Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் பஸ் சாரதியின் மகன் லண்டன் மாநகரின் மேயராக தெரிவு

Featured Replies

பாகிஸ்தான் பஸ் சாரதியின் மகன் லண்டன் மாநகரின் மேயராக தெரிவு

பாகிஸ்தான் பஸ் சாரதியின் மகன் லண்டன் மாநகரின் மேயராக தெரிவு

 

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள மாகாணங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில நகரங்களுக்கான மேயர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.

இதில் லண்டன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில் பிரபல கோடீஸ்வரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெசிமாவின் சகோதரருமான ஸக் கோல்ட் ஸ்மித் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து பாகிஸ்தானை சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகனான சாதிக் பாஷா(45) என்பவர் தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 11 லட்சம் மக்கள் வாக்களித்தனர். மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக பெற்ற சாதிக் கான், லண்டன் நகர புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனில் உள்ள டூட்டிங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக கடந்த பத்தாண்டுகளாக பதவி வகித்துவரும் சாதிக் கான், மனித உரிமைகள் துறை வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் கோல்டன் பிரவுன் தலைமையிலான மந்திரிசபையில் செல்வாக்கு நிறைந்தவராக அறியப்பட்ட இவர், லண்டன் நகர மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த ஆண்டு அந்நாட்டின் நிழல் மந்திரிசபையில் இருந்து விலகினார்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் பழமைவாத கட்சி அதிக வாக்குகளை வாங்கி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.


லண்டன் நகரின் மேயராக பொறுப்பேற்றுக்கொள்ளும் முதல் இஸ்லாமியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புதிய சரித்திரம்: லண்டனின் முதல் முஸ்லிம் மேயரானார் சாதிக் கான்

 

 
லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான் உடன் அவரது மனைவி சாதியா | படம்: ராய்ட்டர்ஸ்.
லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான் உடன் அவரது மனைவி சாதியா | படம்: ராய்ட்டர்ஸ்.

பிரிட்டன் தலைநகர் லண்டன் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற சாதிக் கான், அந்நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற புதிய சரித்திரத்தை படைத்துள்ளார்.

44 வயதான சாதிக் கான் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து கன்சர்வேடிவ் கட்சி சார்பில் சேக் கோல்ட்ஸ்மித் போட்டியிட்டார். கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது.

இந்நிலையில், சாதிக் கான் லண்டன் மேயர் தேர்தலில் வெறி பெற்றிருக்கிறார். 46% வாக்குகளை சாதிக் கான் பெற்றிருக்கிறார். இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் லண்டன் மேயராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிக் கான் சிறுவராக இருந்தபோதே அவரது குடும்பம் பாகிஸ்தானில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்து வந்துவிட்டது. இவரது தந்தை பேருந்து ஓட்டுநர். கான், மனித உரிமைகள் வழக்கறிஞர் தவிர கிழக்கு லண்டன் டூடிங் பகுதியின் எம்.பி.யும்கூட. இந்நிலையில் அவர் மேயர் பதவிக்கு போட்டியிட்டார்.

சூடான பிரச்சாரம்:

ஆரம்பம் முதலே கோல்ட்ஸ்மித் லன் டன் மக்கள் ஒரு முஸ்லிம் வேட்பாளரை ஆதரிக்கக் கூடாது. சாதிக் கான் ஓர் அடிப்படைவாதி என பிரச்சாரம் செய்துவந்தார். ஆனாலும் 44 வயதான சாதிக் கான் லன்டன் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

'பயத்தை வெல்வோம்'

கோல்ட் ஸ்மித்துக்கு சரியான போட்டியளிக்கும் வீதம் சாதிக்கானும் பிரச்சாரம் மேற்கொண்டார். "முஸ்லிம்கள் மீதான தேவையற்ற பயத்தை மக்கள் கைவிட வேண்டும். பயத்தால் எதையும் சாதிக்க முடியாது. என்னை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் லண்டன் நகருக்கு முதல் முஸ்லிம் மேயர் கிடைப்பதோடு கடந்த 40 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருக்கும் வந்தேறிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும்" எனப் பிரச்சாரம் செய்து வந்தார்.

