-
Tell a friend
-
Topics
-
1
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
1.4 மில்லியன் ரூபா கப்பம் வசூலித்த 4 பொலிஸார் கைது! கொழும்பு 15 இல் உள்ள குடியிருப்பு ஒன்றிற்குள் நுழைந்து அதில் வசிப்பவர்களை அச்சுறுத்தி 1.4 மில்லியன் ரூபாவை கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும், கொழும்பு வடக்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இது தொடர்பான மேலதிக விசாரணையினை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1399894 -
By தமிழ் சிறி · Posted
மாவையின் மகன், முளைத்து மூன்று இலை விடவில்லை, இன்னும் அரசியலில் முழுமையாக கால் பாதிக்கவில்லை.... அதற்குள் 30 லட்சம் ரூபாய் பெறுகின்ற அளவிற்கு வளர்த்துள்ளார் என்றால்... அரசியலில், பலகாலமாக இருக்கும் பாரளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை கோடிகளை அமுக்கிக் கொண்டு இருப்பார்கள். இதை மறுத்து வெள்ளையடிக்கவும்... யாழ் களத்தில் ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் வேடிக்கை. முன்பெல்லாம்.... 1975களில் அருளம்பலம், தியாகராஜா போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச கட்சியில் சேர்ந்து இருந்து கொண்டு... அரச உத்தியோகம் எடுத்துக் கொடுக்க 5,000 ரூபாய் வாங்குவார்கள். அதனை இரு பக்கமும் பயன் பெறும் ஒரு சேவை என்று எடுத்துக் கொண்டு கடந்து சென்றாலும்... இப்போதைய அரசியல்வாதிகள்..... தமது வயிறு, வளர்ப்பதற்காக தமிழ் மக்களை சாட்டி.. அரசியல் செய்யும் ஈனச் செயலை எப்படி அழைப்பது? -
By தமிழ் சிறி · Posted
லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில் குண்டு வெடிப்பு-09 பேர் உயிரிழப்பு! லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பம் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த சுமார் 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் செய்திப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட “பேஜர் மெசேஜ் எக்ஸ்சேஞ்ச்” இயந்திரங்கள் ஒரே நேரத்தில் வெடிக்க செய்ததாக கூறப்படுகிறது. இதன்போது சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் இந்த வெடிப்புகள் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்தியதாக ஹிஸ்புல்லா போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குண்டுவெடிப்புகளில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1399831 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
நாசாவின் முயற்சியால் விலகி சென்ற விண்கல் – 3035 இல் மீண்டும் மோதும் என எச்சரிக்கை. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்.) மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளை பயன்படுத்தி ‘2024-ஓன்’ என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இதனுடைய அளவு, வடிவம் மற்றும் நகர்வு பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறுகோள் 720 அடி விட்டம் கொண்டது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன், இதன் வேகம் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் (சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுகோளின் அளவு மற்றும் வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மைல் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும். பூமிக்கும், நிலவுக்கும் இடையில் உள்ள தொலைவைவிட 2.6 மடங்கு தூரமாகும். இந்த சிறுகோள் நேற்று பூமியை கடந்து சென்றது. இந்த சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, டெல்லி விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் கூறும்போது, ‘விண்வெளியில் ‘2024 ஓஎன்’ சிறுகோள் பூமியை கடந்து சென்றது. இது 720 அடி பெரியது. அதாவது 2 கிரிக்கெட் மைதானத்தின் அளவு போன்றது. இந்த சிறுகோள் திட்டமிட்டப்படி நேற்று பகல் 3.49 மணிக்கு பூமிக்கும், நிலவிற்கும் நடுவில் பூமியில் இருந்து 10 லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து சென்றது. குறிப்பாக, பூமியுடன் ஒப்பிடும்போது வினாடிக்கு 8.88 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. அடுத்து இதே சிறுகோள் வருகிற 2035-ம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி மீண்டும் பூமியை கடந்து செல்ல இருப்பதாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1399861
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts