Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறி -30 ஆண்டு அஞ்சலி .

Featured Replies

13083241_1128669337153464_70456928683201

  • Replies 51
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1990 இல்..தமிழீழத்தை பிரகடனம் செய்திட்டு.. இந்தியப் படைகளோடு வெளியேறி.. 2016 இல் தமிழீழத்தை அறவே கைவிட்ட வரதராஜப் பெருமாள் உட்பட.. முன்னாள்... இன்னாள்.. ஒட்டுக்குழுவினர் எல்லாம் கூட இருக்கிறீர்கள்.. கூடி.... எப்படி மிச்சத் தமிழ் குடியையும் அழிப்பது என்று பேசப் போறியளா.. இல்ல.. வெற்றிகரமான காட்டிக்கொடுப்புக்களின் ஊடாக புலி அழிப்பை முடித்து.. எனி.. தமிழீழத்தை கைவிட்டிட்டம் என்று சிறீ சபாரத்தினம் முன் சத்தியப்பிரமானம் எடுக்கப் போறியளா...?! நீங்க இப்ப எதுவும் செய்யலாம்.. மக்கள் என்ன கேள்வி கேட்கக் கூடிய நிலையிலா இருக்கிறார்கள். இல்லைத்தானே...!!

ஏதோ.. கடைசி வரை தமிழீழமே என்று சிறையில் கிடந்து சிங்கள வன்முறைக்கு.. மாண்டு போன.. குட்டிமணி.. தக்கத்துரை.. ஜெகன் போன்றவர்களை மறந்திடாதேங்க. இவர்களுக்கு எல்லாம் முதல்.. அவை தான் தலைவரா இருந்தவை.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ஏதோ.. கடைசி வரை தமிழீழமே என்று சிறையில் கிடந்து சிங்கள வன்முறைக்கு.. மாண்டு போன.. குட்டிமணி.. தக்கத்துரை.. ஜெகன் போன்றவர்களை மறந்திடாதேங்க. இவர்களுக்கு எல்லாம் முதல்.. அவை தான் தலைவரா இருந்தவை.:rolleyes:

அவர்களுக்கு அஞ்சலி கூட்டங்கள் செய்தால் அதில் மார்க்கெட் ட்ரென்ட் என்பது அறவே இருக்காது.
தவிர நம்ம எஜமானி சிங்கள காடைகளை கொஞ்சம் குற்றம் சாட வேண்டி வராலாம் இல்லையா ??

எஜாமானிகளை காப்பதே எம் தலையாய கடமை!

என்னை பொறுத்தவரை புலிகள் மொக்குதனமாக முந்திவிட்டார்கள் 
கொஞ்சம் கால அவகாசம் தந்திருந்தால் ....
சிறியருக்கும்  பொபிக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை 
காலம் காட்டியிருக்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

என்னை பொறுத்தவரை புலிகள் மொக்குதனமாக முந்திவிட்டார்கள் 
கொஞ்சம் கால அவகாசம் தந்திருந்தால் ....
சிறியருக்கும்  பொபிக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை 
காலம் காட்டியிருக்கும்! 

ஏன் யாழ் நகர் வாழ் மக்களை எல்லாம் பலியிட்டு இருக்கவா. பொபி - தாஸ் சண்டை எங்க நடந்தது என்றால் அதிர்ச்சி அடைவீர்கள். யாழ் வைத்தியசாலை தேனீர்ச் சாலையை ஒட்டியாம். பள்ளிப் பிள்ளைகள் போய் வரும் யாழ் வைத்தியசாலை வீதியை ஒட்டித்தான் கடும் துப்பாக்கி மோதல் நடந்ததாக வரலாறு சொல்கிறது.

அதுபோக.. யாழ் ஆரிய குளம் நாகவிகாரையில் புதையல் இருக்காம் என்று சொல்லி புளொட்டும்.. ரெலோவும் தமக்குள் அடிபட ஆயுத்தமாகிவிட்டார்கள்.  யார் அதனை முதலில் திருடுவது என்று. ரெலோ சென்ரி போட்டு போற வாற மக்களை துப்பாக்கியால் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். சிங்களப் படைகளால் எரிக்கப்பட்ட ஸ்ரான்லி வீதி அந்தக் கட்டடத்தில் தான் ரெலோ குடியும் குடித்தனமும் நடத்தியது.  புளொட்டு ஆரிய குளப்பக்கமாய்.. அது குடியும் குடித்தனமும்.. சோத்துப்பார்சலுமாய்....!

எல்லாக் காலக் கொடுமைகளையும் மக்கள் கண்டு வென்றிருக்கிறார்கள். 

மீண்டும் இதுங்க அதை கொண்டு வராமல் இருந்தாலே.. போதும். 

  • இப்பவும் அண்ணன் அடைக்கலநாதன்.. வடமாகாண சபை ரெலோ மூத்த உறுப்பினர் ஒருவரை பேச்சுக்கு அழைக்கவில்லை. இதோட.. மீண்டும்.. பொபி - தாஸ் சண்டையோ தெரியாது.:rolleyes:tw_angry:
  • தொடங்கியவர்

எப்படி ஊளையிட்டும் இனி எதுவும் புலிகளாலும் அதன் ஆதரவாலர்காளாலும் ஆகபோவதில்லை .

சிறியின் நினைவு தின அழைப்பில் இருப்பது போல இப்படியான ஒரு புரிந்துணர்வைத்தான் அன்றும் எதிர்பார்த்தோம் கையை பிடித்துவிட்டு கழுத்தை அறுத்துவிட்டார்கள் .

பார்கவே சந்தோசமாக இருக்கு அனைத்து கட்சிகள் மலையகம் சிங்கள முற்போக்கு இந்திய பத்திரிகையாளர் எல்லோரும் வருகின்றார்கள் .

பாவம் புலிகளும் ஈரோசும் இல்லை .அவர்களாக தேடிய வினை அது .

qnjl1s.jpg

இதை யாரோ இஞ்ச யாழ் களத்தில தேடின மாதிரி இருந்தது - அதுதான் இணைச்சேன். 

தமிழருக்காக போராட போன சிறுவர்களை ரோட்டில் போட்டு எரிப்பது சிலருக்கு வேடிக்கை - அதை சுட்டிக்காட்டினால் அது பிழை.

41 minutes ago, nedukkalapoovan said:

ண்டை எங்க நடந்தது என்றால் அதிர்ச்சி அடைவீர்கள். யாழ் வைத்தியசாலை தேனீர்ச் சாலையை ஒட்டியாம். பள்ளிப் பிள்ளைகள் போய் வரும் யாழ் வைத்தியசாலை வீதியை ஒட்டித்தான் கடும் துப்பாக்கி மோதல் நடந்ததாக வரலாறு சொல்கிறது.

ஒப்பிடுகையில் இது ஒண்டும் முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை வளாகத்தில் வைத்து புலிகள் ஆர்டிலரி அடித்து மக்களை காவு கொண்டதவிட ஒன்றும் கேவலமில்லை.

புலிகள் செய்த அராஜகங்கள விடவா மற்றவர்கள் அதிகமாக செய்துவிட்டார்கள். எல்லாரும் செய்தது தவறு இங்கு தேத்தா ஒண்டும் உத்தமரில்லை. புலிகளும் புனிதரில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஜீவன் சிவா said:

தமிழருக்காக போராட போன சிறுவர்களை ரோட்டில் போட்டு எரிப்பது சிலருக்கு வேடிக்கை - அதை சுட்டிக்காட்டினால் அது பிழை.

ஒப்பிடுகையில் இது ஒண்டும் முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை வளாகத்தில் வைத்து புலிகள் ஆர்டிலரி அடித்து மக்களை காவு கொண்டதவிட ஒன்றும் கேவலமில்லை.

புலிகள் முள்ளிவாய்க்கல் மருத்துவமனையில் வைத்து ஆட்டிலறி அடித்தார்கள் என்று ஐ.நா. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதா?

