Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலித்துப் பார்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்துப் பார்..

கடதாசி வீணாகும்

கல்லாப்பெட்டி காலியாகும்..

கண்ணீர் பெருகும்

கவலை மிஞ்சும்..

காதலித்துப் பார்..

கடற்கரை வெளியில்

கருவாடாய் காய்வாய்

கள்ளமில்லா உன் நெஞ்சில்

களவும் பொய்யும் குவியும்.

காதலித்துப் பார்..

காற்சட்டைப் பொக்கட் கிழிஞ்சு போகும்

காவாலியும் உன்னைச் சுரண்டுவான்..

காரில் பெற்றோல் தீரும்

காண்போர் முகம் சுழிக்கும்...

காதலித்துப் பார்..

கிரகம் பிடிக்கும்

கிருபை இழக்கும்..

கறுமம் இவன் பிறப்பென்று

கவிதை சுயம்பாடும்.

காதலிக்காமல் பார்..

உன்னை நீயே நேசிக்கப் பழகுவாய்

உள்ளம் திடமாகும்

உழைப்பு இதமாகும்

உன்னை நீ அறிவாய்

உலகம் உன்னில்

உருளும்...!!!!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாவ்...அருமையான கவிதை நெடுக்கர்! அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள். tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்துப் பார்....!

 

இரவுகள் முழுவதும்...,

கனவுகளால் நிறைந்திருக்கும்!

 

இரத்த உறவுகள் கூட..,

தூரத்துச் சொந்தங்களாகும்!

 

உனக்கென....,

ஒரு வீடு, ஒரு மனைவி..,

ஒரு சுற்றம் என்று....

ஒரு மன்னனைப் போன்ற...,

மனநிலை தோன்றும்!

 

உடையில் ஒரு மாற்றம்,

உடலில் ஒரு மாற்றம்,

நடையில் ஒரு துள்ளல்...,

உன்னை நீயே காதலிக்கத் தொடங்குவாய்!

 

நீ அழுகின்ற போது,

உனது கண்ணீரை ஏந்திட..,

நீ சிரிக்கின்ற போது,

சேர்ந்து சிரித்திட....,

இன்னுமொரு ஜீவன்...

உனக்காகக் காத்திருக்கும்..!

 

 

நெடுக்கர்... கோவிக்காதையுங்கோ....!

 

எனது தனிப்பட்ட காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளேன்!

 

உங்கள் கவிதை நல்லாயிருக்கு..!

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, புங்கையூரன் said:

காதலித்துப் பார்....!

 

இரவுகள் முழுவதும்...,

கனவுகளால் நிறைந்திருக்கும்!

(உண்மைச் சொல்லனும்.. காதலிக்க முதல் கனவே வந்ததில்லையா..??!.. காதலிச்ச பின் எத்தனை தடவை அந்தக் கனவை மீண்டும்.. கண்டிப்பீங்க)tw_blush:

 

இரத்த உறவுகள் கூட..,

தூரத்துச் சொந்தங்களாகும்!

(உண்மைச் சொல்லனும்..  இது எவ்வளவு புளுகு. அம்மாவும் அப்பாவும் அண்ணனும் தங்கையும் தூரமாகிட்டாய்ங்களா...??! அப்ப வந்தவ பிச்சாளுறான்னு அர்த்தம்.)tw_blush:

 

உனக்கென....,

ஒரு வீடு, ஒரு மனைவி..,

ஒரு சுற்றம் என்று....

ஒரு மன்னனைப் போன்ற...,

மனநிலை தோன்றும்!

(உண்மைச் சொல்லனும்.. நான் உழைச்சு வாங்கின்னா தான் என் வீடு.. நான் வேலை தேடி சம்பளம் வாங்கினாத்தான்.. கல்யாணம் காட்சியே.. இதில நான் மனைவி வந்த பின் தான் மன்னன் என்பது செமக் காமடி. காதலிக்க முதல் நானே சக்கரவர்த்தி.)tw_blush:

 

Quote

 

உடையில் ஒரு மாற்றம்,

உடலில் ஒரு மாற்றம்,

நடையில் ஒரு துள்ளல்...,

உன்னை நீயே காதலிக்கத் தொடங்குவாய்!

