Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதனையும் சந்திக்க நாங்கள் தயார்: விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்.

Featured Replies

ரணில் வெண்டிருந்தா இப்பிடி எல்லாம் நடக்குமே?

புலம்பெயர்ந்தவர்கள் புலிகளிற்கு அழுத்தம் கொடுக்க வேணும். இடைக்காலத் தீர்வைப் பற்றிக் கதைக்கிறதுக்கு பொருத்தமானவர் ரணிலே. தமிழர்தரப்பு சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இந்த புதிய அணுகுமுறைக்கு தயார் என்றால் தென்னிலங்கையில் தேர்தலை நடத்தவேண்டிய சூழ்நிலையை உருவாக்குவது சர்வதேசத்தின் பொறுப்பு. உங்களுக்கு நிறைய அபிவிருத்தி நிதி உதவிகள் கிடைக்கும் தடைகள் நீக்கப்படும். எல்லா இடமும் பயணம் செய்ய முன்னர்போல் அனுமதிக்கப்படும். பொருளாதாரத் தடை நீக்கப்படும்.

இந்த புதிய அணுகுமுறையை நிறைவேற்ற உதவுபவர்களிற்கு சர்வதேசத்திடம் இருந்து சுபீட்சமான எதிர்காலம் காத்திருக்கிறது.

  • Replies 98
  • Views 15.4k
  • Created
  • Last Reply

யாழ் களத்தில் சிங்கள அரசின் சுயரூபத்தை சமாதானம் எழுதித்தான் அறிய வேண்டிய நிலையில் யாழ் களமும் இல்லை யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்களும் இல்லை. நாரதர் அரசியல் வறுமையில் பினாத்தும் புதுப் புழுடாக்கள் முடிவில்லாமல் தொடர்கிறது.

யாழ் களத்தில் சிங்கள அரசின் சுயரூபத்தை சமாதானம் எழுதித்தான் அறிய வேண்டிய நிலையில் யாழ் களமும் இல்லை யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்களும் இல்லை. நாரதர் அரசியல் வறுமையில் பினாத்தும் புதுப் புழுடாக்கள் முடிவில்லாமல் தொடர்கிறது.

சிறிலங்கா அரசினால் கொல்லப்படுக் கொண்டிருக்கும் மக்களைப் பாதுகாக்க உம்மிடமிருக்கும் மாயத் தீர்வு தான் என்ன?

எத்தினை முறை கேட்டாயிற்று ,சும்மா வறுமை, குப்பை என்று குப்பை கொட்டுவதிலும் கருத்து வறுமையிலும் தான் காலம் தள்ளுகிறீர் எப்போது உமது புதிய அணுகுமுறை பற்றியும், மக்களைப் பாதுகாப்பது பற்றியும் எடுத்து விடப் போகிறீர்?கேக்கப்பட்ட கேள்விகள் எதற்கும் இன்னும் பதில் இல்லயே?

யாழ் களத்தில் சிங்கள அரசின் சுயரூபத்தை சமாதானம் எழுதித்தான் அறிய வேண்டிய நிலையில் யாழ் களமும் இல்லை யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்களும் இல்லை. நாரதர் அரசியல் வறுமையில் பினாத்தும் புதுப் புழுடாக்கள் முடிவில்லாமல் தொடர்கிறது.

தமிழரின் சமாதான சமிக்கைகளை மறுதலித்து போரை நடாத்துவது சிறிலங்கா அரசு.இங்கே சமாதானம் வேண்டும் என்றால் அது சிறிலங்கா அரசிடம் தான் தங்கி உள்ளது.போரை நடாத்துவது சிறிலங்கா அரசு இங்கே போர் நிறுத்தப்பட வேண்டும் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றால் அதனைச் செய்ய வேண்டியது சிறிலங்கா அரசு. நிதர்சனமான உண்மைகள் அப்படி இருக்க நீர் எப்போதாவது இவற்றைப்பற்றி எழுதி இருக்கிறீரா? உண்மையிலையே சமாதானம் வேண்டும் என்பது உமது நோக்கு என்றால் நீர் அதற்கு எதிராக இருக்கும் சிறிலங்கா அரசை நோக்கி அல்லவா எழுதி இருக்க வேண்டும்.ஆனால் இங்கே உமது எழுத்துக்கள் முழுவதும் தமிழர்தரப்பே யுத்தத்தை நாடாத்துகிறது தமிழர் தரப்பே சமாதனாத்திற்கு எதிராக இருக்கிறது , என்றல்லவா இருக்கிறது?

ஓக்கே........ எங்கட சனத்தை ஸின்கல அர்மி குத்துயிரும் குலையுயிர்மாய் கொல்லும்போது, நாம் மட்டும் ஏன் பொறுமையக ஸின்கல அர்மிகாரனை மட்டும் கொல்லுறதுக்கு பிளான் போட்டு கொன்டிருக்கிரோம்? அப்படி போட்டு முடிச்சு அவனை கொல்லும் போது கூட பதிலுக்கு அவன் என்ன செய்வான்??? :D ???

நாங்கள் சர்வதேசதின் காலை புடிக்கும் போது அது எங்களய் கணக்கு எடுப்பதிலை....... பதிலுக்கு நாம் ஸின்கலவனை புடிக்கவைதால்....... என்ன? :(

இன்னுமோரு விசியம்.... ஸின்கல அர்மியின் பிளான் என்னவெண்டால் எங்களை உடனடியா மெய்ன் சண்டைக்கு இழுப்பது...... ஏல்.டி.டி.ஈ அடிக்கபோறது அவனுக்கு தெரியும். அவன் என்னவென்டால் டைமிங்கை குளப்பபாக்கிறான். அதுதான் நிலமை. சனத்துக்கு அடித்தால், ஏல்.டி.டி.ஈ தான் பதில் சொல்லவேண்டும்... அந்த இக்கட்டன நிலையை தர தான் அவனும் அவனுடைய ''''தமிழ் பேசும் அடியாள்களும்'''' முயற்ச்சி செய்கினமுங்கோ..

இதை நாம் தடுக்க வேணுமென்டால்...........நான் முதல் பந்தியில் சொன்ன பிளான் தான் வெலை செய்யும்.

Edited by Panangkai

நல்ல கருத்து மின்னல் மற்றும் துயவன்

படுகொலைகளை புலிகள் தடுக்கவில்லை எனக்கூறும் நெடுக்காலபோவான் அங்க போய் வரும் தோட்டாக்களை ஒவ்வொன்றாக ஏந்தி பொக்கட்டுக்குள் போடவேண்டியதுதானே

வணக்கம் பனங்காய்

உங்கள் பிளான் சரிவராது என்பது என்கருத்து உலகத்தின் காலை சிங்கள அரசு பிடித்தால் அதுக்கு நிச்சயமாக உதவிகிடைக்கும் ஏன் எனின் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு எண்ட முறையில் எல்லோரும் ஒண்டா சேந்து எங்களை குனியவச்சு குத்துவாங்கள் அதை நீங்கள் விரும்புகிறீர்களா ஏன் இவ்வாறான தாகுதல்களை புலிகள் செய்வதில்லை என கொஞ்சம் அரசியல் ரீதியாக சிந்தித்து பாருங்கள்

உங்களுக்கு விளங்கும்

என்ன குறுக்ஸ் இப்படி நக்கல்டிகிறீங்கள்

ரணில் வந்திருந்தால் இன்னும் சர்வதேச வலைக்குள சிக்கவச்சு இன்னும் 50 வருடத்துக்கு ஒண்டும் செய்யேலாம பண்ணி இருப்பான்.இப்பதான் கரையோர மோட்ட்ச்சிங்களவன் வந்திருகிறான் மோட்டுத்தனமாய் எல்லாம் செய்து ரணில் பின்னிய வலையில் இருந்து எம்மை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கிறார் மகிந்த என்ன இருந்தாலும் மகிந்தவுக்கு நன்றி சொல்வது எம் கடமை

Edited by ஈழவன்85

புதிய அணுகுமுறை என்ற மாயஜாலம் வேறு என்னவாக இருக்க முடியும்?

