Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபாச படம் பார்ப்பவருக்கு 4 லட்சம் சம்பளம்’: அதிரடி விளம்பரம் வெளியிட்ட நிறுவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் நாட்டில் ஆபாசப்படம் பார்ப்பவருக்கு 4 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என மதுபான நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை வெளியிட்டுள்ளது.

டென்மார்க்கில் உள்ள Aarhus நகரில் Hornsleth என்ற மது அருந்தும் விடுதி அமைந்துள்ளது.

நகரில் மிகவும் பிரபலமான இந்த மது அருந்தும் விடுதி அண்மையில் ஒரு அதிரடி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘நாங்கள் புதிதாக ஆண் அல்லது ஊழியர் ஒருவரை தெரிவு செய்ய உள்ளோம். அவர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

முக்கியமான தகுதியாக வாரம் ஒன்றிற்கு 20 மணி நேரம் அவர் தொடர்ந்து ஆபாசப்படங்களை பார்க்க வேண்டும்.

இதற்காக அவருக்கு ஒரு தனி கணிணி, ஆபாசப்படங்கள் அடங்கிய டி.வி.டிகள்(DVD) மற்றும் ஒரு தனி அறை ஒதுக்கப்படும்.

நாங்கள் எதிர்ப்பார்ப்பது போல் அவர் ஆபாசப்படங்களை பார்த்து தெரிவானால், அவருக்கு 2,350 பவுண்ட்(4,88,661 இலங்கை ரூபாய்) சம்பளமாக வழங்கப்படும்’ என அதிரடி விளம்பரம் வெளியிட்டுள்ளது.

நூதனமான, வினோதமான, அதே சமயம் எளிமையான இந்த விளம்பரத்தை பார்த்து தற்போது ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இது குறித்து மது விடுதியின் உரிமையாளரான Kristianvon Hornsleth என்பவர் பேசியபோது, ‘வார இறுதி நாட்களில் எங்களது மது விடுதிக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

இவர்களில் அதிகளவில் காதலர்களும் இருப்பதால் அவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு சரியான இசையை தெரிவு செய்யவே இந்த விளம்பரத்தை தெரிவு செய்துள்ளோம்.

அதாவது, ஆபாசப்படங்களில் வரும் பின்னணி இசையை ரசித்து அதுபோன்ற இசையை மது விடுதி முழுவதும் ஒலிப்பரப்பவே இந்த விளம்பரத்தை வெளியிட்டு புதிய ஊழியரை தெரிவு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://kathiravan.com/98901

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய Broadcast நிறுவனத்தில் மேற்பார்வை செய்யும்போது  video quality ஐ கணிக்கும் வேலைகளும் அடிக்கடி வரும். ஆபாசப்படங்களை பார்க்க எங்கள் கொம்பனியில் வேலை செய்தவர்களுக்கு அனுமதி இல்லை. அதனால் அவற்றின் தரத்தைக் கணிக்க ஒரு கொன்றாக்கரை வேலைக்கு அமர்த்தினோம். அவன் இரவு பத்து மணிக்குப் பிறகு வந்து படம் பார்ப்பான். அடுத்தநாள் ரிப்போர்ட் தருவான். உண்மையில் வேலை செய்தானோ இல்லையோ என்று சரி பிழை பார்க்கவும் முடியாத வேலை. அதை எண்ணி வருத்தப்பட்டிருக்கின்றேன்<_<

புளியங்குளம் சோதனை சாவடியில் கொழும்பில் இருந்து யாழ் செல்லும் பயணிகளின் இறுவட்டுகளை பரிசோதனை செய்யும் நிலையம் அமைந்து இருந்தது. அதில் சில சமயம் பெண்களும் பணிக்கு அமர்த்தபட்டிருப்பார்கள். சிலர் கலியாண இறுவட்டுகளுக்கு நடுவிலும் நீலப்படங்களை/காணோளிகளை பதித்து யாழ் கொண்டு செல்ல எத்தனிப்பார்கள். அவற்றை ஓடவிட்டு பார்த்து அனுப்பும் வேலையை பெண்களும் செய்து இருக்கிறார்கள்.

நீலப்படங்களை யாழுக்கு கொண்டு செல்லும் பயணிகளில் பலர் கைது செய்யப்பட்டு எச்சரிக்கும் இடத்துக்கு சென்று இருந்தேன் அவர்களில் பலர் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது கவலைக்குரிய விடயமாக அப்போது எனக்குபட்டது.

பிறிதொரு சந்தர்ப்பத்தில், தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்கும், பதிவு செய்து மீள கேட்கும் நிலையத்துக்கு சென்று இருந்தேன். அங்கும் பணியாளர்களில் பலர் பெண்கள். உரத்த ஒலிபெருக்கிகளில் விட்டே பதிவு செய்த தொலைபேசி உரையாடல்களை கேட்டு கொண்டு இருந்தார்கள். தொலைபேசி உரையாடல்களில் ஓட விட்டு கேட்க முடியாது. இடை நடுவே கூட தகவல் வழங்கிய/வழங்க கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன.

சிலசமயம் வெளி நாட்டில் இருக்கும் கணவனின் வன்னியில் இருக்கும் மனைவியின், காதலன் - காதலி, கள்ளக்காதல், அந்தரங்க பாலியல் உரையாடல்களை கூட வெட்கத்துடன் ஒலிபெருக்கியில் (speakers) இல் கேட்க வேண்டிய நிலையில் பெண்கள் உட்பட பலர் இருந்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஆபாசம் என்ற ஒன்றில்லை. எல்லாம் anatomy and physiology தான். எல்லாம் நாம் வளர்க்கும் பெருக்கும் அறிவு மற்றும் அது சார்ந்த பார்வையில தான் தங்கி இருக்குது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

ஆபாசத்தை விடவும்...மற்றவர்களின் அந்தரங்களுக்குள் ஊடுருவதே....மனத்துக்கு மிகவும் கடிமான விடயமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பாவில் தனிமனித சுதந்திரத்தை முக்கிய கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாட்டு இராஜாங்க நடவடிக்கைகளுக்கு பாதிப்பில்லாத உரையாடல்களை கூட பதிந்து வைக்க மறுக்கின்றார்கள். அப்படியிருக்கும் போது இங்கு ஒரு கருத்தாடல் தன்னிலை மீறி ஆபாச திரிக்குள் கொடி நாட்டி விட்டது. 
அவ்விடமிருந்து இவ்விடம் இன்னும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

எங்களுக்கு ஆபாசம் என்ற ஒன்றில்லை. எல்லாம் anatomy and physiology தான். எல்லாம் நாம் வளர்க்கும் பெருக்கும் அறிவு மற்றும் அது சார்ந்த பார்வையில தான் தங்கி இருக்குது. tw_blush:

இது புதுசா இருக்கே ஹாஹா 

ஒரு வெள்ளைகாரியை பார்க்க ஊர் ஊரா அலைந்து திரிய வேண்டிய கிடக்கிறது பாசிக்குடா, உல்லை என்ன வாழ்க்கை இது??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.