Jump to content

"சிஸ்டர் ஐ லவ் யூ"


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

"ஒரு பேஷண்ட் நர்ஸை லவ் பண்ணுறாரு. அவரு நர்ஸ் கிட்டே எப்படி ப்ரபோஸ் பண்ணுவாரு?"

"சிஸ்டர் ஐ லவ் யூ"

- இது எஸ்.எம்.எஸ்.களிலும், மேடை நாடகங்களிலும் பரிமாறிக் கொள்ளப்படும் ஒரு ஜோக். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு துரதிருஷ்டவசமான நிலை நான் பத்தாம் வகுப்பு படித்தபோது எனக்கு ஏற்பட்டது.

பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்த்தாலே போதும், பசங்களின் உள்ளங்கள் பற்றிக் கொள்ளும். கயல் விழியாள். கொடி இடையாள். தாவணித் தென்றல். என் வகுப்பில் இருந்த 48 பேரில் குறைந்தபட்சம் 48 பேராவது அவளைக் காதலித்திருப்பார்கள். செம காம்பெடிஷன். வேறு பிகரை டாவடித்துக் கொண்டிருந்தவர்கள் கூட ஒரு கவுரவத்துக்கு இவளை காதலித்தார்கள்.

என் நண்பன் செந்திலும் (இவனால் தான் நான் குட்டிச்சுவரானேன்) நானும் இவளை அசுரத்தனமாக காதலித்தோம். அவன் கொஞ்சம் வைல்டாகவும், நான் கொஞ்சம் மைல்டாகவும் மூவ் செய்துக் கொண்டிருந்தோம். செந்தில் அவளை வேகமாக சைக்கிளில் பாலோ செய்வது, அவள் எதிரில் பெரிய ரவுடி மாதிரி முரட்டுத் தனமாக நடந்துகொள்வது என்று ஒரு ரூட்டில் போய்க் கொண்டிருந்தான். நானோ அவள் ட்யூஷனுக்கு சேர்ந்த இடத்திலேயே நல்ல பையன் மாதிரி சேர்ந்து பட்டை எல்லாம் அடித்துக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கவர முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

இருந்தும் நாங்கள் இரண்டு பேருமே அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. அவளுடன் பேசினாலே போதும், மடக்கி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தோம். பேசுவதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். எங்களை மாதிரியே வகுப்பு நண்பர்களும் (எதிரிகளும்) ஒவ்வொரு ரூட்டில் அவரவர் மூளை அளவுக்கு ஏத்தமாதிரியான வழிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் ஆச்சாரமான அய்யங்காராத்துப் பொண்ணு என்பதால் அவளை நெருங்கவே எல்லோருக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது.

பாழாய்ப்போன ஒரு நாளில் கிளாஸ் முடிந்தது. சைக்கிள் ஸ்டேண்டில் சைக்கிள் எடுக்க நானும், செந்திலும் போனோம். செந்திலுக்கு சைக்கிள் இல்லை. என் சைக்கிளை ஓசி ரவுண்டு வாங்கி ஸ்டைலாக ஓட்டுவான். என் சைக்கிள் பானு சைக்கிளின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுவே எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சைக்கிளை எடுக்கும்போது செந்திலின் குரங்குமூளை உள்ளுக்குள் ஏதோ வேகமாக செயல்படத் தொடங்கியது. என் சைக்கிள் கீயை வாங்கியவன் சைக்கிளை எடுக்காமல் பக்கத்திலிருந்த பானுவின் சைக்கிள் கேரியர் மேல் உட்கார்ந்துக் கொண்டான்.

"மச்சான் கெளம்புடா. செயிண்ட் தாமஸ் ஸ்கூல் விட்டுட்டு இருப்பாங்க. பிகர்ங்க எல்லாம் நம்பளை பாக்காம ஏங்கிப் போயிருக்கும். டைம் ஆவுது" என்றேன்.

"இருடா மாமு. பானு வந்திருவா. வந்து சைக்கிளை எடுக்க முடியாம என் கிட்டே வந்து "எஸ்க்யூஸ் மீ. இது என் சைக்கிள்னு" சொல்வா. என்கிட்டே பேசிட்டாலே போதும். அவளை எப்படியாவது பிக்கப் பண்ணிடுவேன்" என்றான் செந்தில்.

எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. இவனுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி ஐடியா எல்லாம் தோன்றுகிறது? நாம வேஸ்ட்டு. எப்படியோ இவன் தான் பானுவை மடக்கப் போகிறான் என்று நினைத்துக் கொண்டேன். இரண்டு நிமிடங்கள் கழிந்தது. செந்தில் மீதிருந்த கோபத்தால் எதுவும் பேசாமல் அமைதி காத்தேன். அவனும் ஏதோ திட்டத்தை யோசித்துக் கொண்டே (அல்லது யோசிப்பது மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டே) எதுவும் பேசாமல் இருந்தான்.

தூரத்தில் பானு. அன்ன நடை. மின்னல் இடை. மயில் மாதிரி ஒயிலாக வந்தாள். அவளை தூரத்தில் பார்க்கும்போது என் உள்ளத்தில் காதல் பொங்கும். ஏனோ தெரியவில்லை, அவள் அருகில் வந்தாலே "தட தட"வென்று சரக்கு ரயில் மாதிரி சத்தம் போட்டு கன்ப்யூஸ் ஆகிவிடும்.

பானு அருகில் வந்ததுமே சட்டென்று என் சைக்கிளில் செயினை மாட்டுவது போல நடித்து சட்டென்று குனிந்துக் கொண்டேன். செந்திலோ அவள் சைக்கிள் கேரியரில் வசதியாக அமர்ந்துக் கொண்டு கையிலிருந்த கைடை எடுத்து படிக்கிற பையன் மாதிரி ரொம்ப உன்னிப்பாக படிக்க ஆரம்பித்து விட்டான். பானு என் அருகில் வந்து நின்றாள். அவள் சைக்கிளைப் பார்த்தாள். சைக்கிளில் செந்தில் ஓரக்கண்ணால் அவளது "எக்ஸ்கியூஸ் மீ"க்காக காத்திருந்தான். மெதுவாக என்னைப் பார்த்தாள். அவள் கண்களை ஏறெடுத்துப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு (பயந்துக் கொண்டு) சைக்கிள் செயினை மாட்டி விடுவதில் மும்முரமாக இருந்தேன்.

30 நொடி கடந்தது. எதுவுமே நடக்கவில்லை. திரும்பிப் பார்த்தால் பானுவைக் காணோம். "மச்சான் என்னடா ஆச்சி?" என்றேன். "ஏதாவது கிளாஸ் ரூமிலே மறந்து வெச்சிட்டிருப்பா. போயி எடுத்துக்கிட்டு வருவா, டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு" என்றான். சொன்னவன் என் முகத்தைப் பார்க்கும் போது பீதி அடைந்துப் போயிருந்தேன். காரணம் தூரத்தில் பானு, அவளுடன் பெரிய குண்டாந்தடியுடன் டிரில் மாஸ்டர் நடராஜன். நடராஜன் அடித்தார் என்றால் ஒருவாரத்துக்கு அடிபட்ட இடத்தில் மரணவலி இருக்கும். பார்ப்பதற்கு சாமி விக்ரம் மாதிரி இருப்பார்.

"என்னலே... பொண்ணுங்க கிட்டே வம்பு செய்யறீளா?" என்று கேட்டுக் கொண்டே வந்தவர் எங்களது எந்த விளக்கத்தையும் கேட்க விரும்பாதவர் போல குண்டாந்தடியை எங்கள் மீது அதிரடியாக பிரயோகிக்கத் தொடங்கினார். "சார் சைக்கிள் செயின் கயட்டிக்கிச்சு" என்ற என் விளக்கம் அவரிடம் எடுபடவில்லை. என்னைவிட செந்திலுக்கு தான் செம அடி. எங்களை மாட்டி விட்டத் திருப்தியுடன் "களுக்"கென்று சிரித்துக் கொண்டே பானு சைக்கிளை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள். நடராஜன் மாஸ்டரிடம் கடுமையான எச்சரிக்கையைப் பெற்றுக் கொண்டு அடிபட்ட இடத்தில் செம வலியுடன் (உள்ளத்தில் இருந்த வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது) நானும், செந்திலும் நொந்துப் போய் நடந்தோம்.

"சாரி மாமு. என்னால் நீயும் அசிங்கப் பட்டுட்டே. அவ இவ்ளோ பெரிய பஜாரியா இருப்பான்னு நான் நெனைக்கலே. சே அவளைப் போயி லவ் பண்ணோம் பாரு. இனிமே அவளை நெனைச்சிக்கூட பாக்கக் கூடாதுடா" என்றான் செந்தில்.