தமிழீழப் போராட்டத்தை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலிற்கு மாற்றி அமைத்தால் அழுத்தங்கள் அழிவுகள் குறையும் அங்கீகாரமும் கிடைக்கும் என்று கரிசனையாக நடிக்கிறதுக்கு பொருத்தமான நேரம் கனிந்து கொண்டு இருக்கிறது.

2007 இல் அழிவுகளும் அவலங்களும் அதிகரிக்க புலம்பெயர்ந்த தமிழரை நோக்கி இவ்வாறான பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய அணுகுமுறை என்ற மாயஜாலம் வேறு என்னவாக இருக்க முடியும்?

தமிழீழப் போராட்டத்தை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலிற்கு மாற்றி அமைத்தால் அழுத்தங்கள் அழிவுகள் குறையும் அங்கீகாரமும் கிடைக்கும் என்று கரிசனையாக நடிக்கிறதுக்கு பொருத்தமான நேரம் கனிந்து கொண்டு இருக்கிறது.

2007 இல் அழிவுகளும் அவலங்களும் அதிகரிக்க புலம்பெயர்ந்த தமிழரை நோக்கி இவ்வாறான பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.

புரியலயே???? :D

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் அவர்களே.. மாவிலாறைப் பிடிக்க முற்பட்ட போது புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் தாக்குதல் ஆரம்பித்துப் படை நிலைகளைக் கைப்பற்றி பின்னர் இன்று மதிக்கப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தந்தத்துக்கு மதிப்பளித்து பின்வாங்கி வந்தனர். அதன் பின்னர் மாவிலாறு சம்பூர் வாகரையின் ஒரு பகுதி என்று பலதும் போய் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செத்துப் போய்க் கிடக்கிறது.

ஆக விடுதலைப்புலிகள் மட்டுப்படுத்திய நடவடிக்கைகள் மூலம் அரச படைகளின் தாக்குதல் உக்கிரத்தைத் தணிக்க ஆரம்பத்தில் முயன்றனர். தற்போது அது அறவே கைவிடப்பட்டுள்ளது. ஆக அரசுக்கு விடுதலைப்புலிகளின் தாக்குதல் வலு என்பது ஏலவே அறியப்பட்ட ஒன்றுதான். அதை கட்டுப்படுத்த இந்திய அமெரிக்க பிரித்தானிய இராணுவ நிபுணத்துவங்களையும் சீன ரஷ்சிய பாகிஸ்தானிய இஸ்ரேலிய ஆயுதங்களையும் அரசு தருவித்தும் வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஒருவேளை புலிகள் தாக்குதல் நடத்தி யாழ்ப்பாணத்தை அல்லது திருமலையைக் கைப்பற்ற முனையும் வேளையில் இந்திய அல்லது ஏதாவது ஒரு அந்நிய சக்தியின் இராணுவத் தலையீட்டுக்கு சாத்தியம் உள்ளதையும் மறுதலிக்க முடியாது.

இந்த நிலையில் தமிழ் மக்களின் அழிவை யார் எப்படி தடுத்து நிறுத்துவது..?! அதற்கான சரியான மார்க்கம் என்ன..?!

ஒருவேளை போர்தான் என்றால் போரின் போது மக்களின் அழிவைத் தடுக்கவும் மக்களைப் பாதுகாக்கவும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன..?! மக்களை அழிவின் விளிம்பில் தள்ளி விட்டு இராணுவத் தீர்வுக்கும் அதன் மூலம் அரசியல் தீர்வும் என்ற நிலைப்பாடு எமது மக்களைப் பேரழிவில் தள்ளிவிடும்.

எமது மக்கள் யுத்ததை எதிர்கொள்ள தயார்படுத்தப்பட வேண்டும். வெறும் ஆயுதப் பயிற்சிகள் மக்களைப் பாதுகாக்கப் போதுமானவை அல்ல. அதேபோல் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியுள்ள மக்களின் பாதுகாப்பு என்பதும் முக்கியமாகிறது.

விடுதலைப்புலிகள் மக்களின் அழிவுகளைத் தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை என்பதே சுட்டிக்காட்டப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல தளங்களில் வெளிப்படையான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. அவையும் மக்களைச் சென்றடைகின்றனதான். அதற்காக மக்கள் போராட்டத்தின் பங்களிப்பினின்றும் ஒதுங்கி விடவில்லை. சிறீலங்கா அரசு போராட்ட ஆரம்பம் தொடக்கம் அதை நசுக்க பல பிரச்சாரம் செய்கிறது. அதையும் தாண்டியதாகத்தான் தமிழ் மக்களின் நியாயபூர்வ உரிமைக் குரல் இருக்கிறது. ஆனால் இன்று அந்த மக்கள் அநியாய அழிவுக்குள் சிக்கி உள்ளதை புலிகளால் தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கமே மக்களின் விசனங்களுக்கு முக்கிய காரணம்.

புலிகள் பெரிய அளவில் இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றில்லை. சர்வதேச கவனத்தை தமிழ் மக்களின் மீதான அனுதாபத்துக்கு திருப்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

புலிகள் சிங்கள மக்களைத் தாக்காமல் இருக்கக்காரணம்.. பயங்கரவாதிகள் என்ற கூற்றில் இருந்து தம்மை விடுவிக்கவும் என்பதை நீங்கள் மறைக்கலாம். முன்னர் பல தடவைகள் சிங்களக் கிராமங்கள் பல தாக்குதலுக்கு இலக்காகி இருந்தன. அதன் பின்னே ஊர்காவல்படை உருவாக்கப்பட்டது. இன்று தமிழ் மக்களை வழமை போல சிங்கள இராணுவம் தாக்குகிறது. இருந்தும் பழிவாங்கல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நிச்சயம் அது வரவேற்க வேண்டிய விடயம். அப்பாவி மக்களை இராணுவ இயந்திரத்துக்குப் பலியிடுவதில் எமக்கு உடன்பாடில்லை. ஆனால் தமிழ் மக்களைத் தாக்கும் சிங்களப் படைக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் போது அது தனது தாக்குதலைத் தணிக்க்க வாய்ப்புண்டு. ஆனால் அது சாத்தியப்படவில்லை. வெறும் அறிக்கைகளில் மட்டுமே சாத்தியப்படுகிறது. அந்த வகையில் தொடர் அழிவுகளைச் சந்தித்து வரும் தமிழ் மக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பின்னர் கிட்டத்தட்ட 3500 அப்பாவிகளைப் பறிகொடுத்து விட்டுள்ளனர். இதனால் மக்களின் போராட்டத்தின் மீதான மனோபலம் சிறுகச் சிறுக தகர்ந்து வருகிறது.

படையினருக்கு அஞ்சிய மக்கள் இப்போ அவர்களிடம் தஞ்சம் கோருகின்றனர். இது சுலபமான மாற்றமல்ல. மாற்றுவழி இன்றி மக்கள் எடுக்கும் இறுதி முடிவு..! ஆக மக்களின் மனோ நிலை என்பது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு உள்ளது போன்றே இருக்கும். இவர்களுக்கு எப்படி யுத்தத்தில் இருந்து விலகி இருந்து அங்கு மக்களின அழிவுகளை பார்த்து கதையளந்து கொண்டிருக்க முடிகிறதோ அதே நிலையில் தான் அங்கும் மக்களில் பலர் உள்ளனர். இவர்களுக்கு எப்படி தமிழீழம் தேவையோ அதே அளவில் தான் அவர்களுக்கும் தேவை இருக்கிறது. யாரும் அதைக் கட்டாயம் என்று இன்னும் எண்ணவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் ஊரைவிட்டு ஓடலாம் என்றுதான் பலரும் காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையில் களத்தில் நீண்ட போரை எப்படி நடாத்துவது..?! அது சாத்தியமா..??!

சாத்தியமாக வேண்டின் மக்களின் மனோபலம் அதிகரிக்கப்பட வேண்டும். மக்களின் போர் அழிவுகள் குறைக்கப்பட வேண்டும். மக்கள் போரின் அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இன்றேல் மக்கள் எங்கு பாதுகாப்போ அங்கு தங்களை தஞ்சப்படுத்த பின் நிற்கமாட்டார்கள். அது போராட்டத்தைப் பலவீனப்படுத்தும். போராட ஆளில்லாமல் வெளிநாட்டுப் பணமும் ஆயுதமும் தானே எழுந்து போராட முடியாது.

