Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன்

Featured Replies

ஒரு கொஞ்ச ஆயுதத்திற்கு பிரேமதாசாவுடன் சேர்ந்து இந்தியாவை எதிர்த்ததற்கு பெயர் 

"மொட்டு தந்திரம் "

  • Replies 53
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள் செய்வது, செய்தது ராஜதந்திரம் அல்ல. 

உங்கள் குழுவினர் இந்திய ஒப்பந்தத்தை வரவேற்காமை

1 minute ago, arjun said:

ஒரு கொஞ்ச ஆயுதத்திற்கு பிரேமதாசாவுடன் சேர்ந்து இந்தியாவை எதிர்த்ததற்கு பெயர் 

"மொட்டு தந்திரம் "

"மொட்டுத் தந்திரம்"ஆ?

புலிகள் இந்தியாவை எதிர்க்க வெளிக்கிட்ட போது இலங்கை அரசியல் jr இன் கைகளில்.

அர்சுண் பழஞ்சீலை கிழிந்த மாதிரி எப்ப எங்கு பார்த்தாலும் புலிகளை வசைபாடாமல் உங்கள் குழுவினரால் ஏற்பட்டவைகளுக்கு பிராயச்சித்தம் செய்யுங்கள். 

ஆயுதம் வாங்கியது பிரேமதாசவுடன் தான் ஜே ஆர் அந்த அளவு மோடன் அல்ல ,

நல்ல மூளைசாலி , இல்லாவிடில் தனக்கு  எதிராக வந்த படையை புலிகளுடன் அடிபட விட்டிருக்க முடியாது . 

  • கருத்துக்கள உறவுகள்

மோடன் பிரேமதாசா தான் ஒட்டுக்குழுக்களை நேரடியாக ஆதரித்தது. 

உருவாக்கியது

அழிவதற்கு பெயர் இராஜதந்திரம் இல்லை நிலைத்து நிற்பதுதான் ராஜதந்திரம் .

13076762_515111658678124_885034772741143

13124566_2008284346064139_73758817221303

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டு வந்துவிட்டீர்களா இவரை, சம்மின் வேட்டிக்குள் இருந்துதான் இவரின் அரசியல் எதிர்காலம் எல்லாம். பத்து வருடத்திற்கு மேலாக காய்ந்து இருந்தார் வ்வுனியாவில்.

யார் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை தனக்கு பதவிதான் முக்கியம் என்று இருப்பவன் தலைவன் இல்லை. 

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, arjun said:

அழிவதற்கு பெயர் இராஜதந்திரம் இல்லை நிலைத்து நிற்பதுதான் ராஜதந்திரம் .

என்னா ஒரு தத்துவம்!!!!! ********* சம்பந்தனும் இன்னும் உயிரோடதான் இருக்கின்றார்.....ஆனால் இன்னும் இனம் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது. உயிரோடை இருக்கிறதுக்கு பெயர் இராச தந்திரமில்லை....நரித்தனம் tw_angry:

சித்தரை நானே நல்ல  தலைவராக ஏற்றவன் இல்லை ஆனால் இன்று நாட்டில் இருப்பவர்கள் யாரிடமும் போய் உருப்படியாக நாலு காரியம் செய்பவர்கள் பற்றி தாரளமாக கேட்கலாம் .

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் கூட இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தனது இயக்க உறுப்பினர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த முடியாமல்தான் இருக்கிறார்.  

வவுனியாவில் நானே நேரில் பார்த்திருக்கிறேன் இவர் செய்த உருப்படியான நாலு அல்ல பல காரியங்களை. 

10389018_265988840257075_787009762506745

இராணுவத்தால் கொல்லப்பட்ட பார்த்தன் ,விமானபடையால் காத்தான் எல்லோரது படங்களும் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

90களில் வவுனியா வில் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் படங்களே இருந்தன.

ம் முன்னேற்றம் தான். ஆனால் என்ன புலிகளால் கொல்லப்பட்டவர்களை மூச்சிற்கு 300 தரம் முழங்கிவிட்டு மற்றவர்கள் பற்றி மூச்சு விடமாட்டினம்?

எதிரியால் இறப்பது வரும் என்பது ஒரு வகை எதிர்பார்ப்புத்தான் 

சொந்த சகோதரத்தால் முதுகில் குற்றப்படுவது எதிர்பாராதது அப்படித்தான் இருக்கும் . 

