Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனக்கான வீழ்ச்சியை வைகோ தானாகவே உருவாக்கிக் கொண்டார்: தமிழருவி மணியன்

Featured Replies

தனக்கான வீழ்ச்சியை வைகோ தானாகவே உருவாக்கிக் கொண்டார்: தமிழருவி மணியன்

Tamilaruvimaniyan200.jpgசென்னை: விஜயகாந்தின் முதுகுக்குப் பின்னால் அரசியல் நடத்துவது என்ற நிலைபாட்டில் நின்று விட்ட வைகோ, தனக்கான வீழ்ச்சியைத் தானாகவே உருவாக்கிக் கொண்டார் என்பதுதான் உண்மை என காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்து மக்களுக்கு நல்வழி காட்டிட வானத்துத் தேவன் மண்ணில் வந்து இறங்கியது போல் விஜயகாந்தின் வருகையை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார்கள். விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பதன் மூலம் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மாற்று அரசியல் குறித்து நாக்கு யாகம் நடத்துவதற்கான தார்மிகத் தகுதியை முற்றாக இழந்து விட்டார்கள். மாற்று அரசியல் என்பது ஆட்சி நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவரை அகற்றிவிட்டு இன்னொருவரைக் கொண்டு வந்து அமர்த்துவது அன்று.  அழுக்கடைந்து கிடக்கும் ஆட்சி பீடத்தின் சகல நுனிகளிலும் படிந்திருக்கும் கறைகள் அனைத்தையும் அழித்தொழித்து, நேர்மையும் தூய்மையும் தன்னலம் துறந்த வாழ்வையும்  மேற்கொண்ட ஒரு லட்சிய மனிதரிடம் அதிகாரத்தை ஒப்படைத்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைத் தொடர்ந்து செயற்படுத்தும் வழிமுறைக்குப் பெயர் தான் மாற்று அரசியல்.

அதிமுக-வில் அரங்கேற்றப்படும்  வரம்பற்ற தனிநபர் துதி, ஒற்றை நபரை மையமாகக் கொண்ட அதிகார அரசியல்,  ஆடம்பர ஆரவாரக் கட்-அவுட் கலாச்சாரம் அனைத்தும் அப்படியே பின்பற்றப்படும் அமைப்புதான் தேமுதிக என்பதில்  இருகருத்துக்கு   இடமில்லை.      கலைஞரின்  குடும்ப  அரசியல்,  வாரிசு அரசியல் குறித்து மேடைதோறும் மூச்சுவிடாமல்  முழங்குபவர்கள்,  அவரைவிட மோசமான குடும்ப அரசியலையும், வாரிசு அரசியலையும் வளர்த்தெடுத்தபடி வலம் வரும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பதன் மூலம், இந்த மண்ணில் எந்த வகையான மாற்று அரசியலுக்கு இவர்கள் வியூகம் அமைக்கப் போகிறார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் விளக்கியாக வேண்டும். 

vaiko600.jpg

விஜயகாந்தின் முதுகுக்குப் பின்னால் அரசியல் நடத்துவது என்ற நிலைபாட்டில் நின்று விட்ட வைகோ, தனக்கான வீழ்ச்சியைத் தானாகவே உருவாக்கிக் கொண்டார் என்பதுதான் உண்மை.  பௌர்ணமி நாளில் மக்கள் நலக் கூட்டணியும் விஜயகாந்தும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். பௌர்ணமிக்கு அடுத்த நாளில் தேய்பிறை தொடங்கி அமாவாசை இருட்டில் முடியும்.  தமிழக அரசியலில் புதிய வெளிச்சத்தை கொண்டுவந்து சேர்ப்பதற்காகப் புறப்பட்டவர்கள் அமாவாசை இருட்டில் மக்களை ஆழ்த்தும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே இந்த அணி விஜயகாந்த் மூலம் பல பிரச்னைகளைச் சந்திக்கும்.

ஒட்டு மொத்தமாகக் கூட்டிப் பார்த்தாலும் 12 விழுக்காடுக்கு மேல் எட்ட முடியாத இக்கூட்டணி தேர்தலில் தோல்வியுற்ற நிலையில்,  தேர்தலுக்குப் பின்பு திசைக்கொன்றாய் பிரிந்து போகும். இந்தக் கூட்டணி ஜெயலலிதாவையும் கலைஞரையும் வீழ்த்துவதற்கு எந்த மேலான லட்சியத்தையும் பலியிடுவதற்குத் தயாராகிவிட்டது என்பதுதான் பொய்யின் நிழல் படாத நிஜம்" எனக் கூறியுள்ளார். 

http://www.vikatan.com/election/article.php?aid=61145

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ இந்தளவுக்கு தன்னை தாழ்த்தி இருக்கக் கூடாது.

