Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Featured Replies

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

police%20250.jpgன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்த போலி சான்றிதழ் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கும், பன்னிரண்டாம் வகுப்புக்கும் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பலர்,  எட்டாவதைக் கூட தாண்டாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முன்னர் சூட்டைக் கிளப்பிய அதே வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை மையம் கொண்டு சுழலத்துவங்கியிருக்கும் இந்த புயல், கல்வித்துறையை கதிகலங்கடித்துள்ளது இப்போது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிர சான்றிதழ் பரிசோதனைகள் நடந்துவருகிறது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில், போலியான ஆசிரியர் பட்டச்சான்றிதழ் மற்றும் ஆசிரிய பட்டயச் சான்றிதழ்களை கொடுத்து ஏராளமானோர் பணியில் சேர்ந்துள்ளதாக, கடந்த 2003‍ -ம் ஆண்டு இறுதியில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சான்றுகள் சரிபார்ப்பு பணிகளை கல்வித்துறை கையிலெடுத்தது. கல்வித் துறையின் இந்த நடவடிக்கையை அடுத்து, பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு போகாமல், 'ஆப்சென்ட்' ஆகினர்.

இது குறித்த முக்கிய ஆதாரத்தின் அடிப்படையில், தர்மபுரி குற்றப்பிரிவு போலீசில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது. சோதனையில்,  பலர் பத்தாம் வகுப்பைக் கூட தாண்டாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. ஒட்டுமொத்த கல்வித்துறையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றது. இதனால் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு போலியான சான்றிதழ்கள் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள், ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர்.

முன் ஜாமீன் வாங்குவதிலும், தெரிந்த ஆட்களைப் பிடித்து கைதிலிருந்த தப்பிப்பதிலும் பல போலி ஆசிரியர்கள் முனைந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த பிரச்னை பூதாகரமாகியுள்ளது.

teacher%20mad%20600%201.jpg

2016 ம் ஆண்டு துவக்கத்தில் மக்கள் புத்தாண்டு குதூகலத்தில் கிடக்க, போலி ஆசிரியர்கள் கலக்கத்தில் இருந்தனர். காரணம் புத்தாண்டு கொண்டாட்டப் பொழுதில் தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம், நாமக்கல் மற்றும் வேலூர் மாவட்ட காவல்துறையின் தனிப்படைகள்,  'போலி'களை வேட்டையாடிக்கொண்டிருந்தனர். ரெய்டில் அடுத்தடுத்து பலர் சிக்கினர். பாலக்கோடு முனியப்பன், போச்சம்பள்ளி செந்தில்குமார், கிருஷ்ணகிரி ராஜேந்திரன், முனியப்பன் என முதல் வேட்டையிலேயே நால்வர் சிக்கினர்.
 
கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆசிரியர் அருள்சுந்தரம், குருபரப்பள்ளி ஆசிரியர் மாரியப்பன், அரசம்பட்டி சுதாகரன், வேலூர் குணசேகரன், மனோகரன் மற்றும் ஆத்தூரில் பணியாற்றும் ஆசிரியைகள் என சுமார் நூறு பேர் வரை, இந்த மாவட்டங்களில் போலிகளாக வகுப்பெடுத்து வந்ததை காவல்துறை கண்டுபிடித்தது. ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானதோடு, முன் ஜாமீன் கோரி அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிகிறது.

இவர்களில் பாலக்கோடு முனியப்பனும், கிருஷ்ணகிரி ராஜேந்திரனும் ஆசிரியர் பணியில் இருந்ததோடு, 'பத்தாம் வகுப்பு பெயில்' ஆன பலநூறு பேர்களை போலி ஆசிரியர் சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர்களாக்கி உள்ளனர் என்பதால், போலீசார் இவர்களிடமிருந்து விசாரணையை துவக்க திட்டமிட்டுள்ளனர்.

teacher%20mad%20600%202.jpg

சென்னையில் இதே விவகாரத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் சிக்கி சிறை சென்றவர்,  'போலி கல்விச் சான்று' தரகர் ஏகாம்பரம். அப்போது அவரைக் கைது செய்த சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், போலி சான்று தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், பல ரகங்களில் இருந்த மை பாட்டில்கள், ரப்பர் ஸ்டாம்புகள், தயார் நிலையில் பெயரை மட்டும் போடாமல் வாடிக்கையாளருக்காக காத்திருந்த  ஆயிரக்கணக்கான சான்றுகள் என அனைத்தையும் 'டிஸ்பிளே" வைத்தனர்.

