Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாரழகும் மருதாணி அழகும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

stock-photo-portrait-of-a-beautiful-indi

நீண்ட காத்திருப்பின் பின்.. டபிள்டெக்கர் வந்து சேர்ந்தது. அதில் ஏற முண்டி அடிக்கும் கூட்டத்திடம்.. இதுகளுக்கு ஒரு ஒழுங்கு வரிசையில வரத்தெரியாதா... என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி.. மேல் தட்டை பார்த்தேன். அது காலியாகக் கிடந்தது.. நான் டெக்கரில் ஏறுவதில் போட்டி போடுவதை விடுத்து மேல இடம் இருக்குத்தானே கடைசியா ஏறுவம் என்று பின்னடித்தேன்.

அழகிய பூப்போட்ட மேற்சட்டையும்.. ஸ்கேட்டும் அணிந்தவளாக அவள்.. சமர் உடுப்பில் கலக்கினாள். அவளின் எலுமிச்சம் கலர் தோலுக்கு அந்த உடுப்பு எடுப்பாக இருந்தது. அவளும் என்னைப் போலவே அதே டபிள்டெக்கரில் ஏறப் போனவள்.. பின்னர்.. பின்னடித்தவளாய் பின்னகர்ந்து வந்து என் முன் நின்றாள். என்ன ஒரு வேவ் லென்த்.. ஒரே விதமாய் சிந்திக்கிறாளே என்று என் மனசு தனக்குள் அவளுக்காக கசிந்து கொண்டதோடு.. காட்சிகளை நோட்டமிட கண்களைப் பணித்தது.

வாளைக்குமரி. பருவங்கள் எல்லாம் அளவோடு மிடுக்காக இருந்தன. கையில் இந்திய மருதாணி போட்டிருந்தாள். என் கண்கள் அவள் மருதாணியின் கோலத்தில் நோட்டமிட்டது. அவளின் கண்மணிகளோ கடைக்கண்ணை அடிக்கடி தடவிச் சென்றன. இந்த நிலையில்.. என் பார்வையின் சூடோ என்னவோ.. அவள் சட்டென என்னை திரும்பிப் பார்த்தாள். ஒரு சின்னப் புன்னகையோடு மீண்டும் முகம் திருப்பிக் கொண்டாள்.

அது போதாதா ஒரு ஆண் மனசுக்கு. அவளை தொடர்ந்து நோட்டம் விடுவதையும் அவளை ரசிப்பதையும் என் கண்களும் மனசும் விரும்பிக் கொண்டன. அவள் வழி இவன் வழி என்றாகி உருகி நின்றது மனசு.

கூட்டம் ஏறி ஓய்ந்ததும் அவள்.. டபிள்டெக்கரில் ஏறினாள். அவள் ஏறி பயண அட்டையை ஸ்கான் செய்தாள். அவளை என் கால்கள் பின்தொடர்வதில் காட்டிய ஆர்வத்தில்.. டெக்கரில் ஏறிய நான்.. பயண அட்டையை..ஸ்கான் செய்வதை மறந்துவிட.. "ஹலோ".. என்ற ரைவரின் குரல் கேட்டு.. விழித்துக் கொண்ட என் மனசு.. கைகளை பயண அட்டையை ஸ்கான் செய்யப் பணித்தது. வாயோ ரைவரிடம் "சொறி" என்று வழிந்தது. இது உனக்குத் தேவையா என்றது இன்னொரு மனசு எனக்குள்.

ஒற்றை மனசாய் வந்தவன்.. அவளால்.. இப்போ இரட்டை மனசாகிப் போனேன்.

