Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தில் பெண் சிசுவை கருவிலேயே அழிக்க ஐடியா கொடுத்து ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய தமிழ் டாக்டர்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நமது தமிழ் வைத்தியர்கள் சிக்கி விட்டார்கள் போல் உள்ளது. நெருடுவது என்னவென்றால், surgery ஒன்றில் பதிவு செய்து வைத்தியர்கள் உடன் நீண்ட கால நம்பிக்கையான தொடர்பில் இருப்பவர்கள், பணத்தினை வாங்கிக் கொண்டு காட்டிக் கொடுத்த அவலம்....

லண்டன்: இங்கிலாந்தில் பெண் சிசுவை கருவிலேயே அழிக்க ஆலோசனை தெரிவித்த டாக்டர் பழனியப்பன் ராஜமோகன் 3 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். லண்டனைச் சேர்ந்த தி டெலிகிராப் ஏடு அண்மையில் இங்கிலாந்தில் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவது அதிகரிப்பது தொடர்பான ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியது. இதற்காக கர்ப்பிணிகளை மருத்துவர்களிடம் அனுப்பி பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்ல வைத்து அதற்கு டாக்டர்கள் என்ன மாதிரியான பதிலை தெரிவிக்கிறார்கள் என்பதை ரகசியமாக பதிவு செய்தது.

England doctor suspend for agreed to gender abortion of baby girl

இந்த ரகசிய ஆபரேஷனில் தமிழரான டாக்டர் பழனியப்பன் ராஜமோகனும் சிக்கியுள்ளார். அவர் தொடர்பான வீடியோ காட்சியில் பெண் ஒருவர் டாக்டர் பழனியப்பன் ராஜமோகனிடம் செல்கிறார். தாம் கர்ப்பமாக இருப்பதாகவும் 2வதும் பெண் குழந்தை என்பதால் அதை விரும்பவில்லை.. அதை அழித்துவிடலாம் என இருப்பதாகவும் கூறுகிறார். இது பெண் குழந்தை என்பதால்தான் கலைக்கிறீர்கள்தானே என மருத்துவர் கேட்கிறார்.. அந்த பெண்ணும் ஆமாம் என்கிறார்.... ஆனால் பெண் குழந்தை என்பதால் கருவைக் கலைப்பதாக ஆவணங்களில் எழுதாமல், நீங்கள் இளம்வயதிலேயே கர்ப்பம் தரித்ததால் கருவை கலைப்பதாக மாற்றி எழுதுகிறேன் என டாக்டர் பழனியப்பன் ராஜமோகன் கூறுகிறார்.

இதேபோல் பிரபா சிவராமன் என்ற இந்திய பெண் மருத்துவரிடம் ஒரு கர்ப்பிணி பெண் சென்று பெண் சிசு என்பதால் கருக்கலைப்பு செய்ய விரும்புவதாக கூறுகிறார்.. இதற்கு எந்த ஒரு ஆட்சேபமின்றி கருக்கலைப்பு செய்யலாம் என பிரபா சிவராமன் கூறுகிற காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இங்கிலாந்து மருத்துவ கவுன்சில் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் 3 மாதங்களுக்கு டாக்டர் பழனியப்பன் ராஜமோகன், மருத்துவராக பணியாற்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/england-doctor-suspend-agreed-gender-abortion-baby-girl-239203.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மாதம் லட்சக்கணக்கில் அல்லது அதற்கும் மேலாக  பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன. இவர் இந்தியத் தமிழராக இருக்க வாய்ப்புகள் உண்டு.  

  • கருத்துக்கள உறவுகள்

பெயரைப் பார்த்தால்.. இந்திய கள்ளிப்பால் கலாச்சாரத்தில் ஊறிய டாக்குத்தர் போல உவர் இருக்கிறார்.:rolleyes: இதற்கு எதிராகவும் நாம் தமிழர் போராடனும். tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெயரைப் பார்த்தால்.. இந்திய கள்ளிப்பால் கலாச்சாரத்தில் ஊறிய டாக்குத்தர் போல உவர் இருக்கிறார்.:rolleyes: இதற்கு எதிராகவும் நாம் தமிழர் போராடனும். tw_blush:

அதில்ல விசயம்,

டாக்டர் தனது நோயாளியின் குடும்பத்தின் சகல விடயங்களையும் அறிந்த ஒருவர்.

