Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

விசுகர், அர்ஜுன்

சின்ன விசயங்களுக்கு நேரத்தை வீணாக்காதீர்கள்.

மகிந்த, சிங்கள இனவாதத்தினை நம்பி, முஸ்லிம், தமிழ் மக்களை பகைக்கிறார் என்பதை சரியாக கணித்து, சந்திரிகா மூலம் சரியான அரசியல் சதுரங்கம் ஆடியது யார் என புரிந்து கொண்டீர்களானால் இப்படி மினக்கட மாட்டீர்கள்.

இதைத்தான் சொல்கிறேனப்பா..

அந்தாள்

கனடாவிலுள்ள ஆட்களோட சிண்டு முடியுது

நான் என்ன பண்ணும்....?

ஏறக்குறைய 70% வீதத்திற்கு மேல் சிங்களவர் வசிக்கும் நாட்டில் தமிழர் வாக்குகள் தான் ஆட்சியை தீர்மானிக்கின்றது என்பது முழு முட்டாள் தனம் .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு'

நல்ல செய்தி..

ஆனால் இதே மக்கள் அவற்றை எடுத்ததும் விற்பனை செய்யமுயல்கிறார்கள்

புலம் பெயர் தமிழர்களே இதில் முதன்மையானவர்களாக உள்ளனர்.

இதைத்தடுக்க முடிந்தவரை எம்மவர்

அதிலும் அந்தந்த ஊர்களைச்சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டாவது அக்காணிகளை வெளியார் கைகளுக்கு போகவிடாது

தாங்கள் வாங்க இப்பொழுதே முயற்ச்சிகளை ஆரம்பிக்கணும்

அல்லது இராணுவம் இருந்த வயல்வெளிகள்

அந்நிய சக்திகளின் கைகளுக்கு நிரந்தரமாக நாமே ஒப்படைத்தவர்களாவோம்..

இதைத்தான் நான் எப்பவும் எழுதுகிறேன்  கேட்ப்போர் தான் இல்லை.நாங்கள் தான் அந்த இடத்தைப் போய் நிரப்ப வேவணும்.இதற்க்கு இங்கு யார் தயாராக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இதைத்தான் சொல்கிறேனப்பா..

அந்தாள்

கனடாவிலுள்ள ஆட்களோட சிண்டு முடியுது

நான் என்ன பண்ணும்....?

உத விட்டு விட்டு, நான் வேறு ஒரு விடயமா ஒரு தனி மடல் போடுகிறேன். இன்னும் ஐந்து நிமிடத்தில், பார்க்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

ஏறக்குறைய 70% வீதத்திற்கு மேல் சிங்களவர் வசிக்கும் நாட்டில் தமிழர் வாக்குகள் தான் ஆட்சியை தீர்மானிக்கின்றது என்பது முழு முட்டாள் தனம் .

அவர்கள் 2 அல்லது 3 ஆக பிரியும்போது

தமிழர்களது வாக்கு தீர்மானிக்கும் வலுவைப்பெறுகிறது

தமிழகத்தில் காங்கிரசின் வாக்குப்போல...

நாதம்ஸ் ,

திரும்ப திரும்ப நான் எழுதாத ஒன்றை தானாக உருவகபடுத்தி எழுதினால் விசர் தானே வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

உத விட்டு விட்டு, நான் வேறு ஒரு விடயமா ஒரு தனி மடல் போடுகிறேன். இன்னும் ஐந்து நிமிடத்தில், பார்க்கவும். 

அனுப்புங்க

இன்னும் 10 நிமிடம் தான் இங்கு நிற்பேன்..

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, arjun said:

ஏறக்குறைய 70% வீதத்திற்கு மேல் சிங்களவர் வசிக்கும் நாட்டில் தமிழர் வாக்குகள் தான் ஆட்சியை தீர்மானிக்கின்றது என்பது முழு முட்டாள் தனம் .

 உங்களுக்கு தெரியாத அரசியல் இல்லை. 
நீங்கள் கூறும் கருத்து எப்படி சாத்தியமாகும்?
சிங்கள இனத்துக்கு இடையே   என்ற இரு பெருங்கட்சிகள் இல்லாத பட்சத்தில் 
ஒட்டு மொத்த சிங்களவரும் ஒரே கட்சிக்கு வாக்கு போடும் பட்சத்தில்.
 Think before you ink....

