Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் பாராளுமன்ற உரையும் ஊடகங்களும் பரபரப்புகளும் - ஒரே பார்வையில்

Featured Replies

சம்பந்தனின் பாராளுமன்ற உரையும் ஊடகங்களும் பரபரப்புகளும் - ஒரே பார்வையில்

சம்பந்தனின் பாராளுமன்ற  உரையும்  ஊடகங்களும் பரபரப்புகளும் - ஒரே பார்வையில்:



அரசியல் சாசனப் பேரவை அமைப்பது தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்ட போது எதிர்க்கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஆற்றிய உரை இலங்கை ஊடகங்களில் மாறுபட்ட கோணங்களில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெற்கின் சிங்கள ஊடகங்கள் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தேசிய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் புதிய அரசியல் சாசன உருவாக்கத்திற்கு மஹிந்தவின் பங்களிப்பு அவசியமானது எனவும் கூறினார் என்ற கோணத்திலும் இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கி செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோன்று தெற்கின் ஆங்கில ஊடகங்கள் சம்பந்தன், அரசியல் சாசனத்தின் ஊடாக இலங்கையின் அனைத்து பிரஜைகளும் சமமான அடிப்படையில் மதிப்படக்கூடிய வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனவும், தனி நாட்டு கோரிக்கையை கைவிடுமாறு கோருவதாகவும் புதிய அரசியல் சாசனம் அமைக்க மஹிந்தவின் ஒத்துழைப்பினை கோருவதாகவும், புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அனைத்து இன மக்களும் சமமான முறையில் மதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமெனவும் வேறும் சில கோணங்களிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பிரதான தமிழ் பத்திரிகைகளில் தனிநாட்டுக்கோரிக்கை இனியில்லை, அரசியல் சாசனம் குறித்த சுதந்திரக் கட்சியின் கோரிக்கை நிராகரிப்பு மற்றும் இலங்கை என்ற பெருமையுடன் நாம் வாழும் சூழல் வேண்டும் போன்ற தலைப்புக்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஏசியன்மிரர்

புதிய அரசியல் சாசனத்தை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு அவசியமானது என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சானத்தை நிறைவேற்றிக்கொள்ள மஹிந்தவின் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டள்ளார்.

அரசியல் சாசனப் பேரவை குறித்த பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் இதற்கு தேசிய தலைவர்களின் பங்களிப்பு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் சாசனமொன்றை உருவாக்க மஹிந்த ராஜபக்ஸவும் முயற்சித்தார் எனவும் இதனால், அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு  மஹிந்த நிச்சயம் பங்களிப்பு வழங்குவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனம் அமைக்கும் முயற்சிகளுக்கு மஹிந்த ராஜபக்ச பங்களிப்பு வழங்குவதன் மூலம் புதிய அரசியல் எதிர்காலத்தை உருவாக்கும் முனைப்புக்களுக்கு பங்களிப்பு வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமின

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவராக தெரிவாகியுள்ள திலங்க சுமதிபாலவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தின் பின்னர் கடந்த ஏழு தசாப்த காலங்களில் அனைத்து இலங்கையர்களுக்கும் நலன் ஏற்படக்கூடிய வகையிலான அதிகாரங்களை பகிர்ந்தளிக்க எம்மால் முடியவில்லை. இது பாரதூரமான பிரச்சினையாகும்.

மக்களின் விருப்பத்திற்கு அமைய இணக்கப்பாட்டுடன் கூடிய ஓர் அரசியல் சாசனம் இல்லாத காரணத்தினால் நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் நாம் தொடர்ந்தும் பேச வேண்டிய அவசியமில்லை. எனினும் யுத்தம் காரணமாக நாடு பல தசாப்த காலத்திற்கு பின்னோக்கியே நகர்ந்துள்ளது.

தற்போது எவரும் தனி இராச்சிய கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. நாம் தற்போது ஐக்கிய பிளவடையாத நாடாகவே செயற்பட்டு வருகின்றோம். இதற்காகவே நமக்கு அரசியல் சாசனமொன்று தேவைப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவும் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்பய்படும் என அறிவித்திருந்தார்.