அத்தனையும் சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர், ஓட்டேரி, வியாசர்பாடி, அயனாவரம், புரசைவாக்கம், ராயபுரம், காசிமேடு, பழைய மற்றும் புது வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர் தாங்கல் பகுதிகளில் தயாரிக்கப்பட்டவை என்பதோடு, அந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில்தான் போலி ஆசிரியர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டுவரை படித்தார்கள் என்பது போல் சான்றுகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில் 'போலிகள்' பி.எட், பட்டய ஆசிரியர் (டிடி.எட்) போன்ற படிப்புகளை முடித்ததாக சான்றுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. அந்த வழக்குகளில் காவல்துறை தீவிரம் காட்டி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இப்போது போலி சான்றிதழ் விவகாரம் மீண்டும் தொடர்கதையாகி இருக்காது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். எப்படியோ இந்த கல்வியாண்டின் தொடக்கத்திற்குள் "போலி" களை களையெடுத்துவிடுவோம் என்கிறது காவல்துறை.

teacher%20mad%20600%204.jpg

கல்வித்துறையின் மீது படிந்த இந்த களங்கம் உடனடியாக துடைக்கப்படவெண்டும் என ஆட்சி மேலிடத்திலிருந்து கடுமையான உத்தரவு காவல்துறையினருக்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால்,  வடமாவட்டங்களில் ஒரே நேரத்தில் ஐந்து எஸ்.பி.களின் தலைமையில் தேடுதல் பணி நடந்துவருகிறது. தலைநகரிலும் களையெடுப்பு பணி துரிதவேகத்தில் நடைபெற்றுவருகிறது.

கல்வித்துறையை களங்கப்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில்,  நம் முன் எழும் சில கேள்விகள்...

காவல்துறை மெத்தனமான நடவடிக்கையை முந்தைய சம்பவத்தில் கடைபிடித்தது ஏன்... அன்று சிக்கிய ஏகாம்பரம் என்ன ஆனார்? அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஏகாம்பரத்தின் தொடர்பில் இருந்தவர் எனறு கூறப்பட்டவரும், சந்தேகத்தில்பேரில் போலீசார் விசாரிக்கப் போனபோது விஷம் குடித்தவருமான சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின் அன்றைய ஊழியர் இப்போது என்ன செய்கிறார்?

teacher%20mad%20600%203.jpg

காவல்துறையிடம் ஏகாம்பரமும், ஏகாம்பரத்தின் கூட்டாளியான மனோகரனும் அளித்த வாக்குமூலத்தில்,  சென்னை மாநகராட்சியில் அன்று பணியில் இருந்த கல்வி மற்றும் சான்றளிப்புத் துறையின் பொறுப்பாளர்கள் மூவரை கை காட்டினார்களே,  அந்த மூவர் (மிக சமீபத்தில் அவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்) இப்போது என்ன செய்கிறார்கள்? அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் நடக்காதது ஏன்?

கட்டணக் கொள்ளை, கல்வித் தரமின்மை என்று பல விஷயங்கள் தமிழ்நாட்டை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்க,  இதில் 'போலி' களும் சேர்ந்து கொண்டால் தமிழகத்தின் கல்விச்சூழல் எதிர்காலத்தில் என்னவாகும் என்ற கவலை மனதை சூழ்கிறது.

வரும் ஆசிரியர் தினத்திற்குள் அத்தனை போலி ஆசிரியர்களையும் களையெடுத்து,  இந்த போலிகளை உருவாக்கும் மோசடி நெட்வொர்க் கும்பலையும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இல்லையேல் தமிழகத்தில் கொண்டாடப்படுவது 'போலி ஆசிரியர்' தினமாகத்தான் இருக்கும்!

கல்வித்துறை இனிமேலாவது பாடம் கற்கவேண்டும்!

http://www.vikatan.com/news/coverstory/57285-fake-teachers-in-tamilnadu-schools-shock-story.art

நல்ல டைமிங்கான செய்தி .tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

8ம் வகுப்புப் பெயலான கருணாநிதி தமிழ்நாட்டையே ஆள முடிந்திருக்குது... இன்னும் ஆள நிற்கிறார்.. ஒருவர் அங்கு ஆசிரியராக இருந்தால் தான் தப்பா..?! :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இனி இவர்களைத் தேடிப் பிடித்து வழக்கு என்றும் வாய்தா என்றும் இழுபறிப் படுகிறதை விட , எனக்குத் தெரிந்து இரு வழிகள் இருக்கு...!

