Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீதைக்கு நியாயம் கேட்டு ராமர்-லட்சுமணர் மீது வழக்கு !

Featured Replies

சீதைக்கு நியாயம் கேட்டு ராமர்-லட்சுமணர் மீது வழக்கு !

sita%20raman%20one.jpgபீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங். பீகார் மாவட்டத்தின் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் இவர் தொடர்ந்த ஒரு வழக்குதான் இன்று வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது.

'' ஒரு பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பி வைத்த அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.'' - இதுதான் சந்தன்குமார் சிங் தொடுத்த வழக்கின் சாராம்சம். 

இது ஒரு பக்கம் இருக்க,  ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சீத்தாமரி மாவட்ட தலைமை நீதிபதி ராஷ்பிஹாரி முன்பு,  சந்தன்குமார் சிங்கின் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ராஷ்பிஹாரி, " வாதி சந்தன்குமார் சிங் தாக்கல் செய்துள்ள மனுவானது , உண்மைக்கு மாறான பல சம்பவங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

சந்தன்குமார்சிங்கின் உறவினர்கள் இது பற்றி ஊடகங்களிடம் பேசும்போது, '' வழக்கைத் தொடுத்த சந்தன்குமார்சிங், இந்த வழக்கை மேல்முறையீடுக்கு கொண்டு போகும் மனநிலையில்தான் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால்,  இந்த வழக்கை கீழ் கோர்ட்டுக்கு கொண்டு போனதற்கே, சந்தன்குமார்சிங்கிற்கு எதிர்ப்புகள் கிளம்பி விட்டது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மிரட்டலுக்கு உள்ளானார். கோர்ட்டுக்கே பாதுகாப்புடன்தான் போய் வரவேண்டிய சூழ்நிலை உருவானது. இப்போது வீட்டுக்கும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் எஸ்.பி.யிடம் சந்தன்குமார் மனு கொடுத்துள்ளார் " என்கின்றனர்.

சின்னதாய் ஒரு புராண ப்ளாஷ்- பேக் ஸ்டோரி:

ஜனகபுரி ( இன்றைய பீகார் என்கிறார்கள்) யின் மன்னன் ஜனகராஜா. இவர் மகள் சீதை. இதிகாசப்படி இவருடைய பிறப்பு மிதிலை நகரில் இருந்துள்ளது. அந்த மிதிலை நகர்தான் பீகாரின் சீதாபுரி மாவட்டமாக இன்றும் சீதை நினைவாக போற்றப்படுகிறது. சீதையின் கணவர் ராமர். ராமரின் தம்பி லட்சுமணர். சிற்றன்னை பேச்சை மீறாமல் பதினாறு ஆண்டுகாலம் ராமர், தன் மனைவி சீதையுடன்  வனவாசம் போகிறார். இதுதான் இராமாயணத்தில் இந்த வழக்குக்கு தொடர்புள்ள ஸ்டோரியின் அவுட் லைன்...

இதை கண்டித்துதான் சீதையை காட்டுக்கு ராமரும், அவர் தம்பி லட்சுமணரும் கொண்டு போனது தவறென்றும், அண்ணன் தம்பியர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் சந்தன்குமார் வழக்குப் போட்டுள்ளார்.

இந்த வழக்கு வேறு ஏதாவது வடிவத்தில் மீண்டும் விஸ்வரூபமெடுக்காத வரை சரிதான்!  

http://www.vikatan.com/news/miscellaneous/58478-man-files-case-against-lord-rama.art

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல சீதையை தேடிக் கண்டுபிடிச்சு... கோட்டில ஆயர்படுத்துங்கடா வெண்ணைகளா. tw_blush:

இப்ப விளங்குது ஹிந்தியாவில் ஏன் பல ஆயிரக்கணக்கான வழக்குகள் பல பத்து ஆண்டுகளாக நிலுவையில் கிடக்கின்றன என்று. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

சீதா தேவி திராவிட மன்னன் இராவணேசனுடைய அழகிலும், வலிமையிலும் மயங்கித் தன்னைத தூக்கிக் கொண்டு செல்லும்படி கேட்கவும், அவனும் அவளது கற்புக்குப் பங்கமேற்படாத  வகையில், மண்ணோடு சேர்த்து அவளைத் தூக்கிக்கொண்டு சென்றதாகத் தான் கதை! தன்னைத் தனியாக விட்டுச் சென்றால் தான் தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகக் கூறியதால் இராவணன் அனுதாபத்தினால் அவளைத் தூக்கிச் சென்றான்! கம்பன்... தான் எழுதிய இராமாயணத்தில் .இதைத் தலைகீழாக மாற்றி விட்டான்!