அடிபட்ட வலி மறைந்து உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கத் தொடங்கியது. அப்பாடா இனிமே இவன் நம்ம ரூட்டுக்கு வரமாட்டான். காம்பெடிஷன்லே ஒண்ணு குறைஞ்சது என்று நினைத்துக் கொண்டேன். வேகவேகமாக என் மூளை கணக்குப் போட்டது. இந்த சம்பவத்தையே காரணமாக வைத்துக் கொண்டு பானுவிட மன்னிப்பு கேட்கிற சாக்கில் அவளிடம் பேசிவிடலாம் என முடிவு செய்தேன். "பரவால்லடா மச்சான். ப்ரெண்டுக்காக தானே அடிவாங்கினேன். எனக்கு அவசர வேளை இருக்கு" என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டு செந்திலிடமிருந்து எஸ்கேப்பாகி வேகவேகமாக சைக்கிளை மிதித்தேன்.

நேராக என் சைக்கிள் சென்றது என்னுடைய இன்னொரு உயிர்த்தோழனான மா.ப.ஓ.ப சரவணன் வீட்டில். மா.ப.ஒ.ப என்பது மாட்டுப் பல்லா, ஓட்டைப் பல்லா என்பதின் சுருக்கம். ஒரு அடிதடியில் பல் ஓட்டை ஆகிவிட்டதால் சரவணனுக்கு இந்த செல்லப் பெயரைச் சூட்டியிருந்தோம். சரவணன் உஷா என்றொருப் பெண்ணை டாவடித்துக் கொண்டிருந்தான். உஷாவை போய் எப்படித்தான் காதலிக்கிறானோ என்று நான் பலமுறை அதிசயித்ததுண்டு. ம்ம்ம்... காதலுக்கு கண்ணில்லை. அவன் காதலுக்கு உதவுவதாக நான் வாக்களித்திருந்தேன். அதுமாதிரியே என் காதலுக்கு(?) உதவுவதாக அவனும் வாக்களித்திருந்தான்.

நடந்த விஷயங்களை அவனிடம் சுருக்கமாகத் தெரிவித்து என்னுடைய டெக்னிக்கைச் சொன்னேன். அதாவது ட்யூஷன் முடிந்து ஆறு மணிக்கு பானு வீட்டுக்குத் திரும்புவாள். வழியில் அவளை மடக்கி நடந்த சம்பவத்துக்காக செந்தில் சார்பில் மன்னிப்பு கேட்டு "சிம்பதி வேவ்" கிரியேட் செய்து அவளுடன் பழகும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்வதே என் திட்டம். துணைக்கு மா.ப.ஒ.ப வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அவனும் அவன் வேலை வெட்டியை எல்லாம் விட்டு விட்டு என்னுடன் வர பெரிய மனசுடன் சம்மதித்தான்.

சுமார் 5.50 மணியளவில் மடிப்பாக்கம் கூட்டுரோடுக்கு முன்னாலிருந்த ஒரு சின்னத் தெருவில் என் BSA SLR சைக்கிளுடன் நின்றுக் கொண்டிருந்தோம். அவள் வந்ததுமே என்ன பேச வேண்டும் என்று மா.ப.ஒ.ப.வுடன் ஒத்திகை செய்திருந்தேன். அதாவது பின்வருமாறு நடக்கும் என்று நாங்களே முடிவு செய்திருந்தோம்.

அவள் சைக்கிளில் வருவாள். வழியை மறித்து என் சைக்கிள் நிற்கும். சைக்கிளுக்கு முன்னால் சோகமாக நான் நிற்பேன். மா.ப.ஒ.ப. அவள் என் அருகில் வந்து சைக்கிளை நிறுத்தியவுடன் டீசண்டாக விலகிச் சென்று விடுவான்.

"ஹலோ ஒரு நிமிஷம் நான் உங்கிட்டே பேசணும்" - நான்

"என்ன சொல்லு?" - அவள்

"சாரி. என் நண்பன் அநாகரிகமாக நடந்துக் கொண்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" - நான்

"பரவாயில்லை. அவன் இன்டீசண்டா பிகேவ் பண்ணாலும் நீ இவ்வளோ டீசண்டா நடந்துக்கறியே. தேங்க்ஸ்" - அவள்

- இப்படியாக ஸ்டார்ட் செய்து டாப் கியரில் எங்கள் காதல் பறக்கும் என்பது எங்கள் ஏற்பாடு.

சுமார் 6.00 மணிக்கு தூரத்தில் சைக்கிள் தெரிகிறது. சைக்கிளில் என் பானு. பத்தாண்டுக்கு முன்னால் அந்தப் பகுதியில் ஜனநடமாட்டம் ரொம்பவும் அபூர்வம். எப்போதாவது யாராவது ஓரிருவர் சைக்கிளில் செல்வார்கள். மாலை நேரங்களில் அதுகூட இருக்காது.