அதற்காக எல்லா தேர்தலிலும் நாங்கள் தான் ஆட்சியை தீர்மானித்தோம் என்பதும் வெறும் வாய் வார்த்தை தானே அன்றி ஒன்றில்லை...
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

2015 முடிவிலையே 2016 இன் நற்செய்தி தொடங்கிவிட்டது. இனி விக்கி குறூப் வந்து உள்ளூரட்சி தேர்தல் அது இது எது எண்டு நிக்கத்தான் லாயக்கு!

நல்ல செய்தி வந்தால் மட்டும் போதாது அது நடைமுறைப்படுத்தப்பட  வேண்டும்  என்பதே எமது அவா.

இதுக்குள்ள ஏன் விக்கி ஐயாவை இழுக்கிறியள். எதோ சம்சும் ஆல மட்டும்தான் இது நடந்தமாதிரி. திரியை ஒருக்கா முழுமையா வாசிச்சிட்டு கருத்து எழுதப்பழகுங்கோ.

எதுக்கெடுத்தாலும் புலி வாந்தி இல்லைஎண்டால் விக்கி ஐயா வாந்தி. என்ன சனமோ.

3 hours ago, arjun said:

இப்படியெல்லாம் நடப்பது பலருக்கு பிடிக்காது .

ஒரேயடியாக தீர்வை வை என்று நிற்கின்றார்கள் ,

பிறகு ஆட்சி மாற்றம் வந்து சிங்களவனிடம் அடிவாங்கி அடிக்கின்றான் அடிக்கின்றான் என்று கத்துவதில் ஒரு இன்பம் .

உடனே ஆட்சி மாற்றம், அடிப்பான் கொல்லுவான் எண்டு பூச்சாண்டி காட்ட வெளிக்கிட்டுட்டார் எங்கட அட்வஸ் அறிவுசாமி.

நல்லது நடந்தால் எல்லோருக்கும் பிடிக்கும். ஒரேஅடியா தீர்வை வையுங்கோவெண்டு யார் கேட்டது. காவல்துறை, காணி அதிகாரம் உள்ள ஒரு தீர்வே அவசியம் என்பதுதான் எங்கள் கருத்து. அதை நோக்கியே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எனது ஆசையும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

நான் எழுதுவதை தயவு செய்து திரிக்கவேண்டாம் .பொய் பிரட்டு கூடாது .

வெளியில் எடுத்தது என்று எங்கும் எழுதவில்லை ஆனால் அவர்களை ஆதரிக்க எடுத்த முடிவு பற்றியே எழுதினேன்

அதுதான் சொன்னேன் உங்களுக்கு பதில் எழுதுவது நேர விரயம் என்று 

பதில் தெரியாதவர்கள் சொல்லும் நொண்டிச்சாட்டு.

3 hours ago, விசுகு said:

வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு'

நல்ல செய்தி..

ஆனால் இதே மக்கள் அவற்றை எடுத்ததும் விற்பனை செய்யமுயல்கிறார்கள்

புலம் பெயர் தமிழர்களே இதில் முதன்மையானவர்களாக உள்ளனர்.

இதைத்தடுக்க முடிந்தவரை எம்மவர்

அதிலும் அந்தந்த ஊர்களைச்சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டாவது அக்காணிகளை வெளியார் கைகளுக்கு போகவிடாது

தாங்கள் வாங்க இப்பொழுதே முயற்ச்சிகளை ஆரம்பிக்கணும்

அல்லது இராணுவம் இருந்த வயல்வெளிகள்

அந்நிய சக்திகளின் கைகளுக்கு நிரந்தரமாக நாமே ஒப்படைத்தவர்களாவோம்..

கவலை வேண்டாம் விசகு , நானா  வந்து  நல்ல விலைக்கு கேட்பார் அப்பே  நான் செல்லி அனுப்பிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, arjun said:

இப்படியெல்லாம் நடப்பது பலருக்கு பிடிக்காது .

ஒரேயடியாக தீர்வை வை என்று நிற்கின்றார்கள் ,

பிறகு ஆட்சி மாற்றம் வந்து சிங்களவனிடம் அடிவாங்கி அடிக்கின்றான் அடிக்கின்றான் என்று கத்துவதில் ஒரு இன்பம் .