நீங்கள் இப்பத்தானே வேலை தொடங்கி இருக்கிறீர்கள், அதற்குள் பிள்ளை என்றால், வேலையில் பிரச்சனையாகாதா?

உங்களுக்கு இருக்கும் அந்த பிரச்சனைக்கு தரும் மருந்து முடிந்து, செக்கிங் ஓகே எண்டால் தான் பிள்ளைக்கு றை பண்ண வேண்டும் என்றேனே, இப்ப பிரக்னன்சி ரிஸ்கே....

போன்ற தனிப்பட்ட உரையாடல்களுக்கு ஆப்பு. பணத்துக்காக யாரோ இன்னுமோர் இந்தியர் அல்லது தமிழர் செய்த நாதாரித்தனம்.

பெண் சிசுவைக் கொல்ல முனைந்த டாக்டரை விட்டு விட்டு, பணம் வாங்கிக் கொண்டு மாட்டி விட்ட இந்தியரைத் திட்டுகிறீர்களா நாதமுனி? டாக்டர் தனிப்பட்ட உரையாடல்களை நடத்துவது நோயாளியின் வாழ்க்கை முடிவுகளை எடுப்பதற்காக அல்ல! அப்படி இருந்தால் டொக்டர் தொழிலை விட்டு விட்டு கார் வீடு சேல்ஸ்மான் வேலை பார்க்க வேண்டும். நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தாலும் சுழல் கக்கூசில தான் இருப்போம் என்கிற மாதிரி இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ தொழில்கள் இருக்கும் போது இந்த இரண்டையும் சுட்டிக் காட்டியது ஏன் ஜஸ்டின்? 

பெண் சிசுவைக் கொல்ல முனைந்த டாக்டரை விட்டு விட்டு, பணம் வாங்கிக் கொண்டு மாட்டி விட்ட இந்தியரைத் திட்டுகிறீர்களா நாதமுனி? டாக்டர் தனிப்பட்ட உரையாடல்களை நடத்துவது நோயாளியின் வாழ்க்கை முடிவுகளை எடுப்பதற்காக அல்ல! அப்படி இருந்தால் டொக்டர் தொழிலை விட்டு விட்டு கார் வீடு சேல்ஸ்மான் வேலை பார்க்க வேண்டும். நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தாலும் சுழல் கக்கூசில தான் இருப்போம் என்கிற மாதிரி இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் உதாரணம் தான்: ஒரு கார் சேல்ஸ்மான், வீடு சேல்ஸ்மான், தனக்கு வருகிற கொமிசனில் அதிக அக்கறை காட்டிக் கொண்டு வாங்குவபரின்  முடிவில் ஆதிக்கம் செலுத்த முயலலாம், அது சட்ட விரோதம் அல்ல! ஒரு வைத்தியர் அப்படிச் செய்ய முடியாது, செய்தால் சட்ட விரோதம். இதைச் சொல்லவே அந்த உதாரணம். இதற்காக நான் உலகத்திலுள்ள தொழில்களையெல்லாம் பட்டியல் இட வேணுமெண்டு எதிர்பார்த்தால் என்னால் அது முடியாது!

:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண் சிசுவைக் கொல்ல முனைந்த டாக்டரை விட்டு விட்டு, பணம் வாங்கிக் கொண்டு மாட்டி விட்ட இந்தியரைத் திட்டுகிறீர்களா நாதமுனி? டாக்டர் தனிப்பட்ட உரையாடல்களை நடத்துவது நோயாளியின் வாழ்க்கை முடிவுகளை எடுப்பதற்காக அல்ல! அப்படி இருந்தால் டொக்டர் தொழிலை விட்டு விட்டு கார் வீடு சேல்ஸ்மான் வேலை பார்க்க வேண்டும். நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தாலும் சுழல் கக்கூசில தான் இருப்போம் என்கிற மாதிரி இருக்கு!

இல்லை ஜஸ்டின்,

நீங்கள் மருத்துவர் என்பதும் தெரியும்.

பல கர்பங்கள், திட்டமிடப் படாதவை. திடீரென நீங்கள் கர்ப்பம் என்று சொல்லும் போது அதிர்ச்சி அடைபவர்கள் ஏராளம்.

ஆணோ, பெண்ணோ கர்ப்பத்தினால், வரக் கூடிய பொருளாதார, பிள்ளைக் கவனிப்பு சிக்கல்களினால் இந்தியாவில் ஒரு பிள்ளைக்கு மேல் பெற, மதியதர வர்க்கம் தயங்குகிறது.