மாடிப்படிகளில் ஏறி டபிள்டெக்கரின் மேல் தட்டில்.. அவளைத் தேடினேன். அவள் அங்கு ஒய்காரமாக அமர்ந்திருந்தாள். அவள் எதிர் இருக்கையில் போய் அமர்ந்து அவளை நோட்டமிட்டேன். என் கண்கள்  மீண்டும் மீண்டும்.. அவளின் மருதாணிக் கைகளில் உள்ள கோலத்தின் டிசைனில் லயித்து நின்றன. எத்தனை வகை உருவங்கள்.. அதில்.. கணக்குப் போட்டன கண்கள். ஒரு மனசு அதை ரசித்து மகிழ்ந்தது. இன்னொரு மனசோ.. இதே கணக்கை ஓ எல் சித்திரப் பாடத்தில் போட்டிருந்தால்.. இன்னும் அதிகம் புள்ளி எடுத்திருக்கலாமே என்று கடிந்து கொண்டது.

இருந்தாலும்.. முன்னைய ரசிக்கும் மனசு விடுவதாக இல்லை. அவளின் பூப்போட்ட மேற்சட்டை வழி கண்களை மேயவிட்டு.. ஒளிந்து மறைந்து தெரியும் அவள் எலுமிச்சம் பழக்கலர்.. பகுதி மார்பழகில் போய் பதிந்து நின்றது. அப்போது அவள் என் பார்வையின் குறும்பு அறிந்தவளாய்... தன் பார்வையை டபிள்டெக்கரின் யன்னல் வழி வெளியே சிதறவிட்டால்.

அவளின் அந்த மார்பின் ஓரத்தில்.. இன்னொரு சித்திரம் அரையும் குறையுமாய் தெரிந்தது. அதை முழுசாய் ரசிக்க.. அந்த ரசிக்கும் மனசு திட்டம் போட.. என் கண்கள் அவளை தொடர்ந்து நோட்டமிட்டன. அவளோ கண்மணிகளை கடைக்கண்ணில் நிறுத்தி என் சேட்டைகளை கண்காணித்துக் கொண்டிருந்தாள்.

திடீர் என்று முகத்தைத் திருப்பி என் கண்களோடு தன் கண்களை அலைன்மென்ட் செய்து.. என் கண்களையே உற்று நோக்க ஆரம்பித்தாள். என் ரசிக்கும் மனசோ... உள்ளூர ஒரு வித களிப்பில் திளைத்துத் திண்டாடியது. அவள் பார்வைகளில் உக்கிரமில்லை. இருந்தாலும் உதட்டளவில் புன்னகையும் இல்லை. ஏதோ எண்ணியவளாய் மடியில் கிடந்த கைப்பையை திறக்க குனிந்தாள். அப்போது அவள் மார்போர ரட்டூ இன்னும் கூடிய அளவு அழகாகத் தெரிந்தது. அவளின் எலுமிச்சம் கலர் தோலுக்கு அது வெண்ணிலவை படர்ந்த கார்முகில் கீற்றுகள் போல அழகாக இருந்தன. அதில் என் மனசு லயித்திருக்க... அவளோ தன் ஐபோனை எடுத்து யாருக்கோ வாட்ஸ்அப் செய்ய ஆரம்பித்தாள்.

மவனே மாட்டிக்கிட்டியா.. அவள் அவளின்ர பாய்பிரண்டுக்குத் தான் மெசேஜ் போடுறாள். இப்படி ஒருத்தன் முன்னால மந்தி மாதிரி குந்தி இருந்து குறும்பு பண்ணுறானுன்னு. அவள் பாய் பிரண்ட் ரவுடியோ.. ஹாங்கோ.. நீ தொலைஞ்சா மவனே.. என்று என் அந்த இன்னொரு மனசு.. என் ரசிக்கும் மனசை பூவரசம் கம்பால் அடித்து.. பயமுறுத்தியது.

இருந்தாலும்.. என் ரசிக்கும் மனசு.. நீ பொறாமைக்காற.. கொள்கைப் பிரசங்கிடான்னு சொல்லி.. தன் ரட்டூ ரசிப்பை முழுமையாக்கிக் கொள்ளத் துடித்தது.