இதற்காக பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது.

தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வருவதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் மக்கள் எதிர்பார்க்கும் இணக்கப்பாட்டுடன் கூடிய அரசியல் சாசனமொன்றை உருவாக்கிக்கொள்ள, பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இவ்வாறு இணைந்து செயற்படுவதன் மூலம் மக்கள் அபிலாஸைகளை பூர்த்தி செய்ய பங்களிப்பு வழங்கிய மன நிறைவுடன் வாழ முடியும்.
மேலும், அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் பிளவடைந்திருக்காது, இந்த அரசியல் சாசனத் திருத்தங்களில் காணப்படும் நன்மைகளையும் சமூக நீதியையும் கருத்திற்கொண்டு அதற்கான நாம் குரல் கொடுக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஓர் தேசிய தலைவராவார். அவரும் அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நல்லதே.

புதிய அரசியல் சானம் அமைக்கும் விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ஸவும் தனது கடமைகளை உரிய முறையில் ஆற்ற வேண்டும்.
சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த அரசாங்கங்கள் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்துள்ளன.

நாட்டின் நலனுக்காக நல்லதொரு அரசியல் சாசனத்தைஉருவாக்க அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திவயின

நாட்டில் சோல்பரி அரசியல் சாசனம் முதல் அரசியல் சாசனமாக காணப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
1972ம் ஆண்டு சிறுபான்மை மக்களுக்கு அரசியல் சாசனத்தில் காணப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. 72ம் அண்டில் தமிழ் மக்களின் அபிலாஸைகள் பூர்த்தியாகவில்லை. எனவே தமிழ் மக்களுக்கு உரிய அங்கீகாரம் அவசியப்படுகின்றது. இதன் காரணமாகவே 72ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர்.

தனி இராச்சியக் கோரிக்கையை முன்வைப்பதற்கும் 72ம் ஆண்டு அரசியல் சாசனமே வழியமைத்தது.

78ம் ஆண்டு அரசியல் சாசனம் மீளவும் திருத்தியமைக்கப்பட்டது.
78ம் ஆண்டிலும் பெரும்பான்மைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அமைப்பே காணப்படுகின்றது.

பிரதானமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை விருப்பு வாக்கு அடிப்படையிலான தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.

சுதந்திரத்தின் பின்னர் 7 தசாப்தங்களாக இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரினதும் உரிமைகளை உறுதி செய்யக்கூடிய ஓர் அரசியல் அமைப்பினை உருவாக்க எம்மால் முடியவில்லை.

யுத்தம் நிறைவடைந்துள்ளது தனி இராச்சியக் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைய முன்னரும் தனி இராச்சிய கோரிக்கையை கைவிட்டு ஐக்கிய இலங்கை என்ற கோரிக்கையின் அடிப்படையில் தேர்தல் காலத்தில் தமிழர் பிரதேசங்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குதவற்கு அதனைத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமானது. இலங்கையர்களின் அடையாளங்களை உறுதி செய்யக் கூடிய வகையில் புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஒத்ஐழைப்பு அவசியமானது.

புதிய அரசியல் சாசனத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கப்படவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வீரசேகரி

இலங்கையில் 1972,1978ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புகளின் ஊடாக சிறுபான்மை இன மக்¬க¬ளுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டதுடன் பேரினவாதத்திற்கு சாதகமானதாகவே அவை கொண்டு வரப்பட்டன என நேற்று சபையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


புதிய அரசியலமைப்பு தேசியப் பிரச்சினைக்கு ஸ்திரமான தீர்வை பெற்றுக் கொடுப்பதாக உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிறுபான்மை மக்கள் இலங்கையர் என்ற பெருமையுடன் வாழும் சூழல் புதிய அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட வேண் டும் என்றும் எதிர்க்கட் சித் தலைவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடியது. இதன்போது, பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன்இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்; நாடு இன்று பாரிய நெருக்கடிகளையும்பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது. இதற்கு மூல காரணம் நாட்டு மக்களின் கருத்துக்களையும் இணக்கப்பாடுகளையும் பெற்றுக் கொள்ளாது தமக்கு தேவையான விதத்தில் தன்னிச்சையாக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களே ஆகும்.

