Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம்

Featured Replies

காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம்
காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம்

காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம் என்று இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

எமது சொந்த நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்கள் ஆகிவிட்டன இதுவரைக்கும் எனது குடும்பம் மாத்திரம் 16 வீடுகள் மாறி இருக்கின்றோம். 

கடந்த 90ம் ஆண்டு முதல் எமது நிலங்களில் எம்மை குடியமர்த்த கோரி சத்தியாகிரக போராட்டம் முதல் பல போராட்டங்களை நடாத்தி இருக்கின்றோம்.

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூட தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் முன்றலில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்தார்.அப்போது அவர் கூறினார் போர் நடவடிக்கைக்காக தான் காணிகளை இராணுவ தேவைக்காக கையகப்படுத்தி வைத்துள்ளனர். போர் முடிந்து விட்டது தானே இனி அந்த காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி இருந்தார்.

தற்போது அவர் பிரதமராக இருக்கின்றார் எமது காணிகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவர் போராட்டத்தில் கலந்து கொண்டு சென்ற சில நிமிடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம் மீது சிலர் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அவர்களில் ஒருவரை நாம் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்து இருந்தோம் ஆனால் இதுவரை நாம் பிடித்து கொடுத்த அந்த நபருக்கு என்ன நடந்தது என எதுவும் தெரியவில்லை.

வடக்கு, கிழக்கு மலையக மக்கள் நாம் அனைவரும் இன்றும் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றோம் இன்றும் நாம் தான் இந்த நாட்டிலே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழ் மக்கள் வாக்களித்ததால் தான்  ஜனாதிபதியானேன் எனவே அவர்களை நான் மறக்க மாட்டேன் என கூறி வருகின்றார். தனியே மறக்க மாட்டேன் மறக்க மாட்டேன் என கூறுவதால் பயனில்லை எமது காணிகளை விடுவித்து ஜனாதிபதியை தமிழ் மக்கள் வாழ் நாள் முழுவது மறக்காது இருக்க செய்ய வேண்டும். 

பிரிட்டன் பிரதமர் எமது முகாமுக்கு வந்து விரைவில் நீங்கள் உங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவீர்கள் என கூறி சென்றார். இன்று அவர் கூறி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் 'இராணுவம் தான் மீள் குடியேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது என ஊடகங்களுக்கு கூறி தனது முகத்திலும் நல்லாட்சி என சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் முகத்திலும் கரியை பூசியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் உள்ளார் அவர் இந்த அரசாங்கத்துடன் பேசி எங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பாரா அல்லது அவரும் இராணுவத்தை சாட்டிக்கொண்டு இருக்க போகின்றாரா ?

எமது குடும்ப அட்டைகளை மீள் ஆய்வு செய்ய போகின்றோம் என கூறி கிராம சேவையாளர்கள் ஊடக பிரதேச செயலகங்கள் பெற்று 'இ' அட்டைகளை அனைத்தும் 'அ ' அட்டைகளாக மாற்றி தந்து எமக்கான இடம்பெயர்ந்தோர் நிவாரணத்தை வெட்டி விட்டார்கள்.

எதற்காக எமது நிவாரணத்தை வெட்டினீர்கள் என கேட்டால் நீங்கள் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு விட்டீர்கள் என கூறினார்கள். அப்ப இந்த முகாம்களில் வசிக்கும் மக்கள் நாங்கள் யார் ? என நாங்கள் திருப்பி கேட்டால் அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள் 

எம்மை விரைவில் எமது சொந்த இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் இல்லை ஏனெனில் "எமது நிலம் எமக்கு வேண்டும்" என்ற கோரிக்கையுடன் ஒரு கையில் காணி உறுதி மறுகையில் வெள்ளை கொடியுடன் உயர் பாதுகாப்பு வலயம் என அடைக்கப்பட்டு உள்ள முள் வேலிகளை தாண்டி நாங்கள் சென்று எமது காணிகளில் குடியேறுவோம்.என தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/1063

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தல்  வரும் வரை உங்களை யாரும் கவனிக்கவோ அல்லது முழுமையான உதவி செய்யவோ முன்வரமாட்டார்கள்.
உங்கள் விடுதலையும் நில மீட்பும் உங்கள் கைகளிலேயே உள்ளது.
அல்லது அடுத்த மேய்ப்பன் வரும் வரை காத்திருங்கள் 

காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம் என்று இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

எமது சொந்த நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்கள் ஆகிவிட்டன இதுவரைக்கும் எனது குடும்பம் மாத்திரம் 16 வீடுகள் மாறி இருக்கின்றோம். 