சிங்கள இராணுவத்தின் ஊதுகுழல்களைத் தவிர வேறு எவரும் இப்படியான மலினத்தனமான குற்றச்சாட்டை வைத்ததில்லை. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

Just now, கிருபன் said:

நீங்கள் இன்னமும் சில புத்தகங்கள் வாசிக்க வேண்டியிருக்கு. புத்தகத்தை நம்பாவிட்டாலும் மக்கள் சாட்சிகள் இருக்கே 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

நீங்கள் இன்னமும் சில புத்தகங்கள் வாசிக்க வேண்டியிருக்கு. புத்தகத்தை நம்பாவிட்டாலும் மக்கள் சாட்சிகள் இருக்கே 

நான் புத்தகங்கள் வாசிப்பது இருக்கட்டும். நீங்கள் சொன்னதற்கு ஆதாரம் இருக்கா?

மக்கள் சாட்சிகள் உள்ளார்கள் என்பதைத்தான் நானும் சொல்கின்றேன்.

2 minutes ago, கிருபன் said:

நான் புத்தகங்கள் வாசிப்பது இருக்கட்டும். நீங்கள் சொன்னதற்கு ஆதாரம் இருக்கா?

மக்கள் சாட்சிகள் உள்ளார்கள் என்பதைத்தான் நானும் சொல்கின்றேன்.

சரி யாழ் வைத்திய சாலையில்தான் இந்த நெடுக்கு கூறிய சண்டை நடந்ததிற்கு பார்த்த மக்களை தவிர வேறு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கு 

11 minutes ago, கிருபன் said:

சிங்கள இராணுவத்தின் ஊதுகுழல்களைத் தவிர வேறு எவரும் இப்படியான மலினத்தனமான குற்றச்சாட்டை வைத்ததில்லை. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

Gordon Weiss எழுதிய புத்தகம்  The Cage, மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந்தின் ஈழத்தின் வலி (மாவிலாறிலிருந்து நந்திக்கடல் வரை) சும்மா பொழுது போகாம எழுதப்பட்டவையா 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

சரி யாழ் வைத்திய சாலையில்தான் இந்த நெடுக்கு கூறிய சண்டை நடந்ததிற்கு பார்த்த மக்களை தவிர வேறு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கு 

ஜீவன், அதனை நெடுக்ஸிடம் கேளுங்கள்.

நீங்கள் புலிகள் முள்ளிவாய்க்கால் மருத்துவ வளாகத்தில் வைத்து புலிகள் ஆட்டிலறி அடித்து மக்களைக் காவு கொண்டார்கள் என்று மேலே சொன்னதை மட்டும்தான் நான் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றேன். 

எதுவித ஆதாரமுமில்லாமல் ஒரு பாரதூரமான statement ஐ உங்கள் விவாதத்திற்காக சகட்டுமேனிக்கு பொதுவெளியில் எழுதிவிட்டுப் போய்விடமுடியாது. ஆதாரமில்லையென்றால் இல்லையென்று சொல்லவேண்டியதுதானே. இருக்கு என்றால் காட்டவேண்டியதுதானே. 

இவை இரண்டுமே சிக்கலில்லாத தெரிவுகள். ஆனால் இரண்டுமே உங்களுக்குக் கடினமான தெரிவுகள் என்பதுதான் உங்கள் சடையல் பதில்கள் மூலம் தெரிந்துகொண்டது.

அதுசரி  நான்  எழுதிய  பதிவுக்கு  பதிலை  காணோமே  -  எழுதாக  தூக்கிட்டு  எளிதுவது  அழகல்ல  - அது  உங்களால்  மட்டுமே  முடியும் . தொடருங்கள் . good bye for you all 

என்ன மறுபடியும் எனது பதிவு வந்திட்டுது 

33 minutes ago, கிருபன் said:

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

இந்த மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் யாரெண்டு இன்னமும் புரியவில்லையா அல்லது அவரும்  துரோகியா - உண்மையை எழுதியதற்காக 

34 minutes ago, கிருபன் said:

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

இந்த மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் யாரெண்டு இன்னமும் புரியவில்லையா அல்லது அவரும்  துரோகியா - உண்மையை எழுதியதற்காக 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஜீவன் சிவா said:

சரி யாழ் வைத்திய சாலையில்தான் இந்த நெடுக்கு கூறிய சண்டை நடந்ததிற்கு பார்த்த மக்களை தவிர வேறு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கு 

Gordon Weiss எழுதிய புத்தகம்  The Cage, மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந்தின் ஈழத்தின் வலி (மாவிலாறிலிருந்து நந்திக்கடல் வரை) சும்மா பொழுது போகாம எழுதப்பட்டவையா 

The Cage புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் அல்லது எந்த அத்தியாயத்தில் முள்ளிவாய்க்கால் மருத்துவ வளாகத்தில் புலிகள் ஆட்டிலறியை வைத்து மக்களைக் காவுகொண்டார்கள் என்று சொல்லியிருக்கு?

சொன்னால் நான் என்னிடம் உள்ள புத்தகத்தில் பார்த்துச் சொல்கின்றேன்.

உங்களுக்கு நினைவூட்ட:

எட்டாம் அத்தியாயம் Managing the siege  175 ஆம் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.

17 minutes ago, கிருபன் said:

எதுவித ஆதாரமுமில்லாமல் ஒரு பாரதூரமான statement ஐ உங்கள் விவாதத்திற்காக சகட்டுமேனிக்கு பொதுவெளியில் எழுதிவிட்டுப் போய்விடமுடியாது. ஆதாரமில்லையென்றால் இல்லையென்று சொல்லவேண்டியதுதானே. இருக்கு என்றால் காட்டவேண்டியதுதானே. 

இவை இரண்டுமே சிக்கலில்லாத தெரிவுகள். ஆனால் இரண்டுமே உங்களுக்குக் கடினமான தெரிவுகள் என்பதுதான் உங்கள் சடையல் பதில்கள் மூலம் தெரிந்துகொண்டது.

ஆதாரத்தை தந்தா அதையும் புரிய மறுக்கிறீர்களே

"இவை இரண்டுமே சிக்கலில்லாத தெரிவுகள். ஆனால் இரண்டுமே உங்களுக்குக் கடினமான தெரிவுகள் என்பதுதான் உங்கள் சடையல் பதில்கள் மூலம் தெரிந்துகொண்டது."

இதைதான் உங்களிடமிருந்து நானும் புரிந்து கொண்டேன்  

5 minutes ago, கிருபன் said:

The Cage புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் அல்லது எந்த அத்தியாயத்தில் முள்ளிவாய்க்கால் மருத்துவ வளாகத்தில் புலிகள் ஆட்டிலறியை வைத்து மக்களைக் காவுகொண்டார்கள் என்று சொல்லியிருக்கு?

சொன்னால் நான் என்னிடம் உள்ள புத்தகத்தில் பார்த்துச் சொல்கின்றேன்.

உங்களுக்கு நினைவூட்ட:

எட்டாம் அத்தியாயம் Managing the siege  175 ஆம் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.

எனது கையில் இப்போது புத்தகம் இல்லை அது நோர்வேயில் உள்ளது, ஆனால் கோர்டான் வைஸ் புலிகள் யுத்தம் தவிர்க்கப்பட்ட பிரதேசத்திலிருந்து தாக்குதல் நடத்திய பதிவு அதில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

ஆதாரத்தை தந்தா அதையும் புரிய மறுக்கிறீர்களே

The Cage, மற்றும் Rajan Hoole எழுதிய Fallen Palmyrah இரண்டு புத்தகங்களிலும் இராணுவம் முன்னேற no fire zone சுருங்கியதால் குறுகிய நிலப்பரப்பில் மக்களும் புலிகளும் ஒன்றாகவே இருந்தார்கள் என்றுதான் உள்ளது. அது எல்லோருக்கும் தெரிந்த உண்மையும்கூட. ஆனால் இரண்டு புத்தகங்களுமே மருத்துமனை வளாகத்தில் புலிகள் ஆட்டிலறியை வைத்து தாக்குதல் நடாத்தி மக்களைக் காவு கொண்டார்கள் என்று சொல்லவில்லை. அப்படி ஒரு ஆதாரமில்லாத விடயத்தை உங்களைப் போன்று இலகுவாக அவர்களால் எழுதிவிட முடியாது.

