Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Niyoga - நியோகா

Featured Replies

1910061_930860826967813_8895603285208585

 

  

 

DSC02015-X2.jpg

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு .

  • கருத்துக்கள உறவுகள்

உது என்ன படம்?

  • தொடங்கியவர்
1 hour ago, ரதி said:

உது என்ன படம்?

கனடாவில் வெளிவர இருக்கும் முழு நீளத்தமிழ்ப்படம் .

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் குழு குளுப்பாக  இருக்கிறது .....

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் பெயரும்,கதாநாயகியும் வித்தியாசமாய் இருக்குது.நன்றி அண்ணா

  • தொடங்கியவர்

12801127_949270361793526_682396091704984

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேணும்...கேக்கிறனெண்டு குறை நினைக்கக்கூடாது.....உந்தப்படம் குடும்பமாய் ஐமீன் பிள்ளை பேரப்பிள்ளையளோடை  இருந்து பார்க்கக்கூடிய படமோ? ஏனெண்டால் Niyoga  எண்டு கூகிளிலை தேடேக்கை குண்டக்க மண்டக்க படமெல்லாம் வருது அதுதான் கேட்டனான்.

  • தொடங்கியவர்
1 hour ago, குமாரசாமி said:

மன்னிக்க வேணும்...கேக்கிறனெண்டு குறை நினைக்கக்கூடாது.....உந்தப்படம் குடும்பமாய் ஐமீன் பிள்ளை பேரப்பிள்ளையளோடை  இருந்து பார்க்கக்கூடிய படமோ? ஏனெண்டால் Niyoga  எண்டு கூகிளிலை தேடேக்கை குண்டக்க மண்டக்க படமெல்லாம் வருது அதுதான் கேட்டனான்.

நியோகா என்பது பெருமாள்முருகன் மாதொருபாகன் எழுதி பிரச்சனை பட்ட விடயம் தான் .

பிள்ளை இல்லாதவர்கள் கடவுளிடம் பிள்ளை கேட்பது தான் நியோகா .

கேட்க அசிங்கமாக இருந்தாலும் பெருமாள்முருகன் முருகன் கதைகள் வாசிக்கும் போது அத்தனயும் அடிபட்டு போய்விடும் .

படம் எப்படி என்று பார்த்த பின் தான் விமர்சனம் எழுதமுடியும் .

 

One Part Woman is a novel based on an ancient and supposed cultural practice among Tamil Hindus, called Niyoga. It is the story of a childless couple with a strong desire of having a child, depicted with sensitivity, anguish and gentleness. However, in this work of fiction, Murugan used actual names of places and communities, thereby casting aspersions on the parentage of many generations of the community. This invited a backlash from the community and from other organizations in support

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் நியோகா, தீபன் படம்போல் பொதுஜனத் திரைகளில் ( பிரான்சில்) வருமா...!

