Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமி துஷ்பிரயோகம்; பெரியதந்தை கைது

Featured Replies

சிறுமி துஷ்பிரயோகம்; பெரியதந்தை கைது
 
article_1462423401-aaa.jpg-செல்வநாயகம் கபிலன்

தாய் தந்தையை பிரிந்து பெரியம்மாவுடன் வாழ்ந்து வந்த மகள்; முறையிலான 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு தொடர்ச்சியாக உட்படுத்திய பெரியதந்தையை வல்வெட்டித்துறை பொலிஸார், புதன்கிழமை (04) கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் வல்வெட்டித்துறை பொலிகண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாய் தந்தையை சிறுவயதில் இருந்து பிரிந்து வாழும் மேற்படி சிறுமியை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பெரியதந்தை, துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளார். 

பெரிய தாய், கடற்கரையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட சென்ற சமயங்களில் பெரியதந்தை மேற்படி சிறுமியினை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி, பெரியதாயின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, 51 வயதுடைய பெரியதந்தையை பொலிஸார் கைது செய்தனர்.

அதனையடுத்து, சந்தேகநபரை பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக வல்வெட்டிதுறை பொலிஸார் மேலும் கூறினர்.

- See more at: http://www.tamilmirror.lk/171459#sthash.ME698FVm.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

பேய் அரசுசெய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். ஈழத்தில், பேய்களோடு சேராத தமிழர்களின் ஆட்சிவந்தால் இந்தச் செயற்பாடுகள் இல்லாதுபோய்விடும் என நம்பலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிறுமியின் துணிவும், பெரிய தாயின் செயலும் மிகவும் பாராட்டத் தக்கன!

இவ்வாறன சம்பவங்கள் முன்பு நடக்காமலிருக்கவில்லை என்று நான் நினைக்கவில்லை!

நடந்தது கொண்டுதான் இருந்தன!

இப்போது தான் அவை துணிவுடன் வெளியில் சொல்லப்படுகின்றன!

பெண்களுக்கான கல்வியும், சுதந்திரமும் வளர்ந்து வருவது மிகவும் ஆரோக்கியமானதே!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி யான சம்பவம் வடக்கு கிழக்கில் அதிக மாகவே நடந்து வருகிறது ??

  • கருத்துக்கள உறவுகள்
On 5.5.2016 at 5:50 PM, முனிவர் ஜீ said:

இப்படி யான சம்பவம் வடக்கு கிழக்கில் அதிக மாகவே நடந்து வருகிறது ??

முனிவர் ஜீ அவர்களே! ஏன் தெற்கு, மேற்கில் இவை நடைபெறுவதில்லையா? அங்கு பெரும்பான்மையாக சிங்களவர் வாழ்வதால் நடைபெறும் அசிங்கங்களை வெளியிடுவதில் தற்போதுள்ள சிங்கள ஊடகங்கள் மிகவும் அவதானமாகச் செயல்பட்டு வருகின்றன. வடகிழக்கில் நடைபெறும் அசிங்கங்கள் அதிகரித்துள்ளதுபோல் காட்டுவதும் தமிழர்களைச் சோர்வடையச் செய்யும் உளவியல் சார்ந்த செயற்பாடுகளே! அதற்குத் தமிழ் ஊடகங்கள் சிலவும் பெரும்துணை புரிகின்றமையை நாங்கள் புறந்தள்ள முடியாது.:(

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

ஊடகங்களுக்கு இப்படியான செய்திகள் தான்   தீனீயாக அமைந்து விடுகிறது பாலியல் சம்பந்தமான செய்திகளை மிகவும் சுவாரசியமான முறையில் எழுதி தான் தனது இருப்பை வைத்து வயிறு வளர்த்து கொண்டு இருக்கிறது 

இதற்கு எமது தமிழ் பத்திரிகைகள் கூட என்றும் சளைத்தது அல்ல காலையில் தலைப்பு செய்தியை பார்க்கலாம் என்று தூக்கினால் முன் பக்கத்தில் எங்கேயாவது ஒரு மூலையில் பாலியல் சார்ந்த செய்தி ஒன்று ஒளிந்து இருக்கிறது

 தெற்கு  மேற்கில் விட வடகிழக்கில்தான் அதிகமாக நடக்கிறது  இதற்கு அரச படையினர் காரணம் இல்லை  இந்த பிரச்சினையில் கைது செய்யபயப்பட்ட அனைவரும் தமிழர்களே அவர்களை மீண்டும் காசுக்காக வாதாடி காப்பாற்றி விடுவதும் தமிழ்  வக்கீல்கள் தான் 

அண்மையில் நீதிமன்றத்தில் அனைவரையும்  வெளியே வழக்கு தவிர்ந்த  அனைவரும் வெளியே  போக சொல்லி விட்டார்கள்