1 -  இந்த ஆ சிரியர்களை  5ம் வகுப்பாசிரியர்களாக  மீள்தகுதி அளித்து  ஆசிரியர் பற்றாக்குறையாக இருக்கும் கிராமப் பாடசாலைகளுக்கு கட்டாயப் பணி கொடுத்து அனுப்பி விடலாம்...!  :)

2 - 10 ம் தரத்தின் தகுதி நிலையை 7 ம் தரத்துக்கு குறைத்து இந்த  ஆ சிரியர்களை  எச்சரித்து மீன்டும் அதே பதவியில் தொடர அனுமதிக்கலாம்...! :grin:

ஏதோ நம்மால முடிஞ்சது...!!

  • கருத்துக்கள உறவுகள்
On 06/01/2016 at 8:24 PM, nedukkalapoovan said:

8ம் வகுப்புப் பெயலான கருணாநிதி தமிழ்நாட்டையே ஆள முடிந்திருக்குது... இன்னும் ஆள நிற்கிறார்.. ஒருவர் அங்கு ஆசிரியராக இருந்தால் தான் தப்பா..?! :rolleyes:tw_blush:

 காமராயர், MGR இன்றைய மோடி என்னத்தப் படித்தார்கள்? முதல்வராக வேண்டும் என்று தண்ணியில் தள்ளாடும் வியயகாந்த் ?

அரசியலக்கு போகாமல் பள்ளிக்கூடம் போனது தான் இவையள் விட்ட பிழை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6.1.2016 at 9:02 PM, நவீனன் said:

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

விடிஞ்சால் பொழுதுபட்டால் சினிமா...சினிமா..
ரிவியை போட்டால் சீரியலும் சினிமாவும்...
தொலைக்காட்சியில் வரும் சிறுவர்களுக்கான போட்டியில் சினிமாப்பாட்டு....பள்ளிக்கூடங்களாக நடத்தும் போட்டியிலும் சினிமா....பாடசாலை படிப்பிலும் சினிமா.....பரீட்சை கேள்விகளிலும் சினிமா....ஒருவேளை சாப்பாட்டுக்கு திண்டாடும் மண்ணில்....திரை நடிகனின் கட்டவுட்டுக்கு குடம்குடமாக பாலாபிஷேகம்.
தின்னும் சோறிலிருந்து கக்கூஸ் வரைக்கும் சினிமா...சினிமா....
அரசியலிலும் சினிமா....

இப்படியிருக்க....

தமிழ்நாட்டில் வாத்தியார் வேலைக்கு பள்ளிக்கூடம் போய் படிக்கவே தேவையில்லை. tw_smiley:

இன்று இரண்டு திரைப்படம் பார்த்தேன்.......அந்தப்படம் அந்தமாதிரியிருந்தது......நாளைக்கு 3 படம் பார்க்க இருக்கிறேன்...அந்த நடிகர் அந்தமாதிரி என்று சொல்லி தங்களைத்தாங்களே நினைத்து புளகாங்கிதம் அடையும் நபர்கள் இருக்கும் வரை இந்த உலகம் திருந்தாது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு தான் உந்த கேவலம் எண்டு கவலைப் படாதையுங்கோ.

அங்கால வடக்கால இங்கிலீஷ் டீச்சரையும் ஒருக்கா பாருங்கலேன் 

கடைசில, படிப்பிச்சு களைச்சி போய் டீச்சர் நித்திரை வேற அடிக்கிறா. :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மக்களவை கூட்டத் தொடர்களில் தமிழகத்தின் (அஇஅதிமுக) எம்பிக்கள் தமிழில் எழுதிவைத்து ஆங்கிலத்தில் வாசிப்பது நல்ல  fun ஆ இருக்கும். இதுக்காகவே இந்நாள்களில் ஜெயா தொலைக்காட்சியைப் பார்ப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச மட்டும் என்ன வாழுதாம் ( என்னிடம்)...!

நான் கொலிஜில் இருந்து வெளிவரேக்கை ஆங்கிலம் ஓரளவு எழுத வாசிக்க நல்ல தேர்ச்சி ஆனால் கதைக்க மாட்டன், ஆரும் பகிடி விடுவினம் என்று வெட்கம் 66 , 67 ல் . பின் கொழும்பில் தங்கி இருக்கும் போது வெட்கம் தவிர்த்து கதைக்கத் தொடங்கினன் அதாவது கொழும்பு ஆங்கிலம் .சம் பீப்பிள் சிற்றிங் மதில், சம் பீப்பிள் மதிலுக்கு மேலால சீயிங் கிறிக்கட் , அப்படி. அப்படியே கொஞ்சம் ஆங்கிலப் பேப்பர்களும் வாசித்து , ரேடியோவில் நியூஸுகளும் கேட்டு அக்காலத்தில் கொழும்பில் எம்மவர் வீடுகளில் இங்கிலீஸ் பத்திரிகைகளும், இங்கிலீஸ் சனலும் இருப்பது எழுதப் படாத விதி. நல்ல இம்புறூவ் என்னிடம்.

