Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்: ஜோர்தானிய கப்பல் மாலுமிகள்

Featured Replies

முல்லைத்தீவு கடலில் தத்தளித்த ஜோர்தான் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்து விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட மாலுமிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் இன்று கையளிக்கப்பட்டு அவர்கள் கொழும்பு நோக்கி பயணிக்கின்றனர்.

முல்லைத்தீவு கடலில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜோர்தான் நாட்டின் "ஃபாரா - 3" சரக்குக் கப்பலின் மாலுமிகளை விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் நேற்று முன்தினம் காப்பாற்றிக் கரை சேர்த்திருந்தனர்.

கடல் புலிகளால் காப்பாற்றப்பட்ட இந்த மாலுமிகள், கிளிநொச்சி குளக்காட்சி விடுதியில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். அதேவேளையில் இந்த மாலுமிகளை அவர்தம் குடும்பத்தினருடன் இணைப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை இவர்கள் சந்திக்கவும் விடுதலைப் புலிகளால் நேற்று ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

அத்துடன் அவர்கள் தொலைபேசி வழியாக தமது குடும்பத்தினருடன் உரையாடியுள்ளனர். கப்பல் கப்டன் தனது நிறுவனத்திடமும், இந்தியாவில் உள்ள ஜோர்தான் தூதரகத்துடனும் தொடர்பு கொண்டு தாம் விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று விடுதலைப் புலிகளால் இந்த மாலுமிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டனர்.

இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி குளக்காட்சி விடுதியில் வைத்து கையளிக்கப்பட்ட இவர்கள், வவுனியா வழியாக கொழும்புக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஊர்திகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய கப்பல் கப்டன் ரமாஸ் எஸ் அப்துல் ஜபார் மாலுமிகளை ஜோர்தானுக்கு அனுப்ப அந்த நாட்டு தூதரகம் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

தாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் வந்து இது தமது நிர்வாகப்பகுதி என்றும் தம்மால் உதவி செய்ய முடியுமா என்று கேட்டதாகவும், சரக்குக் கப்பலை இயக்க தாம் முயன்றும் அது முடியாமல் போனதாகவும், கடைசியில் விடுதலைப் புலிகளின் உதவியுடன் தாம் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனையே மற்றும் மாலுமிகள் தெரிவித்ததுடன் தாம் இங்கு மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டதாகவும் விடுதலைப் புலிகளும் மக்களும் தம்மை சகோதரர்கள் போலவும் நண்பர்கள் போலவும் அனுசரித்ததாகவும், தம் உயிர்களைக் காப்பாற்றிய விடுதலைப் புலிகளை தாம் என்றும் மறக்கப் போவதில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தங்கள் நிலைமை தொடர்பாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை அறிந்து தமது உறவுகள் அச்சமடைந்து இருந்ததாகவும், ஆனால் தொலைபேசியில் தாம் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் பகுதியில் தாம் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் விரைவில் வந்து சேர்வோம் என்று தெரிவித்ததாகவும் அதன் பின்னரே உறவினர்கள் நிம்மதி அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கப்பலின் கப்டன் ரமாஸ் தாம் விடுதலைப் புலிகளுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்று தெரிவித்தார்.

கப்பலின் முதன்மைப் பொறியியலாளர் கமால் அபு அப்தியல் தெரிவிக்கையில்,

தாம் இங்கு வாழும் மக்களின் நிலைமையை உணர்ந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளும் மக்களும் தமக்காக உயிரைக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கப்பலின் 2 ஆவது பொறியியலாளர் அஸ்ரப் அப்துல் இப்ராகிம் தெரிவிக்கையில்,

தாம் செய்திகளில் அறிந்தளவில் விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் கட்டுப்பாட்டுப்பாட்டில் சிறிய பகுதிதான் இருக்கிறது என்றும் அறிந்திருந்ததாகவும் ஆனால் இங்கு பார்க்கின்ற போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரமாண்டமும் அவர்களிடம் இப்படியொரு பெரிய நிலப்பகுதி கட்டுப்பாட்டில் இருப்பதையும் கண்டு வியப்படைந்தாகவும் தெரிவித்தார்.

