Jump to content

இந்தக் கையெழுத்து,  யாருடையது? கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதை அந்தாதி களத்தில் தொடங்கி என்னையும் கவிதை என்று கிறுக்க வைத்த கறுப்பி....! tw_blush:

  • Replies 155
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3 May 2016 at 5:30 AM, தமிழ் சிறி said:

இவரைத் தெரியுமா?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

இன்றுதான் கவனித்தேன். எனது கையெழுத்தையும் கண்டுகொண்டதற்கு நன்றி தமிழ் சிறி அண்ணா. சரியாகக் கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்!

1995 இல் Windows 95 வந்தபோது எனது முதலாவது கணிணியை சுடச்சுட வாங்கினேன்! Memory வெறும் 16 MB மட்டுமே. 8 MB மெமரியுடன் வாங்கியிருக்கலாம். ஆனால் high spec இல் வாங்க காசைச் பார்க்காமல் Dell கணிணியை வாங்கினேன். முதல்வேலையாக background image க்கு இந்தியன் படத்தில் வந்த அழகான மனீஷா கொய்ராலாவைப் போட்டுவிட்டு (இந்தியன் படத்தை இரண்டு தடவைகள் விம்பிள்டன் ஓடியனில் பார்த்திருந்தேன்tw_blush:) screen saver க்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது அறை நண்பன் அலார்ம்/கசற் ரேடியோவில் கேட்டுக்கொண்டிருந்த சந்திரபாபுவின் இந்தப் பாடல் வரிகள் கேட்டது. அதனையே போடலாம் என்று முடிவுசெய்து, பாமினி எழுத்துருவை floppy disk இல் இரவல் வாங்கி தமிழ் எழுத்துக்களை தேடி ரைப் பண்ணி screen saver ஐ ஓடவிட்டேன். அதன் பிறகு மேசைக் கணிணி, மடிக் கணிணி என்று பல மாறிவிட்டாலும் எனது screen saver மட்டும் இதுவரை மாறவில்லை. சிலநேரங்களில் இந்த வாசகங்களே எனது வாழ்க்கையின் போக்கையும் தீர்மானிக்கின்றதா என்று யோசிப்பதுண்டு.

பிற்குறிப்பு:  background image இல் இருந்த மனிஷாவின் இடத்திற்கு, ஐஸ்வர்யா ராய் வந்து அவரும் போய்விட்டார்! இப்போது இருப்பது இதுதான்.

557022_10150952151648108_1725685711_n.jp

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான விடையைக் கூறிய.... நுணாவிலான், மீரா, சுவி, புங்கையூரான் ஆகியோருக்கு பாராட்டுக்கள். Smiley
கணணி சம்பந்தமான  கடந்த கால நிகழ்வுகளை.... எம்முடன் பகிர்ந்து கொண்ட கிருபனுக்கு நன்றி. Smiley

இவரைத் தெரியுமா?

//உதவி செய் உபத்திரம் செய்யாதே......

...........அன்புடன் xxxx//

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, தமிழ் சிறி said:

சரியான விடையைக் கூறிய.... நுணாவிலான், மீரா, சுவி, புங்கையூரான் ஆகியோருக்கு பாராட்டுக்கள். Smiley
கணணி சம்பந்தமான  கடந்த கால நிகழ்வுகளை.... எம்முடன் பகிர்ந்து கொண்ட கிருபனுக்கு நன்றி. Smiley

இவரைத் தெரியுமா?

//உதவி செய் உபத்திரம் செய்யாதே......

...........அன்புடன் xxxx//

அன்புடன் ...முனிவர்!

ஆத்மீகமான விடயங்களை விடுத்து...இலவீகமான விடயங்களில் ..இவர் எழுதும் கருத்துக்கள் மிகவும் ரசித்து வாசிக்கக் கூடியதாக இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனிவானவர், கருத்தானவர் , மனிதருள் மானிக்கமான முனிவர்....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான பதிலைக் கூறிய  புங்கையூரான், சுவி ஆகியோருக்கு பாரட்டுக்குக்கள், Smiley
பதில் கூறாமல்.... ஊக்கம் தந்த, மீராவுக்கு நன்றி. Smiley

இவரைத் தெரியுமா......

