Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடாநாட்டு மக்களுக்கு குடிநீர் வழக்கும் திட்டத்துக்கு எதிராக வடமராட்சி கிழக்கு மக்கள் உண்ணாவிரதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளவுள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடமராட்சி கிழக்கு மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினர். வடமராட்சி கிழக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நெய்தல் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை பத்து மணி முதல் நண்பகல் 12 வரை அடையாள எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளவுள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடமராட்சி கிழக்கு மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினர். வடமராட்சி கிழக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நெய்தல் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை பத்து மணி முதல் நண்பகல் 12 வரை அடையாள எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

   

வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்தே மேற்படி திட்டத்திற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். தங்களுடைய கோரிக்கைகளை ஏற்று இத்திட்டத்தை வடக்கு மாகாண சபை நிறுத்த வேண்டும் எனவும் தவறின் தாங்கள் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் உண்ணாவிரத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் குடாநாட்டுக்கான இரனைமடு திட்டத்திற்கு கிளிநொச்சி விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக மாற்று திட்டமாக வடமராட்சி கிழக்கு கடலில் இருந்து கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும் வடக்கு மாகாண சபையும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே வடமராடசி கிழக்கு மக்கள் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

மேற்படி திட்டத்தினால் தங்கள் கடல் பரப்பில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அற்றுப்போவதனால் ஜயாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் எனவும் குறிப்பிடும் பொது மக்கள், இத்திட்டம் தொடர்பாகவும் அதனால் கடற்றொழிலுக்கு ஏற்படும் பாதிப்ப தொடர்பிலும் பல துறைசார் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டறிந்தும் யாழ் பல்கலைக்கழகத்தின் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களின் படியும் மேற்படி கடல் நீரை நன்னீராக்கும் செயற்பாடு கடல் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டம் என்பதனாலேயே தாங்கள் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராட்டத்தில் ஈடுப்படவேண்டி ஏற்பட்டது எனவும் தெரிவித்தனர்.

வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் தனது நலன்களுக்காக ஜயாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் நலன்களை பழியிடுகின்றார் எனவும் மக்கள் குற்றம் சாட்டினர். அத்தோடு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்கள் ஜங்கரநேசனே நீ சர்வதிகாரியா? ஜனநாயகவாதியா?, எங்கள் வாழ்வும் வளமும் இந்தக் கடல், உங்கள் ஆய்வின் விசித்திரம் சுண்ணாகம் நீரில் தெரிந்ததே, எங்கள் கடலில் சொட்டு நீர் எடுக்கவும் விடமாட்டோம், எங்கள் வயிற்றில் அடித்து உங்கள் சட்டைப் பையை நிரப்பாதே, பிரச்சினையில் ஏன் வடக்கு மீன் பிடி அமைச்சர் தலையிடவில்லை, போன்ற பல்வேறு சுலோகங்கள் அடங்கிய வாசகங்களை ஏந்தியவாறு உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தான் குறித்த விடயத்தை மாகாண சபைக்கு எடுத்துச் சென்று அங்கு ஒரு நாள் விவாதமாக நடத்தி தீர்வு காண்பதாகவும், அத்தோடு முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாகவும் தெரிவித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதில் எதிர் கட்சித்தலைவர் சம்பந்தன் அவர்களுக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை சுகிர்தனிடமும், ஜனாதிபதிகான மகஜரை பிரதேச செயலாளரிடமும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர்.

 

vada-east-demo-231215-seithy%20(1).jpg

 

 

vada-east-demo-231215-seithy%20(2).jpg

 

 

vada-east-demo-231215-seithy%20(3).jpg

 

 

vada-east-demo-231215-seithy%20(4).jpg

 

 

vada-east-demo-231215-seithy.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=147643&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தை சுற்றி கடல் இருக்கு ....
இங்கு இருந்து 18 மையில் தாண்டி ஏன் தண்ணி என்றால் ?

 

பம்மாத்து பேசுகிறார்கள் ....கீழே கல்லிருக்காம்.

 

கல்லுக்குள் ஏன் நீ போகிறாய் கடல் மட்டத்தில் இருந்து வெறும் 10 அடி உயரத்தில் வைத்து எடுத்தாலே போதுமே .....
யாழ் குடாவிற்கு நீர் எடுத்து கடல் வற்றிவிடும் ....என்ற மாதிரிதான் கதை விடுகிறார்கள்.

 

அவன் அவன் உமாதீவு (மாலைதீவு) இலங்கையெல்லாம் கடலுக்குள் போய்விடும் என்று சொல்லிக்கொண்டு திரிகிறான்.

10 அடி நீர் மட்டம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது நேற்று யாழில் நின்ற நீர் தான்
நாளை மருதங்கேணிக்கு வருகிறது ...

