Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய கீதத்தை தமிழில் பாடியமையானது, பிரிவினைவாதத்திற்கு அரசு அடிபணிந்தமையாகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

உண்மைதான் சிவாசின்னப்பொடி போன்ற ஒத்தோடிகளின் பிரசாரங்களை தாயகத்தில் இருக்கும் மக்கள் கணெக்கெடுப்பதில்லை. முதலில் இவர்கள் யாரென்றே மக்களுக்குத் தெரியாது!

வாலி, தும்பை விட்டு வாலைப் பிடிப்பதை நிப்பாட்டினால் ஏதாவது உருப்படியாக விவாதிக்கலாம். 

சிவா சின்னப்பொடி முன்னைநாள் புளட்காரர். அர்ஜுனுக்கும் கட்டாயம் தெரிந்தவராகத்தான் இருப்பார்.

  • Replies 59
  • Views 4k
  • Created
  • Last Reply

விடுதலைப்புலிகள் கொலைகாரர்கள். பணம் பறிப்பவர்கள். பிள்ளை பிடிப்பவர்கள் பாசிஸ்டுகள்’ என்று ஒத்தோடிகளை வைத்து கூவி கூவி சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாங்களை செய்த போதிலும் அவற்றை மக்கள் செவி மடுக்கவில்லை.

உண்மையோ பொய்யோ என்பதுதான் கேள்வி ?

மக்கள் செவி சாய்த்தார்களா என்பது யாருக்கு தெரியும் .

isis பற்றி சர்வதேசம் எவ்வளவு சொன்னாலும் ஆதாரம் காட்டினாலும் மக்கள் அதை செவிசாய்க்கவில்லை - அரபு சிவா சின்னபொடி 

11 hours ago, விசுகு said:

 

13 hours ago, Sasi_varnam said:

ம்ம் ஒருத்தர்  ஊருக்கு போய் எதோ கொஞ்ச நல்ல காரியங்கள் செய்யுறன், முயற்சிக்கிறன் என்றெல்லாம் சொன்னவர் ..வெறும் புலி எதிர்ப்பு, சிங்களத்திடம் எப்படி கையேந்தும் கலை 101 இது போன்ற விஷ விதைகளை மட்டுமே தான் அங்கே நின்று மாய்ந்து மாய்ந்து விதைக்கிறீர்கலாக்கும். உருப்பட்டது உங்கள் சமூகம்.

விடுங்க சசி

புலத்தில் இருந்தபோது நாட்டில் மட்டுமல்ல தங்கியிருந்த நாட்டிலும் எதுவும் தெரியாமல்

எந்த ஒரு அமைப்பிலும் இல்லாது

தான் மட்டுமென சுயநலமாக இருந்துவிட்டு 

இது போன்று  அந்த நாட்டு சட்டதிட்டங்களை பாவித்து பணம் வருவதை உறுதிப்படுத்திக்கொண்டு

அங்கு போய் விலாசங்காட்டுபவர்களுக்கு

கடற்கரையும் உணவகங்களும் தான் தெரியும்

வன்னியிலோ கிழக்கிலோ காலே பட்டிருக்காது

அதில் மிகக்கவனமாக இருப்பார்கள்.

 

 

உங்களுக்கே இது கேவலமாயில்லை.

நீங்கள் குறிப்பிட்ட ஒரு திரியில் உதவி கேட்ட போது, சில நாட்களில் தாயகம் செல்கின்றேன் குறிப்பட்ட பணத்தை அவசரமானால் கொடுத்து விடுகின்றேன், சேர்ந்ததும் பின்னர் தாருங்கள் என்று தனிமடலில் எனது அடையாளத்தை நீங்கள் யாரென்று தெரியாமலே வெளிப்படுத்தி இருந்தேன். இங்கு களத்தில் அதை பயன்படுத்தி எனது அடையாளம் பற்றி கேவலமாக எழுதி உங்கள் மனப்பாண்மையை புரிய வைத்ததற்கு நன்றி.

