Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினிமுருகன் எதை காப்பாற்றுகிறான் தெரியுமா? ரஜினிமுருகன் விமர்சனம்!

Featured Replies

ரஜினிமுருகன் எதை காப்பாற்றுகிறான் தெரியுமா? ரஜினிமுருகன் விமர்சனம்!

 

மதுரைக்காரங்க வெட்டு குத்து கொலை என்று அலைந்துகொண்டேயிருக்கிறவர்கள் என்கிற தமிழ்த்திரையுலகின் கற்பிதத்தை உடைக்க வேண்டுமென்பதற்காகவே சிரிக்கச் சிரிக்கப் படமெடுத்து அதில் சிந்திக்க வைக்கும் சில விசயங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.

IMG_0147.jpg

எல்லாப்படங்களிலும் பிறக்கிற குழந்தைக்கு அப்பா அம்மா பேர் வைப்பார்கள் என்றால் இந்தப்படத்தில் தீவிர ரஜினிரசிகரான அப்பாவின் நண்பர் கதாநாயகனுக்கு ரஜினிமுருகன் என்று பெயர் வைக்கிறார். நாயகன் சிவகார்த்திகேயனின் அப்பா பள்ளித்தலைமையாசிரியர், அம்மா அதே பள்ளியில் ஆசிரியர், அவருடைய அண்ணன்கள் இருவர், ஒருவர் மென்பொருள்துறையிலும் இன்னொருவர் இராணுவத்திலும் இருக்கிறார்கள். அப்பாவின் உடன்பிறந்த அண்ணன் தம்பி தங்கைகள் எல்லாம் வெளிநாடுகளில் செட்டில் ஆகியிருக்கின்றனர். எல்லா வகையிலும் வசதியான குடும்பத்தில் வேலைவெட்டியில்லாமல் சுற்றுக்கொண்டிருக்கும் ஒரேநபர் சிவகார்த்திகேயன். அவருக்கு இருக்கும் ஒரேவேலை பாரம்பரியவீட்டில் தனியாளாக இருக்கும் ராஜ்கிரணுக்கு மூன்றுவேளை உணவு கொடுப்பதும் அவருக்குத் தேவையான விசயங்களைச் செய்துகொடுப்பதும் தான். கூடவே கதாநாயகி கீர்த்திசுரேஷைப் பின்தொடருவதும்.

இப்படியே போய்க்கொண்டிருந்தால் போதாது என்பதை உணர்ந்து அதற்குள் குடும்பசென்டிமெண்டை அளவாகக் கலந்திருக்கிறார். மதுரை மண்ணுக்குரிய ஒரு பங்காளியையும் திரைக்கதைக்குள் வைத்திருக்கிறார். இந்த பொழுதுபோக்கு கதையை வைத்துக்கொண்டு இன்றைய நாகரிக சமுதாயத்துக்குச் சொல்ல வேண்டிய கருத்துகளையும் கருத்தென்று தெரியாமல் சொல்லியிருக்கிறார்கள்.

_MG_5908.jpg

சிவகார்த்தியேன் சூரி ஆகியோருக்கு முந்தைய படங்களுக்குச் சற்றும் குறைவில்லாமல் சேட்டை செய்யும் வேடம். உடல்மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அந்தக் கேரக்டர்களுக்கு உயிர்கொடுத்து அடித்து ஆடியிருக்கிறார்கள். அவர் மாதிரியே இருக்கும் சூரியும் அவரும் சேர்ந்துகொண்டு கொடுக்கும் அலப்பறைகள் வாய்விட்டுச் சிரிக்கவைக்கின்றன. அடுத்த ஆறுமாசத்துல ஆடிகார்ல போவீங்கன்னு சோசியக்காரர் சொன்னவுடன் ஆடிகார் புக் பண்ண ஷோரூமுக்குப் போவதும் அங்கு சேல்கேர்ளாக இருக்கும் நாயகி கீர்த்திசுரேஷையும் காரையும் ஒப்பிட்டு கலாய்ப்பது, நாயகியின் வீட்டுக்கெதிராகவே ரஜினிமுருகன் டீஸ்டால் என்று போடுவது, அந்த டீஷாப் குப்புறக்கவிழ்வது உட்பட படம் முழுக்க அதகளம் செய்திருக்கிறார்கள்.