எனவே இதனை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பும் கட்டாயமும் இன்று ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாட்டுடனும் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டும் பயன்படுத்தவேண்டும். நாட்டு மக்களின் விருப்புடனும் புதிய அரசியல் கலாசாரத்தையும் தேசிய பிரச்சினைக்கு ஸ்தீரமான தீர்வையும் ஏற்படுத்திக் கொள்ளும் விதத்திலும் அரசியலமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்தவொரு விடயத்தையும் சரியான நேரத்தில் முறையாக மேற்கொள்ள வேண்டும். அதுவே வெற்றிகரமானதாக அமையும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இப் பிரேரணையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 
இதற் காக எனது பாராட்டுக்களை இத் தருணத்தில் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் இதுவரையில் மூன்று அரசியல் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.முதலாவதாக சோல்பரி பிரபுவினால் அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டது.


அதன் பின்னர் 1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் குடியரசு அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சியிலும் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
 
சோல்பரி பிரபுவின் அரசியலமைப்பில் சிறுபான்மை இன மக்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் 1972 இல் ஏற்படுத்தப்பட்ட குடியரசு அரசியல் யாப்பில் சிறுபான்மை இனத்தவரின் பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து ஜே.ஆர். ஜயவர்தனாவின் ஆட்சியில் 1978 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரினவாதத்தை உள்ளீர்த்ததாக ஏற்படுத்தப்பட்டிருந்தது.
 
பாராளுமன்றத்தில் அன்று இருந்த பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறியாமல் மக்களின் இணக்கப்பாடின்றி சர்வாதிகாரத்துடன் தமக்குத் தேவையான விதத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.
 
இவ்வாறு அரசியலமைப்புக்களை ஏற்படுத்தியவர்கள் நாட்டு மக்களினதும் தேசிய நலன்களிலும் அக்கறை கொள்ளவில்லை. இதன் காரணமாகவே நாடு சுதந்திரம் அடைந்தும் கடந்த பல தசாப்தங்களாக பாரதூரமான நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் நாட்டை பல வருடங்களுக்குப் பின் தள்ளிவிட்டது. தமிழ் மக்கள் பாரியநெருக்கடிகளையும் கஷ்டங்களையும் சந்தித்தார்கள்.
 
இன்று எவரும் தனி நாடு கேட்கவில்லை. தனித் தமிழீழ கோரிக்கையும் இன்று இல்லை. யுத்தம் முடிவடைந்ததோடு தனி நாட்டுக் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாண சபை மற்றும் பாராளுமன்ற, ஜனாதிபதி தேர்தல்களின் போது எமக்கு வாக்களித்து ஜனநாயக அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பிரிக்கப்படாத இலங்கைக்குள் ஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஸ்தீரமான தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

புதிய யுகமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை கடந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்கள் தமது தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தினர்.

இதனை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதியின் அணுகுமுறையுடன் பிரதமர் புதிய அரசியலமைப்பு பிரேரணையை சமர்ப்பித்துள்ளார். புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பொறுப்புக் கூறும் அரசு அமைய வேண்டும்.
இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. நாட்டு மக்களின் நலன் கருதியும் அதன் அடிப்படையில் நமது பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

சரியான விடயங்களை, சரியான நேரத்தில், சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். அழிவுகளிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும். பண்டா செல்வா, டட்லி செல்வா, இலங்கை இந்தியா என பல உடன்படிக்கைகள் பேரினவாதிகளால் நிராகரிக்கப்பட்டன.இதன் காரணமாகவே நாடு பாரிய நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, பிரேமதாஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவும் மேற்கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் ஒரு தேசியத் தலைவர் தான். எனவே அவரும் புதிய அரசியலமைப்புக்காக தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.