 

உங்களை நம்பின எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். புலிக்கு பசித்தாலும் புல்லைத் தின்னாது - ஏமாத்தித்தான் எதையாவது தின்னும். மதில் கட்டினான், மாடு மேச்சனான், மரம் வெட்டினான் என்று புங்குடுதீவில படம் காட்டுங்கோ. அதற்குதான் நீங்கள் லாயக்கு.

 

 

உங்களைபோல படம் காட்டுபவனில்லை நான். பதவி பகட்டிற்கு அப்பாற்பட்டு இன்றும் மனிதனாக வாழ்பவன். நான் நாலுகாலில் வாழ விரும்பவில்லை.

 

 

பிகு: நிர்வாகம் இதை தூக்கினாலும் சிலரது தோல்கள் உரிக்கப்பட வேண்டியவையே. இது எனது முதலாவது தனிமனித தாக்குதல் - இதற்கு காரணம் யாரென்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

 

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்


இழந்ததும்,இழந்து கொண்டிருப்பதும் தமிழர்கள். நமது உறவுகள் என்ற எண்ணம் உள்ள எவரும் இல்லாத புலிப்புராணம் பாடுவார்களா? இன்றைய தேவை என்ன? எனது இனவிடுதலைக்காக வேண்டாம் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதிகிடைக்க என்ன செய்யலாம் என்று கருத்தாட வேண்டிய இடத்தில் சேறுவாரியிறைத்துக்கொண்டிருந்து ஏதும் பயனுண்டா? 


அமைப்புகளின் தோற்றத்தையும் மறைவையும் காலமும் சூழலுமே தீர்மானிக்கிறது. எடுத்துக்காட்டிற்காக ஒரு விடயத்தைச் சுட்டுகின்றேன்.1984ம் ஆண்டு கிளிநொச்சியிலுள்ள கிராமமொன்றிலே தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT)யினரால் ஒரு மக்கள் சந்திப்பு நடாத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே அப்போது தமிழீழ வீடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த மாறன் வந்து சந்திப்பை அவதானித்தவிட்டு, 1984ம் ஆண்டிண் பின்னரும் இயக்கங்கள் தேவையா? என்று கேட்போது, அந்தக் கூட்டத்திலே கருத்துரைத்துக் கொண்டிருந்தவர், (அவர் தன்னை சிறீ என்று அறிமுகப்படுத்தியிருந்தார்) அதனை யாரும் தீர்மானிக்க முடியாது காலமே தீர்மானிக்கும் என்று பதிலளித்திருந்தார். 
அதன் பின்னரும்  அமைப்புகள், கட்சிகள், ஒட்டுக்குழுக்கள் என்று தோன்றியதும் இந்திய சிறீலங்கா அரசுகளின் ஆதரவோடு நடமாடியதும், அனைத்தையும் முறியடித்து ஒரு பலம்பொருந்திய அமைப்பாகவும், அரசு நோக்கிய கட்டமைப்பகளை நிறுவி அரசு நோக்கிய அரசாகவும் மக்கள் ஆதரவோடு தமிழினத்தின் பேரெழுச்சியின் வடிவமாக 2009 மே வரை அவர்களால் நிற்கமுடிந்திருக்கிறது. அவர்களை உலக ஆதிக்க சக்திகளின் துணையோடு சிங்களம் நயவஞ்சகமாக வீழ்த்தியிருக்கிறது. இதனை புலிகளின் வீழ்ச்சியெனப் புளங்காகிதம் அடைவோர் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். இது புலிகளின் வீழ்ச்சியல்ல. இது தமிழரின் வீழ்ச்சி. 


இதனை சிங்களத் தலைமைகள் தெளிவாக உரைத்து நடைமுறைப்படுத்திவருகின்றன. அதனால்தான் யுத்த(வஞ்சக)வெற்றி குறித்துப் பேசும்போது மகிந்த வட்டுக்கோட்டையிலே தொடங்கியதை நந்திக்கடலிலே முடித்துவிட்டதாக(2009.05.19) இறுமாந்தமையின் வடிவத்தை நோக்கவேண்டும்.
சிறிலங்காவின் சுதந்திரதினத்திலே தேசியகீதத்தைக் கடைசியாகத் தமிழிலே பாடியதனூடாக எப்போதும் நீங்கள் கடைநிலை இனம்தானென சிங்கள நல்லாட்சி அரசு குறியீடாகக் சுட்டியிருக்கிறது என்பதே பொருத்தமானது. இதிலே சம்பந்தரையா கண்கலங்கினாலென்ன? சுமந்திரன் மாமா கைதட்டினாலென்ன? தமிழரது வாழ்விலே இதனால் ஏதாவது மாற்றம் வருமா? ஆனால் சிங்கள அரசினுடைய நிலையை அவர்கள் இதனூடாக அனைத்துலகிலே மேலும் உயர்த்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பதே மெய்நிலையாகும். ஆனால் நமக்கென்ன யாருக்காகவோ சேறைவாரியிறைப்போம்