இருந்தாலும் இரண்டி இடங்களில் தன்னையறியாமலே கோட்டை விட்டு விட்டான்!

முதலாவது புஷ்பக விமானத்திலிருந்து சீதை 'அல்குல் அணியைக்; கழட்டி எறிகிறாள்!

ஒரு  கற்புள்ள பெண்  தனது அல்குல் அணியை எந்தக் காரணம் கொண்டும் பிற ஆடவன் முன்னிலையில் கழட்டவே மாட்டாள்!

அல்குல் அணி என்றால் என்ன என்று..கள வித்துவான்கள் விளங்கப் படுத்துவார்கள்!

இரண்டாவது இராமனுக்கு.. இந்த உண்மை தெரிந்திருந்தது! அதனால் தான் சீதையைத்  தீக்குளிக்கும் பட வற்புறுத்துகிறான்!

அந்த உண்மை வெளியில் வராதவாறு.. இட நடுவில் பூமாதேவி தலையிட்டு, சீதையைக் காப்பாற்றுகிறாள்!

கணம் கோட்டார் அவர்களே... இபோது சொல்லுங்கள்!

குற்றவாளி இராம லக்குவரா? அல்லது சீதையா?

சீதையிடம் கணையாழி இருந்தும் ஏன் அதனைக் கழட்டி வீசவில்லை?

இலக்குவன் வரைந்த கோட்டைத் தாண்ட,,, சீதையில் ஒத்துழைப்பு இல்லாமல்..எவ்வாறு இராவணனால் கடக்க முடிந்தது?

41 minutes ago, புங்கையூரன் said:

hahaha .......... 

  • கருத்துக்கள உறவுகள்

Quote

முதலாவது புஷ்பக விமானத்திலிருந்து சீதை 'அல்குல் அணியைக்; கழட்டி எறிகிறாள்!

அதாவது இந்த காலத்தில் .....பார்வை ஒன்றே போதுமே.....என்ற மாதிரி அந்த காலத்தில் அதுதான் சைகையோ...

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

முதலாவது புஷ்பக விமானத்திலிருந்து சீதை 'அல்குல் அணியைக்; கழட்டி எறிகிறாள்!

ஒரு  கற்புள்ள பெண்  தனது அல்குல் அணியை எந்தக் காரணம் கொண்டும் பிற ஆடவன் முன்னிலையில் கழட்டவே மாட்டாள்!

அல்குல் அணி என்றால் என்ன என்று..கள வித்துவான்கள் விளங்கப் படுத்துவார்கள்!

அல்குல் அணியை தெரியான்னு யாழில சிலர் அழுதிச்சினமே.. இதுதான் அது.

14300chastity-belt.jpgசீதை இதுக்கான திறப்பை எல்லாம் இடுப்பில செருகி வைச்சிருந்தவாவோ..?! tw_blush:

2 hours ago, putthan said:

அதாவது இந்த காலத்தில் .....பார்வை ஒன்றே போதுமே.....என்ற மாதிரி அந்த காலத்தில் அதுதான் சைகையோ...

பார்வைக்கு கண் தேவை.
கண்ணுக்கு புருவம் தேவை.

அல்குல் என்ற சொல்லிற்கும் கண்புருவம் என்று அர்த்தமுள்ளது. ஆனால் அல்குல்அணிஎனும் போதுதான் உதைக்குது. சில வேளை கூலிங்கிளாஸ் போட்டிருந்திருப்பாவோ.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆம்பிளைப் பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்கு அட்சரக் கூடும் , பொம்பிளைப் பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்கு "அரை முடி சலங்கை" என்னும் ஆபரணமும் செய்து போடுவார்கள். அந்த ஆபரணம் முன்னால் ஒரு பூவரசம் இலைபோல் இருக்கும். இப்பவும் சிலர் இந்த நகை செய்து பெண்பிள்ளைகளுக்கு போடுகிறவர்கள். இதுதான் அல்குல் ஆபரணமாக இருக்கும். ( நெடுக்கர் போட்டது கவச ஜட்டி. உதை இராமபாணமும் சேதாரமில்லாமல் உடைக்குமா என்பது சந்தேகமே.) அது சுலபமாக அரைஞான் கொடி போல் இடையில் வைத்தே கழட்டக் கூடியது. கணையாழியையும் கழட்டி  எறிந்திருக்கலாம் , இன்னும் அது யார் கண்ணிலும் படவில்லையோ என்னமோ...!