( உண்மைச் சொல்லனும்.. காதலிக்க முதல் இருந்த செழிப்பு.. அழகு.. உடை.. உடல்.. சிகை அலங்காரம்.. காதலிச்சு கல்யாணமான பின் எங்கண்ணை இருக்கு. அவனவன் 2 வேலை.. 3 வேலைகன்னு நித்திரைக்கு வழியில்லாமல் பாதியில செத்துத் தொலையிறான்.. நீங்க என்னடான்னா..)tw_blush:

 

நீ அழுகின்ற போது,

உனது கண்ணீரை ஏந்திட..,

நீ சிரிக்கின்ற போது,

சேர்ந்து சிரித்திட....,

இன்னுமொரு ஜீவன்...

உனக்காகக் காத்திருக்கும்..!

(உண்மைச் சொல்லனும்.. நீங்க ஊமையா அழுகிற போது உங்களை தேற்றின சினிமாப்பாடல் அளவுக்கு உங்களோட கூட வந்தவ எத்தனை வாட்டி தேற்றி இருப்பாங்க. கூட காயப்படுத்திட்டு.. குறைவா தேற்றிறதுக்கு எதுக்கண்ணே இன்னொரு ஜீவன். அதிலும் தானே தனியனாக இந்த ஜீவன் கூட சகிக்கவும் சுகிக்கவும் செய்யுமே. சுற்றம் சூழல் நட்பு என்று கூட சுயமாளுமே.)tw_blush:

நெடுக்கர்... கோவிக்காதையுங்கோ....!

எனது தனிப்பட்ட காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளேன்!

 

உங்கள் கவிதை நல்லாயிருக்கு..!

 

நன்றி புங்கையண்ணா மற்றும் கு.சாண்ணா... மற்றும் ஆக்கத்தைப் படிச்சு விரும்பின உறவுகளுக்கும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல குசா அண்ணா எங்கேயோ போயீட்டீங்கள்...ஒவ்வொரு வருடமும் இப்படியான நேரங்களில வந்து கண்ணீர் வடிக்கிறதே நெடுக்கருக்கு வேலையாப் போயிட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சின்ர கவிதையையும் , புங்கையின் கவிதையையும் பார்த்தால் ,முதல்ல ஒரு காதலியைத் தேடிப் பிடிக்க வேணும்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

முடியல்ல குசா அண்ணா எங்கேயோ போயீட்டீங்கள்...ஒவ்வொரு வருடமும் இப்படியான நேரங்களில வந்து கண்ணீர் வடிக்கிறதே நெடுக்கருக்கு வேலையாப் போயிட்டுது

அக்கோய் கண்ணீர் விட காதல் ஒன்றும் ஜீவனோபாயம் அல்ல. வெறும் உயிரின் உணர்ச்சி. உயிர்களில் எழும் எத்தனையோ உணர்ச்சிகளில் அதுவும் ஒன்று.. தோன்றி மறைஞ்சிடும். அதுக்காக உலகில் அழுபவன்.. முட்டாள். அதை அதை சரியான சந்தர்ப்பத்தில் சொல்லத்தான் இது. tw_blush:

2 hours ago, suvy said:

நெடுக்ஸ்சின்ர கவிதையையும் , புங்கையின் கவிதையையும் பார்த்தால் ,முதல்ல ஒரு காதலியைத் தேடிப் பிடிக்க வேணும்....!

எனி நீங்க காதலி பிடிச்சு.. கதலி தான் பிடிக்கலாம் சுவி அண்ணா. tw_blush:

கருத்துப் பகிர்விற்கும் விருப்புப் பகிர்விற்கும் நன்றி சொந்தங்களே. tw_blush:

Edited by nedukkalapoovan

'யாரை? எவர்? எப்போது? எப்படி? எங்கே? காதலிக்கின்றார் என்பதை பொருத்தது!' ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கலைஞன் said:

'யாரை? எவர்? எப்போது? எப்படி? எங்கே? காதலிக்கின்றார் என்பதை பொருத்தது!' ??

யாருக்கு.. எது.. எப்போது.. எவ்வளவு.. எங்கே பசிக்கிறது என்பது போல என்றீங்க. கொடுமை. tw_blush:

கருத்துக்கு நன்றி கலைஞன்.. நீண்ட நாட்களின் பின் தங்கள் கருத்தைக் காண்பதில் மகிழ்ச்சி. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 14.2.2016 at 4:08 PM, nedukkalapoovan said:

காதலித்துப் பார்..

கடதாசி வீணாகும்

கல்லாப்பெட்டி காலியாகும்..

கண்ணீர் பெருகும்

கவலை மிஞ்சும்..

காதலித்துப் பார்..

