Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்பட்டபோது சம்பந்தன் கண்களில் கண்ணீர்

Featured Replies

1 minute ago, புலவர் said:

மாற்று இயக்கங்கள் எல்லாம் புலிகளுக்கு எதிராகத் துப்பாக்கியை நீட்ட வில்லையா?தங்கள்' சொந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களையே பொட்டுத் தள்ள வில்லையா?மாலைதீவில் போய் அங்குள்ள மக்களை அழித்து தமிழீழத்துக்கான போரை மாலைதீவில் நடத்தவில்லையா ? ஆக தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்ற டார்வினின் கோட்பாட்டுக்கு அமையவே புலிகள் தலையெடுத்தார்கள்.சர்வதேசத் தலையீடே அவர்களை அழித்தது.

கிழிஞ்சுது லம்பாடி லுங்கி .

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, arjun said:

வரலாற்றை திரிக்ககூடாது ,

தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் .

இதிலே என்ன வரலாறு திரிக்கப்பட்டுள்ளது. பதில் எழுதத் தெரியாவிட்டால் இப்படி மொட்டையாக எழுதக்கூடாது. சரி எனக்குத் தெரியாது உங்களுக்குத் தெரிந்த வரலாற்றை எழுதுங்கள் அறிந்து கொள்லாம்.

1 minute ago, arjun said:

கிழிஞ்சுது லம்பாடி லுங்கி .

?????????????????????????

1 minute ago, Dash said:

1.இலங்கை இராணுவம் மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு ஏன் குண்டு வீசினார்கள்.

2.புலிகள் பயங்கரவாதிகள் அவர்களுக்கு மக்கள் நலம் பற்றி அக்கறை இல்லை , ஆனால் மக்கள் இருக்கின்றார்கள் என்றும் தெரிந்து கொண்டு ஏன் இலங்கை இராணுவத்தின் அடாவடிக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க்கியது

இன்று சிரியாவில் அனைத்து நாடுகளும் ஐ எஸ் ஐ ஒழிக்க குண்டு மழை பொழிகின்றார்கள் பொது மக்களை தவிர்த்தா குண்டுகள் விழுகின்றது .

இது நடக்கும் என்று புலிகளுக்கு நன்கு தெரியும் மக்கள் அழிவில் தாங்கள் தப்ப நினைத்தார்கள் ஆனால் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை முற்றாக புலிகள் அழியவேண்டும் என்று சர்வதேசம் நினைத்தது . 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, arjun said:

புலிகள் கெழும்பிலும் இருந்தார்கள் அங்கே என் விமானக்குண்டு வீச்சு நடத்தவில்லை. அங்கே நடத்தினா புலிகளை விட சிங்களவன் கூட்ச்சாவான் இஞ்ச நடத்தினா சாகிறவன் எல்லோரும் தமிழர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, புலவர் said:

மாற்று இயக்கங்கள் எல்லாம் புலிகளுக்கு எதிராகத் துப்பாக்கியை நீட்ட வில்லையா?தங்கள்' சொந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களையே பொட்டுத் தள்ள வில்லையா?மாலைதீவில் போய் அங்குள்ள மக்களை அழித்து தமிழீழத்துக்கான போரை மாலைதீவில் நடத்தவில்லையா ? ஆக தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்ற டார்வினின் கோட்பாட்டுக்கு அமையவே புலிகள் தலையெடுத்தார்கள்.சர்வதேசத் தலையீடே அவர்களை அழித்தது.

மற்றைய இயக்கங்கள் எல்லாம் புலிகள் சும்மா இருக்க புலிகளுக்கு எதிராக துப்பாக்கி நீட்டின. கொள்கை ரீதியில் ஒருசில முரண்பாடுகள் இருந்திருக்கலாம், ஆனால் மற்றைய இயக்கங்களை எல்லாம் அழித்து தாம் மட்டுமே போராடவேண்டும் என்ற சர்வாதிகாரத்தை யார்கொடுத்தார்கள். மற்ற இயக்கங்களை அழிக்கும்போது சொன்ன குற்றச்சாட்டுக்களைக் காலத்துக்குக் காலம் புலிகளே அவற்றைச் செய்தும் இருக்கின்றனர்.

ஆம், மற்றைய இயக்கங்கள் தம் சொந்த இயக்கத்தவர்களைப் போட்டுத் தள்ளினார்கள். புலிகளும் லெப். செல்லக்கிளி அம்மான், லெப். கார்ணல். பொன்னம்மான் போன்றவர்களை சாமர்த்தியமாக போட்டுத் தள்ளினார்கள், இன்னும் பலவிடயங்கள் இருக்கு, அவற்றை இங்கு விலவாரியாக எழுத இயலவில்லை)

மாலைதீவு இந்தியாவுக்காக கூலிக்கு மாரடிக்கப்பட்ட விடயம். அதுக்கும் ஈழவிடுதலைக்கும் தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் தமிழீழத்துக்கான போரின் இறுதிக்கட்டத்தின் முதல் அத்தியாயத்தை இந்தியாவில் சிறிபெரம்புதூரில் நிகழ்த்தி நிரந்தர முற்றுப்புள்ளிக்கு புலிகள் பிள்ளையார்சுழி போட்டனரென்பது வசதியாக மறக்கப்பட்டுவிடுகின்றது.

தக்கன தப்பிப் பிழைக்கும் என்பதை சகோதரப் படுகொலைக்குள் புகுத்தி நியாயப்படுத்தும் பேரறிவுக்கு வாழ்த்துகள். உண்மையில் டெலோவிடம் அன்று தொலைத்தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அன்று தம்மை அழிக்க வந்த  புலிகளின் கதையை முடித்திருப்பார்கள் என்று மக்கள் கூறியதை கேள்விப்பட்டு இருக்கின்றேன். அன்று வோக்கிடோக்கிதான் புலிகளைப் பிழைக்க வைத்ததே தவிர புலிகளின் கொள்கை அல்ல என்பதே உண்மையிலும் உண்மை!

Edited by வாலி

38 minutes ago, arjun said:

இன்று சிரியாவில் அனைத்து நாடுகளும் ஐ எஸ் ஐ ஒழிக்க குண்டு மழை பொழிகின்றார்கள் பொது மக்களை தவிர்த்தா குண்டுகள் விழுகின்றது .

இது நடக்கும் என்று புலிகளுக்கு நன்கு தெரியும் மக்கள் அழிவில் தாங்கள் தப்ப நினைத்தார்கள் ஆனால் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை முற்றாக புலிகள் அழியவேண்டும் என்று சர்வதேசம் நினைத்தது . 

விளங்கவில்லை புலிகளால் தான் மக்கள் அழிந்தார்கள் என்று சொல்கிரிர்கள்? பிறகு மக்கள் அழிந்தாலும் புலிகள் அழிய வேண்டும்  என்றூ சர்வதேசம் நினைத்ததாகவும் குறிப்பிடுகிறீர்கள்? பிறகு எதோ சர்வதேசம் எதோ நல்லவர்கள்  எண்டும் சொல்லுறியள்.

அப்படியாயின் 50,000 புலிப் பயங்கரவாதிகளை அழிக்க 150,000 மக்களை அழித்து  அவற்களின் இனத்தை  இல்லாமல் பண்னியது உங்களைப பொறுத்தவரையில் 

சரியா  ?தவறா  ? ஒரு சொல்லில்  பதில் தரவும் 

13 minutes ago, Dash said:

முதலில் ஒன்று இரண்டு எண்ண பழகிவிட்டு வாங்கோ  ஒரு சொல்லில் பதில் தாறன் .

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புலவர் said:

புலிகள் கெழும்பிலும் இருந்தார்கள் அங்கே என் விமானக்குண்டு வீச்சு நடத்தவில்லை. அங்கே நடத்தினா புலிகளை விட சிங்களவன் கூட்ச்சாவான் இஞ்ச நடத்தினா சாகிறவன் எல்லோரும் தமிழர்கள்.

புலிகள் சிங்களவர்கள் அதிகமாக வாழும் கொழும்பிலும் புறநகர்பகுதிகளிலும் மக்களின் வாழுமிடங்களில் பகிரங்கமாக முகாம் அமைத்து கொழும்பையும் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள்.  அதனால் அவர்களை விமானம் மூலம் தாக்கினால் சிங்கள மக்கள் கூடச் சாவார்கள் என்று நினைத்து விமானக்குண்டு வீச்சு நடாத்தவில்லை. <_<

ஜேவிபி பயங்கரவாதத்தை அடக்க சிங்களம் தனது அரசபயங்கரவாதம் மூலம் 1987-89 வரையான இரண்டு வருடகாலப்பகுதியில் 40,000 - 60,000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல்போய் இருப்பதாக சொல்லப்படுகின்றது. மொத்தத்தில் பயங்கரவாதத்தை அடக்குவதில் சிங்கள அரச இயந்திரம் என்றுமே எவருக்கும் ஈவிரக்கம் காட்டியது இல்லை.

23 minutes ago, arjun said:

முதலில் ஒன்று இரண்டு எண்ண பழகிவிட்டு வாங்கோ  ஒரு சொல்லில் பதில் தாறன் .

அது தெரிந்தபடியால் தான் உங்களுடம் இரண்டு சொற்களில் பதில் கேட்கிறான் சரியா? தவறா? 

இவ்வளவு காலமும் எதுக்கு எடுத்தாலும் புலி பயங்கரவாதி அதனால் தான் சர்வதேசம் அழித்தது என வாதிட்ட நீங்கள் இப்பொழுது நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னால் ??. 

உங்களுடைய நிலை முள்ளில் விழுந்த சேலையின் நிலை தான்.

அதனால் தான் நீங்கள் பாவிக்கும் இறுதி ஆயுதமான படித்து விட்டு வா என்பதை பாவிப்பதில் இருந்தே தெரிகிறது உங்களது திரிசங்கு நிலை!!!!

அப்படியாயின் 50,000 புலிப் பயங்கரவாதிகளை அழிக்க 150,000 மக்களை அழித்து  அவற்களின் இனத்தை  இல்லாமல் பண்னியது உங்களைப பொறுத்தவரையில் 

நான் அப்படி கேட்டதற்கு காரணம் மேலே உள்ள தரவுகளை எங்கே எடுத்தீர்கள் என்பதற்காகத்தான் .

எனது பதில் சரிதான். 

1 hour ago, Dash said:

சரியா  ?தவறா  ? ஒரு சொல்லில்  பதில் தரவும் 

சரி

50 minutes ago, Dash said:

அது தெரிந்தபடியால் தான் உங்களுடம் இரண்டு சொற்களில் பதில் கேட்கிறான் சரியா? தவறா? 

சரி சரி

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வராலாறு .....
மந்திகை அங்கொடை ஆஸ்பத்திரியில் இருந்த துண்டு சீட்டு இருந்தால்தான் 
எழுதாலாம்  போல இருக்கு.

இனி ஒரு குறிப்பிட்ட பேர் மட்டும்தான் வராலாற்று ஆசிரியர்களாக 
இருப்பார்கள்.

சாதாரன மனிதர்களுக்கு வரலாறு தெரியாமலே போய்விடும்.
பாவம் எழுதுகிறவர்கள் .....
 
22 hours ago, ஜீவன் சிவா said:

பகிர்வுக்கு நன்றி கலைஞன். இதுவரை நான் சிந்தித்துப் பார்க்காத புதிய தகவல் இது. Ananda Samarakoon தற்கொலை செய்தது மனவருத்தத்திற்குரியது.

நானும் ஆனந்த சமரக்கோன் அவர்கள் தற்கொலை செய்தது பற்றி நேற்றுத்தான் அறிந்தேன். இதற்கான காரணம் இவர் எழுதிய பாடலின் ஆரம்பத்தில் சிறீ லங்கா தாயே என்று புதிய சொற்களை புகுத்தியது இவருக்கு பிடிக்கவில்லை எனவும், இதற்கெதிராக கருத்துக்களை வெளியிட்டார், மன உளைச்சலில் இருந்தார் என்றும், இதுவே இறுதியில் தற்கொலையாய் போனதும் என்றும்.. ஊகிக்கமுடிகின்றது. நமோ நமோ என்று 'ந' எழுத்தில் பாடல் தொடங்குவது நாட்டுக்கு அபசகுணம் என்று பாடலின் தொடக்கத்தில் சிறீ லங்கா தாயே எனும் சொற்கள் புகுத்தப்பட்டதாக விக்கிபீடியா சொல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

12654244_865175966933418_342449946820428

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.