கடந்த 90ம் ஆண்டு முதல் எமது நிலங்களில் எம்மை குடியமர்த்த கோரி சத்தியாகிரக போராட்டம் முதல் பல போராட்டங்களை நடாத்தி இருக்கின்றோம்.

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூட தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் முன்றலில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்தார்.அப்போது அவர் கூறினார் போர் நடவடிக்கைக்காக தான் காணிகளை இராணுவ தேவைக்காக கையகப்படுத்தி வைத்துள்ளனர். போர் முடிந்து விட்டது தானே இனி அந்த காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி இருந்தார்.

தற்போது அவர் பிரதமராக இருக்கின்றார் எமது காணிகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவர் போராட்டத்தில் கலந்து கொண்டு சென்ற சில நிமிடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம் மீது சிலர் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அவர்களில் ஒருவரை நாம் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்து இருந்தோம் ஆனால் இதுவரை நாம் பிடித்து கொடுத்த அந்த நபருக்கு என்ன நடந்தது என எதுவும் தெரியவில்லை.

வடக்கு, கிழக்கு மலையக மக்கள் நாம் அனைவரும் இன்றும் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றோம் இன்றும் நாம் தான் இந்த நாட்டிலே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழ் மக்கள் வாக்களித்ததால் தான்  ஜனாதிபதியானேன் எனவே அவர்களை நான் மறக்க மாட்டேன் என கூறி வருகின்றார். தனியே மறக்க மாட்டேன் மறக்க மாட்டேன் என கூறுவதால் பயனில்லை எமது காணிகளை விடுவித்து ஜனாதிபதியை தமிழ் மக்கள் வாழ் நாள் முழுவது மறக்காது இருக்க செய்ய வேண்டும். 

பிரிட்டன் பிரதமர் எமது முகாமுக்கு வந்து விரைவில் நீங்கள் உங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவீர்கள் என கூறி சென்றார். இன்று அவர் கூறி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் 'இராணுவம் தான் மீள் குடியேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது என ஊடகங்களுக்கு கூறி தனது முகத்திலும் நல்லாட்சி என சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் முகத்திலும் கரியை பூசியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் உள்ளார் அவர் இந்த அரசாங்கத்துடன் பேசி எங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பாரா அல்லது அவரும் இராணுவத்தை சாட்டிக்கொண்டு இருக்க போகின்றாரா ?

எமது குடும்ப அட்டைகளை மீள் ஆய்வு செய்ய போகின்றோம் என கூறி கிராம சேவையாளர்கள் ஊடக பிரதேச செயலகங்கள் பெற்று 'இ' அட்டைகளை அனைத்தும் 'அ ' அட்டைகளாக மாற்றி தந்து எமக்கான இடம்பெயர்ந்தோர் நிவாரணத்தை வெட்டி விட்டார்கள்.

எதற்காக எமது நிவாரணத்தை வெட்டினீர்கள் என கேட்டால் நீங்கள் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு விட்டீர்கள் என கூறினார்கள். அப்ப இந்த முகாம்களில் வசிக்கும் மக்கள் நாங்கள் யார் ? என நாங்கள் திருப்பி கேட்டால் அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள் 

எம்மை விரைவில் எமது சொந்த இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் இல்லை ஏனெனில் "எமது நிலம் எமக்கு வேண்டும்" என்ற கோரிக்கையுடன் ஒரு கையில் காணி உறுதி மறுகையில் வெள்ளை கொடியுடன் உயர் பாதுகாப்பு வலயம் என அடைக்கப்பட்டு உள்ள முள் வேலிகளை தாண்டி நாங்கள் சென்று எமது காணிகளில் குடியேறுவோம்.என தெரிவித்தார்

http://onlineuthayan.com/news/1063

... இப்படியான செயற்பாடுகள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு, தேசிய பாதுகாப்பிற்கு மேலாக நாட்டின் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதாய் அமையாதா?????