அந்த வேளையில்.. டபிள்டெக்கர்... தன் எஞ்சினை நிறுத்திக் கொண்டது. பயணிகள் எல்லோரும் என்னாச்சோ ஏதாச்சோ என்ற தவிப்பில் யன்னல் வழி எட்டிப்பார்க்க நானும் பார்த்தேன். அங்கே காவல்துறையினர் பதட்டமாக டபிள்டெக்கரில் ஏற ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். ரைவர் பயணிகள் எல்லோரையும் பஸ்ஸுக்குள்ளேயே அமர்ந்திருக்க ஒலிபெருக்கி வழியாகப் பணித்தார்.

அட.. இவள்.. பொலிஸ்காரி போல. மெசேச்சை.. பொலிசுக்கு போட்டிட்டாள். தம்பி நீ தொலைஞ்சா.. என்றது என் கொள்கைகாரப் பிரசங்கி மனசு. பதட்டத்தில்.. இருந்தது என் ரசிக்கும் மனசு. இருந்தாலும் கண்களால் அவளை நோட்டமிடவும் செய்தது. அவள் சாதாரணமாக முகத்தை யன்னலோரம் திருப்பியவளாய் வெளியே பார்த்து வெறித்துக் கொண்டிருந்தாள்.

அதற்கிடையில் காவல்துறையினர் டபிள்டெக்கரில் ஏறி மேல் தட்டுக்கு வந்தனர். அவர்களில் ஒரு ஆணும் பெண்ணும் என்னை நோக்கி வர.. வேணுன்டா உனக்கு இது. இல்ல.. இல்ல.. இது போதாது.. இதுக்கு மேலவும் வேணும். வந்தமா.. பஸ்ஸில் ஏறினமா..  ஆகாயத்தில முகில் ஓடுறதைப் பார்த்தமா.. வேலையிடத்தில் இறங்கினமா.. வேலையைப் பார்த்தமா என்றிருந்தால்.. இந்தக் கதி நேர்ந்திருக்குமா என்று என் ரசிக்கத் தெரிந்த மனசைத் திட்டித் தீர்த்தது என் கொள்கைகாரப் பிரசங்கி மனசு.

 என்னை நோக்கி வந்த காவல்துறையினர் என்னைப் பார்த்து புன்முறுகி விட்டு.. என் எதிரே அமர்ந்திருந்த அவளிடம் ஏதோ கேட்டனர். அவள் அதற்கு என்னவோ சொல்லி சமாளிக்க.. அவர்கள் அவளிடம் மேலும் விபரங்களை கேட்டு ஒரு பதிவு செய்து கொண்டு அவளை பஸ்ஸை விட்டு இறங்கப் பணித்தனர்.

என் ரசிக்கும் மனசு.. அவளை விட்டு அந்த வினாடியில்.. விலகி விட.. என் கொள்கைக்காரப் பிரசங்கி மனசு.. அவளுக்காக இரங்கியது. பாவம்.. என்ன பிரச்சனையோ.. என்று அவள் நிலை அறியத்துடித்தது. என் கண்களுக்கு மார்பழகும் மருதாணி அழகும் காட்டியவள் அவள் அல்லவா.. அவளுக்காக ரசிக்கும் மனசு துடிக்க மறந்தாலும் கொள்கைக்கார மனசு கொஞ்சம் துடிக்கவே செய்தது. காரணம்.. அதுவும் அவளை ரகசியமாக ரசித்திருக்கும் போல.

அவள்.. அண்மையில் தான்.. துருக்கி போய் வந்தவளாம்.. முஸ்லீமாம்.. அதுதான் காவல்துறை விசாரிக்கு தாம்.. என்று இருவர் டபிள்டெக்கருக்குள் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. அவர்கள் அவள் பள்ளிக் கால.. நண்பர்களாம்.. இன்ஸ்ரகிராமில் அவள் பகிர்ந்திருந்த படங்களை காட்டி அவர்கள்.. தமக்குள்..கதைப்பது கேட்டது.