1 minute ago, கிருபன் said:

இராணுவம் முன்னேற no fire zone சுருங்கியதால் குறுகிய நிலப்பரப்பில் மக்களும் புலிகளும் ஒன்றாகவே இருந்தார்கள் என்றுதான் உள்ளது. அது எல்லோருக்கும் தெரிந்த உண்மையும்கூட

இல்லை நான் சொல்வது அதற்கு முன்னர் - அதாவது பிரதேசம் சுருங்க முதல் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

எனது கையில் இப்போது புத்தகம் இல்லை அது நோர்வேயில் உள்ளது, ஆனால் கோர்டான் வைஸ் புலிகள் யுத்தம் தவிர்க்கப்பட்ட பிரதேசத்திலிருந்து தாக்குதல் நடத்திய பதிவு அதில் உள்ளது.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

யுத்தம் தவிர்க்கப்பட்ட பிரதேசம் என்பதை முள்ளிவாய்க்கால் மருத்துவமனை வளாகம் என்று சமனப்படுத்தி மேலே விட்ட statement எவ்வளவு கேவலமானது என்பதை புரியச் செய்யவே இவ்வளவு கேள்விகளும்.

3 minutes ago, கிருபன் said:

யுத்தம் தவிர்க்கப்பட்ட பிரதேசம் என்பதை முள்ளிவாய்க்கால் மருத்துவமனை வளாகம் என்று சமனப்படுத்தி மேலே விட்ட statement எவ்வளவு கேவலமானது என்பதை புரியச் செய்யவே இவ்வளவு கேள்விகளும்.

58 minutes ago, கிருபன் said:

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

30 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் யாரெண்டு இன்னமும் புரியவில்லையா அல்லது அவரும்  துரோகியா - உண்மையை எழுதியதற்காக 

இன்றும் இவர் மருத்துவ விரிவுரையாளராக இலங்கையில் கடமை ஆற்றுகிறார்.

நாங்கள் அரச இராணுவத்தால், புலிகளால், மற்ற இயக்கத்தினரால் கொல்லப்பட்ட மக்களிற்கும் போராளிகளிற்கும் அனுதாபங்களை சொல்லி முடிப்போம். இப்ப நான் 8ம் திகதி நினைவாஞ்சலிக்கு போறதா இல்லையா - நான் போவேன் 

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன், 

நீங்கள் விட்ட statement ஐ கீழே மீண்டும் தந்துள்ளேன்.

1 hour ago, ஜீவன் சிவா said:

 இது ஒண்டும் முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை வளாகத்தில் வைத்து புலிகள் ஆர்டிலரி அடித்து மக்களை காவு கொண்டதவிட ஒன்றும் கேவலமில்லை.

இது எதுவித ஆதாரமுமில்லாமல் நீங்கள் எழுதியது என்பததுதான் நான் தொடர்ந்தும் சொல்வது. துரோகி, தியாகி என்று உணர்ச்சி வசனம் பேசாமல் மேலே சொன்னதற்கு ஆதாரம் இருந்தால் இணையுங்கள். 

The Cage புத்தகத்தில் மருத்துவமனைகளுக்கு இராணுவம் ஆட்டிலறி அடித்துப் பலரைக் கொன்றதைப் பற்றி நிறையவே உள்ளது.

5 minutes ago, கிருபன் said:

இது எதுவித ஆதாரமுமில்லாமல் நீங்கள் எழுதியது என்பததுதான் நான் தொடர்ந்தும் சொல்வது. துரோகி, தியாகி என்று உணர்ச்சி வசனம் பேசாமல் மேலே சொன்னதற்கு ஆதாரம் இருந்தால் இணையுங்கள். 

உங்களைபோல பாதுகாப்பான நிலைமையில் இருந்து கொண்டு நானும் பீலா விட முடியாது - ஆதாரங்கள் நிறைய இருக்கு ஆனால் தருகிற நிலமையில நான் இன்று இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பட்டியலில் உள்ள அத்தனை பேரும் புலிகளோடும் கைகுலுக்கின ஆக்கள் தான்.. புளொட் ஒட்டுக்குழு சித்தார்த்தன்.. மற்றும்..  ஈபி ஒட்டுக்குழு ஆள் வரதராஜப் பெருமாள் தவிர. 

