Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2016

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலே கில்லாடி.. :D தவறு நடப்பதையே அறியாத மக்கள். :(

 

இது வட இந்தியாவில் என நினைக்கிறேன்.

  • Replies 161
  • Views 23.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கடலூர் தொகுதியில் நின்றதற்கான காரணமும் கணிப்பும்

http://tamil.oneindia.com/news/tamilnadu/will-seeman-win-at-cuddalore-253519.html

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

13241338_638210819662593_296505053257326

  • கருத்துக்கள உறவுகள்

இசை,சீமான் அவர் பிறந்த ஊரில் நின்று தோத்திருந்தால் இதை விட அவமானப்பட்டு இருப்பார்.பிறந்த ஊரில் என்ன மரியாதை கிடைக்கும்/எத்தனை வோட் கிடைக்கும் என்றும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

20 minutes ago, ரதி said:

இசை,சீமான் அவர் பிறந்த ஊரில் நின்று தோத்திருந்தால் இதை விட அவமானப்பட்டு இருப்பார்.பிறந்த ஊரில் என்ன மரியாதை கிடைக்கும்/எத்தனை வோட் கிடைக்கும் என்றும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

அப்ப இந்த பாட்டன் முப்பாட்டன் எல்லாம் இந்த ஊரில்லையா. அதுசரி என் முப்பாட்டன் முருகன் எப்ப இவ்வுலகில் பிறந்தான். கேட்பவனை கேனயன் எண்டு  எலி ஏரோப்பிளேன் ஓடும் எண்டு கதை சொன்னா கதி இதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CjE3jxZVEAAXt-a.jpg

தேர்தல் பின் தமிழ்நாட்ல இயல்பு வாழ்க்கை திரும்பியது???

13226674_496286290563980_259429253075534
13240036_495999197259356_499140464048261
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

இசை,சீமான் அவர் பிறந்த ஊரில் நின்று தோத்திருந்தால் இதை விட அவமானப்பட்டு இருப்பார்.பிறந்த ஊரில் என்ன மரியாதை கிடைக்கும்/எத்தனை வோட் கிடைக்கும் என்றும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

இருக்கலாம். உண்மையில் என்ன கணக்கு என்பது அவர்களுக்குத்தான் தெரியும். நான் எழுதியவை நாம் தமிழர் கட்சி சொன்னவற்றை மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, இசைக்கலைஞன் said:

இருக்கலாம். உண்மையில் என்ன கணக்கு என்பது அவர்களுக்குத்தான் தெரியும். நான் எழுதியவை நாம் தமிழர் கட்சி சொன்னவற்றை மட்டுமே.

இசை அண்ணா, ஒரு தோல்வி ஏற்படும்போது எம்மவர்கள் எப்போதும் அதிலிருந்து ஒரு பாடத்தைப் படிப்பதில்லை. மாறாக தோல்வியை நியாயப்படுத்தவே முயல்கிறார்கள். ஏன் ஒரு தொகுதியில் தன்னும் கட்டுக்காசாவது தேறவில்லை என நாம் தமிழர் கட்சிக்காரர் சிந்தித்தார்களா? 

அத்துடன் அருணனுடன் வந்த வாய்த் தர்க்கத்திலே கூறியபடி மக்கள் நலக் கூட்டணியை விட நாம் தமிழர் கட்சி குறைவான வாக்குகளையே வாங்கி இருப்பதால் கட்சியை சொன்னபடியே சீமான் கலைத்துவிட்டு அருணனுடன் போய் இணைந்து கொள்வாரா?

 

தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்பதை விட தமிழ்நாட்டு மக்களின் பொருளாதாரம் அடிப்படைத் தேவைகள் என்பவை தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Thumpalayan said:

இசை அண்ணா, ஒரு தோல்வி ஏற்படும்போது எம்மவர்கள் எப்போதும் அதிலிருந்து ஒரு பாடத்தைப் படிப்பதில்லை. மாறாக தோல்வியை நியாயப்படுத்தவே முயல்கிறார்கள். ஏன் ஒரு தொகுதியில் தன்னும் கட்டுக்காசாவது தேறவில்லை என நாம் தமிழர் கட்சிக்காரர் சிந்தித்தார்களா? 

அத்துடன் அருணனுடன் வந்த வாய்த் தர்க்கத்திலே கூறியபடி மக்கள் நலக் கூட்டணியை விட நாம் தமிழர் கட்சி குறைவான வாக்குகளையே வாங்கி இருப்பதால் கட்சியை சொன்னபடியே சீமான் கலைத்துவிட்டு அருணனுடன் போய் இணைந்து கொள்வாரா?

 

தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்பதை விட தமிழ்நாட்டு மக்களின் பொருளாதாரம் அடிப்படைத் தேவைகள் என்பவை தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. 

அருணனுடனான வாதத்திற்கு வருகிறேன்.

