Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு எம்.பி பாராளுமன்றம் செல்லாமல் ரியுசன் கொடுக்கும் அவலம்

Featured Replies

blogger-image-1199955904.jpg

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளுக்கு செல்லாமல் தனது மாவட்டத்தில் டியுசன் கொடுத்து கொண்டு உழைத்து கொண்டு திரிகிறார் என வாக்களித்த மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.

பாராளுமன்றம் செல்ல வாக்களித்த மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் தனது தொழிலையே இவர் செய்து கொண்டிருப்பது மாவட்ட மக்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளது.

அண்மையில் இவரது டுயுசன் கட்டவுட்கள் நகர வீதி முழுவதும் காட்சிப் படுத்தப் பட்டிருத்தமை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருத்தது.

பாராளுமன்றம் சென்று இன பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என கனவு கண்டார்கலாம் ஆனால் இலக்கணம் சங்ககாலம் சங்கமருவிய காலம் என தமிழரின் தீர்வு வளக்க போராடுகிறாராம்.

பாவம் இரு காவல் துறை அதிகாரிகள் வியாளேந்திரன் பா.உ இன் ரியுசன் சைக்கில் தரிப்பிடத்திற்கு காவல் என்ன பாவம் செய்தது மட்டக்களப்பு மண்.

கடமைக்கும் நாட்டு அரசியலை புரியாத மனிதர்களை அரசியலுக்குள் நுளைப்பது எவ்வளவு ஆபத்து என இன்று புரிவீர்களா?? இவரின் அடுத்த இலக்கு அரசில் அமைச்சராவது அதற்கு பல துாது அனுப்பப் பட்டுள்ளது ஆனால் மைத்திரி ரணில் ஆகியவர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளதாகவும் வியாளேந்திரன் அமைச்சராவதற்கு சம்பந்தன் தடையாக இருப்பதாக இவரின் உறவினர் உறுதிப் படுத்தியுள்ளார். என எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் உயர் பதவிகளில் உள்ள அரச அதிகாரிகளில் ஊழல்களுக்கும் துணை நிற்பதாக மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

viyalendran

http://wintamilnews.blogspot.ch/2016/04/blog-post_68.html

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அரசியல்வாதி என்றல் இவர் தான்
இந்தப் பாராளுமன்றத்தால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்பதை உணர்ந்து , தனது திறமையால் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கின்றார்.

கல்வியை விடச் சிறந்த செல்வம் உலகில் எதுவும் இல்லை.
கற்றவன் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாவிட்டால் அவன் கற்றதில் எந்தப்பயனும் இல்லை.

வியாழேந்திரன் அவர்களின் சேவைக்குப் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Athavan CH said:

வியாளேந்திரன் அமைச்சராவதற்கு சம்பந்தன் தடையாக இருப்பதாக இவரின் உறவினர் உறுதிப் படுத்தியுள்ளார். என எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இன்றைய காலத்தில், புலனாய்வு என்றதுமே ஏதேதோ ஞாபகத்தில் வருகிறது. :shocked:

நாய் வீட்டைக் காக்கும். ஆனால் புலனாய்கள் வீட்டையே காலிபண்ண வைப்பதாக செய்திகள் வருகின்றனவே !!

  • கருத்துக்கள உறவுகள்

ரியுசன் கொடுக்கிறது அவலமாவா தெரியுது. சிங்கள நாடாளுமன்றில் பேசுவதை விட.. ரியுசன் கொடுத்து நாலு மாணவர்களை மண்ணுக்கு உபயோகமாக உருவாக்கினால்.. அது எவ்வளவோ மேல் அல்லவா.

இதுகூடவா இந்த ஊடகக்காரர்களுக்குப் புரியல்ல. ஒருவேளை இவர்கள் பள்ளிக்கூடமே போகாத ஊடகக்காரர்களோ என்னமோ..?! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

உண்மையான அரசியல்வாதி என்றல் இவர் தான்
இந்தப் பாராளுமன்றத்தால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்பதை உணர்ந்து , தனது திறமையால் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கின்றார்.

கல்வியை விடச் சிறந்த செல்வம் உலகில் எதுவும் இல்லை.
கற்றவன் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாவிட்டால் அவன் கற்றதில் எந்தப்பயனும் இல்லை.

