Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தினத்திலிருந்து தமிழ்,சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றப்படும் : அரசாங்கம்

Featured Replies

சுதந்திர தினத்திலிருந்து தமிழ்,சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றப்படும் : அரசாங்கம்

எதிர்வரும் சுதந்திர தினத்தில் இருந்து தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றும் புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும்  செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

  

சகல அரச நிகழ்வுகளிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வைபவங்களிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இயற்றப்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

இலங்கையில் சிங்கள மொழிக்கும் சிங்கள பெளத்த மக்களுக்கும் உள்ள அதே உரிமைகளும் சலுகைகளும் தமிழ் மக்களுக்கும் உள்ளன. தமிழ் பேசும் மக்களின் மொழியையும் மதித்து அவர்களின் அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புகளின் ஒன்றாகும். 

 

அதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்வரும் சுதந்திர தின நாளிலிருந்து இலங்கையில் சகல அரசகரும நிகழ்வுகள் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நிகழ்வுகளிலும்  சிங்கள மொழியிலும்   தமிழ் மொழியிலும் இலங்கையின் தேசியகீதம் இயற்றப்பட வேண்டும். 

 

நாட்டில் நல்லாட்சிக்கான முக்கிய அடையாளத்தில் இது பிரதானமான ஒன்றாகும். சகல இன மக்களையும் பிரதிந்திதுவப்படுத்த இதுவே சரியான அடையாளமாகும். 

அதேபோல் தமிழ் மொழியில் தேசியகீதம் இயற்றப்படுவதை இனவாத செயற்பாடாக கருதும் ஒருசிலர் உள்ளனர். அவர்களின்  கருத்துக்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டிய அவசியம் இல்லை. நாட்டை ஐக்கியப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/2514

 

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கீதம் இயற்ற முதல்

தேசிய கொடி மாற்றப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

தேசிய கீதம் இயற்ற முதல்

தேசிய கொடி மாற்றப்பட வேண்டும்

அதுக்கு எங்கடை ஆக்களே ஓம்படமாட்டினம்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

அரபு மொழியலும் இயற்றப்பட வேண்டும் .....அப்துல்லா

2 minutes ago, putthan said:

அரபு மொழியலும் இயற்றப்பட வேண்டும் .....அப்துல்லா

நோர்வேஜிய மொழியிலும் இயற்றப்பட வேண்டும். அப்பதான் எனக்கு புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

நோர்வேஜிய மொழியிலும் இயற்றப்பட வேண்டும். அப்பதான் எனக்கு புரியும்.

அது புலம்பெய‌ர்ந்தோர் மொழி ஆகவே தேவையில்லை...அரபு தமிழ்மொழி பேசும் இஸ்லாமிய சகோதரர்களின் பூர்வீகமொழி.....tw_tounge_wink:

Just now, putthan said:

அது புலம்பெய‌ர்ந்தோர் மொழி ஆகவே தேவையில்லை...அரபு தமிழ்மொழி பேசும் இஸ்லாமிய சகோதரர்களின் பூர்வீகமொழி.....tw_tounge_wink:

சமரசத்திற்கு இடமில்லை. 

மறுத்தால் நான் காலிமுகத்திடலில் Kingsbury hotelஇல் உண்ணும் விரதம் இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வாவது தமிழர்களுக்கு நாட்டில் பற்று வரட்டும் ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.