சி தலைவரின் கையெழுத்தை உவங்கள் பார்த்ததும், கதி கலங்கிப் போனாங்களாம்?? என்ன... கடித்ததில் என்ன இருக்கெண்டு ...???

 சம்மல்லோ எழுதினது! கொண்டு போனது சும்மல்லோ!! விடிவுதான் தமிழினத்துக்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சும்மின் பேட்டியை தமிழாக்கம் செய்வீர்களா?

மும்முனையாக ... சிங்களலங்கா, அமெரிக்கா, ஹிந்தியா ... என தொடுத்திருக்கிறாராம்! அத்தோடு எதிர்கட்சி தலைவரின் கையெழுத்தை உவங்கள் பார்த்ததும், கதி கலங்கிப் போனாங்களாம்?? என்ன... கடித்ததில் என்ன இருக்கெண்டு ...???

 சம்மல்லோ எழுதினது! கொண்டு போனது சும்மல்லோ!! விடிவுதான் தமிழினத்துக்கு!!!

Fire Zone 
ஏனப்பா ஓணானை எடுத்து திரும்ப வேட்டிக்குள் விடுறீங்கோ 
ஒரு தடவை இந்த வாத்திகளிடம் இங்கிலீஷ் படித்தது காணாதா 
ஏற்கனவே அர்த்தம் கேட்டு ...எங்கயோ இருந்த தென்னாபிரிக்கா கூட இதுக்குள்ள வந்து போயிட்டு 
தெரிஞ்ச இங்கிலிஷை மறக்கபோரியல்....வாத்திகள் எடுக்கப்போற வகுப்பில் 

அண்ணை .. உந்த வெள்ளை வேட்டிக்களும், கறுத்த கோட்டுக்களும் எப்பவும் உண்மைகளை தானாம் கதைக்கிறவை? நாங்களும் 60 வருசத்துக்கு மேலை பாக்கேலையோ?

.. முக்கியமாக தமிழில் எங்களுக்கு சொல்லுகிறதை தானாம் அவையள் அப்படியே இங்கிலீசு, சிங்களத்திலையும் உந்த பேப்பர், ரீவி, ரேடியோகாரர்கள் கேட்டாலும் சொல்லிறவையளாம் ??

இப்பவும் .. உந்த கறுத்த கோட்டும், இடைக்கிடை யாழ்பாணத்திலை மட்டும் வெள்ளையும் கட்டுற (அங்கு வெட்கைதானே ... அவியப்பாக்கும்)  உவர் .. சர்வதேச விசாரணை தான் அவசியம், அது, இது எண்டு கனக்க சொன்னவராம் ... தமிழில்! ... அதைத்தான் உந்தப்பாசையிலும் சொல்லுகிறாரோ? கட்டாயம் அதைத்தான் சொல்லுவார்? ... சரிதானே சொல்வது?

உதுக்கு மேலே ... உதுலை சொல்லுறதை .. உண்மையை ... தானே, உங்கு ஜெனீவாவிலும் சொல்லப்போறார்????

 

அண்ணோய் .... அங்காலை ஆரோ, நம்பின சனத்துக்காம் ... மொட்டை அடித்து வீபூதி சந்தனம் தடவி தலையிலை பூச்சுற்றுகிறாராம் ... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலோனுக்கு இப்ப போட்டுவந்த சனமே அங்கை ஒரு பிரச்சனையும் இல்லை எண்டு அடிச்சு சொல்லீனம்....அங்கை போரோ சண்டையோ நடந்தமாதிரி ஒரு இதுவுமே இல்லையாம். மோட்டச்சைக்கிளும் கொஞ்ச காசுமிருந்தால் வாழ்க்கை ஆகா ஓகோ எண்டு போகுதாம்.

இப்ப என்ன கோதாரிக்கு உவர்  கோட்டு சூட்டோடை சுவீசுக்கு வந்தவர்?

அதுவும் அவங்கள் அந்த கோஷ்டியாலை வந்த அழிவுக்கும் இவருக்கும் என்ன  சம்பந்தம்????

 

இவையள் ஜெனிவாவிலை ஆருக்கு நீதி கேக்கினம்? கேட்டு என்ன செய்யப்போயினம்???? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கூட்டணி 'நடு வழியால' நடக்க முடிவு செய்திருக்குப் போல...!

என்ன செய்யிறது..?

காசும் வேணும்... கௌரவமும் வேணும்...!tw_cookie:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.