லண்டன் நகரில் வாழும் 80 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article8569434.ece?homepage=true

  • தொடங்கியவர்

லண்டன் மாநகர் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு 56.8% வாக்குகள் கிடைத்துள்ளன

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு லண்டனில் உள்ள டூட்டிங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக கடந்த பத்தாண்டுகளாக பதவி வகித்துவரும் சாதிக் கான், மனித உரிமைகள் துறை வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

 

புதிய மேயருக்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வெள்ளை பாகிஸ்தானிலோ... சவுதியிலோ மேயர் ஆக முடியுமா...??! 

வந்தவரை எல்லாம் வாழ விட்டிட்டு.. வெள்ளை லண்டனை விட்டு வெளியேறி வருகிறது. லண்டன் மூட்டைப் பூச்சி.. எலி.. ஈ.. எறும்பு.. தெருவோரக் கடை.. வெத்தலை துப்பல்... நகரமாக வேகமாக மாறி வருகிறது.

வந்தவர் எல்லா வாழலாம்.. ஆனால் ஆள்வது நாட்டுக்குச் சொந்தக்காரனாகவே இருக்க வேண்டும். அப்ப தான் அந்த மண் சிறக்கும். tw_blush:

(பி.கு: நாங்க இவருக்கு வாக்குப் போடேல்ல... ஒரு பெண்மணி ஆளனும் அதுவும் தாராளவாதக் கொள்கை உடைய.. நாட்டுக்குச் சொந்தக்காரி நாட்டை ஆளனுன்னு நினைச்சு வாக்குப் போட்டம். கொள்கைக்கு மட்டுமே எங்கள் வாக்கு.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

i9.GIF

இந்த மேயர்....  "பிக் பென்"  மணிக் கூட்டு கோபுரத்துக்கு பக்கத்தில்,  அதைவிட பெரிய உயராமாக மசூதி ஒன்று கட்ட வேண்டும்.
அப்பதான்... வெள்ளைக்காரனுக்கு புத்தி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனெறால் இதற்கு முன் நாம் சொர்க்கலோகத்தில் வாழ்ந்தோம். வெள்ளையே கவலைப்படல ,பஞ்சப்பரதேசியலுக்கு என்ன கவலை

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எல்லாம் பஞ்சப்பரதேசியலின் வாக்கில் தான் மேயராக முடியும். லண்டன் ஏலவே பஞ்சப் பரதேசிகளின் கூடாரமாகிவிட்டது. வெள்ளைகளின் சனத்தொகை அங்கு 50 க்கும் கீழ் போய்விட்டது. 

மேலும் வாக்களிப்பில் 50 % க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ளவே இல்லை. சில கவுன்சில்களில்.. வெள்ளைகள் தங்கட பெயர்.. வாக்காளர் அட்டையில் கூட இல்லையாம்.. குறிப்பாக பிரன்ட் கவுன்சில் பகுதிகளில். 

எனி லண்டனில் பஞ்சப் பரதேசிகளின் ஆட்சி தான். பேசாம லண்டனை ஐரோப்பாவின் கராச்சி அல்லது மும்பை என்று பெயரை மாத்தி வைச்சால் நல்லம். tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் ரெண்டு பேருக்கும் வாக்குச்சீட்டு வந்தது.ஆனா என்ர பெயரில ரெண்டு எழுத்தை காணேல்ல,சரியெண்டு மனிசியும் துணைக்கு மகனும் போய் போட்டிட்டு வந்தார்கள். மகன் லேபருக்கே போடச்சொன்னதால் அதுக்கே போட்டதாக மனிசி சொன்னா

.

.

.

.

.

மகனுக்கு வயசு 11

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில்.. பஞ்சம் கூடிய இடங்களில் எப்பவும் லேபரின் ஆதிக்கம் தான். தமிழர்களும் அங்கு தான் அதிகம். அவர்களும் அதிகம் லேபருக்குத்தான். கொள்கை கோதாரி ஒன்றும் பார்க்கிறதில்லை.. லேபருக்கு குத்து. 

லேபர் தானாம்.. நல்லா பெனிபிட் தரும். இதுதான் தமிழர்கள்... மற்றும் ஆசிய.. ஆபிரிக்க.. குடியேற்றக்காரர்கள் லேபருக்கு குத்த முக்கிய காரணம்.

