Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு'

Featured Replies

வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு'

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

'வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு'
 'வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு'

தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் என்பவற்றிலேயே இந்த 700 ஏக்கர் காணிகளையும் உரியவர்களிடம் கையளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

திங்களன்று கொழும்பில் ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், இது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்ற யாழ் மாவட்ட அரச செயலக அதிகாரிகள் குழுவொன்று அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ளது.

அதிகாரிகளின் இந்த விஜயத்தையடுத்து, அந்தப் பிரதேசத்தில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் அங்கு சென்று தமது காணிகளின் எல்லைகளை அடையாளம் காட்டவும், அவ்வாறு அடையாளம் காணப்பட்டதன் பின்னர் வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீள் குடியேற்றவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார் யாழ் அரச அதிபர் வேதநாயகன்.

வலிகாமம் வடக்கில் இருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில், சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் இன்னும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாதிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பலாலி மற்றும் அதனைச் சூழ்ந்த சுமார் ஆறாயிரம் ஏக்கர் காணிகளில் இந்த மக்கள் பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து வந்தார்கள் என்பதும், இடம்பெயர்ந்து 25 வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலைமை தொடர்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு அதற்காகப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் எற்பட்டதையடுத்து, இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரம் ஏக்கர் வரையிலான காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன. அதன் தொடர் நடவடிக்கையாகவே இப்போது 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/12/151229_valinorth

  • கருத்துக்கள உறவுகள்

2015 முடிவிலையே 2016 இன் நற்செய்தி தொடங்கிவிட்டது. இனி விக்கி குறூப் வந்து உள்ளூரட்சி தேர்தல் அது இது எது எண்டு நிக்கத்தான் லாயக்கு!

இப்படியெல்லாம் நடப்பது பலருக்கு பிடிக்காது .

ஒரேயடியாக தீர்வை வை என்று நிற்கின்றார்கள் ,

பிறகு ஆட்சி மாற்றம் வந்து சிங்களவனிடம் அடிவாங்கி அடிக்கின்றான் அடிக்கின்றான் என்று கத்துவதில் ஒரு இன்பம் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு அதற்காகப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன.

நான் நினைத்தேன் (சம் + சும்  + காவடீஸ்) ஒரே நாளில் செய்தி காட்டிய அதி தீர செயல் என்று. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுவித்தால், யாரொருவர் ஆடாதாரோ கண்ணா...

இப்படி எல்லாம் திருப்பிக் கொடுக்குமாறு, சிங்களத்தினை ஆட்டுவிப்பது யாரோ ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஆட்டுவித்தால், யாரொருவர் ஆடாதானே கண்ணா...

இப்படி எல்லாம் திருப்பிக் கொடுக்குமாறு, சிங்களத்தினை ஆட்டுவிப்பது யாரோ ?

சீச்சீ நீங்கள் அப்படியெல்லாம் சந்தேகப்படக்கூடாது! எல்லாம் எங்கடை ராசவரோதயம்  சம்பந்தரையாவின்ரை ராயராயதந்திரம்.

நீண்ட கால போராட்டம் ஆட்சி மாற்றமில்லாமல் சாத்தியமாகியிராது .அதை சாத்தியமாக்கியது சம் சும் கோஸ்டிதான் 

நீண்ட காலமாக முன் வைக்கபட்ட கோரிக்கைளும் போராட்டங்களும் ஏன் இவ்வளவு நாட்களும் சாத்தியமாகவில்லை .

அந்த சாத்தியத்தை உருவாக்கியதை பற்றித்தான் நாங்கள் பேசுகின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, arjun said:

நீண்ட கால போராட்டம் ஆட்சி மாற்றமில்லாமல் சாத்தியமாகியிராது .அதை சாத்தியமாக்கியது சம் சும் கோஸ்டிதான் 

அநியாயத்துக்கு அப்பாவியா இராதைங்க அண்ண.

மேற்கு, பணியாரம் வேண்டுமா? கிலுகிலுப்பை வேண்டுமா என்று, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கேட்ட கேள்வியால, நம்மட ஆக்கள், புலம், களம் எல்லாரும் பணியாரம் எண்டு சொல்ல, சர்வதேச விசாரணையா, லோக்கல் விசாரணையா எண்ட அடுத்த கேள்வியில் சிங்களமும் மடங்க.... நடக்க வேண்டியது தானா நடக்குது.

உங்க எந்த கோஸ்டியலும் ஒண்டும் புடுங்க இல்லை என்பதே உண்மை.

மேற்குக்கு தேவை, பொருளாதார தளம் காண, அமைதியான இலங்கை. 