இலக்குமணன் தனது மனைவி ஊர்மிளையை ஊரிலேயே விட்டு விட்டு வருகின்றார். அப்படியே இராமனும் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் சீதையும் கூடவே வருகின்றார். இதுதான் "கெடுபுத்தி சொல் கேளாது"...!

சரி , பர்ணசாலையில் மூவரும் இருக்கினம். ஒரு பொன்மான் முன்னால போகுது, இந்தப் பெண்மான் பார்த்திட்டு இருக்க வேண்டியதுதானே. (ஆதியில் இவளே ஒரு ஸ்வர்ண லட்சுமி, இவளுக்கே பொன் நிறத்தைக் கண்டதும் ஆசை விடவில்லை). நாதா அதைப் பிடித்துத் தாதா என்று நச்சரிக்கின்றாள். அவர் அதுக்கும் மேல மானைப் பிடிக்க வெளிக்கிடுகின்றார். அவருக்கு பொய்மான் எது மெய்மான் எது என்று புத்தியில் படவில்லை. இலட்சுமனன் கூறுகின்றான். இப்படி ஒரு மான் லோகத்திலும் கிடையாது , கூகிளிலும் கிடையாது என்று. காரணம் அவனுக்குப் பக்கத்தில் மனிசி இல்லை, அதுதான் புத்தி கூர்மையாய் இருக்குது. இவர் கேட்கவில்லை. காதலியோ மனிசியோ பக்கத்தில் இருந்தால் அவதாரமாய் இருந்தாலும் மூளை குழம்பித்தான் போகும். அதுதான் அவர் ஓடுகின்றார்.

இப்ப குடிலில் சீதாவும் கொழுந்தனும் இருக்க, மாரீசன் அம்பு அடிபட்டு விழும்போது சீதா லக்குமனா அபயம்அபயம்என்று மிமிக்கிரி செய்துவிட்டு விழுகின்றான். இங்கு சீதா அவருக்கு ஆபத்து உடனே போய்ப் பார்த்து வா என்று ஏவுகிறாள். அப்பவும் லக்குமனன் சொல்கின்றான் அவருக்கு ஒரு ஆபத்தும் வராது நீங்கள் பயப்படாமல் போய் டின்னர் செய்யுங்கோ என்று. வந்ததே கோபம் சீதாவுக்கு,என்ன பேசுகிறோம், ஏது பேசுகின்றோம் என்று யோசிக்காமல் அவனை பேசுகின்றாள்.ராமன் போனால் என்னைப் பெண்டாளலாம் என்று நினைக்கின்றாயோ. நீ போகாட்டில் இப்பவே தீக்குளிப்பேன் என்கிறாள். அவரை அன்னையாகவே நினைத்து அவர் பாதத்தைத் தவிர முகமே பார்க்காமல் , தூங்காமல் காவல் காக்கும் இளவல் அவன். வேதனையுடன் ஒரு கோடு போட்டு இதைக் கடந்து வர வேண்டாம் எனக் கூறி வேதனையுடன் செல்கின்றான். 

பின்  சன்னியாசி வேடத்துடன் தசமுகன் ஒருமுகத்துடன் வந்து பிஷை கேட்கின்றார்.  இவ கோட்டைத் தாண்டி வந்து கொடுக்க , கைலாசத்தையே அசைத்தவன், இந்தக் குடிலுடன் அலேக்காய்த் தூக்கிக் கொண்டு போகின்றான்.

எனது கருத்து:

இப்பதான் சீதைக்கு குற்ற உணர்ச்சி தலை தூக்குது. தாயாய் நினைத்தவன் தலையில் நெருப்பு வார்த்தைகளை உமிழ்ந்தேனே என்று. ஆகவே  அவவுக்கும் மனசளவில் இந்த அக்னிப் பிரவேசம் அவசியமாகவே படுகின்றது. அதனால் இதை ஒரு சந்தர்ப்பமாகவே பயன்படுத்திக் கொண்டார். அங்கும் லட்சுமனந்தான் சிதை தயாரிக்கின்றான்.... அவ்வளவுதான்...!