.5:51 வது நிமிடத்தையும் , 6.26வது நிமிடங்களையும் பார்க்கவும். சிங்களவன் சிங்களவன்தான் ஆனால் தமிழன்..

 

 

 

 

Edited by nochchi

27 minutes ago, nochchi said:

இழந்ததும்,இழந்து கொண்டிருப்பதும் தமிழர்கள். நமது உறவுகள் என்ற எண்ணம் உள்ள எவரும் இல்லாத புலிப்புராணம் பாடுவார்களா? இன்றைய தேவை என்ன? எனது இனவிடுதலைக்காக வேண்டாம் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதிகிடைக்க என்ன செய்யலாம் என்று கருத்தாட வேண்டிய இடத்தில் சேறுவாரியிறைத்துக்கொண்டிருந்து ஏதும் பயனுண்டா? 

இதைத்தானே நானும் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

us_zpscvprjahm.jpg

நாங்கள் எங்கேயோ போய்விட்டோம் தம்பி  இப்பவும் தபேலா வாசிப்பதில் தான் நிற்கின்றார் .

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, arjun said:

நாங்கள் எங்கேயோ போய்விட்டோம் தம்பி  இப்பவும் தபேலா வாசிப்பதில் தான் நிற்கின்றார் .

உண்மை தான் அர்ஜுன் அண்ணா,
நீங்கள் எம்மை எல்லாம் விட்டு .. எங்கேயோ தூர ...தூர ... போய் விட்டீர்கள்.. :(
நான் வாசிக்கும் தபேலா ஒலிதான் தனிமைக்கும், இழப்புக்கும் ஆசுவாசம்.  :)

 

 

 

 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கே இது கேவலமாயில்லை.

நீங்கள் குறிப்பிட்ட ஒரு திரியில் உதவி கேட்ட போது, சில நாட்களில் தாயகம் செல்கின்றேன் குறிப்பட்ட பணத்தை அவசரமானால் கொடுத்து விடுகின்றேன், சேர்ந்ததும் பின்னர் தாருங்கள் என்று தனிமடலில் எனது அடையாளத்தை நீங்கள் யாரென்று தெரியாமலே வெளிப்படுத்தி இருந்தேன். இங்கு களத்தில் அதை பயன்படுத்தி எனது அடையாளம் பற்றி கேவலமாக எழுதி உங்கள் மனப்பாண்மையை புரிய வைத்ததற்கு நன்றி.

 

உங்களை நம்பின எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். புலிக்கு பசித்தாலும் புல்லைத் தின்னாது - ஏமாத்தித்தான் எதையாவது தின்னும். மதில் கட்டினான், மாடு மேச்சனான், மரம் வெட்டினான் என்று புங்குடுதீவில படம் காட்டுங்கோ. அதற்குதான் நீங்கள் லாயக்கு.

 

உங்களைபோல படம் காட்டுபவனில்லை நான். பதவி பகட்டிற்கு அப்பாற்பட்டு இன்றும் மனிதனாக வாழ்பவன். நான் நாலுகாலில் வாழ விரும்பவில்லை.

 

பிகு: நிர்வாகம் இதை தூக்கினாலும் சிலரது தோல்கள் உரிக்கப்பட வேண்டியவையே. இது எனது முதலாவது தனிமனித தாக்குதல் - இதற்கு காரணம் யாரென்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

இங்கே நிர்வாகம் தூக்கும் என்று எனக்கு எழுதிய இருமுறையும் எழுதிவிட்டே பதில் இட்டிருக்கின்றீர்கள்

அதன் மூலமே தெரிகிறது மனச்சாட்சிக்கு விரோதமாக நீங்கள் பதிலளிக்கின்றீர்கள் என்று.