 

அடிமட்டத்தில் இருக்கும் கல்லை கட்டுறான் ....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் எதிர்காலம் பளிச்செண்டு தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

தமிழினத்தின் எதிர்காலம் பளிச்செண்டு தெரியுது.

ஒரு அண்ணன் தம்பி காணி வாங்கினால்

வாங்கியவுடன் இருபகுதியாகப்பிரிப்பார்கள்

பிரிக்கும் போது

நிச்சயமாக இருவரும் அந்த இடத்தில் நிற்பார்கள்

காரணம் அவ்வளவு நம்பிக்கை.

ஒரு அங்குலமேனும் நகர்ந்துவிட்டால்.....??

தமிழேண்டா...........

  • கருத்துக்கள உறவுகள்

எமது  ஊரும் (புங்குடுதீவு) அதே 18 மைல்கள் தான்

 கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு  எமது ஊரைப்பயன்படுத்த பூரணமாக உதவமுடியும்

அதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் பெற்றுத்தரமுடியும்

ஒரேயொரு நிபந்தனை

அவ்நன்னீர்த்திட்டத்தின் மூலம் எமது ஊர் மக்களும் நன்னீர் பெறணும்.

நாங்க தயார்

நீங்க.......

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

எமது  ஊரும் (புங்குடுதீவு) அதே 18 மைல்கள் தான்

 கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு  எமது ஊரைப்பயன்படுத்த பூரணமாக உதவமுடியும்

அதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் பெற்றுத்தரமுடியும்

ஒரேயொரு நிபந்தனை

அவ்நன்னீர்த்திட்டத்தின் மூலம் எமது ஊர் மக்களும் நன்னீர் பெறணும்.

நாங்க தயார்

நீங்க.......

பூகோள ரீதியான அமைவிடம்தான் கவனத்தில் கொள்ள வேண்டியது

 

புங்குடுதீவை சுற்றி  கடல் இருக்கிறது
மண்டை தீவு பகுதியில் ஓர் குறிப்பிட்ட பகுதியில்தான் மக்கள் இருக்கிறார்கள்
மிகுதி இடம் சும்மா இருக்கிறது.

 

மருதங்கேணியில் கடல் வெறும் 1 மையில் நீளம்தான் அதிலும் கோவில்
அது இது என்று தள்ளி விட்டால் ஒரு குறிப்பிட்ட பகுதியே மக்கள் தேவையாக இருக்கிறது.

 

இப்போ சுன்னாகத்தில் கழிவு நீரை ஊற்றி நாசம் செய்தார்கள்
இதற்கு அதிகபடியான மின்சாரம் தேவை ....
மின் உற்பத்தி தேவை ....

 

உப்பை வெப்ப நீரை கடலில் ஊற்றுவார்கள்
மீன் வளம் கரையோரத்தில் அழிந்துவிடும்.
மீனின் இன பெருக்கம் குறைவடையும்.

 

அங்கு இங்கு ஊழல் செய்து எதை எதை ஊரில் ஊற்றுவார்கள் என்றே தெரியாது.

 

2 மையிலில் இருக்கும் நீரை எடுக்காது
ஏன் இங்கு வருகிறார்கள் .....
சரியான காரணமாக 400 meter ஆழத்தில் இருக்கும் கல்லை காட்டலாமா ?

 