  • கருத்துக்கள உறவுகள்

2015 ஆம்  ஆண்டின் மிகச்சிறந்த அரசியல் துணுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sasi_varnam said:

2015 ஆம்  ஆண்டின் மிகச்சிறந்த அரசியல் துணுக்கு 

எது வர்ணத்தார்?

1 minute ago, Nathamuni said:

அநியாயத்துக்கு அப்பாவியா இராதைங்க அண்ண.

மேற்கு, பணியாரம் வேண்டுமா? கிலுகிலுப்பை வேண்டுமா என்று, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கேட்ட கேள்வியால, நம்மட ஆக்கள், புலம், களம் எல்லாரும் பணியாரம் எண்டு சொல்ல, சர்வதேச விசாரணையா, லோக்கல் விசாரணையா எண்ட அடுத்த கேள்வியில் சிங்களமும் மடங்க.... நடக்க வேண்டியது தானா நடக்குது.

உங்க எந்த கோஸ்டியலும் ஒண்டும் புடுங்க இல்லை என்பதே உண்மை.

மேற்குக்கு தேவை, பொருளாதார தளம் காண, அமைதியான இலங்கை. 

மேற்கு ,இந்தியா தான் ஆட்டுவிக்கின்றது என்பது தெரிந்த விடயம் ஆனால் அவர்கள் தமிழர்கள் தரப்பில் தொடர்பு வைத்திருப்பது சம் சும் கோஸ்டிகளிடம் தானே? 

சம் சும் கோஸ்டி மீது உள்ள குற்றசாட்டே மேற்கு ,இந்தியா சொற்படி ஆடுகின்றார்கள் என்பதுதானே .

தமிழர்களுக்கு தீர்வு வந்தாலும் அது சம் சும் கோஸ்டியால் வந்தால் வேண்டாம் என்பது பலர் நிலைப்பாடு 

மேற்கிற்கு தேவை அமைதியான இலங்கை என்றால் முப்பதுவருடங்கள் போர் நடக்கும் போது என்ன செய்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, arjun said:

மேற்கு ,இந்தியா தான் ஆட்டுவிக்கின்றது என்பது தெரிந்த விடயம் ஆனால் அவர்கள் தமிழர்கள் தரப்பில் தொடர்பு வைத்திருப்பது சம் சும் கோஸ்டிகளிடம் தானே? 

சம் சும் கோஸ்டி மீது உள்ள குற்றசாட்டே மேற்கு ,இந்தியா சொற்படி ஆடுகின்றார்கள் என்பதுதானே .

இல்லை....

புலம் பெயர் அமைப்புகளும் அடக்கம். எல்லோரும் நிகழ்ச்சி நிரலுக்குள்... 

இருந்து பாருங்கள்... புதிய அரசியல் அமைப்புடன்..... இலங்கையின் எல்லா மாகாண சபைகளும் கலைக்கப் படும். விக்கியரும் வீடு போவார்.

நாடு நாலு அல்லது ஐந்து பகுதிகளாக பிரிக்கப் படும்.தமிழுக்கு கூட என்றால் தானே முனுமுனுப்பு..., எதிர்ப்பு..  சகல பிரிவுகளுக்கும் சமமான அதிகாரம் கிடைக்கும். ஒருவரும் குறை சொல்ல முடியாத நிலையில் தீர்வு வரும்.

மேற்கு நேரடியாக எதுவும் செய்வதில்லை அதற்கு மக்களின் பிரதிநிதிகளை தான் அணுகுகின்றார்கள் இல்லாவிட்டால் அவர்கள் விருப்பம் நிறைவேறாது .

4 minutes ago, Nathamuni said:

கடைசி வரையும் நீங்கள் மேலே எழுதியது நடக்க சாத்தியமேயில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, arjun said:

மேற்கு நேரடியாக எதுவும் செய்வதில்லை அதற்கு மக்களின் பிரதிநிதிகளை தான் அணுகுகின்றார்கள் இல்லாவிட்டால் அவர்கள் விருப்பம் நிறைவேறாது .

மேற்கு, சந்திரிகா, ரணில், மைத்திரி, சம்பந்தர் மூலம், கை மீறாத வரை காய் நகர்த்தும். 
கை மீறினால், எதுவும் செய்யும். மகிந்தர் கை மீறினால், முதலில் குடியியல் உரிமை இழப்பார். அதற்கும் மசியாவிடில் உள்ள தான். நாமலின் வெளி நாட்டுப் பணம், அமெரிக்க உதவி இல்லாமல் கண்டு பிடித்திருக்க முடியாது. அதே போல், சௌதி, கல் எறி தண்டனைக்குள்ளான பெண் தப்பியது அமெரிக்க உதவி. பலம் காண் பிக்கப் படும் வேலைகள். 

இதுவும் உங்கள் கற்பனை மட்டுமே .