என் சைக்கிளைப் பார்த்தவுடனேயே ஸ்லைட்டாக ஸ்லோ செய்தாள். தலையைக் குனிந்து கொண்டே அவளை நிறுத்துமாறு கையால் சைகை செய்தேன். ஒத்திகைப் பார்த்த மாதிரியாக இல்லாமல் "திடுக்"கென்று மா.ப.ஒ.ப. ஓட்டம் பிடித்தான். நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அய்யோ.. என் வாய் குழற ஆரம்பித்தது.

"ஓஓஒ....ரு..... நிம்மிஷம்..."

".......??????????????"

"சாரி சிஸ்டர்....... என் ப்ரெண்டுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்"

- சொல்லி முடித்தவுடன் தான் தெரிந்தது. பதட்டத்தில் அவளை சிஸ்டர் என்று சொல்லிவிட்டேன் என்பது. சே.... யானை தன் தலையில தானே மண்ணைப் போட்டுக் கொண்டது மாதிரி ஆகிவிட்டதே? தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த மா.ப.ஒ.ப. காதில் என்னுடைய "சிஸ்டர்" விளிப்பு கேட்டு விட்டது போல. ரிஸ்க் எதுவும் இல்லை என்று நினைத்தவன் திரும்பி வந்தான்.

"பரவாயில்லை கிச்சு. செந்தில் கூட சேராதே. உன்னை மாதிரி நல்ல பையனை கூட அவன் கெடுத்துடுவான்" - சொல்லி விட்டு பறந்து விட்டாள் என் திடீர் தங்கை. வேதனையுடன் மா.ப.ஒ.ப.வை பார்த்தேன். அவன் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

"மச்சான் தெரியாம சிஸ்டர்னு சொல்லிட்டேன். இனிமே அவளை என்னால லவ் பண்ண முடியாது. வெறும் ப்ரெண்ட்ஷிப் மட்டும் தான். இருந்தாலும் இங்கே நடந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேடா. மானம் போயிடும். பிராமிஸ் பண்ணு" என்றேன். ப்ராமிஸ் செய்தான்.

இருப்பினும் மறுநாள் வகுப்புக்குச் சென்றபோது எல்லா வகுப்புத் தோழர்களும் என்னை "மச்சான்... மச்சான்" என்று பாசமுடன் அழைத்தபோதே தெரிந்து விட்டது. மா.ப.ஓ.ப. மேட்டரை அவிழ்த்து விட்டு விட்டான் என்பது. அதுவரை என்னை "பிரதர்" என்று அழைத்த குள்ள சேகர் கூட "மச்சான்" என்று அழைத்தது தான் மனதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

அட்டகாசமாக "ஓபனிங்" செய்தும் கூட இந்தக் காதலைப் பொறுத்தவரை "பினிஷிங்" சொதப்பி விட்டாலும் என்னுடைய எதிர்கால காதல்களுக்கும், பிகர்களை அணுகவேண்டிய முறைக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.

(http://vavaasangam2.blogspot.com/2007/01/blog-post.html)

Posted

கனநாளைக்குப் பிறகு வாசிச்சு சிரிக்க வைச்ச கதை..நன்றி லக்கிலுக். நீங்கள் எழுதினதா? அறிவுமதியின் நட்புக்காலம் கவிதை ஒன்றுதான் ஞாபகத்துக்கு வந்தது :

" நண்பர்கள் என்றவர்கள் கூட காதலர்களாயிருக்கிறார்கள்

எனக்குத்தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்ளே

கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்

ஆனாலும் சொல்கிறேன்

நட்பு என்பது நம்மைப்போல என்றும்

நட்பாகவே இருப்பதுதான்"

Posted

லக்கிலுக் உங்கள் சொந்த கதை சோகக்கதை நல்லா இருக்கு

நல்ல நகைச்சுவைபட எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் சொந்தக்கதை அழகு லக்கிலுக் சார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி சிநேகிதி, ரசிகை, கருப்பி.....

பெண்கள் மட்டும் தான் இந்தப் பதிவை படித்திருக்கிறீர்களா?

சிநேகிதி இது நமக்கு நேர்ந்த அனுபவம் தான்.... சீரியஸாக எழுதியிருக்கிறேன்.....

Posted

லக்கி நல்ல விறுவிறுப்பாகா எழுதுகிறீர்கள், தமிழ் சினிமாவுக்கு திரைக்கதை எழுதலாமே?