http://www.eelampage.com/?cn=30242

அடடா எங்கடை ஆய்வாளர்களிற்கு (அங்கலாய்ப்பாளர்கள் என்று வாசிக்கிறது பொருத்தமாக இருக்கும்) நல்லதொரு அல்வா கிடைச்சிருக்கு. 14000 ரொன் கப்பல் கப்டன் நன்றியுடையவன் என்று சொன்னா அதன் இராணுவ பரிமாணம் பற்றி அங்கலாய்ப்பினமாக்கு. :huh:

காப்பாற்றியவர்களுக்கு நன்றி சொல்லுவதை ஏன்ப்பா ஆய்வாளர்களை நக்கல் பன்னுகிறிங்கள்?

ஐயா குறுக்கு! நாவில என்ன காஞ்சோண்டியா இருக்கு?

யோ விடுப்பு, அது எண்டாலும் பறவாயில்லை. டொயிலெற் ரிசு எல்லே முடிஞ்சுது. :P

உங்கடை விடுப்புகளை திருவாய் மலர்ந்தருளவும் :huh:

கொஞ்சம் பொறுங்கோவன், அவையள் கொழும்பில வந்து யாருக்கு என்ன சொல்லுகினம் என்றதையும் கேட்டிட்டு கருத்துச் சொல்லுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோவன், அவையள் கொழும்பில வந்து யாருக்கு என்ன சொல்லுகினம் என்றதையும் கேட்டிட்டு கருத்துச் சொல்லுங்கோ!

oh government unmayai solli viddalum!!!!!!!!!!!!!!

அடடா எங்கடை ஆய்வாளர்களிற்கு (அங்கலாய்ப்பாளர்கள் என்று வாசிக்கிறது பொருத்தமாக இருக்கும்) நல்லதொரு அல்வா கிடைச்சிருக்கு. 14000 ரொன் கப்பல் கப்டன் நன்றியுடையவன் என்று சொன்னா அதன் இராணுவ பரிமாணம் பற்றி அங்கலாய்ப்பினமாக்கு. :huh:

14000 தொன் பொருள் ஏற்றும் கப்பல் எண்டால் அதன் பாரிய அளவை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதுக்கு உதவி செய்யக்கூடிய அளவிலை கட்டு மரத்திலை பயனம் செய்து இண்றைக்கும் சைக்கிள் ரியூப்பிலை பிடிச்சு நீந்தி திரியுற கடற்புலிகளிட்ட என்ன பலம் இருக்க போகுது...!

தூரத்தில இருந்து பாக்கேக்கை சின்ன ரோறர்( இழுவைப்படகு) போல இருந்துதாம். கிட்ட போகப்போகத்தான் தெரிஞ்சுதாம் அது பெரிய கப்பல் எண்டு... (குறிப்பு: கப்பலில் அளவை முதலிலேயே தெரிஞ்சு கொள்ளும் ராடர் தொழில்நுட்பம் புலிகளிட்டை கிடையவே கிடையாது) கப்பலிலை ஏற ஏணி ஒண்டும் இல்லாத்தாலும், படிப்பலகை எண்டு சொல்லுற கப்பலின் கயித்து ஏணியில ஏற போதிய பயிற்ச்சி இல்லாததாலையும் கடற்புலிகளாலை மேலே ஏற முடியவில்லை.. அதனால கப்பலுக்கு வெளியில அதிகம் கீழே, கடலிலேயே கட்டு மரத்தில இருந்து அண்ணோய் எண்டு கத்த... எட்டிப்பாத்த மாலுமிகள் 25 பேரும் தடக்கி கடலிலை விழுந்து விட்டார்கள்... கையில இருந்த சைக்கிள் ரீயூபுகளுக்கு ஒரு மாதிரி காத்தடிச்சு விழுந்தவர்களுக்கு குடுத்து பெரும்பிராயத்தனப்பட்டு கடற்புலிகளால் மாலுமிகள் கரைக்கு கொண்டு வரப்பட்டார்கள்...

