Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாதன்

Featured Replies

கட்டாக்காலி காலம் ஆரம்பித்திருந்தால் வயலில் கால்நடைகள் நின்றன. மதகில் கனகாலம் கடந்து நாதன் உட்கார்ந்திருந்தான். நாதனிற்கு இளமைக்காலம் இலகுவாய் இருக்கவில்லை. பள்ளி புரியவில்லை. பெறுபேறுகள் கடிவாளம் இடவுமில்லை பாதைகாட்டவுமில்லை. 

பதின்மத்தில் நாதன் இயக்கத்தில் சேர்ந்தான். சிலகாலம் இயக்கத்தில் இருந்தான். இயக்கத்திலும் நாதன் உயரவில்லை. துண்டு குடுத்து முறைப்படி விலகி வெளிநாடு சென்றான். முப்பது வருடம் கடந்து இன்று மதகில் இருக்கிறான். 

திட்டமிட்ட செயற்பாடு எதுவும் எப்போதும் நாதனிடம் இருந்திராத போதும், எதேச்சையாய் ஒருமித்த காரணிகள் அனுகூலங்களை நாதனிற்கு உருவாக்கின. பணம் பெருக்குவது நாதனிற்கு மிக இலகுவாகத் தானாக நடந்தது. அது அதுவாகப் பெருகியது. 

ஊரில் நாதனின் வீடு பெருத்த காணிக்குள் சிறுசாய் இருந்தது. நாதனின் தாத்தாவின் இருபதாவது வயதில் நாதனின் தந்தை பிறந்தார். அவரிற்கு இருபது ஆனபோது நாதன் பிறந்தான். இன்று தொண்ணூறு வயதில் தாத்தா இன்னமும் அந்தப் பூர்வீக வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தந்தை போரில் ஒரு இலக்கமாகிப்போனார்.

தாத்தா, காலத்தின் அச்சில் நேரக்குடுவையாய் மாறாதிருந்தார். நாதன் காலத்தால் எத்தி எறியப்பட்டு அதன்போக்கில் மாறியிருந்தான். தாத்தாவும் நாதனைப் போல் அதிகம் பேசுவதில்லை. பட்டிமன்றம் ஏதும் இவர்களிடையே நிகழின் அதை நாம் கேட்பது சாத்தியமில்லை.

மதகில் இருந்த நாதன் காய்ந்த கிடைச்சிக் கட்டை ஒன்றை வைத்து மண்ணில் எதையோ வரைந்து கொண்டிருந்தான். நாதனிற்கு ஒவியம் தானாக வரும். ஆனால் ஒரு படந் தன்னும் கன்வசில் அவன் வரைந்ததுமில்லைத் தான் வரைந்ததை எவரிற்கேனும் தானாகக் காட்டியதுமில்லை. கையில் வரைவதற்கு ஏற்றதாய் ஏதேனும் அகப்படின் அந்தத் தருணத்தின் அவனது மனவெளி அப்படியே அச்சொட்டாய்ப் படமாகும்.

தாத்தா காலையில் கௌப்பி சுண்டியிருந்தார். நாதனும் அதையே உண்டிருந்தான். மண் சட்டியில் விறகடுப்பில் தாத்தா வழர்க்கும் பசுவின் பால் காய்ந்து கொண்டிருந்தது. தேயிலைச் சாயமும் சீனியும் சேர்த்துத் தாத்தா கொடுத்தபோது நாதன் அதையும் பருகியிருந்தான். காலையின் சத்தங்கள், பால், மண்சட்டி, கௌப்பிச் சுண்டல் இவையெல்லாம் முப்பது வருடங்களின் முன்னர் இருந்தது போன்றே எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்தன. அப்பா, அம்மா, பாட்டி தவறியிருந்தார்கள். நாதனோடு கூடப்பிறந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்தார்கள். மற்றம்படி, முப்பது வருடங்கள் கடந்ததை நாதனால் உணரமுடியாதபடி தாத்தா வீட்டின் காலை அப்படியே இருந்தது.

மதகில் இருந்து விடுக்கென்று எழுந்த நாதன், வீட்டிற்கு வந்து உடைமாற்றிப் பையினை எடுத்துக் கொண்டு கிழம்புவதற்கு ஆயத்தமாய் வெளியே வந்தான். தாத்தா வாங்கில் படுத்திருந்து பார்த்துக்கொண்டிருந்தார். நாதன், குனிந்து தாத்தாவினைத் தழுவிய பின்னர் தான் வெளிநாடு மீழ்வதாக்கக் கூறி விடைபெற்றான். 