வியாழேந்திரன் அவர்களின் சேவைக்குப் பாராட்டுக்கள்

இவரது சேவை காசு வாங்கியா அல்லது காசு வாங்காமலா சேவை செய்கிறார்  ஆதாவது ரியுசன் வகுப்பு கொடுப்பது என்று தெரிவிக்கவும் 

இவரது கட்டவுட்டுகள் மட்டு கல்லடி பாலத்தில் ஏன் தொங்க விடப்படவேண்டும் இதை அகற்ற முற்பட்ட வேளையில் அரசியல் தலையீடு செய்து முடியாமல் போக இரண்டு நாட்கள் முன்பு பற்றிநாதம் இணையத்தில் செய்தி பிரசுரம் ஆன பின்னர் தான் அகற்றப்பட்டது என்பதையும்  அறியத்தருகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி செய்தியானது, ஜேவிவி நியூஸ் இணையத்தளத்திலும் தற்போது வின்தமிழிலும் வெளிவந்து இருக்கின்றது.

இந்தச் செய்தி வெளிவந்த மேற்படி இணையத்தளங்கள் இரண்டும் தமிழ்வின், லங்காசிறீயின் நிர்வாகத்தில் மறைமுகமாக இயக்கப்படுகின்றது அனைவரும் அறிந்து இருப்பீர்கள்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் இளைய தலைமுறையினைச் சேர்ந்தவர். இவரைப் பிடிக்காத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், துரைரட்ணம் ஆகியோரே மேற்படி செய்தியினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஊடாக வெளிவரச் செய்து இருக்கின்றனர்.

இதற்குள் எவ்வாறு சிறீதரன் வந்தார் என நீங்கள் கேள்வி எழுப்பலாம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) அமைப்பால் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தலில் வியாளேந்திரன் ஆசிரியர் போட்டியிட வைக்கப்பட்டார். அமோக வெற்றியும் ஈட்டினார். PLOTE இயக்கத்தின் மீதான காழ்ப்பு உணர்ச்சி காரணமாகவே சிறீதரன் இவ்வாறு செய்து வருகின்றார். 

நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நாடாளுமன்றம் செல்வது இல்லை என்பது இவர்களது கட்டுக்கதையே தவிர, அவர் ஒழுங்காக நாடாளுமன்றம் சென்று வருபவர்களுள் ஒருவர். அண்மையில் கனடா நாட்டுக்குச் சென்றிருந்த போது, அங்கே தன்னைச் சந்தித்தவர்களிடமும் கூட தமது தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவிகள் செய்யுமாறு கேட்டு இருக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைய தலைமுறையினரின் அமோக ஆதரவு பெற்ற ஒரு அரசியல்வாதிகாவும் அதேவேளையில் மக்களிடம் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு தன்னால் முடிந்த அளவு அந்தக்குறைகளை நிவர்த்தி செய்ய கடுமையாக உழைப்பதாகவே அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜேவிபி நியூஸ் இணையத்தளம் அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியின் நம்பகத்தன்மையினை வைத்தே இவர்கள் எவ்வாறானதொரு கீழ்த்தர ஊடக தர்மத்தினை பின்பற்றுகின்றனர் என்பதனை அறிந்து கொள்ளலாம்.

அதாவது, அண்மையில் நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழ்நாட்டு பிரதிநிதி அக்னி சுப்ரமணியம் என்பவர் இலங்கை சென்று இருந்தார் என்றும், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துல செயலகங்களுக்கு பொறுப்பாக முன்னர் இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் வீட்டில் தங்கி இருந்ததாகவும் பின்னர் யாழ். சென்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனைச் சந்தித்ததாகவும் செய்தி வெளியிட்டு விக்னேஸ்வரனுடன் நின்று எடுத்த படத்தினை வெளியிட்டு இருக்கின்றனர். ஆனால், கே.பி.யோடு நிற்கின்ற எந்தப் படங்களையும் போடவில்லை. 