இவர்களை எல்லாம் இன்று அடைக்கலநாதன் அழைக்க முடிவதற்கும் காரணம்.. புலிகளோடு அடைக்கலநாதன் கொண்டிருந்த நெருக்கமும்.. ஆகும்.

சிலர் இதனை வசதியாக மறந்து விட்டார்கள்.

வேடிக்கை என்னவென்றால்.. புலிகளுக்கு அஞ்சலி செய்ய தடை போடுற சிங்களவன்.. முன்னாள் தமிழீழ ஆக்களை அஞ்சலி செய்யத் தடை போடல்ல. அவனுக்கே தெரியுது யார் யதார்த்தமாக தமிழீழத்தை சாத்தியப்படுத்தப் போராடினார்கள்.. யார் உள்வீட்டுச் சண்டைக்கும் சகோதரப் படுகொலைகளுக்கும் காட்டிக்கொடுப்புக்கும்.. சுயலாபங்களுக்கும் தமிழீழ விடுதலை என்ற பெயரில் ஆயுத வன்முறையை தமிழ் மக்கள் மீது பிரயோகித்தார்கள் என்று. 

இதில் இருக்கும் எல்லாம் ஆட்களும் ஏதோ ஒரு காலத்தில் தமிழினத்தை சிங்களவன் அழிக்க விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தவர்களே. புலிகள் மட்டும் தான் அதனை தடுக்க முனைந்தார்கள். அதனால் தான் புலிகளுக்கு நினைவஞ்சலி செய்ய முள்ளிவாய்க்கால் மக்களுக்கு நினைவஞ்சலி செய்ய இப்பவும் தடை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களைபோல பாதுகாப்பான நிலைமையில் இருந்து கொண்டு நானும் பீலா விட முடியாது - ஆதாரங்கள் நிறைய இருக்கு ஆனால் தருகிற நிலமையில நான் இன்று இல்லை.

உண்மைதான்.

ஆனால் எதுவித ஆதாரமுமில்லாமல் புலிகள் முள்ளிவாய்க்கால் மருத்துமனை வளாகத்தில் இருந்து ஆட்டிலறி அடித்து மக்களைக் காவு கொண்டார்கள் என்று எழுதும் அளவிற்கு சுதந்திரமும் பாதுகாப்பும் உள்ள இடத்தில் இருக்கின்றீர்கள். அதற்காக மகிந்த மாத்தயாவிற்கும், கோத்தபாயாவிற்கும் ஜெயவேவ என்று வாழ்த்துச் சொல்லிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

சரி யாழ் வைத்திய சாலையில்தான் இந்த நெடுக்கு கூறிய சண்டை நடந்ததிற்கு பார்த்த மக்களை தவிர வேறு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கு 

  • தொடங்கியவர்
  • The Tamil Tigers refused to allow civilians to leave the conflict zone and kept them as hostages. The civilians were sometimes used as human shields.
  • The Tamil Tigers forcibly recruited members during the whole of the civil war but this intensified during the final stages of the war. Some of the recruits were young as 14.
  • The Tamil Tigers forced civilians to dig trenches, risking making them look like combatants.
  • The Tamil Tigers kept on fighting even when it became clear they had lost in order to save the lives of its leaders. This futile prolonging of the conflict resulted in many civilians dying unnecessarily.
  • The Tamil Tigers shot at point blank any civilian trying to leave the conflict zone.
  • The Tamil Tigers fired artillery from near civilians. They also stored military equipment near civilians and civilian structures such as hospitals.
  • The Tamil Tigers carried out suicide attacks against civilians outside the conflict zone even during the final stages of the civil war.

எண்பதுகளில் எங்களுக்கு தெரிந்தது இன்னும் தெரியாமல் பலர் இருக்கினம் .

அது என்ன ?

உப்படித்தான் கடைசியில் முடியும் என்று .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.