Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதனையும் சந்திக்க நாங்கள் தயார்: விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்.

Featured Replies

சிங்கள இராணுவம் எமது மக்களைப் படுகொலை செய்கிறது என்பதற்காக நாம் சிங்கள மக்களை படுகொலை செய்ய முடியாது. மாறாக சிங்கள இராணுவத்தையே தாக்க வேண்டும். அதனையும் திட்டமிட்டு சரியாகச் செய்ய வேண்டும். மக்கள் தாக்கப்படும் போது உடன் பதிலடியாக இராணுவத்தைப் புலிகள் மொக்குத்தனமாகத் தாக்க வெளிக்கிட்டிருந்தால் புலிகள் என்ற அமைப்பே இன்று இருந்திருக்காது.

மாவீரர் நாள் உரையில் தலைவர் உறுதியாகச் சொல்லிவிட்டார். தமிழீழத் தனியரே தீர்வென. போர் மூலமான தீர்வு இது. சொன்ன அடுத்தநாளே போரைத் தொடங்க முடியாது. இது போரிற்கான ஏற்பாடுகளைச் செய்யும் காலம். விரைவில் போர் வெடிக்கும்.

ஆனால், தற்போதைய அழிவுகளை விட இன்னும் அழிவுகள் போர்க் காலத்தில் எமது மக்களிற்கு ஏற்படும். எதிரி பேரிழப்பைச் சந்திக்கும்போது மக்களையே தாக்குவான். எல்லாவற்றையும் தாங்குவற்கு நாம் தயாராக வேண்டும்.

தற்போது நடைபெறும் படுகொலைகளைத் தடுக்க புலிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனச் இங்கு சொல்லும் சிலர், நாளை பெரும் போர் வெடித்த பின்னர் மக்களிற்கு இழப்புக்கள் ஏற்பட்டால் புலிகள் போரைத் தொடங்கியதால்தான் இழப்புக்கள் வருகின்றன என்றும் சொல்வார்.

இவர்களது நோக்கம் போராட்டம் மீது எமக்கு ஒரு சலிப்பை ஏற்படுத்தி எம்மை ஒதுங்க வைப்பதே.

இவர்களது விசமக் கருத்துக்களிற்கு பதிலளிப்பது மட்டும் எமது வேலையாக வைத்திருக்காமல் போராட்டத்திற்கான எமது பங்களிப்பை நாம் கட்டாயம் செய்தாக வேண்டும்.

களத்தில் ஆயிரமாயிரம் வீரர்கள் தாயகத்தின் விடியலுக்காக தமது உயிரைக் கொடுப்பதற்காக தயாராக இருக்கிறார்கள். அதை அவர்கள் தமது கடமையாக கருதுகிறார்கள். நாம் உயிரைக் கொடுக்க வேண்டாம். எமது உழைப்பிலிருந்து சிறு பகுதியைக் கொடுத்து எமது கடமையைச் செய்வோம்.

  • Replies 98
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக மின்னல்.

தமிழீழம் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் சிங்கள தேசம் விட்டு வைக்கவில்லை என்பது தான் உண்மை.

தமிழ் மக்கரே,

நீர் உமது அவயங்களைக் கொடுக்க ரெடியா நீர் உமது உயிரைக் கொடுக்க ரெடியா?

நீர் உமது சொகுசானா வாழ்க்கையைக் கொடுக்க ரெடியா? வாரும் வன்னிக்கு எடும் ஆயுத்ததை.உம்மை ஏக பிரதி நிதியாகாக்குகிறோம்.ஓரு உயிரும் சேதராமில்லாம சீப்பா செய்து தருவியள் எண்டா உங்களுக்கு தர நாங்க ரெடி நீங்க ரெடியா? கெதியா உந்த நோர்த் கரொலினான் fஒர் பீஸுக்குள்ளால சொல்லி அனுப்புங்கோ.மொத்தக் கொந்திரததையும் உங்களிட்டத் தாறம்.

உமக்கு கொன்ந்திராத்துக்கு எவ்வளவு பணம் வேணும் எண்டு சொல்லும் தாறம். நீர் ரெடியா?செய்து முடிச்சுப் போட்டு நீர் உயிரோட இருந்தத்தானே. நாங்கள் வந்து பிறகு அனுபவிப்பம்.ஒகேயா?

'சா' மாதனம் அண்ணை மகிந்தரிட்ட அந்தப் பெரிய உலக சமாதானத்தின் காவலன் நோர்வேயின் தலமையில உலகனாடுகளின் தலைவன் அமெரிக்காவின் அனுசரணையோட ,தூதுவர்கள் சோல்கையும் முதல் பவர் வரை அஞ்சு வருசமா பேசுறம் பேசுறம் ஒண்டும் நடக்கேயில்லை.இப்ப நீங்கள் புதிய அணுகுமுறை இடைக்காலத் தீர்வு எண்டு கதை விடுறியள்.ஒருக்கா மகிந்தரிட்ட உங்கட ஆக்களுக்குள்ளால அல்லது நீங்களே போய்ப்பேசிப் பார்த்து ஒரு தீர்வைப் பெறுங்கோவன்.உங்களுக்கும் ஒரு கொந்திறாததைத் தாறம்.ஏன் புலிகளுக்கு நாங்கள் கொந்திறாத்தைக் கொடுப்பான்.உங்களை ஏக பிரதி நிதி யாக்கிறம். நீங்கள் ரெடியா?மேலும் விபரம் உங்களிட்டக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போயிட்டுது. நீங்கள் ஒண்டையும் விபரமாச் சொல்லாம அடிக்கடி ஒழிச்சுப் பிடிச்சு விளயாடுறியள். நீங்கள் யார் எண்டு இனங்காட்டினா உங்கட்ட கொந்திராத்தைத் தர வசதியா இருக்கும்.இல்லாட்டி நேரடியாவே அந்த ஈழபதீஸ்வரினிட்ட பொறுப்பைக் கொடுக்கிறதோ?பெரிய அளவில கொள்ளை அடிக்க.

மேலும் இங்க நிண்டு கன காலமாக் குப்பை கொட்டும் வெட்க்கங் கெட்ட மானங்கெட்டதுகளுக்கு கொந்திராதைக் கொடுக்கப் பயமாக்கிடக்கு.தாங்கள் ஒரு செக்கனுக்கு முதல் எழுதினது என்ன எண்டே தெரியாததுகள்.பிறகு கொந்திறத்து எண்டா என்ன எண்டு கேக்குங்கள்.ஒரு பென்சுக்கு லாயக்கற்றதுகளை விட அந்த ஈழபதீஸ்வரனிடமே கொந்திராத்தைக் கொடுக்கலாம். அந்த மனிசன் தனக்கு எண்டாலும் நாலு காசைச் சேர்க்கும்.