சூரியின் அப்பா அவர் அடிக்கடி ஏதாவதொரு பேர் சொல்லி உறவினர்கள் நண்பர்களிடம் மொய்வசூலிக்கும் தந்திரம், இவர்களே ரியல்எஸ்டேட் தொழிலில் இறங்குவது உள்ளிட்ட விசயங்களும் போரடிக்காமல் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. தாத்தாவின் பூர்வீக வீட்டை விற்றுச் செட்டில் ஆகலாம் என்று நினைத்து வேலையைத் தொடங்கும்போது பேரன் என்கிற பெயரில் வருகிற ஏழரைமூக்கன் சமுத்திரக்கனி, படத்தை ஆக்ஷன் மோடுக்குக் கொண்டுபோய்விடுவாரோ என்று அச்சப்பட வைக்கிறார். அதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தாமல் விட்டதே படக்குழுவினரின் புத்திசாலித்தனம்.

ஊரே மெச்ச வாழும் ஒரு பெருந்தகை ராஜ்கிரண், நாட்டையே கூட்டி ஒரு பொய் சொல்வது பொருத்தமா? என்கிற கேள்வியை நான் செத்தா, நீங்கள்ளால் வந்து பார்ப்பீங்க, நான் உங்களை எப்பப் பார்க்கறது, உங்க புள்ளங்களைப் பார்க்காம உங்களால் ஒருநாள் கூட இருக்க முடியலைங்கிறபோது நான் மட்டும் என் புள்ளங்களப் பாக்காம எப்படி இருக்கிறது? என்று கண்ணீர்மல்க ராஜ்கிரண் பேசும் வசனம் அந்த எதார்த்த மீறலைக் காணாமல் அடித்துவிடுகிறது. கடைசியாக பஞ்சாயத்தில் எனக்கு இன்னொரு பேரன் இருக்கான் என்று சொல்லி தன் முன்கதையை உணர்ச்சி கொந்தளிக்கச் சொல்லி தான் ஒரு நடிப்புஅரக்கன் என்பதை மீண்டும் நிறுவியிருக்கிறார் ராஜ்கிரண்.

IMG_3429.jpg

நாயகி கீர்த்திசுரேஷ், சிவகார்த்திகேயனுக்கு ஈடுகொடுத்திருக்கிறார். சில காட்சிகளில் அழகாகவும் சில காட்சிகளில் பேரழகாகவும் இருக்கிறார். அவருடைய அப்பாவாக நடித்திருக்கும் தீவிர ரஜினிரசிகர் அச்சுதகுமாரை டெரர் என்று சொன்னாலும் அவர் வரும் காட்சிகள் அதிகச் சிரிப்பூட்டுகின்றன.

ஏழரை மூக்கனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்துக்கு மிகப்பொருத்தமாக நடித்து நற்பெயர் பெறுகிறார். ஒருஇலட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர் நடக்கும் நடை நாடோடிகள் நமோநாரயணனுக்குச் சவால் விடுகிற மாதிரி அமைந்திருக்கிறது.

கடைசிக்காட்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சியூட்டியிருக்கிறார்கள். பழங்கால வீடுகளைப் பாதுகாக்கவேண்டும் என்கிற கருத்தைச் சொல்லி வருத்தப்படாதவாலிபர் இந்தப்படத்தில் இன்னும் உயர்ந்திருக்கிறார்.