இதிலை முக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன எண்டால், எந்த வளங்களும் இல்லாத புலிகளால் அது என்னது, யாருடைய கப்பல் எண்டே தெரியவில்லை... அது தத்தளிக்கிறதா இல்லையா, அல்லது அது இராணுவத்தின் கப்பலா எண்டு கூட அறியவில்லை.. அதிலும் முக்கியமாய் இதுமாதிரி கப்பல்களை வாழ்க்கையில் கண்டதுகூட இல்லை..( அதனை திருத்த உதவமுயன்றது பற்றி எல்லாம் புலிகள் சும்மாங்காச்சும்தான் சென்னார்களா எண்டு எல்லாம் கேள்வி கேக்காதேங்கோ)

முக்கியமாய் இங்கை ஒருத்தரும் கேட்க்க கூடாத கேள்வி என்ன எண்டால் இப்பிடி ஒரு கப்பலை புலிகள் சுற்றி நிற்பது கடற்படை தலைமைக்கு தெரியாதா..??? அப்படியானால் ஆயுதக்கப்பல்களை தேடும் கடற்படை புலிகள் ஒரு கப்பலை கரைக்கு அண்மையில் வைத்திருப்பது தெரியாதா..?? அப்படியானால் தொழில்நுட்பம் நிறைந்த வல்லமை பொருந்திய கடற்படை ஏன் அந்த கப்பலை தாக்க வில்லை ? ஏன் கையகப்படுத்த வில்லை..??? கப்பல் தொலைத்தொடர்பு வேலை செய்யவில்லை எண்று சொல்லும் கடற்படை. முன்னரும் தங்களுடன் தொடர்பாடலில் ஈடுபடாத கப்பல் ஒண்றை அளித்தது போல ஏன் இந்த கப்பலை தாக்கி அளிக்கவில்லை... இப்படியான மர்ம கேள்வி எல்லம் கேட்க்காத வரைக்கும் மேல நான் சொன்னதுதான் உண்மை...

குறுக்ஸ் மகிழ்வாராக...!

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில ஊடகங்களில் "மாலுமிகள் விடுவிக்கப்பட்டார்கள்" என்ற மாதிரித்தான் செய்திகள் வந்துள்ளன "மாலுமிகள் காப்பாற்றப்பட்டார்கள்" என்ற மாதிரி வரவில்லையே.. :angry:

ஆங்கில ஊடகங்களில் "மாலுமிகள் விடுவிக்கப்பட்டார்கள்" என்ற மாதிரித்தான் செய்திகள் வந்துள்ளன "மாலுமிகள் காப்பாற்றப்பட்டார்கள்" என்ற மாதிரி வரவில்லையே.. :angry:

அண்ணா அவர்களுக்கு மொழிபெயர்க்க தெரியாதோ?

சமாதாணத்தை கேட்டா வடிவாக மொழிபெயர்ப்பு செய்து கொடுத்துருப்பார் :P

Sri Lanka rebels forced way onto Jordan ship-crew

26 Dec 2006 10:24:46 GMT

COLOMBO, Dec 26 (Reuters) - Sri Lanka's Tamil Tiger rebels fired shots in the air and forced their way onto a Jordanian cargo ship that strayed into waters near a rebel stronghold in the north, the vessel's captain said on Tuesday......

"They ordered us to leave the ship, they fired four shots to make us jump into boats," Jabbar, flanked by Sri Lankan navy officials, said.

One of the crew, Shareef, who came to the conference in a wheelchair, said he was injured in the back after the rebels forced him into a boat.

"There were no seats in the boats, I was hit by the water when it moved," he said.

Jabbar said six armed men boarded his ship. "They had explosives, they said they wanted to blow up the anchor," he said...........

http://www.alertnet.org/thenews/newsdesk/SP143946.htm

Edited by SAMATHAANAM

  • தொடங்கியவர்

*************

*************நீக்கப்பபட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

*************

*************நீக்ககப்பபட்டுள்ளது - மோகன்

என்ன ஈழவன் சார் புதினத்துக்கும் யாழ் களத்தில உள்ளவைக்கும் ஏற்றாப் போலதான் நடந்ததைச் சொல்ல வேணும் என்று எதிர்பார்க்கிறீர்களா..?!