Edited by narathar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலிதுந்து கொண்டு கதைக்காமல் வாகரை போவோமா? நெடுக்ஸ் திருந்தமாட்டீரா? நான் கருத்து எழுதுவது குறைவு; ஆனால் எல்லாம் பார்ப்பேன். அங்கு காசு கட்டிப் பாஸ் எடுத்த எல்லோரும் புலிஎதிர்ப்பளர்களார்கள் என்றால் ..வெளிநாடுவந்த 3/4 வாசிப்பேர் புலிஎதிர்ப்பளர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அப்படியில்லை.நானும் காசுகட்டித்தான் வந்தனான்.நான் எப்போதும் தமிழீழத்தலைவனை ஆதரிப்பவன்.உங்களால் உதவாவிடினும் உபத்திரம் வேண்டாம்.ஆடுவித்த காசில் கைத்துப்பாக்கி வாங்கி ஆரம்பித்த போராட்டம் எறிகணை(ஆட்டுலரி) வரை கொண்டுவந்த தலைவருக்கு எப்போது அடுத்தகட்டத்துக்குப்போவது எப்படிப் போவது என்று தெரியும். நாங்கள் சொல்லவேண்டியதேவையில்லை. தினமும் போராளியின் இழப்பைவிட ஒவ்வரு பொதுமகனின் இழப்பை நாம் எவ்வளவு வேத்னையுடன் உள்வாங்குவதிவிடத் தலைவர் என்ன பாடுபடுவார் என என்னைப் போல் எத்தனையோபேர் அறிவர். போராளியின் இழப்பைவிட பொதுமகனின் இழப்பு தலைவரை எவ்வளவு வேதனையில் ஆழ்த்துகிறது எனத்தெதியும்.வெளிநாடு வந்து சுகமாக இருக்க வேண்டிய வயதில் இந்த சமாதானக் காலத்தில் தாயகம் போய் தன்னை போராளியாக்கியவர்ளும் உண்டு. பலர் ஆறியாதது இது. எனது நண்பனும் ஒருவன். தலைவருக்குத் தெரியும் என்ன செய்வதென்று.கை கொடுக்க மக்கள் படையுண்டு நீங்கள் உங்களாள் ஆன பங்களிப்பைச் செய்யுங்கள் இல்லையேல் இடையூறு இல்லாமல் பேசாமல் இருங்கள்....

தமிழினத்தின் தாகம் தமிழீழத் தாயகம்

Edited by kuloth

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை பாருங்கோ..

உதில சும்மா கருத்து எழுதி கொண்டிருக்காமல்..

நானும் நெடுக்கால போவானும் போராட்டத்தை புலிகளிடம் ஒப்படைச்சிருக்கிறம். அதுவும் சும்மா இல்லை. முற்று முழுதா ஒப்படைச்சிருக்கிறம். ஏனெண்டால் நாங்களா போராடுறதில எங்களுக்கு சரியான சிக்கல்கள். முதலாவது போராடினால் சில வேளை சாக வேண்டி வருமாம்.

சாகிறதுக்கு வேறை வேலையில்லையே.. அதுவும் லண்டனுக்கு வந்து அனுபவிக்கிற வயசில.. எண்ட படியாலை போராட்டத்தை புலிகளிடம் பாரம் குடுக்கிறம். அவை சாகிறதைப் பற்றி கவலையில்லை. ஆனால் நாங்கள் கேட்கிற கேள்வியளுக்கு பதில் சொல்லிட்டு சாக வேணும். ஏனெண்டால் பொறுப்பை குடுத்தவர்கள் எண்ட முறையில எங்களுக்கு அந்த உரிமை இருக்குது.

மற்றது போராடுறதெண்டால் வன்னியிலயும் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் காடுகளிலும் சண்டை பிடிக்க வேணுமாம். ஆனா அங்கை பெரிசா வசதியள் இல்லை. முக்கியமா இணைய வசதியள் இல்லை. நாள் முழுதும் இணையத்தில கிடக்கிற எங்களுக்கு இது சரிப்பட்டு வராது. அதனாலை போராட்டத்தை புலிகளிடம் ஒப்படைச்சிருக்கிறம். அவை அதை சரியா செய்து முடிக்கவேணும். இல்லையெண்டால் நடக்கிறது வேறை.

உப்பிடி பல காரணங்களாலை நாங்கள் போராட்டத்தை புலிகளிடம் ஒப்படைச்சிட்டு ஓடியந்திட்டம்.

இதை வாசித்து விட்டு நாங்கள் ஏதோ போராட்டத்தை தொடங்கிவிட்டு பிறகு புலிகளிடம் ஒப்படைச்சு விட்டு வந்து விட்டதாக நீங்கள் நினைக்க கூடாது. நாங்கள் ஊரில சும்மா சுத்திக் கொண்டிருந்தனாங்கள். இயக்கம் பிரச்சாரம் வைக்குதாம் எண்டால் ஓடி ஒளிஞ்சிடுவம்.

பிறகு லண்டனுக்கு வந்த பிறகு தான் போராட்டத்தை புலிகளிடம் ஒப்படைச்சனாங்கள்.

எண்டதாலை இதில இனி கருத்து எழுதுறவை நீங்களும் போராட்டத்தை புலிகளிடம் பொறுப்பு குடுக்கிறதா சொல்லி செல்லுங்கோ.. ஏனெண்டால் பொறுப்பை ஒப்படைச்ச நாங்கள் எல்லாரும் சேர்ந்து கேள்வி கேட்டால்தான் புலிகளும் எங்களிடம் வாங்கின பொறுப்பை சரியா செய்வினம்.

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல்..தமிழீழத்தை சாம்பல் மேட்டில் பிறப்பிக்க முடியும் என்றால் தமிழ் மக்கள் பீனிக்ஸ் பறவைகளாய் இருக்க வேண்டும். பாவம் மக்கள் மனிதர்களாக எல்லோ இருக்கின்றனர்.

வடக்கில்..யாழில்..

1. போதிய உணவு இல்லை

2. போதிய மருத்துவ வசதிகள் இல்லை

3. சிக்குன் குனியா போன்ற நோய்ப்பரவல்களைத் தடுக்கக் கூடிய நடவடிக்கைகள் இல்லை

4.தினம் தினம் ஆக்கள் காணாமல் போகின்றனர்.

5. அடையாளம் தெரியாதவர்களால் (அரசு சார்பு ஒட்டுக்குழுகள்..படைப் புலனாய்வுக்குழுக்கள்..மற்றும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப புலிகளை என்ன செய்ய சொல்லுறீர் ஐயா..

மக்களை காப்பாற்ற அவர்கள் என்ன செய்ய வேண்டும்.. எண்டு நினைக்கிறீர்...

பொறுப்பை ஒப்படைச்சனீர் தானே.. உமக்கு சொல்ல உரிமை இருக்கு தானே..

சரி. குடுக்கிற காசை (குடுத்தால்) அடுத்த மாசத்தில இருந்து இரட்டிப்பாக குடுக்க றெடியோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் நீர் சொல்வது ஒன்றில் முரண்படுகிறேன். நீர் சொல்வதுபோல் அறிக்கை விடுவதில் தவறேதுமில்லை. உலக அரங்கில் எமது குரல் ஓங்கி ஒலிக்கவேண்டுமாயின் அவை அவசியம்.

ஆனால் அறிக்கைகளில் வெளிவிடப்படும் கூற்றுக்களை செயலில் நிறைவேற்றிக்காட்டவேண்டும் (உதாரணமாக ஒருவாரத்தில் பாதை திறக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த கூற்று). அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் அறிக்கைகள் யாவும் சிறிது காலத்தினுள் ஒரு பொருட்டாக எடுக்கப்படாத நிலை தோன்றும். அதற்குப்பின் அறிக்கை விட்டென்ன விடாட்டியென்ன எல்லாம் ஒன்றுதானே?

நாரதர்,

புலம்பெயர்ந்தோர் களத்தில் போராடுபவர்கள் செய்வதில் இலட்சத்தில் ஒரு பங்கு பங்களிப்பாவது செய்கிறார்களா என்பது சந்தேகமே. ஆனால் களத்தில் ஒன்றாக நிற்கும் மக்கள் பற்றியே நான் இங்கு பேசுகிறேன். அவர்களுக்கு புலிகளை மட்டும்தானே நம்பியிருக்கிறார்கள். அவர்களை விட்டால் வேறு யார் பாதுகாப்பு கொடுப்பது? ஏதோ நாங்கள் இங்கு கருத்துக்கூறுவதால்தான் போராட்டம் நலினப்படுகிறது மலினப்படுகிறது என்று அங்கலாய்க்கிறீர். ஆனால் சாவை அன்றாடம் தரிசிக்கும் அந்தமக்களின் மனோபலம் நாளுக்குநாள் குன்றி வருவது உமக்குப் புலப்படவில்லையா? அவ்வாறு மனோபலம் குன்றுவது நான் இங்கு கருத்துச்சொல்வதை விட பல்லாயிரம் மடங்கு போராட்டத்தை நலினப்படுத்துமல்லவா?