பின்பு சவூதி , லிபி என்று போய் வேலை செய்யும் போது அங்கு என்கூட வேலை செய்யும் பல்லின மக்களுக்கிடையில் நான் ஒரு ஆங்கிலப் பேராசிரியராக என்னை உணர்ந்து பீலா விட்டுக் கொண்டு திரிந்த பொற்காலங்கள் அது. (ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை).

பின்பு பிரான்சுக்கு வந்தேன், அதே அங்கில எழுத்துக்கள், என்ன ஏக்கும் ஈ க்கும் மேல ரெண்டு ஈக்கிள் மாதிரி  கோடு போட்டு சிறு வித்தியாசமான உச்சரிப்புகள். à ,é, è,ç, '  இப்படிச் சில எனக்குத் தலைகால் புரியவில்லை.கொஞ்சம் முயற்சித்தால் பிரெஞ்சுக் காரனுக்கே வகுப்பு எடுக்கலான்டா சுவி. அப்ப பக்கத்து நாடுகளுக்கு கல்யாணம்,  காது குத்து என்று போய்வாற சந்தர்ப்பங்கள் வந்தன. பிரான்சைச் சுத்தி சுவிஸ், இத்தாலி,ஜெர்மன்,பெல்ஜியம், லன்டன் எல்லா இடமும் ஆங்கில எழுத்துகள்தான் அடி சக்கைன்னானாம்...( என் அறிவின் விசாலத்தைச் சொல்வதற்கு இதுதான் சரியான இடம்,அப்பதான் உங்களிடம் என் இமேஜ் கூடும். பின்னால சொன்னால் விஜயகாந்த் போல த் தூ என்றிட்டுப் போவீங்கள்.)

ஏற்கனவே தமிழ் தாய், ஆங்கிலம் அன்ரி,  சிங்களம் ஓரல் எல்லாம் பாஸ்பண்ணி அது மாமி, பின் வேலை செய்யப் போன இடத்தால கொஞ்சிப் பழகிய சின்னவீடுகளாக துளித்துளி மலையாளம், ஹிந்தி,அரபு,என்று... இவற்றுடனறித்தனை நாட்டுப் பாசைகளும் எனக்கு வசப் பட்டால், வடிவேகு மாதிரி பில்டப் போட்டு, கட்டப் பொம்மன் மாதிரி கோட்டை கட்டிக் கொண்டு போனேன். இவை நடக்கும் காலம் 1991ல்...!

 வேலை, குடும்பத்தை அழைத்தல், கடன், வட்டி , சீட்டில் ஏமாந்து , ஊரில் உறவுகளக் கவணித்தல், விழக்கள், விஷேசங்கள் என்று காலம் ஓடிப் போய்   இப்ப 2016. இன்று வரை பிரெஞ் உச்சரிப்பகளில் இந்த e , u ,q ,é, è, à, b, p. எழுத்துக்களைச் சரியாகச் சொல்ல முடியவில்லை.

நேற்று வீட்டில ஒரு விஷேசம். ஒரு சின்னஞ்சிறு பையனிடம் (ஆரம்பப் பாடசாலை) சொன்னன். அப்பு மேசையில பிசா இருக்கு எடுத்துச் சாப்பிடு. அவருக்கு அது ரெம்பப் பிடிக்கும்.  அது பிசா இல்லை அங்கிள், ஃ பீட்சா என்று மூன்டு நாலு தரம் உதட்டை மடிச்சுக் காட்டி  வகுப்பு எடுக்கிறார். எனக்கு வாழ்க்கையே வெறுத்திட்டுது. பீரங்கி அடிக்கு மண்கோட்டைகள் பொல பொலவென உதிருது. நினைத்துப் பார்த்தால் தெரியும் என இருந்த சில பாசைகள் மறந்து விட்டன. ஆங்கிலத்தை தமிழில் நினைத்து அப்புறம் பேசவேண்டிக் கிடக்கு. விஜயகாந்த்  த்தூ...!

இன்னும் நம்புவோம்..., நம்பிக்கைதானே வாழ்க்கை...!  :)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சுவி,

பிட்சா, பிசா உச்சரிப்பு தமிழில் தண்ணீர், தண்ணி உச்சரிப்பு போல் பேச்சு வழக்கு.

ஆங்கிலேயர் கூட பேச்சுவழக்கில், வாரர் எனபார்கள், வாற்றருக்கு. 

பெரிய சொல்லாக இருப்பதால் கொம்போற்றபிள், கொம்Fபி என்பார்கள்.

ஆகவே உச்சரிப்பு பிழை குறித்து கவலைபட வேண்டியது இல்லை என்பது எனது கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.