அதுவும் கிட்டு செய்த காரியங்கள் யாழில் எழுத முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ மாணிக்கம் செய்ததை எழுதுங்கள் 

ரெலோ விற்கு புலிகளால் ஏற்பட்டதை விமர்சிப்பதை போல் புளொட் ஆல் ரெலோவிற்கு ஏற்பட்டதையும் விமர்சியுங்கள். 

சித்தருடன் சேர்ந்து பிராயச்சித்தம் செய்யுங்கள் 

மாணிக்கத்துடன் கடைசிவரை இருந்தவர் அனைத்தும் சொல்லியிருக்கின்றார் .

ஆயுதம் தூக்கிய அனைவரிலும் தான் அன்று தொடக்கம் விமர்சனம் செய்து வருகின்றேன் இதில் மாணிக்கமும் விதி விலக்கு அல்ல வவுனியா மட்டும் அல்ல சுவிசில் கூட நடந்தது .

அனைவரை பற்றியும் எழுத கூடாத பக்ககங்கள் பல இருக்கு முடிந்தவரை அரசியல் சம்பந்தமான விடயங்களுடன் நிற்பதே நல்லது என்று நம்புகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் மாணிக்கத்துடன் இருந்தவர் வாயே திறக்கவில்லை என்டீர்களே ? 

கடைசிவரை இருந்தவர் எப்படி தப்பினார் ?

கொழும்பில் தாம் நேரடியாக செய்தது பாதாள உலக கோஸ்டி மூலம் செய்தது எல்லாம் வந்திருக்கணுமே?

போராட போன அனைத்து இயக்கங்களும் இந்த விடயத்தில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் இல்லை .மிக கேவலங்களை எழுதாமல் விடுவதுதான் திறம் .

காலார் ஜெகநாதன் கொலை பற்றி முருகபூபதியின் பதிவிற்கு நடேசன் குறிப்பு எழுதினார் 

அதற்கு நான் எழுதியது 

ஆயுத போராட்டம் என்ற போர்வையில் நினைத்து பார்க்கமுடியாத எழுத முடியாத பல விடயங்கள் இருக்கு.அவற்றை எழுதாமல் விடுவதுதான் நல்லது.

நேற்று ஒரு யாழ் இந்து நண்பர் டின்னரில் கட்டாயம் எழுதுங்கோ என்றார் .வேண்டாமே என்று சொன்னேன் .

திருமங்கலம் காட்டில் உள்ள யானைகளுக்கு வெடிவைத்து தந்தங்கள் திருடிய இயக்கங்களும் இருக்கு,

பாவம் வீரப்பன் பழி அவர் மீதுதான் விழுந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வாசித்து தெரிந்து கொண்டது 
சபா நாவலன் இன்னமும் இருக்கிறார் என்பதை மட்டுமே ! 

நல்ல சுய-விளம்பரம் !
முன்னேற்றத்திற்கு இன்னமும் இடமுண்டு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபா. நாவலன் இருக்கின்றார் என்பதால்தான் அரசியல் சிந்தனையில்லாத இயக்கத் தலைமைகள் தோன்றி தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கின என்பதையாவது அறியமுடிகின்றது.

அரசியல் பிரக்ஞையற்ற, நாட்டு நடப்புத் தெரியாமல் இருந்த சிறி சபாரத்தினத்திற்கு நினைவு கூர இப்போதும் அதே குட்டையில் ஊறியவர்கள் கூடுகின்றார்கள். 

அரசியல் பிரக்ஞையற்ற, நாட்டு நடப்புத் தெரியாமல் இருந்தது இரு தலைவர்கள் ஒன்று சிறி மற்றது பிரபா .

இது அந்த நேரம் அனைவருக்கும் தெரிந்த விடயம் .அவர்கள் பேட்டிகளை பார்த்தாலே தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, arjun said:

அரசியல் பிரக்ஞையற்ற, நாட்டு நடப்புத் தெரியாமல் இருந்தது இரு தலைவர்கள் ஒன்று சிறி மற்றது பிரபா .

இது அந்த நேரம் அனைவருக்கும் தெரிந்த விடயம் .அவர்கள் பேட்டிகளை பார்த்தாலே தெரியும் .