இங்கே வெள்ளைகள், சும்மா abort பண்ணுவார்கள். 

பத்திரிகை ஒன்று, பணத்தினைக் கொடுத்து, பெண் குழந்தை என்று சொல்ல வைத்து அதனால் தான் abort பண்ணுவது போலவும், இந்த டாக்டர் அதற்காகத் தான் உதவுவது போலவும் கதையை முடித்து விடுகிறார்கள். (taken out of context)

முதல் பிள்ளை ஆணாக இருந்து அடுத்ததும் ஆணாக வந்தால், கலைக்க வேண்டும் ஏனெனில் பெண் குழந்தை தான் வேண்டும், அதேவேளை இரண்டுக்கு மேல் வேண்டாம் என்ற நிலையில் போய் abort பண்ணி வந்த குடும்பங்களும் உண்டு.

இதன் மறுபக்கம் என்னெவெனில், அவர்களுக்கு ஆண்குழந்தை வேண்டும். இரண்டுக்கு மேல் வேண்டாம் என்ற நிலையிலேயே டாக்டர் உதவி செய்திருப்பார்.

இங்கே மருத்துவம் இலவசம். அகவே பணம் இங்கே நோக்கம் இல்லை.

சிறு வயதில் FDM செய்யப்படிருந்த சோமாலியப் பெண் ஒருவருக்கு, குழந்தை கிடைக்கும் போது, அதனை காப்பாத்த, ஒரு இலங்கை டாக்டர் செய்த உயிர்க் காப்பு ஆபரேஷன் ஒன்றை, FDM என்று வழக்குப் போட்டு அலைகழித்து, பின்னர் வழக்கு தள்ளப் பட்டது.

இவ்வளவுக்கும் பல சீனியர் டாக்டர்களும், அந்த சோமாலிய பெண்ணும் அவருக்கு அதரவு தந்தனர். வெள்ளை midwife சொன்ன கதையை வைத்து தான் வழக்கே.

சுப்பையா ரத்னேச்வரன் எனும் எம்தமிழ் டாக்டர் வருஷம் £1.2ம் உழைக்கிறார் என்று UK Sunday Times ல் கட்டுரை போட்டார்கள் (எரிச்சலில் தான்)

அவரோ, நான் மூன்று surgery வைத்திருக்கிறேன். கிழமைக்கு 90 மணி நேரம் வேலை செய்கிறேன். வரி கட்டுகிறேன். இவ்வளவு பேர்களுக்கு வேலை கொடுக்கிறேன். இதில் என்ன பிழை இருக்கிறது என கேட்டார்.

தமிழர்கள், குறிப்பாக இலங்கையர்கள், கல்வித்துறையில், முக்கியமாக மருத்துவத் துறையில் நீக்கமற நிறைந்து இருப்பது பலரது கண்களை உறுத்துகிறது. :rolleyes:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலதானே பெண் சிசு கொலை செய்யபடுகுது என்று விட்டு 
விடுப்பு பார்க்கும் காலம் போய்விட்டது என்று நினைக்கிறேன்.

இப்போது இந்தியாவில் ஆண்களின் எண்ணிக்கை 35% மேல் வந்துவிட்டது 
எல்லோருக்கும் மணம் நடக்க வேண்டும் என்றால் ...... முடியவே முடியாது.

இந்தியாவில் நடக்கும் பாலியல் பலத்த்காரத்தின் அடிப்படை காரணமே இதுதான்.
சீர்கேடு என்பது ராக்கெட் வேகத்தில் பரவுகிறது 
பத்திரிகைகள் இப்போ மூடி மறைக்க பார்கிறார்கள்.

நீங்கள் கூட சிறிய தளங்கள் உள்ளூர் செய்திகளில் படிக்கும் 
ஆ என்று வாயை பிளக்கும்  செய்திகளை மெயின் மீடியாக்களில் பூத கண்ணாடி வைத்து 
தேடினாலும் கிடைக்காது இது அரச தணிக்கைக்குள் அடங்கிவிடும்.

இனி இலங்கைக்கு ரயில் விட போகிறார்களாம் .....
இதுதான் பிரச்சனையான விடயம்.

இப்போ பெண்களுக்குத்தான் இந்தியாவில் மவுசு (உண்மை நிலையில் )
மயக்கத்தில் இருப்பதால் சீதனம் பெண் அடிமை நடக்கிறது 
இதை இந்துமதம் கவனமாக பாதுக்காக்க உதவுகிறது.