யாழ் களத்தில் பலர் குப்பை கொட்டுவதாக தனது நெஞ்சில் குத்தி அழும் நாரதர் தானும் வந்த வேலையை மறந்து கூட்டத்தோட கூட்டமாக குப்பை கொட்டும் காட்சி இந்த புது வருடத்திலும் கண்கொள்ளா காட்சி.

சிங்கள படைகளின் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு தீர்வு யுத்தம் ஒன்றுதான் என்று சொல்லும் நாரதர் போன்றோர் இலுப்பங்கடவை விமான தாக்குதல் குறித்து சில யாழ் களத்து உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு கைவசம் எடுத்து விடக் கூடிய பதில் ஒன்றும் இல்லாததால் நான் தொடர்ந்து கூறிவரும் ' புதிய அரசியல் அணுகு முறை குறித்து ' தனது நையாண்டித்தனத்தை முதிர்ச்சி இல்லாத அரசியல் வேக்காடாக வெளிப்படுத்தி உள்ளார்.

வன்னியில் புலிகள் எதிர் நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று புதிய ஆளணிகளை படையில் இணைத்துக்கொள்ள மனிதவள பற்றாக்குறையாகும். வசதியான மேற்குலக நாடுகலில் புலம் பெயர்ந்து இருக்கும் 10 லட்சம் தமிழர்கள் புலிகளுக்கு புதிய ஆளணிக்கு உதவ ஏன் முன்வரவில்லை?

இங்கு கருத்து எழுதும் நாரதர், தூயவன், ஈழவன், ஜனார்தனன் போன்றோர் வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இங்கிருந்து திரும்பிப்போய் தமிழீழத்தை மீட்கப் போராடவேண்டும் என்று கருத்து எழுதாது இருப்பது ஏன்? உங்களது விசைப்பலகையில் நான் குறிப்பிட்ட வார்த்தைகளை சும்மாவேணும் ஒரு முறை குத்திப்பாருங்கள் தெரியும் உங்களுக்கே உங்கள் விரல்கள் நடுங்குவதை உணர்வீர்கள்.

உண்மையில் நேர்மையாக ஈழப்போராட்டத்தை நேசிக்கின்றீர்கள் என்றால் புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்பிப்போய் போராடுகள் என்று உங்களால் எழுத முடியுமா? அவ்வாறு முன் வருபவர்களை நீங்கள் தலைமைதாங்கி வன்னிக்கு அழைத்து செல்லத் தயாரா? இல்லையென்றால், உங்களது தனிநாடுதான் இறுதி இலட்சியம் என்பதும் விசைப்பலகையில் முன் குந்தியிருந்து நீங்கள் செய்யும் நேர்மை இல்லாத அரசியல் சுத்துமாத்து.

Edited by SAMATHAANAM

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றைத் துப்பக்கியுடன் போரைத் தொடங்கிய தலைவனுக்கு நீங்கள் சொல்வதெல்லாம் தெரியாதா? எமக்குத்தெரியாத நிலைமைகள், அழுத்தங்கள் புலிகளுக்கு இருக்கின்றன. அறிக்கை விடுகிறார்களென்றால் அதுவும் ஒரு காரணமாகத்தான். இப்போது போராட்ட வடிவம் மிகவும் மாறுபட்டுள்ளது எல்லோருக்கும் தெரிந்ததே. அதற்கேற்ப செயல்வடிவங்களும் மாறுபடும். அப்பப்ப ஒரு காம்ப் அடிக்கவேண்டுமென்றால் எங்கே போவது!

புலிகளின் போராட்டத்தில் சறுக்கல்களும் இருந்திருக்கின்றன. உதாரணமாக ஆனையிறவு முதல் தாக்குதல். அதைத்திருத்திக்கொண்டு 2001 இல் புலிகள் வெல்லவில்லையா? அதேபோல் புலிகள் மீது வைக்கும் நம்பிக்கைதான் இத்தருணத்தில் முக்கியம். அதை விட்டுவிட்டு ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணினால் யாழ் களத்தில் சில பக்கங்கள் நிரம்பும். அவ்வளவே.

இதில் அட்வைஸ் பண்ணுபவர்களைச் சொல்லிப் பிரியோசனமில்லை. எனக்குத்தெரிந்த ஒரு பெடியன் சொன்னது இது. அவன் இயக்கத்திலிருந்தபோது ஒரு தடவை ஒரு தாக்குதல் குறித்து பொறுப்பாளர் போராளிகளுக்கு விளக்கிக்கொண்டிருந்தாராம். அவர் போனதும் ஒரு சிலர் தனியாக வேறு பிளான் போட்டுக்கொண்டிருந்தினமாம். இது இரத்ததில் நம்மாட்களுக்கு ஊறியது. உடனே மாற்றவேண்டுமென்றால் எப்படி? :D

நெடுக்காலை வோவான்

நான் ஏற்கனவே சொன்னமாதரி நீரும் இங்குள்ள சிலரும் போராட்டத்தின் மீது ஒரு சலிப்பை ஏற்படுத்தி எம்மை ஒதுங்க வைப்பதற்கான முயற்சிகளையே மேற்கொள்கிறீர்கள் என்பது உமது கருத்துக்களில் தெரிகிறது.

இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் நடக்கும் படுகொலைகளைத் தடுக்க ஒரேவழி அப்பகுதிகளை புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே. அவ்வாறு அனைத்துப் பகுதிகளும் மீட்கப்பட்டால் தமிழீழம் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்படும். படுகொலைகளை புலிகள் தடுத்து நிறுத்தவில்லையெனக் மூறும் நீர் அதற்கான ஒரே வழி இராணுவத்தை எமது பகுதிகளிலிருந்து விரட்டி தமிழீழத்தை விடுவிப்பதென்றால், சாம்பல்மேடு பீனி;க்ஸ் பறவையென்று கண்ணீர் விடுறீர்.

போர் பிரகடனம் செய்த புலிகள் மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல் மூன்று கேள்விகளிற்கான பதில் புலிகளிடமில்லை.

பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்த சிங்கள அரசு ஒத்துக்கொள்ளாது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியே தமிழ் மக்களிற்கான பாதுகாப்பு வலயம்

மக்கள் வாழ்விடங்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள். ஆனால் மக்கள் வாழ்விடங்களிற்குள் இருக்கும் படைத்தளங்களை புலிகள் அழிப்பர். மக்கள் வாழ்விடங்கள். மக்களை அழிப்பதும் சிங்களத்தின் இலக்கு

தற்போது போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவையே பல பகுதிகளிற்குச் செல்ல அனுமதிக்காத சிங்கள அரசு தான் மேற்கொள்ளும் படுகொலைகளை, மீறப்போகும் போர் விதிகளைக் கண்காணிக்க புதிய சர்வதேச கண்காணிப்புக்குழுவை செயற்படவிடுமென நீர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்போல (உமது கருத்துக்களை நிறுவ இப்படி தேவையற்ற கேள்விகளையோ அல்லது பந்தி பந்தியாக எழுதுவதையோ விட்டுவிட்டு உருப்படியாக எதையாவது கதையும்)

நீர் கேட்ட அடுத்த விடயங்களிற்குரிய ஏற்பாடுகளை புலிகள் நிச்சயமாகச் செய்து வைத்திருப்பார்கள். அவற்றை வெளியில் சொல்ல முடியாது. அப்படி வெளியில் சொல்வதென்றால் அதனை முறியடிக்கும் செயற்பாட்டில் எதிரி இறங்குவான்.