இமானின் இசையில் பாடல்கள் எல்லாமே படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன. பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை வண்ணமயமாக்கியிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் சொத்து வைத்திருக்கிறவர்களுக்கு ஏற்படுகிற சிக்கல்களோடு மதுரை சுற்றுவட்டாரத்திலுள்ள ஊர்ப்பஞ்சாயத்துகள் பற்றிய விசயங்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் பொன்ராம் பழையவீடுகளைப் பழையதாகப் பார்க்காமல் பொக்கிஷமாகப் பாருங்கள் என்றும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

http://www.vikatan.com/cinema/movie-review/57681-rajinimurugan-movie-review.art

Edited by நவீனன்

12523140_10154441660203265_3142660519418

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, arjun said:

12523140_10154441660203265_3142660519418

லொல்லண்ணா, அம்மாவா, மோளா?

அதென்னப்பா, தேப்பனும் மோளுமா போடமாட்டினமே?

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Nathamuni said:

லொல்லண்ணா, அம்மாவா, மோளா?

அதென்னப்பா, தேப்பனும் மோளுமா போடமாட்டினமே?

 

திரையுலகிலை உதெல்லாம் சரிப்படாது......பார்த்தமாம்....போனமாம்....அலுவலை முடிச்சமாம்....வந்தமாம்....பிள்ளையை பெத்தமாம்....வளர்த்தாமம் என்னுக்கிட்டு வாழ்க்கைய ஓட்டிக்கிட்டே இருக்கணும். :cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் கதாநாயகி செம பி கரு தாத்தா 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, முனிவர் ஜீ said:

ஆனாலும் கதாநாயகி செம பி கரு தாத்தா 

ரொம்ப வழியாதீங்க ராசா..:rolleyes:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, முனிவர் ஜீ said:

ஆனாலும் கதாநாயகி செம பி கரு தாத்தா 

அந்த கறுப்பு மச்சக்காரியைத்தானே சொல்லுறியள் :grin: அவா அப்பவே உச்சம் :cool:

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

ரொம்ப வழியாதீங்க ராசா..:rolleyes:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நாங்கள் இளந்தாரி பொடியங்கள் அப்படித்தான் ஹிஹி??

யோவ் தாத்தா  மகள் மட்டும் என்ன ??

  • கருத்துக்கள உறவுகள்

சிவகார்த்தியேனுக்கு குடுத்து வைச்சிருக்கு.. அனுபவிக்கிறான் பயபுள்ள. முனீவர்ஜூ.. நாங்க.. நீங்க வாயால வடை சுட வேண்டியான். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் நெடுக்கு அடை தேன் அடை உங்கள் பாவனாவை மிஞ்சிடும்??

நமக்கு எங்க லவ்வும் வருதில்லை லவ் இல்லாமலும் வருதில்லை எனது புனைப்பெயருக்கு சரியாக வாழ்க்கை ஓடுது??

Edited by முனிவர் ஜீ

Keerthy-Suresh-wallpaper.jpg

மலையாளப் பக்கம் வடிவு கொஞ்சம் கூடிப்போச்சு 

Keerthi-Suresh-Recent-Photos-04.jpg

actress-keerthi-suresh-cute-stills.jpg

Keerthi-Suresh-new-pics-from-Nenu-Sailaj

இண்டைக்கு காணும் முனிவர் .

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டா உசுப்பேத்திறீங்க நெடுக்ஸிக்கு புகையை போகுது???

  • தொடங்கியவர்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐய்யோ செல்லம் டான்ஸ் ஆடு து இவளுக்கு நான் ரசிகர் மன்றம் திறப்பேனே யாழ் இணையத்தில் நான் ??

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, முனிவர் ஜீ said:

ஏண்டா உசுப்பேத்திறீங்க நெடுக்ஸிக்கு புகையை போகுது???