தொடர் விமானத்தாக்குதல்கள்..இராணுவத

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்கால போவனுக்கு புலிகளோ, இளந்திரையனோ பதில் அளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர்களிடம் நேரடியாகக் கேட்கலாம். இளந்திரையனை

அரசியல்துறை ஊடாகக் கதைக்க முடியும்! அதை விட்டுப் போட்டு யாழ்களத்தில் கேட்பதன் அர்த்தம் உமக்கு பதில் வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ புலிகளை சாடியாச்சு என்ற திருப்தி மட்டுமே தெரிகின்றது. புலிகள் பதிலளிக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு கேள்விக் கணை தொடுக்கும் வீரம் உலகத்தில் உம்மைi விட்டால் வேறு ஆள் இல்லைப் பாருங்கோ!

இன்னும் பலதையும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தாங்கி வரும் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக புலிகள் எடுத்த நடவடிக்கை என்ன...?! ஒரு வாரத்துள் பாதை திறக்காவிட்டால் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளந்திரையன் அறிவித்துப் பல வாரங்கள் கடந்து போயாற்று. வரவிருந்த லொறிகளையும் கடைசியில் காணவில்லை
முதலில் ஏ9 பாதை பூட்டப்பட்டு 5 மாதங்கள் தான் ஆகியிருக்கின்றன, நெடுக்காலபோவான் ஒரு வருடமாக எனப் பிழையான தகவலை வழங்குகின்றார். அதை விட யாழ்பாணம் என்பதில் 600 000 மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்குள் பதுங்கியிருக்கும் இருக்கும் சிங்கள இராணுவத்தை அழிக்கும் போது மக்களின் இழப்புக்களை வரவிடாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சிறுபிஞ்சுகளைக் கொன்று தூக்கில் போட்ட, அல்லது அப் பிஞ்சுகளும் புலிகளிடம் இருந்து பயிற்சி எடுத்தவர்கள் என்ற எதரியோடு தான் போராட வேண்டிக் கிடக்கின்றது. சொன்ன திகதியில ஒற்றை மனிதனாகப் போய், வீரம் காட்ட இது சினிமா இல்லையே!

ஆனால் இன்றைக்கு சிங்கள தேசம் கட்டாயம் யாழ்பாணத்துக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றது. ஏற்கனவே மனித உரிமை விடயங்களில் குற்றவாளியாக இனம் காணப்படும் சிங்கள தேசம் எவ்வளவு செலவளித்தும் யாழ்பாணத்துக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தாக வேண்டும்.

மக்கள் போராடும் வலுவை இழக்கும் வகையில் அல்லது போராட்ட நம்பிக்கையை இழக்கும் வகையில் புலிகளின் சில அறிக்கைகளும் செயற்பாடுகளும் மக்களுக்கு போதிய விளக்கம் அளிக்கவல்லனவாக இல்லாத பொழுது மக்கள் கேள்வி கேட்பதைத் தடுக்க முடியாது? மக்கள் தாங்கள் படும் துயரத்துக்கு விரைந்து முடிவு தேடவே விரும்புவர். அது அரசியல் சமாதான ரீதியில் இருப்பதையே அதிகம் விரும்புவர். அதற்கான வாய்ப்பு அகன்று கொண்டிருக்கும் வேளையில் போர்..செய்ய புலிகள் பிரகடனம் செய்து விட்ட நிலையில் மக்களின் பாதுகாப்புக்கு என்னென்ன ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் புலம்பலுக்கு காவடி அளித்த பதிலே போதுமானது.

குண்டுக்குப் பயந்து மக்கள் கொழும்புக்கு வந்துள்ளதாக கூறும் தூயவன் என்பவரின் கருத்துப்படி கொழும்பு சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டிடம். அங்கும் குண்டுகள் வெடிக்கின்றன. இருந்தும் மக்கள் போகின்றனர். அரசும் வரவேற்கிறது. சில பாதுகாப்பு நடைமுறைகளை சந்தேகத்தின் பாதுகாப்பின் பெயரில் அறிமுகம் செய்கிறது. குண்டுத்தாக்குதல்கள் நடக்காது என்று புலிகள் உத்தரவாதம் அளித்தால் கொழும்பில் இந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் இருக்காது. புலிகள் செய்வரா..??! . வன்னியிலும் பாதுகாப்பு நடைமுறைகள் இருக்கின்றன. அங்கு சிங்கள மக்கள் அடைக்கலம் புகுந்து பாதுகாப்புக் கோரினால் புலிகள் சுதந்திரமாக அவர்களை நடமாட விடுவரா..??!
யாழ்பாணத்தில் இருந்து கொழும்புக்கு அதிகளவு மக்கள் வந்தது என்றால் அது, 95ற்கு பிற்பட்ட காலத்தில் இராணுவத்திடம் யாழ்பாணம் மாட்டுப்பட்ட பின்னரே ஆகும். அப்போதும் யாழ்பாணத்திற்கும் வன்னிக்கும் இடையில் பாதை மூடப்பட்டிருந்தது. கொழும்பு வந்தவர்கள் தொழில்வாய்ப்புக்களைப் பெற்று அங்கேயே இருக்கின்றனர். இதுவல்ல பிரச்சனை.

இவர் சொன்னது போல கொழும்பில் மக்கள் வந்து சேர்ந்தது யாழ்பாணம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் மாட்டுப்பட்ட பின்னரே என்பதில் இருந்து புரிய வேண்டியது, அங்கு இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் மக்கள் வாழவிரும்பவில்லை என்பதே. அங்கே இராணுவத்தின் படுகொலைகள் வெளியே தெரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் கொழும்பில் சிறிய விடயம் நடந்தாலும் வெளிநாட்டுத் தூரகங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலமைக்கு சிறிலங்கா அரசு இருக்கின்றது.

யாழ்பாணத்தில் இதுவரைக்கும் 600க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போனார்கள். ஆனால் கொழும்பில் 100ற்றிச் சொச்சப் பேர் காணாமல் போன சந்தர்ப்பத்தில் அது பற்றிய விளக்கத்தையும் உறுதிமொழியையும் மகிந்த ராஜபக்சா வெளிநாட்டு தூதரங்களுக்கு வழங்க வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டார். மனித உரிமை விடயம் குறித்து சிறிலங்கா அரசிற்கு உலகநாடுகள் அழுத்தங்களைக் கொடுத்தனர். முன்பு புலிகளை மட்டும் குற்றம் சாட்டும் அமெரிக்கா சிறிலங்கா அரசையும் கண்டித்தது. இது தான் யாழ்பாணத்துக்கும் கொழும்புக்கும உள்ள வேறுபாடு.

மற்றது கொழும்பில் வெடிக்கின்ற குண்டுவெடிப்புக்களாகட்டும். துப்பாக்கிச் சூடு ஆகட்டும். அது தமிழ்மக்களை இலக்கு வைத்தல்ல என்றபோது எம்மக்கள் அஞ்சுவதற்கு சாத்தியமில்லை. பாதுகாப்பு நடைமுறைகளை நீக்க வேண்டுமானால், அதற்குப் புலிகள் உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று சிஙகள அரசின் கபடத்தனம் போலக் கருத்து எழுதுகின்றார். முதலில் இந்தக் குண்டுவெடிப்புக்களுக்கு யார் பொறுப்பு? ஏன் புலிகளைச் சாட்டுகின்றீர்? தமிழ்மக்களுக்கு தீர்வு கொடுத்தால் போராட்டமே இருக்காது என்பதைப் புரிந்து கொண்டு சிங்கள அரசு தீர்வு கொடுக்குமா? செய்யாது அல்லவா. பாதுகாப்புக் கொடுபிடிகள் தமிழ்மக்களுக்குப் புதிதல்ல. இலங்கையில் தேசிய அடையாள அட்டை வந்ததே, இனம் பிரித்து அடக்கி ஆள என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வன்னியில் தஞ்சமடையும் எந்த மக்களையும் புலிகள் அனுமதித்து தான் வந்திருக்கின்றனர். பல முஸ்லீம் குடும்பங்கள் பல ஆண்டுகளாகவே வாழ்கின்றனர். இவர் என்னவோ புதிதாக அனுமதி கேட்பது போலப் படம் காட்டுகின்றார்.