இப்படி உடனே எதையும் செயற்படுத்தும் நிலையில் மேற்கு என்றும் நடந்ததில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

மேற்கு நேரடியாக எதுவும் செய்வதில்லை அதற்கு மக்களின் பிரதிநிதிகளை தான் அணுகுகின்றார்கள் இல்லாவிட்டால் அவர்கள் விருப்பம் நிறைவேறாது .

கடைசி வரையும் நீங்கள் மேலே எழுதியது நடக்க சாத்தியமேயில்லை 

முதல் உரையின் போது, எதிர்கட்சி தலைவர், கோடு காட்டி இருந்தாரே, கவனித்தீர்களா ? ( நாடு நான்கு அல்லது ஐந்து ஆகப் பிரிய வேண்டும் என்று)

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, arjun said:

நீண்ட கால போராட்டம் ஆட்சி மாற்றமில்லாமல் சாத்தியமாகியிராது .அதை சாத்தியமாக்கியது சம் சும் கோஸ்டிதான் 

நீண்ட காலமாக முன் வைக்கபட்ட கோரிக்கைளும் போராட்டங்களும் ஏன் இவ்வளவு நாட்களும் சாத்தியமாகவில்லை .

அந்த சாத்தியத்தை உருவாக்கியதை பற்றித்தான் நாங்கள் பேசுகின்றோம் .

சிங்களம் என்ன தான் மாற்றங்களை விரும்பினாலும்

எப்பொழுதுமே தமிழர்களின் வாக்குத்தான்

 சிங்களத்தின் ஆட்சியை தீர்மானித்துள்ளன

மகிந்தவை அகற்றணும் என்ற முடிவை தமிழர்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கினார்களே தவிர

மகிந்தவை அகற்றணும் என்ற முடிவு

தமிழர்களாலோ சம் சும் ஆலோ எடுக்கப்பட்டதல்ல..

விரலுக்கு ஏற்ப நாம் சிந்திக்கவேண்டியதும்  செயற்பட வேண்டியதும் வரலாறு தரும் பாடம்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, arjun said:

இதுவும் உங்கள் கற்பனை மட்டுமே .

இப்படி உடனே எதையும் செயற்படுத்தும் நிலையில் மேற்கு என்றும் நடந்ததில்லை 

மேற்கு எதற்காக இலங்கையில் ஈடுபாடு காட்டுகிறது என இங்கே பல முறை கூறி உள்ளேன். 

பலர் ராணுவ தளம் என்கிறார்கள். பாரிய, நடமாடும் விமானத்தாங்கி கப்பல்கள் வந்த பின்னர் அந்த தேவை இல்லை.

ஆனால், மத்திய கிழக்கில், நம்பிக்கை மிக்க இஸ்ரேல் போன்று, இலங்கையின் வடக்கு கிழக்கு, ஹாங்கொங்கை இழந்த மேற்கின் பொருளாதார தளம் குறித்த நம்பிக்கைப் பிரதேசம்.

சிங்களம் எமது உரிமைகளை மறுதலிப்பதே ஈழம் வாதிகளின் இன்றைய நம்பிக்கை.

ஆனால் சிங்களம் அந்தளவு உலகம் புரியாத முட்டாள் தனத்தில் இல்லை என்பது எனது கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

முனி உங்களின் பொருளாதர பார்வை இங்கு எடுபடாது .இங்கே சும்மா அடிபாடு மட்டுமே நடக்கும்.

சந்தோஷமான செய்தி! :)

  • கருத்துக்கள உறவுகள்

வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு'

நல்ல செய்தி..

ஆனால் இதே மக்கள் அவற்றை எடுத்ததும் விற்பனை செய்யமுயல்கிறார்கள்

புலம் பெயர் தமிழர்களே இதில் முதன்மையானவர்களாக உள்ளனர்.

இதைத்தடுக்க முடிந்தவரை எம்மவர்

அதிலும் அந்தந்த ஊர்களைச்சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டாவது அக்காணிகளை வெளியார் கைகளுக்கு போகவிடாது

தாங்கள் வாங்க இப்பொழுதே முயற்ச்சிகளை ஆரம்பிக்கணும்

அல்லது இராணுவம் இருந்த வயல்வெளிகள்

அந்நிய சக்திகளின் கைகளுக்கு நிரந்தரமாக நாமே ஒப்படைத்தவர்களாவோம்..

2 minutes ago, விசுகு said:

சிங்களம் என்ன தான் மாற்றங்களை விரும்பினாலும்

எப்பொழுதுமே தமிழர்களின் வாக்குத்தான்

 சிங்களத்தின் ஆட்சியை தீர்மானித்துள்ளன

மகிந்தவை அகற்றணும் என்ற முடிவை தமிழர்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கினார்களே தவிர

மகிந்தவை அகற்றணும் என்ற முடிவு

தமிழர்களாலோ சம் சும் ஆலோ எடுக்கப்பட்டதல்ல..