அதுக்கு ஒரு தொழிலதிபர் காத்துக்கிட்டு இருப்பார். பாவம் முனிவர் ஜீ.. உதுகளுக்கு பின்னாடி போய்... மீண்டும் தனது தற்போதைய நிலையை பலப்படுத்தப் போகிறார். இதை எல்லாம் புகை என்று கருதினால்.. நாளை பாதிப்பு நமக்கில்ல. tw_blush:

On 20/01/2016 at 7:33 PM, Nathamuni said:

லொல்லண்ணா, அம்மாவா, மோளா?

அதென்னப்பா, தேப்பனும் மோளுமா போடமாட்டினமே?

நாய் குட்டி போட்டால்.. அதுக்கு காரணமான.. கடுவன் எதுன்னு கணக்குப் பார்க்கக் கூடாது. ஆல் ரைட். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22.1.2016 at 2:17 AM, முனிவர் ஜீ said:

நாங்கள் இளந்தாரி பொடியங்கள் அப்படித்தான் ஹிஹி??

யோவ் தாத்தா  மகள் மட்டும் என்ன ??

எண்டாலும் தாயிலை இருக்கிற ஒரு லுக் ஒரு கிக் ஒண்டும் மோள்காரியிலை துண்டற இல்லை  laughing-emoticon.gif

சாவித்திரி படத்தில் அம்மாகாரியை பார்த்துவிட்டு "சாவித்திரி தியரி " என்று கொஞ்ச நாட்கள் வைத்திருந்தோம் .

பொல்லாத தியரி அது .

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, arjun said:

சாவித்திரி படத்தில் அம்மாகாரியை பார்த்துவிட்டு "சாவித்திரி தியரி " என்று கொஞ்ச நாட்கள் வைத்திருந்தோம் .

பொல்லாத தியரி அது .

இவர் ஒருத்தர், சாவித்திரி, சாவித்திரி, எண்டு, பேயடிச்சு குலப்பன் காய்ச்சல் அடிக்கிற மாதிரி, குளறிக் கொண்டு திரியிறார். தியரி வேறயாம்.

முதலில, நாங்கள் எங்க சாவித்திரியப் பாக்கலாம் என்டதை சொல்லுங்க.

 

 

About a young Brahmin girl who is married off to an old priest by her poverty-stricken father. Sexually frustrated, she embarks on an affair with a young, non-Brahmin visitor.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர்அம்மா... கதை போல கிடக்குது? :)

அந்த தியரியையும் சொல்லிவிடுகின்றன்,

காதல் கத்தரிக்காய் என்று இழுக்காமல் மேனகாவை சந்தித்த அன்றே அந்த விசிட்டர் அவர் மீது கையை வைத்துவிட்டான் .

அப்ப நாங்களும் உதை நாங்களும் try பண்ணினால் என்ன என்று கதைத்துக்கொண்டு திரிந்தோம் .அம்புட்டும் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

அந்த தியரியையும் சொல்லிவிடுகின்றன்,

காதல் கத்தரிக்காய் என்று இழுக்காமல் மேனகாவை சந்தித்த அன்றே அந்த விசிட்டர் அவர் மீது கையை வைத்துவிட்டான் .

அப்ப நாங்களும் உதை நாங்களும் try பண்ணினால் என்ன என்று கதைத்துக்கொண்டு திரிந்தோம் .அம்புட்டும் தான் 

கவனம், அது சாவித்திரியிண்ட வயதான ஐயா. 

ஐயாமார், இப்ப அந்த மாதிரி. நீங்களும் உங்கட தியரியும்....

பொட்டா, பூவா என்று தான் கேள்வி வரும். பிறகு கருநாகப் பொந்தினில் கை விட்ட கதை தான். tw_dizzy:

இது தான் நம்மட கனவுகன்னி (ஸ்ரீதேவி )

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Surveyor said:

இது தான் நம்மட கனவுகன்னி (ஸ்ரீதேவி )

அளவை சின்னப் பொடி என்று நினைச்சன்... மயலு.... எண்டு நிக்கிறாரே ? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.