உப்பிடி கனக்க பதின்ம வயதில எல்லாருக்கும் நடந்திருக்கு ஆனா இப்ப யாருக்கு இப்படி 'டிடேயிலா' எல்லாம் நாபகத்தில இருக்கு?

உந்த 'ஸிஸ்ட்டர்' மாரை காதலிக்கிறது கனக்க நான் பாத்திருக்கிறன்.அப்போது எனக்கு அது ஆச்சரியமன , ஏமாற்றும் விடயமாக இருந்தது, இப்போது இதுவும் ஒரு டெக்னிக் எண்டு விளங்குது.எப்படி உங்களுக்கு எல்லாம் நாபகத்தில இருக்கு? :icon_idea::D

Posted

நன்னாயிருக்கு உந்த சோக கதை... இப்பிடி தோத்து கிட்டியே மச்சி..... சைட் அடிக்கிறது ..கலை மாதிரி மாமு.... உந்த பர்சனாலிட்டி எக்ஸ்ட்ரா எக்ஸ்டாரா விட .....சில பேர் பக்காவாக டெக்னிக்காவாக செய்வாங்க... மச்சக்கார ஆளுங்க

Posted

இப்படி சோகம் நடந்ததா லக்கி உங்கள் வாழ்க்கையில் ???

நன்றாக இருந்தது உங்கள் சோகக்கதை வாழ்த்துக்கள்[சோகத்துக்கல்ல எழுதப்பட்ட முறைக்கு]

Posted

அதுசரி லக்கி, பானுவை கடைசியில் கரெக்ட் பண்ணினது ஆராம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாகவும் நகைச்சுவையாகவும் உங்களின் சோகக் காதல் கதையினை எழுதியுள்ளீர்கள் லக்கிலுக்கு. சிரிப்புத் தாங்க முடியவில்லை. பாராட்டுக்கள். இப்பொழுது பானு என்ன செய்து கொண்டிருக்கிறார்?. செந்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? உங்களது மற்றைய காதல் அனுபவங்களைச் சொல்லுங்கள் லக்கிலுக்கு.

Posted

நன்றாகவும் நகைச்சுவையாகவும் உங்களின் சோகக் காதல் கதையினை எழுதியுள்ளீர்கள் லக்கிலுக்கு. சிரிப்புத் தாங்க முடியவில்லை. பாராட்டுக்கள். இப்பொழுது பானு என்ன செய்து கொண்டிருக்கிறார்?. செந்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? உங்களது மற்றைய காதல் அனுபவங்களைச் சொல்லுங்கள் லக்கிலுக்கு.
வணக்கம் லக்கி அவர்களே

அருமையிலும் அருமை.நிலவு தூங்கினாலும் அந்த நினைவுதூங்கிடாது தானே.ஆனால் இந்த மடிப்பாக்கம் என்னைபொறுத்தவரையில் மறக்கமுடியாதது.நியூ இந்தியாக்கொலனி,புழுதிவாக்கம

Posted

இளமை கால அனுபவத்தை படிக்க சுவாரசியமாக எழுதியிருக்கிறீங்க. தொடர்ந்து எழுதுங்க.

Posted

அடக்க முடியல சிரிப்பு..அவிழ்ந்து விழுந்துது...

என்னமா...கதை...யப்பா....எனக்கு..இப;

Posted

vanni mainthan,

என்ன ஆச்சு? உங்க எழுத்துக்கள் பெட்டிகளாக தெரிகின்றதே? கீமான் உபயோகித்து தானே எழுதுறீங்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

லக்கி..இல்லாத ஆழா போயிட்டீங்களே...லக்கி....பாவம்ய

  • 2 weeks later...
Posted

நல்ல கதை, ஜமாய்ச்சிட்டிங்க போங்க.

வாய்விட்டுச் சிரிச்சேன் பழைய நினைவுகளை மீட்டேன்.

ஜெமக் கட்டை சார் நீங்க.

சிஸ்டர் பானுவுக்கும் உங்களுக்கும் நன்றி.

Posted

உங்கள் சொந்தக் கதை நன்றாக இருந்தது. உங்களுக்காக நானும் வருத்தப்படுகிறேன். ஆனால் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கதையைப் படித்தவுடன் நீங்கள் மென்மையான மனம் கொண்டவர் போல் தெரிகிறது.

சரியா??

Posted

லக்கிலுக் உங்கள் அனுபவத்தை வாசிக்க வாசிக்க சிரிப்பு வந்தது. நல்ல நடை.....

Posted

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சிரிப்பு தாங்க முடியவில்லை லக்கிலுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.