அவருடன் வாதம் செய்தபோது மக்கள்நலக் கூட்டணியில் மதிமுக, விசிக மற்றும் இரு பொதுவுடமைக் கட்சிகள் இருந்தன. தேமுதிக, தமாகா ஆகிய இரண்டும் பிற்பாடு மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்தன.

மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளில் அவர்களுக்கு விஜயகாந்தின் வாக்குகள் (2+ %) மற்றும் தமாகா இன் 0.5% வாக்குகள் விழுந்துள்ளன. ஒருவேளை சவால் விட்ட சீமான் பிறகு அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார் (ஒரு வாதத்திற்கு). அப்போது மக்கள் நலக் கூட்டணியைக் காட்டிலும் பல மடங்குகள் வாக்குகள் பெற்றுவிட்டார் என்று சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால் The basis of the challenge would have been altered by then.

மற்றும்படி கணிசமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி (5%) வாங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் பலர் இளைஞர் தரப்பில் எதிர்பார்த்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களும், பொறியாளர்களும் (முக்கியமாக அயல்நாடுகளில் வேலை செய்பவர்கள்) எதிர்பார்த்தார்கள். ஆனால் மக்கள் நம்பவில்லை. அத்துடன் பாரம்பரியமாக உள்ள சின்னங்களை விட்டு பலர் வெளிவர விரும்பவில்லை. சில பல இடங்களில் பணம் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு இயந்திரத்தில் நம்பிக்கை குறைந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இதை தாக்கல் செய்தவர்கள் வட இந்தியர்கள். அதன்படி வாக்கு இயந்திரங்களை மீளக் கட்டமைத்து 2019 தேர்தலுக்கு முன் செயற்படுத்த தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. இந்தப் புதிய முறையின்படி வாக்களித்தவர்களுக்கு அத்தாட்சித் துண்டு அந்த இயந்திரத்தால் உடனே வழங்கப்படும். (இதிலும் தில்லுமுல்லு செய்வார்கள் பிற்காலத்தில்.)

நீங்கள் கட்டுக்காசு பெறுவது பற்றி கூறியிருந்தீர்கள். கடந்த இரு தேர்தல்களில் வெற்றிபெற்ற விஜயகாந்த் மற்றும் மக்கள்நலக் கூட்டணியினரும்தான் கட்டுக்காசை இழந்தவர்கள். உங்களுக்குத் தெரியுமா இந்தியத் தேர்தல் முறையின்கீழ் கட்டுக்காசை இழக்கும் வாக்கு எணிக்கையுடன்கூட வெற்றிபெற முடியும். tw_blush:

ஆக, தோல்வி வரும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் அதை தேர்தல் நேரத்தில் சொன்னால் தோற்கிற உங்களுக்கு எதற்கு வாக்கு எனக் கேட்பார்கள். அதில்தான் சிக்கல் உள்ளது. ஆனாலும் பெற்ற வாக்கு எண்ணிக்கை திருப்தி தரவில்லை.

  • தொடங்கியவர்

என்னத்தச் சொல்ல.. விஜயகாந்த் உள்பட 103 தேமுதிகவினரின் டெபாசிட் காலி.. ஒருவர் மட்டும் தப்பினார்!

 

சென்னை: சட்டசபைத் தேர்தலில் டெபாசிட்டை கூண்டோடு பறி கொடுத்த கட்சிகளாக தேமுதிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தமாகா ஆகியவை திகழ்கின்றன. அதேபோல பாஜகவும் கூட சொற்ப தொகுதிகளில்தான் டெபாசிட்டைத் திரும்பப் பெற்றது.

வரலாறு காணாத அளவில் விதம் விதமான கூட்டணிகளை இந்தத் தேர்தலில் மக்கள் கண்டனர். ஆனாலும் திமுகவும், அதிமுகவும் அதைப் பார்த்து சற்றும் அலட்டிக் கொள்ளவே இல்லை. வழக்கம் போல அந்தக் கட்சிகளுக்கு சாதமாகத்தான் தீர்ப்பு வந்துள்ளது. என்ன, வழக்கமாக மாறி மாறி ஆட்சி அமைப்பார்கள்.

இந்த முறை ஆட்சி மாறாமல் அதிமுகவிடமே தங்கி விட்டது. திமுகவுக்கு 2வது இடம். இந்த இருவரையும் தவிர மற்றவர்கள் அழிக்கப்பட்டு விட்டனர்.

25-1464161624-vijayakanth57-600.jpg

 

தேமுதிகவின் பரிதாபம்

இந்தத் தேர்தலில் பெரும் பாதிப்பை சந்தித்த கட்சி தேமுதிகதான். இது நாள் வரை சாலிடான வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு சப்ஜாடாக பேசி வந்த கட்சி தேமுதிக. ஆனால் இத்தேர்தலில் அதன் வாக்கு வங்கியை தரை மட்டமாக்கி விட்டனர் மக்கள்.