நீர் யாழ். மக்கள் தென்தமிழீழ மக்களின் பிரச்சினைகளாக விஜயகாந்த ஸ்டைலில் வைத்துள்ள கேள்விகளிற்கான ஒரேவிடை இராணுவத்தை ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்பதே. அதற்கரிய ஏற்பாடுகளில் தற்போது புலிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெறுமனே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கவில்லை.

ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிப்பவர்கள் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இராணுவம் மக்களைக் கொன்றால் நாம் பதிலடி கொடுப்போம் என்று அவர்கள் கூறுவது மக்களை சற்று ஆறுதல் படுத்தும். அவர்கள் இன்ன நாளில் இன்ன இடத்தில் தாக்குதல் நடத்துவோமென சொல்லவேண்டுமென முட்டாள்தனமாக எதிர்பார்க்காதையும்.

சிங்கள மக்களைப் பாதுகாக்க அரசு பதுங்குளிகள் அமைத்துக் கொடுத்துள்ளது என்று தெரிந்த உமக்கு அதற்கு பல காலத்தின் முன்பே எமது மக்கள் தற்பாதுகாப்பிற்கு பதுங்குகுழிகளை அமைத்து விட்டார்கள் என்பது தெரியவில்லை. (பிறகேன் விமானத் தாக்குதலில், எறிகணை வீச்சில் இழப்புக்கள் ஏற்படுகின்றன என லூசுத் தனமாகக் கேட்காதையும்).

புலிகளை நம்பிவந்த மக்களை புலிகள் காப்பாற்ற வேண்டியததால்தான் இராணுவக் கட்டுப்பாடடுப் பகுதிகளிற்குச் செல்ல அனுமதித்தனர். வாகரையைக் கைப்பற்ற இராணுவம் பாரிய திட்டங்களை தீட்டி வருகிறது. எனவே சிறிய பிரதேசத்தினுள் மக்கள் செறிவாக வாழ்ந்தால் மக்களிற்கு பேரிழப்பு ஏற்படும் அதனைத் தவிர்க்கவே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்குச் செல்ல மக்களிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்படிச் சென்ற மக்களிற்கு இராணுவம் உடை உணவு வழங்கியதாக நீர்தான் சொல்கிறீர். வந்த உடனே மாத்திரமே கொடுத்தார்கள் பின்பு கைவிட்டு விட்டார்கள் வாகரையில் இருந்த நிலையிலேயே இப்போது வாழைச்சேனையில் உள்ள பாடசாலைகளில் மக்கள் இருக்கின்றனர்.

கொழும்பில் குண்டுத்தாக்குதல் நடத்தமாட்டோமென புலிகள் உத்தரவாதம் கொடுக்கிறது, வன்னியில் சிங்கள மக்கள் பாதுகாப்புத் தேடி வாறது என்று உம்மடை நடைமுறைச் சாத்தியமற்ற திக்குகளிற்கு முடடிங்கிக் கிடக்குமென்ற உமது லூசுத் தனமாக விவாதங்களைக் கொண்டுபோய் குப்பையிலை கொட்டும்.

நீர் ஒண்டைத் தெரிந்து கொள்ளும், சிங்கள மக்களை பாதுகாக்க அரசு மேற்கொள்ள பாதுகாப்பு நடைமுறைகளால் சிங்கள மக்கள் பாதுகாப்பாக இருக்க வில்லை. மாறாக அவர்களை புலிகள் தாக்குவதில்லை என்பதனால் மாத்திரமே. புலிகளை ஒடுக்குவதிலும் பார்க்க தமிழ் மக்களை அழிக்க வேண்டுமென்பதில் சிங்களம் கண்கணம் கட்டி நின்று அதனைச் செய்கிறது. சிங்களத்தின் அனைத்துத் தாக்குதல்களிலிருந்தும் மக்களைக் உடனடியாகக் காக்க முடியாது. புலிகளின் பலத்தின் மீது கொண்ட பயத்தினாயே பெருமெடுப்பிலான படுகொலைகள் நடைபெறவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளும்.

தமிழீழ தனியரசிற்கான பிரகடனம் செய்யப்பட்டாயிற்கு இனி நீண்ட காலததிற்கு பொறுக்க வேண்டியதில்லை. இது போரிற்கான ஏற்பாட்டுக் காலம், முழுiமாயாகத் தயார் படுத்த வேண்டும். போராளிகளி;ன் இழப்பையும் குறைக்கவும், மக்களின் இழப்புக்களைத் தவிர்க்கவும் சரியாகச் செயற்பட வேண்டும். இதற்கு ஒரு சில மாதங்கள்கூட ஏற்படலாம். அதன்பின்னர் எதிரி படிப்படியாக எமது மண்ணிலிருந்து விரட்டப்பட மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிப்பார்கள்.

சுதந்திரக்காற்று என்பது உமக்கு சாம்பல் புகையாகத் தெரிந்தான் நாமொன்றும் செய்ய முடியாது

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இரண்டு/மூன்று மாதங்களில் படையினர் கிழக்கிலிருந்து புலிகளை ஒழித்துக் கட்டிவிடுவார்கள். அதன்பின் கிழக்கில் மக்கள் நிம்மதியாக இருக்கலாம். இவ்வருட இறுதிக்குள் வடக்கிலும் புலிகளை ஒழித்துக்கட்டிவிடுவார்கள். சிலவேளை வன்னிக் காட்டிற்குள் சிறு சிறு பகுதிகளில் புலிகள் இருக்கக்கூடும். எனினும் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. எனவே மக்கள் முழு இலங்கையிலும் நிம்மதியாக வாழலாம்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20807

சைவ, கிறீஸ்த்தவ, இஸ்லாம் மதங்களைப் பிடிக்காதவர்கள் பெளத்த மதத்திற்கு மாறுவதற்கு வசதியாக ஒவ்வொரு ஊரிலும் பெளத்த விகாரைகள் கட்டப்படும்; அரச மரங்கள் நாட்டப்படும், தேமா மரங்கள் வளர்க்கப்படும். எல்லோரும் ஆனந்தமாக இருக்கலாம். சிறிலங்கன் எயார்லைனில் போய் கூழ் குடிக்கலாம், கள்ளடிக்கலாம், கசூறீனா பீச்சுக்குப் போய் பெட்டையளை "சைட்" அடிக்கலாம். வேணுமெண்டால் தள்ளிக்கொண்டும் போகலாம். எனவே வீண் விவாதங்களை விட்டிட்டு கிறிஸ்மஸ் ஹொலிடேக்கு போகின்ற ஒழுங்குகளை இப்பவே பார்க்கத் தொடங்குங்கோ.

நாரதர்,

புலம்பெயர்ந்தோர் களத்தில் போராடுபவர்கள் செய்வதில் இலட்சத்தில் ஒரு பங்கு பங்களிப்பாவது செய்கிறார்களா என்பது சந்தேகமே. ஆனால் களத்தில் ஒன்றாக நிற்கும் மக்கள் பற்றியே நான் இங்கு பேசுகிறேன். அவர்களுக்கு புலிகளை மட்டும்தானே நம்பியிருக்கிறார்கள். அவர்களை விட்டால் வேறு யார் பாதுகாப்பு கொடுப்பது? ஏதோ நாங்கள் இங்கு கருத்துக்கூறுவதால்தான் போராட்டம் நலினப்படுகிறது மலினப்படுகிறது என்று அங்கலாய்க்கிறீர். ஆனால் சாவை அன்றாடம் தரிசிக்கும் அந்தமக்களின் மனோபலம் நாளுக்குநாள் குன்றி வருவது உமக்குப் புலப்படவில்லையா? அவ்வாறு மனோபலம் குன்றுவது நான் இங்கு கருத்துச்சொல்வதை விட பல்லாயிரம் மடங்கு போராட்டத்தை நலினப்படுத்துமல்லவா?