இந்த செய்தி தொடர்பாக கே.பி.யை தொடர்பு கொண்டு கொழும்பு ஊடகவியலாளர்கள் கேட்ட போது, யார் தம்பி அந்த அக்னி சுப்ரமணியம் என கேள்வி எழுப்பி இருக்கின்றாராம். அவருக்கே தெரியாத ஒரு நபரை அவருடன் தங்கி இருந்ததாக செய்தி வெளியிடும் இவ்வாறான கீழ்த்தரமான விபச்சார ஊடகங்களின் செய்திகளை தொடர்ந்தும் பலர் நம்பி படிப்பதுதான் கவலைக்கு உரிய விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் உங்களுக்கு கேபியை உயர்தாட்டால் தூக்கம் வராது.

கேபி அவரை சந்தித்தை  லண்டனில் உள்ள கேபியின் மருமகனே குறுஞ்செய்தி மூலம் வியாழக்கிழமை அனுப்பியிருந்தார். 

7 minutes ago, nirmalan said:

ஜேவிபி நியூஸ் இணையத்தளம் அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியின் நம்பகத்தன்மையினை வைத்தே இவர்கள் எவ்வாறானதொரு கீழ்த்தர ஊடக தர்மத்தினை பின்பற்றுகின்றனர் என்பதனை அறிந்து கொள்ளலாம்.

அதாவது, அண்மையில் நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழ்நாட்டு பிரதிநிதி அக்னி சுப்ரமணியம் என்பவர் இலங்கை சென்று இருந்தார் என்றும், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துல செயலகங்களுக்கு பொறுப்பாக முன்னர் இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் வீட்டில் தங்கி இருந்ததாகவும் பின்னர் யாழ். சென்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனைச் சந்தித்ததாகவும் செய்தி வெளியிட்டு விக்னேஸ்வரனுடன் நின்று எடுத்த படத்தினை வெளியிட்டு இருக்கின்றனர். ஆனால், கே.பி.யோடு நிற்கின்ற எந்தப் படங்களையும் போடவில்லை. 

இந்த செய்தி தொடர்பாக கே.பி.யை தொடர்பு கொண்டு கொழும்பு ஊடகவியலாளர்கள் கேட்ட போது, யார் தம்பி அந்த அக்னி சுப்ரமணியம் என கேள்வி எழுப்பி இருக்கின்றாராம். அவருக்கே தெரியாத ஒரு நபரை அவருடன் தங்கி இருந்ததாக செய்தி வெளியிடும் இவ்வாறான கீழ்த்தரமான விபச்சார ஊடகங்களின் செய்திகளை தொடர்ந்தும் பலர் நம்பி படிப்பதுதான் கவலைக்கு உரிய விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நான் அவரை உச்சத்தில் வைப்பதற்காக எதுவும் கூற வரவில்லை. கொழும்பு ஊடக நண்பர்கள் கூறியதனைத்தான் இதில் எழுதி இருக்கின்றேன். நீங்கள் கூறியதனை இன்று ஊடக நண்பர்களிடம் தெரிவித்து அவரின் மருமகன் என்று யாரோ குறுந்தகவல் அனுப்பிய தகவல் உண்மையா என கேட்குமாறு கேட்கின்றேன். 

ஆனால், அக்னி சுப்ரமணியம் ஒரு புகழ் விரும்பி என்பது எனக்கு முன்னரே தெரியும். அவர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர். ஆகவே, அக்னி சுப்ரமணியத்தின் செய்தி உண்மையானால் அவர் படத்தோடு வெளியிடுமாறு அவரின் மருமகனிடம் கேளுங்களேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் மருமகன் என்று யாரோ அல்ல அவரின் மருமகன் தான். எனக்கு கேபியை தெல்லிப்பழை மகாஜனாவில் இருந்து தெரியும். 

11 minutes ago, nirmalan said:

இடையில் யாரோ புகுந்து விளையாடுவது தெரிகிறது. வியாளேந்திரன் மக்களுடன் தான் நிற்கிறார் என்பது மட்டக்களப்பு மக்களுக்கு தெரியும். பாராளுமன்றத்தில் குறட்டை விட்டவர்கள் மக்களிடம் சென்ற போது வாங்கி கட்டியதை விட வியாளேந்திரன் பரவாயில்லை தானே. ஊடகத்தின் திறத்தில் லசந்த களபதி என்றொரு புலனாய்வாளராம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரை  சந்தித்த பின் மிகவும் நல்ல வல்லவராக உள்ளார் என

அர்யூன் அண்ணா தனது அரசியல் வாழ்வை மீண்டும் தொடக்கப்போவதாக இங்கு எழுதியிருந்ததாக ஞாபகம்.