லேபர் மற்றைய இடங்களில் பின்னடைவு. லண்டனில் முன்னடைவு... இதில் இருந்து எல்லாம் தெரியனும். tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 அடுத்த தலைமுறை தெளிவாகவே இருக்கின்றது.பஞ்சம் பிழைக்க வந்த பொருளாதார அகதியான நானும், படிப்பை காரணம் காட்டி வந்த நீங்களும்  இந்த நாட்டின் எதிர்காலத்தை பற்றி வாதிடுவதே வேடிக்கையானது.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைமுறைக்கு அரசியல் என்றால் என்னான்னு.. தெரியாததால் தான்.. 45.3% வாக்கு பதிவாகி இருக்கு லண்டன் மேயர் தேர்தலில். 

லேபர் தொடர் வீழ்ச்சி அடையுது இங்கிலாந்து பூராவும். இது லண்டனில் உள்ள பஞ்சப் பரம்பரைகளுக்கும் இங்கிலாந்து பெரும் சமூகத்துக்கும் இடையே வளரும் இடைவெளியை தான் காட்டுதே தவிர.. லேபருக்கு வாக்குப் போடு என்று சொல்லும்.. அடுத்த தலைமுறை அரசியல் தெளிவோடு வளருது என்று சொல்ல முடியாதுள்ளது.

படிப்போ..பஞ்சம் பிழைப்போ.. வந்த இடத்தில்.. கூட வாழும் சமூகங்களுக்கு நாலு நல்லது செய்வதும் சொல்வதும்.. முக்கியம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நந்தன் said:

வீட்டில் ரெண்டு பேருக்கும் வாக்குச்சீட்டு வந்தது.ஆனா என்ர பெயரில ரெண்டு எழுத்தை காணேல்ல,சரியெண்டு மனிசியும் துணைக்கு மகனும் போய் போட்டிட்டு வந்தார்கள். மகன் லேபருக்கே போடச்சொன்னதால் அதுக்கே போட்டதாக மனிசி சொன்னா

.

.

.

.

.

மகனுக்கு வயசு 11

 

அப்படி என்றால்.... லண்டன் மேயராக வர, 
ஆசிய  பாகிஸ்தான் வம்சா வழியினருக்கு சந்தர்ப்பம் அதிகம் தானே....
பாவம் வெள்ளைக்காரன், எலிசபெத் மகாராணிக்கு.... இது அதிர்ச்சியாக இருந்திருக்குமே...... Smiley

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நாட்டில கிழிச்சிட்டம்,இப்ப இங்க...

ஊருக்கு மட்டும் தான் உபதேசம் உனக்கு சத்தியாமா இல்லயடி

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாட்டில் இருப்பது சன நாய் அகம். அதனை டீல் பண்ண தனியான அணுகுமுறை அவசியம். பிரித்தானியாவில் இருப்பது சனநாயகம். அதனைக் கையாள தனியான அணுகுமுறை அவசியம். இரண்டையும் போட்டுக் குழப்பிக்கக் கூடாது. tw_blush:

சொந்த நாட்டில்.. மல்ரி பரல் கொடுத்து.. விமானங்களும் கொடுத்து.. கப்பல் கப்பலா ஆயுதமும் அனுப்பி வைச்சு சொந்த இனத்தை சிங்களவன்.. கருவறுக்க உதவிய பாகிஸ்தானிக்குத் தான் லண்டனில் லேபர் லேபலுக்கு... பெனிபிட் ஆசையில்.. எம்மவர்கள் குத்தினம்.  இதைக் கூட உணராமல்................. என்னத்தைக் கிழிச்சு என்னத்தை.... குத்தி. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நாட்டில் போராட்டத்தின் போது எதையும் கிழிக்க முடியாத நாங்க இன்னொரு நாட்டில் வந்து கிழி கிழியென கிழிக்கப்போறம்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நந்தன் said:

சொந்த நாட்டில் போராட்டத்தின் போது எதையும் கிழிக்க முடியாத நாங்க இன்னொரு நாட்டில் வந்து கிழி கிழியென கிழிக்கப்போறம்

நந்தன் ஜீ.... சொந்த நாட்டில், ஜனநாயகம் இருந்திருந்தால்... 
நாம் வேறு ஒரு நாட்டிற்கு வந்து இருக்க வேண்டிய தேவையே.... இருந்திருக்காது.
இங்கு.... நாம், கிழிப்பது, கிழிக்காதது வேறு விடயம்.
ஆனால்.... உலகத்திற்கு,  ஜனநாயகத்தை அறிமுகப் படுத்திய நாட்டில் வசிக்கும், மற்றும் நேசிக்கும்...
அனைவருக்கும் அந்த ஆதங்கம் உண்டு. எனக்கும்... பாக்கி, லண்டன் மேயராக வந்ததில் விருப்பமில்லை. Smiley