சப்ளை அண்ட் டெமாண்ட் படி பெண்கள் சீதனம் வாங்கும் நிலை 10 வருடம் முன்பே வந்துவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஜஸ்டின்,

நீங்கள் மருத்துவர் என்பதும் தெரியும்.

பல கர்பங்கள், திட்டமிடப் படாதவை. திடீரென நீங்கள் கர்ப்பம் என்று சொல்லும் போது அதிர்ச்சி அடைபவர்கள் ஏராளம்.

ஆணோ, பெண்ணோ கர்ப்பத்தினால், வரக் கூடிய பொருளாதார, பிள்ளைக் கவனிப்பு சிக்கல்களினால் இந்தியாவில் ஒரு பிள்ளைக்கு மேல் பெற, மதியதர வர்க்கம் தயங்குகிறது.

இங்கே வெள்ளைகள், சும்மா abort பண்ணுவார்கள். 

பத்திரிகை ஒன்று, பணத்தினைக் கொடுத்து, பெண் குழந்தை என்று சொல்ல வைத்து அதனால் தான் abort பண்ணுவது போலவும், இந்த டாக்டர் அதற்காகத் தான் உதவுவது போலவும் கதையை முடித்து விடுகிறார்கள். (taken out of context)

முதல் பிள்ளை ஆணாக இருந்து அடுத்ததும் ஆணாக வந்தால், கலைக்க வேண்டும் ஏனெனில் பெண் குழந்தை தான் வேண்டும், அதேவேளை இரண்டுக்கு மேல் வேண்டாம் என்ற நிலையில் போய் abort பண்ணி வந்த குடும்பங்களும் உண்டு.

இதன் மறுபக்கம் என்னெவெனில், அவர்களுக்கு ஆண்குழந்தை வேண்டும். இரண்டுக்கு மேல் வேண்டாம் என்ற நிலையிலேயே டாக்டர் உதவி செய்திருப்பார்.

இங்கே மருத்துவம் இலவசம். அகவே பணம் இங்கே நோக்கம் இல்லை.

சிறு வயதில் FDM செய்யப்படிருந்த சோமாலியப் பெண் ஒருவருக்கு, குழந்தை கிடைக்கும் போது, அதனை காப்பாத்த, ஒரு இலங்கை டாக்டர் செய்த உயிர்க் காப்பு ஆபரேஷன் ஒன்றை, FDM என்று வழக்குப் போட்டு அலைகழித்து, பின்னர் வழக்கு தள்ளப் பட்டது.

இவ்வளவுக்கும் பல சீனியர் டாக்டர்களும், அந்த சோமாலிய பெண்ணும் அவருக்கு அதரவு தந்தனர். வெள்ளை midwife சொன்ன கதையை வைத்து தான் வழக்கே.

சுப்பையா ரத்னேச்வரன் எனும் எம்தமிழ் டாக்டர் வருஷம் £1.2ம் உழைக்கிறார் என்று UK Sunday Times ல் கட்டுரை போட்டார்கள் (எரிச்சலில் தான்)

அவரோ, நான் மூன்று surgery வைத்திருக்கிறேன். கிழமைக்கு 90 மணி நேரம் வேலை செய்கிறேன். வரி கட்டுகிறேன். இவ்வளவு பேர்களுக்கு வேலை கொடுக்கிறேன். இதில் என்ன பிழை இருக்கிறது என கேட்டார்.

தமிழர்கள், குறிப்பாக இலங்கையர்கள், கல்வித்துறையில், முக்கியமாக மருத்துவத் துறையில் நீக்கமற நிறைந்து இருப்பது பலரது கண்களை உறுத்துகிறது. :rolleyes:

முனி, ஆரோக்கிய நோக்கங்களுக்காக செய்யப் படும் கருக்கலைப்புகள் (medically necessary abortions) பரவாயில்லை. பொருளாதார நோக்கங்களுக்காக கருக்கலைப்பு செய்வது வேடிக்கையானது. பிள்ளை எப்படி உருவாகிறது அதை எப்படி தடுப்பது என்ற அறிவில்லாத ஆட்களா நம் குடியேறிகள்? இந்த லட்சணத்தில் வெள்ளைகள் சும்மா கருக்கலைப்புகள் செய்வார்கள் என்ற நக்கல் வேறு!