 ஒருவருக்கு வாதாடிய ஒரு வக்கீல் கேட்க கூடாத கேள்வி ஒன்றை கேட்க அந்த சிறுமியை அழுதார் உடனே நீதிபதி குறுக்கே இனி பிள்ளையை கூட்டி வரவேண்டாம் பெற்றோர் மட்டும் வந்தால் போதும்   என்றார் 

நீதி பதிக்கே தெரிந்து விட்டது அந்த வக்கில் அந்த விசாரணையை உடைத்து விடுவார் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வக்கீல் 'விதி' படம் பார்த்திருப்பாரோ

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நந்தன் said:

அந்த வக்கீல் 'விதி' படம் பார்த்திருப்பாரோ

ம் இருக்கலாம் வழக்கை உடைத்து வழக்கில் வென்று விடலாம்  ஆனால் தனது வாழ்க்கையின்   மனசாட்சியிலே தோற்று விடுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நந்தன் said:

அந்த வக்கீல் 'விதி' படம் பார்த்திருப்பாரோ

 இப்படி அசிங்கமான கேள்விகளை கேட்பதால் பெண்கள் மானம், மரியாதை, குடும்ப  கௌரவம் கருதி நடந்த உண்மைகளை மறைப்பதால் சில வழக்குகள் தள்ளப்படவும், எதிராளி தப்பிக்கவும் முடிகிறது. இதனால், தான் ஒரு திறமையான வக்கீல் என தன்னை அடையாளப்படுத்தவும், நிறைய பணம் வசூலிக்கவும் இந்த வக்கீலால் முடியுது. சில காலம் போக இவர் ஒரு தமிழ் அரசியல்வாதியாக உருவெடுக்க வாய்ப்புமுள்ளது. சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவனை விட இந்த மிருகமே மோசமான மிருகம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

இப்படி அசிங்கமான முறையில் கேள்விகள் நீதி மன்றத்தில் கேட்க படுவதால் தான் நிறைய பேர் நீதிமன்ற வாசல் படி கூட மிதிக்க பயப்படுகிறார்கள்.

மழைக்கு நனைந்து விடுவோம் என்று வீட்டில்  ஒதுங்கினால்  எல்லாம்  ஓடுகளே இல்லாத வீடுகள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

இப்படி அசிங்கமான முறையில் கேள்விகள் நீதி மன்றத்தில் கேட்க படுவதால் தான் நிறைய பேர் நீதிமன்ற வாசல் படி கூட மிதிக்க பயப்படுகிறார்கள்.

மழைக்கு நனைந்து விடுவோம் என்று வீட்டில்  ஒதுங்கினால்  எல்லாம்  ஓடுகளே இல்லாத வீடுகள். 

 சில வக்கீல்கள் வழக்கில் எந்தச் சம்பந்தமுமில்லாத கேள்விகளைக்கேட்டு வழக்கை திசை திருப்பி கெட்டிக்காரர் ஆவதும்  உண்டு. வழக்கை தனது, வழக்காளியின் ஆயுள் முழுக்க இழுத்து அடுத்த சந்ததிக்கும் கடத்தி  விட்டுச் சென்ற சம்பவங்களும், வழக்காளியின் முறைப்பாட்டை, ஆவணங்களை எதிராளிக்கு  விற்று விபச்சாரம் செய்த வித்தகர்களும் உண்டு. இதனாலேதான் பிற்காலத்தில் அரசியல் தலைவர்களாக மாற்றம் பெற்று இருவழி பிழைப்பு நடத்துகிறார்கள். இவர்களது சுத்துமாத்தை சூரத்தனம் என்று வாக்குப்போட்டு மூககுடைபடுகிறதுதான் எமது தெரிவு. இப்ப எமது பிரதேசத்தில்  பாலியல் வழக்குகள் களைகட்டிப் பறக்கிறது. இந்த அசிங்க கேள்வி கேக்கிற ராசாவின் காட்டில் நல்ல மழைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ.ஜீ. பொன்னம்பலம் எண்டு ஒரு மாபெரும் வக்கீல் இருந்தார்!

ஒரு வன்புணர்வு வழக்கொன்று விசாரணைக்கு வந்தது!

பாதிக்கப் பட்ட பெண்..சாட்சிக்கூண்டில் அழுதபடி நின்றிருந்தார்!

வக்கீல் விண்ணர், ஒரு தையலூசியையும் நூலையும் கையிலெடுத்துப் பிடித்தார்!

பின்னர் கேட்டாரே ஒரு கேள்வி...! அங்கு தான் அவரது திறமையெல்லாம் மறைந்திருக்கின்றது!

அவரது மனச்சாட்சியும் கூடத்தான்!

ஒரு கையால்.. தையலூசியை ஆட்டியபடியே..நூலை அதனுள் நுழைக்க முயன்றார்!

நூலை நுழைக்க முடியவில்லை!

பின்னர் கேட்டார்... தையலூசியின் ஒத்துழைப்பு இல்லாமல் ..நூலை ஊசித் துவாரத்தினுள் நுழைக்க முடியாது!

