Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதிகள் விடயத்தில் சம்பந்தன் அசமந்தம் : சுரேஸ்

Featured Replies

கைதிகள் விடயத்தில் சம்பந்தன் அசமந்தம் : சுரேஸ்
 
கைதிகள் விடயத்தில் சம்பந்தன் அசமந்தம் : சுரேஸ்
அரசியல் கைதிகள், தங்கள் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க, அவர்களை 7ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக நேரில் சென்று உறுதிமொழி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இந்தியா, டெல்லியில் இருப்பது முறையல்ல எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
 நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருத்துவ சிகிச்சையென்பது முக்கியமானது. ஆனால், தமிழர்களின் தலைமைக் கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படுபவர், முக்கியமான மக்கள் பிரச்சினையொன்று இங்கு காணப்படும் வேளையில், மருத்துவ சிகிச்சைக்குச் செல்வது அநாகரிகமானது. இப்பிரச்சினையைத் தீர்த்த பின்னர், தனது மருத்துவ சிகிச்சைக்குச் சென்றிருக்கலாம்' என்றார்.அல்லது அவர் கைதிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் முகமாக ஒரு குழுவை நியமித்து விட்டுச் சென்றிருக்கலாம்.
 
'கடந்த 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்ததாக, சம்பந்தன், சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்குக் கூறியிருந்தார். ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. 61 கைதிகளுக்குப் பிணை வழங்குவதாகத் தற்போது கூறப்படுகின்றது. அப்படியென்றால் மிகுதிப் பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படவுள்ளனரா? 5, 10 மற்றும் 20 வருடங்கள் எனச் சிறையில் இருப்பவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். 
 
ஆயுட்காலச் சிறைத்தண்டனை என்று கூறப்படுபவர்கள் கூட, 14 வருடங்களில் வெளியில் செல்ல முடியும். ஆனால், பல வருடங்களாக சிறைகளில் உள்ளவர்களுக்கு விசாரணைகள் நடைபெறாமல் உள்ளன' என்றார்.
 
'தற்போது மீண்டும், அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். முழுமையான பதில் வேண்டும் என அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். கைதிகள், உண்ணாவிரதம் இருக்கக்கூடிய உடல்நிலையில் இல்லை. அவர்கள் வாழ்வா, சாவா என்னும் நிலையில் உள்ளனர். ஆகவே, சம்பந்தன் உடனடியாக இந்தியாவிலிருந்து நாடு திரும்ப வேண்டும்' எனக் கூறிய அவர், கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறிய தமிழ்த் தலைமைகள் எவரும் தற்போது நாட்டில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் அவுஸ்.. இன்னொருவர் டெல்லி. உலகில் பண்பான நாடுகளின் தலைவர்கள் தம் மக்களுக்கு ஒன்று என்றவுடன் எல்லா நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு நாடு திரும்புவார்கள்.. மக்களை தெம்பூட்டவும்.. நிகழ்வுகளை நேரிருந்து கவனிக்கவும். எங்களுக்கு காலம் காலமாக (தேசிய தலைவரை தவிர) வாய்ந்த சட்டாம்பிகள் எல்லாம் இப்படியான மொள்ளமாரித் தலைவர்களாக இருந்தது தான்... யதார்த்தம். கேவலம் கெட்டதுகள்.

கருணாநிதிக்கு முள்ளிவாய்க்காலோடு வந்த முதுகுவலி அதுக்கு அப்புறம் அறவே வரவில்லை. ஒருக்காலும் ஒரு ஆஸ்பத்திரிக்கும் போனதில்லை..கவனிப்பு. அந்த வகைகள் தான் இவை. :rolleyes:tw_cold_sweat:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இப்படியான சந்தர்ப்பங்களில் நாட்டில் இருக்க மாட்டார். கதிரையா, அரசியல் கைதிகளா? 

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லி சென்ற சம்பந்தன் உடன் நாடு திரும்ப வேண்டும்! - சுரேஸ் பிரேமச்சந்திரன்
[Thursday 2015-11-12 18:00]
அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருக்கும் நிலையில், அவர்களை கடந்த 7ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக ஜனாதிபதியின் உறுதிமொழியை அவர்களிடம் கூறியஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், டெல்லியில் இருப்பது சரியில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருக்கும் நிலையில், அவர்களை கடந்த 7ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக ஜனாதிபதியின் உறுதிமொழியை அவர்களிடம் கூறியஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், டெல்லியில் இருப்பது சரியில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

  

நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 'ஒருவருக்கு, மருத்துவ சிகிச்சையென்பது முக்கியமானது. ஆனால், தமிழர்களின் தலைமையான கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படுபவர், முக்கியமான மக்கள் பிரச்சினையொன்று இங்கு காணப்படும் வேளையில், மருத்துவ சிகிச்சைக்குச் செல்வது அநாகரிகமானது.