எந்த அரசியல் பிரக்ஞையையும் நாட்டு நடப்பையும் தெரிந்து கொண்டு உமா மாலைதீவை பிடிக்கச்சென்றவர்? 

பத்மநாபா 87 இல் கொலைவெறித் தாண்டவம் ஆடியது அரசியல் பிரக்ஞை உடனா? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

எந்த அரசியல் பிரக்ஞையையும் நாட்டு நடப்பையும் தெரிந்து கொண்டு உமா மாலைதீவை பிடிக்கச்சென்றவர்? 

பத்மநாபா 87 இல் கொலைவெறித் தாண்டவம் ஆடியது அரசியல் பிரக்ஞை உடனா? 

இல்லை

அரைகுறை மூளை இருந்ததால்.....

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

எந்த அரசியல் பிரக்ஞையையும் நாட்டு நடப்பையும் தெரிந்து கொண்டு உமா மாலைதீவை பிடிக்கச்சென்றவர்? 

பத்மநாபா 87 இல் கொலைவெறித் தாண்டவம் ஆடியது அரசியல் பிரக்ஞை உடனா? 

1985/86 களில் ரைம்ஸ் சஞ்சிகை.. ஈழப் போராளி அமைப்புத் தலைவர்களின் பிரபாகரன் மட்டுமே... நேர்த்தியான சிந்தனை உடையவர் என்று எழுதினதா வரலாறு சொல்லுது. 

இப்ப யாழ் இந்து பக் பெஞ் எல்லாம் தலைவருக்கு வகுப்பெடுக்கும் நிலமை. எல்லாரும் தனக்குத் தானே கெட்டிக்காரர்கள் தான். ஆனால் உலகின் முன்.. மு முக்கள். ஆனால் தேசிய தலைவர் பிரபாகரன்.. உலகமே வியந்து பார்த்த ஒரு தலைவர். அவரை ஒரு அரசுடன் இணைத்துப் பார்ப்பது தான் அவரைச் சிறுமையாகக் காட்டுகிறதே தவிர.. ஒரு போராளியாக.. ஒரு போராளி அமைப்பின் ஸ்தாபகராக.. அதன் இலட்சிய உறுதிக்காக.. அவர் உலகத்தால் வியக்கப்படுகிறார் இன்றும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் சாய்க்கப்பட்ட அணைத்து போராளிகளுக்கும் மனதுக்குள் அழுது அவர்களின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
நம் போராட்ட காலத்தில் கரை படிந்த துயர நாட்கள் இவை.

 

புலிகளை  வசை பாடுவதற்கு இதில் எதுவுமில்லை

இயக்கங்களோடு பயணித்தவர்களுக்குத்தெரியும்

டெலோ அழிக்கப்படவில்லையென்றால் அதைவிட பலமடங்கு புலிகள் அழிக்கப்பட்டதை இன்று நினைவு கூருவோம்

இது தான் அன்றையநிலை.

 

 

கட்டுரை ஒன்று வாசித்தேன் இவ்விட்த்திற்கு பொருந்துமென இணைக்கிறேன்..... 

சகோதர இயக்கங்களிடையே மோதல்!

சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். குறுநில மன்னர்கள் காலத்திலும் இவ்விதமான யுத்தம் தொடர்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது மேலதிகாரம்தான் என்பதையும் காணக்கூடும்.

இவ்வகையான பின்னணியை மனதில் நிறுத்தி சில செய்திகளைப் பார்க்கலாம்:

“”தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் வகுப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறப்பட்டது. இதே கொள்கை டெலோவிடமும் இருந்தது.

ஈபிஆர்எல்எப்-ஐப் பொறுத்தவரையில் மற்றைய இயக்கங்களை அழிக்கும் திட்டம் எப்போதும் இருந்திருக்கவில்லை.

ஆயினும் இந்திய ராணுவத்தின் (அமைதிப்படை) வருகைக்குப் பின் அவர்கள் நடந்து கொண்டவிதம், “எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பதை உறுதி செய்தது” என லண்டனில் இருந்து வெளிவந்த “ஈழ பூமி’ என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சண் எனப்படும் சண்முகலிங்கம் கூறினார்.