  • 1 month later...
  • தொடங்கியவர்

10620617_1453573398247470_47136776328809

  • தொடங்கியவர்

12961587_10154788714365752_5897558644034

12794605_10154788714540752_2315786886499

12932651_10154788715690752_7099675056276

April 02/ 2016
இன்று York சினிமாவில் 'நியோகா' கனடியத் தயாரிப்புத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. திரைப்படம் நிறைவு பெற்றதும் பலருக்கும் பல கேள்விகள் இருந்தாலும் தரமான திரைப்படம் பார்த்தோம் என்ற மனநிறைவு இருந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது. திரைப்படத்தின் பெயர் மற்றும் முடிவு என்பவற்றில் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. என்வரையில் இந்த முடிவு பிடித்திருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு ஒன்றுமே சிந்திக்காமல் வெளியே வருவதைவிட சுவைஞர்களை சிந்திக்கத்தூண்டும் உத்தி பேசப்பட வேண்டிய ஒன்று. கதாநாயகியின் நடிப்பு உச்சந்தொடுகின்றது. பிள்ளையின் தந்தை யார் என்ற தேடல் மற்றைய வந்து போன பத்திரங்களை நினைவுபடுத்துகின்றது. தமிழ்த்திரைப்படங்களில் காணாத விடயங்களை கற்பனைக் காட்சிகளாக காட்டி மக்களை ஏமாற்றும் வணிக முயற்சிகள் எதுவுமில்லாமல் நல்ல திரைப்படமாக தந்திருப்பது பாராட்டுக்குரிய விடயம். 
என்ன இவன் படத்தைப் பற்றிக் கூறவில்லை முடிவைப்பற்றிப் பேசுகின்றானே என்று கேட்கலாம். எமது உலகம் சமூகம் என்ன கூறும் என்ற அங்கலாய்ப்பில் தம் சுயத்தை இழந்து தம் நுண்ணிய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் உழன்றுகொண்டிருக்கின்றது. தனி மனித உணர்வுகளை மதிக்காமல் வதைக்கின்ற எமது சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டை அடி இந்தத் திரைப்படத்தின் முடிவு என்று கூறலாம்.

கதை நடைமுறையை வெளிப்படுத்தி நின்றாலும் கனடிய குடிவரவாளர்கள் கனடிய வசதிகளைப் பயன்படுத்தி ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். ஆனால் புற நடையாக துணையிழந்து தனிமையில் வாடும் ஒருவரின் உணர்வுகளைப் உற்றார் உறவுகள் முதல் பெற்றோர் வரை பொருட்படுத்தாமல் இருக்கும் அபத்தம் எங்களிடம் புரையோடிப்போய் இருப்பதைக் கண்கூடாகப்பாரக்கின்றோம். தனிமையின் தவிப்பும் துணையின்றி துடிக்கும் பெண்மையின் உணர்வின் வெளிப்பாடு திரைப்பட மொழியில் காண்பிக்கப்பட்டமை மெச்சத் தகுந்தது. தமிழர் சமூகத்தில் இவை பற்றி பேசிவிட்டால் தீட்டு என்னும் நிலை மாற்றம் வரவேற்கத்தக்கது.

தனிமையில் வாடும் ஒருவரின் அக நிலைசார்ந்த உணர்வின் போராட்டமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம். பெண்ணின் தனிமையின் வலியை பெண்ணால் தான் வெளிப்படுத்த முடியும் என்ற சில பெண்ணியவாதிகளின் கருத்து இங்கு நிலை நிறுத்தப்படுகின்றதோ என்று எண்ணும் வகையில் திரைப்படம் பார்வையாளர்களுடன் பேசுகின்றது. (இயக்குனர் பெண் படைப்பாளி சுமதி)
இனிக் கதையாக்கம் திரைப்படமாக்கல் என்று பார்த்தால் புலம் பெயர் தமிழரின் திரைப்பட முயற்சியின் நம்பிக்கைக் கீற்றுக்கள் இருளைக் கிழித்து புறப்படுகின்றன. இசைச் சேர்க்கை திரை மொழி பல திரைப்படங்களை வழங்கிய இயக்குனருடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு இருக்கின்றன. இந்தப் படத்தில் நடித்தவர்களும் தங்கள் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தி எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். மொத்தத்தில் போலிகள் அற்ற பேசாப் பொருளைப் பேசி உண்மை நடைமுறைகளை உடைத்துப் போட்டு வெற்றி பெற்றுள்ளது 'நியோகா'

இனி எப்போது திரையிடுவார்கள் என்ற ஆவலை நியோக ஏற்படுத்தியுள்ளது

நடராஜா முரளிதரன் .

  • கருத்துக்கள உறவுகள்


இணைப்புக்கு நன்றி. எம்மவர்கள் இந்தத்துறையில் மெதவாகவென்றாலும், ஆனால் உறுதியாகப்பயணிக்க நாமும் வாழ்த்துவோம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.