Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து வயதுச் சிறுமியின் கொலைக் குற்றவாளியை கைது செய்து மரணதண்டனை வழங்க வேண்டும் :ஹம்பகாவில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால்  கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் கொலைக்கான குற்றவாளியை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஹம்பகாவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சிறுமி உறங்கிய கட்டில் மெத்தையில் காணப்படும் கால் தடங்கள் தொடர்பாக பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடன் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                                       

                                       

இச் சிறுமி, பாலகி வீட்டில் பெற்றோருடன் உறங்கும் போது யன்னல் வழியாக கடத்தபப்ட்டு பாலியல் வன்புணர்வுகுட்படுத்தப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி ஏன் எம்மால் அக்கறை கொள்ள முடியாமல் இருக்கின்றது?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில் தமிழ் இனவாதமே நிழலி. 

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதம் வராமல் என்ன செய்யும் நிழலி...! 

கையோட  குற்றவாளிகளைக் பிடித்துக் கொண்டு போயும் இன்னும் ஒரு முடிவையும் காணேல்ல.

ஐ.நா விசாரணை மாதிரி வெடக் நே  யா கிடக்கும் போல....!

இது அப்படி வராது என்டு நினைக்கின்றேன்...!

எதுவாயினும் இப்படியான மனித மிருகங்கள் தண்டிக்கப் பட வேண்டும்...!!

  • கருத்துக்கள உறவுகள்

இச் சிறுமி, பாலகி வீட்டில் பெற்றோருடன் உறங்கும் போது யன்னல் வழியாக கடத்தபப்ட்டு பாலியல் வன்புணர்வுகுட்படுத்தப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி ஏன் எம்மால் அக்கறை கொள்ள முடியாமல் இருக்கின்றது?

 

 

எங்களால் என்னதான் செய்ய முடியும் நிழலி?அரசியல்வாதிகளை போன்று வன்மையாக கண்டிக்கிறோம் என் தட்டச்சு மட்டும் செய்ய முடியும்......

இச் சிறுமி, பாலகி வீட்டில் பெற்றோருடன் உறங்கும் போது யன்னல் வழியாக கடத்தபப்ட்டு பாலியல் வன்புணர்வுகுட்படுத்தப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி ஏன் எம்மால் அக்கறை கொள்ள முடியாமல் இருக்கின்றது?

 

 

பார்த்ததும் மிக்கவருத்தத்தை தந்தது.....உண்மையிலேயே மிகக்கொடூரமான நிகழ்வு.

சிலவேளைகளில் மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்ப செய்கிறார்களோ என்ற விதத்திலும் பார்க்கலாம்.

எது எப்படியோ சிங்களவன் எதிர்கட்சி பதவியே தாங்கள் தான் குடுத்ததாக ஐனாவிலே தம்பட்டம் அடிக்குறான், இதை பார்த்துக்கொள்ள மாட்டானா என்ற ரீதியில் தமிழர்கள் இதைக்கண்டுகொள்ளவில்லை.

அண்மைக்காலமாக தெற்காசிய நாடுகளில் இப்படியனா சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்து வருகின்றது. இது ஒருவகை மனவியாதியென வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தச்சிறுமிக்கும் மகிந்த நுவெரெலியாவில் நரபலி கொடுத்த எங்கள் தங்கையர்களுக்கும் நீதி கிடைக்க போராடுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்

இச் சிறுமி, பாலகி வீட்டில் பெற்றோருடன் உறங்கும் போது யன்னல் வழியாக கடத்தபப்ட்டு பாலியல் வன்புணர்வுகுட்படுத்தப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி ஏன் எம்மால் அக்கறை கொள்ள முடியாமல் இருக்கின்றது?

 

 

நிழலி,

சிறுமி மீது அனுதாபம் உண்டானாலும், இதன் மூலகாரணம் என்ன?

தமிழர் மீதான இதே போன்ற, இராணுவத்தில் சேர்ந்த தெம்பிளி வெட்டுக் கோஸ்டிகளின் தாக்குதல்களை கண்டும் காணதது போல் இருந்த, சிங்கள அரசியல் வாதிகள் விதைத்த impunity கலாச்சாரம் இப்போ, திருப்பி அடிக்கிறது. 