தன்ர சொல்லுக்கு மதிப்புக் கொடுத்துத்தான் சீதாதேவி தீக்குளித்தாள் என்று ராமன் நம்பினால் அதுக்கு நாம் என்ன செய்ய முடியும்.

ராமன் சொல் கேட்பவளாய் இருந்தால் சீதை அயோத்தியிலேயே நின்றிருக்க வேண்டும். அல்லது அம்மா வீட்டுக்கு மிதிலைக்குப் போயிருக்க வேண்டும். வீணாய் பஞ்சவடிக்கு வந்து அசோக வனத்துக்கு அள்ளுப் பட்டுப் போய் ... இதெல்லாம் தேவையா.....!! 

Edited by suvy
சிறு திருத்தம்.

49 minutes ago, suvy said:

ஆகா ஆகா நல்ல விளங்கம் சகோ சுவி!!! :cool:

நீங்களும் எழுதலாமே நல்லாய் எழுதிறீர்கள் சகோதரம்!! :)

ஏன் அவா iphone க்கு கோல் பண்ணேலை??

அடடா இராவணனுக்கும் இலங்கைப் பெண்களின் அழகு பிடிக்கேலையோ tw_astonished:

Edited by மீனா

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் இலங்கைப் பெண்ணைத் தான் திருமணம் செய்திருந்தார்.சூர்ப்பணகைக்கு,சீதையின் மேல் பொறாமை என்றும் தங்கைக்காகவே அண்ணன் சீதையை தூக்கினார் என்று சொல்பவர்களும் உண்டு.

8 minutes ago, ரதி said:

இராவணன் இலங்கைப் பெண்ணைத் தான் திருமணம் செய்திருந்தார்.சூர்ப்பணகைக்கு,சீதையின் மேல் பொறாமை என்றும் தங்கைக்காகவே அண்ணன் சீதையை தூக்கினார் என்று சொல்பவர்களும் உண்டு.

 சூர்ப்பணகை பிரமனின் மகளாகிய புலத்திய முனிவரின் மகனாம்
விசிரவசுவுக்கும் அவரின் இரண்டாம் மனைவியாம் கேகசிக்கும் பிறந்த
மகள். இவளுடைய அண்ணன்மார் இராவணனும் கும்பகர்ணனும் ஆவர்.
தம்பி வீடணன். இவள் கணவன் காலகேயரைச் சார்ந்த வித்யுச்சிகுவன்.
இராவணன் காலகேயருடன் போரிட்ட போது வித்யுச்சிகுவன் கொல்லப்
பட்டான். கணவனை இழந்த சூர்ப்பணகை இராவணனிடம் முறையிட
அவளுக்கெனத் தண்டகாருணியப் பகுதியி்ல் ஓர் அரசுண்டாக்கி அதில்
அவள் சிறப்புடன் இருக்கக் கூறித் தூடணனைச் சேனாதிபதியாக்கி ஒரு
பெரும் படையையும் அவளுக்குத் துணையாக்கினான். தன் தாய் மாமன்
மகனாம் கரனையும் அவளுக்குத் துணையாக்கி அவள் விருப்பப்படி
இருக்குமாறு செய்தான்.