 

குட்டிக்கதையாக்கம் - நெடுக்ஸ்

Edited by nedukkalapoovan
எழுத்துப்பிழைகள் திருத்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சா..... எலுமிச்சம் கலர்....பூபோட்ட சட்டை.....கையிலை மருதாணி.....அப்பிடியே மேலுக்கு போய் மார்புப்பக்கம் கண் பிரேக் பிடிச்சு நிக்க.....ஆகா ஆகா அருமையான கற்பனை.tw_thumbsup:


எண்டாலும்  நெடுக்கர்! நீங்கள் பொம்பிளையள்ளை வைச்சிருக்கிற பயங்கரவாதக்குணம் கதை முடிவிலை சும்மா தூக்குது.tw_smiley:

தொடர்ந்து எழுத்துங்கள்.ரசிக்க வாசிக்க காத்திருக்கின்றோம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

அட... அட... அட... நல்ல திருப்பம் கதையில் , உங்கட போன் நம்பரையும் குடுத்து இருந்தால் கதைக்குத் தொடரும் போட்டிருக்கலாம்....! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சா..... எலுமிச்சம் கலர்....பூபோட்ட சட்டை.....கையிலை மருதாணி.....அப்பிடியே மேலுக்கு போய் மார்புப்பக்கம் கண் பிரேக் பிடிச்சு நிக்க.....ஆகா ஆகா அருமையான கற்பனை.tw_thumbsup:


எண்டாலும்  நெடுக்கர்! நீங்கள் பொம்பிளையள்ளை வைச்சிருக்கிற பயங்கரவாதக்குணம் கதை முடிவிலை சும்மா தூக்குது.tw_smiley:

தொடர்ந்து எழுத்துங்கள்.ரசிக்க வாசிக்க காத்திருக்கின்றோம்.:cool:

ஆற அமர இருந்து வாசிச்சிருக்கிறியள் என்று தெரியுது. நன்றி கு.சாண்ணா. tw_blush:

12 hours ago, suvy said:

அட... அட... அட... நல்ல திருப்பம் கதையில் , உங்கட போன் நம்பரையும் குடுத்து இருந்தால் கதைக்குத் தொடரும் போட்டிருக்கலாம்....! :)

இந்தளவுக்கு இந்தக் கதை நகர்ந்ததே பெரிய விசயம். அதுக்கு தொடரும் வேற எதிர்பார்க்கிறாரில்ல.. இவர். நாங்கள் வில்லங்கத்தை விலைக்கு வாங்கி.. பொலிஸில மாட்டிறதில.. இவருக்கு அவ்வளவு சந்தோசம். tw_blush:

வாசிப்புக்கு நன்றி அண்ணா.  tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு... கதையின் கருவும், அவளை வர்ணித்த விதமும் அருமை!

துருக்கிக் காறியளும் மருதாணி போடுவார்களா என்று ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

ஒரு பெண்ணைப் பார்ப்பதில்...இரசிப்பதில் எந்தத் தவறும் இல்லை! அதற்காகத் தானே தங்களை அலங்கரிக்கிறார்கள்!

ஆனால்.. தீச்ச மீனைப் பூனை பார்ப்பது போலப் பார்ப்பதில் எனக்கு என்றும் உடன்பாடு இல்லை!

நான் பார்க்கும் போது.. அவள் நிலம் பார்க்கிறாள் எனில்... அவள் உங்கள் பார்வையைக் கண்டு கோபமோ, சங்கடமோ படவில்லை என்று அர்த்தம்! வானத்தை நோக்கிப் பார்வை போகுமெனில்...நீங்கள் பஸ்ஸின் கீழ்ப்பகுதிக்குப் போவது உங்கள் மரியாதையைப் பத்திரமாகப் பாதுகாக்கும்!

நல்ல கதைக்கு நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

நெடுக்கு... கதையின் கருவும், அவளை வர்ணித்த விதமும் அருமை!

துருக்கிக் காறியளும் மருதாணி போடுவார்களா என்று ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

ஒரு பெண்ணைப் பார்ப்பதில்...இரசிப்பதில் எந்தத் தவறும் இல்லை! அதற்காகத் தானே தங்களை அலங்கரிக்கிறார்கள்!