உங்களது தனி மடல் பற்றியோ

உங்களது இரகசியங்கள் பற்றியோ நான் எதுவும் எழுதவில்லை

திண்ணையிலும் திரிகளிலும் நீங்கள் எழுதியவற்றையும் பச்சையிட்டவற்றையும்  வைத்தே நான் எழுதினேன்.

அது உங்களது இரட்டை வாழ்க்கையை இரட்டை வேசங்களை தொடுமாயின் தப்பு என்மீதில்லை

பொதுக்கருத்து எழுதும் போது இரட்டை வேசம் சாத்தியமாகாது.

இங்கு தனிப்பட்ட விசுகுவுக்கும்  ஜீவன் சிவாவுக்கும் எந்த வாதாட்டமுமில்லை

தம்மை

தமது உயிரை

உடல் பொருள் ஆவியை 

தமிழரின் விடிவுக்காக தந்த மறவர்களை 

மறக்கணும் 

மன்னிக்கமுடியாதவர்கள்

என்ற எழுத்துக்களின் முன்னால் ....

அவர்கள்  இருக்கும் காலத்தில் நாம் என்ன செய்தோம்?

என்கின்ற கேள்விக்கு ஒவ்வொருத்தரும் பதிலளிக்கணும்

தம்மைத்தானே விமர்சனம் செய்யணும்.

அதுவே எனது கேள்வியே தவிர  ஜீவன் சிவா புலிகளை கை நீட்டாதிருந்தால் 

அவரை நோக்கி நான் மட்டுமல்ல எவரது கைகளும் நீளாது.

  • கருத்துக்கள உறவுகள்
On February 10, 2016 at 0:35 PM, கிருபன் said:

வாலி, தும்பை விட்டு வாலைப் பிடிப்பதை நிப்பாட்டினால் ஏதாவது உருப்படியாக விவாதிக்கலாம். 

சிவா சின்னப்பொடி முன்னைநாள் புளட்காரர். அர்ஜுனுக்கும் கட்டாயம் தெரிந்தவராகத்தான் இருப்பார்.

கிருபன் சார், இங்கு விவாதிக்க என்ன இருக்கு. சிவா சின்னப்பொடி எழுதினதை மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள். அப்படி அவர் தாயக மக்களுக்கு என்ன செய்து இருக்கிறார். புலம்பெயர் வால்களின் துடிப்பை அறிந்து எழுதும் பத்தோடு பதினொன்றாக அவர் இருகலாம். மற்றும்படி "விடுதலைப்புலிகள் கொலைகாரர்கள். பணம் பறிப்பவர்கள். பிள்ளை பிடிப்பவர்கள் பாசிஸ்டுகள்’ என்று ஒத்தோடிகளை வைத்து கூவி கூவி சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாங்களை செய்த போதிலும் அவற்றை மக்கள் செவி மடுக்கவில்லை" என்று எழுதும் அவர், புலிகள் கொலைசெய்யவில்லை என்கிறாரா? இல்லை பணம் பறிக்கவில்லை என்கிறாரா? இல்லை பிள்ளை பிடிக்கவில்லை என்கிறாரா? 

இப்படியானவர்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டத்தான் லாயக்கு. சிங்கள அரசு இத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டதுதான், ஆனால் அது தமிழ் மக்களை நோக்கிய பிரசாரம் அல்ல, பன்னாட்டுச் சமுகத்தை நோக்கிப் பிரசாரம் செய்தது. அதில் (புலிகளின் உதவியுடனேயே) மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது. அரசின் பிரசாரங்களையோ செய்திகளையோ  வன்னிக்கு வெளியே இருந்த மக்கள் இறுதிவரை தமிழ் மக்கள் நம்பவில்லை.  எனினும் கடைசியில் நடந்தது வேறு. ஆனால் வன்னிக்குள் வாழ்ந்த மக்களுக்கு உண்மை நிலை தெரிந்து இருந்தது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.