புலமபெயர் தமிழர்கள் தமக்குரிய பங்களிப்பைச் செய்கிறார்கள். யாழிலும், வாகரையிலும் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்பதற்காக நாமும் பட்டினி கிடக்கவேண்டுமென நீர் எதிர்பார்க்கிறீர்போல. புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்திற்குச் செய்ய வேண்டிய மிகப்பெரிய பங்களிப்பு நிதிப்பங்களிப்பே. அதனை அவர்கள் இதுவரை செய்து வந்ததால்தான் புலிகளின் பலம் உறுதியாக இருக்கிறது.

தம்மை நம்பியிருக்கிற மக்களைக் காப்பாற்ற ஒழுங்காகத் திட்டமிட்டுச் செயற்பட்டால்தான் அந்த மக்களிற்கு நிரந்தர விடிவு கிடைக்குமென புலிகள் நம்புவதாலேயெ இராணுவத்திற்கு உடனடிப் பதிலடிகளைக் கொடுக்கவில்லை.

நீங்கள் இங்கே என்னதான் கூறினாலும் போராட்டம், நலினப்படவோ, மலினப்படவோ போவதில்லை. உங்கள் கருத்துக்கள் போராட்டத்தை நலினப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே சொல்லப்படுகின்றன என்பதையே இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

நாளுக்கு நாள் எதிரியின் தாக்குதல்களால் துன்பமடையும் மக்கள் அதிலிருந்து விடுபடவேண்டுமெனவே எண்ணுவார்கள். அந்த எண்ணம் போராட்டத்தை நலினப்படுத்தாது பலப்படுத்தும். மக்கள் மனோபலம் குன்றி மக்கள் போராட்டததிற்கு ஒத்துழைக்கக்கூடாது என்று பகல்கனவு கண்டுகொண்டிருக்கிற உமக்கும் ரட்ணஜீவன் கூலும் மக்களின் மனபலம் குன்றுவதாகத்தான் தெரியும்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக வெட்டினீர் மின்னல்.

புலிகளைப்பற்றிக் கருத்துச்சொல்வதற்கு முன், உலகில் எத்தனை விடுதலை இயக்கங்கள் எம்முடையதைப் போன்று கட்டுக்கோப்பாகவும், குறிக்கோளில் உறுதியுடனும், போராட்டத்திறனுடனும் உள்ளன? சிங்களவன் எவ்வளவுதான் புலிகளைத்திட்டினாலும் அவனுக்குள்ள பெருங்குறை நம் தலைவனைப்போல் அவர்களிடம் ஒருவன் இல்லையே என்பதுதான். இருந்திருந்தால் அவர்கள் எங்களில் சிலரைப் போல் ஏளனம் செய்யமாட்டார்கள். இதுதான் அவனுக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம். நம்மாட்கள் பத்தாங்கிளாஸ் தாண்டினாலே அட்வைஸ் பண்ண வெளிக்கிட்டிடுவினம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலமபெயர் தமிழர்கள் தமக்குரிய பங்களிப்பைச் செய்கிறார்கள். யாழிலும், வாகரையிலும் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்பதற்காக நாமும் பட்டினி கிடக்கவேண்டுமென நீர் எதிர்பார்க்கிறீர்போல. புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்திற்குச் செய்ய வேண்டிய மிகப்பெரிய பங்களிப்பு நிதிப்பங்களிப்பே. அதனை அவர்கள் இதுவரை செய்து வந்ததால்தான் புலிகளின் பலம் உறுதியாக இருக்கிறது.

தம்மை நம்பியிருக்கிற மக்களைக் காப்பாற்ற ஒழுங்காகத் திட்டமிட்டுச் செயற்பட்டால்தான் அந்த மக்களிற்கு நிரந்தர விடிவு கிடைக்குமென புலிகள் நம்புவதாலேயெ இராணுவத்திற்கு உடனடிப் பதிலடிகளைக் கொடுக்கவில்லை.

நீங்கள் இங்கே என்னதான் கூறினாலும் போராட்டம், நலினப்படவோ, மலினப்படவோ போவதில்லை. உங்கள் கருத்துக்கள் போராட்டத்தை நலினப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே சொல்லப்படுகின்றன என்பதையே இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

நாளுக்கு நாள் எதிரியின் தாக்குதல்களால் துன்பமடையும் மக்கள் அதிலிருந்து விடுபடவேண்டுமெனவே எண்ணுவார்கள். அந்த எண்ணம் போராட்டத்தை நலினப்படுத்தாது பலப்படுத்தும். மக்கள் மனோபலம் குன்றி மக்கள் போராட்டததிற்கு ஒத்துழைக்கக்கூடாது என்று பகல்கனவு கண்டுகொண்டிருக்கிற உமக்கும் ரட்ணஜீவன் கூலும் மக்களின் மனபலம் குன்றுவதாகத்தான் தெரியும்.

எங்கேயிருந்து பகல்கனவு கண்டுவிட்டு இதை எழுதுறீர் என்று தெரியவில்லை. நானறிந்தவரை புலத்தில் மனமுவந்து நிதிப்பங்களிப்பு செய்பவர்கள் நூறில் ஒருவர்தான். மற்றவர்கள் இன்னும் ஒளித்துத்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

நாங்களும் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதால்தான் இங்கே மினக்கெட்டு பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நாள் ஆக ஆக இந்த நம்பிக்கை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விடுமோ என்ற சின்ன சந்தேகம் துளிர்விடுவதை மறுப்பதற்கில்லை.

துன்பப்படும் மக்களிடையே குடும்ப அங்கத்தவர்களை கொண்டிருப்பவன் என்ற முறையில்தான் சொல்கிறேன். நாள்தோறும் தொலைபேசியிலும் வேறுவழிகளிலும் அவர்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் கூறியதை வைத்துத்தான் கூறுகிறேன். அவர்களிடம் ஒரு ஆறுமாதத்துக்கு முன்னர் இருந்த மனோபலத்தில் இப்போது பாதிதான் இருக்கிறது என்பதை என்னால் அடித்துக் கூறமுடியும்.

ஒரே ஒரு சந்தேகம் நாரதரிடம் கேட்ட கேள்விக்கு நீர் ஏன் முண்டியடித்து பதில் சொல்கிறீர்? நீரேதான் நாரதர், மின்னல் என வெவ்வேறு பெயர்களில் வருகிறீரா? அல்லது நீர் நாரதரின் "தண்ணி" கூட்டாளியா?

நெடுக்ஸ் நீர் சொல்வது ஒன்றில் முரண்படுகிறேன். நீர் சொல்வதுபோல் அறிக்கை விடுவதில் தவறேதுமில்லை. உலக அரங்கில் எமது குரல் ஓங்கி ஒலிக்கவேண்டுமாயின் அவை அவசியம்.

ஆனால் அறிக்கைகளில் வெளிவிடப்படும் கூற்றுக்களை செயலில் நிறைவேற்றிக்காட்டவேண்டும் (உதாரணமாக ஒருவாரத்தில் பாதை திறக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த கூற்று). அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் அறிக்கைகள் யாவும் சிறிது காலத்தினுள் ஒரு பொருட்டாக எடுக்கப்படாத நிலை தோன்றும். அதற்குப்பின் அறிக்கை விட்டென்ன விடாட்டியென்ன எல்லாம் ஒன்றுதானே?

