Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து மைத்திரி பின்வாங்குகிறார்

Featured Replies

சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து மைத்திரி பின்வாங்குகிறார்

கடந்த ஆண்டு ஐநா பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொண்டிருந்தார்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணையில் 'சர்வதேசத்தின் தலையீட்டை' அனுமதிக்கப் போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் உள்ளடக்குவதாக ஜனாதிபதி சிறிசேன ஜெனீவாவில் ஏற்கனவே உறுதி அளித்திருந்ததாகவும் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் விதத்தில் அவர் பிபிசியிடம் வெளியிட்ட கருத்து அமைந்துள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் (ஐடிஜேபி) கூறியுள்ளது.

'இலங்கையில் உள்ளூர் விசாரணை பொறிமுறைகள் நீண்டகாலமாக தோல்வியடைந்த வரலாறு உள்ள நிலையில், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி நடைமுறையில் நம்பிக்கை வைப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் அந்த அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் யஸ்மின் ஸூக்கா தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்படும் இராணுவ வீரர்களின் பெயர் விபரங்களை ஐநா வெளியிடவில்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதையும் ஸூக்காவின் அறிக்கை விமர்சித்துள்ளது.

கடத்தல்களும் சித்திரவதைகளும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களும் புதிய ஆட்சியின் கீழும் தொடர்வதாக வெளியாகியிருந்த குற்றச்சாட்டுக்களையும் ஜனாதிபதி சிறிசேன பிபிசியிடம் மறுத்திருந்தார்.

அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் 'விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து' வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், 2015ம் ஆண்டில் நடந்த அவ்வாறான 20 சம்பவங்களை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதாகவும் ஃபிரீடம் ஃப்ரம் டார்ச்சர் என்ற அமைப்பும் அவ்வாறான வேறு சில சம்பவங்களை பதிவுசெய்துள்ளதாகவும் ஐடிஜேபி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்களை மறுத்துள்ள இலங்கை ஜனாதிபதியின் போக்கில் மாற்றம் வரும் என்று நம்புவதாகவும் யஸ்மின் ஸூக்கா கூறியுள்ளார்.

இதனிடையே, தனது ஆட்சியின் கீழ் கடத்தல்களும் சித்திரவதைகளும் நடக்கவில்லை என்ற மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை ஃப்ரீடம் ஃப்ரம் டார்ச்சர் அமைப்பும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160122_maithri_itjp?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் அதிசயம் நிகழப் போகிறது என்ற சம் சும் மாவை குடுகுடுப்பை கும்பலுக்கு சகுனம் சரியில்லை. தைப்பொங்கலில் இருந்து வெளிப்படையாக பின்வாங்கத் தொடங்கிய நல்லாட்சித் தலைவர்.. தொடர்ந்து பின்வாங்கிக்கிட்டு இருக்கிறார். எங்க போய் சங்கமம் ஆகப் போகிறரோ..??! tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து மைத்திரி பின்வாங்குகிறார்

என்னைப்போலை ஆக்கள்  இலங்கையின்ரை 60வருட அரசியல் வரலாறு தெரியாமலே இவ்வளவுநாளும் காட்டுக்கத்து கத்திக்கொண்டிருக்கிறம். நாய்வாலை நிமித்தினாலும்.சிங்களத்தின்ரை அடிப்படை கொள்கையை எந்தக்கொம்பனாலையும் மாத்தேலாது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

2016 இல் அதிசயம் நிகழப் போகிறது என்ற சம் சும் மாவை குடுகுடுப்பை கும்பலுக்கு சகுனம் சரியில்லை. தைப்பொங்கலில் இருந்து வெளிப்படையாக பின்வாங்கத் தொடங்கிய நல்லாட்சித் தலைவர்.. தொடர்ந்து பின்வாங்கிக்கிட்டு இருக்கிறார். எங்க போய் சங்கமம் ஆகப் போகிறரோ..??! tw_blush:

மீண்டும் மகிந்தா,கோத்தா கூட்டுடன் சங்கமம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சிக்கு சர்ட்டிபிக்கட் கொடுக்கிற இருவர்  இப்பவரப்போகினம்....நீங்கள் இப்படிக் கதைகிறியளே...தொலந்தது யாழின் வெள்ளிக்கிழமை நின்மதி...

நல்லாட்சிக்கோ சிங்களதிற்கோ ஒருகாலமும் சேர்டிபிக்கேட் கொடுக்கவில்லை சர்வதேச அரசியல் நிலைமை அப்படி ,

மைத்திரிக்கு தெரியும் மகிந்தா எப்படி போனவர் என்று .முடிந்தவரை இழுத்து சுழித்து எல்லாம் பார்ப்பார்கள் ஆனால் இனி அது வாய்க்காது .

இரண்டு வருடங்களில் அழிக்க படவேண்டிய புலிகள் இருபது வருடங்கள் இழுக்கவில்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்

புலி அழிந்ததது என்று மைத்திரியே சொல்லவில்லை...எதுவோ நீங்கள்தான் புலியை அழித்ததுபோலாக் கதைக்கிறியள்...புலி அழிந்தது என்று சொன்னாலும் அவர்கள் நன்மையே செய்துபோட்டுச் சென்றார்கள்...நீங்கள் என்னடாவென்றால் எல்லோரையும் குழப்பிப்போட்டு இங்கை வந்திருந்துகொண்டு ...

Edited by alvayan
எழுத்துப்பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.