படையினரின் அத்து மீறலுக்கான, இந்த impunity கலாச்சாரத்தை சட்டமாக்க, உதய கமனபில்ல தனிநபர் சட்ட மூலம் கொண்டு வரப் போகிறாராம்.

தீக்கோலை எடுத்து தலை சொறிய அவர்கள் தயாரெனில், பிறகேன் கவலைப்படுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

இச் சிறுமி, பாலகி வீட்டில் பெற்றோருடன் உறங்கும் போது யன்னல் வழியாக கடத்தபப்ட்டு பாலியல் வன்புணர்வுகுட்படுத்தப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி ஏன் எம்மால் அக்கறை கொள்ள முடியாமல் இருக்கின்றது?

இந்த திரி இணைத்ததும்  பார்த்தேன்

எழுத முயன்றேன்

முடியவில்லை  நிழலி

காரணம் தட்டிய கதவுகள் திறக்கப்படாமையால் இருக்கலாம்

தட்டவேண்டிய கதவுகள் சிங்களத்தினது என்பதாலும் இருக்கலாம்

அப்போ வித்தியாவுக்கு எதற்காகத்தட்டினீர்கள் என்றால்

வேறு வழி.......????:(:(

  • கருத்துக்கள உறவுகள்

ஆமி பாலியல் என்னும் கருவியை தமிழருக்கு எதிராக ஆயுதமாக எடுத்தது...தமிழருக்கு எதிரான யுத்தம் முடிவடைந்தும் கூட அந்தப் பாலியலின் தாக்கத்தில் இருந்து அவர்களால் விடுபட முடியாமல் உள்ளது.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்தல்,பெற்றோரும்,உறவினரும் தமது பிள்ளைகள் பிழையான வழியில் போனாலும் அல்லது பிழை செய்தாலும் அவர்களை ஆதரித்தல்,இப்படியான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க ஒருவரும் முன் வராமை,இணைய வசதிகள் அதிகம் என்பதால் அதை துஸ்பிரயோகம் செய்தல்,அதிகரித்து வரும் போதைவஸ்து,மதுப் பாவனை எல்லாவற்றுக்கும் மேலாக வெளி நாட்டுப் பணம் போன்றன இப்படியான குற்றச் செயல்களை செய்ய தூண்டுகிறது.

அங்கு சின்ன வயதிலேயே பாலியல் கல்வி ஆரம்பிக்கப் பட வேண்டும்,குழந்தைகளுக்கு பெரும்பாலும் அவர்களுக்குத் தெரிந்த அவர்களது நெருங்கின உறவுக்காரர்களாலேயோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களாலேயோ தான் இப்படியான சம்பவங்கள் அதிகம் நடக்கின்றது.கெட்ட தொடுகை பற்றி சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும்...எங்கட சமூகத்தில் தாய்மார்கள் பெரும்பாலும் குழந்தைகளோடு செக்ஸ் பற்றி கதைக்க விரும்புவதில்லை.குழந்தைகளும் பயத்தால் இது பற்றி பெற்றோரிடம் சொல்வதில்லை

சேயா சதெவ்மியின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று பொலிஸாரிடம் ஒப்படைப்பு

 Sep 18, 2015  Sujithra Chandrasekara  LocalNews TickerTop Slider  0


 
கொட்டதெனியாவயில், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சேயா சதெவ்மியின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று (18) பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜின்டெக் நிறுவனத்தினால் மரபணு பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் 3 விசேட பொலிஸ் குழுக்கள், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

மரபணு பரிசோதனை அறிக்கை கிடைத்தபின்னர் சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்யும் நடவடிக்கை இலகுவாகும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமி சேயா சதெவ்மியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் இதுவரை கைது செய்ய முடியாமல் போயுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

http://newsfirst.lk/tamil/2015/09/சேயா-சதெவ்மியின்-மரபணு-ப/

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.