இன்று பிரதமரினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை மிக முக்கியமானதாகும். எனவே நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அரசியல், கட்சிப்பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஆதரவு வழங்க வேண்டும். இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் சர்வஜன அங்கீகாரத்துடன் இந்தப் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
 
நாட்டு மக்களின் இறையான்மை பாதுகாக்கப்பட வேண்டும்.அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஒரே இலங்கை உருவாக்கப்பட வேண்டும். நான் ஒரு இலங்கையன் என்றும் இது எனது நாடு என்றும் பெருமையாக கூறும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.
 
தனிப்பட்ட ரீதியிலான கருத்து முரண்பாடுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு நாட்டில் தேசிய நல்லிணக்கமும் அமைதியும் சமாதானமும் ஏற்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தினக்குரல்

தனிநாடு கோரிக்கை இனிமேல் இல்லை

தனிநாடு என்ற கோரிக்கை எதுவும் இனிக் கிடையாது என்று செவ்வாய்க்கிழமை (12) சபையில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாட்டின் அனைத்து பிரஜைகளும் தாங்கள் இலங்கைக்குரியவர்கள் என்றும் இலங்கை தங்களுக்குரியது என்றும் உணரும் வகையிலான பொது இணக்கப்பாட்டுடன் கூடிய புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.


அத்துடன், முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

தினகரன்

சு.கவின் திருத்தங்களுக்கு த.தே.கூ. எதிர்ப்பு


புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தது.


நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழித்தல், விருப்பு வாக்கு முறையை நீக்கி நியாயமான பிரதிநிதித்துவ தேர்தல் முறையை உறுதி செய்தல், தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான தீர்வொன்றை வழங்கக்கூடிய வகையிலும் நல்லிணக்கத்தை மேம்படுத்தக் கூடிய வகையிலும் புதிய அரசியலமைப்பொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்ற விடயங்களை நீக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திருத்தம் முன்வைத்தது. இந்தத் திருத்தங்களை சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று(12) முன்வைத்தார்.
 
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இந்தத் திருத்தங்களுக்கு தனது ஆட்சேபனையை வெளியிட்டார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நீக்கக் கோரும் விடயங்களே குறித்த பிரேரணையின் அடிப்படையானவை என்றும், இவற்றுக்கு இணங்கியே பிரேரணைக்கு ஆதரவு வழங்க தான் முன்வந்ததாகவும் தெரிவித்தார். அவற்றை நீக்குவதானது பிரேரணையின் அடிப்படையை நீக்குவதாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
 
எனினும், தமது கட்சியின் நிலைப்பாட்டை தாம் முன்வைத்திருப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அரசைப் பொறுத்தது என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார். எனினும், சகலரும் இணங்கிக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதே அடிப்படையான தேவையாக உள்ளது என்றும் கூறினார்.
 
இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, இந்தத் திருத்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய தீர்மானம் என்றும், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வரலாம் என்றும் தெரிவித்தார்.
 
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பிரித்தானிய பாராளுமன்றம் எழுத்து மூலமான அரசியலமைப்பின்றியே செயற்படுகிறது. காலத்தின் தேவைக்கேற்ப அரசியலமைப்பை திருத்த வேண்டியுள்ளது. சோல்பரி யாப்பு இந்த நாட்டு மக்களால் தயாரிக்கப்பட்டதல்ல. எம்மீது திணிக்கப்பட்டது. 1972 யாப்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டது. மக்கள் ஆணைப்படியே அன்று யாப்பு திருத்தப்பட்டது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு சோல்பரி யாப்பில் குறிப்பிடப்படாதாதல் அன்று சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
 
அரசியலமைப்பில் பொருந்தாத, குழப்பமான பிரிவுகள் இருக்கின்றன. சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார். சுதந்திரக் கட்சி அரசியலமைப்பை அமைப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறுகின்றார். இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக சிறந்த யாப்பை உருவாக்கியது சு.க.வே என்றார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127820/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சொறீலங்கன் ஆகிட்டம். ஹய்யா.. எதுக்காக இவ்வளவு காலமும் போராடினமோ.. அதை சிங்கள மக்களினதும்... அமெரிக்காவினதும்.. ஹிந்தியாவினதும்.. ஏகோபித்த.. ஆதரவோடு அடைஞ்சிட்டம். இடைசில செத்துப் போனவைக்கு நாமம். நாட்டை விட்டுப் போனவை.. வெளிநாட்டுப் பாஸ்போட்டில.. பத்திரமா கொலிடே வந்து போகலாம். நாடும் நாங்களும் சகஜநிலைக்கு வந்திட்டம். :rolleyes:

எல்லாச் செய்திகளின் சாரம்சம்... இது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மண்ணையும், அந்த மண்ணின் மைந்தர்களின் உயிரையும், உதிரத்தையும் பலியாகக் கொண்டதுடன், தமிழருக்கான தனிநாடு தனது உக்கிரம் தணிந்து சாந்தமடைந்து விட்டது. மேற்கொண்டு புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாகி நாட்டில் தேசிய நல்லிணக்கத்தையும், அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தப் போகிறது. இதன்பின்னர்... சிங்களவர்களுடன் வாழும் தமிழர்கள் சிங்களம் படித்து சிங்களவருடன் வாழ்வதுபோன்று, தமிழர்களுடன் வாழும் சிங்களவர்கள் தமிழ் படித்துத் தமிழருடன் வாழ்வார்கள்.

ஊடகங்களின் கருத்துப்படி, முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சா அவர்களைத் தேசிய தலைவராக, இன்னாள் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதைப் போலவே, முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சாவும், இன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை தேசிய தலைவராக ஏற்றுக்கொள்வார். :grin:
   

                                                           untitled.bmp

எமது போராட்டம் மறுக்கப்பட்ட எமது உரிமைகளுக்கானது. அதற்குத் தீர்வாக தனிநாட்டு கோரிக்கை வைக்கப்பட்டதே தவிர தனிநாட்டிற்காக போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. இப்போது மறுக்கப்பட்ட எமது உரிமைகள் வழங்கப்பட்டு தமிழரும் இலங்கையில் சம பிரஜையாக மதிக்கப்படும் வகையில் ஒரு தீர்வு கிடைக்குமானால் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுவதில் தவறு எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மறுக்கப்பட்ட உரிமைகளில் எது இதுவரை கிடைத்திருக்கிறது..?!

அல்லது

கிடைக்கும் என்ற உத்தரவாதமாவது... தரப்பட்டுள்ளதா..

எந்த மஸ்தியஸ்தர் முன்னிலையில்....

எதுவுமே நடக்காமல்..

தந்தால்... கைவிடுவதில் தவறில்லை என்கிறார்கள்...

ஆனால் தராமலே கைவிட்டிட்டம் என்று குடுகுடுப்பை கும்பல் தேசிய தலைவர் சம்பந்தன் அறிவிச்சதும் இல்லாமல்.. போர்க்குற்றவாளி... ஊழல்வாதி.. சர்வாதிகாரி என்று சொன்ன.. மகிந்தவை சொறீலங்கா மக்கள் அனைவருக்குமான தேசிய தலைவர் என்றும் பிரகடனப்படுத்தி இருக்கிறார். சிங்களவனே சொல்லேல்ல. இதுக்கேன் இந்த தேவையில்லாத வேலை. tw_blush:tw_blush:

சிலர் இதுக்கு வந்து சம்பந்தனின் அரசியல் புரிய நாலு பி எச் டி வேண்டும் என்று வகுப்பெடுப்பினம். சம்பந்தன் செய்வது சுத்தச் சரணாகதி மொள்ளமாரி அரசியல். tw_angry:tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொன்றாக களட்டி

கடைசியாக இருந்த கோவணத்தையும் களட்டி எறிஞ்சாச்சு...