ஆக விவாதம் என்று இறங்கினீர்கள் என்றால் பல திக்குகளுக்குள்ளும் முடங்கிக் கிடக்கும் கேள்விகள் முளைக்கும்.

இதன் பெயர் விவாதமல்ல. உம்முடைய குதர்க்கம். அது யாழ்களத்தில் புதிதுமல்ல.

போராட்டம் என்பது மக்களுக்கானது. அவர்களின் உரிமைக்கானது. சிங்கள மக்களின் உரிமையை பாதுகாப்பை சிங்கள அரசு உத்தரவாதம் செய் கங்கணம் கட்டி நிற்பதற்கு ஈடான நிலை பலம் தமிழ் மக்களிடம் இல்லை. புலிகளும் அதை வழங்கத் தவறியதால் தான் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டனர். இன்னும் அது தொடர்கிறது. அப்படியான ஒரு நிலலயில் வெறும் அறிக்கைகளை எதிரிக்குப் போட்டியாக விட்டுக் கொண்டிருப்பதால் பாதிக்கப்படப் போவது அரச கட்டுப்பாட்டில் வசிக்கும் மக்களும் கட்டுப்பாட்டில் இல்லாத அப்பாவி மக்களுமே. அவர்கள் உரிமைகளைப் பெற விரும்பினரே தவிர உயிரிழக்க விரும்பவில்லை. எனவே உயிரிழப்புக்களை தமிழ் மக்கள் மத்தியில் குறைக்க வேண்டிய பொறுப்பும் அதற்கான சகல விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் விடுதலைப் புலிகளையே சாரும். அதை தவிர்க்கின்ற போது மக்களின் விசனம் அவர்களின் மீது திரும்புதல் தவிர்க்க முடியாதது. அது போராட்டத்தின் வலுவை குறைக்கவே வழி செய்யும்..!

போராட்டம் என்பது மக்களுக்கானது உண்மை தான். ஆனால் அந்தப் போராட்டத்தின் போராளிகளாக மக்களே களத்தில் நிற்கும் போது இது விதண்டவாதமாகத் தெரிகின்றது

சிங்கள மக்களுக்கான பாதுகாப்பைத் தமிழர் தரப்பே உறுதி செய்து நிற்கின்றது. அது நியாயமாகச் சிந்திப்பதால் தான் சிங்கள அரசின் உயிர் இழப்புககள் இல்லாது இருக்கின்றன தவிர, சிங்கள அரசின் செயற்பாட்டால் அல்ல. கட்டுநாயக்காவினுளோ, அல்லது கொழும்புத் துறைமுகத்திலோ ஊடுருவ முடிந்தவர்களுக்கு சிங்கள மக்களின் செயற்பாட்டை முடக்குவது கஸ்டமானதல்ல. ஆனால் எமக்க்கான எதிரி சிங்கள அரசு என்பதால் தான் அதை மட்டுமே கணிக்கப்படுகின்றது.

எப்போது என்னசெய்ய வேண்டும் என்று தலைவருக்குத் தெரியும். நீர் பாடம் படிப்பிப்பதாக இருந்தால் களத்திற்கு நேரடியாகப் போய்ச் செய்யலாம். எந்தவொரு படைநடவடிக்கையும் செய்யலாம். ஆனால் அதன் விளைவுகளையும் சிந்தித்தே செயற்பட வேண்டும்.

போராட்டத்தின் எதிராளியாக மக்கள் திரும்புவார்களா இல்லையா என்று லண்டனில் இருக்கின்ற உம்மால் கணிக்க முடிகின்றபோது தாயகத்தில் மக்களோடு நிற்கின்றவர்களுக்கு தெரியாமல் தான் போகும். புலத்தில் இருந்து போராளிகளை வழிநடத்த முனைந்தால் உப்படி அறிவான கருத்துக்கள் வந்து தான் ஆகும்.

போராட்டத்தில் மக்கள் பட்டினியாக ஆக்கி அவர்களின் உணர்வுகளை சிறுமைப்படுத்தலாம் என நினைக்கும் சிங்கள அரசுக்கும் உம் கருத்துக்கும் நிறைய வேறுபாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வசதியான மேற்குலக நாடுகலில் புலம் பெயர்ந்து இருக்கும் 10 லட்சம் தமிழர்கள் புலிகளுக்கு புதிய ஆளணிக்கு உதவ ஏன் முன்வரவில்லை?

இங்கு கருத்து எழுதும் நாரதர், தூயவன், ஈழவன், ஜனார்தனன் போன்றோர் வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இங்கிருந்து திரும்பிப்போய் தமிழீழத்தை மீட்கப் போராடவேண்டும் என்று கருத்து எழுதாது இருப்பது ஏன்? உங்களது விசைப்பலகையில் நான் குறிப்பிட்ட வார்த்தைகளை சும்மாவேணும் ஒரு முறை குத்திப்பாருங்கள் தெரியும் உங்களுக்கே உங்கள் விரல்கள் நடுங்குவதை உணர்வீர்கள்.

உண்மையில் நேர்மையாக ஈழப்போராட்டத்தை நேசிக்கின்றீர்கள் என்றால் புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்பிப்போய் போராடுகள் என்று உங்களால் எழுத முடியுமா? அவ்வாறு முன் வருபவர்களை நீங்கள் தலைமைதாங்கி வன்னிக்கு அழைத்து செல்லத் தயாரா? இல்லையென்றால், உங்களது தனிநாடுதான் இறுதி இலட்சியம் என்பதும் விசைப்பலகையில் முன் குந்தியிருந்து நீங்கள் செய்யும் நேர்மை இல்லாத அரசியல் சுத்துமாத்து.

நாம் தொடை நடுங்கியள் தான் யாரு இல்லை எண்டது.இல்லை எண்டா அங்க நிண்டல்லோ சண்டை பிடிச்சிருப்பம்.ஆனால் நாங்கள் தொடை நடுங்கியள் எண்டாலும் ,உண்மையை ,நியாயத்தை ஒரளக்காவது பேசுகிறோம்.இங்கே நீரும் மற்றவர்களும் செய்வது என்ன.இங்கே ஓடி வந்து விட்டு அங்கு போரிடுபவர்களுக்கு ரிமூட் கொன்றோலில அங்கடி இங்கடி எண்டு கட்டளை சொல்வது மட்டும் இல்லை அவங்கள் பிழை விட்டுடாங்கள் எண்டு தளபதிகளைப் போலவும் இராணுவ அரசியல் வல்லுனர்களைப் போலவும் கதையளக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம்?

உங்கள் அயோக்கியத் தனத்தை அம்பலமாக்க எமக்கு இருக்கும் நேரத்தைச் செலவிடுவது நாங்கள் அங்கு போரடுபவர்களுக்குச் செய்யும் ஒரு சிறிய பங்களிப்புத் தான்.ஓடி வந்தனீங்கள் செய்வது பச்சைத் தூரோகத் தனம்.உங்களுக்கு இருப்பது வெற்று சுய பிம்பம்.

உள்ளே இருப்பதோ கொறையான சொல்லாடல்களும் ,மக்களிடம் கரிசனை எங்கிற வெறும் வேடமும் தான்.மக்களிடம் கரிசனை என்றால் அங்கிருந்து மக்களோடு மக்களாக போராட வேண்டியது தானே? இங்கிருந்து ஏன் புலுடா விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

நாரதர் சொன்ன பதிலே என்னுடையதும். நானும் தொடை நடுங்கி தான். ஆனால் தொடைநடுங்கி எண்ட பிறகு புலிகளுக்கு புலத்தில் இருந்து கேள்வி கேட்கவோ, நீ அப்படிப் பார், இப்படி பார் என்று அறிவுரை கூறி பெருமிதம் கொள்ளவோ மாட்டோம்.