நாரதர்,

புலம்பெயர்ந்தோர் களத்தில் போராடுபவர்கள் செய்வதில் இலட்சத்தில் ஒரு பங்கு பங்களிப்பாவது செய்கிறார்களா என்பது சந்தேகமே. ஆனால் களத்தில் ஒன்றாக நிற்கும் மக்கள் பற்றியே நான் இங்கு பேசுகிறேன். அவர்களுக்கு புலிகளை மட்டும்தானே நம்பியிருக்கிறார்கள். அவர்களை விட்டால் வேறு யார் பாதுகாப்பு கொடுப்பது? ஏதோ நாங்கள் இங்கு கருத்துக்கூறுவதால்தான் போராட்டம் நலினப்படுகிறது மலினப்படுகிறது என்று அங்கலாய்க்கிறீர். ஆனால் சாவை அன்றாடம் தரிசிக்கும் அந்தமக்களின் மனோபலம் நாளுக்குநாள் குன்றி வருவது உமக்குப் புலப்படவில்லையா? அவ்வாறு மனோபலம் குன்றுவது நான் இங்கு கருத்துச்சொல்வதை விட பல்லாயிரம் மடங்கு போராட்டத்தை நலினப்படுத்துமல்லவா?

மனோபலம் குன்றி விட்டது என்று எங்கிருந்தோ கொண்டு நீர் எவ்வாறு கூறுவீர்? உம்மை விட மக்களோடு மக்களாக நிற்பவர்களுக்குத் தெரியாததா உமக்குத் தெரிகிறது?உமக்கு ஒன்றைச் சொல்லலாம் ஜெயசிக்கிறுவின் போதும் இவ்வாறு தான் நிகழ்ந்தது ஆனால் வன்னி மக்கள் என்றும் புலிகளின் இரானுவத் தந்திரோபாயத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை.ஒவ்வொரு பின் நகர்வையும் தேசியத் தலைவர் செய்த போது சில தளபதிகளுக்கே இது ஏன் செய்யப்படுகிறது என்று தெரியாது.எல்லா வற்றையும் இணைக்கும் ஒரு மைய்யப்புள்ளி தான் தலமை.மனோதிடம் என்பது கடந்தகால அனுபவங்களில் இருந்து வருவது, நம்பிக்கையும் அவ்வாறே.இராணுவத் தந்திரோபாயம் என்பது எப்போது எங்கு எந்தக் களம் என்பது. ஒரு இராணுவத் தளபதியைத் தவிர வேறு எவரும் அதைத் தீர்மானிக்க முடியாது.முக்கியமாக எமது எதிரி.அவன் இப்போது சீண்டுவதன் படி நாம் எதிர்வினை செய்வது அவனின் தந்திரோபாயத்திற்கு ஆடுவதைப் போன்றது.எங்கே வெல்வோம் என்பதை நாம் தான் தீர்மானிக்க முடியும்.எமக்கான வளங்கள் மட்டுப் படுத்தப்பட்டது.இழந்த வளங்களை மீழப்பெற முடியாது.எதிரியின் ஆட்டத்துக்கு ஆடுவது எமக்கு தோல்வியையே தரும்.எமது வெற்றி தான் எம் மக்களின் நிரந்தரப் பாதுகாப்புக்கு வழி வகுக்கும்.ஆகவே நாளும் நடக்கும் சம்பவங்களுக்கு வெறும் வாயால் அவல் மெல்வதை விட்டு விட்டு எவ்வாறு எமது பலத்தைப்பெருக்கலாம் என்று பார்ப்போம்.புலத்தமிழர்களுக்

புதிய அணுகுமுறை புதிய அணுகுமுறையென என்று மாத்திரம் சொல்லி அந்த அணுகுமுறை எதுவென இதுவரை சொல்லாத உம்மைப் பார்த்து நாயாண்டி செய்வதைத்தவிர என்ன செய்ய முடியும்?

நீர் நாரதர் கேட்ட எத்தனையோ கேள்விகளிற்கெல்லாம் பதிலளித்து விட்டீராக்கும். ஒவ்வொரு கருத்தாடல் தொடங்கும்போது வந்து புதிய அணுகுமுறை மண்ணாங்கட்டி என்று சொல்லிவிட்டு, யாராவது உம்மிடம் கேள்வி கேட்டால் அதனைக் கணக்கெடுக்காத நீரெல்லாம் கேள்விக்குப் பதலளிக்கவில்லை என்கிறீர்.......

வன்னியில் புலிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை புதிய ஆளணியை பெறுவது என்று நீர் கற்பனை செய்தால் அது உண்மையாகிவிடுமா? அங்கே தினம் தினம் இளைஞர்கள் யுவதிகள் இணைகிறார்கள். அதைவிட பல்லாயிரக்கணக்கான மக்கள் போர் பயிற்சிகைளப் பெற்று போரிற்கான தமது பங்களிப்பை வழங்கத் தயாராக இருக்கிறார்கள். போர் தொடங்கும்போது பின்தள வேலைகளிற்காக புலிகள் தமது ஆளணி வளத்தை பயன்படுத்த தேவையில்லை. இம்மக்களே எல்லாவற்றையும் செய்து கொடுப்பார்கள். ஏன் நேரடியாகக் களத்திலும் நின்று போராடி எதிரியை விரட்டி அடிப்பார்.

புலத்தில் உள்ள தமிழர்கள் நிதியைக் கொடுத்தால் புலிகள் தமது படை பலத்தைப் பெருக்குவதுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் ப+ர்த்தி செய்ய முடியும்.

நாம் புலத்தில் இருப்பது போராட்டதின் பலங்களில் ஒன்று. எல்லாரும் போராடப் போனோம் என்றால் போராயுதங்கள் வாங்கவும், எமது பிற தேவைகளையும் நிறைவேற்ற நிதிக்கு எங்கே செல்வது?

எங்கேயிருந்து பகல்கனவு கண்டுவிட்டு இதை எழுதுறீர் என்று தெரியவில்லை. நானறிந்தவரை புலத்தில் மனமுவந்து நிதிப்பங்களிப்பு செய்பவர்கள் நூறில் ஒருவர்தான். மற்றவர்கள் இன்னும் ஒளித்துத்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

மனமுவந்தோ, மனமுவராமலோ அவர்கள் செய்த பங்களிப்புக்கள்தான் இன்று புலிகள் இயக்கம் பெரும் பலமாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று. நாட்டை புலிகள் மீட்க வேண்டும் என்பதற்காகவே விரும்பிக் கொடுப்பவர்களும், விரும்பாமல் கொடுப்பவர்களும் நிதியைக் கொடுக்கிறார்கள். அவர்கள் என்றும் போராட்டத்தை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாங்களும் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதால்தான் இங்கே மினக்கெட்டு பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நாள் ஆக ஆக இந்த நம்பிக்கை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விடுமோ என்ற சின்ன சந்தேகம் துளிர்விடுவதை மறுப்பதற்கில்லை.

மற்றவர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டும் என்ற நோக்குடன் கருத்தெழுதும் நீர் இன்னும் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறீர்??

துன்பப்படும் மக்களிடையே குடும்ப அங்கத்தவர்களை கொண்டிருப்பவன் என்ற முறையில்தான் சொல்கிறேன். நாள்தோறும் தொலைபேசியிலும் வேறுவழிகளிலும் அவர்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் கூறியதை வைத்துத்தான் கூறுகிறேன். அவர்களிடம் ஒரு ஆறுமாதத்துக்கு முன்னர் இருந்த மனோபலத்தில் இப்போது பாதிதான் இருக்கிறது என்பதை என்னால் அடித்துக் கூறமுடியும்.