மதகின் அருகில் நாதன் வரைந்திருந்த ஒவியம் ஏறத்தாள நான்கு சதுர அடியில் கிறுக்கல் சித்திரமாய் இருந்தது. இடமிருந்து வலமாக அந்தச் சித்திரத்தின் நகர்வு இருந்தது. ஒரு சிறுவன், பள்ளி, சிறுவனின் வளர்ச்சி, ஆயுதம் ஆயுதத்தின் மேல் ஒரு வரி எழுத்து, விமானம், தாத்தா முடிவில் ஒரு கேள்விக் குறி, கேள்விக்குறியின் கீழ் சிந்தனை நீட்சியினைக் குறிக்கும் மூன்று குற்றுகள் அதைத் தொடர்ந்து ஒரு வரி எழுத்து. ஓவியம் ஒரு சட்டத்துள் இருந்தது.

ஆயுதத்தின் மேலும் கேள்விக் குறியின் கீழும் பின்வரும் வரிகள் முறைப்படி தமிழில் இருந்தன:

“பல்லாயிரமாண்டுப் பாரம்பரியம்”
“நான்”

 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்குள் இருக்கும் சூக்குமத்தை என்னளவில் புரிந்தகொண்டதன்படி கடந்த முப்பது வருடங்களில் வயதானதைத் தவிர மிச்சம் எல்லாம் அப்படியேதான் உள்ளது என்று தெரிகின்றது. அதுதானே உண்மையும்!

  • கருத்துக்கள உறவுகள்

பணம் பலவற்றை மாற்றிவிட்டது.....என்பது எனது கருத்து

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

 

“பல்லாயிரமாண்டுப் பாரம்பரியம்”
“நான்”

 

எல்லா இனத்துக்கும் இது பொருந்தும் .

காலம் நகர்கின்றது

எம் மனிதர்களும் அவர் சிந்தனைகளும் மட்டும் உறைந்து போய் கிடக்கின்றது

போராட்டமும் இவ் உறைவில் உறைந்து நகராமல் பாரம்பரியப் பொறியில் அந்த பாட்டன் போன்று ...

நாதன் முப்பது வருடங்களின் பின்னும் அந்த உறைந்து கிடக்கும் பாரம்பரியத்தினை கடக்க முடியாமல் அதை தழுவி சமரசம் கொள்கின்றான்

  • தொடங்கியவர்

நிழலி, சுபேஸ், காவலூர் கண்மணி, கிருபன், நுணாவிலான், புத்தன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. 

கிருபன் நீங்கள் கூறுவதும் சரிதான், ஆனாhல் நாதனில் மாறாதிருப்பது அவன் மாறிக்கொண்டே இருப்பது.

நிழலி, உங்கள் புரிதலை மிகவும் ரசித்தேன்—குறிப்பாகக் கடைசி வரி சொன்ன சமசரசம். 


நாதனிற்கும் அவன் தாத்தாவிற்கும் இடையேயான மௌனமான பட்டிமன்றமே “2 தர 2” பெட்டிக்குள் வரையப்பட்டிருந்த ஓவியம்—எல்லாப் பரிமாணத்திலும் இரு தெரிவுகள் பரிசீலிக்கப்பட்டன. அதனால் தான் அந்தப் பெட்டியினை நான்கு சதுர அடி என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பட்டிமன்றத்தில் ஒரு வித்தியாசம், தன்பக்கக் கருத்தை நிறுவி விடுவதற்காக முயல்வதற்குப் பதில் மற்றையவர் முன்வைக்கும் தெரிவு தனக்குப் பொருந்துமா என இரண்டு வாதிகளும் தம் வாழ்வை அதற்குள் பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ள முயன்றமையே. இறுதியில் நாதன் நிற்கவுமில்லை தாத்தா தடுக்கவுமில்லை ஆனால் தழுவல் ஆத்மார்த்தமாய் ஒரு நிரந்தர பிரியாவிடையினை உணர்ந்து நிகழ்ந்தது—ஒருவகையில் இதிலும் ஒரு சமரசம் இருக்கத் தான் செய்கிறது.

பாரம்பரியம் என்ற சொல்லு தன்நிலை நின்று உணரப்படாது ஒரு அப்ஸ்ற்றாக்ற் கருத்து நிலையாகப், புனிதமாகப் பார்க்கப்படும் தருணங்கள் உலகில் ஆயுதத்தின் தேவையினை உணர்ந்த தருணங்களாகவே காணப்படுகின்றன. மாறாது கட்டிக் காப்பது சிறந்த பெறுமதி என்ற விவாதங்கள் பலவற்றில் ஏன் மாறாதிருப்பது சிறந்தது என்ற கேள்விக்கான பதில், ஆழம் அதிகரிக்கையில் பெரும்பாலும் நிசப்த்தமாகவே இருக்கிறது.