     அதனால் அங்குக் குடியிருந்து அங்குள்ள மக்களை வருத்தி
இன்புற்று வந்தாள் சூர்ப்பணகை. அப்போது அவள் பஞ்சவடியில் சீதை
இலக்குவருடன் வாழ்ந்த இராமனின் திருமேனி அழகைக் கண்டு பெருங்
காமம் கொண்டு, அழகிய பெண் வடிவெடுத்து அவனிடம் சென்று தன்னைக்
கூடுமாறு வேண்டினாள். அதற்கு இராமன் உடன்படாது பலவாறு மறுத்தான்.
அவ்வாறு தன்னை இராமன் மறுத்ததற்குக் காரணம் அவன் மனைவி
பேரழகு படைத்தவளாய் இருப்பதுதான் என எண்ணிச் சீதையை
வஞ்சனையாக எடுத்து மறைத்து வைத்தால் இராமனுடன் கூடி வாழ முடியும்
என நம்பினாள். மறுநாள் காலையில் இராமன் வெளியே சென்ற போது
சீதையைக் கவரத் தொடர்ந்து சென்றாள். இலக்குவன் அதைக் கண்டு
வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி மூக்கு, காது முலை ஆகிய
உறுப்புகளை அறுத்து விட்டான். பெண் கொலை பாவம் என அவளைக்
கொல்லாது விட்டான். பேரோலமிட்டுச் சூர்ப்பணகை இராமனிடம் தன்னை
மணம் செய்ய வேண்டினாள் அல்லது இராமன் தன் தம்பிக்காவது தன்னை மணமுடிக்குமாறு வேண்டினாள். அதனால் சற்றும் பயன் பெறாமல் அவர்களால் விரட்டப்பட்டாள். இவ்வாறு ஏமாற்றமுற்ற சூர்ப்பணகை
அவர்களை அழிக்கக் கரனுடன் வருவதாக அச்சுறுத்திச் சென்றாள். 

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=71&pno=140

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

ஆம்பிளைப் பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்கு அட்சரக் கூடும் , பொம்பிளைப் பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்கு "அரை முடி சலங்கை" என்னும் ஆபரணமும் செய்து போடுவார்கள். அந்த ஆபரணம் முன்னால் ஒரு பூவரசம் இலைபோல் இருக்கும். இப்பவும் சிலர் இந்த நகை செய்து பெண்பிள்ளைகளுக்கு போடுகிறவர்கள். இதுதான் அல்குல் ஆபரணமாக இருக்கும். ( நெடுக்கர் போட்டது கவச ஜட்டி. உதை இராமபாணமும் சேதாரமில்லாமல் உடைக்குமா என்பது சந்தேகமே.) அது சுலபமாக அரைஞான் கொடி போல் இடையில் வைத்தே கழட்டக் கூடியது. கணையாழியையும் கழட்டி  எறிந்திருக்கலாம் , இன்னும் அது யார் கண்ணிலும் படவில்லையோ என்னமோ...!

இலக்குமணன் தனது மனைவி ஊர்மிளையை ஊரிலேயே விட்டு விட்டு வருகின்றார். அப்படியே இராமனும் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் சீதையும் கூடவே வருகின்றார். இதுதான் "கெடுபுத்தி சொல் கேளாது"...!

சரி , பர்ணசாலையில் மூவரும் இருக்கினம். ஒரு பொன்மான் முன்னால போகுது, இந்தப் பெண்மான் பார்த்திட்டு இருக்க வேண்டியதுதானே. (ஆதியில் இவளே ஒரு ஸ்வர்ண லட்சுமி, இவளுக்கே பொன் நிறத்தைக் கண்டதும் ஆசை விடவில்லை). நாதா அதைப் பிடித்துத் தாதா என்று நச்சரிக்கின்றாள். அவர் அதுக்கும் மேல மானைப் பிடிக்க வெளிக்கிடுகின்றார். அவருக்கு பொய்மான் எது மெய்மான் எது என்று புத்தியில் படவில்லை. இலட்சுமனன் கூறுகின்றான். இப்படி ஒரு மான் லோகத்திலும் கிடையாது , கூகிளிலும் கிடையாது என்று. காரணம் அவனுக்குப் பக்கத்தில் மனிசி இல்லை, அதுதான் புத்தி கூர்மையாய் இருக்குது. இவர் கேட்கவில்லை. காதலியோ மனிசியோ பக்கத்தில் இருந்தால் அவதாரமாய் இருந்தாலும் மூளை குழம்பித்தான் போகும். அதுதான் அவர் ஓடுகின்றார்.