கருக்கலைப்பு எதுவாக இருந்தாலும், அது மருத்துவ ரீதியாக அனுமதிக்கப் படாத பிரதேசத்தில் செய்யும் மருத்துவர் தவறு செய்கிறார். அவர் மருத்துவத் துறையில் நீடிக்கவே தகுதியற்றவர் என்பது என் அபிப்பிராயம்! பொதுவாக,குடியேறிகளாக வந்த மருத்துவர்கள் மீது ஒரு சந்தேகப் பார்வை யு.கேயில் இருக்கிறது. இதற்குக் காரணம் எரிச்சல் அல்ல! சில அப்பட்டமான மீறல்கள், ஒழுங்கற்ற மருத்துவ நடவடிக்கைகள் என்பவையே. ஒரு சிலராயினும் குடியேறிகள் செய்த இந்த தவறான செயல்களுக்காக  சகல குடியேறி மருத்துவர்களும் அதிகரித்த கண்காணிப்பில் வைக்கப் பட்டிருப்பது தவிர்க்க இயலாதது. அது நோயாளர்களுக்கு நல்லது என்பது என் கருத்து

(நான் மிருக வைத்தியர், வைத்தியர் அல்ல!)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருக்கலைப்புக்களை சட்ட விரோதமாக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த லட்சணத்தில் வெள்ளைகள் சும்மா கருக்கலைப்புகள் செய்வார்கள் என்ற நக்கல் வேறு!

கருக்கலைப்பு எதுவாக இருந்தாலும், அது மருத்துவ ரீதியாக அனுமதிக்கப் படாத பிரதேசத்தில் செய்யும் மருத்துவர் தவறு செய்கிறார். 

கொஞ்சம் பொறுங்கோ! 

உங்களுக்கு இங்குள்ள நிலைமையை புரிய வைக்க முயல்கிறேன்.

1. பிரிட்டனில் 4 மாதம் வரை கருத்தடை செய்ய தடை எதுவும் இல்லை. (கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் முழுத்தடை.)

2. இருப்பினும், பாலியல் பலாத்காரம், பயமுறுத்துதல் இல்லை என்பதை உறுதிப்படுத்த, குடும்ப டாக்டர் அனுமதி தேவை. பதின்ம வயதாயின் பெற்றோர் சம்மதம் தேவை.

3. இங்கே, தவறாக காண்பிக்கப் படுவது, தவளை தன்வாயால் கெடும் என்பது போல, குடும்ப வைத்தியர் 'பெண் குழந்தை என்பதால்.....' என சொவ்வதால் சிக்கலாகிறது. நன்கு தெரிந்த குடும்ப வைத்தியர் என்பதால் பேசுகிறார். இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு வைத்தியரிடம் தான் பதிவு இருக்கும் என்ற வகையில் வைத்தியரிடம் முன் அறிமுகம் உள்ள யாரோ பத்திரிகை நிறுவனம் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு மாட்டிவிட்டுள்ளனர்.

4. மற்ற வகையில் சட்ட மீறல் எதுவும் இல்லை. அதனால், பொலீசார் விசாரனை இல்லை. துறை ரீதியான விசாரனை மட்டுமே.

5. அதைத்தான் வெள்ளையர் குறிப்பாக கருத்தடை அனுமதிக்கப்படாத கத்தோலிக்கர், முஸ்லிம்கள் கூட இதை (கருக்கலைப்பை) தாராளமாக செய்வர் என்றேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ! 

உங்களுக்கு இங்குள்ள நிலைமையை புரிய வைக்க முயல்கிறேன்.

1. பிரிட்டனில் 4 மாதம் வரை கருத்தடை செய்ய தடை எதுவும் இல்லை. (கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் முழுத்தடை.)

2. இருப்பினும், பாலியல் பலாத்காரம், பயமுறுத்துதல் இல்லை என்பதை உறுதிப்படுத்த, குடும்ப டாக்டர் அனுமதி தேவை. பதின்ம வயதாயின் பெற்றோர் சம்மதம் தேவை.

3. இங்கே, தவறாக காண்பிக்கப் படுவது, தவளை தன்வாயால் கெடும் என்பது போல, 'பெண் குழந்தை என்பதால்.....' என அவர் சொவ்வதால் சிக்கலாகிறது.

4. மற்ற வகையில் சட்ட மீறல் எதுவும் இல்லை. அதனால், பொலீசார் விசாரனை இல்லை. துறை ரீதியான விசாரனை மட்டுமே.