துன்பப்படும் மக்கள் மத்தியில் எமது சகோரர்களும் இருக்கிறார்கள் உறவினர்களும் இருக்கிறார்கள். உமது உறக்காரர் கஸ்ரத்தைச் சொல்வார்கள். அதற்காக போராட்டம் வேண்டாம் என்று சொல்லியிருக்க மாட்டார்கள். உமது உறவினர்களிற்கு மனபலம் கொஞ்சம் குறைந்திருந்தால் புலிகள் இராணுவத்திற்கு அடிக்க வெளிக்கிட்டு ஒரு ஆறுமாதம் கழித்து தொடர்பு கொள்ளும் அவர்கள் தமது மனபலத்தைப் பற்றி சொல்வார்கள்.

ஒரே ஒரு சந்தேகம் நாரதரிடம் கேட்ட கேள்விக்கு நீர் ஏன் முண்டியடித்து பதில் சொல்கிறீர்? நீரேதான் நாரதர், மின்னல் என வெவ்வேறு பெயர்களில் வருகிறீரா? அல்லது நீர் நாரதரின் "தண்ணி" கூட்டாளியா?

நாரதரும் நானும் ஒன்றே இரண்டோ அல்லது தண்ணிக் கூட்டாளி என்தெல்லாத்தையும் விடும். உமக்கு நாதர்தான் பதிலளிக்க வேண்டுமென்றால் தனிமடலில் போய் நாரதரிடம் கேள்வி கேளும்.

Edited by மின்னல்

யாழ் களத்தில் பலர் குப்பை கொட்டுவதாக தனது நெஞ்சில் குத்தி அழும் நாரதர் தானும் வந்த வேலையை மறந்து கூட்டத்தோட கூட்டமாக குப்பை கொட்டும் காட்சி இந்த புது வருடத்திலும் கண்கொள்ளா காட்சி.

அப்படி நீரே சொல்லிச் சொல்லிப் புலம்பும்.

சிங்கள படைகளின் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு தீர்வு யுத்தம் ஒன்றுதான் என்று சொல்லும் நாரதர்.

உதை நான் சொல்ல இல்லை எதோ நான் தான் யுத்தம் செய்யுறன் மாதிரி அல்லோ உம்மட கதை. நான் உம்மை மாதிரித் தான் இங்க ஓடி வந்து பதுங்கி இருக்கிறன்.புலத்துக்கு தப்பியோடி வந்தனான் இதில் வெட்க்க பட என்ன இருக்கு.ஆனா ஓடி வந்து போட்டு நெச்சு நிமிர்த்தி எமது விடுதலை ஒரு சுதந்திரத் தமீழத்தால தான் எண்டு சொல்லி அங்க தங்கட உயிரைக் குடுக்குறவங்களுக்கு ஆலோசனை சொல்ல நான் வெளிக்கிட மாட்டன்.அப்படியான அயோக்கியத் தனம் என்னிட்ட இல்லை.எண்ட படியா வெட்க்கப்படவேண்டியது நீரும் இங்கு ஆலோசனைகளி இலவசமாக அருளும் சுய விம்பங்களுமே.உம்மைப் போல் உவங்களுக்கு ஒரு ம..ம் தெரியாது என்னட்ட 'புதிய அணுகுகுறை' எங்கிற மாயமான் ஒண்டு இருக்கு.அந்த சகல ரோக ன் நிவாரணையக் கொண்டு உங்களுக்கு நான் ஒரு வழிய காட்டுறன் எண்டு புலுடா விட மாட்டன்.

போன்றோர் இலுப்பங்கடவை விமான தாக்குதல் குறித்து சில யாழ் களத்து உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு கைவசம் எடுத்து விடக் கூடிய பதில் ஒன்றும் இல்லாததால் நான் தொடர்ந்து கூறிவரும் ' புதிய அரசியல் அணுகு முறை குறித்து ' தனது நையாண்டித்தனத்தை முதிர்ச்சி இல்லாத அரசியல் வேக்காடாக வெளிப்படுத்தி உள்ளார்.

அது தானெ எத்தினை முறை கேட்டாயிற்று உந்தப் 'புதிய அணுகுமுறை 'எங்கிற மாயமான் என்னங்கோ? இங்க இப்படி புலுடா விடுகிறது யாரு? அன்ச்சு வருசம் நடந்த பேச்சுவார்த்தையில் இல்லாத இடைக்காலத் தீர்வா இது? இல்லை மகிந்தர் தயாரிச்சுக் கொண்டிருகிற கட்டப் பச்சாயத்தா இது? நீர் தான் பச்ஞாயத்துத் தலைவரோ இல்லை உமக்கும் மேல ஒரு தலைவர் இருகிறாரா? அதைத் தானே இங்க களம் முழுக்க கேக்கிறமே இன்னும் உந்த மாயமானை நீர் வெளியால அவிட்டு விடேல்லையே? அப்படி விசேடமான் உந்த மானை நீர் அவிட்டு விட்டா நான்கள் ஏன் நையாண்டி செய்ய வேணும்?அரசியல் கதைப்பம் வாரும் நேரடியாக் கதைப்பம் எண்டா ஒழின்ச்சு ஓடி அல்லோ தெரியுறீர்.

வன்னியில் புலிகள் எதிர் நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று புதிய ஆளணிகளை படையில் இணைத்துக்கொள்ள மனிதவள பற்றாக்குறையாகும். .

அதுக்குத் தானே இப்ப சிங்கள இராணுவம் இருக்கு புலிகளுக்கு ஆக்களைச் சேத்துக் கொடுக்க.அங்க பயிற்சியள் வெகு மும்முரமா நடக்குது.

வசதியான மேற்குலக நாடுகலில் புலம் பெயர்ந்து இருக்கும் 10 லட்சம் தமிழர்கள் புலிகளுக்கு புதிய ஆளணிக்கு உதவ ஏன் முன்வரவில்லை?

இங்கு கருத்து எழுதும் நாரதர், தூயவன், ஈழவன், ஜனார்தனன் போன்றோர் வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இங்கிருந்து திரும்பிப்போய் தமிழீழத்தை மீட்கப் போராடவேண்டும் என்று கருத்து எழுதாது இருப்பது ஏன்? உங்களது விசைப்பலகையில் நான் குறிப்பிட்ட வார்த்தைகளை சும்மாவேணும் ஒரு முறை குத்திப்பாருங்கள் தெரியும் உங்களுக்கே உங்கள் விரல்கள் நடுங்குவதை உணர்வீர்கள்.

உண்மையில் நேர்மையாக ஈழப்போராட்டத்தை நேசிக்கின்றீர்கள் என்றால் புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்பிப்போய் போராடுகள் என்று உங்களால் எழுத முடியுமா? அவ்வாறு முன் வருபவர்களை நீங்கள் தலைமைதாங்கி வன்னிக்கு அழைத்து செல்லத் தயாரா? இல்லையென்றால், உங்களது தனிநாடுதான் இறுதி இலட்சியம் என்பதும் விசைப்பலகையில் முன் குந்தியிருந்து நீங்கள் செய்யும் நேர்மை இல்லாத அரசியல் சுத்துமாத்து.

நாம் தொடை நடுங்கியள் தான் யாரு இல்லை எண்டது.இல்லை எண்டா அங்க நிண்டல்லோ சண்டை பிடிச்சிருப்பம்.ஆனால் நாங்கள் தொடை நடுங்கியள் எண்டாலும் ,உண்மையை ,நியாயத்தை ஒரளக்காவது பேசுகிறோம்.இங்கே நீரும் மற்றவர்களும் செய்வது என்ன.இங்கே ஓடி வந்து விட்டு அங்கு போரிடுபவர்களுக்கு ரிமூட் கொன்றோலில அங்கடி இங்கடி எண்டு கட்டளை சொல்வது மட்டும் இல்லை அவங்கள் பிழை விட்டுடாங்கள் எண்டு தளபதிகளைப் போலவும் இராணுவ அரசியல் வல்லுனர்களைப் போலவும் கதையளக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம்?