மக்கள் கஸ்டப்படுகின்றார்கள் என்று களத்தில் இறங்குபவனே வீரன். புலத்தில் இருந்து அறிவுரையும், அசிங்கமும் செய்பவனல்ல. புலிகளிடம் நீங்கள் கேட்கின்ற கேள்வியை உங்களிடம் யாரும் கேட்டால், நீங்கள் மக்களுக்காக என்ன செய்தீர்கள் என்றோ, அல்லது சிங்கள ஆக்கிரமிப்பைத் தடுக்க என்ன செய்தீர்கள் என்றோ கேட்டால் புலத்திற்கு அகதியாக கள்ளப் பாஸ்போட்டில் ஓடிவந்தனான் எண்டு சொல்லுங்கோ! அறிக்கை எழுதி மக்கள் துயரத்தில் பங்கெடுக்கின்றேன் என்று சொல்லுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் அவர்களே.. மாவிலாறைப் பிடிக்க முற்பட்ட போது புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் தாக்குதல் ஆரம்பித்துப் படை நிலைகளைக் கைப்பற்றி பின்னர் இன்று மதிக்கப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தந்தத்துக்கு மதிப்பளித்து பின்வாங்கி வந்தனர். அதன் பின்னர் மாவிலாறு சம்பூர் வாகரையின் ஒரு பகுதி என்று பலதும் போய் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செத்துப் போய்க் கிடக்கிறது.

ஆக விடுதலைப்புலிகள் மட்டுப்படுத்திய நடவடிக்கைகள் மூலம் அரச படைகளின் தாக்குதல் உக்கிரத்தைத் தணிக்க ஆரம்பத்தில் முயன்றனர். தற்போது அது அறவே கைவிடப்பட்டுள்ளது. ஆக அரசுக்கு விடுதலைப்புலிகளின் தாக்குதல் வலு என்பது ஏலவே அறியப்பட்ட ஒன்றுதான். அதை கட்டுப்படுத்த இந்திய அமெரிக்க பிரித்தானிய இராணுவ நிபுணத்துவங்களையும் சீன ரஷ்சிய பாகிஸ்தானிய இஸ்ரேலிய ஆயுதங்களையும் அரசு தருவித்தும் வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஒருவேளை புலிகள் தாக்குதல் நடத்தி யாழ்ப்பாணத்தை அல்லது திருமலையைக் கைப்பற்ற முனையும் வேளையில் இந்திய அல்லது ஏதாவது ஒரு அந்நிய சக்தியின் இராணுவத் தலையீட்டுக்கு சாத்தியம் உள்ளதையும் மறுதலிக்க முடியாது.

மாவிலாறு பிரச்சனை தொடர்பான நடவடிக்கைகளை ஊடகங்களே பெரிது படுத்தியதே தவிர புலிகள் அல்ல. மாவிலாறு சமர் ஒரு அரசியல் நகர்வாகக் கூட இருக்கலாம். தொடர்ந்து காலத்தை இழுத்தடித்து மக்கள் படுகொலைகளைச் செய்த சிறிலங்கா அரசுக்கு தூண்டுதல் செய்வதாகக் கூட இருக்கலாம். இன்றைய நிலமைகள் சமாதானத்தைக் குழப்பிய நிலையைப் பொறுப்பெடுக்க வேண்டிய நிலமைக்கு இலங்கையரசு தான் தள்ளப்பட்டுள்ளது. இன்றைக்கு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து இரு தரப்பும் இருப்பதாகச் சொல்லும் நிலமையில் நில ஆக்கிரமிப்பைச் செய்தது சிங்கள அரசே என்ற நிலையைச் சர்வதேசம் புரிந்துள்ளது. இதனால் தான் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வெளியேறும் முயற்சியைச் சிங்கள அரசு பீதியுடன் பார்க்கின்றது.

மற்றும்படி வழமை போல புலிகள் அப்படிச் செய்ய வேணும், இப்படிச் செய்ய வேணும் என்று புலத்தில் இருந்து வழமையாக ஓடர் கொடுக்கின்றீர். முந்தி யாழ்களத்தில் இந்த ஓடர் கொடுக்கின்ற வேலையால் தான் வாங்கிக் கட்டினதை மறந்து விட்டீர் போலும்.

:o

இங்கு கருத்து எழுதும் நாரதர், தூயவன், ஈழவன், ஜனார்தனன் போன்றோர் வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இங்கிருந்து திரும்பிப்போய் தமிழீழத்தை மீட்கப் போராடவேண்டும் என்று கருத்து எழுதாது இருப்பது ஏன்?

தமிழர் என்று சொல்லிக்கொண்ட சில புல்லுருவிகளுக்கு, இவ்விடத்தில் எனது பெயரும் வந்தபடியினால் எழுதுகின்றென். நான் வெளிநாட்டில் இருந்து கொண்டல்ல எழுதுவது, சிங்கத்தின் வாயிலிலிருந்து கொண்டு. நான் வெளிநாட்டில் இருக்கும் போழுது கூட எம்மாலான சகல பங்களிப்புளையும் செய்தவன். அத்துடன் இங்கு இப்படிப் பினாத்தும் வெத்து வேட்டுகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். ஈழப் போராட்டத்தின் சுழற்சியின் அச்சு முதன்மைப்படுவது புலம் பெயர் தமிழர்களின் பொருளாதார பலம் தான். அப்படியிருக்க அவர்களை திரும்பி வா வந்து போராடு என்று சொல்லும் முட்டாள்களுக்குள் எம்மையும் சேர்ப்பது தவறு. தாம் இருக்கும் நாடுகளில் இருந்து பொருளாதார உதவியுடன் விடுமுறையில் வந்த நானறிந்த சிலர் வன்னிக்குச் சென்று தமது திறமைகளை நிபுணத்துவங்களை, அங்குள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். உண்மையில் ஈழ போராட்டத்தை ஆதரிப்பவர்கள் எவரும் புலம் பெயர்ந்தவர்களும் வந்து போராடு என்று ஒரு போதும் கூற மாட்டார்கள். அவர்களின் பொருளாதார பலமே போதும் இங்குள்ளவர்கள் துணிவுடனும் மகிழ்வுடனும் போராட.

ஈழத்திலிருந்து

ஜானா

மற்றும்படி வழமை போல புலிகள் அப்படிச் செய்ய வேணும், இப்படிச் செய்ய வேணும் என்று புலத்தில் இருந்து வழமையாக ஓடர் கொடுக்கின்றீர். முந்தி யாழ்களத்தில் இந்த ஓடர் கொடுக்கின்ற வேலையால் தான் வாங்கிக் கட்டினதை மறந்து விட்டீர் போலும்.

:o

எத்தினை தரம்தான் ஒருவரை தோலுரிச்சு காட்டுவியள்...??? உந்த நிரந்தரமாய் ஒரு கொள்கையும் கிட்டாமல் எல்லாரும் எங்களை காப்பாத்தவேணும் என்டு இப்பவும் கனவிலை வாழுற கூட்டம்... தாங்கள் சும்மா இருக்க ஆராவது போராடி தங்களை சந்தோசமாய் வைத்திருக்க வேணுமாம்...

ஒரு கதைக்கு விவரமான தூயவனிட்டையே கேக்கிறன் ஒருவேளை சண்டையை இப்ப தொடங்கி இடங்களை கைப்பற்றி தனிநாடு அமைச்சால் உடனேயே சாப்பாடு கிடச்சிடுமே...??? இல்லை உங்களுக்கு வீடு தேடி வந்து சர்வதேசம் நிவாரணம்தருமே...??? எதுக்கும் காலம் இருக்கு செய்ய வேண்டிய வேலைகள் ஏற்பாடுகள் நிறைய இருக்கு.. இப்ப சாகிறதையும் விட அதிகமாக சண்டையை உரிய காலத்தில் தொடங்காவிட்டால் பட்டினியாலையும் நோயாலையும் செத்துப்போகும்...

எனக்கு தெரிய புலிகள் சரியான ஏற்பாடுகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்... அதிலை நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை... வேண்டாதவர்களுக்கு எப்படி விளக்கம் சொன்னாலும் விளங்காது..