இப்ப குடிலில் சீதாவும் கொழுந்தனும் இருக்க, மாரீசன் அம்பு அடிபட்டு விழும்போது சீதா லக்குமனா அபயம்அபயம்என்று மிமிக்கிரி செய்துவிட்டு விழுகின்றான். இங்கு சீதா அவருக்கு ஆபத்து உடனே போய்ப் பார்த்து வா என்று ஏவுகிறாள். அப்பவும் லக்குமனன் சொல்கின்றான் அவருக்கு ஒரு ஆபத்தும் வராது நீங்கள் பயப்படாமல் போய் டின்னர் செய்யுங்கோ என்று. வந்ததே கோபம் சீதாவுக்கு,என்ன பேசுகிறோம், ஏது பேசுகின்றோம் என்று யோசிக்காமல் அவனை பேசுகின்றாள்.ராமன் போனால் என்னைப் பெண்டாளலாம் என்று நினைக்கின்றாயோ. நீ போகாட்டில் இப்பவே தீக்குளிப்பேன் என்கிறாள். அவரை அன்னையாகவே நினைத்து அவர் பாதத்தைத் தவிர முகமே பார்க்காமல் , தூங்காமல் காவல் காக்கும் இளவல் அவன். வேதனையுடன் ஒரு கோடு போட்டு இதைக் கடந்து வர வேண்டாம் எனக் கூறி வேதனையுடன் செல்கின்றான். 

பின்  சன்னியாசி வேடத்துடன் தசமுகன் ஒருமுகத்துடன் வந்து பிஷை கேட்கின்றார்.  இவ கோட்டைத் தாண்டி வந்து கொடுக்க , கைலாசத்தையே அசைத்தவன், இந்தக் குடிலுடன் அலேக்காய்த் தூக்கிக் கொண்டு போகின்றான்.

எனது கருத்து:

இப்பதான் சீதைக்கு குற்ற உணர்ச்சி தலை தூக்குது. தாயாய் நினைத்தவன் தலையில் நெருப்பு வார்த்தைகளை உமிழ்ந்தேனே என்று. ஆகவே  அவவுக்கும் மனசளவில் இந்த அக்னிப் பிரவேசம் அவசியமாகவே படுகின்றது. அதனால் இதை ஒரு சந்தர்ப்பமாகவே பயன்படுத்திக் கொண்டார். அங்கும் லட்சுமனந்தான் சிதை தயாரிக்கின்றான்.... அவ்வளவுதான்...!

தன்ர சொல்லுக்கு மதிப்புக் கொடுத்துத்தான் சீதாதேவி தீக்குளித்தாள் என்று ராமன் நம்பினால் அதுக்கு நாம் என்ன செய்ய முடியும்.

ராமன் சொல் கேட்பவளாய் இருந்தால் சீதை அயோத்தியிலேயே நின்றிருக்க வேண்டும். அல்லது அம்மா வீட்டுக்கு மிதிலைக்குப் போயிருக்க வேண்டும். வீணாய் பஞ்சவடிக்கு வந்து அசோக வனத்துக்கு அள்ளுப் பட்டுப் போய் ... இதெல்லாம் தேவையா.....!! 

வணக்கம் சுவியர்!

ஒரு கருத்துக்காக எழுதியது,,,!

அதுவே பல கருத்துக்களை மற்றவர்களை எழுத வைத்தது மிகவும் மகிழ்ச்சி! 

சீதையின் கணையாழி பத்திரமாக அனுமனிடம் அடையாளமாகக் கொடுக்கப் படுகின்றது என்று நினைக்கிறேன்!

நீங்கள் எழுதியவை அனைத்தும் சரி... அது கம்ப இராமாயணத்தின் சாரம்!

நான் குறிப்பிட்டவை வால்மீகி இராமாயணத்தின் சாரம்!

கருத்துக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, புங்கையூரன் said:

வணக்கம் சுவியர்!

ஒரு கருத்துக்காக எழுதியது,,,!

அதுவே பல கருத்துக்களை மற்றவர்களை எழுத வைத்தது மிகவும் மகிழ்ச்சி! 

சீதையின் கணையாழி பத்திரமாக அனுமனிடம் அடையாளமாகக் கொடுக்கப் படுகின்றது என்று நினைக்கிறேன்!

நீங்கள் எழுதியவை அனைத்தும் சரி... அது கம்ப இராமாயணத்தின் சாரம்!

நான் குறிப்பிட்டவை வால்மீகி இராமாயணத்தின் சாரம்!

கருத்துக்கு நன்றி!

நன்றி புங்கை, அதை நான் தீர மறந்து விட்டேன். ஞாபகப் படுத்திட்டீங்கள்....!

இப்ப என் யோசனை: இராமர் குகனோடு இருக்கும் போது பரதன் வந்து இராமரின் மிதியடிகளை பாதுகையாகத் தலையில் சுமந்து செல்கின்றார்.

அண்ணன் போடவில்லையென்றால் தம்பி இலக்குவனும் மிதியடி போட்டிருக்க மாட்டார், மனைவி சீதாவும் கண்டிப்பாக  போட்டிருக்க மாட்டா.