எனவே ஒரு பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமல்...வன்புணர்வு ஒன்று நடந்திருக்கக்கூடிய சாத்தியமேயில்லை என்று நிறுவினார்..விண்ணர்!

அடுத்த நாள் பத்திரிகை முழுவதும்...அந்த மகா விண்ணரைப் பற்றியே பேச்சு! ஒரே புகழ்ச்சி!

தனது மனச்சாட்சியைப் பத்திரமாகப் பொக்கற்றில் வைத்து விட்டு..தன்னையே ஒரு முறை கிள்ளிப்பார்த்துக் கொண்டார் விண்ணர்!

இவர்களை எப்போதுமே ஏமாற்றலாம் என்று அறிந்து கொண்டிருப்பார்!

தமிழனா... கொக்கா?:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புங்கையூரன் said:

 அவர் மட்டுமல்ல புங்கை. நமது பல அரசியல் தலைமைகள் கையாண்ட வழக்குகளை ஆராய்ந்தால் பல துரோகக் கதைகள் வெளிவரும். தங்கள் திறமையால் வெல்ல முடிந்தாலும் பண ஆசையால் தன்மேல் அவர்கள் வைத்த நம்பிக்கையையே குழி தோண்டி புதைத்து அவர்களை  நடு ரோட்டில் கைவிட்ட  பகல் கொள்ளைக்காரர். இப்ப  அதை அரசியலில் தொடர்ந்தவர்கள்...  தொடருகினம்.

வக்கீல் என்பது ஒரு தொழில் 

தனது கட்சிகாரரை குற்றம் செய்தாரோ இல்லையோ அவரை விடிவிக்க பணம் வாங்கி  வாதாடுவதுதான் அவர் தொழில் .இது உலக நியதி.

இதற்குள் எமது அரசியல் தலைமைகள் என்று சிறுவட்டத்திற்குள் நிற்பது தவறு .

எமது அரசியல் தலைமைகள் பிழையாக வாதாடிய பத்து வழக்குகளை பட்டியல் இடுங்கள் அதைவிட பத்து மடங்கு அவர்கள் நல்லதிற்காக வாதாடிய வழக்குகளை பதிவிடுகின்றேன் .

வர வர யாழ் களம் பல திரிகளில் மிக சிறு வட்டத்திற்குள் சுழல்கின்றது போலிருக்கு .

அரசுதான்அந்த  ஊரின் பெயரை கெடுக்கவேண்டும் என்று   வல்வெட்டித்துறை பெரிய தந்தைக்கு உப்படி செய்ய சொன்னது என்று அடுத்த பதிவு வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, arjun said:

 ஆமா ஐயா, அரசும், அதன் கூலிகளும் சட்டம், ஒழுங்கை சரியாக செய்திருந்தால் இவற்றை தடுக்கலாம். தொடர்ந்து இப்படி நடப்பதற்கு வேறு என்ன காரணம்? புலிகளை அழிச்சோம் என்று வெடி கொளுத்தியவர்களால்  ஏன் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சிங்கள அரசின் கைகளில் இருக்கும் வரை இப்படியான வன்முறைகள் தொடரவே செய்யும். விரைவானதும்  மிகக் கடுமையானதுமான  தண்டனையே இப்படியான செயல்களைக் கட்டுப்படுத்த உதவும்.

ஆனால் இங்கே தான் சிங்கள அரசும் அதன் கூலிகளும் வழக்குகளை ஒத்தி வைத்து அல்லது சந்தேக நபர்களைப் பிணையில் விடுத்து அவர்களைத் தப்ப வைக்க உதவுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 09/05/2016 at 3:02 PM, வாத்தியார் said:

தமிழ்ப்பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சிங்கள அரசின் கைகளில் இருக்கும் வரை இப்படியான வன்முறைகள் தொடரவே செய்யும். விரைவானதும்  மிகக் கடுமையானதுமான  தண்டனையே இப்படியான செயல்களைக் கட்டுப்படுத்த உதவும்.

ஆனால் இங்கே தான் சிங்கள அரசும் அதன் கூலிகளும் வழக்குகளை ஒத்தி வைத்து அல்லது சந்தேக நபர்களைப் பிணையில் விடுத்து அவர்களைத் தப்ப வைக்க உதவுகின்றது.

அட வாத்தியார் மேலே வக்கீலின் தொழில் என்று சொல்லிவிட்டார் அர்ஜின் ஐயா பிறகு எதற்கு  அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுகிறீர்கள் 

யாழ்பாணத்தில் சில குழுக்கள் கைது செய்யப்பட்டிருக்கு வாள் வெட்டு கொள்ளை தொடர்பாகள் இவர்கள் மீண்டும் விடுதலை பெறுவது உறுதி. அதற்கு வாதாடலாம் வாதாடாமல் போகலாம் தொழிலாச்சே

மீண்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன் கைது செய்யப்பட்டவர்கள்  தமிழர்கள்  போல தெரிகிறது ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.