கடற்கரை வெளியில்

கருவாடாய் காய்வாய்

கள்ளமில்லா உன் நெஞ்சில்

களவும் பொய்யும் குவியும்.

காதலித்துப் பார்..

காற்சட்டைப் பொக்கட் கிழிஞ்சு போகும்

காவாலியும் உன்னைச் சுரண்டுவான்..

காரில் பெற்றோல் தீரும்

காண்போர் முகம் சுழிக்கும்...

காதலித்துப் பார்..

கிரகம் பிடிக்கும்

கிருபை இழக்கும்..

கறுமம் இவன் பிறப்பென்று

கவிதை சுயம்பாடும்.

 

 

காதலித்தவளையே கல்யாணம் செய்து பார்
இத்தனையும் ஒரு பொருட்டாகவே  தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் பஸ்ஸைத் தவறவிட்டுவிட்டார். இனி யாராவது இரக்கப்பட்டு ஏதாவது செய்தால்தான் 'அது' உண்டு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நெடுக்ஸ் பஸ்ஸைத் தவறவிட்டுவிட்டார். இனி யாராவது இரக்கப்பட்டு ஏதாவது செய்தால்தான் 'அது' உண்டு!

சொந்தக் கார்ல போற நெடுக்ஸுக்கு எதற்கு பஸ். tw_blush:

3 hours ago, வாத்தியார் said:

காதலித்தவளையே கல்யாணம் செய்து பார்
இத்தனையும் ஒரு பொருட்டாகவே  தெரியாது

ஏன்னா.. இதை விட மோசமானதுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் இல்லையா வாத்தியார் அண்ணா. tw_blush:

கருத்துச் சொன்ன உறவுகளை அனைவருக்கும் நன்றி. விருப்பம் தந்தவர்களுக்கும். tw_blush:

நெடுக்கால போவானுக்கு காதலில் இப்படி ஒரு கோபமா?  அனுபவமா? அனலடிக்குது  கவிதை.

நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sembagan said:

நெடுக்கால போவானுக்கு காதலில் இப்படி ஒரு கோபமா?  அனுபவமா? அனலடிக்குது  கவிதை.

நன்றி 

என்ன செண்பகன்.. கொஞ்சக் காலம் இடைவெளி விட்டு வந்து.. இப்படிக் கேட்கிறீங்க. நாங்க காதலுக்கு எதிரி எல்லாம் கிடையா. ஆனால் காதல் என்ற ஒன்று இந்த உலகில் இப்ப இல்லை என்று திடமா நம்பிறம். அது சங்க காலத்தோட செத்துப் போயிட்டுது. tw_blush:

கருத்துக்கு நன்றி நண்பரே. tw_blush:

Edited by nedukkalapoovan

 

On 2/16/2016 at 4:35 PM, nedukkalapoovan said:

சொந்தக் கார்ல போற நெடுக்ஸுக்கு எதற்கு பஸ். tw_blush:

நானும்  கல்யாணம் கட்ட முதல்  சொந்த கார்தான். காரோட்டி கை வலித்த  காலமும் இருக்கு. . tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கா ளா ன் said:

 

நானும்  கல்யாணம் கட்ட முதல்  சொந்த கார்தான். காரோட்டி கை வலித்த  காலமும் இருக்கு. . tw_blush:

கை வலிக்கிற அளவுக்கெண்டால் கியர்பொக்ஸ் சூடேறியிருக்குமே smilie_car_150.gif

 

 

1 hour ago, குமாரசாமி said:

கை வலிக்கிற அளவுக்கெண்டால் கியர்பொக்ஸ் சூடேறியிருக்குமே smilie_car_150.gif

என்டை காருக்கு  நல்ல cooling system இருந்தது.  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/02/2016 at 3:12 AM, கா ளா ன் said:

 

 

என்டை காருக்கு  நல்ல cooling system இருந்தது.  tw_blush:

 

On 18/02/2016 at 0:34 AM, கா ளா ன் said:

 

நானும்  கல்யாணம் கட்ட முதல்  சொந்த கார்தான். காரோட்டி கை வலித்த  காலமும் இருக்கு. . tw_blush:

 

அப்ப காளான் அண்ணன் இப்ப எல்லாம் அடிக்கடி கைகாட்டி கண்ட பஸ்ஸிலும் ஏறி இறங்கி போய்க்கிட்டு இருக்கிறாப் போல.

 

நக்கல் கருத்துக்கு நன்றி அண்ணன். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.