 சொந்த இனத்தையும், அதன் வலிகளையும் பரிகசிப்பதில் உங்களுக்கு ஒரு இன்பம். சிங்களவன் தனக்கு சொந்தமானதொண்டையும் இனாமாகக் கொடுக்கலை. அந்த மக்களின் பூர்வீக நிலங்களை சூறை ஆடி வைத்திருந்து, அந்த மக்கள் போராடி பெறுகிறார்கள். இதல புகழ்ச்சி என்ன வேண்டிகிடக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

வலி.வடக்கு, கிழக்கு பகுதிகளில் 700 ஏக்கர் காணி விடுவிப்பு! : வளலாய் முழுமையாக விடுவிப்பு

வலி.வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துக்காக நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமுமே இவ்வாறு மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. 

25 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த மண்ணை இடம்பெயர்ந்திருந்த மக்கள் நேரில் சென்று ஆவலுடன் பார்வையிட்டனர். இவர்களுடன்  வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன், அப்பகுதி கிராம அலுவலர்கள் ஆகியோர் சென்றிருந்தனர். வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 6ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்தில் ஒருபகுதி நிலம் கடந்த தை மாதம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்டமாக வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளில் மொத்தமாக 701.5 ஏக்கர் நிலம்  நேற்று  மீள்குடியேற்றதுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. வலி.வடக்கு பகுதியில், காங்கேசன்துறை தெற்கு, பளை வீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் மொத்தமாக 468.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

இதேபோன்று வலி.கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட வளலாய் பகுதியில் 233 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வளலாய் பகுதி அதாவது வலி.கிழக்கு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://onlineuthayan.com/news/5866

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, arjun said:

ஏறக்குறைய 70% வீதத்திற்கு மேல் சிங்களவர் வசிக்கும் நாட்டில் தமிழர் வாக்குகள் தான் ஆட்சியை தீர்மானிக்கின்றது என்பது முழு முட்டாள் தனம் .

உங்களிண்ட அரசியல் அறிவு சொல்லி மாளாது. எங்க கொண்டு போய் என்ர தலையை முட்டுறது எண்டு தெரியேல்ல???

புலி தேர்தலை பகிஷ்கரிச்சதாலதான்  மஹிந்த ரணிலை வென்டவன் என்று ஒருக்கா சொல்லுறியள், சம்சும் சொல்லி மைத்திரிக்கு போட்டதால்தான் ஆட்சி மற்றம் வந்தது எண்டுறியள். இப்ப ம் ம்  நத்தார் பார்ட்டிகள் முடியும்வரையாவது  தயவுசெய்து கருத்து எழுதாமல் இருங்கோவன் கோடி புண்ணியமாப்போகும்.

18 hours ago, arjun said:

நாதம்ஸ் ,

திரும்ப திரும்ப நான் எழுதாத ஒன்றை தானாக உருவகபடுத்தி எழுதினால் விசர் தானே வரும் .

நீங்கள் மேலே மேலே என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று வாசித்தால் உங்களுக்கே விசர் பிடிக்கும். அப்ப எங்கட நிலைமை???

9 hours ago, கறுப்பி said:

வலி.வடக்கு, கிழக்கு பகுதிகளில் 700 ஏக்கர் காணி விடுவிப்பு! : வளலாய் முழுமையாக விடுவிப்பு

வலி.வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துக்காக நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமுமே இவ்வாறு மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. 

25 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த மண்ணை இடம்பெயர்ந்திருந்த மக்கள் நேரில் சென்று ஆவலுடன் பார்வையிட்டனர். இவர்களுடன்  வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன், அப்பகுதி கிராம அலுவலர்கள் ஆகியோர் சென்றிருந்தனர். வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 6ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்தில் ஒருபகுதி நிலம் கடந்த தை மாதம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்டமாக வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளில் மொத்தமாக 701.5 ஏக்கர் நிலம்  நேற்று  மீள்குடியேற்றதுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. வலி.வடக்கு பகுதியில், காங்கேசன்துறை தெற்கு, பளை வீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் மொத்தமாக 468.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

இதேபோன்று வலி.கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட வளலாய் பகுதியில் 233 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வளலாய் பகுதி அதாவது வலி.கிழக்கு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://onlineuthayan.com/news/5866

இந்த இடங்களில் எல்லாம் மக்கள் குடியேறி விவசாயம் செய்து முன்னேறினால் நல்லதுதான். நிலத்தை வித்து  எஜென்சிக்காரண்ட கையில கொடுக்கிறதை நிற்பாட்ட ஏதாவது வழி செய்ய வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.