5. அதைத்தான் வெள்ளையர் குறிப்பாக கருத்தடை அனுமதிக்கப்படாத கத்தோலிக்கர், முஸ்லிம்கள் கூட இதை (கருக்கலைப்பை) தாராளமாக செய்வர் என்றேன்.

பெண் சிசுக்கொலை அதிகமாக நிகழும் இந்தியாவில் டாக்டராகி, இங்கே வந்து பரீட்சை பாசாகி தொழில் செய்யும் ஒருவர், "பெண் குழந்தையென்பதால்.." என்று சொல்வது பதிவானால், யு.கே காரன் மட்டுமல்ல, நானும் கூடத்தான் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பேன்! அதன் அடிப்படையில் எல்லா இந்திய டாக்டர்களையும் அதிகமாகச் சந்தேகிப்பேன். இதில் ஒரு தவறும் இல்லை!

நீங்கள் டாக்டரின் செயலை இன்னும் அனுதாபத்தோடு பார்ப்பது தான் எனக்கு ஏனென்று புரியவில்லை. அவர் காரணத்தை மாற்றியெழுதி அவசியமற்ற கருக்கலைப்பு மட்டும் செய்யவில்லை! ஒரு வைத்தியர் எக்காரணத்திற்காகவும் பதிவுகளை மாற்றி (falsification of records) எழுதக் கூடாது! அப்படி செய்வது அவரது லைசென்சை ரத்துச் செய்ய வைக்கக் கூடிய ஒரு குற்றம். இப்படியாகப் பதிவுகளை மாற்றும் ஒருவர் தனது நிபுணத்துவ நம்பகத்  தன்மையை (professional credibility) இழக்கிறார். இன்று இதைச் செய்தவர், நாளைக்கு ஒரு மருந்தை மாற்றிக் கொடுத்த பிறகு தன் பதிவை மாற்றி விட்டு ஒரு கொலையில் இருந்து தப்பி விடவும் கூடும். ஏற்கனவே பல குடியேறி வைத்தியர்கள் NHS இடம் காசு பிடுங்கும் வேலைகளில் பதிவுகளை மாற்றி எழுதிய செய்திகலும் உண்டு. 

ஜஸ்டின்,

நீங்கள் டாக்டரின் Professional conduct குறித்தே பார்வையை செலுத்துகிறீர்கள்.

எனது பார்வை, ஆரம்பத்தில் இருந்தே இவரை பணத்திற்காக மாட்ட வைத்த பெண்ணின் மனப்பாங்கு பற்றியது.

ஆகவே, இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க வழியில்லை.

ஐயா ! நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பெண் சிசுக்கொலை அதிகமாக நிகழும் இந்தியாவில் டாக்டராகி, இங்கே வந்து பரீட்சை பாசாகி தொழில் செய்யும் ஒருவர், "பெண் குழந்தையென்பதால்.." என்று சொல்வது பதிவானால், யு.கே காரன் மட்டுமல்ல, நானும் கூடத்தான் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பேன்! அதன் அடிப்படையில் எல்லா இந்திய டாக்டர்களையும் அதிகமாகச் சந்தேகிப்பேன். 

இப்படியெல்லாம் சந்தேகித்தால் நீதிமன்றம்தான் போகவேண்டி வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கிராமங்களில், பத்து வருடங்களுக்கு முன் பெண்சிசுக் கொலை என்பது சர்வ சாதாரணம்.
இப்போ சமூக அமைப்புகளும், காவல் துறையும், அரசும்..... பெண்சிசுக் கொலை செய்பவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கின்றது.
இந்த டாக்டர்கள், இந்தியாவில் படிக்கும் போது.... தங்கள் கிராமங்களில் சர்வ சாதாரணமாக நடந்த பெண்சிசுக் கொலைகளை கேள்விப் பட்டு இருந்திருப்பார்கள். அது... அவர்களின் சிறு வயதில், பெரிய குற்றமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன்.
அதனை இங்கிலாந்தில் தாம் செய்யும் போது... சட்டம் இவ்வளவு வேகமாக பாயும், என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
டாக்டருக்கு படித்தும், பெண்சிசுக் கொலைக்கு.... உடந்தையாக இருந்தது மாபெரும் குற்றம்.
புத்தகப் படிப்பு மட்டும், மனிதனை.... முழு மனிதனாக மாற்றி விடாது, என்பதற்கு... இந்தச் சம்பவம் நல்லதொரு படிப்பினை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.