விரலுக்கு ஏற்ப நாம் சிந்திக்கவேண்டியதும்  செயற்பட வேண்டியதும் வரலாறு தரும் பாடம்

விசுகர் உங்களுக்கு பதில் எழுதுவது நேர விரயம் .

தமிழர்களின் வாக்குத்தான் ஆட்சியை தீர்மானிப்பது என்பது புலம் பெயர்ந்த நாலு முட்டாள்கள் ஏற்படுத்திய ஒரு கற்பனை .சில தேர்தல்கள் முடிவு அப்படி அமைந்திருந்தாலும் அதுதான் உண்மை அல்ல .இம்முறையும் மைத்திரி பிரியாவிட்டால் மகிந்தா மீண்டும் வருவதுதான் சாத்தியம் .அதற்கு முதல் தேர்தலில் தமிழர்களின் வாக்கு இல்லாமல் தான் மகிந்தா ஜனாதிபதியானார் .

இதைவிட பகிடி இந்த முட்டாள்கள் கனேடிய தேர்தலிலும் சில தொகுதிகளில் இதே போல கருத்துக்களை வைக்கின்றார்கள் அவர்கள் அறிவு அவ்வளவுதான் .

அடுத்து ,

எதையும் தமக்கு சாதகமாக மாற்றுவதுதான் அரசியல் .

புலிகளை மாதிரி மகிந்தாவை வெல்ல வைக்க வேண்டும் என்ற முடிவை சம் சும் கோஸ்டி எடுக்கவில்லை .

மகிந்தாவை வெல்ல வைக்கவேண்டும் அப்போதுதான் போர்குற்றங்களில் அவரை மாட்டலாம் என்ற வித்துவான்களும் இருந்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

விசுகர் உங்களுக்கு பதில் எழுதுவது நேர விரயம் .

தமிழர்களின் வாக்குத்தான் ஆட்சியை தீர்மானிப்பது என்பது புலம் பெயர்ந்த நாலு முட்டாள்கள் ஏற்படுத்திய ஒரு கற்பனை .சில தேர்தல்கள் முடிவு அப்படி அமைந்திருந்தாலும் அதுதான் உண்மை அல்ல .இம்முறையும் மைத்திரி பிரியாவிட்டால் மகிந்தா மீண்டும் வருவதுதான் சாத்தியம் .அதற்கு முதல் தேர்தலில் தமிழர்களின் வாக்கு இல்லாமல் தான் மகிந்தா ஜனாதிபதியானார் .

இதைவிட பகிடி இந்த முட்டாள்கள் கனேடிய தேர்தலிலும் சில தொகுதிகளில் இதே போல கருத்துக்களை வைக்கின்றார்கள் அவர்கள் அறிவு அவ்வளவுதான் .

அடுத்து ,

எதையும் தமக்கு சாதகமாக மாற்றுவதுதான் அரசியல் .

புலிகளை மாதிரி மகிந்தாவை வெல்ல வைக்க வேண்டும் என்ற முடிவை சம் சும் கோஸ்டி எடுக்கவில்லை .

அப்போ

மைத்திரியை மகிந்தவிடமிருந்து வெளியில் எடுத்தது சம்சும்..

நம்பிட்டம்................

வேற....

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், அர்ஜுன்

சின்ன விசயங்களுக்கு நேரத்தை வீணாக்காதீர்கள்.

மகிந்த, சிங்கள இனவாதத்தினை நம்பி, முஸ்லிம், தமிழ் மக்களை பகைக்கிறார் என்பதை சரியாக கணித்து, சந்திரிகா மூலம் சரியான அரசியல் சதுரங்கம் ஆடியது யார் என புரிந்து கொண்டீர்களானால் இப்படி மினக்கட மாட்டீர்கள்.

மேலும் சோதிடர் சுமண.... பாத்திரத்தினை மறக்காதீர்கள். அவர் மட்டும் மகிந்தரை தனி ஒருவராக கவில்க்காவிடில் மகிந்தர் தான் இன்றும் ஜனாதிபதி. (அதாவது தேர்தல் இல்லாத வகையில்)

Edited by Nathamuni

3 minutes ago, விசுகு said:

அப்போ

மைத்திரியை மகிந்தவிடமிருந்து வெளியில் எடுத்தது சம்சும்..

நம்பிட்டம்................

வேற....

நான் எழுதுவதை தயவு செய்து திரிக்கவேண்டாம் .பொய் பிரட்டு கூடாது .

வெளியில் எடுத்தது என்று எங்கும் எழுதவில்லை ஆனால் அவர்களை ஆதரிக்க எடுத்த முடிவு பற்றியே எழுதினேன்

அதுதான் சொன்னேன் உங்களுக்கு பதில் எழுதுவது நேர விரயம் என்று 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.