“”ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத்துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில், இந்திய உளவுப் படையினரின் (“ரா’ அமைப்பு) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியாகிப் போனார்கள்”

“”டெலோ இயக்கத்துக்குள் தாஸýக்கும், பொபிக்குமிடையே ஏற்பட்டப் பிரச்னையில், இயக்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீசபாரத்தினம் விரும்பினாலும் அவரின் பரிவு பொபி மீதே இருந்தது”

“”பேச்சுவார்த்தைக்கென யாழ்ப்பாணம் வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1986 மார்ச் 11-ஆம் தேதி அங்கு ஐந்து மெய்க்காவலர்களுடன் தாஸ் வந்தபோது பொபி குழுவினரால் அழிக்கப்பட்டனர்”

“”(திம்புப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்) இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மூவருள் இருவராகிய சத்தியேந்திராவும், சந்திரகாசனும் டெலோ இயக்கத்தவர் ஆவர். இவர்களின் வெளியேற்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் காரணம் என டெலோ இயக்கத்தினர் சந்தேகப்பட்டனர்”

“”இந்தக் காலகட்டத்தில் வடபகுதியில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம், ராஜலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியவர்களைக் கொல்லும்படி ஸ்ரீசபாரத்தினம் தனது தளபதிகளுக்கு தொலைத் தொடர்பு சாதனம் மூலம் உத்தரவிட்டார்”

“”வடமராட்சிக்குப் பொறுப்பானவர், துரைரத்தினத்தையும் ராஜலிங்கத்தையும் கொல்ல மறுத்துவிட்டார். ஆனால் வி.தர்மலிங்கமும், ஆலாலசுந்தரமும் வகையாக மாட்டிக் கொண்டனர் (1985 செப். 2) – என்று “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார். இவர் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் இந்தக் குறிப்புகளை அளித்துள்ளார்.

தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் இருவரின் மரணம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக் கொலைகளைச் செய்தது யார் என்று பெரிய ஆராய்ச்சியே நடைபெற்றது. இந்தக் கொலைகளுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருப்பர் என்றே பெரும்பாலானோர் கருதினர்.

இதுகுறித்து பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனிடம் பேசும்போது, அவர் திட்டவட்டமாக மறுத்ததாகக் கூறியுள்ளார்.

பழ.நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்ற நூலில்,
“”நாங்கள் ஏன் இந்தக் கொலைகளைச் செய்ய வேண்டும். அதற்கான அவசியம் என்ன?

அதிலும் தர்மலிங்கம் எங்களால் நன்கு மதிக்கப்பட்டவர். யாருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காதவர். எங்கள்பால் அன்பு கொண்டவர். காரணமில்லாமல் எதற்காக நாங்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும்.

இந்தக் கொலைகளை யார் செய்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மைக் குற்றவாளி பிடிபடுவார்” என்று பிரபாகரன் கூறியதையும் எடுத்தாண்டுள்ளார்.

பின்னர் 1986-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் நடந்த மோதலில் டெலோ உறுப்பினர் பழனிவேல்-தங்கராசா என்னும் பேராளி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர், “தலைமையின் உத்தரவு. இது ஓர் அரசியல் தந்திரம்; விளக்கம் தேவையில்லை’ என்று பொபி கூறினார்.

விசாரணையில் பழனிவேல் தங்கராசா மேலும் கூறியதாவது:

“”எங்களுக்குப் பழுப்புநிற மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார் வழங்கப்பட்டது. நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் வலண்டையன் தலைமையில் இயங்கினோம். ஆலாலசுந்தரம் வீட்டுக்குச் சென்றோம். அவரைப் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கத்தின் இருப்பிடத்துக்குச் சென்றோம். ஆலாலசுந்தரம் உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு “கோண்டாவில்’ என்ற ஊருக்குப் போனோம்.

தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் இறக்கிவிட்டுவிட்டு, ஆலாலசுந்தரத்தை நல்லூர் கூட்டிச் சென்றோம். அவரை நானும் வலண்டையனும் கொன்றோம். பின்னர் தர்மலிங்கத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், தாவடி ரோட்டில் வைத்து அவரை சிட்டிபாபு கொன்றார்”

இந்த உண்மை வெளிவந்ததும் விமர்சனம் வேறு வகையாகத் திரும்பியது.