இறுக்கமானவர்கள் அதிகம் பணம் பண்ணுவதில்லை, உத்தியோகத்தில் அதிகம் உயர்வதில்லை. இறுக்கம் நடுத்தர வர்க்கத்தின் குணவியல்பு. இறுக்கம் நடுத்தர வர்கத்தினை உருவாக்கும் காரணிகளில் ஒன்று. மாறாதிருப்பதற்கு இறுக்கமாய் இருப்பது உதவும். இறுக்கம் கிறியேற்றிவிற்றிக்கு எதிரி. இறுக்கம் தேடலின் தேவையினைக் குறைக்கும். பார்வைகளின் பரந்துபட்ட விரிதலிற்கு இறுக்கம் எதிரி.

நாதன் பள்ளியில் மிளிரவில்லை. பரீட்சைகளில் வெல்லவில்லை. இராணுவ கட்டமைப்பிற்குள் உயரவில்லை. திட்டமிட்டு செயற்படுவது நாதனிற்குத் தெரியவில்லை. அதனால் நாதனின் வாழ்வு, ஏற்கனவே போடப்பட்ட பாதையில் கடிவாளமிடப்பட்ட நகர்வாக இருக்கவில்லை. இருந்த பாதைகளில் பயணிக்கும் தகுதி தவறியதால் நிரந்தரமின்றித் தோன்றி மறைந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் பாதைகளின் இருப்பும் சாத்தியங்களும் நாதனிற்குப் புலப்பட்டது. பிறந்த பாரம்பரியத்திற்குள் சாத்தியப்படாத தேர்வுகள் வெளியே கிடைத்தன. இதனால், அன்பு பிணைப்பு முதலியனவெல்லாம் தான் பிறந்த வீட்டோடு நாதனிற்கு இருந்தபோதும் அவன் தானாக உணர்ந்தது வீட்டிற்கு வெளியே தான். 

நேற்றோடு இன்றையினை ஒப்பிடுவதும், நாளையினை இன்றையோடு ஒத்துப்போகும்படி திட்டமிடுவதும் மாறதிருப்பதற்கு அவசியம். ஒருவகையில் பாரம்பரியமும் இப்படித்தான். தாத்தாவிற்கு அது இயல்பு, நாதனிற்குப் புரியாத புதிர்.

நுணாவிலான் கூறியதைப் போல அனைத்து இனங்களிற்கும் இது பொருந்தும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

80,90 வருடங்களுக்கு முன்னர் பிறந்தவர்கள் இன்னும் வாழ்க்கையை அனுபவித்துத் தான் வாழ்கின்றார்கள். அதற்குப் பின்னர் பிறந்தவர்கள் தான் வாழ்க்கையை கொஞ்சம்,கொஞ்சமாக தொலைத்துத் கொள்கிறார்கள் என எடுத்துக் கொள்ளமாமா?

சிந்திக்கத் தூண்டும் பதிவிற்கு நன்றி. 

ஒரு உதராணம். 90 ம் ஆண்டுவரையில் அரசியல் பொறுப்பாளராக இருந்த ஒருவர் வரதட்சணை உட்பட்ட பல சமூகப் பிரச்சனைகளுக்கான விளிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்டார். பின்னர் துண்டுகொடுத்து விலத்தியதும் நல்ல வரதட்சணையுடன் கூடிய பெண்ணை தேடி திருமணமும் செய்துகொண்டார். இப்படி பல உதராணங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. பாரம்பரியத்தின் பெரும்பங்கும் சுரண்டலும் சுயநலத்திலும் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இறுக்கமும் இவ்வாறான பாரம்பரியத்தை கட்டிக்காப்பற்றுவதிலேயே பெரும் பங்கை கொண்டுள்ளது. வெளிநாட்டு வாழ்வை தனியே இனப்பிரச்சனை மட்டும் தீர்மானிக்கவில்லை ஒருவன் உழைப்பில் என்னுமொருவன் வாழ முற்படும் அடிப்படைஇயக்கமும் சேர்ந்தே தீர்மானிக்கின்றது. அதை தியாகம் மற்றும் குடும்பப் பொறுப்பு என வேறுவிதமான புரிதலுக்குள் நகர்த்திவிடுகின்றோம். எவ்வாறு தனிமனித இயக்கத்தில் இந்த சுழற்ச்சி நடக்கின்றதோ அவ்வாறே போராட்ட சூழலும் என்னுமொருவன் தியாகத்தில் சுதந்திரமடைய முற்படும் தன்மையும் இருந்தது. மாற்ற முடியாத இந்த பாரம்பரியமும் அதைச் சுற்றிய இறுக்கமும் ஒட்டுமொத்தமாக எல்லாவிதமான இனம் சமூகம் சார்ந்த அடயாளத்தையும் மெல்லமெல்ல உணவாக்கிக்கொள்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய வளவு  சிறிய வீடு. போதிய உழைப்பின்றியே வந்து சேரும் பணம். தன்னை மட்டுமே எண்ணும் சுயநலம். ( இல்லையெனில் 90 வயதிலும் பால் காய்ச்சித்தரும் தாத்தாவுக்கு இன்னும் ஒருசில வருடங்கள் உதவியாய் இருந்திருக்கலாம்) அவன் பிரிவதைத் தடுக்காத தாத்தா. அத் தலைமுறைக்கேயுரிய மிடுக்கு, பாரம்பரியத்துள் சிக்காமல் இந்த உலகில் அடுத்த சுவாரசியங்களைத் தேடிப் பயணிக்கும் ஒரு கலைஞனின் மனம்...!