அவரது கருத்தையும் கேட்கலாமே

அர்யூன் அண்ணா தொடர்பிலிருப்பார்: என நினைக்கின்றேன்.

3 hours ago, nunavilan said:

செய்தியை எவர் எழுதினால் என்ன?

அவரது ஊரிலிருந்தே முனிவரும் எழுதுகின்றார்.

எனவே செய்தி உண்மை என்பதை முனிவரும் உறுதிப்படுத்தியுள்ளார்

நுணா எனது கேள்வி என்னவென்றால் பாராளுமன்ற பாதுகாப்பு சலுகைகள் மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற தகமையை அனுபவித்துக்கொண்டு

பாராளுமன்றத்துக்கு செல்லாது

தனியார் தொழிலுக்கு அதனை பாவிப்பது 

தமது நிம்மதியான வாழ்வுக்கு ஏதாவது செய்வார் என எதிர்பார்த்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி

அப்பதவியில் இருக்கலாமா?

தொடரலாமா???

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

அவரின் மருமகன் என்று யாரோ அல்ல அவரின் மருமகன் தான். எனக்கு கேபியை தெல்லிப்பழை மகாஜனாவில் இருந்து தெரியும். 

கொழும்பு ஊடக நண்பரிடம் நீங்கள் குறிப்பிட்ட மருமகன் விடயம் தெரிவித்து இருந்தேன். அதற்கு கே.பி. தனக்கு லண்டனில் மருமகன் என்று எவரும் இல்லை என்று தெரிவித்து இருக்கின்றாராம். 

வேண்டுமெனில் நீங்களே கே.பி.யிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவலாமே. இங்கே யார் பொய் சொல்கின்றார்கள் என்பதனை அறிய வேண்டும்.

ட்டக்களப்பு எம்.பி பாராளுமன்றம் செல்லாமல் ரியுசன் கொடுக்கும் அவலம் 

Is it true? Share your comments please.

இது எமது கொமிட்டி மெம்பர் கொமிட்டிக்கு அனுப்பிய மெயில் .

Hello All:

I got this information from the “Lanka Sri”.

But after I investigate about the news and the MP.

He is giving free tuition and helping Eastern province poor Tamil students.

Looks he is helping poor students and doing a good job for the undeveloped areas in the eastern province.

Regards

இது பின்னர் அவரே கொமிட்டிக்கு அனுப்பிய மெயில் .

கீழே உள்ளது இப்போது அவருக்கு வந்த மெயில் .

அன்புடன் -----------அவர்களுக்கு,

நீங்கள் மின்-அஞ்சல் மூலம் நேற்று உமது நண்பர்களுக்கு எமது MP திரு வியாளேந்திரன் பற்றிய இணையத்தளத்தில் வந்திருந்த சேதி ஒன்றினை அனுப்பி Is it true? Share your comments please என்று கேட்டிருந்தீர்கள்.

அவர்களின் மின்-அஞ்சல் முகவரியில் இருந்து உங்கள் நண்பர்களில் சிலர் கனடாவில் இருப்பதை  அறிகிறேன். நீங்களும் வெளி நாட்டில்தான் வசிபவராக இருக்க வேண்டும் என்பதே எனது ஊகம்.

திரு வியாளேந்திரன் அவர்களைப்பற்றி அறிய வேண்டும் என்றால் தயவு செய்து மட்டக்கிளப்பில் உள்ள எங்களிடம் கேளுங்கள்.

இணையத்தள பத்திரிக்கை செய்திகள் வெளி நாட்டில் வசிக்கும் தமிழ் மக்களை குழப்புவதற்காக இப்படியான தகவல்களை வெளியிடுகின்றன என்பதுதான் உண்மை.

கிழக்கில் என்ன நடக்கின்றது  என்பதனை உண்மையில் அறிய விரும்பினால் உங்களது கேள்விகளை எனக்கு  அன்புங்கள். என்னால் முடிந்த வரையில் பதிலழிக்கிறேன்.

நன்றி, வணக்கம்

சீலன்

கல்லடி, உப்போடை

எனக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்று தெரியும் எனவே இப்படியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை 

.