இப்பிரச்சினையைத் தீர்த்த பின்னர், தனது மருத்துவ சிகிச்சைக்குச் சென்றிருக்கலாம். கடந்த 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்ததாக, சம்பந்தன், சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்குக் கூறியிருந்தார். ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. 61 கைதிகளுக்குப் பிணை வழங்குவதாகத் தற்போது கூறப்படுகின்றது. அப்படியென்றால் மிகுதிப் பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படவுள்ளனரா?

5, 10 மற்றும் 20 வருடங்கள் எனச் சிறையில் இருப்பவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஆயுட்காலச் சிறைத்தண்டனை என்று கூறப்படுபவர்கள் கூட, 14 வருடங்களில் வெளியில் செல்ல முடியும். ஆனால், பல வருடங்களாக சிறைகளில் உள்ளவர்களுக்கு விசாரணைகள் நடைபெறாமல் உள்ளன' என்றார். 'தற்போது மீண்டும், அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். முழுமையான பதில் வேண்டும் என அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். கைதிகள், உண்ணாவிரதம் இருக்கக்கூடிய உடல்நிலையில் இல்லை. அவர்கள் வாழ்வா, சாவா என்னும் நிலையில் உள்ளனர். ஆகவே, சம்பந்தன் உடனடியாக இந்தியாவிலிருந்து நாடு திரும்ப வேண்டும். கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறிய தமிழ்த் தலைமைகள் எவரும் தற்போது நாட்டில் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=144632&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். கைதிகள், உண்ணாவிரதம் இருக்கக்கூடிய உடல்நிலையில் இல்லை. அவர்கள் வாழ்வா, சாவா என்னும் நிலையில் உள்ளனர். ஆகவே, சம்பந்தன் உடனடியாக இந்தியாவிலிருந்து நாடு திரும்ப வேண்டும். கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறிய தமிழ்த் தலைமைகள் எவரும் தற்போது நாட்டில் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.

 

 

இவருக்கு இது தெரியாமல் இருப்பதை  ஏற்றுகொள்ள முடியாது ....? எப்போதாவது தமிழன் வாழ்வா சாவா என்று வதை படும்போது எங்கடை தலைமைகள் நாட்டில் இருந்திருக்கிறார்களா .....? 

தாத்தா நாடு திரும்பினாலும் ... அந்தக் கதிரையைப் பார்த்தவுடன் ... நாணம் வந்திடும்! .. பின்பு வெட்கப்பட்டு பேச மாட்டார்! ... வந்தாலும் ஒண்டுதான், வராவிட்டாலும் ஒண்டுதான்!

பாவம் சுரேஷ் மக்கள் ஏமாற்றிய கோவம் இன்னமும் தீரவில்லை போலிருக்கு .

கஜே & கஜே கோஸ்டிகள் மாதிரி இனி சும்மா கத்தவேண்டியதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, arjun said:

பாவம் சுரேஷ் மக்கள் ஏமாற்றிய கோவம் இன்னமும் தீரவில்லை போலிருக்கு .

கஜே & கஜே கோஸ்டிகள் மாதிரி இனி சும்மா கத்தவேண்டியதுதான் 

மண்டையன் குழு தலைவருக்கு இருக்கும் ஏமாறமான விரக்தி மனோநிலையே கஜேகஜே குழுவை இறக்கிவிட்ட புலன்பெயர் கோஸ்டிக்கும் இருக்கும் என எண்ணுகின்றேன். அந்த வகையிலேயே அவர்களின் புலம்பல்களும் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. இந்த trauma காசு நோட்டுக்களால் ஒருவேளை குணமாகலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 12.11.2015, 10:03:58, satan said:

அவர் இப்படியான சந்தர்ப்பங்களில் நாட்டில் இருக்க மாட்டார். கதிரையா, அரசியல் கைதிகளா? 

எதிர்க் கட்சித்   தலைவர். சம்பந்தன் மாத்தையாவை ......
அகில ஸ்ரீலங்காவில் வாழ்ந்து கொண்டு இருக்கும்....  
சிங்கள, தமிழ், முஸ்லீம், பறங்கி, வேடுவர்....போன்ற இனம் எல்லாம் தெரிந்து, எடுத்து வைத்து அழகு பார்க்கிறார்கள்.  
அந்தாள்..... தமிழனின் மானத்தை காப்பாற்ற, வக்கில்லாமல்... கொட்டாவி,  விட்டுக் கொண்டு இருக்குது. 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.