ஆரம்பத்தில் எல்லாருக்குமே ஒரு பதட்டம். கப்பலில் இருந்தவைக்கு வெளில எவர் வந்திருக்கிறார் என்ன நடக்கப் போகுது புலிகள் எப்படிப்பட்டவர்கள்..சிறீலங்க

இதுவே இந்தியர்கள் என்றால் வடக்கத்தையான் பாப்பனன் என்றும் ஒரு பிடி பிடிச்சிருப்பியள். இஸ்லாமியர் என்றவுடன் தொப்பி அது இது என்று திட்டல். இந்த மனேநிலையில் இருந்து தயவு செய்து முதலில் விடுபடுங்கள்.

சிறீலங்காவிற்கு எதிராக புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பின் இறமையை நிலை நாட்டியுள்ளனர். இந்த முரண்பாட்டிலுள்ள 2 பகுதிக்கும் நடுவில் அம்பிட்டுக் கொண்டவர்கள் தான் அந்த கப்பல் காரர்கள். தமிழ்நெற்றுக்கு கப்பல் கப்டனே சொல்லியிருந்தார் இராணுவ நகர்வுகள் (stand-off) ஒன்றும் இருக்கவில்லை. இது முழுக்க அரசியல் என்று தான் உணர்கிறேன் என்று. தமிழ் ஊடகங்கள் தான் வழமைபோல் கொஞ்சம் அளவிற்கு அதிகமாக ஊதிவிட்டார்கள்.

பிரச்சனை இன்னமும் முடிவிற்கு வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. கப்பல் மீட்கப்படுமா? எப்போ?

3 நாட்களிற்கு முன்னர் கப்பல் கரை தட்டாது தடுக்க தென்னிலங்கையில் இருந்து tug boats போவதாக கண்காணிப்பு குழு சொல்லியிருந்தது. பின்னர் எல்லா சிப்பந்திகளும் கிளிநொச்சி வந்து கொழும்பும் போய்விட்டார்கள். கப்பலின் நிலை?

மும்பாயில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்திடம் அந்த கப்பலை மீட்டெடுக்க ஒப்பந்த விலை கோரியிருப்பதாக அங்கு ஒளிபரப்பாகும் ஒரு கேபிள் தொலைக்காட்சி தனது செய்தியில் குறிப்பிட்டதாக ஒரு ஈ மெயில் செய்தி சுற்று தெரிவிக்கிறது.

இந்த செய்தியை யாராவது செய்தி ஸ்தாபனங்களின் இணையத்தில் பார்த்தல் இங்கு குறிப்பிட்டால் அச்செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ளாலம்

ஜோர்தான் கப்பல் மீட்டு தருமாறு சிறிலங்கா அரசிடம் கப்பலின் கப்படன் கோரிக்கை

[Tuesday December 26 2006 03:12:53 PM GMT] [யாழ் வாணன்]

விடுதலை புலிகளால் சர்வதேச செஞ்சிலுமை சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டு கொழும்பு வந்த ஜோர்தானிய நாட்டு கப்பலின் 25 சிப்பந்திகளும் இன்று செவ்வாய்கிழமை சந்தித்தனர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த ஜோர்தானிய கப்பல்கள் பாரா (3) இன் கப்டன் ஆர். அப்துல்லா ஆறு படகுகளில் வந்த விடுதலைப் புலிகள் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர் .