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை நீங்கள் குறிப்பிடும் கேபியும் நான் குறிப்பிடும் கேபியும் வெவ்வேறோ?

நான் குறிப்பிடும் கேபி மயிலிட்டியை சேர்ந்தவர்,  சிவலிங்கம், துரைரட்ணம்(Health Ministry) காதர் ஆகியோரின் உறவினர்.

கேபியின் இலக்கம் திண்ணையில் எழுதியுள்ளேன், நீங்களே தொடர்பு கொண்டு கேளுங்கள், எனக்கு கேபியை தொடர்பு கொள்ளும் அவசியம் இதுவரை ஏற்படவில்லை தேவை ஏற்படின் தொடர்பு கொள்வேன். 

1 hour ago, nirmalan said:

கொழும்பு ஊடக நண்பரிடம் நீங்கள் குறிப்பிட்ட மருமகன் விடயம் தெரிவித்து இருந்தேன். அதற்கு கே.பி. தனக்கு லண்டனில் மருமகன் என்று எவரும் இல்லை என்று தெரிவித்து இருக்கின்றாராம். 

வேண்டுமெனில் நீங்களே கே.பி.யிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவலாமே. இங்கே யார் பொய் சொல்கின்றார்கள் என்பதனை அறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

இவரை  சந்தித்த பின் மிகவும் நல்ல வல்லவராக உள்ளார் என

அர்யூன் அண்ணா தனது அரசியல் வாழ்வை மீண்டும் தொடக்கப்போவதாக இங்கு எழுதியிருந்ததாக ஞாபகம்.

அவரது கருத்தையும் கேட்கலாமே

அர்யூன் அண்ணா தொடர்பிலிருப்பார்: என நினைக்கின்றேன்.

செய்தியை எவர் எழுதினால் என்ன?

அவரது ஊரிலிருந்தே முனிவரும் எழுதுகின்றார்.

எனவே செய்தி உண்மை என்பதை முனிவரும் உறுதிப்படுத்தியுள்ளார்

நுணா எனது கேள்வி என்னவென்றால் பாராளுமன்ற பாதுகாப்பு சலுகைகள் மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற தகமையை அனுபவித்துக்கொண்டு

பாராளுமன்றத்துக்கு செல்லாது

தனியார் தொழிலுக்கு அதனை பாவிப்பது 

தமது நிம்மதியான வாழ்வுக்கு ஏதாவது செய்வார் என எதிர்பார்த்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி

அப்பதவியில் இருக்கலாமா?

தொடரலாமா???

விசுகு அண்ணா பாராளுமன்றத்தில் இருந்து உரையாற்றலாம். கூக்குரல் இடலாம். இனவாதம் பேசலாம். அல்லது ஒரு மூலையில் இருந்து கொறட்டை விடலாம். ஆனால் இவர் எப்போதும் மக்களுடன் வேலை செய்யும் ஒருவர். மட்டக்களப்பில் இருந்து பல மாணவர்களை பல்கலைகளகத்துத்துக்கு அனுப்பி கொண்டு இருக்கிறார். மிகுந்த பணக்கஸ்டத்தில் உள்ளார்.மாணவர்களின் கல்வி மிக கீழ் தரத்தில் உள்ளது. வடக்கில் ஊருக்கு ஒரு சங்கம் இயங்கி தமது கிராமத்தை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறார்கள். கிழக்கில் அந்த நிலை இல்லை. மற்றது கூட்டமைப்பில் தமிழ் இளைஞர்களை சென்று சிறையில் (சிறையின் பெயரை மறந்து விட்டேன்)ஒரு கூட்டமைப்பு உறுப்பினராவது பார்க்கவில்லை. இவர் சென்று சந்தித்து இயலக்கூடிய உதவிகளை செய்துள்ளார். இப்போ சொல்லுங்கள் யார் அரசின் சலுகைகளை அனுபவிக்கின்றனர்? மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் தனது கடமையை வியாளேந்திரன் போல் செய்யாமல் எங்கே குழி பறிக்கலாம் என இருக்கிறார்கள். என்னால் நிச்சயமாக கூற முடியும் இவர் சுயேட்சையாக மட்டக்களப்பில் கேட்டாலும் வெல்லுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.