இன்று புலம் பெய்ர்ந்து வாழும் தமிழர்களில் சிலர் புலிகளின் போராட்ட சரித்திரத்தை புரட்டிப்பார்க்க மறுக்கின்றனர். மாறாக ரி.பி.சி., தேனீ போன்றவற்றின் அரசியல் ஆய்வுகளை தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர். நெடுக்காலபோவார் போன்றவர்கள் கேட்கும் கேள்விகளையே இவர்களும் கேட்கின்றனர். இவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் திறமை என்னிடம் இல்லை.

இந்த உரையாடல் என்போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குட்டையைக் குழப்புவதற்காகத் திரியும் நபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தூயவன், நாரதர் போன்றவர்களின் பதில்கள் சிறப்பாக இருந்தது.

சமாதான காலத்தில் முளைத்த காளான்கள் தாம் பெருவிருட்சமாக வளரப்போவதாக எண்ணி ஊளையிடுகின்றன.

ஆனால் நாளை வீசப்போகும் ஆதவனின் வெப்பக் கதிர்களால் இவை இருந்த இடம் தெரியாமல் போகுமென்பது உறுதி.

புலிகள் படை எதிரியை விரட்டி, ஆலமரம்போல் விழுதுகளை உறுதியாக தமிழர் பகுதியெங்கும் ஊன்றத்தான் போகிறது.

Edited by lisa01

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புலம் பெய்ர்ந்து வாழும் தமிழர்களில் சிலர் புலிகளின் போராட்ட சரித்திரத்தை புரட்டிப்பார்க்க மறுக்கின்றனர். மாறாக ரி.பி.சி., தேனீ போன்றவற்றின் அரசியல் ஆய்வுகளை தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர். நெடுக்காலபோவார் போன்றவர்கள் கேட்கும் கேள்விகளையே இவர்களும் கேட்கின்றனர். இவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் திறமை என்னிடம் இல்லை.

இந்த உரையாடல் என்போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குட்டையைக் குழப்புவதற்காகத் திரியும் நபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தூயவன், நாரதர் போன்றவர்களின் பதில்கள் சிறப்பாக இருந்தது.

சமாதான காலத்தில் முளைத்த காளான்கள் தாம் பெருவிருட்சமாக வளரப்போவதாக எண்ணி ஊளையிடுகின்றன.

ஆனால் நாளை வீசப்போகும் ஆதவனின் வெப்பக் கதிர்களால் இவை இருந்த இடம் தெரியாமல் போகுமென்பது உறுதி.

இங்கு கற்பனையில் அமைந்த தனிநபர்கள் வசைபாடலைத் தவிர எதுவும் உருப்படியான மேற்குறிப்பிட்டவர்களால் எழுதப்படவில்லை.

புயல் கிளம்பும் வெப்பக்காற்றுப் பறக்கும் எரிமலை வெடிக்கும் என்று சொல்லிச் சொல்லியே 3500 பொதுமக்களின் உயிர் காவு கொள்ளப்பட்டாயிற்று. எனியும் மக்கள் அழிவைத் தாங்கிக் கொள்ள என்ன வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. அம்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் நிர்கதியாகி நிற்கின்றன. போராடும் மனபலமிழந்து நிற்கின்றனர். இச்சந்தர்ப்பம் எதிரிக்கு மட்டுமே சாதகமாக அமையும்..!

எமது மக்கள் மீதான அழிவுகள் தடுக்கப்பட நடவடிக்கைகள் அவசியம். போரின் போது பாதிக்கப்படும் மக்கள் பற்றிக் கவலை இன்றி சாகும் இன்னும் சாகும் என்று ஏதோ கோழிக்கடையில் கோழி விற்பது போல மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத மனோநிலையில் எல்லோரும் இருக்க முடியாது.. இந்த நிலை எனியும் அனுமதிக்க முடியாதது. மக்கள் போரின் போதும் பின்னரும் அவதியுறுவதில் இருந்து பாதுகாக்கப்பட முற்காப்பு நடவடிக்கைகள் சேவை வழங்கல்கள் பாதுகாப்பு வலயங்கள் பாதுகாப்பான நகர்வுகள் வாழ்விடங்கள் என்று அமைத்துக் கொடுக்க நடவடிக்கைகள் அவசியம். சர்வதேச நிறுவனங்களோடு இணைந்து போரில் மக்களைக் கேடயமாக்குவதில் இருந்து விடுவிக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பும் அத்தியாவசிய சேவை வழங்கலும் தடையின்றி கிடைக்க வகை செய்ய வேண்டும்.

போரின் போது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரவும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகாமல் இருக்கவும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும் சர்வதேசத்தை அணுக வேண்டிய வேளை வந்திருக்கிறது. புலிகள் இவற்றை உத்தரவாதப்படுத்த முனைய வேண்டும். அரசு புலிகள் மக்களைக் கேடயமாகப் பாவிக்கின்றனர் என்ற கருத்தோடு தமிழ் மக்களின் படுகொலைகளை நியாயப்படுத்துவதை தொடர்ந்து அனுமதிப்பின் உக்கிர மோதல்களின் போதும் அப்பாவி மக்கள் அழிக்கப்படுவது தவிர்க்க முடியததாக இருக்கும். இவை குறித்து புலிகள் மக்களுக்கு தெளிவூட்டவும் சர்வதேச உதவிகளுடன் உண்மை நிலையை விளக்கவும் முன் வர வேண்டும். மன்னார் தாக்குதலில் ஆயரின் குரல் வெளிவந்தது போல சர்வதேச அங்கீகாரமுள்ள குரல்கள் எமது மக்களின் அழிவுகளை தடுக்கவும் முன்னோடியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் முன் வர வேண்டும்.

கொழும்பில் ஆட்கடத்தல் குறைவு எங்கின்றார் தூயவன் என்பவர். அங்கு நடக்கும் சம்பவங்களுக்கு தூதரகங்கல் குரல் கொடுக்கும் எங்கிறார். கொழும்பில் வைத்து பல தமிழர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டதுக்கும் தூதரகங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? கடத்தப்பட்ட பேராசிரியரின் கதியே தெரியவில்லை. பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகள் கொழும்பில்ல் சுட்டுக் கொள்ளப்பட்டதை ஏன் தூதரகங்கள் தட்டிக் கேட்கவில்லை. ஏன் தடுக்க முனையவில்லை. சிறைகளில் வாடும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்களை ஏன் தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிடவில்லை. விடுவிக்க கோரவில்லை. சிறைகள் மீதான தாக்குதல்கள் ஏன் தடுக்கப்படவில்லை.

தங்களின் வசதிக்காக கொழூம்புக்கு ஓடிவந்த தமிழர்கள் தேடிக் கொண்ட காரணமே தூதர குரல் என்பது. தூதர்கள் யாழுக்குப் போகின்றனர் திருமலைக்குப் போகின்றனர். மக்களைச் சந்திக்கின்றனர். வன்னிக்குப் போகின்றனர் சிலர். ஏன் இவர்கள் கொழும்புக்கு அன்றி வன்னியில் புகலிடம் தேடக் கூடாது. ஆக கஸ்ரப்படும் மக்கள் மட்டும் போராடி அழிய வேண்டும். நாங்கள் அதைக் காட்டி தப்பி ஓட வேண்டும். தூர இருந்து கமோன் கமோன் என்று குரல் கொடுக்க வேண்டும்.

புகலிடத்தில் பதுங்கியுள்ள தமிழர்களும் இதே வகையினர்தான். பணத்தைக் கொடுத்தால் கடமை முடிகிறது என்று குறுகிய வட்டத்தில் விடுதலையை தரிசிக்க முனைகின்றனர். ஆயிரம் இளையோர் அமைப்புக்களை ஊருக்கு ஊர் ஒவ்வொரு ஊரின் பெயரில் இயக்கும் இவர்கள் பொங்கல் பொங்கத்தான் உள்ளனரே தவிர போர் ஒன்று உருவாகும் சூழலில் தாயகத்துக்குச் சென்று மக்களுக்கான மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளை செய்ய எத்தனை பேர் முன்வந்துள்ளனர். அதற்காக பிரச்சாரங்கள் செய்கின்றனர்.

அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு பனர் பிடிப்பவர்கள் ஏன் தாயக மக்களுக்கு நிவாரணங்களையும் மருத்துவா வசதிகளையும் சர்வதேச நிறுவனங்களின் உதவியோடு கொண்டு செல்லவும் அம்மக்களோடு கலந்து அவர்களின் மனோபலத்துக்கு உறுதியூட்டவும் விளையவில்லை.

இவர்களை ஆயுதம் கொண்டு செல்லவோ போர் புரியவோ கோரவும் இல்லை. சர்வதேச மனித உரிமைகளின் கீழ் போர் சூழல் நிவாரண சூழல்களில் உதவும் மனிதாபிமான முயற்சிகளின் கீழ் ஏன் இவர்களால் செயற்பட முடியவில்லை. காரணம்..போர் பற்றிய பீதி. தங்கள் பிள்ளைகள் சாவுக்கு தப்பி வாழ வேண்டும். அடுத்தவன் பிள்ளை போராடி வீழ அதில் கூச்சல் போட வேண்டும்.

தமிழர்களின் சுத்தச் சுயநலத்துக்கு மக்களின் ஒரு பகுதியினரைப் பலியிடத்தான் வேண்டுமா? போர் ஒன்று தொடர்ந்தால் அதைக் காட்டி அசைலம் அடிக்கவும் மறுக்கப்பட்ட அசைலம் கிடைக்க வழி தேடும் கூட்டம் தாயகம் சென்று போரிற்கு அப்பாலான மனிதாபிமான பணிகளைச் செய்யக் கூட முன்வருவரா..??!

நிச்சயம் இல்லை. இப்படியானவர்கள் பல இடங்களில் இருந்தும் சிங்களவர்களின் படைப் பாதுகாப்பின் கீழிருந்து கொண்டு தூதரகப் பாதுகாப்பு இருக்கிறது என்ற பாதுகாப்பு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழீழமும் வேண்டும் எங்கின்றனர். தூதரகப் பாதுகாப்பும் அரசின் பாதுகாப்பு உத்தரவாதமும் நடைமூறையும் அமுலானால் இவர்கள் தமிழீழத்தைக் கைவிடவும் தயார் என்பதையே மேற் கூறியவர்களின் கருத்துக்கள் சொல்கின்றன.

இதுவும் ஒருவகையில் மக்களின் போராடும் திறனை மழுங்கடிக்கும் நடவடிக்கையே. மக்களின் போராடும் மனோபலம் அதிகரிக்க வேண்டின் புகலிட்டத்தமிழர்கள் தாயகத்தமிழர்களை மிக நெருங்க வேண்டும். அம்மக்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் எதிரியிடம் பாதுகாப்புத் தேட வேண்டிய சூழல் உருவாவதைத் தடுக்க வேண்டும். இதை எல்லாம் செய்ய புலிகளும் முயற்சிக்க வேண்டும். அன்றில் மனோபலம் குன்றிய மக்களை அரசும் சர்வதேச அரசுகளும் தமக்கு ஏற்றபடி பயன்படுத்த ஒட்டுக்குழுக்களையும் அதன் உறுப்பினர்களையும் பாவிப்பது தடுக்க முடியாத்தாக்கும்..!

சிந்தியுங்கள். அடுத்தவரைப் பற்றி கற்பனையில் வசைபாடுவதை நிறுத்தி போரோ சமாதானமோ தாய மக்களோடு உறவுகளை நெருக்கமாக்கி அவர்களின் துன்பங்களை தீர்க்கவும் பகிரவும் பலரும் சிந்திக்க வேண்டும். அதுவே எமது மக்களின் மனோபலத்தை அதிகரிக்கும். வெறும் வீர வசனங்களும் அறிக்கைகளும்.. அரச இராணுவ இயந்திரம் தகர்த்து வரும் தாயக மக்களின் மனோபலத்தை போராட்ட ஓர்மத்தை தக்க வைக்க மாட்டாது. இதில் புலிகள் பல தடவைகள் தவறு செய்துள்ளனர். அதை மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாது தாயக மண்ணில் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ள மக்களின் மனோபலமும் இதில் கவனிக்கப்பட வேண்டும். அவர்களை இலகுவாக அணுகக் கூடியவர்களாக உள்ள புலம்பெயர்ந்த சமூகத்தினர் அவர்களின் மனோபலத்தை தக்க வைக்கக் கூடிய நடவடிக்கைகளை சர்வதேச உதவி நிறுவனங்களின் பாதுகாப்புடன் இராணுவப் புலனாய்வுக் குழுக்களின் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு அஞ்சாமல் செய்ய முன்வர வேண்டும். போர்ச் சூழலில் அம்மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தவும் அவர்கள் தங்கியுள்ள இடங்கள் தாக்குதலற்ற வலயங்கலாக்கவும் அத்தியாவசிய உதவிகள் கிடைக்கவும் உரிய முன்னேற்பாடுகள் அவசியம்.இன்றேல் மக்களின் மனோபலமும் அழிவுகளும் பல மடங்கு தமிழர்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு போராட்டத்தை நசுக்கும் அளவுக்கு அரசாலும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளாலும் திணிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும்..! :o

எல்லாரும் வடிவாக் கேட்டுக்கொள்ளுங்கோ,

சர்வதேசம் ............ செய்ய வேணும்,

புலத் தமிழர் ........ செய்ய வேணும்,

புலிகள் ................செய்ய வேணும்,

நாரதர்................. செய்ய வேணும்,

தூயவன்.............. செய்ய வேணும்,

xxxxxxxx.............. செய்ய வேணும்,

YYYYY .................செய்ய வேணும்,

எல்லோரும் என்ன என்ன செய்ய வேணும் எண்டு வடிவா விஞ்ஞான மெஞ்ஞான ரீதியா ஆய்வு செய்து சொல்லிப்போட்டன்,

இப்ப நான் சாப்பிட்டுப் போட்டு பங்கருக்க நித்தரை கொள்ளப் போறன்,

பிறகு நாளைக்கு வந்து நியுஸைப் பாத்துப்போட்டு மிச்சம் எல்லாரும் என்ன என்ன செய்ய வெண்டும் எண்டு எழுதுவன்.

எல்லாரும் கேட்டு நடவுங்க என்ன?

எல்லாரும் வடிவாக் கேட்டுக்கொள்ளுங்கோ,

சர்வதேசம் ............ செய்ய வேணும்,

புலத் தமிழர் ........ செய்ய வேணும்,

புலிகள் ................செய்ய வேணும்,

நாரதர்................. செய்ய வேணும்,

தூயவன்.............. செய்ய வேணும்,

xxxxxxxx.............. செய்ய வேணும்,

YYYYY .................செய்ய வேணும்,

நெடுக்ஸ்........ சொல்ல வேணும்

சிலருக்கு புரிந்துகொள்ள முடிவதில்லை

வேறு சிலருக்கு புரிந்துகொள்ள விருப்பமில்லை

இன்னும் சிலர் தாம் விரும்பியதை மட்டுமே புரிந்துகொள்வார்கள்

அடுத்த ஒரு சிலரை புரிந்துகொள்ளாமலே இருக்க விட்டுவிடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வடிவாக் கேட்டுக்கொள்ளுங்கோ,

சர்வதேசம் ............ செய்ய வேணும்,

புலத் தமிழர் ........ செய்ய வேணும்,

புலிகள் ................செய்ய வேணும்,

நாரதர்................. செய்ய வேணும்,

தூயவன்.............. செய்ய வேணும்,

xxxxxxxx.............. செய்ய வேணும்,

YYYYY .................செய்ய வேணும்,

எல்லாரும் கேட்டு நடவுங்க என்ன?