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருத்தர் பெரிசா வேன்டாம் ஒரு மாநகர மேஜர் பதவிக்காவது வரமுடியுமோ? இதுதான் தமிழனுக்கும் வெள்ளைக்கும் உள்ள வித்தியாசம். கேடு கெட்டவன் தமிழன்.தன் இனத்தையே தாழ்வும் உயர்வும் சொல்லி வேலி போட்டு பழகுவான். சீமான் பேசும் தூய இனவாதமும் தமிழனின் எளிய சாதிப்புத்தியின் ஒரு வடிவம்தான். 

தூய்மை என்று இந்த உலகில் எதுவுமே இல்லை. மனித இனம் தோன்றியபோது அதற்கு மொழியே இருக்கவில்லை. கலந்து கலந்து மாறிமாறித்தான் இந்த உலகில் எல்லாமே உருவாகின. எல்லா இனங்களும் மொழிகளும்கூட உருவாகின.

நைல் நதி வழி மனித இனம் நகராது விட்டிருந்தால் இன்று மொழிகள் படிக்கும் அகராதிகூட இருந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் உதில வந்து எழுதிறதை யாரும் வெள்ளையிடம் வாயைத் திறந்து சொல்வாரோ????...அடச் சீ என்ட மாதிரித் தான் அவன் பார்ப்பான்."ஒன்ட வந்த பிடாரி,ஒதுங்க வந்த பிடாரிக்கு கதை சொன்னதாம்".அது மாதிரித் தான் இருக்குது நெடுக்கரின்ட கதை...சிங்களவன் இனத் துவேசம் செய்கிறான் என சொல்லும் இவர்கள் செய்வது அதை விட வென்ட இனத் துவேசம்...இப்படி துவேசம் கதைப்பவர்களை சொந்த நாட்டுக்கு ஓடு என்று துரத்தி விட வேண்டும்.

தவிர இந்தியாவும்,பாக்கிஸ்தான் மட்டும் தான் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்த மாதிரியும்,லண்டன்காரன் சிங்களவனுக்கு எதிராக சண்டை பிடித்த மாதிரியும் இருக்குது இவரின்ட கதை.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில என்ன நடக்கென்றே தெரியாமல் தான் இங்கின கன சனம் கதையளக்குது.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பழமைவாதக் கட்சி முன் வைக்காததையா இங்கு பதிவிட்டு விட்டார்கள். இவரை ஒரு முஸ்லீம் கடும்போக்கு ஆதரவாளர் என்றே வெளிப்படையாகப் பேசி உள்ளார்கள்.

ஒரு சில தமிழ் இணையத்தளங்களை வாசிச்சிட்டு வந்து ஒட்டுமொத்த வெள்ளையின் குரலை இங்கு பதிவு செய்ய ஒரு சிலருக்கு மட்டும் தான் முடியும். அவர்களின் உலகார்ந்த அறிவு அப்படி.

இவரின் தெரிவால் லண்டன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கென்று கருத்துச் சொல்லும் அளவுக்கு.. வெள்ளைகள் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். 

இந்த நாட்டுக்கு சேவை வழங்குவது வேறு. இந்த நாட்டை ஆள நினைப்பது வேறு. 

ஒரு பாகிஸ்தானி ஒரு வைத்தியசாலையில் சீனியர் டாக்டராக இருந்தால் கூட சக தெற்காசிய நாட்டவர்கள் மீது துவேசம் காட்டும் அளவிற்கு வெள்ளைகள் இல்லை. 

பிரிட்டன் எம்மை அழிக்க உதவியதை விட எங்களோட சம்பந்தமே இல்லாத பாகிஸ்தான் எங்களை அழிக்க 1983 இல் இருந்து சிங்களவனுக்கு உதவி வருவது மகாகொடுமை. இதே லேபர் கட்சி ஆட்சியில் இருக்கும் போது தான் தமிழினம் அழித்தொழிக்கப்பட்டது. :rolleyes:

8 hours ago, தமிழ் சிறி said:

பாவம் வெள்ளைக்காரன், எலிசபெத் மகாராணிக்கு.... இது அதிர்ச்சியாக இருந்திருக்குமே...... Smiley

ஏற்கனவே லண்டன் வெள்ளையிட்ட இருந்து பறிபோயிட்டுது. 