  • தொடங்கியவர்

நன்றி சேவயர், நந்தன், ரதி, சண்டமாருதன், சுவி. 

சிரிய அகதிகள் சார்ந்து நம்மவர்கள் மத்தியில் பரவலான விவாதங்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. பலரிற்குப் பழைய ஞாபகங்களைக் கிழறிப்போடும் நிகழ்வாக சிரிய அகதிகள் விவகாரம் இருக்கிறது. இருப்பினும் இந்த விவாதங்களும் கூட முழுமையானதாக இல்லையோ என்றே தோன்றுகின்றது.

எதனால் பல புராதன பாரம்பரியங்களிற்கு, மேற்கு கவர்ச்சிகரமானதாக இருக்கிறது என்ற முனை பலநேரங்களில் பொருளாதாரம் என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளப்படுகிறது.  மேற்கு தனது வாழ்வுமுறை சிறந்ததது என்பதை திணிக்கும் ஊடக உத்திகளை ஏராளம் செய்கிறது—ஆசைகளை அளவின்றி விதைக்கிறது. அந்த வகையில், மேற்கு பற்றிய பட்டறிவு இன்றி, கேழ்விப்பட்டதை மட்டும் வைத்து மேற்கு வர விரும்புவோரின் காரணங்கள் சிலவாக இருக்கலாம். ஆனால், மேற்கிற்கு வந்து பலகாலம் வாழ்ந்ததன் பின்னர் தமது பூர்விக நிலங்களிற்கு மீழ்தல் என்பது பலரிற்கு சிக்லானதாக இருக்கிறது. ஊர் மீளல் என்ற முனையில் தான் பாரம்பரியம் சார்ந்த முழுமையான விவாதம் கைப்படும். ஊர் மீளத் தயங்கும் குழந்தைகள் சார்ந்து ஏன் மக்கள் வெளியேறத் துடிக்கிறார்கள் என்பது முழுமையாகப் புரிந்து கொள்ளப்படலாம். 

வீட்டுக்குத் திரும்புவதற்குத் தயங்கும் ஒரு குழந்தை சார்ந்து வீடு பார்க்கப்பட வேண்டும். இது எமது பாரம்பரியத்திற்கு மட்டுமேயான பிரச்சினை அல்ல. உண்மையில் தற்போது, ஓர்ஹான் பாமுக் என்ற துருக்கிய எழுத்தாளரின் ‘சைலன்ற் கவுஸ் (நிசப்த்த வீடு)’ என்ற நாவலினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சிரிய அகதிகள் மற்றும் மேற்படி நாவல் சார்ந்து தான் இந்தச் சிறுகதை எழுதத் தோன்றியது. 

 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு தனது வாழ்வுமுறை சிறந்ததது என்பதை திணிக்கும் ஊடக உத்திகளை ஏராளம் செய்கிறது—ஆசைகளை அளவின்றி விதைக்கிறது.
 

சகல மனித மனமும் வசதியான வாழ்க்கை வாழத்தான் ஏங்குகிறது,மேற்குலகையும் அதன் ஊடகத்தின் மூலம் இந்த ஆசைகள் வருகின்றது என சொல்ல முடியாது.காந்தீய மக்கள் இன்று மேற்குலக வாழ்க்கையை விரும்புகின்றார்கள்,சீனா,ரஸ்யா ,கியுபா போன்ற நாடுகளில் புரட்சிகள் மூலம் மக்களை மாற்றினார்கள் ஆனால் அந்த மக்களின் அடுத்த பரம்பரை வசதியான வாழ்க்கையை தெடுகிறார்கள்.மதங்களை தீவிரமாக பின்பற்றும் மக்களும் பலர் மரணத்தின் பின்பு சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள்.அதற்காக இறைபக்தியை கண்மூடித்தனமாக பின்பற்றுவோரும் உண்டு.

 

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டுக்கு பலர் இரையகின்றார்கள் என்று அறிந்தும் அமெரிக்காவுக்கு செல்வதற்கு பலர் போட்டி போடுகிறார்கள்....ஏன் என்ற கேள்வி எழுகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.