எந்த பிரச்சினையிலும்

பேச்சுவார்த்தையிலும் 

கொடுத்தல்

வாங்குதல் என்று தான் இருக்கும்

இங்கு மட்டும் தான் விட்டுக்கொடுத்தல் மட்டுமே

இனி வாங்குபவன் எதற்கு இவருடன் பேசணும் என்றநிலைக்கு கொண்டு வந்தாச்சு

சிங்களம் ஆகக்குறைந்ததையாவது தந்தால்

சிங்களவர்கள் பெரும் மனச்சாட்சியுள்ளவர்கள் என்று தான் அர்த்தம்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆயிரம் தமிழர்களை யுத்தத்தின் மூலம் திட்டமிட்டு இன அழிப்பு செய்து, தமிழ் மக்களின் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிய, போர் குற்றம் புறிந்த அல்லது ஒப்புதல் கொடுத்ததாக கருதப்படும் கயவனை தன் "தேசியதலைவனாக" மீள் பிரகடனம் செய்த சம்பந்தன்  "அரசியல் சாணக்கியம்" ஒட்டு மொத்த தமிழர்களின் தமிழ் தேசிய உணர்வுக்கு அடித்த  சாவு மணியே தவிர வேறு ஏதும் இல்லை.
வழமை போல இங்கே உலாவரும் "சிங்கள அரசியல்" அபிமானிகளுக்கு இந்த செய்தி காதில் இன்பத் தேனாக பாயும். 
 

வாழ்த்துக்கள் சம்பந்தன் .

நாட்டில் இருப்பவர்களும் அவர்களால் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படவர்களும் நாட்டின் இன்றைய யதார்த்த நிலயை மிக தெளிவாக உணர்ந்து உள்ளார்கள் .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கள் ஒரு சிறு துரும்பும் இனத்திற்கு செய்தாவர்கள் துள்ளுவதில் வியப்பில்லை .அடைந்தால் தமிழ் ஈழம் அல்லது  நீங்கள் சாவுங்கோ இதுதான் இவர்கள் மனநிலை .

நாட்டில் இருக்கும் மக்களின் வலியிலும் கஷ்டத்திலும் தாங்கள் துளியும் அனுபவிக்க போவதில்லை என்று இவர்களுக்கு நன்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, arjun said:

வாழ்த்துக்கள் சம்பந்தன் .

நாட்டில் இருப்பவர்களும் அவர்களால் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படவர்களும் நாட்டின் இன்றைய யதார்த்த நிலயை மிக தெளிவாக உணர்ந்து உள்ளார்கள் .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கள் ஒரு சிறு துரும்பும் இனத்திற்கு செய்தாவர்கள் துள்ளுவதில் வியப்பில்லை .அடைந்தால் தமிழ் ஈழம் அல்லது  நீங்கள் சாவுங்கோ இதுதான் இவர்கள் மனநிலை .

நாட்டில் இருக்கும் மக்களின் வலியிலும் கஷ்டத்திலும் தாங்கள் துளியும் அனுபவிக்க போவதில்லை என்று இவர்களுக்கு நன்கு தெரியும் .

மிகத்தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் சிங்களவன் தாம் கேட்கும் எதையும் தரப்போவதில்லை என்று.எனவே தருவதையாவது வாங்கிக்கொண்டு இருக்கிறவரைக்கும் காலத்தை ஓட்டுவம் என்று.

நாங்கள் சில முதுகெலும்பு இல்லாததுகள் மாதிரி போராட்டம் தொடங்க முதலே ஓடிவந்து கையைத்தூக்கி அசைலம் அடிச்சு டோல் காசு வாங்கிக்கொண்டு காலாட்டிக்கொண்டு திண்ணைக்கு மண்எடுக்கவில்லை.அங்கேயே மண்ணெண்ணெய் விளக்கில் படித்து பல்கலைக்கழகம் முடித்து வெளிநாடுவந்து வேலைசெய்து எமது குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் எம்மாலான உதவிகளை செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

நாங்கள் உங்களை மாதிரி இங்குவந்து கையை தூக்கவில்ல. நாம் வேலை செய்ய வந்தோம் முடிந்ததும் தாய்நாடுதான் சென்று வாழ்வோம் . அதனால்தான்  நாட்டிலுள்ள மக்களின் வலியும் கஷ்டமும் தீர ஒரு நல்ல தீர்வு வேண்டும் என்றும் நினைக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.