அப்படியென்றால் அவர்களின் மிதியடியும் , ஹீல்ஸும்  யாரிட்ட இருக்கு....! 

8 minutes ago, suvy said:

அப்படியென்றால் அவர்களின் மிதியடியும் , ஹீல்ஸும்  யாரிட்ட இருக்கு....! 

சத்தியமா என்னட்டை இல்லை.

37 minutes ago, suvy said:

அவர்களின் மிதியடியும் , ஹீல்ஸும்  யாரிட்ட இருக்கு....! 

பழைய சட்டி, பானை சேர்க்கிற ஆளிட்டைக் கேட்டுப் பாருங்கோ....... அவவிடம் இருக்கலாம்!! :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் இராமாயணத்தை கரைச்சுக் குடிச்ச பலர் இருக்கிறாய்ங்க. ஆனால்.. இன்று சனநாயகம் பேசும் ஒருத்தர்.. தானே கம்பன் கழகத்தின் ஏகபோகத் தலைவரா தொடர்ந்து பல தசாப்தங்களாக இருந்து வருகிறார். அவர் குடுமியோடு அலைகிறார். அவரை தூக்கி எறியக் கூடிய உறவுகளை யாழ் களம் கொண்டுள்ளதே. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மேகலை என்ற ஆபரணத்தை ஒருவரும் கேள்விப்படவில்லையா!

முன்னர் யாழில் அலசிய ஞாபகம்!

http://www.yarl.com/forum/index.php?s=1a31bde9e0564038d0319714b41a08f2&showtopic=4468&view=findpost&p=75155

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

மேகலை என்ற ஆபரணத்தை ஒருவரும் கேள்விப்படவில்லையா!

முன்னர் யாழில் அலசிய ஞாபகம்!

http://www.yarl.com/forum/index.php?s=1a31bde9e0564038d0319714b41a08f2&showtopic=4468&view=findpost&p=75155

இதில மேகலை பற்றி அலசினதா தெரியல்ல. கம்பன் வம்பனா.. தும்பனா என்று வேற என்னென்னவோ எல்லாம் அலசி துவைச்சு காயவிட்டு இருக்காய்ங்க. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தப் பாட்டில் மேகலை பற்றி 3.00 ல் இருந்து வருகின்றது கிருபன்..., திஸ் மேகலைதான் தட் அரை மூடி சலங்கை....!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

யாழ் களத்தில் இராமாயணத்தை கரைச்சுக் குடிச்ச பலர் இருக்கிறாய்ங்க. ஆனால்.. இன்று சனநாயகம் பேசும் ஒருத்தர்.. தானே கம்பன் கழகத்தின் ஏகபோகத் தலைவரா தொடர்ந்து பல தசாப்தங்களாக இருந்து வருகிறார். அவர் குடுமியோடு அலைகிறார். அவரை தூக்கி எறியக் கூடிய உறவுகளை யாழ் களம் கொண்டுள்ளதே. tw_blush:

குடுமியர் வாய்சொல்லில் வீரர்...யாழ்களத்தினர் ...தட்டச்சு வீரர்tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மீனா said:

பழைய சட்டி, பானை சேர்க்கிற ஆளிட்டைக் கேட்டுப் பாருங்கோ....... அவவிடம் இருக்கலாம்!! :)

இப்படியான பொருட்களை  சுமேரியர் சேர்த்து வைக்கும் வழக்கம் உள்ளவர்!

அவரிடம் விசாரித்தால்... சீதையின் ஹை ஹீல்ஸ் இருக்கக் கூடும்!

சீதா தேவியின் அனுதாபிக்குகளுக்காகப் பின்வரும் பாடலை இணைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

இதில மேகலை பற்றி அலசினதா தெரியல்ல. கம்பன் வம்பனா.. தும்பனா என்று வேற என்னென்னவோ எல்லாம் அலசி துவைச்சு காயவிட்டு இருக்காய்ங்க. tw_blush:

எல்லாவற்றையும் அலச அப்ப நேரம் இருந்தது. இப்ப வாட்ஸப், முகப்புத்தகம், டிவிட்டர் என்று ஒரே பிஸி!