உங்கள் அயோக்கியத் தனத்தை அம்பலமாக்க எமக்கு இருக்கும் நேரத்தைச் செலவிடுவது நாங்கள் அங்கு போரடுபவர்களுக்குச் செய்யும் ஒரு சிறிய பங்களிப்புத் தான்.ஓடி வந்தனீங்கள் செய்வது பச்சைத் தூரோகத் தனம்.உங்களுக்கு இருப்பது வெற்று சுய பிம்பம்.

உள்ளே இருப்பதோ கொறையான சொல்லாடல்களும் ,மக்களிடம் கரிசனை எங்கிற வெறும் வேடமும் தான்.மக்களிடம் கரிசனை என்றால் அங்கிருந்து மக்களோடு மக்களாக போராட வேண்டியது தானே? இங்கிருந்து ஏன் புலுடா விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனோபலம் குன்றி விட்டது என்று எங்கிருந்தோ கொண்டு நீர் எவ்வாறு கூறுவீர்?

இதற்கு ஏற்கெனவே பதில் சொல்லியாயிற்று. தயவுசெய்து மீண்டுமொருமுறை மேலுள்ள வாசித்துப்பார்க்கவும்

இதற்கு ஏற்கெனவே பதில் சொல்லியாயிற்று. தயவுசெய்து மீண்டுமொருமுறை மேலுள்ள வாசித்துப்பார்க்கவும்

ஓம் உமது உறவினரின் தொலை பேசி அழைப்புத் தான் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனப்பலம். எந்தப் புள்ளி விபரத்தின் அடிப்படையில் இப்படி சொல்லுறீர். நானும் கன பேரோட கதைக்கிறனான், நானும் சொல்லலாம் நீர் சொல்வது பொய் எண்டு.

ஒரு தனி மனிதரின் சம்பாசனையை வைத்து கருத்தாடுவதும் அதனையே எல்லோரது அனுபவமாக எழுதுவதும் போக்கிரித் தனம் அன்றி வேறென்ன?

:angry:

சமாதானம் கேட்டது,

உண்மையில் நேர்மையாக ஈழப்போராட்டத்தை நேசிக்கின்றீர்கள் என்றால் புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்பிப்போய் போராடுகள் என்று உங்களால் எழுத முடியுமா? அவ்வாறு முன் வருபவர்களை நீங்கள் தலைமை தாங்கி வன்னிக்கு அழைத்து செல்லத் தயாரா? உங்களது தனிநாடுதான் இறுதி இலட்சியம் என்பதும் விசைப்பலகையில் முன் குந்தியிருந்து நீங்கள் செய்யும் நேர்மை இல்லாத அரசியல் சுத்துமாத்து.

நாரதர் சொன்னது,

நாம் தொடை நடுங்கியள் தான் யாரு இல்லை எண்டது.இல்லை எண்டா அங்க நிண்டல்லோ சண்டை பிடிச்சிருப்பம்.ஆனால் நாங்கள் தொடை நடுங்கியள் எண்டாலும் ,உண்மையை ,நியாயத்தை ஒரளக்காவது பேசுகிறோம்.இங்கே நீரும் மற்றவர்களும் செய்வது என்ன.இங்கே ஓடி வந்து விட்டு அங்கு போரிடுபவர்களுக்கு ரிமூட் கொன்றோலில அங்கடி இங்கடி எண்டு கட்டளை சொல்வது

உதை நான் சொல்ல இல்லை எதோ நான் தான் யுத்தம் செய்யுறன் மாதிரி அல்லோ உம்மட கதை. நான் உம்மை மாதிரித் தான் இங்க ஓடி வந்து பதுங்கி இருக்கிறன்.புலத்துக்கு தப்பியோடி வந்தனான் இதில் வெட்கப் பட என்ன இருக்கு.ஆனா ஓடி வந்து போட்டு நெச்சு நிமிர்த்தி எமது விடுதலை ஒரு சுதந்திரத் தமீழத்தால தான் எண்டு சொல்லி அங்க தங்கட உயிரைக் குடுக்குறவங்களுக்கு ஆலோசனை சொல்ல நான் வெளிக்கிட மாட்டன்....

சமாதானம் சொல்வது,

நாரதர் நீர் உம்மை விபரித்து எழுதின'' நாம் தொடை நடுங்கியள் தான் யாரு இல்லை எண்டதுதான்'' என்பது உமக்கு மட்டும் அல்ல தமிழர் தாயகத்தில் இருக்கும் சாதாரண மக்களுக்கும் பொருந்தும். அண்மையில் வாகரையில் இருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இடம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களையும் உமது மொழியில் சொன்னால் 'தொடை நடுங்கியள் ' என்றுதான் பரிதாபகரமான பெயரிடவேண்டும். நாரதரின் இந்தமாதிரியான கருத்துகள் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். . யுத்தத்துக்குள் தாம் இறந்துவிடக்கூடாது என்பது நாரதரின் ஏகபோக உரிமை அல்ல. அது வட கிழக்கில் யுத்தத்துக்குள் வாழும் மக்களுக்கும் உள்ளது.

நிச்சயமாக சிறிலங்கா அரசு ஏவி வீட்டிருக்கும் யுத்தத்தால் எவரும் இறக்கக் கூடாது என்பது தான் எனது விருப்பம்.இந்த அனியாயமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தான் புலிகள் போராடுகிறார்கள் அங்கே அவர்கள் நிகழ்த்தும் போராட்டத்தை ஆதரிப்பது நான், எதிர்ப்பது நீர்.இங்கே யுத்தத்தை படுகொலைகளை நிகழ்த்தும் சிறலங்கா அரசின் அடிவருடியாக அயோக்கியத்தனம் புரிவது நீர். ஏகபோகமாகப் படுகொலை செய்யும் சிறிலங்கா அரசின் முகவர் நீர்.

மக்கள் மீது வெகு கரிசனை கொண்டுள்ள நீர் அம்மக்களை சிறிலங்கா அரசிடம் இருந்து பாதுகாக்க என்ன செய்துள்ளீர்? ஜெனிவாப்பேச்சுக்களின் போது புலிகள் மக்களின் அன்றாட வாழ்வியற் பிரச்சினைகளை அல்லாமல் தீர்வு பற்றிக் கதைக்கவேண்டும் என்று சிறிலங்கா அரச குழுவின் கோரிக்கையை பிரதிபலிக்கும் வண்ணம் இங்கே எழுதியவர் நீர்.இன்றும் இடைக்காலத் தீர்வு பற்றி அலட்டும் நீர் என்றாவது சிறலங்கா அரசின் கோரமுகத்தை பற்றி அது ஆடும் கபட நாடகம் பற்றி எழுதியது உண்டா?இங்கே கொலைகளை நிகழ்த்தும் சிறிலங்கா அரசின் இரானுவ அரசியல் வேலைத் திட்டத்துக்கு அமைவாக போரட்டத்தின் மீதான மக்களின் மன உறுதியையைக் குலைக்கும் நோக்கில்,புலத்தவரே சிந்தியுங்களென்று நீர்செய்து கொண்டிருக்கும் பிரச்சாரம் தான் உமது மக்கள் மீதான கரிசனையோ? யாருக்குக் காது குத்துகிறீர்கள்?

Edited by narathar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.