மதுரையில் 1986 மே 5-ஆம் தேதியன்று நடைபெற்ற டெசோ மாநாட்டின்போது, விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் ஏற்பட்ட செய்தி அறிந்து, அம்மாநாட்டின் தலைவர்கள், அங்கே இருந்த இலங்கைத் தமிழர் தலைவர்களை, “”ஒற்றுமையுடன் இருப்போம். எங்களுக்குள் மோதலில் ஈடுபட மாட்டோம்” என்று உறுதி கேட்டார்கள். அவர்களும் அவ்வாறே உறுதி அளித்தனர். வாக்குறுதி அளித்தவர்கள் அனைவரும் மதுரையில் இருக்க, இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.

இதன் பின்னணி என்ன?

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மேஜர் அருணா 1986 ஏப்ரல் 27-ஆம் தேதி சிங்களக் கடற்படையினருடன், கடலில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். இதையொட்டி யாழ்குடாப் பகுதியில் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அஞ்சலி செலுத்தும் வகையில் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.

அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சிங்களக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 11 பேரை டெலோ இயக்கம் இழந்திருந்தது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப் புலிகள் இயக்க வீரருக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவதா எனக் கேட்டு மறுநாள் 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய டெலோ இயக்கம் அறிவுறுத்தியது.

இதற்கு மறுத்த கல்வியங்காட்டுப் பகுதி மீது டெலோ தாக்குதலைத் தொடுத்ததும் இதைத் தடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் மேஜர் பஷீர்காக்கா, லெப்டினன்ட் முரளி ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீசபாரத்தினத்தின் பழைய நண்பர் என்ற முறையில் விடுதலைப் புலிகளின் தளபதி கேப்டன் லிங்கம் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் நோக்கத்துடன் டெலோ முகாமுக்குச் சென்றார். ஆனால் அங்கே லிங்கம் கொல்லப்பட்டார்
(தகவல்: பழ.நெடுமாறன்-பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்).

இதன் பின்னர் டெலோ இயக்கத்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் மூண்டது. இரு இயக்கங்களுக்குமிடையே நடந்த ஒருவார மோதலில் டெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் உயிரிழந்தார். (6.5.1986).
இந்த மரணத்துக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட டெசோ தலைவர்கள் வருத்தமும் வேதனையும் தெரிவித்தனர். இனி டெசோ அமைப்பு இயங்காது என்று மு.கருணாநிதி அறிவித்தார். முரசொலி நாளிதழ் அவர் எழுதிய இரங்கற்கவிதையை வெளியிட்டது. ஈபிஆர்எல்எஃப் இயக்கம் மட்டும் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதற்கு, யாழ்ப்பாணத்தில் இரங்கல் ஊர்வலம் ஒன்றை நடத்தியது.

பலத்த விமர்சனங்களுக்கான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அப்போது தமிழ்நாட்டில்தான் இருந்தார். இது குறித்து பிரபாகரன் கூறுகையில், “லிங்கத்தின் சாவுச் செய்தி வந்தபோது நானே கொதிப்படைந்தேன். களத்திலிருந்த எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவுமில்லை. லிங்கம் படுகொலை மற்றும் எங்களது முக்கியத் தோழர்கள் கைது என்பது தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லை. ஆழமான சதியின் விளைவாகவே இவை நிகழ்ந்துள்ளன.

இந்திய உளவு அமைப்புகளின் தூண்டுதல் பேரிலேயே சென்னையிலிருந்த ஸ்ரீசபாரத்தினம் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார் என்பதும், எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.

ஸ்ரீசபாரத்தினத்தையோ, டெலோ இயக்கத்தையோ திட்டமிட்டு நாங்கள் அழிக்கவில்லை. நாங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் எங்களை அழித்துவிட டெலோ இயக்கத்தினர் முயன்றிருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
(பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்- பழ.நெடுமாறன் -பக்.51).

பாவை சந்திரன்

https://eelavarkural.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

http://www.dinamani.com/editorial_articles/article972310.ece?service=print

பாவை சந்திரன் ,ரமணி சந்திரன் எல்லாம் வாசித்தால் எங்கட பிரச்சனை அந்த மாதிரி த்தான் .

துணைக்கு-------- நெடுமாறன் வேறு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.