கப்டன் வெத்து வேட்டு என்று தேர்தல் முடிவுகள் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

வைக்கோ இந்தளவுக்கு தன்னை தாழ்த்தி இருக்கக் கூடாது.

கப்டன் வெத்து வேட்டு என்று தேர்தல் முடிவுகள் சொல்லும்.

அவரது ஒவ்வொரு தேர்தல் கூட்டும்

அவரை இறக்கவும்  இகளவுமே செய்கிறது..

எப்பொழுதும் ஏமாளியாகவும் திட்டமிடலற்றவராகவும் இருப்பதே இவரது இந்த நிலைக்கு காரணம்

பாவம் வைக்கோ அவர்கள்..

இத்துடன் இவரது வாக்குகளில் ஒரு பகுதி வேறு ஆட்களுக்கு திரும்பலாம்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நவீனன் said:

 

ஆனால் தி ஹிந்து நக்கலடிக்கிறது என்றால், யாரோ பயப்பிடுகிறார்கள் என்று தெரிகிறது.

இங்கே செய்யப்பட்டிருப்பது விஜயகாந்தை வலுவிழக்கச் செய்யும் அரசியல். 

வைகோவை அம்மா தன் கூட்டணியில் இருந்து காரணம் இல்லாமல் அவமரியாதை செய்து வெளியேற்றிய போது பலரும் அதை அம்மாவின் ஆணவம் என்றே சொன்னார்கள்.

ஆனால் விபரம் தெரிந்தவர்கள் சொன்னது - தன் கட்சி தொண்டர்களையே தன்பேச்சால் கவர்ந்து, தனக்குப் பின் அதிமுக கூட்டணியை ஏன் கட்சியயே வைகோ கைபற்ற கூடும் என்ற பயம்தான் அவரை அப்படிச் செய்யத்தூண்டியது என்று.

இப்படி ஒரு பயமே கருணாநிதி வைகோவை கட்சியை விட்டு நீக்கவும் காரணமாகியது.

ஜெ கருணாநிதி அளவுக்கு விஜயகாந்துக்கு விபரம் இல்லை, கூடவே பிரேமலதாவின் நட்பும் வைகோவுடன் உண்டு.

இந்த கூட்டணி எலென்சனில் வெல்லப்போவதில்லை. 

ஆனால் நீண்டகாலநோக்கில், ஒப்பீட்டளவில் இதில் அதிக நன்மை அடையப்போவது வைகோவே.

  • கருத்துக்கள உறவுகள்

1001106_1693577717548025_759436801892546

  • கருத்துக்கள உறவுகள்

10649886_1707860932826480_26861648259096

இது போனவாரம்.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

திருமா மீது கருணாநிதி சார்பில்.. மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தினதோடு மதிப்புப் போச்சு. 

வை கோ.. மீது இருந்த கொஞ்ச மதிப்பும் அவர் கூட்டணி வைத்துள்ள தலைவரின் கொள்கையை பார்க்கவே போயிடிச்சு...

 

இது போன முறை.. அது இந்த முறை...

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

1001106_1693577717548025_759436801892546

எங்கடா இன்னும் காணமே சாதியப் பதிவுகளைன்னு பார்த்தேன், வந்துடுச்சு ?

போனமுறை வடிவேலு பேசினார்-பியூசப் புடுங்கிவிட்டார்கள்.

இந்தமுறை சிங்கமுத்து பேசுறார். பார்க்கலாம்.

ஆனால் திமுக வடிவேலுவை கைவிட்டமாரி, அம்மா சிங்கமுத்துவை கைவிடமாட்டார்.

கேள்வி என்னவென்றால் - அம்மாவை கோர்ட்/மோடி கைவிட்டு விடுவார்களா என்பதே.

 

ஐயகோ வைகோ!
இதற்கு பெயர் தான் காலக்கொடுமையா?

ஒரு கோமாளியை முதல்வர் வேட்பாளராக்கி விட்டு
மக்கள் நலக்கூட்டணி  மக்கள் அவலக் கூட்டணி ஆகி விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை கப்டன் முதல்வர் ஆனால் 
அவர் பேசுவது மக்களுக்கு விளங்குமா ?? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, இசைக்கலைஞன் said:

 

இப்பிடியான கோக்குமாக்குகளாலை தான் சிங்களவன் தமிழ்நாட்டு அரசியல்வாதியளை கோமாளிக்கூட்டம் எண்டு அடிக்கடி தைரியமாக சொல்லுறான் tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.