வீடுகள் எல்லாம் தெற்காசிய கெடுபிடிகளின் கையில் சிக்கி.. அசுர விலைக்கு போயிட்டுது. 

லண்டன் மாநகர கவுன்சில்களின் செயற்பாடுகள் வினைத்திறன் அற்றவையாகிக் கிடக்கின்றன.

பழைய பெயரில் ஓடிக்கிட்டு இருக்குது.

உலகின் பிற ஐரோப்பிய தலைநகரங்கள் தரத்திலும் வாழ்வாதாரத்திலும் முன்னிலையில் இருக்க லண்டன் தாழ்ந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

எப்பவும் சொந்த நாட்டவன் தன் நாட்டை ஆள்வது போல் வராது. tw_blush:

ஹக்னி பக்கம் இப்படித்தான் ஒருவர் தெரிவாகி ஊழல் செய்து பிடிபட்டு.. இப்ப விலாசமில்லாமல் போயிட்டார். இவர் என்ன திருவிளையாடல் செய்யப் போறார் இல்ல செய்தார்.. என்று போகப் போகத் தெரியும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் வாதத்தில் வழமையான லாஜிக் மிஸ்ஸிங்.

இங்கே கோன்செர்வேடிவ் சார்பாக பெரும் கோடீஸ்வர பணக்காரா வாரிசான சக் கோல்ட்ஸ்மித் என்னும் யூத இனத்தவரும், தொழில் கட்சி சார்பில் கானும் போட்டி இட்டனர்.

வெள்ளையர்களில் பெரும்பாலோருக்கு, யூதர் என்றால், ஒரு வெறுப்பு. பயம். காரணம் அவர்களது, குள்ள நரித்தனம். அதுவும் கோடீஸ்வர யூதர் என்றால்.... 

ஒரு வாரிசு, கடின உழைப்பு அரைக் கிலோ என்ன விலை என்று தான் கேட்கும். கானுக்கு வாக்கு போட்டால், தீவிரவாதம் வரும் என்று சொல்லி, இப்போது தவறாக சொல்லி விட்டாராம். நரித்தனம்.

மறு புறத்தில் அடி மட்டத்தில் இருந்து மேலே வந்த சதீக் கான். இவர் தனது மதம் சார்ந்த சமூகத்தின் மீதான அவநம்பிகையினைப் போக்க, கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் என்பதாலே பல வெள்ளையர்கள் வாக்களித்தார்கள்.

என்னை பொறுத்தவரை கடைசி நாள் வரை யார் போட்டி இடுகிறார்கள் என்றே தெரியாது. வேலை இடத்து வெள்ளை தந்த தகவல் அடிப்படையில், எனது வீட்டில் மூன்று வாக்குகள் கானுக்கு....

முதலில் அவர் கொள்கைகள்... அடுத்து அவர் ஆசியர். ஆனால்,ஒரு வெள்ளை நின்றிருந்தால் அவருக்கே போட்டிருப்பேன்.

அதே வேளை, நெடுக்கர் தகவலுக்கு, லொயெட் எனும் வெள்ளை இன பிரதமரை தோற்கடித்து,  பெஞ்சமின் டி'சரெலி எனூம் யூதரையே, பிரிட்டிஷ் பிரதமராக ஆக்கி இருந்தார்கள் இந்த வெள்ளை இன மக்கள். 

எப்போது ? , உலகின் பெரும் பேரரசியாக விக்டோரியா மகாராணியார் ஆண்ட, இனவெறி கொண்ட, 19ம் நூறாண்டில்.....

அந்த நாட்களில் எங்கையா, ஆசியர்கள், கறுப்பர்கள், முஸ்லிம்கள் இருந்தார்கள்?

ஒரு முறை அல்ல... மூன்று முறை வென்று பிரதமர் ஆகி இருக்கிறார். தனது மிகத் திறமை மிக்க பிரதமர் அவர் என்று மகாராணியார் சொல்லுமளவுக்கு.

நீங்கள் இன்றைய வெள்ளை குறித்து தவறாக சொல்கிறீர்கள்....

ஒன்று மட்டும் தெளிவு: இந்த நாடு திறமைக்கும், கடின உழைப்புக்கும் தயங்காமல் அங்கீகாரம் தரும்.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

நெடுக்கரின் வாதத்தில் வழமையான லாஜிக் மிஸ்ஸிங்.