பரிதாப தோல்வி

தேமுதிக மொத்தம் 104 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. மாறாக அத்தனை இடங்களிலும் பரிதாபத் தோல்வியே மிஞ்சியது.

 

103 இடங்களில் டெபாசிட் காலி

103 வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளனர். அதில் கட்சித் தலைவர் விஜயகாந்த்தும் ஒருவர் என்பதுதான் முக்கியமானது. ஒரு வேட்பாளருக்கு மட்டும் டெபாசிட் கிடைத்துள்ளது.

மதிமுக 27

இவர்கள் தவிர மதிமுக 27, சிபிஎம் 25, சிபிஐ 23, விடுதலைச் சிறுத்தைகள் 22, தமாகா 26 தொகுதிகளில் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளன.

 

பாஜகவுக்கு 180 - பாமக 212

பாஜகவுக்கு 180 இடங்களில் டெபாசிட் காலியாகியுள்ளது. 4 இடங்களில் மட்டுமே டெபாசிட் கிடைத்துள்ளது. பாமக கட்சிக்கு 212 இடங்களில் டெபாசிட் தொகை பறி போய் விட்டது.

 

234 தொகுதியிலும்

நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அனைத்து இடங்களிலும் டெபாசிட்டைப் பறி கொடுத்தது. அதேபோல 32 தொகுதிகளில் போட்டியிட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/103-dmdk-candidates-lose-deposit-254510.html

  • தொடங்கியவர்

2 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அதிமுக.. எங்கும் டெபாசிட் இழக்காத திமுக!

 

 சென்னை: அதிமுக ஆட்சியைப் பிடித்தும் என்ன புண்ணியம். 2 தொகுதிகளில் அது டெபாசிட்டைப் பறி கொடுத்து அவமானத்தைச் சந்தித்துள்ளது. அதேசமயம், ஆட்சியைப் பிடிக்கத் தவறிய திமுக, ஒரு இடத்தில் கூட டெபாசிட்டைப் பறி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக அணிகளுக்கு போட்டியாக தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணியும், பாமகவும் கடும் போட்டியைக் கொடுத்தன. அதேபோல நாம் தமிழர் கட்சி, பாஜக ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் நடந்ததோ தலைகீழாக இருந்தது.

திமுக, அதிமுகவைத் தவிர மற்ற யாருமே போட்டியிலேயே இல்லாமல் போய் விட்டனர். திமுக, அதிமுகவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியவை பாமகவும், மக்கள் நலக் கூட்டணியும்தான். மற்றபடி மற்ற கட்சிகளால் இந்தக் கட்சிகளுக்குப் பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் இல்லை.

 

இரட்டை இலை

இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை வருவது போல கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. அதாவது தனது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 7 பேருக்கு சீட் கொடுத்த அவர் அவர்களை இரட்டை இலையில் போட்டியிட வைத்தார். மற்ற தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது.

 

ஆட்சியைப் பிடித்த அதிமுக

தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்த இடங்கள் 3 ஆகும். ஆனால் அவை இரட்டை இலையில் போட்டியிட்டதால் அவையும் அதிமுக வேட்பாளர்களாகவே கருதப்படும்.

2 தொகுதிகளில் டெபாசிட் காலி

அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் கூட நிறைய அவப் பெயர்கள் அக்கட்சிக்குக் கிடைத்துள்ளன. பெரும்பாலான தொகுதிகளி்ல மயிரிழையில்தான் இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதை விடக் கொடுமையாக 2 தொகுதிகளில் டெபாசிட் பறி போய் விட்டது.

25-1464158459-vijayadharani35-600.jpg

விளவங்கோடு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு டெபாசிட் போய் விட்டது. விளவங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸின் விஜயதாரணி வெற்றி பெற்றார். இங்கு அதிமுகவுக்கு 4வது இடமே கிடைத்துள்ளது. 2வது இடத்தை பாஜகவும், 3வது இடத்தை சிபிஎம்மும் பெற்றன.

தளி தொகுதியில்

3வது இடம் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் 3வது இடத்தைப் பிடித்தது அதிமுக. அங்கு இந்தத் தொகுதியிலும் அதிமுகவுக்கு டெபாசிட் பறி போயுள்ளது. மற்ற இடங்களில் அதிமுக தப்பிப் பிழைத்துள்ளது.

 

திமுகவுக்கு இழப்பே இல்லை

இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்க மட்டும்தான் தவறியதே தவிர பெருமைக்குரிய விஷயங்கள் நிறையவே அதற்கு உள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் மயிரிழையில்தான் அது தோல்வியைத் தவற விட்டுள்ளது. அதை விட முக்கியமாக எங்குமே அது டெபாசிட்டைப் பறி கொடுக்கவில்லை என்பது முக்கியமானது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/despite-captured-the-power-admk-loses-deposit-2-seats-254504.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.