Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேமுதிக 124 - மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளில் போட்டி!

Featured Replies

தேமுதிக 124 - மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளில் போட்டி!

 

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக 124 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மக்கள் நலக்கூட்டணிக்கு 110 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 

vijayakanth-+makkal+na+Kootani+long.jpg

திமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று விஜயகாந்த்துக்கு கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்புக்கு முன்பாகவே, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்த்தை நேரிடையாகவே சந்தித்து கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்குதான் வருவார் என்று பாஜக கூறிவந்தது.

இதனால் திமுகவில் சேருவாரா அல்லது மக்கள் நலக் கூட்டணியில் சேருவாரா, பாஜகவில் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு தேமுதிகவினர் இடையேயும், அரசியல் கட்சிகள் இடையேயும் நிலவியது.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தனித்து போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்தார். மேலும், எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றும் கூறிவிட்டார். இந்த அறிவிப்பு திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தாலும் கருணாநிதி நம்பிக்கையை இழக்காமல், திமுக கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என்பதில் நம்பிக்கை இழந்து விடவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணியை சேர்ந்த வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
 

vijayakanth-+makkal+na+Kootani+long+1.jp

பின்னர் விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணி தொடர்பாக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பேசினர். இந்த சந்திப்பில் மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்து செயல்படுவது என்றும், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை நிறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.5.2016 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகமும், மக்கள் நலக்கூட்டணியும் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு, தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தை தமிழக முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பதென்றும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் 124 தொகுதிகளில் போட்டியிடுதென்றும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளில் போட்டியிடுவதென்றும் இன்று (23.3.2016) முடிவு செய்யப்பட்டு தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/politics/61088-tn-assembly-elections-dmdk-makkal-nala-kootani.art

தேமுதிக விற்கு இதுதான் கடைசி தேர்தல் .

பாவம் வைகோ .

Edited by arjun
எழுத்துபிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, arjun said:

தேமுதிக விற்கு இதுதான் கடைசி தேர்தல் .

பாவம் வைகோ .

இந்தக்கூட்டு

தேர்தல் வரையாவது ஒன்றாக இருக்கணுமே முதலில்......?

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் அம்மா காட்டில் மழை!!!!

அரசியலலில் இதெல்லாம் சாதரணமப்பா!!!!அரசியல் ஓரு மனிதனை எந்த அளவுக்கு சாக்கடைக்குள் தள்ளும் என்பதற்கு  உதாரணம்.பொய் சொன்னால்தான் ஜெயிக்க முடியும் என்று வெகோ காலந்தாழ்த்தி உணர்ந்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

மொத்தத்தில் அம்மா காட்டில் மழை!!!!

அரசியலலில் இதெல்லாம் சாதரணமப்பா!!!!அரசியல் ஓரு மனிதனை எந்த அளவுக்கு சாக்கடைக்குள் தள்ளும் என்பதற்கு  உதாரணம்.பொய் சொன்னால்தான் ஜெயிக்க முடியும் என்று வெகோ காலந்தாழ்த்தி உணர்ந்திருக்கிறார்.

அதிமுக வெல்வது ஏறக்குறைய உறுதி. திமுக இந்தமுறை இன்னும் கீழே போகும் என நினைக்கிறேன். திமுக இல்லையானால் அதிமுகவுக்கு அரசியல் கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

அதிமுக வெல்வது ஏறக்குறைய உறுதி. திமுக இந்தமுறை இன்னும் கீழே போகும் என நினைக்கிறேன். திமுக இல்லையானால் அதிமுகவுக்கு அரசியல் கடினம்.

தேர்தலுக்கு முன்னான உச்ச நீதிமன்றின் தீர்ப்பே ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வையும் அதிமுகவின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப் போகிறது.

கருணாநிதியும் அதையே ஆவலுடன் எதிர்பார்தாலும், அவருக்கு இருக்கும் 2ஜி வழக்கால், அம்மாவிற்கான பாதகமான தீர்ப்பு பிரயோசனம் தராது.

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன் அன்று..

 

இது திருமாவளவன் இன்று.. tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

6161_1390446314314711_424192189616554686

 

5791_1390446394314703_614642243662754263

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறிகார கூட்டணி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கும் ஒரு விதியை எழுதி இருக்கிறான் இறைவன் !

  • கருத்துக்கள உறவுகள்

tw_blush:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தேமுதிகவில் பிளவு..!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.