இதனையடுத்து புலிகள் கப்பலினை நங்கூர மிட முயற்சித்தனர் எனினும் அது கைகூடவில்லை எனவே கப்பலில் இருந்த 25 சிப்பந்திகளையும் கப்பலினை விட்டு இறக்கி கப்பலில் இருந்து தொலைத் தொடர்பு சாதனங்களை அகற்றினர் என கப்படன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் கப்பலிலுள்ள சிப்பந்திகளை தாம் காப்பாற்றியதாகவும் கப்பலின் இயந்திரத்தை சீர் செய்ய முயல்வதாகவும் தெரிவித்த கருத்துக்களை கப்படன் அப்துல்லா மறுத்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் படகுகளில் பயணித்த போது அதிவேக காரணமாக காயமடைந்த எகிப்திய சிப்பந்தி ஷெரீப் முகமட் ஊடக வியலாளார் மாநாட்டிற்கு தள்ளு வட்டியில் வந்தார் .

அவர்கள் எம்மை படகின் அடிப்பகுதியில் தள்ளினார்கள் படகு அதி வேகமாக நகர்ந்தது அலைகள் அடிக்கும் போது அடிபட்டோம் இதனால் எனது பின்பகுதி காயமடைந்துள்ளதாக ஷெரீவ் மொகமட் தெரிவித்தார்.

இதே வேளை சிறப்பாக தம்மை உபசரித்தனர் என மாலுமி ஒருவர் தெரிவித்தார். அமானைதலைமையகமாக கொண்ட கப்பலின்கூட்பகுதியில் சொந்தமான பாரா(3) கப்பல் மீண்டும் எமக்குத் தேவை . இதனை மீட்டுத்தர அரசிற்கே முடியும் . இக் கப்பலில் 10 முதல் 12 மில்லியின் பெறுமதியான பொருட்கள் காணப்படுகின்றன எஅ கப்பல் கம்பனியின் பிரநிதியான ஜெமல் அல்செகாரி தெரிவித்தார்.

virakesari.lk

---------------------

மேலும் இன்று செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கப்பலின் கப்டன்...

இரவுநேரம் கப்பலின் இயந்திரங்கள் செயலிழந்ததைத் தொடர்ந்து தாம் நங்கூர மிட்டதாகவும் கொழும்பு துறைமுகத்திற்கு உதவி கோரி அறிவித்து விட்டு இழுவை படகுகளுக்காக காத்திருந்ததாகவும் மறுநாட்காலையில் 6 படகுகளில் வந்த விடுததைலைப் புலிகளை தாம் ஆரம்பத்தில் இலங்கை கடற்படையினர் என நினைத்ததாகவும் அவர்கள் கப்பலை நோட்டமிட்ட பின்னர் நங்கூரத்தின் இணைப்புக்களை துண்டிக்க முயற்சித்ததாகவும் அது கைகூடாமற் போகவே தன்னை நங்கூரத்தினை அகற்றுமாறு நிர்ப்பந்தித்தனர் பின்னர் கப்பலில் எறிய அவர்கள் கப்பலின் தொலைத் தொடர்புச் சாதனத்தால் யாருடனோ தொடர்பு கொண்டனர் எனவும், பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அச்சுறுத்தி நங்கூரத்தை அகற்றிய பின் கப்பல் மீது தாக்குதல் நடைபெறவுள்ளதென கூறி பலவந்தமாக தமது படகுகளில் ஏற்றினர். அப்போது கப்பலி இருந்த தொலைத்தொடர்புகருவி மற்றும் ராடார் கருவிகள் என்பன காணாமற் போயிருந்தன என்று தெரிவித்தார்!

Edited by saanakiyan

இவர்கள் 25 பேரும் தங்கள் நாடு திரும்பியதும் எப்படியான பேட்டி கொடுக்க போகிறார்களோ தெரியாது! பொறுத்திருந்து பார்ப்போம். உண்மையில் கப்பல் அரிசி யாருக்கு வந்தது. டர்பன் நகருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய சாமங்கள் வேற வந்து இறங்கி இருக்கெண்டு சொல்லுறாங்கள்... :P

புலிகள் மீது ஜோர்டான் கப்பல் ஊழியர்கள் புகார்

டிசம்பர் 27, 2006

கொழும்பு: தரை தட்டிய கப்பலிலிருந்து தங்களைக் கட்டாயப்படுத்தி இறங்கச் செய்து விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றதாக ஜோர்டான் நாட்டுக் கப்பல் கேப்டன் மற்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு இந்தியாவின் காக்கிநாடாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு 14,000 டன் அரிசியை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஜோர்டான் நாட்டுக் கப்பல், இலங்கையின் முல்லைத் தீவு அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரை தட்டியது.