ஆனால்.. தீச்ச மீனைப் பூனை பார்ப்பது போலப் பார்ப்பதில் எனக்கு என்றும் உடன்பாடு இல்லை!

நான் பார்க்கும் போது.. அவள் நிலம் பார்க்கிறாள் எனில்... அவள் உங்கள் பார்வையைக் கண்டு கோபமோ, சங்கடமோ படவில்லை என்று அர்த்தம்! வானத்தை நோக்கிப் பார்வை போகுமெனில்...நீங்கள் பஸ்ஸின் கீழ்ப்பகுதிக்குப் போவது உங்கள் மரியாதையைப் பத்திரமாகப் பாதுகாக்கும்!

நல்ல கதைக்கு நன்றி!

அவள் துருக்கி போய் வந்தவளே தவிர துருக்கிக்காரின்னு கதையில சொல்லேல்ல. பொதுவாக மேற்கு நாடுகளில் வதியும் முஸ்லீம் இளசுகள்..துருக்கிக்கு ஹாலிடே போவதை ஒரு கெத்தாகவே கருதுகின்றனர். இப்ப அது வில்லங்கமாகி வருகுது. tw_blush:

மிச்சத்துக்கு கதையிலேயே பதில் இருக்குது அண்ணா. அதனால் கீழ் தட்டுக்கு போக வேண்டிய அவசியம் இல்லைத் தானே. tw_blush:

23 hours ago, nedukkalapoovan said:

திடீர் என்று முகத்தைத் திருப்பி என் கண்களோடு தன் கண்களை அலைன்மென்ட் செய்து.. என் கண்களையே உற்று நோக்க ஆரம்பித்தாள். என் ரசிக்கும் மனசோ... உள்ளூர ஒரு வித களிப்பில் திளைத்துத் திண்டாடியது. அவள் பார்வைகளில் உக்கிரமில்லை. இருந்தாலும் உதட்டளவில் புன்னகையும் இல்லை.

நன்றி தங்கள் வருகை.. வாசிப்பு.. வினையமான கருத்துப் பகிர்விற்கு. tw_blush:

Edited by nedukkalapoovan
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் "ஜிவ்வுன்னு" ஏத்த வைச்சாலும் நெடுக்ஸின் கொள்கைப் பிடிப்பை எந்த ரம்பா, மேனகை, ஊர்வசியாலும் மாற்றமுடியாது என்றுதான் கதை சொல்லுதுtw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

என்னதான் "ஜிவ்வுன்னு" ஏத்த வைச்சாலும் நெடுக்ஸின் கொள்கைப் பிடிப்பை எந்த ரம்பா, மேனகை, ஊர்வசியாலும் மாற்றமுடியாது என்றுதான் கதை சொல்லுதுtw_blush:

அட நீங்களும் வந்து வாசிச்சிட்டு போயிருக்கிறியள். ஜிவ்வுன்னா இருக்கு.... அப்ப ஜில்லுன்னு இல்லையா..?! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

அட நீங்களும் வந்து வாசிச்சிட்டு போயிருக்கிறியள். ஜிவ்வுன்னா இருக்கு.... அப்ப ஜில்லுன்னு இல்லையா..?! tw_blush:

வர்ணனை ஜிவ்வுனு போதை ஏத்தியமாதிரி இருந்தது. இப்ப இருக்கிற குளிரில ஜில்லுனு இருந்தா நல்லா இருக்காது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கிருபன் said:

வர்ணனை ஜிவ்வுனு போதை ஏத்தியமாதிரி இருந்தது. இப்ப இருக்கிற குளிரில ஜில்லுனு இருந்தா நல்லா இருக்காது!

அதுசரி... ஜவ்வுன்னா தெரியும். ஜிவ்வுன்னா என்ன..??! tw_blush::rolleyes:

உடம்பு ஜில்லுன்னு இருக்கப்படாது.. மனசு இருக்கலாமில்ல.. குளிரா. tw_blush:

ஆலுமா டோலுமா மாதிரித்தான் எண்டு நினைக்கிறன்.