இங்கே கோன்செர்வேடிவ் சார்பாக பெரும் கோடீஸ்வர பணக்காரா வாரிசான சக் கோல்ட்ஸ்மித் என்னும் யூத இனத்தவரும், தொழில் கட்சி சார்பில் கானும் போட்டி இட்டனர்.

வெள்ளையர்களில் பெரும்பாலோருக்கு, யூதர் என்றால், ஒரு வெறுப்பு. பயம். காரணம் அவர்களது, குள்ள நரித்தனம். அதுவும் கோடீஸ்வர யூதர் என்றால்.... 

ஒரு வாரிசு, கடின உழைப்பு அரைக் கிலோ என்ன விலை என்று தான் கேட்கும். கானுக்கு வாக்கு போட்டால், தீவிரவாதம் வரும் என்று சொல்லி, இப்போது தவறாக சொல்லி விட்டாராம். நரித்தனம்.

மறு புறத்தில் அடி மட்டத்தில் இருந்து மேலே வந்த சதீக் கான். இவர் தனது மதம் சார்ந்த சமூகத்தின் மீதான அவநம்பிகையினைப் போக்க, கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் என்பதாலே பல வெள்ளையர்கள் வாக்களித்தார்கள்.

என்னை பொறுத்தவரை கடைசி நாள் வரை யார் போட்டி இடுகிறார்கள் என்றே தெரியாது. வேலை இடத்து வெள்ளை தந்த தகவல் அடிப்படையில், எனது வீட்டில் மூன்று வாக்குகள் கானுக்கு....

முதலில் அவர் கொள்கைகள்... அடுத்து அவர் ஆசியர். ஆனால்,ஒரு வெள்ளை நின்றிருந்தால் அவருக்கே போட்டிருப்பேன்.

அதே வேளை, நெடுக்கர் தகவலுக்கு, லொயெட் எனும் வெள்ளை இன பிரதமரை தோற்கடித்து,  பெஞ்சமின் டி'சரெலி எனூம் யூதரையே, பிரிட்டிஷ் பிரதமராக ஆக்கி இருந்தார்கள் இந்த வெள்ளை இன மக்கள். 

எப்போது ? , உலகின் பெரும் பேரரசியாக விக்டோரியா மகாராணியார் ஆண்ட, இனவெறி கொண்ட, 19ம் நூறாண்டில்.....

அந்த நாட்களில் எங்கையா, ஆசியர்கள், கறுப்பர்கள், முஸ்லிம்கள் இருந்தார்கள்?

ஒரு முறை அல்ல... மூன்று முறை வென்று பிரதமர் ஆகி இருக்கிறார். தனது மிகத் திறமை மிக்க பிரதமர் அவர் என்று மகாராணியார் சொல்லுமளவுக்கு.

நீங்கள் இன்றைய வெள்ளை குறித்து தவறாக சொல்கிறீர்கள்....

ஒன்று மட்டும் தெளிவு: இந்த நாடு திறமைக்கும், கடின உழைப்புக்கும் தயங்காமல் அங்கீகாரம் தரும்.

 

முனியர் நாங்கள் நீங்கள் குறிப்பிட்ட.. இந்த இரண்டு பேருக்குமே ஆதரவில்லை.

நாங்க ஆதரித்து வாக்களித்தது ஒரு தாராளமயவாதக் கொள்கை கொண்ட பெண்மணிக்கு.

இவரை வெள்ளைகளே மூச்சும் விடாமல் ஆதரிக்கனும் என்று சொல்லுறவைக்குத்தான் வெள்ளைகளிடம் இருந்து வந்த கருத்துக்களை சாரப்படுத்தி இருக்கிறம்.

அண்மையில் பிரித்தானிய மாணவர் ஒன்றியத்துக்கு  ஒரு முஸ்லீம் பெண்மணி தெரிவு செய்யப்பட்டதும்...  அவருக்கு எதிராக கொடி தூக்கியது.. வேறு யாருமல்ல.. ஒக்ஸ்பேர்ட் ஆக்கள். 

இவருக்கு எதிரான எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்று நாள் போகப் போகத் தெரிய வரும். அதில் இவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியில் எவ்வளவை நிறைவேற்றுறார் என்பதும் உள்ளடங்கும். tw_blush:

It comes as Defence Secretary Michael Fallon defended Conservative Zac Goldsmith's campaign, describing it as the "rough and tumble" of politics.