இதையடுத்து அந்தக் கப்பல் கேப்டன் மற்றும் ஊழியர்களை மீட்ட விடுதலைப் புலிகள் அவர்களை தங்களது பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து அனைவரும் கொழும்பு வந்தடைந்தனர். அங்கு இன்று செய்தியாளர்களிடம் கப்பல் கேப்டன் ரமாஸ் அப்துல் ஜப்பார் பேசுகையில்,

டிசம்பர் 23ம் தேதியன்று நள்ளிரவுக்கு மேல், என்ஜின் கோளாறு காரணமாக முல்லைத் தீவுக்கு அருகே கப்பல் தரைதட்டி நின்றது.

இந்த நிலையில் அங்கு ஆறு படகுகளில் விடுதலைப் புலிகள் வந்தனர். எங்களது கப்பலுக்கு அருகே வந்த அவர்கள், கப்பலின் நங்கூரத்தை துண்டித்து விட்டு தங்களது படகுகளில் ஏறிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினர்.

விரைவில் தங்களது படகுகளில் ஏறிக் கொள்ளாவிட்டால், கப்பலை குண்டு வைத்துத் தகர்த்து விடுவோம் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர். நங்கூரத்தை வேகமாக துண்டிக்கச் சொல்லி ஆறு முறை வானில் துப்பாக்கியாலும் சுட்டனர்.

விரைவில் நாங்கள் கப்பலிலிருந்து வெளியேறா விட்டால் இலங்கை விமானப்படை வந்து தாக்குதல் நடத்தும் என்றும் எச்சரித்தனர். ஒரு விடுதலைப் புலி வீரர் கப்பலில் ஏறி குண்டுகளையும் பொருத்தத் தொடங்கினார்.

மேலும், கப்பலில் இருந்த பேக்ஸ், கம்ப்யூட்டர், ரேடார் மற்றும் முக்கிய தகவல் தொடர்பு சாதனங்களையும் அவர்கள் துண்டித்து எடுத்துச் சென்று விட்டனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் நாங்கள் அவர்களது படகுகளில் ஏறிக் கொண்டோம்.

எங்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றாலும் கூட விடுதலைப் புலிகள் எங்களை நன்றாக கவனித்துக் கொண்டனர். நல்ல உணவு, ஆடைகள் கொடுத்தனர், தங்கவும் நல்ல இடம் கொடுத்தனர் என்றார் ஜப்பார்.

கப்பலின் கேப்டன் ஈரானைச் சேர்ந்தவர். ஊழியர்களில் 13 பேர் ஜோர்டானைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் எகிப்து நாட்டவர்கள்.

இதற்கிடையே, தரை தட்டி நின்று விட்ட கப்பல் மற்றும் அதில் உள்ள அரிசியை பத்திரமாக மீட்பது குறித்து இலங்கை அரசுடன் கப்பல் நிறுவனமான சலீம் இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட் மற்றும் டிரேடிங் கம்பெனி ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

இந்தக் கப்பலின் மதிப்பு 10 முதல் 12 மில்லியன் ஆகும்.

நன்றி தற்ஸ்தமிழ்

தொப்பி இரண்டு பக்கமும் பொருந்துகிறது, மாற்றி மாற்றி போடவும் முடிகிறது இது கைவந்த கலையப்பா :P :P :P

தொப்பி இரண்டு பக்கமும் பொருந்துகிறது, மாற்றி மாற்றி போடவும் முடிகிறது இது கைவந்த கலையப்பா :P :P :P

உந்த விசியத்தில் நான் வெள்ளயலோட ஒத்துபோறனுங்கொ!