அது சரி நெடுக்கண்ணா உங்களுக்கு தான் கண்ணிலகாட்டக்கூடாதே?????????????சும்மா தமாசுக்கு.....கதை சுப்பர்  

Edited by Surveyor

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Surveyor said:

ஆலுமா டோலுமா மாதிரித்தான் எண்டு நினைக்கிறன்.

அது சரி நெடுக்கண்ணா உங்களுக்கு தான் கண்ணிலகாட்டக்கூடாதே?????????????சும்மா தமாசுக்கு.....கதை சுப்பர்  

காட்டிறதை கண் பார்க்கத்தானே செய்யும். அவை காட்டி நாங்க பாக்கலைன்னாலும் அவை வருத்தப்படுவினமில்ல. tw_blush:

நன்றி தங்கள் வரவுக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மேற்சட்டை போடாத ஆச்சிகளையும் உதுகள் விடாதுகள் போல  

கவர்ச்சி கதையை வாசித்து சிரித்தேன் 

அப்படியே திரிஷா குத்தியிருக்காம் அங்கினைக்கு அதையும் படம் பிடித்து போடவும் நெடுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

அதுசரி... ஜவ்வுன்னா தெரியும். ஜிவ்வுன்னா என்ன..??! tw_blush::rolleyes:

உடம்பு ஜில்லுன்னு இருக்கப்படாது.. மனசு இருக்கலாமில்ல.. குளிரா. tw_blush:

இப்பத்தான் உங்கட பிரச்சினை புரியுதுtw_blush:

அது நாளங்கள் சுருங்கி நாடிகள் விரிந்து இரத்தம் வேகமாகப் பாயும்போது வரும் உணர்வுtw_blush::cool:

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

மேற்சட்டை போடாத ஆச்சிகளையும் உதுகள் விடாதுகள் போல  

கவர்ச்சி கதையை வாசித்து சிரித்தேன் 

அப்படியே திரிஷா குத்தியிருக்காம் அங்கினைக்கு அதையும் படம் பிடித்து போடவும் நெடுக்கு

கசங்கிப் போன.. சுருங்கிப் போன கடதாசியில் பளபளப்பும் இல்லை.. அங்கு.. பல்லிளித்து ரசிக்கவும் ஏதும் இல்லை. கண் கண்ணீர் மல்கவே இடமிருக்கு.. வாழ்வின் அத்தியாயங்கள் எண்ணி. இது கதை அல்ல...  எல்லாம் இளமையின் கலைக் கண்.

திரிஷா... திரிபோசாவா இருந்த காலம் போய்.. அது பிரகாசித்து எரிந்து ஓய்ந்த.. கரி திரியாச்சு இப்ப. tw_blush:

2 hours ago, கிருபன் said:

இப்பத்தான் உங்கட பிரச்சினை புரியுதுtw_blush:

அது நாளங்கள் சுருங்கி நாடிகள் விரிந்து இரத்தம் வேகமாகப் பாயும்போது வரும் உணர்வுtw_blush::cool:

 

பொருள் விளங்குது.. சொல் விளங்கல்ல. இப்ப இரண்டும் விளங்குது.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அழகு எங்கே இருக்கிறதோ
ஆபத்தும் அங்கே இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

அழகு எங்கே இருக்கிறதோ
ஆபத்தும் அங்கே இருக்கும்

அதனால் தான் அழகை கண்கள் கொண்டு.... எட்ட வைச்சு ரசிக்கனுன்னு கதை சொல்லுது. எவ்வளவு பெரிய தத்துவத்தை ஒரு குட்டி கதைக்க அடக்கி இருக்கம் பாருங்க. tw_blush:

நன்றி முனிவர்ஜி மற்றும் ஈழப்பிரியன் அண்ணா வரவுக்கும் வாசிப்புக்கும் கருத்துப்பகிர்விற்கும். tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவரின் ரசனையைப் பாருங்கள்...


கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

 நாங்க எல்லாம் வள்ளுவரட்ட பிச்சை வாங்கனும். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.