பிரித்தானிய பாதுகாப்பு செயலர் சொல்வதைக் கேளுங்கள்..

Michael Fallon is repeatedly asked if he trusts Sadiq Khan with the safety of Londoners

http://www.bbc.co.uk/news/election-2016-36236538

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

ஒரு வெள்ளை பாகிஸ்தானிலோ... சவுதியிலோ மேயர் ஆக முடியுமா...??! 

வந்தவரை எல்லாம் வாழ விட்டிட்டு.. வெள்ளை லண்டனை விட்டு வெளியேறி வருகிறது. லண்டன் மூட்டைப் பூச்சி.. எலி.. ஈ.. எறும்பு.. தெருவோரக் கடை.. வெத்தலை துப்பல்... நகரமாக வேகமாக மாறி வருகிறது.

வந்தவர் எல்லா வாழலாம்.. ஆனால் ஆள்வது நாட்டுக்குச் சொந்தக்காரனாகவே இருக்க வேண்டும். அப்ப தான் அந்த மண் சிறக்கும். tw_blush:

(பி.கு: நாங்க இவருக்கு வாக்குப் போடேல்ல... ஒரு பெண்மணி ஆளனும் அதுவும் தாராளவாதக் கொள்கை உடைய.. நாட்டுக்குச் சொந்தக்காரி நாட்டை ஆளனுன்னு நினைச்சு வாக்குப் போட்டம். கொள்கைக்கு மட்டுமே எங்கள் வாக்கு.)

நீங்கள் யாருக்கு போட்டீர்கள் என்பதல்ல விடயம். 

வெள்ளையர் குறித்த உங்கள் கணிப்பீடு குறித்தது...

இந்த திரி தெளிவாக சொல்லுது நாடில்லாமல் அகதியாக மட்டும் தகுதியான இனம் எம்மினம் .

அதுவும் மகராணி என்ன நினைப்பார் என்று இப்பவும் கவலை .சே ..........

  • தொடங்கியவர்
சாதிக் கான் வென்ற பின் உரையாற்றியபோது அவருக்கு தன் முதுகை காட்டி நின்ற வேட்பாளர்
2016-05-09 09:54:15

லண்­டனின் புதிய மேய­ராக சாதிக் கான் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளதை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்கும் நிகழ்வில் மேயர் சாதிக் கான் உரை­யாற்­றி­ய­போது, மேடை­யி­லி­ருந்து, பிரிட்­டனின் வலது சாரி கட்­சி­யொன்றைச் சேர்ந்த போட்­டி­யாளர் ஒருவர் சாதிக் கானுக்கு மறு­பு­ற­மாக திரும்பி நின்று தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தினார்.


16494London-Mayoral-Election-result.jpg

 

போல் கோல்டிங் எனும் இவர், லண்டன் மேயர் பத­விக்கு பிரிட்டன் ஃபெர்ஸ்ட் எனும் கட்சியின் சார்பில் போட்­டி­யிட்­டவர். இத்­தேர்­தலில் தொழிற்­கட்சி வேட்­பா­ள­ரான சாதிக் கான் வெற்­றி­பெற்­றதை அறி­விக்கும் நிகழ்வு லண்­ட­னில நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. சாதிக் கான் உட்­பட பல கட்­சி­க­ளி­னதும் மேயர் வேட்­பா­ளர்கள் கலந்­து­கொண்­டனர்.


இதில் சாதிக் கான் உரை­யாற்­றி­ய­போது, அவ­ருக்கு தனது முதுகை காட்டும் வித­மாக போல் கோல்டிங் திரும்பி நின்றார். இரண்­டா­மிடம் பெற்ற கன்­சர்­வேட்டிவ் கட்சி வேட்­பாளர் ஸாக் கோல்ட்ஸ்மித் உரை­யாற்ற ஆரம்­பித்­த­போதே போல் கோல்டிங் மீண்டும் சரி­யான நிலைக்குத் திரும்­பினார்.

 

முஸ்லிம் ஒருவர் லண்டன் மேய­ராக தெரி­வு­செய்­யப்­பட்­டதை ஆட்­சே­பிப்­ப­தற்­காக போல் கோல்டிங் இவ்­வாறு திரும்பி நின்றார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. போல் கோல்டிங் நடவடிக்கையை தொழிற்கட்சி எம்.பி.கேர்ல் டேர்னர் உட்பட பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=16494#sthash.Tp067YwE.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.