:icon_idea:

உந்த விசியத்தில் நான் வெள்ளயலோட ஒத்துபோறனுங்கொ!

:icon_idea:

அப்ப ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் வெள்ளையள் எடுத்தமுடிவு சரி எண்டுறீரோ? :icon_idea::lol::icon_idea:

Edited by Birundan

அப்ப ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் வெள்ளையள் எடுத்தமுடிவு சரி எண்டுறீரோ? :icon_idea::lol::icon_idea:

இல்லையிங்கோ......... நான் சொல்லவாறது சாத்தானின் வேதத்தை பத்தி வெள்ளயள் எடுத்த முடிவுங்கோ............ :icon_idea:

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியிலிருந்து 25 ஜோர்தான் மாலுமிகளும் ஐ.சி.ஆர். சி. வழித்துணையுடன் கொழும்பு வருகை

[26 - December - 2006] [Font Size - A - A - A]

கிளிநொச்சியில் நேற்று திங்கட்கிழமை காலை விடுதலைப்புலிகளால் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட 25 ஜோர்தான் மாலுமிகளும் நேற்று கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து தென் ஆபிரிக்காவின் டேர்பன் நோக்கி 14,000 தொன் அரிசியுடன் சென்று கொண்டிருந்த ஜோர்தானியக் கப்பல் (பர்ஹா III)கடந்த வெள்ளிக்கிழமை பழுதடைந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை முல்லைத்தீவு கரையில் ஒதுங்கியது.

இந்த நிலையில் அதிலிருந்த கப்டன் ஒருவர் உட்பட 25 மாலுமிகளையும் மீட்ட விடுதலைப்புலிகள் அனைவரையும் தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.

இது தொடர்பாக மேற்படி ஜோர்தானிய கப்பல் நிறுவனத்துடனும் அதன் உள்ளூர் முகவர்களுடனும் லண்டனில் உள்ள சர்வதேச கடல் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துடனும் தொடர்பு கொண்ட விடுதலைப்புலிகள் ,மாலுமிகள் அனைவரையும் அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக ஆலோசித்திருந்தனர்.

இதையடுத்து புலிகளுடன் தொடர்பு கொண்ட சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் மாலுமிகள் அனைவரையும் நேரில் சந்தித்தனர்.

இதன் போது இவர்களை உடனடியாக கொழும்புக்கு கூட்டிச் சென்று மேற்படி ஜோர்தான் கப்பல் நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைப்பது குறித்தும் அங்கு இணக்கம் காணப்பட்டது.

இதேவேளை, இந்த மாலுமிகள் கிளிநொச்சியிலிருந்து தத்தமது நாடுகளில் குடும்பத்தவர்களுடன் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு தாங்கள் நலமாயிருப்பது பற்றித் தெரிவித்ததுடன் ஓரிரு நாட்களினுள் தாங்கள் நாடு திரும்பிவிடுவோமென்றும் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை பத்து மணியளவில் 25 மாலுமிகளும் கிளிநொச்சியிலுள்ள `ராங்வியூ' ஹோட்டலில் வைத்து விடுதலைப் புலிகளால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (ஐ.சி.ஆர்.சி.) ஒப்படைக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சோ.தங்கன் இவர்களை ஜ.சி.ஆர்.சி. யிடம் ஒப்படைத்தார்.இதன் போது அங்கு புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் புலிகளின் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான இணைப்பாளர் மு.பாவரசனும் உடனிருந்தனர்.

கிளிநொச்சியிலிருந்து இவர்கள் அனைவரும் ஐ.சி.ஆர்.சி. யின் ஐந்து வாகனங்களில் காலை 10.20 மணியளவில் கொழும்பை நோக்கிப் புறப்பட்டனர்.

நண்பகல் 12.20 மணியளவில் வவுனியா ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்துக்கு வந்த இவர்கள் அங்கு படையினரின் பதிவின் பின்னர் உடனடியாகவே கொழும்பை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

இவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்காக ஜோர்தானிலிருந்து மேற்படி கப்பல் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் இன்று கொழும்புக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.