விட்டா கடலுக்குள் கிணறு கிண்டி நீர் எடுக்க போகிறோம் என்று சொல்வார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் இருந்து நீரை எடுக்கும் பொழுது மீன் முடடைகள் எல்லாம் அள்ளுண்டு போக வாய்ப்புண்டு.அத்துடன் பவளப்பாறைகள் அழிந்து போகவும் வாய்புண்டு. யாழ்க்குடாநாட்டில் பல இடங்களில் சிறு பற்றைக்காடுகள் பல இருக்கின்றன. அவற்றால் பெரிய பிரயோசனம் இல்லை.மாடுகளின் மேச்சல் நிலமாயினும் புல் அடர்தியாக வளர்வதில்லை. காய்ந்த புற்களையே மாடுகள்  மேய்கின்றன. உதாரணமாக யாழ்பண்ணை வீதியில்  அல்லைப்பிட்டி வெளி.அராலிவெளி எனப்படும் துலையாக்காடு போன்ற பெரு வெளிகளில் மழைநீரைத் தேக்குவதே செலவு குறைந்த எளிமையான மக்கள் எதிர்பின்றிய வழிமுறை. மேலும் தீவுப்பகுதியே நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் முக்கிய பிரதேசமாகும். அதைவிட யாழ்நகருக்கு மிக அண்மையில் இருப்பதால் யாழ்நகருக்கான குடிநீர்த்தேவையையும்  குறைந்த செலவில்  நிவர்த்தி செய்யலாம். தேவை பலமான அணை ஒன்றைக் கட்டுவதும் மேலதிக மழைநீரை வாய்க்கால்கள் அமைத்து இந்த நீர்த்தேக்கத்துக்கு கொண்டுவருவதற்குமான செயற்திட்டமுமாகும்.இது இலகுவான முறை. கடல்நீரை நன்னீராக்கவதென்றால் பாரிய இயங்திரங்கள் தேவை அவற்றை இயக்குவதற்கான மின்சாரம்இஎரிபொருள் என்று செலவுகூடவரும். அத்துடன் அவற்றின் கழிவுகள் சூழலில் மாசை எற்படுத்தும். மீண்டும் சுன்னாகம் எண்ணெய் படிந்த நிரின் நிலமை ஏற்படலாம். இரணைமடுநீர் கிளிநொச்சிக்குத் தேவை அந்த நீரை வடக்கு கொண்டுவரச் செய்தால் இரபிரதேச மக்களுக்குமான உறவுகள் பாதிக்கப்படும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் புத்திசாதுரியமாகவும் திட்டமிட்டும் சிங்களம் செய்யவேண்டியதை தமிழர் தாமே செய்யத் தலைப்பட்டுள்ளமையானது, ஆனை தனது தலையிலே தானே மண்ணள்ளிக்கொட்டியமைக்குச் சமனாகும். மிகப்பெரும் அழிவுக்கு முகம்கொடுத்த இனமொன்றாகத் தமிழினம் இல்லையென்பதையே இதுபோன்ற கயிறிழுத்தல்கள் காட்டிநிற்கின்றன. மாகாணங்களைச் சிங்களம் பிரிக்கப் பிரதேசம் தொகுதி வட்டாரம் நகரம் ஊர் கிராம் தெரு ஒழுங்கையென்று  நாம் பிரிந்தால் பிறகென்ன(?) சிங்கள மற்றும் கிந்திய அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு வெற்றிக் கனியை இலகுவாகக் கூப்பிட்டே கொடுத்தவராவோம். 

இதற்கான தீர்வை வடமாகாணசபையும் அதனது விவசாய நீரியல் குடிசார் அமைப்புகள் மற்றும் குமுகாய அமைப்புகள் என்பன ஒருங்கிணைந்து திட்டமிட வேண்டிய விடயம்.  யாழ்ப்பாணத்தையும் தீவகத்தையும் இணைக்கும் பண்ணைப்பாலத்துக்கு அண்மையாகவே இதற்கான பொறித்தொகுதியை அமைக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது. ஆழமற்ற பகுதிகளைத் தெரிவுசெய்து உரிய திட்டமிடலோடு செய்யப்படுமாயின் வெற்றியளிக்கும். கடலால் சூழப்பட்ட தாயகத்திலே அதுவும் மூன்றுபக்கமும் கடலால் சூழப்பட்ட குடாநாட்டுக்கு வடமராட்சிகிழக்கிலிருந்தூன் நீரை எடுத்துவரவேண்டுமா? என்ற வினா நியாயமானது என்பதை மறுக்கமுடியாது. அதேவேளை எமக்குள்ளேயே உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டமென்று செய்து முரண்நிலைகளைத்தோற்றுவிக்காது கலந்துரையாடல்கள் ஆய்வுகள் மூலமாகத் தீர்வுகளைத் தேடுவதே பொருத்தமானதாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியொரு திட்டத்தை எமது ஊரில் செய்வதற்கான சில முயற்ச்சிகளை எடுத்தோம்.

ஆனால் பெரும் தொகைப்பணம் (60 மில்லியன் ரூபாக்கள்) 

அதைவிட அதைப்பராமரிக்க 2 வருடத்துக்கொருமுறை (சுத்தம் செய்ய)  மீண்டும் பெரும் தொகைப்பணம் (20 மில்லியன் ரூபாக்கள்) தேவைப்படுகிறது.

எனவே எமது வலுவுக்கு மேற்பட்டதாக இருந்ததால் பின் வாங்கினோம்.

இது அரச அல்லது அரசசார்பற்ற பலமான அமைப்புக்களால் மட்டுமே செய்யமுடியும். தொடர்ந்து பராமரிக்கமுடியும். 

எல்லாப்பக்கமும் பெருங்கடல்களால் சூழப்பட்ட எமது பிரதேசம் இதனால் எந்தவகையிலும் பாதிக்கப்படமாட்டாது.

மேலும் இது போன்ற திட்டத்தை ஏற்கனவே நெடுந்தீவிலும் காரைநகரிலும் இராணுவத்தினர் செயற்படுத்தி வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஊரிலும் உள்ள குளம் குட்டைகளை தூர்வாரி பெய்யும் மழைநீரை கடலுக்குள் போகாமல் தடுத்து தேக்கினால். எல்லா ஊரின் தண்ணீர் பஞ்சமும் தீரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.