" தூர தேசம் வாழ்ந்தாலும் தாயே தமிழே உனை நான் மறவேன் ''

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயூரன்

/ இணுவையூர் மயூரன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலிறகால் வருடுவதுபோல் படிவுகள் இடும் மயூரன்....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியாக விடையளித்த.... மீரா, சுவி ஆகியோருக்கு  பாராட்டுக்கள். Smiley

இவரை கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரதி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரதி... யாழின் பகீரதி. கங்கைபோல் பிரவாகமெடுத்து ஓடி கரையெல்லாம் முட்டி மோதி  கலகலப்பாய்த் திரிபவர்....!  tw_blush:

(பகீரதி : கங்கையின் இன்னுமொரு பெயர்.)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான பதிலைக் கூறிய...  மீரா,  சுவி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். Smiley

இவரைத் தெரியுமா?

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மங்கைகளைத் தங்கைகளாகக் கருதும் புங்கை....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியாக விடையளித்த.... மீரா, சுவி, வந்தியத்தேவன் ஆகியோருக்கு... பாராட்டுக்கள். Smiley

இவரைத் தெரியுமா?

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

சரியாக விடையளித்த.... மீரா, சுவி, வந்தியத்தேவன் ஆகியோருக்கு... பாராட்டுக்கள். Smiley

இவரைத் தெரியுமா?

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

யாழ் களத்தின் அன்புக்கும், பெருமதிப்புக்கும் உரிய ஆஸ்தான வித்துவான் இசைக்கலைஞன் அவர்கள்!

தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகளால் கொஞ்சம் நொந்து போயிருப்பார் என்று நினைக்கிறேன்!

மதுவை வெல்ல யாரால் தான் முடியும்.இசை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆம் இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்துக் கணிப்புகளையும் நம்பாதே அதுவும் ஏமாற்றும்....! இசைக்கலைஞன்....!  tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/5/2016 at 5:47 AM, தமிழ் சிறி said:

 

இவரைத் தெரியுமா?

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

நன்றி சிறி

என்னையும் தேடலுக்குள் கொண்டு வந்ததற்கும் நேரத்துக்கும்..

தமிழரின் இயலாமையை தலைவிதியை  நோகும் எண்ணப்பாடே இந்த வரிகள்.

 

On 9/5/2016 at 6:30 AM, புங்கையூரன் said:

விசுகர்...!

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????

 

முதல் அடிவாங்கிய கன்னத்தைக் காட்டுறது...!

நீங்கள் திருப்பியடிக்காத வரையில்...அதுவும் அகிம்சையே!

சுருக்கமாக சொல்லலாம் அண்ணா

பிரபாகரன் என் தலைவன்...

On 9/5/2016 at 6:24 AM, nunavilan said:

விசுகு அண்ணா.

நன்றி  தம்பி  நுணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான பதிலைக் கூறிய..... புங்கையூரன், மீற, சுவி ஆகியோருக்கும், கருத்துக்களை பகிர்ந்த விசுகருக்கும் நன்றி. Smiley

இவரைத் தெரியுமா?

I dont hate anyland.....But Ilove my motherland

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

சரியான பதிலைக் கூறிய..... புங்கையூரன், மீற, சுவி ஆகியோருக்கும், கருத்துக்களை பகிர்ந்த விசுகருக்கும் நன்றி. Smiley

இவரைத் தெரியுமா?

I dont hate anyland.....But Ilove my motherland

இவருக்குத் தமிழ் படிப்பித்ததை எவ்வாறு மறக்க முடியும்?

இவரது செல்லத்தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்!

மீண்டும் வர வேண்டும்!

'குண்டன்'  தம்பி!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புங்கையூரான்,
குண்டனின், கையெழுத்தும் இது தானா....
இதே... கையெழுத்துடன் மருதங்கேணியும் உள்ளார்.  
இருவரின் கையெழுத்தும் ஒன்று என்ற படியால்... உங்களது பதிலுக்கு பாராட்டுக்கள். Smiley

இவரை தெரியுமா....

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!!!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.