... இப்படியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர் ... சிங்களவர்களோடு இதயங்களால் ஒன்றுபட்டு விட்ட எம் இதயங்களில் நிரந்தமாக அரசியல் தலைவர்களாக வீற்றிருக்கும் தானைத்தலைவன் சமந்திரன், தமிழ்தேசிய கூட்டமைப்பை கட்டியெழுப்பிய மாதலைவன் சம்பந்தர் போன்றோரிடம் ஆலோசனை பெறுவது காலத்தின் சாலச்சிறந்ததாகும் ... 

அடுத்த தேர்தல்  வரும் வரை உங்களை யாரும் கவனிக்கவோ அல்லது முழுமையான உதவி செய்யவோ முன்வரமாட்டார்கள்.
உங்கள் விடுதலையும் நில மீட்பும் உங்கள் கைகளிலேயே உள்ளது.
அல்லது அடுத்த மேய்ப்பன் வரும் வரை காத்திருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த தாண்டுற, குதிக்கிற வேலையளைச் செய்து சர்வதேச ஆதரவையும், தலைவரின்கோபத்தையும்,நாட்டின்நல்லிணக்கத்தையும் கெடுத்துப் போடாதையுங்கோ சொல்லிப்போட்டேன். பிறகு சனம் அழிஞ்சதுதான் மிச்சம் எண்டு  நாங்களும் பங்குக்கு முனகுவோம். 

2009ம் ஆண்டு பிடிச்சதுக்கே சாட்சியும் இல்லாமல் விசாரணையும் இல்லாமல் கிடக்குது, இதுக்க நீங்கள் வேற வெள்ளைக்கொடியா?

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பிப்போய் தொடக்கத்தை யாராலும் மாற்ற முடியாது,

தொடந்து சென்றால் முடிவையாவது மாற்றமுடியும்.

வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கொடியை நினைக்கவே பயம்மா இருக்குtw_astonished:

சில தமிழ் அரசியல்வாதிகளுக்குச்  சிங்கக்கொடியைக் கண்டால் ஒரே குஷியாக இருக்குமாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு சிங்கக்கொடி தமிழினத்துக்கு எதிராக ஏறினதுக்குச் சமமாகப் புலிக்கொடியும் எதிராக ஏறினது எண்டு புரியாமல் இருப்பதுதான் விந்தை! சிங்கக்கொடியை விடாமல் உற்றுப்பார்த்தால் அதுக்குள்ளை பதுங்கியிருக்கிற புலி தெரியும். அந்தவகையில் கஜே கோஸ்டிக்கு புலிக்கொடியை கண்டால் அதாவது சிங்கக்கொடியைக் கண்டால் குசிதானே! கஜே கோஸ்டிக்கு குசி எண்டால் வாலுகளுக்கு இரட்டிப்புக் குசி வருமாக்கும். கொத்துரொட்டி இன்னும் சுவையாக சாப்பிடலாம்தானே!:cool:

வெள்ளைக்கொடியை நினைக்கவே பயம்மா இருக்குtw_astonished:

அமைதி அமைதி ... உதுக்கெல்லாம் பயப்படுகிறதோ ... பழகியாச்சே???? ... 58இல் காலி முகத்திடலில் சாத்வீக அகிம்சை போராட்டம் ... என்னவாம்? காந்தீயவழியாம் ஆ ஆ ஆ ... இருக்கத்தொடங்கினதே வெள்ளைக்கொடியுடன் தானுங்கோ!!! வெள்ளைக்கொடிக்கு பவ்வீ ... விளங்கேலை? பீ ... தீத்தினவன்! அதுவும் இலங்கையின் தலை நகரில்!! ... பின்பு காலாகாலமாக உது நடக்குதூங்கோ! ... 

... சிலவேளை பால்குடிகளுக்கு அனுபவம் இருக்காது!! அதுவும் ஸ்பின் டாக்குத்தரின் கதைகளை காவுபவர்களுக்கு ... அங்கையும் இருக்காது!! ... வரலாற்றை படியுங்கோ! பயம் வராது!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.