Quote

Stalin

Mar 27 2005, 01:29 AM

இராமாயணம் வடநாட்டவர் புகழ்பாடும் ஒரு இதிகாசம். அண்ணாத்துரை அவர்கள் கம்பன் ஒரு வம்பன் எனக்கூறி கம்பராமாயணத்திலுள்ள ஆபாசங்களை கேலி செய்து கீமாயணம் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார்------அதில் ஓர் இரு காட்சிகளை பார்க்கலாம்----சீதைக்கு இராமரை கண்டதும் காதல் ஏற்பட்டு விட்டது ஆனால் சீதையின் தந்தை விதுரனோ சுயம்வரத்தில் யார் வில்லை முறிக்கிறார்களோ அவருக்குத்தான் சீதை எனக்கூறியிருந்தான். சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது சீதை படபடத்துக்கொண்டிருந்தாள் அப்போது தோழி ஓடிவந்து கூறுகிறாள் இராமன் வில்லை முறித்துவிட்டானென்று அப்பொழுது கம்பன் கூறுகிறான்---இதைக்கேட்டு சீதை சந்தோசப்பட்டு பரவசப்படும்போது மேகலை அறுந்து விழுந்தது என்று முடிக்ககிறான் பி.கு--அந்த காலத்து ராணிகள் ஒவ்வொரு உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு ஆபரணம் அணிவார்கள். அது போல் பெண் உறுப்புக்கு அணியும் நகையின் பெயர் தான் மேகலை எனும் ஆபரணம் ---கம்பன் உங்கள் ஊகத்துக்கு விடுகறான் ஏன் அவிழ்ந்து விழுந்தது என்று----------------------------------------------------------

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது சீதை படபடத்துக்கொண்டிருந்தாள் அப்போது தோழி ஓடிவந்து கூறுகிறாள் இராமன் வில்லை முறித்துவிட்டானென்று அப்பொழுது கம்பன் கூறுகிறான்---இதைக்கேட்டு சீதை சந்தோசப்பட்டு பரவசப்படும்போது மேகலை அறுந்து விழுந்தது என்று முடிக்ககிறான் பி.கு--அந்த காலத்து ராணிகள் ஒவ்வொரு உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு ஆபரணம் அணிவார்கள். அது போல் பெண் உறுப்புக்கு அணியும் நகையின் பெயர் தான் மேகலை எனும் ஆபரணம் ---கம்பன் உங்கள் ஊகத்துக்கு விடுகறான் ஏன் அவிழ்ந்து விழுந்தது என்று

மேகலை எனப்படுவது யாதெனில் பெண்கள் இடுப்பில் அணியும் ஒட்டியாணம். யாரோ தவறா விளங்கிட்டினம்.. கம்பனை வம்பன் என்று காட்ட வாக இருக்கலாம். பொதுவாக பெண்கள் அதிக மகிழ்ச்சியில் திளைக்கும் போது உடல் மெலித்து விடுவார்களாம்.. வள்ளுவரும் சொல்லினதை தான் கம்பனும் சொல்லி இருக்கான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

மேகலை எனப்படுவது யாதெனில் பெண்கள் இடுப்பில் அணியும் ஒட்டியாணம். யாரோ தவறா விளங்கிட்டினம்.. கம்பனை வம்பன் என்று காட்ட வாக இருக்கலாம். பொதுவாக பெண்கள் அதிக மகிழ்ச்சியில் திளைக்கும் போது உடல் மெலித்து விடுவார்களாம்.. வள்ளுவரும் சொல்லினதை தான் கம்பனும் சொல்லி இருக்கான். tw_blush:

நமக்கே தெரியாத பல விசயங்கள்...நெடுக்கருக்குத் தெரிஞ்சிருக்கு...!

பொறாமையா இருக்கு...!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புங்கையூரன் said:

நமக்கே தெரியாத பல விசயங்கள்...நெடுக்கருக்குத் தெரிஞ்சிருக்கு...!

பொறாமையா இருக்கு...!

அதிக மகிழ்ச்சியில் மட்டுமல்ல.. காதலனைப் பிரிந்த சேகத்திலும் மெலிந்து விடுவார்களாம்.. அந்தக் காலப் பெண்கள். இந்தக் காலத்தில் சந்தோசத்தில் தின்று கொழுத்துவிடுவார்கள். tw_blush:

மேகலை குறித்து வள்ளுவன்..

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.

https://en.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.