:o :P

Edited by kirubans

kurukaalapoovan க்கு அன்பின் நிமித்தம் நாதன் எழுதும் அன்பு மடல் தயவு செய்து உங்கள் உள்ளக்குமுறல் நலமானது தான் ஆனால் எம்மையே நீங்கள் காட்டிக்கொடுப்பது போன்ற சில வருடலும் இருப்பது போன்று உள்ளது காரணம் தாங்கள் வாதிடும் விதம் சில இடங்களில் தங்களின் நியாயத்தன்மையை கெடுக்கின்றது போன்று உள்ளது எனவே வாதிடுவது சுகம் ஆனால் போராட்டத்தில் புரிதலோடு நின்று அந்த மக்களின் இழப்புக்களை சந்தித்து வாழ்ந்து அவர்களையும் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களோடு ஒன்றாகிவிட்டு அவர்களின் ஒத்துளைப்போடு மண்ணில் நின்று போராடும் எமது மண்ணின் மைந்தர்கள் மேலானவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது எனவே தயவு செய்து உங்கள் வாதப்பிரதி வாதங்கள் எமது மைந்தர்களையும் புண்படுத்தாதவிதமாக பார்த்துக்கொள்ளுங்கள்

நன்றி

இப்படிக்கு

இவன் நாதன் தோமஸ்

இப்ப முடிவா என்ன சொல்லியிருக்கு?

புலிகளுக்கு காலக் கெடு குடுக்கப்பட்டிருக்கோ பிழைகளை திருத்தி பொறுப்பா நடக்கிறதுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

http://www.nitharsanam.com/?art=22021

இந்தப்போராளி கரும்புலியாகியது நம் எல்லொருக்குமான விடுதலையை வேண்டித்தான். குதர்க்கக் கருத்துச் சொல்பவர்கள் தயவுசெய்து ஒரு நிமிடம் இவர் போன்ற ஜீவன்களையும் நினைத்துப்பாருங்கள்.

சிந்தியுங்கள். அடுத்தவரைப் பற்றி கற்பனையில் வசைபாடுவதை நிறுத்தி போரோ சமாதானமோ தாய மக்களோடு உறவுகளை நெருக்கமாக்கி அவர்களின் துன்பங்களை தீர்க்கவும் பகிரவும் பலரும் சிந்திக்க வேண்டும். அதுவே எமது மக்களின் மனோபலத்தை அதிகரிக்கும். வெறும் வீர வசனங்களும் அறிக்கைகளும்.. அரச இராணுவ இயந்திரம் தகர்த்து வரும் தாயக மக்களின் மனோபலத்தை போராட்ட ஓர்மத்தை தக்க வைக்க மாட்டாது. இதில் புலிகள் பல தடவைகள் தவறு செய்துள்ளனர். அதை மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாது தாயக மண்ணில் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ள மக்களின் மனோபலமும் இதில் கவனிக்கப்பட வேண்டும். அவர்களை இலகுவாக அணுகக் கூடியவர்களாக உள்ள புலம்பெயர்ந்த சமூகத்தினர் அவர்களின் மனோபலத்தை தக்க வைக்கக் கூடிய நடவடிக்கைகளை சர்வதேச உதவி நிறுவனங்களின் பாதுகாப்புடன் இராணுவப் புலனாய்வுக் குழுக்களின் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு அஞ்சாமல் செய்ய முன்வர வேண்டும். போர்ச் சூழலில் அம்மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தவும் அவர்கள் தங்கியுள்ள இடங்கள் தாக்குதலற்ற வலயங்கலாக்கவும் அத்தியாவசிய உதவிகள் கிடைக்கவும் உரிய முன்னேற்பாடுகள் அவசியம்.

நெடுக்கால போனவர் நாங்கள் எல்லாரும் தான் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் உண்மை அத்தோடு விடுதலையை விரைவு படுத்த வேண்டும் என்றால் நாம் எல்லோரும் தான் பாடுபடவேண்டும் அதற்காக நாம் தனிப்பட்ட கருத்துக்களுக்காக விடுதலைப்புலிகள் சண்டை செய்ய வேண்டும் என்று கருத்துக்கொள்வது தவறு என்று கருதுகின்றேன் காரணம் இன்று அவர்கள் தங்களால் எப்படி எமது தாயகத்தை மீட்க முடியும் என்று கட்டுமானப்பணியை முடக்கி விட்டு உள்ளனர் ஆனால் அதை நாம் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யாமல் அவர்களின் பால் அவர்களின் ஒருத்தனாக அவர்களின் நிலையில் இருந்து நாம் விடுதலை போராட்டத்தை பார்ப்பதுதான் சிறந்த வழி அதை விட்டு விட்டு உடனையே நாம் சிந்திக்குமாப்போல் அகலக்கால் பதித்து வாங்கி கட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவே தான் புலிகள் இப்படி காலம் தாழ்த்துவது என்று எண்ணத்தோன்றுகின்றது முடிந்தாள் அமைதியாக இருங்கள் இல்லையென்றால் தொந்தரவு செய்யாமல் இருந்து உபத்திரவம் செய்யாமல் இருந்து புரிந்து கொள்வது மேல் என்று கருதுகின்றேன் . இன்னும் நம்மில் பலர் கேள்வி கேட்க தெரிந்தவர்கள் ஆனால் விடையை கூறும் என்று யாராவது சொன்னால் அந்த இடத்தில் இருக்காமல் மாறிவிடுவார்கள் எனவே நாம் எதையும் கூறுபோடாமல் விடுதலையை விரைவாய் பெற்றிட வித்திடுவோம் வாரீர் தாய் மண் என்றும் எங்களை எதிர்பார்த்து நிக்கின்றது வெறுங்கதை கதைக்காது விதையாக வீழ்ந்தாள் நாளைய சமூதாயம் ஆவது நின்மதியாக வாழும் என்று கருதுகின்றேன் புலம் பெயர்ந்த நாட்டில் நாம் வாழ்ந்தாலும் தமிழன் என்பதை மறக்க வேண்டாம் எனவே குனியக் குனியக் குட்டுபவன் மடையன் என்பது பழைய மொழி, புது மொழி துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு என்பது எமது தலைவன் முதுமொழி எனவே தமிழனாய் வாழ தனித்துவமாய் வாழ நமக்கென்று நாடு வேண்டும் அதற்காக நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்போம் வாரும் நன்றி

நாதன் தோமஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கின் நெடிய பதிவின் சாரத்தை சுருக்கமாகத்தருகிறேன்

மக்கள் தேவைகள் போருக்குள்ளும் நிறைவாக கிடைக்க வழி செய்ய வேண்டும் சர்வதேச நிறுவனங்களின் மேற்பார்வையில்.

மக்கள் உரிமைகளை சர்வதேசத்தைக் கொண்டு பேணவேண்டும்.

கொளும்பிலும் ஆட்கடத்தல் மலிவாகவே நிகள்கிறது. தூதரகங்கள் ஏன் அதை தட்டிக் கேட்க்கவில்லை.

தமில் அரசியல் வாதிகளின் படுகொலைக்கு கூட ஏன் அவை தட்டிக் கேட்க்கவில்லை.

பத்திரிகை ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றோரும் தான் கொல்லப்பட்டனர் எங்கே கண்டனம்.

சிறைகள் மீதான தமிழ்கைதிகளின் தாக்குதல் களுக்கு ஏன் தூதரகங்கள் சென்று பார்வையிடவில்லை.

ஏன் விடுவிக்கக் கோரவில்லை.

ஓடும் தமிழர்கள் ஏன் வன்னிக்கு புகலிடம் தேடாமல் கொளும்புக்கு ஓடுகிறார்கள்.

தப்பி ஓடிவந்து புலத்தில் நின்று போராட்டத்துக்கு சபாஸ் போடுகிறார்கள் ஏன்.

பணத்தைக் கொடுத்தால் கடமை முகிகிறது என்று நினைக்கிறார்கள்.

மக்கள் மனோபலத்துக்கு உறுதி ஊட்டும் நடவடிக்கைகளை களத்துக்கு சென்று வளங்காமல் இங்கே இருந்து பல அமைப்புக்களைத் தொடங்கி என்னத்தை கிழிக்கிறார்கள்.

அடுத்தவன் உயிரை விதைத்து தங்கள் தமிழீழக் கனவை அடைய ஆசைப்படுகிறார்கள்.

புலிகள் பலமுறை பலதவறுகள் விட்டுள்ளார்கள் இனிமேல் அது நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

……………………………………………………………………

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.